Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, vasee said:

அவுஸ்ரேலியாவின் இயற்கை மரமான யுகலிப்ஸ் (Eucalyptus) இயல்பிலேயே எரியக்கூடிய ஒன்று அது காட்டுத்தீ ஏற்படுவதற்கு ஒரு காரணியாக இருக்கின்றது, 

நீங்கள் சொல்லும் மரத்தில் இருந்துதானே இருமல் தடிமனுக்கான மருந்து தயாரிக்கின்றார்கள். சரியான காரம் கூடினது.

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.

  • Replies 105
  • Views 4.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • விசாரித்தமைக்கு நன்றி! நான் கிழக்குக் கரையில் (எங்களுக்கு வேற பிரச்சினை, கடுங்குளிர், கூதல் காற்று, ஆனால், பழகிய காலநிலை தான்). மருதர், தியா, நிகே ஆகியோரும் ஆபத்தில்லாத "பனிவனத்தில்" ! யூட் எங்கே

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    இப்போது தீ பிடித்திருக்கும் இடங்கள் மிகவும் பணக்கார இடம் என்கிறார்கள். இப்போது தான் மகளுடன் கதைத்தேன்.அவர்களது இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தியுள்ளனர். அவசர அவசரமாக தே

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    அடிக் கணக்காக பனி கொட்டிக்கிடக்க நீச்சல் தடாகத்தில் ஈழப்பிரியன் குடும்பம். இதுவும்  கலிபோர்ணியா தான்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரசோதரன் said:

அந்தக் காலத்திலேயே 'எரியப் போகின்ற வீட்டில் பிடுங்குவது இலாபம்...........' என்று கலிஃபோர்னியாவிடம் இருந்து எடுத்திருக்கின்றீர்கள்.................🤣.

இதனைத்தான் சொந்த செலவில் சூனியம் செய்வதென்பது.

14 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்லும் மரத்தில் இருந்துதானே இருமல் தடிமனுக்கான மருந்து தயாரிக்கின்றார்கள். சரியான காரம் கூடினது.

ஆம், இவை தவிர பல மருத்துவ நலன் கொண்டது, நீரிழிவு நோயையும் கட்டுபடுத்துகிறது என இணையத்தில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரசோதரன் said:

இலங்கையில் கூட ஒரு காலத்தில் இந்த மரங்கள் ஏதோ ஒரு நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு மிக வேகமாக அறிமுகப்படுத்தப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டன.

எங்கள் வீட்டில் இரண்டு மரங்கள் அப்பா கொண்டு வந்து வைத்தார். இவ்வளவு உயரமாக வருமென்று அப்போ நினைத்திருக்கவில்லை. ஒரு மரம் ஓரளவு உயரத்தில் பட்டுவிட்டது. ஊரிலுள்ளோர் அனைவரும் வந்து அதை மொட்டையடித்து விடுவார்கள், குளிர் காலத்தில் சுடு நீராவி பிடிப்பதற்காக. அப்பா அதை கண்ணும் கருத்துமாக வளர்த்தார். இடப்பெயர்வின் பின் மீண்டும் வந்தபோது, அது நின்ற இடமே தெரியவில்லை, கவலையாக இருந்தது.  நல்ல வேளை! அது இப்போ நின்றிருந்தால் முழு இடத்தையும் அடைத்திருந்திருக்கும்.       

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kadancha said:

 

எதுவென்றாலும்,எல்லாருக்கும் அவரவரின் தேவைகள்.

பாரதிராஜாவின் 'தாஜ்மஹால்' படத்தில் 'குளிருது குளிருது இரு உயிர் குளிருது.............' என்று ஒரு பாடல் இருக்கின்றது. அந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே அருமை. இந்தப் பாடலில் '.......சுற்றி எல்லாம் எரிகின்ற போது..................' என்று தொடங்கி சில வரிகள் போகும்............ நீங்கள் சொல்லியிருக்கின்றது தான்........🤣.

15 minutes ago, satan said:

நல்ல வேளை! அது இப்போ நின்றிருந்தால் முழு இடத்தையும் அடைத்திருந்திருக்கும்.       

ஆஸ்திரேலியாவால் கலிஃபோர்னியாவிற்கு வந்த நிலை உங்களுக்கு வரவில்லையே என்றும் ஆறுதல் அடையலாம்.................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரசோதரன் said:

பாரதிராஜாவின் 'தாஜ்மஹால்' படத்தில் 'குளிருது குளிருது இரு உயிர் குளிருது.............' என்று ஒரு பாடல் இருக்கின்றது. அந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே அருமை. இந்தப் பாடலில் '.......சுற்றி எல்லாம் எரிகின்ற போது..................' என்று தொடங்கி சில வரிகள் போகும்............ நீங்கள் சொல்லியிருக்கின்றது தான்........🤣.

IMG_1999.jpg
 

அடிக் கணக்காக பனி கொட்டிக்கிடக்க நீச்சல் தடாகத்தில் ஈழப்பிரியன் குடும்பம்.

இதுவும்  கலிபோர்ணியா தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

IMG_1999.jpg

அடேய் இஞ்சை பாரடா....இஞ்சை பாரடா ரஜனிகாந்த் டோப் வைக்காத மாதிரி கிடக்கடா...ஆரெண்டு பாத்து சொல்லுங்கோடா...?😃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அடேய் இஞ்சை பாரடா....இஞ்சை பாரடா ரஜனிகாந்த் டோப் வைக்காத மாதிரி கிடக்கடா...ஆரெண்டு பாத்து சொல்லுங்கோடா...?😃

அட   அட அவரேதான்...ஒரு சமருக்கு...தோட்டத்தில் நின்று ஒரு படம் போட்டாரே அவரேதான்

பிரியன் சார் இது என்னவென்று சாத்தியம்....குளத்துக்கு கீழே விற்கடுப்பு எரியுதோ 🤣

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்லும் மரத்தில் இருந்துதானே இருமல் தடிமனுக்கான மருந்து தயாரிக்கின்றார்கள். சரியான காரம் கூடினது.

இதன் இலைகள் மேற்பரப்பில் எல்லாம் எண்ணெய்த்தன்மை கொண்டவை. இலகுவில் வெயிலினால் தீ பற்றக்கூடியது. உயர்ந்த இந்த அடர்ந்த மரங்கள் காற்றையும் பலமாக ஏற்படுத்தும் போலிருக்கிறது. அதனாலேயே விரைவாக தீப்பிடித்து பரவுகிறது என நினைக்கிறன். இலங்கையில் இந்த மரம் அதிகமாக இருக்கிறதோ தெரியவில்லை. அங்குதான் இந்த மருந்து தயாரிக்கிறார்கள். விக்ஸ், சித்தா லெப்பை போன்றவை.   

  • கருத்துக்கள உறவுகள்

கடவுச்சொல்லை மறந்த காரணத்தால் இந்த களத்தில் இருந்து அகன்று சில வருடங்களுக்கு மேலாகி விட்டது. இன்னமும் களம் இருக்கிறதா என்று பார்த்த போது எனது நலம் பற்றி பலரும் அக்கறை கொண்டுள்ளதை கண்டேன். கலிபோர்னியா எரியும் இடம் சில நூறு காத தூரத்தில்  உள்ளது. அனைவருக்கும் நன்றி, வணக்ம்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – 11 பேர் உயிரிழப்பு

லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – 11 பேர் உயிரிழப்பு.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவத்தொடங்கியது. பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனிடையே, காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகி வருகின்றன. காட்டுத்தீ காரணமாக சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காட்டுத்தீயால் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகியுள்ளது.

இந்நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த காட்டுத்தீயால் குறைந்தது 10,000க்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் எரித்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2025/1416066

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

காடுகளில் சருகுகள் விழுந்து விழுந்து பெரியமெத்தை போல இருக்கிறது.


சருகுகள் தானே மரங்களுக்கு பசளை, அதைவிட அது அந்த eco system இன் ஓர் இன்றியமையாத பகுதி.

இப்போதுதீயணைப்பு படையினர் தண்ணீரால்  அணைக்க கூடியதாக இருப்பதும், ஏனெனில்  வளி வெக்கையாக இருக்கும் போது தண்ணீரை நிலத்துள் தங்க வைத்து இருப்பதும்,  பின் வெக்கையால் ஆவியாகி வளியுடன் கலந்து, புழுக்கத்தை உருவாக்கும் போது நெருப்பு இலகுவில்  பரவாது. 

(வேகமான காற்றுத்தான் புழுக்கத்தை அகற்றுவது , நெருப்பு பரவுவது, அந்த வேகத்துக்கு ஏற்றவாறு தீயணைப்பு படையினர் தண்ணீரை கொட்ட முடியவில்லை என்பது வேறு விடயம்)

அப்படி காற்று இருந்தாலும், சருகு படை தான் பரவலை குறைக்கிறது.

காடு எரிவது சமநிலையை உருவாக்க (செயற்கையாக தீ வைத்து தொடங்கவிட்டால்)

முன்பு இருந்த அடர்த்தி இப்போது அதிகமாகிவிட்டது, ஏனெனில் புவி ஏப்பம் அடைவதால்.

அப்படி தொடர்ந்து இருந்தால், மரங்கள் நீரை உறிஞ்ச,  நிலம் கட்டாம் தரையாகி, பின் முழுக்காடே அழிந்து விடும். 

எனவே கடு எரிவது, தொடர்ந்து காடு நலமாக இருக்க அவசியம். eco system இன் ஒருபகுதி.

எதிர்கால மனித சந்ததிக்கு அவசியம் என்று ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

(அனால்,காட்டுக்குள் போய் இருந்து கொண்டு வீடு எரிகிறது என்றால் என்ன செய்வது?)

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

அடேய் இஞ்சை பாரடா....இஞ்சை பாரடா ரஜனிகாந்த் டோப் வைக்காத மாதிரி கிடக்கடா...ஆரெண்டு பாத்து சொல்லுங்கோடா...?😃

 

14 hours ago, alvayan said:

அட   அட அவரேதான்...ஒரு சமருக்கு...தோட்டத்தில் நின்று ஒரு படம் போட்டாரே அவரேதான்

பிரியன் சார் இது என்னவென்று சாத்தியம்....குளத்துக்கு கீழே விற்கடுப்பு எரியுதோ 🤣

IMG-2457.jpg
 

இது அப்ப.

நீங்க பார்த்தது இப்ப.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலையில் வேற்று இனத்தவர் ஒருவரது ரிக்ரொக் தளம் பார்க்க நேர்ந்தது..காட்டுத்தீயின் கொடுரத்திலிருந்து தப்பி விட்டாரா என்பது தெரியவில்லை.அவரது வீட்டின் முன் பக்கம், பின்பக்கம் எல்லாமே தீ பரவிக் கொண்டு இருந்தது.வீட்டின் பயர் அலாரம் அடிக்கும் போது தான் ஆங்கில வார்த்தைகளால் பேசிக் கொண்டு எங்கே போவது என்று தெரியாமல் ஓடிக் கொண்டு இருந்தார்..மிகுந்த கவலையான காட்சியாக மனதுக்கு பட்டது..

  • கருத்துக்கள உறவுகள்

நியூயோர்க்கில் உள்ள Fire Hydrant எல்லாம் அடிக்கடி வேலை செய்யுதா என்று திறந்து பார்ப்பார்கள்.

லாஸ் அங்கிலஸ்சில் அப்படியான சோதனைகள் செய்து திருத்துவதில்லைப் போல தெரிகிறது.

பல திறந்த போதும் தண்ணீரே வரவில்லையாம்.

அங்குள்ள மேயர்மாருக்கு இது ஒரு பிரச்சனையாக மாறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

நியூயோர்க்கில் உள்ள Fire Hydrant எல்லாம் அடிக்கடி வேலை செய்யுதா என்று திறந்து பார்ப்பார்கள்.

லாஸ் அங்கிலஸ்சில் அப்படியான சோதனைகள் செய்து திருத்துவதில்லைப் போல தெரிகிறது.

பல திறந்த போதும் தண்ணீரே வரவில்லையாம்.

அங்குள்ள மேயர்மாருக்கு இது ஒரு பிரச்சனையாக மாறலாம்.

அரசுகள் தேவையில்லாமல் பணத்தினை செலவழிப்பார்கள் ஊழல் செய்வார்கள் ஆனால் மக்களை பாதுகாப்பதற்கான செலவுகளை குறைப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நியூயோர்க்கில் உள்ள Fire Hydrant எல்லாம் அடிக்கடி வேலை செய்யுதா என்று திறந்து பார்ப்பார்கள்.

லாஸ் அங்கிலஸ்சில் அப்படியான சோதனைகள் செய்து திருத்துவதில்லைப் போல தெரிகிறது.

பல திறந்த போதும் தண்ணீரே வரவில்லையாம்.

அங்குள்ள மேயர்மாருக்கு இது ஒரு பிரச்சனையாக மாறலாம்.

அப்படி இல்லை, அண்ணா.......... இவை எல்லா இடங்களிலும் ஒரே  மாதிரியே பராமரிக்கப்படுகின்றன.  ஒவ்வொரு ஊர்களிலும் அல்லது பிரதேசங்களிலும் இதற்கென தண்ணீர் பெரிய தேக்கங்களில் இருக்கும். அது மிக அதிக அழுத்தத்துடன் எரியும் நெருப்பை அணைப்பதற்கு வரவேண்டும். வீட்டுக்கு வரும் தண்ணீரை விட மிக அதிக அழுத்தத்துடன்.

மாலிபு பகுதியில் இருந்த தண்ணீர் தேக்கத்தில் தண்ணீர் முடிந்து போனது. அதுவே தான் காரணம். வீட்டுக்கு வரும் தண்ணீரையும், அந்த அழுத்தத்தையும் கொண்டு நெருப்பை எதுவும் செய்ய முடியாது.

என்னுடைய நண்பர்கள், இலங்கைத் தமிழர்கள் தான், லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் நீர் வழங்கும் அமைப்பின் பிரதம பொறியியலாளர்களாகவும், பொறியியலாளர்களாகவும் இருக்கின்றார்கள்.  

 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/1/2025 at 00:08, கற்பகதரு said:

கடவுச்சொல்லை மறந்த காரணத்தால் இந்த களத்தில் இருந்து அகன்று சில வருடங்களுக்கு மேலாகி விட்டது. இன்னமும் களம் இருக்கிறதா என்று பார்த்த போது எனது நலம் பற்றி பலரும் அக்கறை கொண்டுள்ளதை கண்டேன். கலிபோர்னியா எரியும் இடம் சில நூறு காத தூரத்தில்  உள்ளது. அனைவருக்கும் நன்றி, வணக்ம்.

ஓஓஓஓஓ நீண்ட நாட்களின் பின் கண்டது சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

US Wildfire: அமலுக்கு வந்த புதிய Warning; காற்று வேகத்தால் காட்டுத் தீ மேலும் பரவக் கூடுமா?

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கோர காட்டுத்தீயின் 8ஆவது நாள் இன்று. கடந்த வார இறுதியில் குறைந்த காற்றின் வேகம் புதன்கிழமைவரை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கின்றனர். குறிப்பாக செவ்வாய்க்கிழமையான இன்று உச்சக்கட்ட காற்று வீசலாம் என எதிர்பார்க்கப்படுவதாக பசடேனா தீயணைப்புத் தலைவர் சாட் அகஸ்டின் பிபிசியிடம் கூறியிருந்தார். இது தொடர்பாக தேசிய வானிலை சேவையின்  சிவப்புக் கொடி எச்சரிக்கை அமலுக்கு வந்துள்ளது. புதன்கிழமை 12 மணி வரை இந்த எச்சரிக்கை அமலில் இருக்கும்.

Los Angeles Fire: Firefighters in the Los Angeles area are facing a crucial day, as forecasters warn that particularly dangerous winds in north-west LA could spread blazes

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஏராளன் said:

 

காற்று வேகத்தால் காட்டுத் தீ மேலும் பரவக் கூடுமா?

 

இந்த வேகத்தில் இவ்வளவு உலர்ந்த காற்று வீசினால், காட்டுத் தீ பரவுவதற்கு சாத்தியங்கள் அதிகம் தான்............

இந்த நேரத்தில் இங்கே எங்களின் ஆட்கள் எவராவது வீட்டிற்கு பின்பக்கம் பொங்குகின்றோம் என்று அடுப்பு வைத்தால், அயல் வீட்டுக்காரர்கள் நிச்சயம் போட்டுக் கொடுக்கப் போகின்றார்கள்.............. 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
On 11/1/2025 at 06:08, கற்பகதரு said:

கடவுச்சொல்லை மறந்த காரணத்தால் இந்த களத்தில் இருந்து அகன்று சில வருடங்களுக்கு மேலாகி விட்டது.

😀

மீண்டும் கண்டது மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

US Wildfire: அமலுக்கு வந்த புதிய Warning; காற்று வேகத்தால் காட்டுத் தீ மேலும் பரவக் கூடுமா?

இந்திய யுரியூப் காரரின் அலப்பறைகளைத் தாங்க முடியவில்லை.

வல்லரசான அமெரிக்கா தீயை அணைக்க முடியாமல் திக்குமுக்காடுது அதுஇது என்று போட்டுத் தாக்குகிறார்கள்.

இந்தியாவில்  எண்ணெய் கசிவின் போது வாளியால் அள்ளியதை மறந்தே விட்டார்கள்.

இயற்கை அழிவுகள் நீர் நெருப்பு காற்று இவைகளுக்கு எதிராக யாரால் தான் போராட முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
On 10/1/2025 at 19:10, satan said:

இதன் இலைகள் மேற்பரப்பில் எல்லாம் எண்ணெய்த்தன்மை கொண்டவை. இலகுவில் வெயிலினால் தீ பற்றக்கூடியது. உயர்ந்த இந்த அடர்ந்த மரங்கள் காற்றையும் பலமாக ஏற்படுத்தும் போலிருக்கிறது. அதனாலேயே விரைவாக தீப்பிடித்து பரவுகிறது என நினைக்கிறன். இலங்கையில் இந்த மரம் அதிகமாக இருக்கிறதோ தெரியவில்லை. அங்குதான் இந்த மருந்து தயாரிக்கிறார்கள். விக்ஸ், சித்தா லெப்பை போன்றவை.   

ஊரில் எங்கள் வீட்டில் இருந்தது. விக்ஸ் மரம் என்போம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்திய யுரியூப் காரரின் அலப்பறைகளைத் தாங்க முடியவில்லை.

வல்லரசான அமெரிக்கா தீயை அணைக்க முடியாமல் திக்குமுக்காடுது அதுஇது என்று போட்டுத் தாக்குகிறார்கள்.

இந்தியாவில்  எண்ணெய் கசிவின் போது வாளியால் அள்ளியதை மறந்தே விட்டார்கள்.

இயற்கை அழிவுகள் நீர் நெருப்பு காற்று இவைகளுக்கு எதிராக யாரால் தான் போராட முடியும்?

ஆயிரம் அணுகுண்டு வைத்திருந்து என்ன பலன்?
பத்தாயிரம் சற்றலைட்டுக்களை மேலை பறக்க விட்டு என்ன பலன்?
உலக வல்லரசு எண்ட பெயர் வைச்சிருந்து என்ன பலன்?
உலகத்துக்கு நீதி நியாயம் சொல்லி என்ன பலன்?

எல்லாம் அவன் செயல் எண்டு சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/1/2025 at 05:11, ஈழப்பிரியன் said:

ஓஓஓஓஓ நீண்ட நாட்களின் பின் கண்டது சந்தோசம்.

மீண்டும் காண்பது மகிழ்ச்சியே.

On 14/1/2025 at 13:20, விளங்க நினைப்பவன் said:

😀

மீண்டும் கண்டது மகிழ்ச்சி

🙏

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் செய்த கொலைகள் எத்தனை கோடி ? நாங்கள் கவலைப்படலாமா ?

472864195_2294466514250900_2193893195406805057_n%20(1).jpg

1945 க்கு பின்பு உலகில் அமெரிக்கா நடாத்திய கொலையாட்டத்தில் இரண்டாவது உலகமகா யுத்தத்தின்போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய நகரங்கள் மீது நடாத்திய அணுகுண்டு தாக்குதலினால் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு அந்த பிராந்தியமே சுடுகாடானது.

அதன் பின்பு 1950 இல் இருந்து ஆரம்பமான கொரியா யுத்தம், 1955 – 1975 வியட்நாம் போர் அத்துடன் 1980, 1990 காலங்களில் சோமாலியா மற்றும் ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் கொல்லப்பட்டும், காணாமல் போனவர்கள் என மொத்தமாக பல மில்லியன்கள் ஆகும்.

1999 இல் இருந்து யூகோஸ்லாவியாவில் நேட்டோ என்ற போர்வையில் அமெரிக்கா 15,000 தடவைகள் நடாத்திய விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம்.

ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் உள்ள வளங்களை சுரண்டுவதற்காக நடாத்திய கொலையாட்டம் மற்றும் சவூதி அரேபியாவுடன் இணைந்து யேமனில் நடாத்திய விமானக் கொலையாட்டம் என மொத்தமாக கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை மில்லியனை தாண்டும்.

இதில் நேரடி கொலையாட்டம் ஒருபுறமிருக்க, இஸ்ரேல் போன்ற தனது கூலிப்படைகளுக்கு பெருமளவு ஆயுதங்களை வழங்கி அவர்கள் மூலமாக உலகின் பல பாகங்களிலும் நடாத்தப்பட்ட கொலைகள் ஏராளம்.

அந்தவகையில் 1948 தொடக்கம் இன்று வரைக்கும் பாலஸ்தீனில் கொல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை பல லட்சங்கள் ஆகும்.

பொருளாதார இழப்புக்கள் பற்றி எதுவும் இங்கே குறிப்பிடவில்லை. மேலும், 1945 க்கு பின்பு இடம்பெற்ற சம்பவங்களை மாத்திரமே மேலோட்டமாக கூறியுள்ளேன். 1945 க்கு முன்பு நடந்தவை பற்றி எழுதினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் பல கோடிகளைத் தாண்டும். இவைகள் அனைத்தையும் விரிவாக எழுதினால் நீங்கள் வாசிக்கமாட்டீர்கள். அத்துடன் எனது முகநூல் முடக்கப்படலாம்.

உலகில் உள்ள வளங்களை சூறையாடி மற்றும் நாட்டுத் தலைவர்களை மிரட்டி, மிரட்டலுக்கு பணியாதவர்களை கொலை செய்து அல்லது ஆட்சியை கவிழ்த்து, கோடிக்கணக்கான மக்களை கொலை செய்த அராஜகவாதிகள் தற்போது உலகிற்கு ஜனநாயகம் போதித்துக்கொண்டு பாதுகாப்பான புவி அமைவிடத்தில் அமெரிக்க மக்கள் உல்லாசமாக வாழ்கிறார்கள்.

இவர்களை பழிவாங்குவதற்கு யாரும் நெருங்கமுடியாத நிலையில் லோஸ் ஏஞ்சல்ஸ் மாநிலத்தில் இயற்கையினால் ஏற்பட்ட தீ அனர்த்தமானது அவர்கள் செய்த அட்டூழியங்களில் ஒரு வீதமும் சமனாகாது. இந்த நிலையில் இங்குள்ள சில அப்பாவிகள் அவர்களுக்காக அனுதாபப்படுவதனை பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது. இவர்களை என்னவென்று கூறுவது ?

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

https://www.importmirror.com/2025/01/blog-post_86.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.