Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ஐயனே நான் ஊரில் இருந்த வரைக்கும் தண்ணீர் காசுக்கு வாங்கி குடித்ததே கிடையாது.
ஏன் இந்த நிலமை?
விளக்குவீர்களா?

கால மாற்றம் எனும் உலகளாவிய பொய்யை சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். 🙂

அண்ணை இதில் யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் பலகாரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன..

1) சுத்தமான நீர் குடிக்கவேணும் எண்ட அதிகளவான விளிப்புணர்வு.. முன்னர் அதைப்பற்றி மக்களுக்கு விளக்கமில்லை.. மாற்றுவழிகளும் இல்லை.. இப்பொழுது போத்தல் தண்ணீர் வருகை, வெள்நாட்டு உறவுகளின் அறிவுரை, அதிக சிறுநீரகப்பிரச்சினைகளால் அறிந்தவர்,தெரிந்தவர், உறவினர் ஊரார்களின் அதிக அண்மைக்கால மரணங்கள் மக்களிடம் ஏற்படுத்திய விளிப்புணர்வு..

2) கிணற்று நீர் கல்பிரதேசம் அல்லாத யாழின் மணல் பிரதேசங்களில் சவர்(மணல் கலந்த சிவப்பு நீர்) ஆக மாறிவருகின்றன.. இந்த பிரச்சினையால் அதிகம பாதிக்கப்படுவது தென்மராட்சி மற்றும் யாழ்நகரின் கடலை அண்டிய பிரதேசங்கள்..

3) கல் பிரதேசங்களில் நிலத்தடி நீர் வற்றி வருவது, போதுமான தண்ணிர் கோடைகாலங்களில் கிடைக்காமல் போகிறது.. கிணறுகள் வற்றி சேறு சுரி மட்டத்தில் தண்ணி போய் நிற்கிறது குடிக்க முடியாமல்

4) இன்னும் ஆழமாக அடிக்கப்படும் குழாய்க்கிணறுகளில் உப்பு நீர்தான் அண்மைக்காலமாக அடிக்கப்பட்ட பெரும்பாலான குழாய்க்கிணறுகளில் உப்புத்தண்ணி வருகிறது..எங்கள் வீட்டில் கூட அண்மையில் அடித்த குழாய்க்கிணற்றில் இருந்து உப்பு நீர்தான் வந்தது.. பிறகு அதுக்குள் கல் மண் எல்லாம் கொட்டி ஆக ஆழத்தில் இருந்த ஊற்றை அடைத்த பொழுது உப்பில்லா தண்ணி மேல் ஊற்றில் இருந்து வருகுது..  அதுக்கு கிணத்து தண்ணியே வழமைபோல பாவிச்சிருக்கலாம்.. கிணத்து தண்ணியும் மேல் ஊற்றில் இருந்துதான் வருகிறது.. ஆனா அந்த தண்ணி(கிணறு, குழாய்க்கிணறு) தடிப்பு அதிகமாகவும் ஒருவித கடினசுவையுடனும் இருக்கு.. அநேகமாக எனக்கு தெரிந்த பலர் அடித்த குழாய்க்கிணருகளில் இதுதான் நிலமை.. உப்புத் தண்ணி.. இதன் அர்த்தம் நிலத்தடி நீர் உப்பாகிக்கொண்டு வருக்கின்றது யாழில் என்பதுதான்.. இன்னும் மிகக்குறுகிய காலத்தில் இது யாழ்முழுவதும் வந்துவிடும்.. ஏனெனில் நிலத்தடி நீர் ஓட்டம் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளது.. முந்திய காலத்தில் குழாய்க்கிணற்றில் உப்பு நீர் வருவது அரிதிலும் அரிது.. எங்கயாலும் ஒண்டுக்குதான் வரும்.. ஆனால் இப்ப 4 குழாய்க்கிணறு தோண்டினா 2 உப்புத்தண்ணி..

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

ஐயனே நான் ஊரில் இருந்த வரைக்கும் தண்ணீர் காசுக்கு வாங்கி குடித்ததே கிடையாது.
ஏன் இந்த நிலமை?
விளக்குவீர்களா?

கால மாற்றம் எனும் உலகளாவிய பொய்யை சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். 🙂

என்னுடைய அனுபவம் ...2004 சமாதான கலத்தில் ஊர் போனபோது...மற்ற வெளிநாட்டவர் போத்தல் தண்ணீர் குடித்தபோது...நான்  கிணறுகளை நாடிச் சென்று இறைத்துக் குடித்தேன்...2024 இல் சென்றபோது..அதுமுடியாமல் போய்விட்டது..எந்தவீடிலும் போத்தல் தண்ணீர்தான்...வெட்கை கூடிய நேரம் போதியளவு தண்ணீர் வாங்கிக் குடிக்க மனச்சாட்சி உறுத்துகிறது..குடிக்கமல் இருக்கவும் முடியவில்லை ..சில இடங்களில் வல்லிபுரத்தில் இருந்து வரும் குழாய்  நீரை வடிகட்டி தந்தார்கள்... அந்தளவு அருமையாக இருந்தது...இந்த தண்ணிபிரச்சினை தவிர்க்க போகும் வழியிலேயே கடத்தெரு வழிய தண்ணிப்போத்தலை வாங்கி குடித்துவிட்டுத்தான்..விசிட் பண்ணுவேன்... எப்படி இருந்த குடாநாடூ தண்ணிக்காக எப்படித் தத்தழிக்கிறார்களே

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்நகரை அண்டிய புகுதிகளில் மற்றும் வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதிகளில் மலசலகூடக்கழிவுகள் குழாய்கள் இணைப்புகள் மூலம் சேகரிக்கப்பட்டு உரிய முறையில் அவற்றை எரித்து அழிப்பதோ அல்லது பசளைகாக மாற்றுவதற்கோ அல்லது வேறு ஏதாவது முறையில் அகற்றப்படுவதன்மூலம் யாழ்நகரை அண்மித்த பகுதிகளில் மலசலகூட கழிவு நீர் கிணற்று நீரிருடன் கலப்பது முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும்.அதற்காக கட்டணம் அறவிடப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

ஐரோப்பிய நாடுகளில் நிலத்தடி நீரை உறிஞ்சு எடுப்பதில்லை. எல்லாம் மழை நீரை தேக்கங்களிள் சேகரித்தே அன்றாட பாவனைக்கு உபயோகப்படுத்துகின்றார்கள்.

இலங்கை அரசியல்வாதிகள் மேற்கு நாடுகளுக்கு வந்து போவார்களே ஒழிய இவர்களின் அரசியல் முறைகளையும்,வாழ்க்கை முறைகளையும்,தன்னார்வ திட்டங்களையும் கண்டு கொள்வதேயில்லை.

ஆனால் அவர்களின் கோட்டு சூட்டுக்களுக்கு இன்னும் பஞ்சமில்லை.கோட்டு சூட்டின் அர்த்தம் தெரியாதவர்கள்.

நான் ஸ்பெயினில் உள்ள ஒரு தீவுக்கு சென்று பார்த்துவிட்டு இதைத் தான் எழுதினேன் முக்கியமாக அதேபோல் தண்ணீர் பிரச்சினையால் இப்போதும் தத்தளித்து மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் எனது ஊர்க்காரருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2024 at 20:24, பாலபத்ர ஓணாண்டி said:

அண்ணை இதில் யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் பலகாரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன..

1) சுத்தமான நீர் குடிக்கவேணும் எண்ட அதிகளவான விளிப்புணர்வு.. முன்னர் அதைப்பற்றி மக்களுக்கு விளக்கமில்லை.. மாற்றுவழிகளும் இல்லை.. இப்பொழுது போத்தல் தண்ணீர் வருகை, வெள்நாட்டு உறவுகளின் அறிவுரை, அதிக சிறுநீரகப்பிரச்சினைகளால் அறிந்தவர்,தெரிந்தவர், உறவினர் ஊரார்களின் அதிக அண்மைக்கால மரணங்கள் மக்களிடம் ஏற்படுத்திய விளிப்புணர்வு..

2) கிணற்று நீர் கல்பிரதேசம் அல்லாத யாழின் மணல் பிரதேசங்களில் சவர்(மணல் கலந்த சிவப்பு நீர்) ஆக மாறிவருகின்றன.. இந்த பிரச்சினையால் அதிகம பாதிக்கப்படுவது தென்மராட்சி மற்றும் யாழ்நகரின் கடலை அண்டிய பிரதேசங்கள்..

3) கல் பிரதேசங்களில் நிலத்தடி நீர் வற்றி வருவது, போதுமான தண்ணிர் கோடைகாலங்களில் கிடைக்காமல் போகிறது.. கிணறுகள் வற்றி சேறு சுரி மட்டத்தில் தண்ணி போய் நிற்கிறது குடிக்க முடியாமல்

4) இன்னும் ஆழமாக அடிக்கப்படும் குழாய்க்கிணறுகளில் உப்பு நீர்தான் அண்மைக்காலமாக அடிக்கப்பட்ட பெரும்பாலான குழாய்க்கிணறுகளில் உப்புத்தண்ணி வருகிறது..எங்கள் வீட்டில் கூட அண்மையில் அடித்த குழாய்க்கிணற்றில் இருந்து உப்பு நீர்தான் வந்தது.. பிறகு அதுக்குள் கல் மண் எல்லாம் கொட்டி ஆக ஆழத்தில் இருந்த ஊற்றை அடைத்த பொழுது உப்பில்லா தண்ணி மேல் ஊற்றில் இருந்து வருகுது..  அதுக்கு கிணத்து தண்ணியே வழமைபோல பாவிச்சிருக்கலாம்.. கிணத்து தண்ணியும் மேல் ஊற்றில் இருந்துதான் வருகிறது.. ஆனா அந்த தண்ணி(கிணறு, குழாய்க்கிணறு) தடிப்பு அதிகமாகவும் ஒருவித கடினசுவையுடனும் இருக்கு.. அநேகமாக எனக்கு தெரிந்த பலர் அடித்த குழாய்க்கிணருகளில் இதுதான் நிலமை.. உப்புத் தண்ணி.. இதன் அர்த்தம் நிலத்தடி நீர் உப்பாகிக்கொண்டு வருக்கின்றது யாழில் என்பதுதான்.. இன்னும் மிகக்குறுகிய காலத்தில் இது யாழ்முழுவதும் வந்துவிடும்.. ஏனெனில் நிலத்தடி நீர் ஓட்டம் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளது.. முந்திய காலத்தில் குழாய்க்கிணற்றில் உப்பு நீர் வருவது அரிதிலும் அரிது.. எங்கயாலும் ஒண்டுக்குதான் வரும்.. ஆனால் இப்ப 4 குழாய்க்கிணறு தோண்டினா 2 உப்புத்தண்ணி..

யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல், யாழ்ப்பாணிகள் தமது குடிப்பரம்பலை வன்னி நோக்கி நகர்த்த வேண்டும். யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் காணி விலை, கொழும்பை விட அதிகமாக உள்ளது.

குடிசன அடர்த்தி (/km2) யாழ்ப்பாணம் 629, முல்லைத்தீவு  38, மன்னார் 53, கிளிநொச்சி 94, வவுனியா 92.

Edited by zuma
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2024 at 10:55, குமாரசாமி said:

ஊர் பொது கிணற்றில் சாதி வேற்றுமையால் தண்ணீர் அள்ள விடாத யாழ்பாணத்தானுக்கு இரணைமடு தண்ணி கேக்குதாக்கும். 😂

இப்படி கதைத்து இதை பெருப்பிக்காமல் ( இப்படி செய்தால் அர்ஜுனா மற்றும் அவரது எஜமான்களுக்கு வேலை சுலபமாகிவிடும்) பிரயோசனமாய் கதையுங்கோ. 

மேலே யாரோ சொன்னமாதிரி… யாழ்ப்பாண நிர்வழத்தை அதிகரிக்கிறமாதிரியான கதைகளை கதையங்கோ..

- குழாய்கிணறுகளை முற்றிலுமாக தடைசெய்தல்

- ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மழைநிர் வாய்க்கால்கழை தூர்வாரி புனரமைத்தல் ( அம்பட்டன் பால வாய்க்கால் which takes the water to nanthavil)

- ந்ந்தாவில் மாதிரியான இயற்கை retention basin’s கனவளவை மாறாமல் காத்தல்

- இப்ப காணிகளின் அளவு குறைந்து வருவதால் கழிப்பிடங்கள், கிணறுகளுக்கு அருகாமையில் கட்டப்பட்டு கிணற்று நீரை மாசு படுத்திகிறார்கள், இதை தடை செய்ய வேண்டும் அதற்கு, permanent sewerage systems need to be implemented rather have septic system. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ragaa said:

அனேகமாக செய்யப் பட வேண்டியவற்றை வைத்தியர் அர்ச்சனாவிற்று சுட்டிகாட்டும் போது கவனத்தில் எடுக்கப்படுகிறது.ஆகவே இந்த சுகாதார கேடான களிப்பிடங்களுக்கும், கிணறுகளுக்குமான தூரம் எவ்வாறு இருக்க வேண்டும் மற்றும் இதர விடையங்களையும் அவரது கவனத்திற்கு கொண்டு செல்வது நன்று..

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, zuma said:

யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல், யாழ்ப்பாணிகள் தமது குடிப்பரம்பலை வன்னி நோக்கி நகர்த்த வேண்டும். யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் காணி விலை, கொழும்பை விட அதிகமாக உள்ளது.

அதை அவர்கள் என்ஜோய் பண்ணுகின்றார்கள்😟

4 hours ago, ragaa said:

இப்ப காணிகளின் அளவு குறைந்து வருவதால் கழிப்பிடங்கள், கிணறுகளுக்கு அருகாமையில் கட்டப்பட்டு கிணற்று நீரை மாசு படுத்திகிறார்கள், இதை தடை செய்ய வேண்டும் அதற்கு, permanent sewerage systems need to be implemented rather have septic system. 

அங்கேயும் நகரசபையின் அனுமதி பெற்று தான் வீடு எல்லம் கட்டலாம் என்று அங்கே நின்ற போது சொன்னார்களே அப்படி இல்லையா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, ragaa said:

மேலே யாரோ சொன்னமாதிரி… யாழ்ப்பாண நிர்வழத்தை அதிகரிக்கிறமாதிரியான கதைகளை கதையங்கோ..

- குழாய்கிணறுகளை முற்றிலுமாக தடைசெய்தல்

- ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மழைநிர் வாய்க்கால்கழை தூர்வாரி புனரமைத்தல் ( அம்பட்டன் பால வாய்க்கால் which takes the water to nanthavil)

- ந்ந்தாவில் மாதிரியான இயற்கை retention basin’s கனவளவை மாறாமல் காத்தல்

- இப்ப காணிகளின் அளவு குறைந்து வருவதால் கழிப்பிடங்கள், கிணறுகளுக்கு அருகாமையில் கட்டப்பட்டு கிணற்று நீரை மாசு படுத்திகிறார்கள், இதை தடை செய்ய வேண்டும் அதற்கு, permanent sewerage systems need to be implemented rather have septic system.

வணக்கம் ஐயா! நான் எழுதிய அந்த கருத்து ஒரு ஏளனத்திற்காக எழுதியது.

உண்மையும் அதுதானே? கிணற்றில் மாற்றானை தண்ணீர் அள்ள அனுமதிக்காத நிலப்பரப்பில் வாழ்பவர்களுக்கு ஏது இரணைமடு தண்ணீர்?

நிற்க....
நான் ஊரில் இருந்த காலங்களில் சனி ஞாயிறு நாட்கள் நண்பர்கள்/பெரியவர்களுடன் சேர்ந்து சிரமதான பணியாக குளங்களை தூர் வாரும் பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.பொது கிணறுகளை துப்பரவு செய்தல் என பல பணிகள் தொடரும்...

அந்த சிரமதான பணிகள் எல்லாம் இன்றில்லை. எனவே அவர்களை திட்டுவதில் நகைப்பாக பேசுவதில் எந்த தப்பும் இல்லை என்பது என் கருத்து.

புதிதாக வந்திருக்கும் அர்ச்சனாவும் மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர் என்பதை மறக்கக்கூடாது. பின் கதவு அரசியலால் வந்தவரல்ல.

ஒவ்வொருவனுக்கும் கால அவகாசம் கொடுப்பது உலக நியதி.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம், பங்குக்கு கிணறு என்றிருந்தது. பல குடும்ப உறவுகள் சேர்ந்து பொதுவாக கிணறு பாவித்தார்கள், உறவும் வளர்ந்தது. இன்று அப்படியில்லை அந்தக்கிணறுகள் பாவனையற்று புதர் மண்டியிருக்கிறது, உறவுகள் வெளியேறிவிட்டார்கள்.  இருப்பவர்களும் ஒருவரோடொருவர் கதைக்க விரும்புவதில்லை. நான்கு புறமும் மதில்கள், வீட்டுக்கொரு குழாய்கிணறு, அடுத்தவீட்டில் அழுது கேட்டாலும் போய்ப்பார்த்து என்னவென்று கேட்க மனித நேயமில்லை, நேரமில்லை. தோட்டத்தில், சுற்ற உள்ள வயல் காணிக்காரர் முறை போட்டு பகிர்ந்து வேலை செய்தார்கள், கூலியில்லை. இப்போ, அவன்  காணியில் விளைச்சல் அதிகமாகிவிட்டால், தொண்டைக்கால தண்ணி இறங்காது. ஒருவன் விழுந்தால், மற்றவன் சிரிக்கிறான், ரசிக்கிறான். ஆனால் இயற்கை மட்டும் எங்களுக்கு ஏற்றவாறு உதவிபுரியவேண்டும். நாங்கள் எல்லாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? சிங்களவன் குடியேறுகிறான் என்று பொருமும் நாம், எமது இடங்களை சுருக்கி அவனை வரவழைக்கிறோம். நாம் சிந்திக்கணும், நமது எண்ணங்களை மாற்றவேணும். வீடு கட்ட வேண்டுமா, கிணறு தோண்ட வேண்டுமா, கழிப்பறை அமைக்க வேண்டுமா? சுகாதார பரிசோதகர் வந்து பரிசோதித்து தகுந்த இடம் காட்டுவார். இப்போ யார் அதை கடைபிடிக்கிறார்கள்? பரிசோதகர் என்று இருப்பார், அவருக்கே முறைகள், சட்டங்கள், ஒழுங்குகள் புரிவதில்லை, தெரியாது. தனக்கு வேண்டியவருக்கு ஒரு சட்டம், தனக்கு வேண்டாதவருக்கு வேறொரு சட்டம், ஒழுங்காக அனுமதிக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களின் விண்ணப்பங்களை ஆராயாது, யாராவது அவர்களுக்கு பிடிக்காதவர்கள் முறையற்ற விதத்தில் முறைப்பாடளித்தால், உடனடியாக வந்திறங்கி, முறையற்ற விதத்தில் தடைகளை ஏற்படுத்தி, அவர்களின் முயற்சியை தடுப்பது. நாமும் எமது திணைக்களங்களும் அதிகாரிகளும் இதில மற்றவரை தூற்றிக்கொண்டு.  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

எப்ப சறத்தை தூக்கி எறிந்து விட்டு நீள காற்சட்டைக்குள் போனோமோ அன்றே இந்த சிரமதானம் கூட்டுறவு எல்லாம் போச்சு. இனி....?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

முன்பெல்லாம், பங்குக்கு கிணறு என்றிருந்தது. பல குடும்ப உறவுகள் சேர்ந்து பொதுவாக கிணறு பாவித்தார்கள், உறவும் வளர்ந்தது. இன்று அப்படியில்லை அந்தக்கிணறுகள் பாவனையற்று புதர் மண்டியிருக்கிறது, உறவுகள் வெளியேறிவிட்டார்கள்.  இருப்பவர்களும் ஒருவரோடொருவர் கதைக்க விரும்புவதில்லை. நான்கு புறமும் மதில்கள், வீட்டுக்கொரு குழாய்கிணறு, அடுத்தவீட்டில் அழுது கேட்டாலும் போய்ப்பார்த்து என்னவென்று கேட்க மனித நேயமில்லை, நேரமில்லை. தோட்டத்தில், சுற்ற உள்ள வயல் காணிக்காரர் முறை போட்டு பகிர்ந்து வேலை செய்தார்கள், கூலியில்லை. இப்போ, அவன்  காணியில் விளைச்சல் அதிகமாகிவிட்டால், தொண்டைக்கால தண்ணி இறங்காது. ஒருவன் விழுந்தால், மற்றவன் சிரிக்கிறான், ரசிக்கிறான். ஆனால் இயற்கை மட்டும் எங்களுக்கு ஏற்றவாறு உதவிபுரியவேண்டும். நாங்கள் எல்லாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? சிங்களவன் குடியேறுகிறான் என்று பொருமும் நாம், எமது இடங்களை சுருக்கி அவனை வரவழைக்கிறோம். நாம் சிந்திக்கணும், நமது எண்ணங்களை மாற்றவேணும். வீடு கட்ட வேண்டுமா, கிணறு தோண்ட வேண்டுமா, கழிப்பறை அமைக்க வேண்டுமா? சுகாதார பரிசோதகர் வந்து பரிசோதித்து தகுந்த இடம் காட்டுவார். இப்போ யார் அதை கடைபிடிக்கிறார்கள்? பரிசோதகர் என்று இருப்பார், அவருக்கே முறைகள், சட்டங்கள், ஒழுங்குகள் புரிவதில்லை, தெரியாது. தனக்கு வேண்டியவருக்கு ஒரு சட்டம், தனக்கு வேண்டாதவருக்கு வேறொரு சட்டம், ஒழுங்காக அனுமதிக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களின் விண்ணப்பங்களை ஆராயாது, யாராவது அவர்களுக்கு பிடிக்காதவர்கள் முறையற்ற விதத்தில் முறைப்பாடளித்தால், உடனடியாக வந்திறங்கி, முறையற்ற விதத்தில் தடைகளை ஏற்படுத்தி, அவர்களின் முயற்சியை தடுப்பது. நாமும் எமது திணைக்களங்களும் அதிகாரிகளும் இதில மற்றவரை தூற்றிக்கொண்டு.  

உண்மை தோட்டங்களில் பாத்தி கட்டும் வேலைகளின் போது  ஒருவர் தோட்டத்தில் பாத்திகட்ட இன்னொருவர் தனது ஆளணிகளுடன் உதவுவார். அது முடிய  மற்றவர் தனது ஆளணிகளுடன்  பெய் உதவுவார். இப்போது  அண்ணன் தம்பிகளே  ஒற்றுமையாக சேர்ந்து செய்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2024 at 08:35, nochchi said:

தமிழருக்குள் கொம்புசீவுவதில்  வேகமாகச் செயற்படும் ஊடகங்கள், ஏன் மக்களது பிரச்சினைகளை அறிவியல்பூர்வமாக அணுகி விளக்குவதில்லை. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

காரணம் இதுவாகை இருக்குமோ ..
தமிழனுக்கு தமிழனே ஒன்றும் கொடுக்க மாட்டான் பிறகு எப்படி சிங்களவர்கள்  கொடுப்பார்கள் என ...வியாக்கியாணம் சொல்லுவதற்காக...
தமிழன் பிரதேசவாதம்,கிராமவாதம்,ஊர்வாதம்,சாதியவாதம்,மாதவாதம்  என பிரிந்து நிற்கின்றார்கள் பிறகு எப்படி சிங்களவர்கள் இவர்களுக்கு தீர்வுவழங்குவது என சொல்லுவதற்கு 

இறுதியில் நவீன புத்தர் அனுரா கூட ஒன்றும் கொடுக்க முடியாமல் போனதுக்கு காரணம் தமிழர்களே என‌முடிவுரை எழுதுவதற்கு இப்பவே  பிள்ளையார் சுழி போடுகின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/p/18N8sxdVjj/

இதுவும் நியாயமான கேள்விதான்

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, satan said:

முன்பெல்லாம், பங்குக்கு கிணறு என்றிருந்தது. பல குடும்ப உறவுகள் சேர்ந்து பொதுவாக கிணறு பாவித்தார்கள், உறவும் வளர்ந்தது. இன்று அப்படியில்லை அந்தக்கிணறுகள் பாவனையற்று புதர் மண்டியிருக்கிறது, உறவுகள் வெளியேறிவிட்டார்கள்.  இருப்பவர்களும் ஒருவரோடொருவர் கதைக்க விரும்புவதில்லை. நான்கு புறமும் மதில்கள், வீட்டுக்கொரு குழாய்கிணறு, அடுத்தவீட்டில் அழுது கேட்டாலும் போய்ப்பார்த்து என்னவென்று கேட்க மனித நேயமில்லை, நேரமில்லை. தோட்டத்தில், சுற்ற உள்ள வயல் காணிக்காரர் முறை போட்டு பகிர்ந்து வேலை செய்தார்கள், கூலியில்லை. இப்போ, அவன்  காணியில் விளைச்சல் அதிகமாகிவிட்டால், தொண்டைக்கால தண்ணி இறங்காது. ஒருவன் விழுந்தால், மற்றவன் சிரிக்கிறான், ரசிக்கிறான். ஆனால் இயற்கை மட்டும் எங்களுக்கு ஏற்றவாறு உதவிபுரியவேண்டும். நாங்கள் எல்லாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? சிங்களவன் குடியேறுகிறான் என்று பொருமும் நாம், எமது இடங்களை சுருக்கி அவனை வரவழைக்கிறோம். நாம் சிந்திக்கணும், நமது எண்ணங்களை மாற்றவேணும். வீடு கட்ட வேண்டுமா, கிணறு தோண்ட வேண்டுமா, கழிப்பறை அமைக்க வேண்டுமா? சுகாதார பரிசோதகர் வந்து பரிசோதித்து தகுந்த இடம் காட்டுவார். இப்போ யார் அதை கடைபிடிக்கிறார்கள்? பரிசோதகர் என்று இருப்பார், அவருக்கே முறைகள், சட்டங்கள், ஒழுங்குகள் புரிவதில்லை, தெரியாது. தனக்கு வேண்டியவருக்கு ஒரு சட்டம், தனக்கு வேண்டாதவருக்கு வேறொரு சட்டம், ஒழுங்காக அனுமதிக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களின் விண்ணப்பங்களை ஆராயாது, யாராவது அவர்களுக்கு பிடிக்காதவர்கள் முறையற்ற விதத்தில் முறைப்பாடளித்தால், உடனடியாக வந்திறங்கி, முறையற்ற விதத்தில் தடைகளை ஏற்படுத்தி, அவர்களின் முயற்சியை தடுப்பது. நாமும் எமது திணைக்களங்களும் அதிகாரிகளும் இதில மற்றவரை தூற்றிக்கொண்டு.  

இவை யாவும் ஒரு நாளில் மாறமாட்டாது என்பது உங்களுக்கு 100% தெரியும் ..இருந்தாலும் நானும் ஏதாவது சொல்ல வேணும் என்று எழுதுகிறேன் ...
நீங்கள் கூறுவது யாவும் உண்மை ..கிராம புற அரச உத்தியோக்த்தர்களில் இருந்து பொது நல மனப்பாண்மை உருவாக வேண்டும் ...
அனுராவின் "சிஸ்டம் ஞென்ஞ்" ஏதாவது ஆக்க பூர்வமான முன்னேற்றத்தை கொடுக்கின்றதா என பார்ப்போம்...

நாங்கள் வாழ்ந்த காலங்களில் எம் மீது (நாம் வாழ்ந்த மண்மீது)புறக்காரணிகளின் செல்வாக்கு மிகவும் குறைவு ..சிறிலங்கா சிங்கள அதிகாரவர்க்கம் மட்டுமே ..
சிறிலங்கா சிங்கள அரச அதிகாரம், செல்வாக்கு/அதிகார‌ செலுத்துவதற்காக‌ பொலிசாரையும்,முப்படையினரையும்  அனுப்பி மெல்ல மெல்ல தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டி நீங்கள் எங்களது அடிமைகள் என கூறாமல் கூறி ஆட்சி செய்கின்றனர்..

ஆனால் இன்று பல புறக்காரணிகள்
புலம் பெயர்ந்த மக்களின் செல்வாக்கு மிகப்பெரிய பங்களிப்பை ...நீங்கள் கூறியவற்றில் செல்வாக்கு செலுத்துகின்றது...
இந்தியாவின் செல்வாக்கு எம் மண் மீது பல செல்வாக்கை செலுத்துகின்றது 
அதுபோக அமெரிக்கா,மேற்கு,சீனா,அமெரிக்கா  செல்வாக்கு

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, putthan said:

அனுராவின் "சிஸ்டம் ஞென்ஞ்" ஏதாவது ஆக்க பூர்வமான முன்னேற்றத்தை கொடுக்கின்றதா என பார்ப்போம்...

என்ன இப்படி பார்ப்போம் என்று  சொல்லி போட்டீர்கள்.  தமிழ் மக்களால் தேர்ந்து எடுக்கபட்ட ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் வேட்டையன் என்ற தமிழ்படத்தில் வருகின்ற பொலிஸ் அதிகாரி ரஜினிகாந்த் போன்று துடிப்போடும் அர்பணிப்போடும் செயலாற்றுகின்றனராமே.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

என்ன இப்படி பார்ப்போம் என்று  சொல்லி போட்டீர்கள்.  தமிழ் மக்களால் தேர்ந்து எடுக்கபட்ட ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் வேட்டையன் என்ற தமிழ்படத்தில் வருகின்ற பொலிஸ் அதிகாரி ரஜினிகாந்த் போன்று துடிப்போடும் அர்பணிப்போடும் செயலாற்றுகின்றனராமே.

பிறகென்ன "செட்டன் வந்தல்லோ செய்தி சொல்ல செட்டன் (அனுரா தவ்வல்கள்)வந்தல்லோ"....'சோ நோ டமில் ப்ரொப்பளம் ஒன்லி சிறிலங்கன் ப்ரொப்பள்ம் '..
உப்படித்தானே நம்ம ஈழத்து எம்.ஜீ.ஆரும் வந்த புதிசில படைப்பலத்துடன் அட்டகாசமா ...நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் என ..திரிந்தவர் ...இப்ப 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

காரணம் இதுவாகை இருக்குமோ ..
தமிழனுக்கு தமிழனே ஒன்றும் கொடுக்க மாட்டான் பிறகு எப்படி சிங்களவர்கள்  கொடுப்பார்கள் என ...வியாக்கியாணம் சொல்லுவதற்காக...
தமிழன் பிரதேசவாதம்,கிராமவாதம்,ஊர்வாதம்,சாதியவாதம்,மாதவாதம்  என பிரிந்து நிற்கின்றார்கள் பிறகு எப்படி சிங்களவர்கள் இவர்களுக்கு தீர்வுவழங்குவது என சொல்லுவதற்கு 

இறுதியில் நவீன புத்தர் அனுரா கூட ஒன்றும் கொடுக்க முடியாமல் போனதுக்கு காரணம் தமிழர்களே என‌முடிவுரை எழுதுவதற்கு இப்பவே  பிள்ளையார் சுழி போடுகின்றனர்

யோசிக்க வேண்டிய விடயம்தான். 🥺

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.