Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!

புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!

ரஷ்ய ஜனாதிபதியுடன் ஒரு சந்திப்பினை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சந்திப்பு குறித்த திகதி மற்றும் இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்பதற்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நவம்பர் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப், ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் உக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்தார்.

இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான தீர்வுகளைப் பற்றி விவாதிக்க ட்ரம்புடன் ஒரு சந்திப்பினை கோரியிருந்தார்.

அதற்கு இணங்க இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

2022 பெப்ரவரி முதல் ரஷ்யப் படையெடுப்பின் கீழ் இருக்கும் உக்ரேனில் அமைதியை நிலை நாட்டுவதற்கான பிரச்சார வாக்குறுதிகளை ட்ரம்பின் கருத்துக்கள் வெளிக்காட்டுகின்றன.

எனினும், பதவியேற்கும் ஜனாதிபதி இன்னும் உறுதியான போர்நிறுத்தம் அல்லது சமாதான ஒப்பந்த முன்மொழிவுகளை கோடிட்டுக் காட்டவில்லை.

ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் உக்ரேனுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க இராணுவ உதவியை ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் விமர்சித்தார்.

மேலும், நேட்டோவில் அமெரிக்காவின் தொடர் ஈடுபாடு குறித்து சந்தேகம் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், 2022 பெப்ரவரி முதல் $65 பில்லியனுக்கும் அதிகம் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்கிய வொஷிங்டன், போரின் போது உக்ரேனின் மிகப்பெரிய ஆதரவாளராக இருந்து வருகிறது.

https://athavannews.com/2025/1416003

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

நல்லது நடக்கட்டும்…  உங்கள் வியாபாரம் மேலும் வளரும்   ஆனால் மக்களுக்கு எந்த பிரயோஜனம் கிடையாது 

  • கருத்துக்கள உறவுகள்

செத்தகிளிக்கு இருக்கு சங்கதி ஜனவரி 20 இக்குப் பிறகு!😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

நல்லது நடக்கட்டும்…  உங்கள் வியாபாரம் மேலும் வளரும்   ஆனால் மக்களுக்கு எந்த பிரயோஜனம் கிடையாது 

உக்ரேன் சண்டைக்காக இதுவரை ரஷ்யா வடகொரியாவிடம் வாங்கிய ஆயுதங்களின் மொத்தச் செலவு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும், வட கொரியா ரஷ்யாவிற்கு அனுப்பியிருக்கும் பத்தாயிரம் வீரர்களுக்கு வருடம் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுக்க வேண்டும் என்றும் எங்கேயோ வாசித்திருந்தேன்................ 

இன்று உலகிலேயே இதுதான் அதிக இலாபம் தரும் வியாபாரம் போல...............

** கபிதன் ஆதாரம் எங்கே என்று கேட்டால், நான்  தேடவேண்டும்............... நீங்களே தேடியும் கொள்ளலாம்..........🤣.

6 minutes ago, ரசோதரன் said:

வடகொரியா நிற்பதே பொய்ப் பரப்புரையாம். 😂

ட்றம்பின் அண்மைய வடதுருவ ஆக்கிரமிப்பு மிரட்டல் புதினுக்கும் சேர்த்தான மறைமுக மிரட்டல். புதின் மெதுவாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, இணையவன் said:

வடகொரியா நிற்பதே பொய்ப் பரப்புரையாம். 😂

🤣...................

ஆளில்லாமல் அந்தப் பக்கமாக விமானத்தில் வந்து இறங்குபவர்களையே பிடித்து அனுப்பிக் கொண்டிருக்கின்றார்களாம்...............😜.

  • கருத்துக்கள உறவுகள்

updates
Trump, after sentencing, maintains case should never have been brought
 
President-elect Donald Trump is seen on a screen as he appears remotely at a sentencing in New York for his hush money case. (Jabin Botsford/The Washington Post)
 
1 min

President-elect Donald Trump maintained in a social media post Friday that the New York hush money case should never have been brought against him, and he lashed out at the prosecutor who secured his conviction. Trump was sentenced to unconditional discharge, in which a defendant is not fined, locked up or given probation. Trump was convicted in May on 34 felony counts of falsifying business records in connection with a payment made to an adult-film actress during the 2016 presidential campaign. Friday’s sentencing formalized Trump’s status as the first president or president-elect who is a felon. Trump appeared remotely from Palm Beach, Florida, where he is conducting his transition back to the presidency.
https://www.washingtonpost.com/politics/2025/01/10/trump-sentencing-hush-money-case/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

வடகொரியா நிற்பதே பொய்ப் பரப்புரையாம். 😂

ட்றம்பின் அண்மைய வடதுருவ ஆக்கிரமிப்பு மிரட்டல் புதினுக்கும் சேர்த்தான மறைமுக மிரட்டல். புதின் மெதுவாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

வடகொரியா ரஸ்யாவின் போருக்கு  துருப்புக்களை அனுப்பியதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என்பதே உண்மை. 

இது உண்மை பொய் தொடர்பான விடயம். யுத்தம் தொடர்பானது அல்ல. 
 
North Korean Troops Enter Kursk Where Ukrainians Are Fighting
Nov. 18, 2024 | By David Vergun, DOD News  

It is likely that about 11,000 North Korean troops have moved into Russia's Kursk region, said Deputy Pentagon Press Secretary Sabrina Singh, who spoke to the media today. 

The Pentagon has not confirmed that these troops have engaged in combat with Ukrainian troops who are inside a portion of the Kursk region, she said, adding, "They're moving into Kursk for a reason. We have every expectation that they would be engaged in combat operations." 

There is no evidence that more North Korean troops are entering Russia, but that could change, Singh said. 

The U.S. views North Korea as cobelligerents with Russia, she said. North Korean troops began entering Russia last month. 

Over the course of presidential drawdown authorities, the United States has been supplying Ukraine with weapons, including Army Tactical Missile Systems, or ATACMS.

https://www.defense.gov/News/News-Stories/Article/article/3968230/north-korean-troops-enter-kursk-where-ukrainians-are-fighting/

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பைத்தியம் பிடித்த பேய்கள் சந்திப்பது செய்தியல்ல அபாய எச்சரிக்கை. 

13 minutes ago, Kapithan said:

இது உண்மை பொய் தொடர்பான விடயம். யுத்தம் தொடர்பானது அல்ல. 
 
defense.gov

அது போன மாசம் 😂

https://www.defense.gov/News/News-Stories/Article/Article/4018068/dod-announces-additional-aid-for-ukraine-assesses-1000-north-korean-casualties/

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, இணையவன் said:

Iraq 1991  WMD போலத்தான் இதுவும் இருக்கும். 

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் ஜனாதிபதியை எந்தநாடு ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறது?

அமெரிக்கா இங்கிலாந்து ஜேர்மனி பிரான்ஸ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

உக்ரேன் ஜனாதிபதியை எந்தநாடு ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறது?

அமெரிக்கா இங்கிலாந்து ஜேர்மனி பிரான்ஸ்.

நீங்கள் நம்புகின்றீர்களோ இல்லையோ.
கடந்த ஒரு வருடமாக என்னுடன் பழகும் ஜேர்மனியர்களின் கேள்வியும்  அதுதான். ☝

யாரும் செய்யாத விடயத்தை பைடன் ஆரம்பித்து வைத்தார். அது போல் குறுக்காலே போனார். 

புட்டின்/டொனால் ரம்ப் என நல்ல செய்திகள் வந்தாலே இருட்டடிப்பு செய்யும் அளவிற்கு ஜேர்மனி பயப்பிடுகின்றதோ என யோசிக்க தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/1/2025 at 04:02, ரசோதரன் said:

உக்ரேன் சண்டைக்காக இதுவரை ரஷ்யா வடகொரியாவிடம் வாங்கிய ஆயுதங்களின் மொத்தச் செலவு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும், வட கொரியா ரஷ்யாவிற்கு அனுப்பியிருக்கும் பத்தாயிரம் வீரர்களுக்கு வருடம் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுக்க வேண்டும் என்றும் எங்கேயோ வாசித்திருந்தேன்................ 

இன்று உலகிலேயே இதுதான் அதிக இலாபம் தரும் வியாபாரம் போல...............

** கபிதன் ஆதாரம் எங்கே என்று கேட்டால், நான்  தேடவேண்டும்............... நீங்களே தேடியும் கொள்ளலாம்..........🤣.

On 11/1/2025 at 04:14, இணையவன் said:

வடகொரியா நிற்பதே பொய்ப் பரப்புரையாம். 😂

ட்றம்பின் அண்மைய வடதுருவ ஆக்கிரமிப்பு மிரட்டல் புதினுக்கும் சேர்த்தான மறைமுக மிரட்டல். புதின் மெதுவாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவிற்கும் இரஸ்சியாவிற்குமிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது, ஒரு நாடு தாக்கப்பட்டால் மற்ற நாடு உதவிக்கு செல்லும், இங்கு இரஸ்சியாவின் கேர்ஸ்க் பகுதியின் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றமையால் அதில் வட கொரியா ஈடுபடுவதற்கு எந்த தடையுமில்லை.

ஆனால் மறுவளமாக இரஸ்சியாவின் மீது மேற்கு நாட்டு படைகள் தாக்குவதற்கு எந்த முகாந்தரமும் இல்லை என நினைக்கிறேன் ஏனெனில் அவர்கள் உக்கிரேனுக்கு நேட்டோவில் இணைவதற்கு கூட அனுமதி கொடுக்கிறார்களில்லை ஆனால் அவர்கள் பின்னணியில் இருந்து இரஸ்சிய படைக்கெதிராக போராடுகிறார்கள்.

தற்போது உக்கிரேன்,  போர், பொருளாதார அழுத்தம் என பல வகையாலும் அழிவினை சந்தித்துக்கொண்டுள்ளது ஆனாலும் நேட்டோவில் அங்கத்துவமோ ஐரோப்பிய ஒன்றியத்திலோ இணைக்கவில்லை.

தற்போது உக்கிரேன் உடையும் தருணத்தில் உள்ளது, தற்போதுள்ள நிலை நீடித்தால் உக்கிரேன் சடுதியாக உடைந்துவிடும். அது 6 மாதத்திலும் நிகழலாம் 3 மாதத்திலும் நிகழலாம், இதனை உடனடியாக தடுக்கவேண்டுமாயின் மேற்கின் இராணுவத்தினை உதவிக்கு அனுப்பவேண்டும் அதற்கு உக்கிரேனை நேட்டோவில் இணைக்க வேண்டும் செய்வார்களா?

இங்கு தத்தமது நலனையே முன்னிலைப்படுத்துவதால் நிட்சயமாக உக்கிரேனை நேட்டோவிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் சேர்க்க மாட்டார்கள், ஆனால் தேவைப்பட்டால் இரஸ்சியாவுடன் சேர்ந்து பேச்சுவார்த்தை எனும் போர்வையில் உக்கிரேனை கொள்ளை அடிப்பார்கள்.

இங்கு வட கொரியா இரஸ்சியாவில் நிற்பது  பிரச்சினை அல்ல, நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டு நடுத்தெருவில் விடப்பட்டுள்ளது உக்கிரேன். 

வட துருவமோ, உக்கிரேனோ வளங்களை பங்குபிரிப்பதில் நிலவும் போட்டிதான் தற்போதய புதிய உலக ஒழுங்கு, இதில் வெல்பவர்கள் அனைத்தையும் எடுத்து கொள்வர்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, vasee said:

வட கொரியாவிற்கும் இரஸ்சியாவிற்குமிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது, ஒரு நாடு தாக்கப்பட்டால் மற்ற நாடு உதவிக்கு செல்லும், இங்கு இரஸ்சியாவின் கேர்ஸ்க் பகுதியின் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றமையால் அதில் வட கொரியா ஈடுபடுவதற்கு எந்த தடையுமில்லை.

👍..............

ரஷ்யாவின் மீது உக்ரேன் தாக்குதல் நடத்துகின்றது. எங்களுக்கு உதவியாக வட கொரியாவில் இருந்து 11 ஆயிரம் வட கொரிய துருப்புகள் வந்து சண்டையில் ஈடுபட்டுள்ளன என்று ரஷ்யா சொன்னால் எவரும் எதுவும் செய்ய முடியாது................அது அவர்களுக்கிடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம்........... ஆனால் ரஷ்யா அப்படிச் சொல்லாது............... 'கெத்து' ஒன்று இருக்கின்றதல்லவா..............

இலங்கையிலிருந்து பிடித்து, உக்ரேன் எல்லைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பியிருக்கும் இலங்கை இளைஞர்களை, 500 அல்லது அதற்கு மேலே??, ரஷ்யா விடுதலை செய்து விடலாம்............. அந்த இலங்கைக் குடும்பங்கள் பாவம் தானே..........

பெரிய பெரிய இராணுவ பலமுள்ள நாடு என்று சொல்லிக் கொண்டே ரஷ்யா இப்படிச் செய்வது இழுக்கு தானே...........

மற்றபடி, உலக ஒழுங்கில்,  உக்ரேன் மேற்கு நாடுகளின் ஒரு சின்னக் கருவியே. முடிவில் உக்ரேன் என்னவானாலும் எவரும் திரும்பிப் பார்க்கப் போவதில்லை. ரஷ்யாவை கொஞ்சமாவது பலவீனமாக்கினால் அதுவே அமெரிக்காவிற்கும், மேற்கு நாடுகளுக்கும் போதும்............ இவர்கள் அதற்காக செலவழிக்கும் தொகை அப்படி ஒன்றும் பெரிது கூட இல்லை.............. 

பொல்லாத உலகமும், பொல்லாத மனிதர்களும்............... 

  • கருத்துக்கள உறவுகள்

ரம்படனான சந்திப்பு புளோரிடாவில் உள்ள ரம்பின் மாளிகையிலேயே நடக்கப் போகிறது போல.

உலக நாடுகளுக்கு போகப் பயப்பட்டு அடங்கியிருந்த பூட்டின் தடை செய்த அமெரிக்காவுக்கே வந்து இறங்கினால் எப்படி இருக்கும்?

திருப்பதிக்கே லட்டு கொடுத்த மாதிரி இல்ல.

ஒருவேளை கனடா பிரதமரை வெருட்டியது போல ரசியா அமெரிக்காவின் 52வது மாநிலம் என்று ரம் சொன்னாலும் சொல்லுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரசோதரன் said:

👍..............

ரஷ்யாவின் மீது உக்ரேன் தாக்குதல் நடத்துகின்றது. எங்களுக்கு உதவியாக வட கொரியாவில் இருந்து 11 ஆயிரம் வட கொரிய துருப்புகள் வந்து சண்டையில் ஈடுபட்டுள்ளன என்று ரஷ்யா சொன்னால் எவரும் எதுவும் செய்ய முடியாது................அது அவர்களுக்கிடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம்........... ஆனால் ரஷ்யா அப்படிச் சொல்லாது............... 'கெத்து' ஒன்று இருக்கின்றதல்லவா..............

இலங்கையிலிருந்து பிடித்து, உக்ரேன் எல்லைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பியிருக்கும் இலங்கை இளைஞர்களை, 500 அல்லது அதற்கு மேலே??, ரஷ்யா விடுதலை செய்து விடலாம்............. அந்த இலங்கைக் குடும்பங்கள் பாவம் தானே..........

பெரிய பெரிய இராணுவ பலமுள்ள நாடு என்று சொல்லிக் கொண்டே ரஷ்யா இப்படிச் செய்வது இழுக்கு தானே...........

மற்றபடி, உலக ஒழுங்கில்,  உக்ரேன் மேற்கு நாடுகளின் ஒரு சின்னக் கருவியே. முடிவில் உக்ரேன் என்னவானாலும் எவரும் திரும்பிப் பார்க்கப் போவதில்லை. ரஷ்யாவை கொஞ்சமாவது பலவீனமாக்கினால் அதுவே அமெரிக்காவிற்கும், மேற்கு நாடுகளுக்கும் போதும்............ இவர்கள் அதற்காக செலவழிக்கும் தொகை அப்படி ஒன்றும் பெரிது கூட இல்லை.............. 

பொல்லாத உலகமும், பொல்லாத மனிதர்களும்............... 

இந்த பெரிய எனும் நினைப்புத்தான் பேரழிவுகளுக்கு காரணம், கேர்க்ஸில் உள்ள உக்கிரேனிய இராணுவத்தளபதி ஒலே கூறிய விடயம், இரஸ்சிய இராணுவம் தனது சிறிய இழப்பு ஏற்பட்டவுடன் அப்பகுதியில் இருந்து உடனடியாக பின் வாங்கிவிடுகிறார்கள், ஆனால் உக்கிரேன் தொடர்ந்து இழப்புக்க்களுக்கும் மத்தியில் இடங்களை தக்கவைக்க வேண்டிய நிலை உள்ளது என கூறுகிறார்.

இரஸ்சியா பெரிது சிறிது என நினைப்பதாக நினைக்கவில்லை அவர்கள் இந்த போரை அதன் நுட்பத்துடன் அணுகின்றார்கள், இங்குதான் மேற்கு தவறிழைக்கிறது நாம் விரும்புவதனை அவர்கள் செய்வார்கள் என எதிர்பார்ப்பது.

எந்த விடய்ங்களையும் பின்புலமில்லாமல் சிந்திப்பது கடினம் (Bias), ஆனால் அவ்வாறு சிந்திக்க தொடங்கினால் பிரச்சினை வெளியில் இருந்து வருவதில்லை நாமாகவே உருவாக்குறோம் என்பது புரியும்.

😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, ரசோதரன் said:

பெரிய பெரிய இராணுவ பலமுள்ள நாடு என்று சொல்லிக் கொண்டே ரஷ்யா இப்படிச் செய்வது இழுக்கு தானே...........

அமெரிக்க/ஐரோப்பிய ராணுவ ரகசியங்கள் வெளியே வராத வரைக்கும் எல்லாம் சாத்தியமே.

உக்ரேன் போரில் வெளிநாட்டு சக்திகள் இல்லாமல் உக்ரேன்  தன்னம் தனியே நின்று ரஷ்யாவிற்கு எதிர்ராக போராடுகின்றது என சொல்ல வருகின்றீர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

ரம்படனான சந்திப்பு புளோரிடாவில் உள்ள ரம்பின் மாளிகையிலேயே நடக்கப் போகிறது போல.

ஐரோப்பிய நாடு ஒன்றில் சந்திப்பு நடைபெற இருப்பதாக ஜேர்மனிய ஊடகங்களில் செய்தி வந்ததை வாசித்தேன். இன்று அதை தேடிய போது சுவடு இல்லாமலே அழித்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்க/ஐரோப்பிய ராணுவ ரகசியங்கள் வெளியே வராத வரைக்கும் எல்லாம் சாத்தியமே.

உக்ரேன் போரில் வெளிநாட்டு சக்திகள் இல்லாமல் உக்ரேன்  தன்னம் தனியே நின்று ரஷ்யாவிற்கு எதிர்ராக போராடுகின்றது என சொல்ல வருகின்றீர்கள்

இல்லை அண்ணா. உக்ரேன் தனியாக நின்றால், அதிபர் புடின் சொன்ன மூன்று வாரக் கணக்கு சரியாகவே இருந்திருக்கும். இன்னும் கொஞ்சம் உக்ரேன் தனியாக இறுதிவரை போராடி இருந்தால், மூன்று மாதங்கள் வரை போயிருக்கலாம்.

இந்த சண்டை ஆரம்பிக்கும் போது நான் யாழ் களத்தில் இணையவில்லை. ஆனால் சில குழுமங்களில் எழுதியிருந்தேன், மூன்று வாரங்கள் ரஷ்யாவிற்கு போதுமென்று. அதே போன்றே சீனாவிற்கும் இந்தியாவுடன் ஒரு சண்டை வந்தால் மிகக் குறுகிய காலமே போதும் என்றும் எழுதியிருந்தேன்.

நான் சொன்ன இழுக்கு இலங்கை இளைஞர்களை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்திருப்பதைப் பற்றி. அது முற்றிலும் தேவையே இல்லாத ஒரு விடயம் ரஷ்யாவிற்கு...........

எங்களுக்கு பிடிக்கும் என்பதற்காக ஒருவரை கண்மூடிக் கொண்டு ஆதரிக்க தேவையில்லை, அவர்களின் எல்லா நடவடிக்கைகளையும் நியாயப்படுத்த தேவையும் இல்லை, அண்ணா............. அமெரிக்கா, ரஷ்யா என்பதையும் தாண்டி, எங்களுக்கு ஒரு பெறுமதி இருக்கின்றது என்று நான் உறுதியாக நம்புகின்றேன். அதன் வழியே தான் என் பார்வையும், கருத்துகளும் அமைகின்றன............... 

13 minutes ago, vasee said:

இந்த பெரிய எனும் நினைப்புத்தான் பேரழிவுகளுக்கு காரணம், கேர்க்ஸில் உள்ள உக்கிரேனிய இராணுவத்தளபதி ஒலே கூறிய விடயம், இரஸ்சிய இராணுவம் தனது சிறிய இழப்பு ஏற்பட்டவுடன் அப்பகுதியில் இருந்து உடனடியாக பின் வாங்கிவிடுகிறார்கள், ஆனால் உக்கிரேன் தொடர்ந்து இழப்புக்க்களுக்கும் மத்தியில் இடங்களை தக்கவைக்க வேண்டிய நிலை உள்ளது என கூறுகிறார்.

இரஸ்சியா பெரிது சிறிது என நினைப்பதாக நினைக்கவில்லை அவர்கள் இந்த போரை அதன் நுட்பத்துடன் அணுகின்றார்கள், இங்குதான் மேற்கு தவறிழைக்கிறது நாம் விரும்புவதனை அவர்கள் செய்வார்கள் என எதிர்பார்ப்பது.

எந்த விடய்ங்களையும் பின்புலமில்லாமல் சிந்திப்பது கடினம் (Bias), ஆனால் அவ்வாறு சிந்திக்க தொடங்கினால் பிரச்சினை வெளியில் இருந்து வருவதில்லை நாமாகவே உருவாக்குறோம் என்பது புரியும்.

😁

இதை ஒரு மூன்று வார கால  Special Operation என்றே புடின் ஆரம்பத்தில் ஆரம்பித்திருந்தார். முதலாவது குளிர்காலத்தில் எல்லாம் தலைகீழானது, அத்துடன் மேற்கு நாடுகளின் உக்ரேனுக்கான இடைவிடாத உதவிகளும் எதிர்பார்க்காத சிக்கல்களை கொண்டு வந்துவிட்டன. எந்த நாடும் நீண்ட ஒரு போரை விரும்பப் போவதில்லை.............................

  • கருத்துக்கள உறவுகள்
On 10/1/2025 at 13:36, தமிழ் சிறி said:

புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!

large.IMG_8009.jpeg.b82e2bcb49880ce7e8d0

  • கருத்துக்கள உறவுகள்

வடகொரியத் துருப்புக்கள் ரஸ்ஸியப் படைகளுடன் இணைந்து கேர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரேனின் படைகளுக்கெதிராகப் போரிடுவது உண்மை. இங்கு சதிக்கோட்பாடுகளைக் காவித்திரியும் ஒருவரைத்தவிர ஏனையவர்கள் எல்லோருக்கும் இது தெரிந்த விடயம் தான். இரு வடகொரியப் போர்வீரர்களை தாக்குதல் ஒன்றின்போது உக்ரேன் உயிருடன் பிடித்த ஒளிப்படங்களை சர்வதேச ஊடகங்கள் காட்டியபோதும், அதனை இல்லையென்று அடம்பிடிப்பது பூனை கண்களை மூடிக்கொண்டு பால்குடிப்பதற்கு ஒப்பானது. அது அவரது தனிப்பட்ட விருப்பம், இதில் மற்றையவர்கள் சொல்வதற்கு ஏதுமில்லை.

அடுத்தது தான் பத‌விக்கு வந்து 24 மணிநேரத்தில் ரஸ்ஸிய - உக்ரேன் போரினை முடிவிற்குக் கொண்டுவந்துவிடுவேன் என்று ட்ரம் கடந்த வருட இறுதியில் கூறியிருந்தார். ஆனால் ஜனாதிபதியாக தேர்தலில் வென்றபின் அந்த 24 மணித்தியாலங்கள் இப்போது 100 நாட்களாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவர் நினைத்ததைக் காட்டிலும் நிலைமை தீவிரமாக இருப்பதை அவரது ஆலோசகர்கள் அவருக்குக் கூறியிருக்கிறார்கள். ஆனால், புட்டினுக்குச் சார்பாகவே ட்ரம்ப் நடந்துகொள்வார் என்று நினைப்பது மடைமை. அமெரிக்காவின் நலன்களை விட்டுக் கொடுத்து, அதன் ப‌ரம வைரியான‌ ரஸ்ஸிய சர்வாதிகாரியை ஆதரிக்கவேண்டிய தேவை அமெரிக்காவை முன்னிலைப்படுத்தும் ட்ரப்பிற்கு இருக்குமா என்பது கேள்விக்குறிதான். உக்ரேனிற்கு வாரியிறைக்கும் பணத்தை ட்ரம்ப் நிறுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். ஆகவே உக்ரேனை சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்யவைத்து போரினை முடிவிற்குக் கொண்டுவரவே அவர் முயல்வார். ரஸ்ஸியாவினால் முற்றாக ஆக்கிரமிக்கப்படுவதைக் காட்டிலும் உக்ரேனிற்கு இது கெளரவமானது. புட்டினுக்கும் அதிக கெளரவ இழுக்கில்லாமல் போரை நிறுத்திக்கொள்ள இது உதவும்.

ரஸ்ஸியாவிலிருந்து தனக்குக் கிடைக்கும் எண்ணெய், கணியவளம், பணவுதவிகள், ஏவுகணைத் தொழிநுட்பம் என்பவற்றிற்காகவே தனது படைவீரர்களை வடகொரிய சர்வாதிகாரி ரஸ்ஸியாவிற்கு அனுப்பியிருக்கிறார். ஆரம்ப கட்டமாக அனுப்பப்பட்ட 11,000 வடகொரிய வீரர்களில் இதுவரை 3,000 இற்கும் அதிகமானோர் கள‌முனையிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றனர். சிலநாட்களுக்கு முன்னர் கேர்ஸ்க் பகுதியில் நடந்த சண்டையில் நூற்றுக்கணக்கான வடகொரிய வீரர்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் இருக்கின்றனர்.  ஆனாலும் தனது படைவீரர்களை ரஸ்ஸியாவிற்கு அனுப்புவதை கிம் நிறுத்தப்போவதில்லை. இன்னும் 40,000 முதல் 50,000 படைவீரர்களை கிம் விரைவில் அனுப்பிவைக்கலாம் என்று உக்ரேனிய அதிபரே பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். 

கிறீன்லாந்து விவகாரம் தனியானது. தற்போதும் அங்கு அமெரிக்கத் தளங்கள் இருக்கின்றன. மேற்குலகின் பாதுகாப்பிற்காக அங்கு அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் முழு கிறீன்லாந்தையுமே அமெரிக்காவிற்கு விட்டுக் கொடுக்கவேண்டும் என்று ட்ர்மப் கூறுகிறார். ஐரோப்பாவின் பாதுகாப்பு முக்கியம் என்றால் அதனை என்னிடம் தாருங்கள் என்பதே அவரது வாதம். கிறீன்லாந்தின் மீது டென்மார்க் அதிகாரம் கொண்டிருக்கிறது என்பது ஓரளவிற்கே உண்மையானது. ஆனால் கிறீன்லாந்து என்ன செய்யவேண்டும் என்பதை அம்மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று டென்மார்க் பிரதமர் கூறியிருக்கிறார். ரஸ்ஸியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே இருக்கும் நிலப்பகுதியான கிறீன்லாந்தை தன்னிடம் தரச்சொல்லி ட்ரம்ப் கோருவது ரஸ்ஸியாவுடன் விளையாட்டுப் போட்டி நடத்தவல்ல. 

அடுத்தது பணாமாக் கால்வாய். அமெரிக்காவின் பெரும் முதலீட்டுடன் செய்துமுடிக்கப்பட்டு 1999 இல் பணாமாவிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்ட இக்கால்வாயைச் சுற்றி சீனா தனது முதலீடுகளைச் செய்துவருகிறது. சீனச் சார்பு அரசு பணாமாவில் ஆட்சியில் இருப்பதால் அவ்வரசை தனது பணத்தால் வாங்கிவிட்ட சீனா, அமெரிக்காவின் அடிவயிற்றிலேயே தனது கோட்டைகளைக் கட்டிவருகிறது. பணமாக் கால்வாயூடாக நடைபெறும் வர்த்தகக் கப்பல்களில் சுமார் 40 இலிருந்து 60 வீதம் வரையான கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வருகிறது. ஆகவே தனது வர்த்தகத்தைத் தக்கவைக்கவும், தன்னால் கட்டிமுடிக்கப்பட்ட கால்வாய் தனது புதிய எதிரியான சீனாவின் கட்டுப்பாட்டில் செல்வதைத் தடுக்கவும் ட்ரம்ப் முயல்கிறார் என்று தெரிகிறது. இதனாலேயே பணமாக் கால்வாயினை மீளவும் பொறுப்பெடுக்கப்போகிறோம் என்று ட்ரம்ப் கூறுகிறார்.

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் ட்ரம்ப்பின் கூற்று நகைப்பிற்கிடமானது. தான் அதிகரிக்கவிருக்கும் வரியை (25%) நியாயப்படுத்தவே இதனை அவர் செய்கிறார். கனேடிய எல்லைகளுக்கூடாக பல தஞ்சக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவினுள் நுழைவதைத் தடுப்பதே அவரது நோக்கமாக இருக்கலாம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.