Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் எமது முன்னோர்கள் வயல்வெளிகளின் அருகாமையில் கோவில் கட்டி அதற்காக‌,குளங்களை வெட்டினார்கள்,கேணிகளை உருவாக்கினார்கள்..மன்னர்கள் ஆட்சியில் அல்லது வேளான்மை சமுகம் உருவான காலத்தில்  இது ஒர் சமுக கட்டமைப்பு ..சகல கிராமங்களிலும் உள்ள பழைய கோவில்களில் இந்த டெம்பிளெட்டை அவதானிக்கலாம்..

இதற்கு பணம் எங்கிருந்து வந்திருக்கும்? ஊர்மக்கள் அல்லது மன்னர்கள் கொடுத்திருப்பார்கள் அநேகமாக பொதுமக்கள் பொதுநோக்குடன் கொடுத்த பணமாக த்தான்  இருக்க வேண்டும் ...அந்த பணம் மக்களின் நலன் கருதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை . எமது கண் முன்னே குளங்கள்,கேணிகள்(மருதடி கேணி..காக்கா சுயா),கிணறுகள் இன்றும் சாட்சியாக இருக்கின்றது...

இன்று புலம் பெயர் நாடுகளிலிருந்து கிடைக்கு பணம் போன்று அன்றைய காலத்தில் நிச்சயம் பணம் கிடைத்திருக்காது.இருந்தும்  உள்ளூர் மக்கள் சொந்த வருமானத்தில் இப்படியான செயல்களை செய்து உள்ளனர்

யாழ் மாவட்டம் ஆறுகள்,கங்கைகள்,அருவிகள் நிறைந்த மாவட்டம் அல்ல.... விவசாயத்திற்கு  மழை நீரை பெரிதும் நம்பிருந்தார்கள்.மழையும் வருடத்தில் ஒர் குறிப்பிட்ட காலத்தில் தான் பெய்யும்..மழையும் சில நாட்களில் அடித்து பெய்யும் அந்த நீர் வீணாக கடலுக்கு சென்று கலந்து விடும்.இந்த நீரை சேமித்து விவசாயம் செய்யத்தான் குளங்கள்,கேணிகள்,கிணறுகள் கட்டினார்கள். இவை யாவும் பொது நோக்குடன் பொது இடத்தில் பொதுமக்களினால் பொது நன்மைக்கு ...பொது மக்கள் சேர்த்த பணத்தில் ...என நான் நினைக்கிறேன் ...நிச்சயமாக மருதடியான் தனிமனிதனாக இவற்றை(கேணி கட்டுதல்,கிணறு வெட்டுதல்,குளம் அமைத்தல்) செய்திருக்கமுடியாது....அவர்  ஓரு சக்தியாக செயல் பட்டிருக்கலாம்...(ஏன் வீணாக் மருதடியானை எங்கன்ட அலட்டலுக்குள்ள பிறகு மனுசன் என்னோட கோபித்து கொண்டால்)

ஊர் மக்கள்  பணம் கொடுத்து,அந்த பணத்தில் ஊர்மக்கள் பயன் அடையும் வகையில் நல்ல திட்டங்களை அமுல் படுத்தியுள்ளார்கள்.அதற்கு பொதுக்கட்டமைப்பு (கோவில் சபை அல்லது கிராம சபை) துணை புரிந்திருக்கின்றது..

குளம் ...

மழை நீர் சேர்ந்து நிற்கும் .நீண்ட நாட்களின் நீரோட்டத்தின் விளைவாக‌ ஊரில் உள்ள மண்,கல்,சகதி மற்றும் கழிவுகள்(வாழைமரம்கள்,தடிகள்,மரங்கள்) யாவும் நீரோடு சென்று அடியில் படிந்து குளத்தின் ஆழத்தை குறைத்து விடும்..நீர் வற்றிய பின்பு, கழிவுகள்,மண் போன்றவற்றை அன்று வாழ்ந்த  மக்கள் சிரமதான முறையில் துப்பரவு செய்தார்கள் ...தூர் வாருதல் என சொல்வார்கள் ...பொது நோக்குடன் (கிளீன் சிறிலங்கா 30 நாட்கள்.கிளீன் அப் அவுஸ்ரேலியா நாள் 30 வருடங்கள்)எங்கன்ட சன‌த்தின்ட கிளீன் அப் குளம்  எப்பவோ தொடங்கிட்டுது ...(கிளீன் அப் செய்யும்பொழுது கள்,தேனீர்,வடை,மோதகம்..போன்றவற்றை ஊர்மக்கள் செய்து கொடுப்பார்கள் ஊர்மக்கள் கூடி சேர்த்த பணம்)

கிளீன் அப் அவுஸ்ரேலியா செய்யும் பொழுதும் நாலு பேர் சேர்ந்து காசு போட்டு பியர் அடிக்கிறனாங்கள் ..,அதற்காக அவுஸ்ரேலியா அரசு எங்கள் மீது குற்றம் சாட்ட முடியாது , "அரசாங்க காசில பியர் குடிக்கிற எண்டு"

இந்த குளங்கள்  விவசாயத்துக்கு மட்டுமல்ல கால் நடைகளின் தாகத்தையும் தீர்க்க உதவியிருக்கு,இருக்கின்றது .

கேணிகள்

இவற்றில்  அநேகமானவற்றுக்கு மூன்று பக்கமும் சுவர் கட்டியிருப்பார்கள் ஒரு பக்கம் திறந்த வாறு இருக்கும் படிகள் கட்டியிருக்கும் ,மழை நீர் ஒடிவந்தாலுமொரு பக்கத்தினால் மட்டுமே அடி தளத்துக்கு செல்ல முடியும் ஊர் கழிவுகள் குறைவாக அடித்தளத்திற்கு செல்லும் இதனால் நீண்ட நாட்களுக்கு தூர் வார வேண்டிய அவசியமில்லை ...

இன்று கேணிகளை மூடிவிடுகிறார்கள் ,அல்லது தீர்த்தமாடுவதற்காக கேணிக்குள் சிறிய கட்டித்தை கட்டிவிடுகிறார்கள் ...இதை செய்வது ஊரில் உள்ள மேதாவிகள் ..

கிணறு.

முக்கியமாக தோட்ட கிணறுகள் அதிலும் யாழ் மாவட்ட  கிணறுகள்  மழை நீர் ஓடுவதற்கு ஏற்ற வகையில் ஒர் பாதை விட்டு கட்டியிருப்பார்கள் .தற்பொழுது இந்த கிணறுகள் முற்றாக மூடி கட்டப்பட்டிருக்கின்றது அதுபோக யாரும் கிணறு வெட்டுவதில்லை ,பணம் அதிகம் வேண்டும் வெட்டுவதற்கு.

கேணிகளுக்கு பக்கத்தில் கிணறு வெட்டியிருப்பார்கள் ,முட்டாள்கள் தண்ணீர் கேணியில் இருக்கின்றது வீணாக கிணற்றையும் வெட்டி யிருக்கிறாங்கள் பழசுகள் என திட்டியும் இருக்கின்றேன் .ஆனால் அதன் முக்கியத்துவம் பின்பு தான் அறிந்து கொண்டேன்.கோயில்களுக்கு சற்று தொலைவில் இருக்கும் வீட்டு கிணற்று தண்ணீர் உவர் தன்மையுடன் இருக்கும் ஆனால் கோயில் கிணற்று தண்ணீர் நன்னீராக இருக்கும் .கேணிகளில் சேரும் மழைநீர் கிணற்றுக்கு உள்ளே மண்,சிறுகட்கள் ஊடாக வடிகட்டப்பட்டு ஊற்றாக உட்செல்வதனால் தான் என  நினைக்கிறேன். மேலும் தோட்டங்கள் ,வயல்களுக்கு மத்தியில் கிணறுகள் வெட்டியிருப்பார்கள் அங்கும் நன்னீர் தான்.

குழாய் கிணறு பாவனைக்கு வந்துவிட்டது.அதிக இடம் தேவையில்லை ..

மொத்தத்தில் மழை நீரை நிலத்தடியில் சேமித்து வைக்கும் சகல பொறிமுறைகளும் இல்லாமல் போகின்றது.

அன்றைய ஊர்மக்கள்,மன்னர்களுக்கு (ஆட்சியாளர்களுக்கு) இருந்த அறிவு ,தற்பொழுது நூறு வீதம் கல்வியறிவு கொண்ட ஊர்மக்களுக்கும் இல்லை ,அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் இல்லை ,கோவில் நிர்வாக சபைக்கு போட்டி போட்டு கொண்டு வரும் தலைவர்கள்,உறுப்பினர்களுக்கும் இல்லை.....

கோயில்கள்,பாடசாலைகள் எல்லாம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், தேவைகளை இப்பொழுது வாழும் மக்கள் மறந்துவிட்டனர் போல உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்,

எமது இளம் வயதுகளில் தூர் வாருதல் போன்ற வேலைகளில் ஈடுபட்ட அனுபவம் உண்டு. மு. தளையசிங்கம் அவர்களது சர்வோதய இயக்கம் இவற்றை ஒழுங்கு செய்திருந்தது.

இரண்டு பெரிய குளங்களை இணைக்கும் திட்டம் கூட ஆயத்த நிலையில் இருந்தது.

இப்போது பார்க்கும் போது எல்லாமே வரண்டு போய்க் கிடப்பது மிகவும் கவலையாக உள்ளது.

அங்கு எவருக்கும் எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை.

மிகக் குறுகிய காலத்திலேயே கூர்ப்படைந்து விட்டார்கள் போல உள்ளது…!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புங்கையூரன் said:

புத்தன்,

எமது இளம் வயதுகளில் தூர் வாருதல் போன்ற வேலைகளில் ஈடுபட்ட அனுபவம் உண்டு. மு. தளையசிங்கம் அவர்களது சர்வோதய இயக்கம் இவற்றை ஒழுங்கு செய்திருந்தது.

இரண்டு பெரிய குளங்களை இணைக்கும் திட்டம் கூட ஆயத்த நிலையில் இருந்தது.

இப்போது பார்க்கும் போது எல்லாமே வரண்டு போய்க் கிடப்பது மிகவும் கவலையாக உள்ளது.

அங்கு எவருக்கும் எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை.

மிகக் குறுகிய காலத்திலேயே கூர்ப்படைந்து விட்டார்கள் போல உள்ளது…!

எமது பாடசாலை அதிபர் ஒருவர் பழைய இடதுசாரி ...அவர் 45 வருடங்களுக்கு முன்பு எங்களை எல்லாம் அழைத்து சென்று ஊரில் உள்ள குளத்தை துப்பர்வு செய்ய வைத்தார் ,இரண்டு நாட்கள் போனோம் அதன் பின்பு செல்லவில்லை...பிறகு 80 களில் சில இடதுசாரி தமிழ் இயக்கங்கள் மக்கள் மயப்படுத்தல் என அழைத்தார்கள்...அதுவும் இரண்டு நாள். அதன்பிறகு அண்மையில் சென்றிருந்தேன் குப்பை தொட்டியாக பாவிக்கின்றனர்...

  • கருத்துக்கள உறவுகள்

அன்று எல்லோருடைய மனங்கள் விசாலமாக இருந்தது . ....... இன்று எல்லாம் சுருங்கி விட்டது ........அதுதான் உண்மை . ....... இன்று பொது தொண்டுகள் செய்யவும் அரசு நிதி தரவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றார்கள் . ........ !

  • கருத்துக்கள உறவுகள்

மழைநீரை அப்படியே கடலுக்குள் ஓடவிடும் பாதகமான நிலை இன்று பல நாடுகளிலும் நகர்ப்புற வளர்ர்சிகளின் பின் வந்துவிட்டது. நிலத்தடி நீரின் மட்டம் மிகவும் கீழே போய் சுத்தமான குடி தண்ணீருக்கு அலையும் மக்கள் தொகை ஒரு பெரிய தொகை என்ற தரவுகளும் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஒரு ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மழை நீரை தேக்கி, நிலத்துக்குள் விடும் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது.

இங்கு லாஸ் ஏஞ்சலீஸ்ஸில் பெரிய வெளிகளில் நீரைத் தேக்கி வைக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார்கள்................... அதை ஆரம்பித்த பின் மழை தான் பெய்யவில்லை............

  • கருத்துக்கள உறவுகள்

அன்று சிரமதானம் மூலம் கோவில்களில் பாடசாலைகளில் துப்புரவு செய்தோம் . இன்று வெளிநாட்டு காசில் சுகபோகமாக வாழ்ந்து பழகி விடடார்கள் .எல்லாவற்றுக்கும் வெளிநாட்டு காசு வேண்டும். அது சிலரது பொக்கற்றுக்கு போவது வேறு கதை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2025 at 14:41, புங்கையூரன் said:

புத்தன்,

எமது இளம் வயதுகளில் தூர் வாருதல் போன்ற வேலைகளில் ஈடுபட்ட அனுபவம் உண்டு. மு. தளையசிங்கம் அவர்களது சர்வோதய இயக்கம் இவற்றை ஒழுங்கு செய்திருந்தது.

இரண்டு பெரிய குளங்களை இணைக்கும் திட்டம் கூட ஆயத்த நிலையில் இருந்தது.

இப்போது பார்க்கும் போது எல்லாமே வரண்டு போய்க் கிடப்பது மிகவும் கவலையாக உள்ளது.

அங்கு எவருக்கும் எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை.

மிகக் குறுகிய காலத்திலேயே கூர்ப்படைந்து விட்டார்கள் போல உள்ளது…!

நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

On 19/2/2025 at 21:11, suvy said:

அன்று எல்லோருடைய மனங்கள் விசாலமாக இருந்தது . ....... இன்று எல்லாம் சுருங்கி விட்டது ........அதுதான் உண்மை . ....... இன்று பொது தொண்டுகள் செய்யவும் அரசு நிதி தரவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றார்கள் . ........ !

உண்மை ,விளையாட்டு போட்டிகளில் மத்தியஸ்தம் (கிரிகட் அம்பயராக) பண்ணுவதற்கே பணம் கேட்கின்றனர் ..எங்கள் கால்த்தில் ஆசிரியர்கள் ,மற்றும் எங்களை விட வயசில் மூத்தோர் பணம் பெறாமல் பணியாற்றினார்கள்

நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2025 at 01:55, ரசோதரன் said:

மழைநீரை அப்படியே கடலுக்குள் ஓடவிடும் பாதகமான நிலை இன்று பல நாடுகளிலும் நகர்ப்புற வளர்ர்சிகளின் பின் வந்துவிட்டது. நிலத்தடி நீரின் மட்டம் மிகவும் கீழே போய் சுத்தமான குடி தண்ணீருக்கு அலையும் மக்கள் தொகை ஒரு பெரிய தொகை என்ற தரவுகளும் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஒரு ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மழை நீரை தேக்கி, நிலத்துக்குள் விடும் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது.

இங்கு லாஸ் ஏஞ்சலீஸ்ஸில் பெரிய வெளிகளில் நீரைத் தேக்கி வைக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார்கள்................... அதை ஆரம்பித்த பின் மழை தான் பெய்யவில்லை............

பனை மரம் நன்றாக நீரை தேக்கி வைத்திருக்கும் என்றும் அத்துடன் நில அரிப்பை தடுக்கும் எனவும் ஒர் விடியோ பார்த்தேன் .

நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2025 at 13:22, நிலாமதி said:

அன்று சிரமதானம் மூலம் கோவில்களில் பாடசாலைகளில் துப்புரவு செய்தோம் . இன்று வெளிநாட்டு காசில் சுகபோகமாக வாழ்ந்து பழகி விடடார்கள் .எல்லாவற்றுக்கும் வெளிநாட்டு காசு வேண்டும். அது சிலரது பொக்கற்றுக்கு போவது வேறு கதை.

இன்று சிரமதானம் என்றால் என்ன என கேட்கும் நிலை..... நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

சுடலைக்கு செல்ல முடியவில்லை ஒரே முள்ளும் புதருமாக கிடக்கிறது

விலைபேசி ஒரு ஜேசிபி பிடித்து துப்பரவு செய்தால்

சிலபேர் திட்டி தீர்க்கிறார்கள் அது பிசிக்காரன் செய்வான்தானே உனக்கேன் தேவையில்லாத வேலை என்று

அதுகூட பரவாயில்லை என்றால்

பாவம் என்று ஒரு போத்தில் வாங்கி கொடுத்தவன் குடித்துவிட்டு அடுத்த தெருவில் போய் "சந்தணம் மிஞ்சினால் குண்டியில் பூசுவார்கள்" அதுபோல இந்த வெளிநாட்டு நாய்களுக்கு காசு மிஞ்சிவிட்ட்து அதுதான் சுடலையை கூடுறாங்கள் என்று பேசிவிட்டு போனானாம்.

இது எல்லாம் இங்கு எழுதுவதுடன் நிறுத்தி விடுங்கள் ஊரில் போய் குளம் துப்பரவு செய்யவேண்டும் என்று பேசினால் கொண்டுபோய் தெல்லிப்பளையில் விட்டு விடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, putthan said:

பனை மரம் நன்றாக நீரை தேக்கி வைத்திருக்கும் என்றும் அத்துடன் நில அரிப்பை தடுக்கும் எனவும் ஒர் விடியோ பார்த்தேன் .

மண் அரிப்பைத் தடுக்கும் என்பது நாங்கள் அங்கே கண்கூடாகவே பர்த்தது. என் ஊர் மிகவும் மணல் பாங்கானது. அங்கு கடற்கரை ஓரம் தென்னை மரங்களும், உள்ளே பனைமரங்களும் வளர்கின்றன. இந்த மரங்களின் நாருரி வேர்கள் அந்த மண்ணை அப்படியே சேர்த்தே வைத்திருக்கின்றன.

இவை நீரை எப்படி தேக்கி வைக்கின்றன என்று தெரியவில்லை. Word Wide Web என்பது போல Root Wide Web என்று மரங்களின் வேர்கள் பற்றிய ஒரு கட்டுரையை சில காலத்தின் முன் வாசித்திருக்கின்றேன். வேர்கள் முடிகின்றன என்று நாங்கள் நினைக்கும் புள்ளியிலிருந்து மைல்கள் நீளமான வேர்கள் நுண்ணுயிர்களால் ஆக்கப்படுகின்றன என்றும், அவை எப்படி தாய் மரத்துடன் கொடுத்தும், எடுத்தும் வாழ்கின்றன என்றும் அதில் இருந்தன. எங்களின் பனை, தென்னைக்கும் இந்த இயல்புகள் இருக்கின்றது போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 19/2/2025 at 04:15, putthan said:

இன்று புலம் பெயர் நாடுகளிலிருந்து கிடைக்கு பணம் போன்று அன்றைய காலத்தில் நிச்சயம் பணம் கிடைத்திருக்காது.இருந்தும்  உள்ளூர் மக்கள் சொந்த வருமானத்தில் இப்படியான செயல்களை செய்து உள்ளனர்

ஒரு 30,40 வருடங்களுக்கு முன்னர் ஊர் மக்களிடம் சிரமதான பணி எனும் நடைமுறை ஒன்று இருந்தது.குளங்கள்,ஏரிகள்,வாய்க்கால்கள்,ஏரிகள் என தூர்வாரும் செயல்கள் சிரமதான பணியாக ஊர்மக்களே சேர்ந்து செய்தார்கள். சிரமதான ஆட்களுக்கு ஊரில் இருப்பவர்களே ஒரு இடத்தில் ஒன்றுகூடி சமையல் சாமான்கள் கொண்டுவந்து சமைத்து சாப்பாடு கொடுப்பார்கள்.தனிமனித செலவுகளும் இருக்காது.

அப்பப்ப அரசாங்கத்தால நடத்தப்படும் சிரமதான வேலைகளுக்கு வண்டுகள் நிறைந்த கூப்பன் மாவும் புளுக்கள் நெளியும் கருவாடும் கொடுப்பது வேற விசயம்.cool

நல்லதொரு சிந்தனைப்பதிவு புத்தன் 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரசோதரன் said:

மண் அரிப்பைத் தடுக்கும் என்பது நாங்கள் அங்கே கண்கூடாகவே பர்த்தது. என் ஊர் மிகவும் மணல் பாங்கானது. அங்கு கடற்கரை ஓரம் தென்னை மரங்களும், உள்ளே பனைமரங்களும் வளர்கின்றன. இந்த மரங்களின் நாருரி வேர்கள் அந்த மண்ணை அப்படியே சேர்த்தே வைத்திருக்கின்றன.

இவை நீரை எப்படி தேக்கி வைக்கின்றன என்று தெரியவில்லை. Word Wide Web என்பது போல Root Wide Web என்று மரங்களின் வேர்கள் பற்றிய ஒரு கட்டுரையை சில காலத்தின் முன் வாசித்திருக்கின்றேன். வேர்கள் முடிகின்றன என்று நாங்கள் நினைக்கும் புள்ளியிலிருந்து மைல்கள் நீளமான வேர்கள் நுண்ணுயிர்களால் ஆக்கப்படுகின்றன என்றும், அவை எப்படி தாய் மரத்துடன் கொடுத்தும், எடுத்தும் வாழ்கின்றன என்றும் அதில் இருந்தன. எங்களின் பனை, தென்னைக்கும் இந்த இயல்புகள் இருக்கின்றது போல.

தென்னை மரத்தை விட பனை மரம் வலிமையானதும் வலைந்து கொடுக்க கூடியதாந்தும் என சொல்கின்றனர்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

ஒரு 30,40 வருடங்களுக்கு முன்னர் ஊர் மக்களிடம் சிரமதான பணி எனும் நடைமுறை ஒன்று இருந்தது.குளங்கள்,ஏரிகள்,வாய்க்கால்கள்,ஏரிகள் என தூர்வாரும் செயல்கள் சிரமதான பணியாக ஊர்மக்களே சேர்ந்து செய்தார்கள். சிரமதான ஆட்களுக்கு ஊரில் இருப்பவர்களே ஒரு இடத்தில் ஒன்றுகூடி சமையல் சாமான்கள் கொண்டுவந்து சமைத்து சாப்பாடு கொடுப்பார்கள்.தனிமனித செலவுகளும் இருக்காது.

அப்பப்ப அரசாங்கத்தால நடத்தப்படும் சிரமதான வேலைகளுக்கு வண்டுகள் நிறைந்த கூப்பன் மாவும் புளுக்கள் நெளியும் கருவாடும் கொடுப்பது வேற விசயம்.cool

நல்லதொரு சிந்தனைப்பதிவு புத்தன் 👍

நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

பொது நோக்குடன் உயிர் தியாகம் செய்த இளைஞர்கள் வாழ்ந்த மண்...

எமது அரசியல் சூழ்நிலை .எமது இருப்பின் பாதுகப்பு அற்ற நிலை ,எம் மண்ணை சுய இலாபத்துக்காக 800 வருடங்களுக்காக மேலாக ஆதிக்கம் செலுத்த முயலும் வெளி சக்திகள் போன்ற காரணங்கள் ....எமது பொது நோக்கு சிந்தனையை சிதைத்து வருகின்றது ...என நினைக்கிரேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

சுடலைக்கு செல்ல முடியவில்லை ஒரே முள்ளும் புதருமாக கிடக்கிறது

விலைபேசி ஒரு ஜேசிபி பிடித்து துப்பரவு செய்தால்

சிலபேர் திட்டி தீர்க்கிறார்கள் அது பிசிக்காரன் செய்வான்தானே உனக்கேன் தேவையில்லாத வேலை என்று

அதுகூட பரவாயில்லை என்றால்

பாவம் என்று ஒரு போத்தில் வாங்கி கொடுத்தவன் குடித்துவிட்டு அடுத்த தெருவில் போய் "சந்தணம் மிஞ்சினால் குண்டியில் பூசுவார்கள்" அதுபோல இந்த வெளிநாட்டு நாய்களுக்கு காசு மிஞ்சிவிட்ட்து அதுதான் சுடலையை கூடுறாங்கள் என்று பேசிவிட்டு போனானாம்.

இது எல்லாம் இங்கு எழுதுவதுடன் நிறுத்தி விடுங்கள் ஊரில் போய் குளம் துப்பரவு செய்யவேண்டும் என்று பேசினால் கொண்டுபோய் தெல்லிப்பளையில் விட்டு விடுவார்கள்

பல வேலைகளை புலம்பெயர் உறவுகள் செய்கின்றனர் ஆனால் அதை ஒர் பொது அரசியல் நோக்குடன் செய்யவில்லை போல தெரிகிறது

சத்தியமா செய்ய மாட்டேன் ....போத்தலை கண்டால் பிறகு குளத்தில் தண்ணீர் நிரப்ப ,துப்பரவு செய்ய வேண்டிய நில மாறி ,கிளாசில் தண்ணி நிரப்ப கிளாசை காலிசெய்ய தொடங்கி விடுவேன்...

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2025 at 09:55, ரசோதரன் said:

மழைநீரை அப்படியே கடலுக்குள் ஓடவிடும் பாதகமான நிலை இன்று பல நாடுகளிலும் நகர்ப்புற வளர்ர்சிகளின் பின் வந்துவிட்டது. நிலத்தடி நீரின் மட்டம் மிகவும் கீழே போய் சுத்தமான குடி தண்ணீருக்கு அலையும் மக்கள் தொகை ஒரு பெரிய தொகை என்ற தரவுகளும் இருக்கின்றன.

என்னுடைய அனுபவம்...ஊர் போனேன்....அங்கு சொந்த பந்தங்களின் விட்டுக்கு போனவுடன் கேட்பது ..தண்ணீர்தான்...குடித்துவிட்டு தண்ணீர் எங்காலான் நல்லாயிருக்கே என்றவுடன் உண்மைவரும்...1. வாங்கும் தண்ணீர், 2 ..எங்கள் கிணற்றுநீர்..... .விடை கிணற்று நீராக இருந்தால் மட்டுமே 2ம் 3ம் கிளாஸ் வங்கிகுடிப்பேன்...இலஐயெனில் என் தாகத்தை அடக்கிவிடுவேன்.....நமது 45 அடி ஆழ வெட்டுக்கிணறுகள்.. எல்லாமே நன்னீர் கிணறுகள்... பாழடையவிட்டு கம்பிவலையால்மூடப்பட்டுள்ளன..வீட்டுகு ஒவ்வொரு குழாய் கிணறு....அவை அடிகப்பட்ட ஆழம் 150 அடிவரை...நன்னீரோட்டம் 45 அடிதான் ...150 அடியில் என்னென்று நன்னீர் கிடைக்கும்...இதற்குத் தீர்வுதான் காசுத் தண்ணீர்...வாழ்க்கைசெலவின் கஸ்டத்தின் மத்தியில் தண்ணீருக்கு மேலதிக செலவு...செலவைக் கட்டுப்படுத்த தண்ணீர் குடிப்பதையே கட்டுப்படுத்துகிறார்கள்.. இதனால் வருத்தங்களும் கூடுகின்றது....இந்த வாழ்க்கைமுறை எதனால் வந்தது.....இப்படிப் பல

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2025 at 22:15, putthan said:

கோயில்கள்,பாடசாலைகள் எல்லாம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், தேவைகளை இப்பொழுது வாழும் மக்கள் மறந்துவிட்டனர் போல உள்ளது .

உண்மை தான் புத்தன்.

அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் சிந்தித்து செயல்பட்டார்கள் என்று இப்போதும் ஆராய்கிறார்கள்.

சிலசில கோவில்கள் கட்டப்பட்ட முறைகள் சிற்பங்கள் இப்போதும் ஆஆவென்று பார்க்க வைக்கிறது.

ஒரு அரசன் எப்படி சிந்தித்து என்னென்ன செய்திருப்பான் என்பதை ஒவ்வொன்றாக விலாவாரியாக எழுதியுள்ளீர்கள்.

இதற்கும் ஒரு கெட்டித்தனம் வேணும் புத்தன்.

பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவசியமான பதிவு putthan. 👏

என் நண்பன் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் வேலை செய்கிறான். யாழ்நிலத்தடிநீர் நிலைமைகளைப் பற்றி அவன் கதைக்கத் துவங்கினால் மிகவும் மனவருத்தமாக இருக்கும். சில்லறை அரசியல் ஆதாயங்களுக்காகவும் தொலைநோக்கில்லாத சுயநலநோக்கங்களுக்காகவும் எம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ தவறான செயற்பாடுகளில் ஈடுபடுவதால் எமது வருங்கால சமுதாயம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இப்போதெல்லாம் குடிநீர் எல்லாருக்கும் உரிய வளமாக இல்லாது வியாபாரப் பொருளாகி விட்டுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

முன்பு கண்டுகொள்ளாமல் விட்ட சில விடயங்கள், வயசு போக போக தான் அதன் முக்கியத்துவம் தெரிய வருகிறது ...

உண்மை கோவில் சிற்பங்கள் ,எமக்கு சில புரிவதில்லை ஆனால் அதை சில தமிழக இளைஞர்கள் நன்றாக் ஆர்ச்சி செய்து விள்க்கம் கொடுக்கின்றனர் ....

பல கோவில்கள் இடிக்கப்பட்டும் இருக்கின்றன ..அதன் கல்வெட்டுக்கள் எழுதிய கற்களை வீதி பாலம் அமைக்க பாவித்துள்ளார்கள்...

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்

14 hours ago, villavan said:

அவசியமான பதிவு putthan. 👏

என் நண்பன் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் வேலை செய்கிறான். யாழ்நிலத்தடிநீர் நிலைமைகளைப் பற்றி அவன் கதைக்கத் துவங்கினால் மிகவும் மனவருத்தமாக இருக்கும். சில்லறை அரசியல் ஆதாயங்களுக்காகவும் தொலைநோக்கில்லாத சுயநலநோக்கங்களுக்காகவும் எம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ தவறான செயற்பாடுகளில் ஈடுபடுவதால் எமது வருங்கால சமுதாயம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இப்போதெல்லாம் குடிநீர் எல்லாருக்கும் உரிய வளமாக இல்லாது வியாபாரப் பொருளாகி விட்டுது.

தமிழ் நாட்டில் மழைத்தண்ணீரை குழாய்கிணற்றுக்குள் அனுப்பும் சில பொறிமுறைகளை அறிமுக படுத்தியுள்ளனர் ...

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் ..

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, alvayan said:

என்னுடைய அனுபவம்...ஊர் போனேன்....அங்கு சொந்த பந்தங்களின் விட்டுக்கு போனவுடன் கேட்பது ..தண்ணீர்தான்...குடித்துவிட்டு தண்ணீர் எங்காலான் நல்லாயிருக்கே என்றவுடன் உண்மைவரும்...1. வாங்கும் தண்ணீர், 2 ..எங்கள் கிணற்றுநீர்..... .விடை கிணற்று நீராக இருந்தால் மட்டுமே 2ம் 3ம் கிளாஸ் வங்கிகுடிப்பேன்...இலஐயெனில் என் தாகத்தை அடக்கிவிடுவேன்.....நமது 45 அடி ஆழ வெட்டுக்கிணறுகள்.. எல்லாமே நன்னீர் கிணறுகள்... பாழடையவிட்டு கம்பிவலையால்மூடப்பட்டுள்ளன..வீட்டுகு ஒவ்வொரு குழாய் கிணறு....அவை அடிகப்பட்ட ஆழம் 150 அடிவரை...நன்னீரோட்டம் 45 அடிதான் ...150 அடியில் என்னென்று நன்னீர் கிடைக்கும்...இதற்குத் தீர்வுதான் காசுத் தண்ணீர்...வாழ்க்கைசெலவின் கஸ்டத்தின் மத்தியில் தண்ணீருக்கு மேலதிக செலவு...செலவைக் கட்டுப்படுத்த தண்ணீர் குடிப்பதையே கட்டுப்படுத்துகிறார்கள்.. இதனால் வருத்தங்களும் கூடுகின்றது....இந்த வாழ்க்கைமுறை எதனால் வந்தது.....இப்படிப் பல

இது உண்மையான தகவலா?

நான் ஒரு கிணறு அடிக்கவேண்டும் ... பல இடங்களில் தண்ணீர் குடிக்கும்போது ஒரு சேற்று மணம் வருகிறது முன்பு அப்படி இருந்ததில்லை. ஏன் என்று கேட்க்கும்போது குழாய் ஆழமாக இறக்கப்படவில்லை 75 அடிக்கு இறக்கினால்தான் சேற்று மணம் இருக்காது என்று சொன்னார்கள். நானும் ஓகே அப்போ 75 அடியில் அடிக்கலாம் என்று இருந்தேன் ... நீங்கள் இப்போ இப்படி சொல்கிறீர்கள். கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது

  • 1 month later...

சும்மா பதிந்தாலும் சிந்திக்க வைக்கும் பதிவு.

இன்று அரசாங்கம் என்ற சிக்கலான கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதிலேயே அதிக பிரயத்தனம் செய்யவேண்டியுள்ளது.

இன்றைய தொழில்நுட்ப வசதிகளால் நீரை வேறு வழிகளில் சேமிக்கவும் இலகுவாக சிக்கனமாகப் பயன்படுத்தவும் வழிகள் உள்ளன. ஆனால் சரியான அறிவூட்டல் இல்லாமையும் சனத்தொகைப் பெருக்கமும் நீர்ப்பஞ்சத்தை உருவாக்குகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

சும்மா பதிந்தாலும் சிந்திக்க வைக்கும் பதிவு.

இன்று அரசாங்கம் என்ற சிக்கலான கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதிலேயே அதிக பிரயத்தனம் செய்யவேண்டியுள்ளது.

இன்றைய தொழில்நுட்ப வசதிகளால் நீரை வேறு வழிகளில் சேமிக்கவும் இலகுவாக சிக்கனமாகப் பயன்படுத்தவும் வழிகள் உள்ளன. ஆனால் சரியான அறிவூட்டல் இல்லாமையும் சனத்தொகைப் பெருக்கமும் நீர்ப்பஞ்சத்தை உருவாக்குகிறது.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் இணையவன் ...உண்மை ...சரியான அறிவூட்டல் இல்லாத காரணத்தால் தான் இந்த பிரச்சனை ...அறிவு இருந்தும் அதை கடைப்பிடிப்பதில்லை சிலர் ..மேலும் தமிழகத்தில் சில நல்ல திட்டங்கள் உண்டு அதை தாயகத்தில் அமுல் படுத்தினால் சிறப்பாக இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2025 at 07:21, Maruthankerny said:

இந்த வெளிநாட்டு நாய்களுக்கு காசு மிஞ்சிவிட்ட்து அதுதான் சுடலையை கூடுறாங்கள்

தங்களின் இடத்தை சுத்தமாக வைத்திருக்க தெரியாதவர்கள், சும்மா நித்திரை கொண்டுவிட்டு, வேலை செய்பவனை பார்த்து இப்படி கூறினால், தங்கள் தப்பு மறைந்துவிடுமென நினைக்கிறார்கள், அற்பங்கள். இதுகள் வெளிநாட்டுக்கு போனாலும் உழைக்க மாட்டார்கள். வெளிநாட்டில் சும்மா பணம் அள்ளிக்கொட்டுகிறார்கள் என சிலர் நினைத்து கதையளப்பர். அவர்களின் அறிவு அவ்வளவு மந்தமானது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.