Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அண்ணா பல்கலைக்கழகம், பாலியல் வன்கொடுமை
படக்குறிப்பு, இந்திய மாணவர் சங்கத்தினர் பல்கலைக் கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை கண்டித்துள்ள தமிழக எதிர்க்கட்சிகள், சென்னையின் மையத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்திலேயே மாணவிக்கு போதிய பாதுகாப்பு இல்லையா? என்று தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவிக்கு என்ன நடந்தது? தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறது?

காவல் நிலையத்தில் மாணவி புகார்

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், அந்த வளாகத்திற்குள்ளேயே திங்கள்கிழமையன்று (23.12.24) இரவு பாலியல் வன்முறைக்கு இலக்கானதாக புகார் அளித்தார்.

திங்கள்கிழமையன்று இரவு உணவருந்திய பிறகு மாணவர் ஒருவருடன் பல்கலைக் கழக வளாகத்திற்குள் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்தார்

இதற்கு பிறகு, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, குற்றவாளியைப் பிடிப்பதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த 37 வயதான ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது.

இவர் நடைபாதையில் பிரியாணிக் கடை வைத்து வியாபாரம் செய்துவருவதாகவும் குற்றம் தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகம், பாலியல் வன்கொடுமை
படக்குறிப்பு, சென்னை அண்ணா பல்கலை கழகத்திற்கு வெளியே போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன

எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை நகரின் முக்கிய இடங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்குள் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இது தொடர்பாக கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக் கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழகத்தையும் பிற மாநிலங்களையும் சேர்ந்த பெற்றோர்கள் அண்ணா பல்கலைக் கழகம் மிகவும் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் தான் தங்களின் குழந்தைகளை பல்கலைக் கழகத்திற்கு அனுப்புகிறார்கள். ஆனால், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு இல்லை, மாணவிகளே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்றால் இனி எந்தப் பெற்றோர் தங்களின் மகள்களை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அனுப்புவார்கள். இது பெண் கல்விக்கு பெருந்தடையாக மாறிவிடாதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம், பாலியல் வன்கொடுமை
படக்குறிப்பு, அண்ணா பல்கலைக்கழக வளாகம்

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வைக் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்திருக்கிறார்.

"வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக் கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகம், பாலியல் வன்கொடுமை
படக்குறிப்பு, பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் விளக்கம்

அண்ணா பல்கலைக் கழகத்தின் பதிவாளர் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், "இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக உள் புகார்க் குழுவினருக்கும் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டு, குழுவின் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் தேவையான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அண்ணா பல்கலைக் கழகத்தைப் பொருத்தவரை அனைத்து மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

நுனிப்புல் மேய்ந்து தலையங்கத்தை மட்டும் முதலில் வாசித்துக் கலவரத்துக்கு உள்ளானேன்.🥺

ஒரே மாதிரியான பலவற்றை குறிப்பதற்கு ஒவ்வொன்றின் பின்னரும் காற்புள்ளி  “,”  இடப்படுகிறது முடிவிற்கு முற்றுப்புள்ளி  “.” இடப்படுகிறது.

தமிழகச் செய்தியில் வந்த இந்தப் பதிவின் தலையங்கத்தை

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி ஒருவர் கைது என்று வாசித்துத் திகைத்துவிட்டேன்🤔

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Paanch said:

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி ஒருவர் கைது என்று வாசித்துத் திகைத்துவிட்டேன்

நானும் தான்.

பிடிபட்டவர் திமுக வில் பிரபலமானவராம்.

ஏற்கனவே 13 வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் bbc இதுக்குமாடா கேள்விக்குறி ?

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: பிரியாணி கடை உரிமையாளர் சிக்கியது எப்படி?

26 DEC, 2024 | 09:03 AM
image
 
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடைபாதையில் பிரியாணி கடை நடத்தும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பொறியியல் பயிலும் மாணவி ஒருவர் அங்கு உள்ள விடுதியில் தங்கி உள்ளார். இவருக்கும், 3-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களாக நட்பு இருந்து வந்துள்ளது. கடந்த 23-ம் தேதி இரவு 8 மணி அளவில் இவர்கள் இருவரும் வழக்கம்போல பல்கலைக்கழக வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளனர். கட்டுமான பணி நடந்து வரும் இடத்தின் பின்னால் மறைவான இடத்தில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது, இளைஞர் ஒருவர் மறைவான இடத்தில் இருந்து அவர்களை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அங்கு வந்த அவர், அந்த வீடியோவை காண்பித்து, சமூகவலைதளங்களில் பரப்பி விடுவதாக கூறி அவர்களை மிரட்டியுள்ளார். பின்னர், மாணவரை தாக்கி விரட்டியுள்ளார். பிறகு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தப்பியுள்ளார்.

இதுதொடர்பாக விடுதி அறையில் உள்ள தோழிகள் மற்றும் பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார். வெளியூரில் இருந்த பெற்றோர் உடனடியாக சென்னைக்கு விரைந்தனர். நடந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் பாரதிராஜாவிடம் 24-ம் தேதி புகார் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அருணுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் நேரடி மேற்பார்வையில், மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக ஆர்.ஏ.புரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி வழக்கு பதிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் தனிப்படை போலீஸார் துப்புதுலக்கினர். விடுதி மாணவர்கள், கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது சென்னை கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் (37) என்பது தெரியவந்தது.

தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர், கோட்டூர் பகுதி நடைபாதையில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இரவு நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அடிக்கடி அத்துமீறி நுழைந்துள்ளார். மாணவ, மாணவிகளை மிரட்டி இதுபோல பலமுறை தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மாமல்லபுரத்திலும் ஒரு வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டு, 2014-ல் வெளியே வந்துள்ளார். இவர் மீது 13 வழக்குகள் உள்ளன. அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

https://www.virakesari.lk/article/202175

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஏராளன் said:

ஏற்கனவே பலரை மிரட்டி…. பாலியல் வன்கொடுமை செய்த திருட்டுப் பூனை தான் சிக்கியுள்ளது. 
மறியலில் இருந்து திருந்தாதவனுக்கு…. சவூதி அரேபியா தண்டனைதான் சரி வரும்.
பாக்கு வெட்டிக்கு, வேலை கொடுங்க….

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

பிடிபட்டவர் திமுக வில் பிரபலமானவராம்.

பிரியாணிக்கடை வைத்திருந்தால் பிரபலமாக இருந்திருப்பார். தனிப்படை வேறு அமைத்து பிடித்திருக்கின்றார்கள். திமுக பிரபலம் என்றால் எப்படி காவல்துறை இப்படித் தைரியமாக நடவடிக்கை எடுப்பார்கள்?

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை- கைதானவர் திமுக பிரமுகரா?: புகைப்படம் வெளியிட்ட அண்ணாமலை

KaviDec 25, 2024 22:40PM
njnjaaaaa.webp

அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் ஞானசேகரன் என்ற பிரியாணி கடை வியாபாரியை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கைதான ஞானசேகரன் திமுகவின் ஆதரவாளர் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

இதுதொடர்பாக இன்று (டிசம்பர் 25) சில புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கம் மூலம் பகிர்ந்துள்ள அண்ணாமலை,

“கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் முழுவதும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் இருந்து ஒரு தெளிவான திட்டம் புலப்படுகிறது. 

ஒரு குற்றவாளி, திமுகவில் உறுப்பினராவதோடு, அந்தப் பகுதி திமுக நிர்வாகிகளுடன் நெருக்கமாகிறார்.

அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் கிடப்பில் போடப்படுகின்றன. மேலும், அவர் சரித்திரப் பதிவு குற்றவாளி என வகைப்படுத்தப்படாமல், பகுதி காவல் நிலையத்தின் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்படாமல் விடுவிக்கப்படுகிறார்.

அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக, அவர் மீதான வழக்குகளை காவல்துறை விசாரிக்காமல் இருப்பதால், மேலும் குற்றங்களைச் செய்ய அது அவருக்கு இடமளிக்கிறது.

தொடர்ந்து தமிழகமெங்கும் நடைபெறும் குற்றங்களில், குற்றவாளிகள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் அழுத்தத்தால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. 

இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே. தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக, 15 வழக்குகள் உள்ள ஒருவரை, இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவைத்ததால்தான், இன்று ஒரு அப்பாவி மாணவிக்கு இந்தக் கொடூரம் நடைபெற்றிருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க திமுக அரசே பொறுப்பு.

எவ்வளவு காலம் தமிழக மக்கள் இந்த நிலையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்? ஆளுங்கட்சியினர் என்றால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழகத்தில் சட்டம் உள்ளதா?

முதலமைச்சர் ஸ்டாலின் இப்போதாவது பொதுமக்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

https://minnambalam.com/political-news/sexually-assaulting-a-student-is-the-arrestee-a-dmk-figure-photo-released-by-annamalai/

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

பிரியாணிக்கடை வைத்திருந்தால் பிரபலமாக இருந்திருப்பார். தனிப்படை வேறு அமைத்து பிடித்திருக்கின்றார்கள். திமுக பிரபலம் என்றால் எப்படி காவல்துறை இப்படித் தைரியமாக நடவடிக்கை எடுப்பார்கள்?

துணைமுதல்லர் மற்றும் மந்திரிகளுடன் நின்ற படம் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

துணைமுதல்லர் மற்றும் மந்திரிகளுடன் நின்ற படம் இருந்தது.

ஒரு திமுக ரெளடி வசமாக சிக்கி உள்ளார்.

எல்லாரும் திமுக வை வச்சி செய்கிறார்கள்.

ஆனால் இந்த வாயை வாடகைக்கு விடும் ப்ரோ மட்டும் அமைதிகாக்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்

இடுப்பை கிள்ளுறது, பிரியாணி திருடுறது, 
பாலியல் வன்கொடுமை செய்யிறது என்றால்...
தி.மு.க. காரனுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

இவருக்கும், 3-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களாக நட்பு இருந்து வந்துள்ளது. கடந்த 23-ம் தேதி இரவு 8 மணி அளவில் இவர்கள் இருவரும் வழக்கம்போல பல்கலைக்கழக வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளனர். கட்டுமான பணி நடந்து வரும் இடத்தின் பின்னால் மறைவான இடத்தில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது, இளைஞர் ஒருவர் மறைவான இடத்தில் இருந்து அவர்களை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அங்கு வந்த அவர், அந்த வீடியோவை காண்பித்து, சமூகவலைதளங்களில் பரப்பி விடுவதாக கூறி அவர்களை மிரட்டியுள்ளார். பின்னர், மாணவரை தாக்கி விரட்டியுள்ளார். பிறகு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தப்பியுள்ளார்.

8  முதல் 9 வரை விடுதிகளில் படிப்பு நேரம் .. படிக்குற நேரத்துல அப்படி என்ன கடலை போடுற வேலை ..?

போக சென்னையில் பெசன்ட் நகர் , மெரினா பீச்  இன்னும் எவ்வளவோ இடம்  இருக்கு..?

கதைப்பதை வீடியோ எடுத்து போடுவதாக அந்த காடையன் மிரட்டினானாம் ? தயவு செய்து  upload பண்ணுங்க share பண்ணுங்க என்று சொல்லும் இந்த காலத்தில் ..?  

சம்பந்தபட்டவர்கள் மாணவர்கள் என்பதால் எதிர்காலம் கருதி விட்டினம்..ஆக குறைந்தது மாணவ மணிகளுக்கு இந்த நிகழ்வு எச்சரிக்கை மணி 

மற்றும்படி அந்த காடையனுக்கு காளை மாட்டுக்கு அடிப்பது போல் அடித்து ஆண்மையை எடுத்து விட வேண்டியதுதான்..!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

முதலமைச்சர் ஸ்டாலின் இப்போதாவது பொதுமக்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுவரை இருந்த முதல்வர்களிலேயே ஸ்டாலின் தான் மிகவும் கையாலாகாதவர் என்ற பட்டத்துடன் இவரின் பெயர் நிலைக்கப் போகின்றது.................

ரவுடிகளுடனும், சமூகவிரோதிகளுடனும் கூட்டும் தொடர்பும் வைத்திருப்பதிலும், அவர்களை காப்பாற்றுவதிலும் திமுகவில் எந்த மாற்றமும் இல்லை....... 😡..... அன்றும், இன்றும், என்றும் இப்படியே.......

இங்கு தான் ஜெயலலிதா அம்மையார் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது............. வழக்கும் இல்லை, ஒரு ம**ம் இல்லை............... பிடிபட்ட அடுத்த மணிநேரத்திலேயே கதை முடிந்திருக்கும்........... 

  • கருத்துக்கள உறவுகள்

மாணவி மீது பாலியல் வன்கொடுமை – தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை

மாணவி மீது பாலியல் வன்கொடுமை – தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி கோரி, தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை வெள்ளிக்கிழமை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார்.

தனது வீட்டிற்கு வெளியே பலருக்கு முன்னால் அவர் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

முன்னதாக அண்ணா பல்கலைக்கழக மாணவியின் துயரமான பாலியல் வன்கொடுமை நீதிகோரி தனது வீட்டிற்கு முன் இன்று (27 ஆம் திகதி) காலை 10 மணிக்கு ஆறு முறை சவுக்கால் தன்னைத்தானே அடித்துக் கொள்வதாக அண்ணாமலை கூறியிருந்தார்.

ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் ஒரு தமிழக ஆளும் கட்சியான திமுக நிர்வாகி என்றும், அதை ஆளும் கட்சி மறுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.

திமுக தலைவர்களுடன் குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படங்களைக் காட்டி, அவர் ஆளும் கட்சியின் மாணவர் பிரிவு நிர்வாகி என்றும் குற்றம் சாட்டினார்.

பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் திமுகவின் முதன்மை உறுப்பினர் கூட இல்லை என்று தமிழக சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி வலியுறுத்தினார்.

ஆளும் கட்சியுடன் தொடர்புடையதால் குற்றம் சாட்டப்பட்டவர் இந்தக் குற்றத்தைச் செய்ததாக பாஜக தலைவர் குற்றம் சாட்டினார்.

“இது மிகவும் எளிமையானது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் திமுகவுடன் தொடர்புடையவர் என்பதால், பொலிஸார் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

முதல் தகவல் அறிக்கை (FIR) எழுதப்பட்ட விதம் குறித்தும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார், மேலும் பாதிக்கப்பட்டவர் ஒரு குற்றம் செய்தது போல் அது வரைவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

“பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டதற்கு திமுக (அரசு) வெட்கப்பட வேண்டும்” என்று தமிழக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி டிசம்பர் 23 அன்று இரவு 8 மணியளவில் அடையாளம் தெரியாத ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

கல்லூரி வளாகத்தில் ஒரு ஆண் நண்பருடன் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அவர் தனது முறைப்பாட்டில் குற்றம் சாட்டினார். இதனையடுத்து 37 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“விசாரணையின் போது, ஆதாரங்களின் அடிப்படையில், கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் (கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு பகுதி) இந்தக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவர் நடைபாதையில் பிரியாணி கடை நடத்தி வியாபாரம் செய்கிறார்” என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும், அவர் வேறு குற்றங்களில் ஈடுபட்டாரா என்று விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
https://oruvan.com/bjp-tamil-nadu-president-k-annamalai-whips-himself-outside-his-residence/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

மாணவி மீது பாலியல் வன்கொடுமை – தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை

large.IMG_7944.jpeg.eb59e0afc1469883a834

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

திமுகவின் மீது ஏற்பட்ட அதிருப்தியை இந்த கோமாளி சர்க்கஸ் காட்டி நீர்த்துபோக செய்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

படித்தவன் எல்லாம் ஏன் இப்படி லூசுகளாக? கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

படித்தவன் எல்லாம் ஏன் இப்படி லூசுகளாக? கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது 🤣

🤣..................

மனித வாழ்வில் மூன்று விசயங்கள் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமே இல்லாதவை போல, விசுகு ஐயா - அறிவு, படிப்பு, லூசுத்தனம்...................😜.

ஆறு முறைகள் தன்னை அடிப்பேன் என்று சொல்லிவிட்டு எட்டு முறைகள் அடித்தும் விட்டார்......... அண்ணாமலையாருக்கு கணக்கு வேற மட்டுப் போல............🤣.

அந்த சவுக்கடியை ஆறு அடிகளுடன் ஓடி வந்து தடுக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்ட நபர் தான், வேண்டும் என்றே எட்டு அடிகள் வரை விட்டுப் பார்த்தாரோ தெரியவில்லை...........🤣.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரசோதரன் said:

அதிலும் இந்த வைத்தியர் மற்றும் ஜபிஸ் போன்ற அதிகம் படித்தவர்கள் மேல் நான் வைத்த நம்பிக்கை??

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

மாணவி மீது பாலியல் வன்கொடுமை – தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை

இப்ப எல்லாம் முழு பயித்தியம் கள் தான் அரசியல் செய்கின்றன போல் உள்ளது அங்கு அண்ணாமலை இங்கு அர்ச்சுனா .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

இப்ப எல்லாம் முழு பயித்தியம் கள் தான் அரசியல் செய்கின்றன போல் உள்ளது அங்கு அண்ணாமலை இங்கு அர்ச்சுனா .

இங்கு புட்டின்....
அங்கு டொனால்ட் ரம்ப் எனவும் வந்திருக்கணும் பெருமாள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை.. கையைப் பிடித்து கண்ணீர் மல்கிய தொண்டர்கள்.! 

பிற்குறிப்பு: ட்ரம்பால் இப்படி செய்ய முடியுமா???😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, nunavilan said:

பிற்குறிப்பு: ட்ரம்பால் இப்படி செய்ய முடியுமா???😂

எல்லாம் சாத்தியம்....🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

படித்தவன் எல்லாம் ஏன் இப்படி லூசுகளாக? கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது 🤣

விசுகர்! படிப்பிற்கும்  மனித வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை. படித்தவன் செய்யாத கொடுமைகளையா படிக்காதவன் செய்கின்றான்?

போர்களில் பாவிக்கப்படும் ஆயுதங்களை தயாரித்தது யார்? படித்தவன் தானே? அதை ஏன் அழிவுக்காக தயாரித்தான்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.