Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்பேட்டியில் தமிழர்கள் திராவிடர்கள் என்று கிட்டு கூறியுள்ளதுடன் பெரியாரையும் பாராட்டியுள்ளார். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

இப்பேட்டியில் தமிழர்கள் திராவிடர்கள் என்று கிட்டு கூறியுள்ளதுடன் பெரியாரையும் பாராட்டியுள்ளார். 

நன்றி…..

இது ஒரு வரலாற்று ஆவணம். @நன்னிச் சோழன் பார்வைக்கு.

————-

இங்கே இரு வருடங்கள் முன் புலிகளின் மதம் சாரா கொள்கை நிலைப்பாட்டை நான் கருத்தாக எடுத்து சொல்லியபோது @குமாரசாமி அண்ணை உட்பட பலர் அது அப்படியில்லை என்றார்கள்.

புலிகள் இனவாத அரசுக்கு எதிராக மட்டுமே போராடினார்கள், சாதி மதம் இட்டு போராடவில்லை என அவர்களின் பல்பரிமாண போராட்டத்தை ஒற்றை பரிமாண போராட்டமாக சுருக்கினார்கள்.

குறிப்பாக தலைவரின் மத நம்பிக்கை  அற்றதன்மையை, அவர் இயற்கையைதான் எப்போதும் உயர் சக்தியாக சுட்டினார் என சொன்ன போது @MEERA அதை மறுத்தார்.

அதே போல் புலிகள் பெரியார் மீதும் அவர் சாதித்த விடயங்கள் பற்றியும் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்கள் என நான் எழுதியபோதெல்லாம், @Nathamuni போன்றோர் அதை மறுத்துரைத்தனர். 

இந்த பாதி-உண்மைகள், பொய்கள் எல்லாவறின் மீதும் சம்மட்டியடிகாக வீழ்ந்துள்ளது கேணல் கிட்டுவின் இந்த பேட்டி.

1989 இல் இந்தியாவிடனான போருக்கு பின், இலண்டனில் கொடுத்த பேட்டி இது.

இதில் இந்து/சைவ மதம் எமது எதிரி, பெரியார் அதை மெட்டிராசோடு தடுத்தார் என சொல்லி விட்டு. நாம் திராவிடர்கள் எனவும் சொல்கிறார் கேணல் கிட்டு.

அவர் இருக்கும் வரை தலைவருக்கு அடுத்து புலிகளின் குரல் என்றால் அது கேணல் கிட்டுதான்.

மேலே அவர் சொல்லியுள்ளதுதான் மதம், திராவிடம் பற்றிய புலிகளின் நிலைப்பாடு தொடக்கம் முதல் முடிவு வரை.

கேணல் கிட்டுவை விட கொள்கை விடயத்தில் தாம் தான் புலிகளின் பேச்சாளர்கள் என கிளம்பி வரும் துணிவு இங்கே எவருக்கும் இல்லை என நினைக்கிறேன் (சொல்ல முடியாது). 

———

@வீரப் பையன்26 உங்கள் புலிகளின் கொள்கை நிலைப்பாடு பற்றிய தேடலை வளர்க்க இது உதவலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che பெருந்தலைகள் எல்லால் இதை பார்தது வயிரெரிந்துவிட்டு,  பார்காதது போல் சென்றிருப்பர். கிட்டுவை தெலுங்கன் என்றும் திட்டமுடியாது என்ற வெப்பிய்யாரம். 

😂 இது ஒரு விரவான பேட்டி. இதனை 1992 ல் VHS video வில் நான் கேட்டுள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்

@island தலைப்பை புலிகளின் மதம், பெரியார், திராவிடம் சம்பந்தமான பார்வை என மாற்றுவதே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

கேணல் கிட்டு மிக தெளிவாக இங்கே சொல்லபடுவது அமைப்பின் கொள்கை என்பதை சுட்டுகிறார்.

2 minutes ago, island said:

@goshan_che பெருந்தலைகள் எல்லால் இதை பார்தது வயிரெரிந்துவிட்டு,  பார்காதது போல் சென்றிருப்பர். கிட்டுவை தெலுங்கன் என்றும் திட்டமுடியாது என்ற வெப்பிய்யாரம். 

😂 இது ஒரு விரவான பேட்டி. இதனை 1992 ல் VHS video வில் நான் கேட்டுள்ளேன். 

போகட்டும்…

இனி யாரும் சருவசட்டியை தூக்கி கொண்டு வந்தால் இந்த லிங்காலே அடிக்கலாம்தானே🤣

  • island changed the title to புலிகளின் மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான பார்வை - கேர்ணல் கிட்டு
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

@island தலைப்பை புலிகளின் மதம், பெரியார், திராவிடம் சம்பந்தமான பார்வை என மாற்றுவதே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

கேணல் கிட்டு மிக தெளிவாக இங்கே சொல்லபடுவது அமைப்பின் கொள்கை என்பதை சுட்டுகிறார்.

போகட்டும்…

இனி யாரும் சருவசட்டியை தூக்கி கொண்டு வந்தால் இந்த லிங்காலே அடிக்கலாம்தானே🤣

மாற்றியாச்சு. 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

கேணல் கிட்டுவை விட கொள்கை விடயத்தில் தாம் தான் புலிகளின் பேச்சாளர்கள் என கிளம்பி வரும் துணிவு இங்கே எவருக்கும் இல்லை என நினைக்கிறேன் (சொல்ல முடியாது). 

———

பொட்டம்மானைத் தூக்கிப் போட்டு விட்டே முரட்டு முட்டுக் கொடுத்திருக்கிறார்கள், கிட்டுவைக் கடந்து போக முயற்சிக்காமல் இருப்பார்கள் என நம்புகிறீர்களா? Optimist ஐயா நீங்கள்😂!

  • island changed the title to மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, goshan_che said:

நன்றி…..

இது ஒரு வரலாற்று ஆவணம். @நன்னிச் சோழன் பார்வைக்கு.

கண்டேன் மிக்க நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

 உண்மைகள் ஒருபோதும் உறங்குவதில்லை. 

@குமார சாமி @விசுகு @MEERAபோன்றோரை விட்டு விடலாம். அவர்கள் புலிகள் ஆதரவு, தமிழ்த் தேசிய போர்வைக்குள் மறைந்து இருக்கும் ஹிந்துதுவ ஆதரவு மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களுக்கு எப்பொழுதோ இந்த உண்மை எல்லாம் தெரியும். அடுத்த தலைமுறைக்கு இந்த உண்மைகள் சென்று சேரக்கூடாது என்று சபதம் எடுத்து வேலை செய்பவர்கள்.

முதலில் நல்ல சைவனாக இருக்கும் எவருக்கும் நான் மேலே சொன்ன ஹிந்துத்துவ ஆதரவு மனநிலை இருக்காது. இவர்கள் சைவத்தை ஹிந்துதுவாவுக்குள் புதைக்க குழி வெட்டிக் கொடுத்தவர்கள், இவர்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் இங்கே உள்ள இஸ்லாமிய மற்றும் மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்காத கிறிஸ்தவ அடிப்படைவாதிகள். 

ஆனால் @வீரப் பையன்26 போன்றவர்களின் நிலை தான் பரிதாபமானது. தமிழ் மக்களின் பால் எங்களின் போராட்டங்கள் மேல் கரிசனம் கொண்ட அவரைப் போன்ற பலரையும் தான் இப்போது இந்த உண்மை நிலை எதுவென்று நன்கு விஷயம் தெரிந்த மனிதர்கள் பிழையாக வழிநடத்துகின்றர்கள். 

நான் மேலே சொன்ன நபர்களுக்கு என்று ஒரு திட்டம் உண்டு, அது மெது மெதுவாக எங்களை தத்துவார்த நீக்கம் செய்வது. அதை அவர்கள் மிகச் சரியாகவே செய்கின்றனர். 

வீரப்பையன் போன்ற சுயநலம் அற்ற தூய தமிழ் நெஞ்சங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்பவது இது தான் 

நேர்மையும் நெஞ்சுரமும் மட்டுமே காணாது. உங்களை வழி நடத்துப்பவர்களையும் சந்தேகியுங்கள், அவர்களின் நீண்ட காலத் திட்டம் என்ன என்பதை ஆய்ந்து அறியுங்கள். எங்களுக்கு யார் எதிரி என்று தெரியாமல் நண்பர்கள் மீதே வாள் சுற்றினால் வீழ்வது நாமே 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, goshan_che said:

இங்கே இரு வருடங்கள் முன் புலிகளின் மதம் சாரா கொள்கை நிலைப்பாட்டை நான் கருத்தாக எடுத்து சொல்லியபோது @குமாரசாமி அண்ணை உட்பட பலர் அது அப்படியில்லை என்றார்கள்.

ஆரியர்களையும் அதன் பார்ப்பனர்களையும் எதிர்ப்பவன்  நான். ஐயர்களையும் அவர் தம் சமஸ்கிருதத்தையும் எதிர்ப்பவன் நான்.

திராவிடத்தை எதிர்க்க முக்கிய காரணம் அதன் தவறுகள். எனவே நான் தமிழனாகவே இருக்க விரும்புகின்றேன். அதிலும் சைவத்தமிழனாக பெருமிதம் அடைகின்றேன்.

ஆரியமோ திராவிடமோ எம் அழிவுகளை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. முயற்சிக்கவும் இல்லை.மகிந்தவுடன் தட்டு மாற்றிக்கொண்டதை தவிர வேறேதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பதிலுக்கு நன்றி.

நான் உங்கள் இன்றைய நிலைப்பாட்டை பற்றி எழுதவில்லை அண்ணை.

நமக்கிடையான உரையாடல்களில் புலிகளின் சமயம், திராவிடம் சம்பந்தமான நிலைப்பாடு இதுவாகவே (கேணல் கிட்டு கூறியது) இருந்தது என நான் கூறிய போது நீங்கள் இல்லை என மறுத்துள்ளீர்கள்.

அதைத்தான் கூறினேன்.

தனிமனிதராக நீங்கள் எந்த நிலைப்பாட்டிலும் இருக்கலாம் ஆனால் உங்களை போல ஒருவர் சமயம், சைவம் என சொல்லி கேள்வி எழுப்பியபோது அதை ஆணித்தரமாக கேணல் கிட்டு மறுப்பதை நீங்கள் வீடியோவில் கண்டிருப்பீர்கள்.

இதுதான் புலிகளின் நிலைப்பாடாக எப்போதும் இருந்தது. இதோடு நீங்கள் உடன்பட வேண்டியதே இல்லை.

ஆனால் இதுவல்ல புலிகளின் நிலைப்பாடு என எழுதுவது உண்மைக்கு புறம்பானது.

சைவம், மதம் தொடர்பான புலிகளின் உத்தியோக பூர்வ நிலைப்பாடு இது இல்லை.

இங்கு ஈ வே ராமசாமிக்கு முட்டு குடுப்பதற்காக விடுதலைப் புலிகள் சைவத்திற்கு எதிரானவர்கள் என்று கிட்டுவின் காணொளியை கொண்டு திரிபவர்கள் தலைவரின் திருமணம் எங்கு நடந்தது என்று கூறுங்கள் பார்கலாம் 😀(இது யாருக்கோ.எவ்வளவோ சப்பைக்கட்டு கட்டி போட்டம் இதுக்கு கட்டமாட்டமா?)😀

Edited by மறுத்தான்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

@island 

இனி யாரும் சருவசட்டியை தூக்கி கொண்டு வந்தால் இந்த லிங்காலே அடிக்கலாம்தானே🤣

இதற்கு சங்கி சைமன் தம்பிகள் ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறார்கள். அதாவது, இவை புலிகள் திராவிட சூழ்ச்சிகளின் மீதான அறியாமையில் பேசியது. 2009 இன அழிப்பின் போது திராவிடத்தின் உண்மை முகம் வெளிவந்தது, ஆகையால் இன்று திராவிடத்தையும் அதன் தலைவரான பெரியாரையுமா எதிர்த்து அழிக்க வேண்டியது அவசியமாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, செவ்வியன் said:

இதற்கு சங்கி சைமன் தம்பிகள் ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறார்கள். அதாவது, இவை புலிகள் திராவிட சூழ்ச்சிகளின் மீதான அறியாமையில் பேசியது. 2009 இன அழிப்பின் போது திராவிடத்தின் உண்மை முகம் வெளிவந்தது, ஆகையால் இன்று திராவிடத்தையும் அதன் தலைவரான பெரியாரையுமா எதிர்த்து அழிக்க வேண்டியது அவசியமாகிறது.

புதிதாக இன்னொரு விளக்கமும் வந்திருகின்றது 

அதாவது கிட்டு கொல்டியாம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

புதிதாக இன்னொரு விளக்கமும் வந்திருகின்றது 

அதாவது கிட்டு கொல்டியாம் 

ஹாஹா, யாழ் களத்தில் நேற்று கடைசி கண்டி அரசரை பற்றிய செய்தி பார்த்தேன்.  இங்கு கலப்பு நிறைய நடந்துள்ளது, ISO அங்கீகாரம் பெற்ற தமிழரை எப்படி கண்டுபிடிப்பது😃

பிறப்பால் ஒருவர் யாரென்பதை விட, யாருக்காக வாழ்கிறார்கள் என்பதே முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பகிடி said:

புதிதாக இன்னொரு விளக்கமும் வந்திருகின்றது 

அதாவது கிட்டு கொல்டியாம் 

நீங்கள் கொல்டியாம் என்று எழுதியது எனக்கு விளங்கவில்லை. தமிழ் அதிகம் தெரிந்தவருக்கு போன் போட்டு கேட்டு தெரிந்து கொண்டேன் .மலையாள சீமானே ஒரு திராவிடர் தானே.அவருடைய முதல் மனைவி கன்னடம்,இரண்டாம் மனைவி தெலுங்கு இருவரும் திராவிடர்கள். ஈழதமிழர்ளே திராவிடர் இன குழுவை சேர்ந்தவர்கள் தானே
 
3 hours ago, செவ்வியன் said:

ISO அங்கீகாரம் பெற்ற தமிழரை எப்படி கண்டுபிடிப்பது😃

சீமானின் அயோக்கியதனங்களை ஏற்றுகொள்பவர்கள் அங்கீகாரம் பெற்ற தமிழர்களாக ஏற்று கொள்ளபடுவார்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மறுத்தான் said:

சைவம், மதம் தொடர்பான புலிகளின் உத்தியோக பூர்வ நிலைப்பாடு இது இல்லை.

இங்கு ஈ வே ராமசாமிக்கு முட்டு குடுப்பதற்காக விடுதலைப் புலிகள் சைவத்திற்கு எதிரானவர்கள் என்று கிட்டுவின் காணொளியை கொண்டு திரிபவர்கள் தலைவரின் திருமணம் எங்கு நடந்தது என்று கூறுங்கள் பார்கலாம் 😀(இது யாருக்கோ.எவ்வளவோ சப்பைக்கட்டு கட்டி போட்டம் இதுக்கு கட்டமாட்டமா?)😀

இந்த கேள்விக்கு பதில்.

இலங்கை சட்டப்படி (இந்தியாவிலும் என நம்புகிறேன்) தமிழர் மரபுவழி திருமணம் (கோவிலில் வைத்து தாலி கட்டுவது) பதிவு திருமணத்துக்கு நிகராக ஏற்று கொள்ளப்படுவது.

ஆகவே ஒரு தமிழர் பதிவு திருமணம் செய்ய முடியாதவிடத்து இந்த முறையில் திருமணம் செய்தாலும் அது சட்டபடி செல்லும்.

போரும் சமாதானமும் புத்தகம் இந்த திருமண சூழலை விபரிக்கிறது.

மேலே கேணல் கிட்டுவிடம் கூட தலைவரின் மத நம்பிக்கை பற்றி கேட்கப்படுகிறது. 

ஜெகத் கஸ்பரிடம் கூட தலைவர் அவரே என்ன சொன்னார் என்பது நமக்கு தெரியும்.

எத்தனையோ சந்தர்பங்கள் இருந்தும் - அவர் ஒரு போதும் தன்னை இந்து/சைவர் என அடையாளப்படுத்தியதோ, ஒரு நாள் தன்னும் கோவிலுக்கு போய் அதை படம் பிடித்து வெளியிட்டதோ இல்லை.

இது அவரின் தனிப்பட்ட மதம் சம்பந்தமான நிலைப்பாடு.

ஆனால் அமைப்பாக இதைவிட சமயம் சாரா நிலையில்தான் புலிகள் இருந்தார்கள்.

மீண்டும் கேணல் கிட்டு சொல்வதை கேளுங்கள் - எனக்கு நம்பிக்கை குறைந்து கொண்டு போகிறது, ஆனால் நான் இப்போதும் சாமி கும்பிடுகிறேன், புலிகளில் உறுப்பினருக்கு தனி மனித மத சுதந்திரம் உள்ளது. ஆனால் ஒரு அமைப்பாக, எமக்கு கிறிஸ்தவமும், இந்து/சைவமும் அடக்குமுறையாளர் புகுத்திய மதங்கள்.

சுதந்திர தமிழீழத்தில் தனி மனித மதசுதந்திரம் மதிக்கப்படும் ஆனால் பிரச்சாரம் மூலம் அறிவூட்டல் நிகழ்த்தப்படும்.

இதுதான் ஒரு அமைப்பாக மதம் பற்றிய புலிகளின் நிலைப்பாடு. எப்போதும்.

பிகு

இந்த பதில் உங்களுக்கும். தான் வாழ்நாள் பூராக ஆதரித்த இயக்கத்தின் அடிப்படை கொள்கை ஒன்றை பற்றிய தெளிவு இல்லாத நன்றி குறியிட்ட அண்ணைக்கும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, செவ்வியன் said:

இதற்கு சங்கி சைமன் தம்பிகள் ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறார்கள். அதாவது, இவை புலிகள் திராவிட சூழ்ச்சிகளின் மீதான அறியாமையில் பேசியது. 2009 இன அழிப்பின் போது திராவிடத்தின் உண்மை முகம் வெளிவந்தது, ஆகையால் இன்று திராவிடத்தையும் அதன் தலைவரான பெரியாரையுமா எதிர்த்து அழிக்க வேண்டியது அவசியமாகிறது.

சங்கி-தம்பிகள் உளறுவதில் ஓரளவு லாஜிக் உள்ள தர்க்கம் இது மட்டுமே.

ஆனால் 2009 க்கு பின் புலிகள் என எவரும் இல்லை. 

எனவே சமயம், திராவிடம் சம்பந்தமாக புலிகளின் நிலைப்பாடு என்றால் அது மேலே கேணல் கிட்டு கூறியதே.

————

2009 க்கு பின் கருணாநிதி என்ற ஒற்றை மனிதனின், திமுக என்ற ஒற்றை அமைப்பின் தவறை - ஒட்டு மொத்த திராவிட கொள்கையின் தவறாக சித்தரித்து அதன் மூலம் இந்திய மத்திய அரசு, இந்தியா மீதான விமர்சனத்தை மடை மாற்றுபவர்கள்தான் இப்படி சொல்வார்கள்.

2009 இல் நடந்ததற்கு திராவிட கொள்கையோ, பெரியாரோ எந்த வகையிலும் பங்களிக்கவில்லை.

அப்படி சொல்பவர்கள் - மடைமாற்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

இவர்களின் நிலைப்பாடு எப்படியென்றால் சங்கி சைமனின் அயோக்கியதனங்களுக்கு தமிழ் தேசியத்தை வெறுத்தால் எவ்வளவு முரணானதோ அப்படியிருக்கு.

2008ல் புலிகளின் தலைமை பெரியாரையும் திராவிடத்தையும் குறை கூறினாராம், இது உண்மை என்றால் 2011ல் கருணாநிதியை பாராட்டி நாடகம் எழுதியதேன்? 2023 வரைக்கும் பெரியார் எங்கள் வழிகாட்டி என்று சொல்லி திரிந்ததேன்? 

புலிகளுக்கும் உண்மையாக இல்லை, தமிழ் தேசியத்திற்கும் உண்மையாக இல்லை, தன் கட்சிகாரனுக்கும் உண்மையாக இல்லை.

கண்ணதாசனின் வனவாசம் படித்துக்கொண்டிருக்கிறேன், அதில் எப்படி திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் உண்மையோடு இருக்கிறார்கள் ஆனால் ஏமாற்றப்படுகிறார்கள் என்று எழுதியிருப்பார்,அது அப்படியே இந்ந நாதகவிற்கு பொருந்தும். அதையும் மீறி திமுக வளர்ந்ததற்கு காரணம் அண்ணாவை தாண்டி அடையாளம் காட்டக்கூடிய இரண்டாம் கட்ட தலைவர்கள் இருந்தனர். ஆனால் நாதகவில் யாராவது முன்னுக்கு வந்தால் பிசிறு என்று வெட்டப்படுடகிறது, இல்லை சங்கி சைமனே தேவலாம் என்கிற அளவுக்கு அவர்களது நடவடிக்கை இருக்கிறது.

அவர்களுக்கு வரப்போகும் ஒரே நற்செய்தி ஈரோட்டில் வாங்கப் போகும் கட்டுத்தொகையே!!!

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, செவ்வியன் said:

2011ல் கருணாநிதியை பாராட்டி நாடகம் எழுதியதேன்?

இது சம்பந்தமான மேலதிக தகவல்கள், ஆதாரம் இருப்பின் பகிரவும்🙏.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

இது சம்பந்தமான மேலதிக தகவல்கள், 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, செவ்வியன் said:

அதாவது, இவை புலிகள் திராவிட சூழ்ச்சிகளின் மீதான அறியாமையில் பேசியது. 2009 இன அழிப்பின் போது திராவிடத்தின் உண்மை முகம் வெளிவந்தது, ஆகையால் இன்று திராவிடத்தையும் அதன் தலைவரான பெரியாரையுமா எதிர்த்து அழிக்க வேண்டியது அவசியமாகிறது.

👆இப்படி சங்கி-தம்பிகள் சொல்லுவது பொய்.

ஏன் என்றால் சங்கி-மானே 2009 க்கு பின் கருணாநிதியை, அண்ணாவை, பெரியாரை புகழ்ந்து மேடை நாடகம் எழுதியுள்ளார். (தம்பி இராமையா பேட்டியில் கடைசி 5 நிமிடங்களை பார்க்கவும்)

நாடகம் இந்த திரியில்.

நிகழ்சியின் பெயர் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா 🤣🤣🤣.

இதெல்லாம் மே 2009 க்கு பின்….

2011 இல் சுப முத்துகுமார் ரோவினால் படுகொலை செய்யப்பட்டு….

சங்கிமான் ரோவின் பிடிக்குள் போவதற்கான இடைபட்ட காலத்தில் நடந்த கூத்துகள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பகிடி said:

புதிதாக இன்னொரு விளக்கமும் வந்திருகின்றது 

அதாவது கிட்டு கொல்டியாம் 

@Nathamuni யின் இனத்தூய்மை ஆராய்ச்சி கூடத்தில் ரைட் நவ்…..

நாதம்ஸ்:

கிருஸ்ண தேவராயர் தெலுங்கர்….

கேணல் கிட்டுவின் பெயர் கிருஸ்ணகுமார் சதாசிவம்…..

யுரேக்கா! யுரேக்கா!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

இந்த கேள்விக்கு பதில்.

இலங்கை சட்டப்படி (இந்தியாவிலும் என நம்புகிறேன்) தமிழர் மரபுவழி திருமணம் (கோவிலில் வைத்து தாலி கட்டுவது) பதிவு திருமணத்துக்கு நிகராக ஏற்று கொள்ளப்படுவது.

ஆகவே ஒரு தமிழர் பதிவு திருமணம் செய்ய முடியாதவிடத்து இந்த முறையில் திருமணம் செய்தாலும் அது சட்டபடி செல்லும்.

போரும் சமாதானமும் புத்தகம் இந்த திருமண சூழலை விபரிக்கிறது.

மேலே கேணல் கிட்டுவிடம் கூட தலைவரின் மத நம்பிக்கை பற்றி கேட்கப்படுகிறது. 

ஜெகத் கஸ்பரிடம் கூட தலைவர் அவரே என்ன சொன்னார் என்பது நமக்கு தெரியும்.

எத்தனையோ சந்தர்பங்கள் இருந்தும் - அவர் ஒரு போதும் தன்னை இந்து/சைவர் என அடையாளப்படுத்தியதோ, ஒரு நாள் தன்னும் கோவிலுக்கு போய் அதை படம் பிடித்து வெளியிட்டதோ இல்லை.

இது அவரின் தனிப்பட்ட மதம் சம்பந்தமான நிலைப்பாடு.

ஆனால் அமைப்பாக இதைவிட சமயம் சாரா நிலையில்தான் புலிகள் இருந்தார்கள்.

மீண்டும் கேணல் கிட்டு சொல்வதை கேளுங்கள் - எனக்கு நம்பிக்கை குறைந்து கொண்டு போகிறது, ஆனால் நான் இப்போதும் சாமி கும்பிடுகிறேன், புலிகளில் உறுப்பினருக்கு தனி மனித மத சுதந்திரம் உள்ளது. ஆனால் ஒரு அமைப்பாக, எமக்கு கிறிஸ்தவமும், இந்து/சைவமும் அடக்குமுறையாளர் புகுத்திய மதங்கள்.

சுதந்திர தமிழீழத்தில் தனி மனித மதசுதந்திரம் மதிக்கப்படும் ஆனால் பிரச்சாரம் மூலம் அறிவூட்டல் நிகழ்த்தப்படும்.

இதுதான் ஒரு அமைப்பாக மதம் பற்றிய புலிகளின் நிலைப்பாடு. எப்போதும்.

பிகு

இந்த பதில் உங்களுக்கும். தான் வாழ்நாள் பூராக ஆதரித்த இயக்கத்தின் அடிப்படை கொள்கை ஒன்றை பற்றிய தெளிவு இல்லாத நன்றி குறியிட்ட அண்ணைக்கும்.

புலிகள் மதம் சம்பந்தமாகவோ வழிபாடுகள் சம்பந்தமாகவோ எந்த கொள்கை குறிக்கோள்களை யும் வெளியிடுவதில்லை. அது அவர்களது தனி மனித சுதந்திரம் போராளிகள் உட்பட என்பது தான் நான் அறிந்தது. இங்கே கிட்டண்ணா மட்டுமல்ல தலைவரே தத்தமது மத சுதந்திரங்களை மதித்தனர் கனம் செய்தனர். (தலைவர் கொக்கட்டிச்சோலையில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு வருடமும் செல்வதாக ஒரு தகவல் உண்டு)

எனவே அதே நிலைப்பாடு தான் எனதும். இங்கே கிட்டண்ணாவின் கருத்தை புலிகளின் கருத்தாக திணிப்பது தவறு.

மேலும் எனக்கு மதம் சம்பந்தமாக சில எதிர் சிந்தனைகள் உண்டு. அவை பெரியாரின் சுயமரியாதை சிந்தனைகளுடன் பொருந்துவன. ஆனால் அவற்றை பெரியார் எனக்குள் விதைக்கவில்லை. பெரியாரை நான் அறியும் முன்பே எனது சிறிய வயதிலேயே என்னுள் எழுந்த கேள்விகளால் வந்தவை. அவை பின்னர் புலிகளுடன் ஒத்து போயின. ஆனால் அங்கே பெரியார் போல் கடவுளை வணங்குபவன் முட்டாள் பகுத்தறிவற்றவன் என்று அவர்கள் சொல்வதில்லை.  இது தான் பெரியாருக்கும் புலிகளுக்குமான வித்தியாசம்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

எனவே அதே நிலைப்பாடு தான் எனதும். இங்கே கிட்டண்ணாவின் கருத்தை புலிகளின் கருத்தாக திணிப்பது தவறு.

மன்னிக்கவும்.

இது நீங்கள் புலிகள் அமைப்புக்கு செய்யும் பாதகம் (disservice).

மேலே மிக தெளிவாக தனது கருத்து, இயக்கத்தின் நிலைப்பாடு என இரெண்டையும் கேணல் கிட்டு வேறுபடுத்தி காட்டுகிறார்.

எது இயக்க்கத்தின் நிலைப்பாடு என்பதை மட்டும் அல்ல, சுதந்திர தமிழரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை கூட சொல்கிறார்.

ஆகவே இதை கேணல் கிட்டுவின் பார்வை என சுருக்குவது - புலிகளின் வரலாற்றை திரிப்பதற்கு சமம் என நான் கருதுகிறேன்.

இது கேணல் கிட்டு தன்னை பற்றி கதைத்த நண்பர்கள் சந்திப்பு அல்ல. இயக்கம் இலண்டனில் நிகழ்த்திய நிகழ்வு. இதில் பங்குபற்றிய ஒருவரை நேரில் சந்திக்க உள்ளேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

புலிகள் மதம் சம்பந்தமாகவோ வழிபாடுகள் சம்பந்தமாகவோ எந்த கொள்கை குறிக்கோள்களை யும் வெளியிடுவதில்லை. அது அவர்களது தனி மனித சுதந்திரம் போராளிகள் உட்பட என்பது தான் நான் அறிந்தது. இங்கே கிட்டண்ணா மட்டுமல்ல தலைவரே தத்தமது மத சுதந்திரங்களை மதித்தனர் கனம் செய்தனர். (தலைவர் கொக்கட்டிச்சோலையில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு வருடமும் செல்வதாக ஒரு தகவல் உண்டு)

தலைவர் கோவிலுக்கு போனார் என்ற ஊக கதைகளுக்கு அப்பால் (அவரிடம் நேரடியாக கஸ்பர் கேட்ட போது அவர்தான் ஒரு இயற்கைவாதி என்பதை மட்டுமே கூறினார் / நான் தாந்தோறி ஈஸ்வரனின் பக்தன் என கூறவில்லை) புலிகள் இயக்கத்துள் தனி மனித மத வழிபாட்டு சுதந்திரம் இருந்தது.

ஆனால் அமைப்புக்குள் மதம் இருந்ததில்லை. 

பல சண்டை கொப்பிகள் பார்த்திருபீர்கள் - எந்த சண்டைக்கும் முன் உறுதிமொழி எடுத்தல், தாக்குதல் திட்ட விளக்கம் தளபதிகள் பேச்சு மட்டுமே இருக்கும். கோவிலில் போய் அர்ச்சனை செய்வதும் இல்லை ஐயர் வந்து நூல் கட்டுவதும் இல்லை.

ஆனால் இலங்கை படைகள் பிக்குவை கூப்பிட்டு பிரித் ஓதுவார்கள். தளபதிகள் கையில் ஒரு நூல் கடையையே சுத்தி கொள்வார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.