Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!

December 24, 2024

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது

மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் சர்வ மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததுடன் ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரனிடம் ஜனாதிபதிக்கு கையளிக்குமாறு மகஜர் ஒன்றும் கையளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/கிளிநொச்சியில்-அதிகரிக/

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கடினமான விடயம்தான், ஆனால் குடிமக்களை இக்கடைகளை கொஞ்ச நாள் பகிஸ்கரிக்கச் செய்ய வேண்டும் என்று பேசிப் பார்த்தால் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அறிகுறி. 👏

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஆண்டில் மட்டும் 16 பார்களுகான அனுமதி ஒருசில சமுகவிரோதிகளின் சிபாரிசின் பேரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மக்கள் இந்த சமுகவிரோதிகளையும் அவர்களுக்கு கூஜா தூக்கும் நபர்களையும் இனங்கண்டு தகுந்த பாடம் புகட்டவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புரிவதில்லை 

நம்ம வீட்டில் தப்பை வைத்துக்கொண்டு வீதியை ஊரை நாட்டை திருத்தமுடியுமா? முயல்வது சரியா???

வீட்டைத்திருத்த வக்கில்லாதவர்???

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

கடந்த ஆண்டில் மட்டும் 16 பார்களுகான அனுமதி ஒருசில சமுகவிரோதிகளின் சிபாரிசின் பேரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மக்கள் இந்த சமுகவிரோதிகளையும் அவர்களுக்கு கூஜா தூக்கும் நபர்களையும் இனங்கண்டு தகுந்த பாடம் புகட்டவேண்டும்!

ஒரு சில அல்ல.. ஒரே ஒரு சமூக விரோதி.. பெயர் பார் சிறி..

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரு சில அல்ல.. ஒரே ஒரு சமூக விரோதி.. பெயர் பார் சிறி..

ஏன்…. டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், சந்திரகுமாரின்,  பெயரை சொன்னால்… 
காதுக்குள்ளை “வெடி  வைத்து விடுவாங்கள் எண்டு பயமோ…  
உங்களுக்கு… அந்தப் பயம் இருக்க வேணும். 

இளகின இரும்பை கண்டால்…. குமட்டிலை குந்தி இருந்து அடிப்பாங்களாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மை சிங்கள அரசு தமிழ் மக்கள் பொருளாதார ரீதியாக வளம் பெறுவதனையோ, சமூக உயர் நிலையினை அடைவதனையோ என்றும் அனுமதிக்க போவதில்லை (இது உயர் சாதியினர் என கூறிக்கொள்பவர்கள் மற்ற மக்களை அடிமைப்படுத்தி வைப்பதற்கு எமது சமூகத்தில் பயன்படுத்தும் உத்தி), அதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாகவே இந்த மதுபான நிலையங்கள் இலங்கையின் ஏனைய பகுதிகளை விட தமிழர்கள் வாழும் அபுக்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளே மதுபான உரிமைகள் வாங்கி பினாமிகளின் பெயர்களில் செயல்படுகின்ற தலைமைகளை தமிழர்கள் கொண்டிருக்கும் நிலை, அவ்வாறானவர்களையே மக்களும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

தற்போது சிறுபான்மை மக்களிற்கு வழமையான எதிரியுடன் கூடவே அவர்களாலாலேயே தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் எதிரிகளாக உள்ளனர்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உள்ளவர்களின் நோக்கம் வெறும் பணம் சேர்ப்பதாகவே உள்ளது, இவர்கள் தயவு செய்து பதவி விலகி, புதிய மக்கள் சிந்தனை மட்டும் கொண்ட இளம் சமூகத்திற்கு வழி விட வேண்டும்.

அங்குள்ள பத்திரிகைகள் மக்களை நல்வழிப்படுத்தும் பாரிய கடமை உண்டு, அதனை அவர்கள் சரிவர செய்ய வேண்டும்.

இலங்கை அரசை பொறுத்தவரை அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் எதிரானவர்கள் எனும் உண்மைநிலையினை மக்களிடம் எடுத்து செல்வது ஒன்றும் இலகுவான காரியம் அல்ல, அதற்காகவே இலங்கை அரசுகள் பயங்கரவாத தடை சட்டம் எனும் போர்வையில் (பயங்கரவாத தடை சட்டத்தினை என்றும் நீக்க போவதில்லை) உண்மைகளின் குரல்வளைகளை நெரித்துக்கொண்டுள்ளார்கள்.

யூரியூபர்களும் இந்த உண்மைகளை தம்மளவில் பாதிப்பில்லா வகையில் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

ஏன்…. டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், சந்திரகுமாரின்,  பெயரை சொன்னால்… 
காதுக்குள்ளை “வெடி  வைத்து விடுவாங்கள் எண்டு பயமோ…  
உங்களுக்கு… அந்தப் பயம் இருக்க வேணும்.

சிறியரின் பதட்டம் சந்தேகத்தை உண்டாக்குகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

சிறியரின் பதட்டம் சந்தேகத்தை உண்டாக்குகிறது. 

கிளிநொச்சியில் நடந்து கொண்டிருப்பதை…. திறந்த மனதுடன் அணுக முடியாதவர்களுக்கு, சந்தேகம் ஒரு கேடு. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

கிளிநொச்சியில் நடந்து கொண்டிருப்பதை…. திறந்த மனதுடன் அணுக முடியாதவர்களுக்கு, சந்தேகம் ஒரு கேடு. 😂 🤣

எங்கப்பன் குதிருக்குள் இல்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஏன்…. டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், சந்திரகுமாரின்,  பெயரை சொன்னால்… 
காதுக்குள்ளை “வெடி  வைத்து விடுவாங்கள் எண்டு பயமோ…  
உங்களுக்கு… அந்தப் பயம் இருக்க வேணும். 

இளகின இரும்பை கண்டால்…. குமட்டிலை குந்தி இருந்து அடிப்பாங்களாம்.

அவர்கள் எதிரிகள்.. நெஞ்சில்சுட்டவர்கள்… என் நண்பர்கள் பலரை இவர்களால் இழந்தேன்.. வடக்கில் டக்கிளஸ் தேவானந்தா கூட்டமும் கிழக்கில் கருணா பிள்ளையான் கூட்டமும் இடி அமீனுக்கு சமமானவர்கள்.. இதை எப்பொழுதும் எழுதிப் பதிந்து வருபவன் நான்.. இவர்களை பற்றி மக்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை.. ஊர் உலகம் அறிந்த கொலைகாரப்பாவிகள்..

ஆனால் இந்த பார்சிறி வேறு ஒரு ரகம்.. கூட இருந்து குழிபறிப்பவன்.. நசுக்கிடாக்கள்ளன்.. நெஞ்சில் குத்தாமல் நைசாக நசுக்கிடாமல் முதுகில் குத்தும் துரோகி.. இவனைப்பற்றி மக்கள் அறிந்து கொள்ளவேணும்.. அதற்காக இவனைப் போன்றவர்களை பற்றி பலரும் எழுதனும்.. மக்களுக்கு எடுத்து சொல்லி ஏமாறதீர்கள் என்று விளங்கப்படுத்தனும்..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

👇

👆  மேலே தமிழில்  உள்ள செய்தியில்...
ஸ்ரீதரன்...  //மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.// என்று...  வெளிப்படையாக அறிவித்த பின்பும்,  லூசுத் தனமாக எழுதிக் கொண்டு   இருக்காமல்... அவர் சாராய அனுமதி பெற்றதை நிரூபித்து, அவரை அரசியலில் இருந்து விலக வைக்கின்ற அலுவலை பார்க்கவும். 

இனி.... உங்களுக்கு தெரிந்த ஆதாரங்களை, திரட்டிக் கொண்டு களத்தில் இறங்கவும். 👍
பைத்தியக்காரத்தனமாக....  சும்மா ஊளையிடுவதில், எந்த அர்த்தமும் இல்லை. 

மேலே எல்லாம் தமிழில்தான் எழுதப் பட்டுள்ளது. 
வாசித்து... விளங்கிக் கொள்வதில், எந்தப் பிரச்சினையும் இராது என நினைக்கின்றேன். 
திரும்பத் திரும்ப...  ஒரு விடயத்தை, உங்களுக்கு விளங்கப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

போய் ஆதாரங்களை திரட்டவும். அதுதான்... இப்போ நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. 
இதற்குமேல்.... உங்களுக்கு, விளக்கமாக.. சொல்ல எதுவும் இல்லை.   🙂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் புத்திசாலிகள்.

தமக்கான ஓர் சிறந்த பிரதிநிதியை ஒற்றுமையாக வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள்.

அதே போல் தேவையற்றவரை வாக்களிக்காமல் பாராளுமன்றத்தில் இருந்தும் தமது பிரதிநிதியாக செயற்பட தகுதி இல்லை என்று முகத்தில் உறைக்க குத்தி விலத்தி வைத்துள்ளனர். 

தேர்தலில் தோற்றவரின் அல்லக்கைகளும் பலாக்காய்களும் குஞ்சுகளும் இப்படியே கதறிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

நான் பார்த்த அளவில்.... சுமந்திரன் குரூப்தான்,
இங்கு நின்று கம்பு சுத்திக் கொண்டு நிற்கிறார்கள் போலுள்ளது.
 😂
என்ன... இருந்தாலும், அனுரா அரசில்... ஒரு அமைச்சராக வருவேன் என  
நம்பி இருந்த
சுமந்திரன் தோற்றுப் போன வேதனையை மறக்க, கனநாள் எடுக்கும்தானே.... 🤣
அது மட்டும், ஸ்ரீதரனுக்கு... "தடி, ஒட்டிக்"   கொண்டு இருக்க வேண்டியதுதான். animiertes-gefuehl-smilies-bild-0090

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வாலி said:

கடந்த ஆண்டில் மட்டும் 16 பார்களுகான அனுமதி ஒருசில சமுகவிரோதிகளின் சிபாரிசின் பேரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

large.IMG_7936.jpeg.cc20cfa62a68b89a2e98

large.IMG_7934.jpeg.bc40b2b1a89f6f6ea79d

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, vasee said:

யூரியூபர்களும் இந்த உண்மைகளை தம்மளவில் பாதிப்பில்லா வகையில் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.

நீங்கள் சுட்டிய விடயங்களனைத்தும் செயலாக்கம் பெறுமானால் நன்று. பெரும்பாலான யூரூப்பர்கள் யதார்த்தத்தை உணராதவர்களாக  அனுர அரசுக்குக் காவடி எடுப்பதில் கவனம் செலுத்துவதோடல்லவா நிற்கிறார்கள்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

👇

👆  மேலே தமிழில்  உள்ள செய்தியில்...
ஸ்ரீதரன்...  //மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.// என்று...  வெளிப்படையாக அறிவித்த பின்பும்,  லூசுத் தனமாக எழுதிக் கொண்டு   இருக்காமல்... அவர் சாராய அனுமதி பெற்றதை நிரூபித்து, அவரை அரசியலில் இருந்து விலக வைக்கின்ற அலுவலை பார்க்கவும். 

இனி.... உங்களுக்கு தெரிந்த ஆதாரங்களை, திரட்டிக் கொண்டு களத்தில் இறங்கவும். 👍
பைத்தியக்காரத்தனமாக....  சும்மா ஊளையிடுவதில், எந்த அர்த்தமும் இல்லை. 

மேலே எல்லாம் தமிழில்தான் எழுதப் பட்டுள்ளது. 
வாசித்து... விளங்கிக் கொள்வதில், எந்தப் பிரச்சினையும் இராது என நினைக்கின்றேன். 
திரும்பத் திரும்ப...  ஒரு விடயத்தை, உங்களுக்கு விளங்கப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

போய் ஆதாரங்களை திரட்டவும். அதுதான்... இப்போ நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. 
இதற்குமேல்.... உங்களுக்கு, விளக்கமாக.. சொல்ல எதுவும் இல்லை.   🙂

சிறியர், 

ஏலுமென்றால் நிரூபியுங்கள் என்று சவால் விட்டுள்ளார்.  நான் ஒருவருக்கும் சிபாரிசு செய்யவில்லை. நான்  ஒரு Bar license ம் எடுத்துக் கொடுக்கவில்லை என்று சொல்லவில்லையே,.........அதைக் கவனித்தீர்களா? 

தனது தொகுதியில் 16 license கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அவர்தான் எல்லோருக்கும் முன்னுக்கு நின்று சிபாரிசு செய்தவர்களை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.  அதை விடுத்து சவால் விடுகிறார்.  உண்மை வெளிவரும் போது  நான் சட்டத்திற்குப் புறம்பாக எதுவும் செய்யவில்லையே என்பார் . 

விக்கியருக்கு உள்ள வெகுளித்தனமும் தனது பிழையை ஏற்றுக்கொள்ளக் கூடிய பெருந்தன்மையும்  சிறிதரனுக்கு இல்லாமல் போனது துரதிர்ஷ்டம். 

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், யாழ் களத்தில் தங்களை உண்மை விளம்பிகள் என்கிற ரீதியில் கம்பு சுற்றிய பலரின் உண்மை நிறம் வெளித் தெரிய ஆரம்பித்திருக்கிறது. 

சமூகத்திற்கு தீங்கானது என்று தெரிந்துகொண்டே  சிறீதரன் MP  யில்  தவறை மூடி மறைக்க முயற்சிப்பதன் ஊடாக  பலரின் சாயம் வடிந்தோடுகிறது.  

அப்படிப்பட்டவர்கள் தங்களின்  சாயம் வெளுப்பது கூட அவர்களுக்குப் புரியவில்லை. 

எப்போதோ ஒரு நாள் எல்லாமே வெளிவரத்தான் போகிறது. அதற்காகவேனும் தாங்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நன்று. 

😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஊர்வலம் நடத்திற ஆட்களும் முன்னிலை வகிப்பவர்களும் யாரென்று பார்த்தால் சுமத்திரனின் அல்லக்கைகள்.கடந்த தேர்தலில் சுமத்திரன் அணியில் போட்டியிட்வரும் அதில்நிற்கிறார். இந்த கேட்டுவிட்டுத்தான் மக்கள்  சிறிதரனுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.தமிழ்மக்களுக்கு எத்தனையோ அன்றாடப்பிர்சினைகள் இருக்கின்றன. முக்கிய பிரச்சினையான இனப்பிரச்சினை இருக்கிறது.ஆனால் இவர்களுக்கு சிறியை தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேற்றுவதுதான் பிரதான பிரச்சினையாக இருக்கிறது.

https://www.facebook.com/share/p/14vJZeZjfw/

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புலவர் said:

1) இந்த ஊர்வலம் நடத்திற ஆட்களும் முன்னிலை வகிப்பவர்களும் யாரென்று பார்த்தால் சுமத்திரனின் அல்லக்கைகள்.கடந்த தேர்தலில் சுமத்திரன் அணியில் போட்டியிட்வரும் அதில்நிற்கிறார். இந்த கேட்டுவிட்டுத்தான்

2) மக்கள்  சிறிதரனுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.

3) தமிழ்மக்களுக்கு எத்தனையோ அன்றாடப்பிர்சினைகள் இருக்கின்றன. முக்கிய பிரச்சினையான இனப்பிரச்சினை இருக்கிறது.ஆனால் இவர்களுக்கு சிறியை தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேற்றுவதுதான் பிரதான பிரச்சினையாக இருக்கிறது.

கிளிநொச்சியில்அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள்போராட்டம் பிழையானது என்கிறீர்களா? 

1) சரியான ஒரு விடயத்திற்காக யாரும் குரல் கொடுக்கலாம்.

2) அதே மக்கள்தான் இந்தப் போராட்டத்திலும் நிற்கிறார்கள். 

3)  தமிழ் மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க சிறியருக்கு வெள்ளை அடிப்பது,  வக்காலத்து வாங்குவதுதான் சிலருக்கு சிலருக்கு முன்னுரிமையாக இருக்கிறது. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இனி.... உங்களுக்கு தெரிந்த ஆதாரங்களை, திரட்டிக் கொண்டு களத்தில் இறங்கவும். 👍
பைத்தியக்காரத்தனமாக....  சும்மா ஊளையிடுவதில், எந்த அர்த்தமும் இல்லை. 

சுமமா தமாசு பண்ணாதீங்க சிறியர் உலகம்  அறிந்த தமிழினப்படுகொலையை நிரூபிக்கவே ஆதாரம் காணாது என்ற சொன்ன அப்புக்காத்தும் அவரது அல்லக்கைகளும் இதுக்கு ஆதாரம் தேடி எடுக்க எத்தனை நாளாகும் அதற்குள் அடுத்த தேர்தல்வந்து விடும்.

7 minutes ago, Kapithan said:

2) அதே மக்கள்தான் இந்தப் போராட்டத்திலும் நிற்கிறார்கள். 

இங்கே அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள்அதே மக்கள் அல்ல சுமத்திரனின் அடிப்பொடிகள். இதுதான் அவருடைய அரசியல்நகர்வு. குற்றஞ்சாட்டப்பட்ட சிறிதரனோ கனடாவில் தமிழ்மக்களால் வரவேற்கப்படுகிறார். சுமத்திரன் போல் கூட்டத்தை நடத்த விடாமல் கலைக்கப்படவில்லை. ஆக நிலமும் புலமும் சிறிதரனை ஆதரிக்கிறார்கள்.அதே சமயம் நிலமும் புலமும் சுமத்திரனை புறக்கணிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

சுமமா தமாசு பண்ணாதீங்க சிறியர் உலகம்  அறிந்த தமிழினப்படுகொலையை நிரூபிக்கவே ஆதாரம் காணாது என்ற சொன்ன அப்புக்காத்தும் அவரது அல்லக்கைகளும் இதுக்கு ஆதாரம் தேடி எடுக்க எத்தனை நாளாகும் அதற்குள் அடுத்த தேர்தல்வந்து விடும்.

புலவர்....  தேர்தலுக்கு முன்பு இருந்து இன்றுவரை... கடந்த ஒரு வருடமாக,
சுமந்திரனின்  அல்லக்கைகள்...  தமிழர்களுக்கு வேறு ஒரு பிரச்சினையும் இல்லை என்ற மாதிரி இதை வைத்தே அரசியல் செய்யலாம் என்று முட்டாள் தனமாக செயல் படுகின்றார்கள்.  

இந்த அல்லக்கைகள் தான்  சுமந்திரனை பப்பாவில் ஏற்றி விட்டு, தோல்வியை கொடுத்து  இருக்கிறார்கள். அடுத்த தேர்தலிலும்... சுமந்திரனுக்கு ஆப்பு அடிக்கிறது என்றே முடிவு எடுத்து விட்டார்கள் போலுள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

மதுக்கடைகளால் அப்பாவிகள் உயிர்கள் பலியாகின்றன சில சாரதிகள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் இன்றும் கூட விபத்து பச்சிளம் குழந்தை பலியாகி இருக்கிறது கிளிநொச்சியில் (2வயது ) தாய் தந்தை மகன் படுகாயம்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மதுக்கடைகளால் அப்பாவிகள் உயிர்கள் பலியாகின்றன சில சாரதிகள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் இன்றும் கூட விபத்து பச்சிளம் குழந்தை பலியாகி இருக்கிறது கிளிநொச்சியில் (2வயது ) தாய் தந்தை மகன் படுகாயம்.

அவர்கள் கொண்டு வந்து இவர்களின் வாயில் ஊத்தி விட்டார்களா??

சும்மா மற்றவர்கள் மீது பழி போட்டு விட்டு தப்பிக்க கூடாது.

பிரென்சில் இல்லாத மதுவா? அந்த பக்கமே சென்றதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

இங்கே அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள்அதே மக்கள் அல்ல சுமத்திரனின் அடிப்பொடிகள். இதுதான் அவருடைய அரசியல்நகர்வு. குற்றஞ்சாட்டப்பட்ட சிறிதரனோ கனடாவில் தமிழ்மக்களால் வரவேற்கப்படுகிறார். சுமத்திரன் போல் கூட்டத்தை நடத்த விடாமல் கலைக்கப்படவில்லை. ஆக நிலமும் புலமும் சிறிதரனை ஆதரிக்கிறார்கள்.அதே சமயம் நிலமும் புலமும் சுமத்திரனை புறக்கணிக்கிறார்கள்.

உங்கள் வாயில் சர்க்கரையை அள்ளிக் கொட்ட,.....🤣

உந்த ஆர்ப்பாட்டம் Bar களுக்கு எதிரானதே தவிர சிறியருக்கு எதிரானது அல்ல.  சிறியரை இதற்குள் இழுத்துவிட்டு தாங்களாகவே மாட்டிக்கொண்டீர்களே,.. .🤣

தலையில் இருக்கும் கொண்டையை மறைக்க மறந்துவிட்டீர்கள் புலவர்? 

🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.