Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு - மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

31 Mar, 2025 | 05:07 PM

image

யாழ்ப்பாண பல்கலைக்கழக  விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி , சித்திரவதை புரிந்தமையால் மாணவனின் காது கேட்கும் திறன் குறைவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

மகன் மீதான தாக்குதல் சம்பவம் மற்றும் சித்திரவதை ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ,  மகனின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் மாணவனின் தந்தை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவன், நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 27 ஆம் திகதி வியாழக்கிழமை பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து சென்று  கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து அம்மாணவனையும் வேறு சில புதுமுக மாணவர்களையும் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கிய சிரேஷ்ட மாணவர்கள், தலைக்கவசத்தாலும் தாக்கியுள்ளனர்.

தாக்குதல் காரணமாக மயக்கமடைந்த மாணவனுக்கு கட்டாயப்படுத்தி பனடோல் பருக கொடுத்து,  தனியார் விடுதியிலிருந்து துரத்தி விட்டுள்ளனர்.

பின்னர், குறித்த மாணவன் கூகுள் வரைபட உதவியுடன் தனது பல்கலைக்கழக விடுதிக்குச் சென்று அங்கிருந்து அம்புலன்ஸ் மூலமாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

தாக்குதல் மற்றும் சித்திரவதைக்குள்ளான நாத்தாண்டியா பகுதியை சேர்ந்த மாணவன் ஒரு காது கேட்கும் திறனை இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக நீதியானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உடலளவிலும், உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட தனது மகனுக்குப் பாதுகாப்பளிக்குமாறும் கோரியுள்ள தந்தை, பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு - மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Virakesari.lk

எவ்வளவோ சவால்களுக்கு மத்தியில் படித்து, பல்கலைக்கழக அனுமதி பெற்று படிக்க வரும் சக மாணவர்களை பகிடிவதை எனும் பெயரில் சித்திரவதை செய்யும் இந்த காட்டுமிராண்டிகள் தான் நாளைக்கு மருத்துவர்களாகவோ, வழக்கறிஞர்களாகவோ, ஆசிரியர்களாகவோ சமூகத்தில் வலம்வரப் போகின்றனர். அல்லது, அரச வேலை தா என்று அரசிடம் பிச்சை எடுக்க போகின்றனர்.

எத்தனை அரசுகள், கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் திருந்தாத காட்டுமிராண்டிக் கூட்டங்களைத் தான் இலங்கை கல்வி அமைப்பு உற்பத்தி செய்து அனுப்புகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

அங்கு வைத்து அம்மாணவனையும் வேறு சில புதுமுக மாணவர்களையும் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கிய சிரேஷ்ட மாணவர்கள், தலைக்கவசத்தாலும் தாக்கியுள்ளனர்.

நம்பவே முடியவில்லை.

இவர்களுக்காகவே பிஸ்டல்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

போதை தான் காரணமாக இருந்திருக்கும்.

நிர்வாகம் இதற்கு என்ன செய்கிறது?சொல்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

எவ்வளவோ சவால்களுக்கு மத்தியில் படித்து, பல்கலைக்கழக அனுமதி பெற்று படிக்க வரும் சக மாணவர்களை பகிடிவதை எனும் பெயரில் சித்திரவதை செய்யும் இந்த காட்டுமிராண்டிகள் தான் நாளைக்கு மருத்துவர்களாகவோ, வழக்கறிஞர்களாகவோ, ஆசிரியர்களாகவோ சமூகத்தில் வலம்வரப் போகின்றனர். அல்லது, அரச வேலை தா என்று அரசிடம் பிச்சை எடுக்க போகின்றனர்.

எத்தனை அரசுகள், கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் திருந்தாத காட்டுமிராண்டிக் கூட்டங்களைத் தான் இலங்கை கல்வி அமைப்பு உற்பத்தி செய்து அனுப்புகின்றது.

பகிடி வதையால்….. மாணவ, மாணவிகள் தற்கொலை செய்த சம்பவங்களும் உண்டு. அப்படி இருந்தும் இன்னும் இதனை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கின்றார்கள் வருங்கால தூண்கள்.

அத்துடன் சோதனை முடிந்த கடைசி நாளில்… சட்டையில் மை அடிப்பதும், பாடசாலை பொருட்களை அடித்து உடைக்கும் செயல்களையும் சிலர் செய்கின்றார்கள்.

ஜேர்மனி பல்கலைக்கழகங்களில்… பகிடி வதைகள் இல்லை. இங்கிலாந்தில் இருந்து இது இலங்கை, இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என நினைக்கின்றேன்.

கேட்கும் திறனை இழக்க வைத்த மாணவர்களை பல்கலைக் கழகத்தில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றி விட வேண்டும். அப்போதான்… மற்றவர்களுக்கு புத்தி வரும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

நம்பவே முடியவில்லை.

இவர்களுக்காகவே பிஸ்டல்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

போதை தான் காரணமாக இருந்திருக்கும்.

நிர்வாகம் இதற்கு என்ன செய்கிறது?சொல்கிறது?

இல்லை! இத்தகைய "பகிடிவதைகள்" என்ற பெயரில் நிகழும் வக்கிரங்களுக்கு போதை அவசியமில்லை. புதிய மாணவர்களை பகிடியாகக் கலாய்த்து வரவேற்று அவர்களை சமூகத்தினுள் உள்வாங்க என்று மேற்கு நாடுகளில் உருவான முறைகளை, எங்களுடைய ஆசியத் தரத்திற்கு மாற்றி உள்வாங்கியிருக்கிறார்கள்.

இந்த இடத்தில் பேச்சு வாங்கினாலும் பரவாயில்லையென்று ஒன்று சொல்ல வேண்டும்: நான் அவதானித்த வரையில், சிங்களப் பகுதிகளில் சிங்கள மாணவர்கள் செய்யும் பகிடிவதையை விட தமிழ் மாணவர்கள் செய்யும் பகிடி வதைகள் மிகக் கேவலமானவையாக இருக்கும். இப்படியான ஒரு வன்முறை கலந்த பகிடிவதையின் போது தான் வரப்பிரகாஷ் என்ற பேராதனை மாணவன் சிறு நீரகம் செயலிழந்து இறந்தான். அந்தப் பகிடி வதை செய்த பிரதான நபர், வரப்பிரகாஷின் நிலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மோசமாகிறது என்று தெரிந்த காலையிலேயே சிங்கப்பூர் சென்று அங்கிருந்து பின்னர் கனடா குடிபெயர்ந்து இப்போது அங்கே பெரிய முதலாளியாக இருக்கிறார். பக்கத்தில் வேடிக்கை பார்த்து நின்ற சிலர் (இவர்கள் தடுத்திருக்க வேண்டும், எனவே கூட்டுப் பொறுப்பாளிகள் தான்!), வரப்பிரகாஷ் கொலைக்காக சிறை சென்று வந்தனர்.

இந்த வன்முறையாளர்களை பல்கலையை விட்டு நீக்கி விடுவது தான் ஏனையோர் இத்தகைய வன்முறைகளை நினைத்தும் பார்க்க இயலாமல் செய்யும் ஒரே வழி!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கேட்கும் திறனை இழக்க வைத்த மாணவர்களை பல்கலைக் கழகத்தில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றி விட வேண்டும். அப்போதான்… மற்றவர்களுக்கு புத்தி வரும்.

இதன் வலி எனக்கு நன்றாக தெரியும் அதாவது காது கேட்கவில்லை என்றால் .....இதை செய்தவர்கள் நற் சான்றிதழ் கள். சிவப்பு கேடுகள் அடிக்க வேண்டும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பெற முடியாமல் தவிர்க்க வேண்டும் அப்போ தான் எதிர்காலத்தில் இப்படியான நிகழ்வுகள் நடைபெறாது.....

  • கருத்துக்கள உறவுகள்

கைதடியில். மருத்துவ பீடம். இருந்தது அங்கு வந்த முதலாவது ஆண்டு மாணவர்கள்

அங்கே படித்த மூன்றாவது அல்லது நான்காவது வருட புங்குடுதீவு மாணவன் பெயர் செல்வரட்ணம் .. ரக்கிங். செய்தார் அனைத்து புதிய மாணவ்களையும். இரண்டு கைகளையும். மேலே உயர்த்தி கொண்டு பல்கலைகழகத்திலிருந்து பஸ் தரிபிடம். மட்டும் நடக்க வைத்தார் அவர் அதை மேற்பார்வை செய்தார் கைதடி மக்கள் அதிசயமாய் பார்த்து கொண்டு இருந்தார்கள் மண்வெட்டி. கடகம் எல்லாவற்றையும் நிலத்தில் போட்டுவிட்டு,....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்த வன்முறையாளர்களை பல்கலையை விட்டு நீக்கி விடுவது தான் ஏனையோர் இத்தகைய வன்முறைகளை நினைத்தும் பார்க்க இயலாமல் செய்யும் ஒரே வழி!

வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் ஊடாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கையில் புத்த பகவானின் தர்ம‌ போதனைகளையும் மறு கையில் தூப்பாக்கி வைத்து தர்மத்தை காப்பற்றும் சிறிலங்காவிலா இது நடந்தது நம்ப முடியவில்லை ...

1977 ஆம் ஆண்டு யாழ் பல்கலைகழகத்திலிருந்து சென்ற புத்திஜீவி சிங்கள மாணவர்கள் சிங்கள பகுதியில் செய்த தமிழர் விரோத பிரச்சாரங்களையும் மறந்து விடமுடியாது ....(1977 ஆம் ஆண்டு இனக்கலவர்த்திற்கு மேலும் வலு சேர்த்த விடயங்களில் இதுவும் ஒன்று)

இதையும் நாங்கள் சொல்லத்தான் வேணும் யாரவது திட்டி எழுதினாலும் பிரச்சனை இல்லை சொல்ல வேண்டியதை சொல்லத்தான் வேணும் ...

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சக மாணவனை சித்திரவதை செய்து என்ஜோய் பண்ணுகின்ற காட்டுமிராண்டிகள் படிக்கின்ற நாட்டில் நல்ல பொலிஸ் இராணுவத்தை மட்டும் எப்படி எதிர்பார்க்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இப்படி சக மாணவனை சித்திரவதை செய்து என்ஜோய் பண்ணுகின்ற காட்டுமிராண்டிகள் படிக்கின்ற நாட்டில் நல்ல பொலிஸ் இராணுவத்தை மட்டும் எப்படி எதிர்பார்க்க முடியும்.

என்னுடைய நண்பன் (பேராதனை இஞ்ஞினியர்) நகைச்சுவையாக ஒன்று சொன்னான்.. சனத்தொகையில் 2 வீதம் தான் பல்கலைகழகம் போராங்கள் அதில் அரைவாசிக்கு மேல‌ வெளி நாட்டுக்கு போய்விடுவாங்கள் ...

98% வீதம் தான் நாட்டை வழி நடத்துகள் என்று....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான பகிடி வதைகளை செய்து ஊக்குவித்தவர்கள்/ தொடர வழி வகுத்தவர்கள் அன்றைய பழைய மாணவர்கள் தான்.அன்றைய பழைய மாணவர்கள் அன்றே நினைத்திருந்தால்/மாற்று நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இன்று இந்த நிலைமைகள் வந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

புதுமுக மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை

01 APR, 2025 | 03:15 PM

image

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிரஜன் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக உட்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

எமது பீடத்தைச் சேர்ந்த புதுமுக மாணவன் ஒருவர் சிரேஷ்ட மாணவர்களால் தாக்கப்பட்டமை தொடர்பில் நாம் மிகுந்த வருத்தமடைகின்றோம். 

சம்பவம் தொடர்பாக அறிந்தவுடன் பல்கலைக்கழக சட்ட நிறைவேற்று அதிகாரி, மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருடன் நானும் வைத்தியசாலைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவனை நேரில் பார்வையிட்டதுடன், வைத்திய நிபுணர்களிடமும் கலந்துரையாடினோம்.

பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரிடமிருந்தும், மாணவனிடமிருந்தும் பெறப்பட்ட முதற்கட்டத் தகவலின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும். 

இரண்டாம் வருடத்தைச் சேர்ந்த நான்கு சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கமைய மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பகிடிவதை மற்றும் மாணவர் ஒழுக்காற்று நடைமுறைகள் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை, பல்கலைக்க்கழக உபவிதிகளுக்கு அமைய, கிடைக்கப்பெறும் விசாரணைக்குழுவின் பரிந்துரைகள் பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் ஊடாகப் பேரவைக்குச் சமர்ப்பிக்கப்படும். பேரவைத் தீர்மானத்துக்கமைய குற்றமிழைத்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சம்பவம் பல்கலைக்கழகத்துக்கு வெளியே இடம்பெற்றிருப்பதனால் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை வழங்கிய முறைப்பாடுகளுக்கமைய பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பல்கலைக்கழகம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.

https://www.virakesari.lk/article/210841

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2025 at 09:25, நிழலி said:

எவ்வளவோ சவால்களுக்கு மத்தியில் படித்து, பல்கலைக்கழக அனுமதி பெற்று படிக்க வரும் சக மாணவர்களை பகிடிவதை எனும் பெயரில் சித்திரவதை செய்யும் இந்த காட்டுமிராண்டிகள் தான் நாளைக்கு மருத்துவர்களாகவோ, வழக்கறிஞர்களாகவோ, ஆசிரியர்களாகவோ சமூகத்தில் வலம்வரப் போகின்றனர். அல்லது, அரச வேலை தா என்று அரசிடம் பிச்சை எடுக்க போகின்றனர்.

எத்தனை அரசுகள், கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் திருந்தாத காட்டுமிராண்டிக் கூட்டங்களைத் தான் இலங்கை கல்வி அமைப்பு உற்பத்தி செய்து அனுப்புகின்றது.

நிழலி இதை வாசித்து நான் விழுந்து விழுந்து சிரித்தேன் ........

உங்களுக்கு ஞாபகத்தில் இருக்க வாய்ப்பில்லை ( அதிகார வர்க்க சிந்தனை உள்ளவர்களுக்கு இருக்கும் ஒரு சாதாரண இயல்புதான்)

இப்படி முன்பு நான் ஒரு திரியில் எழுதியபோது ... அதில் சிலரை காப்பாற்ற வேண்டும் என்று நீங்கள் ஓடி வந்து எனது கருத்துக்களை நீக்கினீர்கள். நான் எழுதாதவற்றை எழுதியதாக நீங்களே எழுதினீன்றக்ள். நான் எங்கே இப்படி எழுதி இருக்கிறேன் என்று கேட்டு எழுதியதை கூட நீக்கினீர்கள்.... பின்பு நான் எழுதிய அப்படியே குவாட் செய்தேன் அதையும் நீக்கினீர்கள்.

இன்று பெரிய சமத்துவ விரும்பியாக அதையே நீங்கள் எழுதுகிறீர்கள்.

மிக சிரிப்பாக இருக்கிறது........... அரசியல்வாதிகள் பற்றியும் ... வல்லாதிக்க அரசுகள் பற்றியும் நாம் கவலை அடைய பெரிதாக என்ன இருக்க போகிறது?

உங்கள் நிர்வாகம் ...

உங்கள் தளம் ...

உங்கள் ஆதிக்கம் ...

இதில் எனக்கென்ன வேலை? என்றுவிட்டு கடந்து விடுகிறேன்

ஆதிக்க சிந்தனை என்பது ஒருவனுக்கு திடீரென வருவதில்லை சிறுவயதில் இருந்து அவனது மூளை உள்வாங்கிய எண்ணங்கள் உள்ளுக்குள்ளேயே இருக்கும். அவனுக்கு சாதகம் இல்லாத இடங்களிலும் தன்னை சமத்துவ விரும்பியாக காட்டிட முனையும் தருணங்களிலும் கஸ்டரபட்டு தன்னை மறைத்து கொள்வான். தருணம் கிடைக்கும்போது இப்படி தலை கவசத்தால் கூட தாக்குவதற்கு தயங்க மாட்டான்.

இன்று மேற்கு நாடுகளில் குறிப்பாக அமெரிக்க இத்தாலி போலந்து கங்கேரி நாடுகளின் அரசுகள் சாதகமாக இருப்பதால் வெள்ளை தோல் நிற ஆதிக்கம் என்பது மெல்ல மெல்ல மேல் எழும்ப தொடங்கி இருக்கிறது. ஒரு உதாரணத்திற்காக எழுதுகிறேன் தென் ஆப்ரிக்காவிற்கு எலன் மாஸ்கின் தாத்தா குடிபெயர காரணமே அங்கு கறுப்பினத்தவர்கள் அடிமைகள் ஆக்கப்பட்டு வெள்ளையர்கள் ஆதிக்கத்தின் கீழ் தென் ஆப்ரிக்க இருந்ததுதான் அவரின் இனதுவேஷ சிந்தனை எண்ணம் எல்லாம் அப்படியே அவர் மகனுக்கு தாவியது பின்பு அவர் பேரனுக்கும் தாவியது .... எலன் மாஸ்க் சிறுவயதில் கல்வி கற்ற தனியார் பாடசாலையில் நாசிகளின் சலூட் உடன்தான் வகுப்புகளேஆரம்பம் ஆகி இருக்கிறது. இவ்வளவு காலமும் இதனை தன்னுள் மறைத்து வைத்திருந்தவர் ... இப்போது மெதுவாக தன் சொந்த முகத்தை காட்டுகிறார். இதை நன்கு அறிந்துகொண்ட இஸ்திரேலிய மொஸாட் இவரை பண பலத்தால் மிக நுட்பமாக கையாண்டு வருகிறது. ஆக்டொபர் ௭ முன் அவர் கூறிவந்த வாக்கியங்களும் பின்பு காசா போர் உச்சம் அடைந்த போது அவரை இஸ்திரேலுக்கு அழைத்தது குழை அடித்த பின்பு அவரின் வார்த்தைகளும் நேர் எதிரானவை. இதை செய்திகளை வாசிப்பவர்கள் கவனித்து இருப்பார்கள். இப்போ காமாஸ் கடத்தி சென்றவர்களை விடுவிக்க வேண்டும் என்று ஒரு பேண்ட் ஒன்றை கையில் போட்டு கொண்டு திரிகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2025 at 14:48, putthan said:

ஒரு கையில் புத்த பகவானின் தர்ம‌ போதனைகளையும் மறு கையில் தூப்பாக்கி வைத்து தர்மத்தை காப்பற்றும் சிறிலங்காவிலா இது நடந்தது நம்ப முடியவில்லை ...

1977 ஆம் ஆண்டு யாழ் பல்கலைகழகத்திலிருந்து சென்ற புத்திஜீவி சிங்கள மாணவர்கள் சிங்கள பகுதியில் செய்த தமிழர் விரோத பிரச்சாரங்களையும் மறந்து விடமுடியாது ....(1977 ஆம் ஆண்டு இனக்கலவர்த்திற்கு மேலும் வலு சேர்த்த விடயங்களில் இதுவும் ஒன்று)

இதையும் நாங்கள் சொல்லத்தான் வேணும் யாரவது திட்டி எழுதினாலும் பிரச்சனை இல்லை சொல்ல வேண்டியதை சொல்லத்தான் வேணும் ...

On 31/3/2025 at 09:36, ஈழப்பிரியன் said:

நம்பவே முடியவில்லை.

இவர்களுக்காகவே பிஸ்டல்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

போதை தான் காரணமாக இருந்திருக்கும்.

நிர்வாகம் இதற்கு என்ன செய்கிறது?சொல்கிறது?

இந்த திரியில் பல சாத்தான்கள் வேதம் ஓதி இருக்கின்றன ....

இங்கு யாழ்களத்தில் கருத்து எழுதும் சக கருத்தாளர்களை மிக கேவலமான முறையில் வசைபாடியும் தாங்கள் அறிவு மிகுந்தவர்கள் மற்றவர்கள் யாபேரும் அறிவற்றவர்கள் என்ற தொனியிலும் ஒரு ஆதிக்க வெறியில் மிதந்தவர்கள் ....... யாழ் பல்கலைகழகத்தில் தங்கள் சகோதரனுக்கு புத்தி கூறுகிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன்.

ஆதிக்க வெறி என்பதோ .... ஆதிக்க சிந்தனை என்பதோ ... அடுத்தவன் தாழ்ந்தவன் எனும் அடிப்படை எண்ணமோ திடீரெனெ யாருக்கும் வருவதில்லை. அவை எல்லாம் உள்ளேயே இருக்கும் இப்படி சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது தலை கவசத்தை தூக்கி சொந்த முகத்தை காட்டி விடுகிறார்கள் அவ்வளவுதான்.

அவ்வளவு நாகரீமான பண்பான சமூக யாழ்பாணத்து மக்கள் இருந்து இருப்பின் அவ்வளவு சாதி கொடுமைகளும் எப்படி அரங்கேறின? இதே யாழ் பல்கலைக்கு பல தடைகளை தாண்டி தகுதி பெற்று வந்த கீழ்சாதி மாணவர்கள் (குறிப்பாக மாணவிகள்) வாடகைக்கு வாசித்த வீடுகளில் இருந்து துரத்தப்பட்டு ... சக மாணவர்களின் சொல்லாடல்கள் மன அழுத்தம் கொண்டு இடையிலேயே கல்வியை நிறுத்திவிட்டு சென்று இருகிறார்கள்.

இன்றுகாலைதான் "புதிய ஆரம்பம்" என்று கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அவர்கள் எழுதி இந்த யாழ்களத்தில் பதிந்த கதையை வாசித்தேன். பல நினைவுகள் எனக்கு அதை வாசிக்கும்போது வந்து சென்றது அந்த கதையின் கீழ் ஒரு நிகழ்வை எழுதவேண்டும் என்று இருந்தேன் ... இப்போ இந்த திரி கண்ணில் பட்ட்து. குதிரை வேகத்தில் வந்திறங்கிய சாத்தான்களை பார்த்ததும் எனக்கு எந்த வியப்பும் இல்லை அவர்கள் ஆதி முதல் அந்தம் வரை என்னால் புரிய முடியும் என்பதால்.

இதை பல்கலைக்கழகத்தில் சரி செய்தால் பகிடிவத்தைத்தான் முடியும். அது ஒரு தீர்வாகி விடும் என்று இங்கு பலரும் எண்ணுகிறார்கள்.

அனால் இந்த பகிடிவதையோ ஆதிக்க எண்ணமோ முடியபோவிதில்லை.... அது வேலை தளம் வரை நீளும் இவர்களே பின்பு ஆசிரியர்கள் மருத்துவர்கள் கிராம அபிவிருத்தி அதிகாரிகளாக வருவார்கள் இப்போ இவர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தலைக்கவசம் கம்பு தடிகள்தான் ... பின்பு அதிகாரம் பதவி போன்ற பெரும் ஆயுதங்கள் சிக்கிக்கொள்ளும். அப்போது இவர்களிடம் சிக்கிப்போகும் சக பணியாளர்கள் மக்கள் நோயாளிகள் பற்றி கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்?

நிறைய எழுதலாம் .......... இவை எல்லாம் யாழ் களத்தில் தங்குமா என்று தெரியவில்லை. குறித்த நிர்வாகத்தினர் கண்ணில் பட்ட்தும் நீக்கப்பட்டு விடும் என்றே எண்ணுகிறேன். இவற்றை நாம் எழுதமுடியாது ... சமரசம் பற்றி வேதம் பற்றி எழுதுவது என்றாலும் அது சாத்தான்களுக்கான உரிமையே!

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Maruthankerny said:

அவை எல்லாம் உள்ளேயே இருக்கும் இப்படி சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது தலை கவசத்தை தூக்கி சொந்த முகத்தை காட்டி விடுகிறார்கள் அவ்வளவுதான்.

சிறந்த உதாரணம் 1983 இல் வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்த‌ படுகொலை ....சிறைக்கைதிகளே....

இரண்டு பகுதியினரும் சிறைக் கைதிகள் ...

இதற்கும் சிலர் விளக்கம் கொடுக்கலாம் தமிழ் சிறைக்கைதிகளை ,சிங்கள சிறைகைதிகள் காப்பாற்றவில்லை என்றால் இன்னும் நிலமை படு மோசமாக போயிருக்குமென்று...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

சிறந்த உதாரணம் 1983 இல் வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்த‌ படுகொலை ....சிறைக்கைதிகளே....

இரண்டு பகுதியினரும் சிறைக் கைதிகள் ...

நான் அறிந்தது சிறைச்சாலையில் சிங்கல சிறை கைதிகள் தமிழ் சிறை கைதிகளை படு கொலை செய்தனர்

சிங்களவர்கள் தமிழ் மக்கள் மீது படுகொலைகள் தமிழர்கள் வீடு எரித்தல் நடத்தி இருக்கின்றார்கள்

படிக்க வந்த புதிய மாணவர்களை சித்திரவதை செய்து இன்பம் அடையும் யாழ்பாணத்து பல்கலைகழக மாணவ காட்டுமிராண்டிகள் அவர்களைவிட ஒன்றும் மேலனவர்கள் இல்லை. இந்த மாணவ காட்டுமிராண்டிகளிடம் பெரும்பான்மை அல்லது அதிகாரம் இருந்தால் சிங்களவர்கள் தமிழர்களுக்கு செய்த அதே கொடுமைகளை தான் செய்வார்கள்

16 hours ago, Maruthankerny said:

நிழலி இதை வாசித்து நான் விழுந்து விழுந்து சிரித்தேன் ........

உங்களுக்கு ஞாபகத்தில் இருக்க வாய்ப்பில்லை ( அதிகார வர்க்க சிந்தனை உள்ளவர்களுக்கு இருக்கும் ஒரு சாதாரண இயல்புதான்)

இப்படி முன்பு நான் ஒரு திரியில் எழுதியபோது ... அதில் சிலரை காப்பாற்ற வேண்டும் என்று நீங்கள் ஓடி வந்து எனது கருத்துக்களை நீக்கினீர்கள். நான் எழுதாதவற்றை எழுதியதாக நீங்களே எழுதினீன்றக்ள். நான் எங்கே இப்படி எழுதி இருக்கிறேன் என்று கேட்டு எழுதியதை கூட நீக்கினீர்கள்.... பின்பு நான் எழுதிய அப்படியே குவாட் செய்தேன் அதையும் நீக்கினீர்கள்.

இன்று பெரிய சமத்துவ விரும்பியாக அதையே நீங்கள் எழுதுகிறீர்கள்.

மிக சிரிப்பாக இருக்கிறது........... அரசியல்வாதிகள் பற்றியும் ... வல்லாதிக்க அரசுகள் பற்றியும் நாம் கவலை அடைய பெரிதாக என்ன இருக்க போகிறது?

உங்கள் நிர்வாகம் ...

உங்கள் தளம் ...

உங்கள் ஆதிக்கம் ...

இதில் எனக்கென்ன வேலை? என்றுவிட்டு கடந்து விடுகிறேன்

உண்மைதான்

சிறுமிகளின் மீதான பாலியல் வன்முறை, பெண்களின் மீதான பாலியல் வன்முறை போன்றவற்றை சுற்றி வளைத்தும், சிவப்பு நிறம் தீட்டி ஆதரித்தும் நீங்கள் எழுதும் கருத்துகளை நீக்கியதும், நீங்கள் எழுதிய அவ்வாறான கருத்துகளுக்கு எதிராக எழுதிய கருத்துகளை நீங்கள் மறைக்குமாறு கேட்டும் அவற்றை மறைக்காமல் விட்டதும் உண்மைதான். ஏனெனில் சிறுமிகள் / பெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பதை எக்காரணம் கொண்டும் நானோ அல்லது என்னைப் போன்றே நடந்து கொள்ளும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களோ அனுமதிக்கப் போவதில்லை.

இனியும் அவ்வாறுதான் நடந்து கொள்வோம். அத்துடன் இந்த என் பதிலுக்கு பின்னூட்டம் இடுகின்றேன் என்ற ரீதியில் மீண்டும் சிறுமிகள் / பெண்கள் மீதான பாலியல் வன்முறையை நியாயப்படுத்தும் உங்கள் கருத்துகளை, சிந்தனையோட்டத்தை நியாயப்படுத்தும் விதமாக மீண்டும் நீங்கள் பதில்கள் இட்டால், அவற்றையும் நீக்குவோம்.

சிறுமிகள் மீதான பாலியல் வன்முறையில் ஈடுபடுகின்றவர்களை நியாயப்படுத்துகின்ற கருத்துகளை எழுதும் நீங்கள் ஆதிக்க வெறி பற்றி எழுதுவதும் சாத்தான் ஓதும் வேதங்களில் ஒன்று தான்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, putthan said:

சிறந்த உதாரணம் 1983 இல் வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்த‌ படுகொலை ....சிறைக்கைதிகளே....

இரண்டு பகுதியினரும் சிறைக் கைதிகள் ...

இதற்கும் சிலர் விளக்கம் கொடுக்கலாம் தமிழ் சிறைக்கைதிகளை ,சிங்கள சிறைகைதிகள் காப்பாற்றவில்லை என்றால் இன்னும் நிலமை படு மோசமாக போயிருக்குமென்று...

On 31/3/2025 at 15:48, putthan said:

ஒரு கையில் புத்த பகவானின் தர்ம‌ போதனைகளையும் மறு கையில் தூப்பாக்கி வைத்து தர்மத்தை காப்பற்றும் சிறிலங்காவிலா இது நடந்தது நம்ப முடியவில்லை ...

1977 ஆம் ஆண்டு யாழ் பல்கலைகழகத்திலிருந்து சென்ற புத்திஜீவி சிங்கள மாணவர்கள் சிங்கள பகுதியில் செய்த தமிழர் விரோத பிரச்சாரங்களையும் மறந்து விடமுடியாது ....(1977 ஆம் ஆண்டு இனக்கலவர்த்திற்கு மேலும் வலு சேர்த்த விடயங்களில் இதுவும் ஒன்று)

இதையும் நாங்கள் சொல்லத்தான் வேணும் யாரவது திட்டி எழுதினாலும் பிரச்சனை இல்லை சொல்ல வேண்டியதை சொல்லத்தான் வேணும் ...

மருதருக்கு வேற பிரச்சினை, அதைப் புரிந்து கொள்ளாமல், நான் மேலே எழுதியதையும் தவறாகப் புரிந்து கொண்டு கருத்து வைக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

வட பகுதிப் பல்கலைகளின் நிலை எனக்கு அவ்வளவு தெரியாது, அங்கே நான் படித்ததில்லை. ஆனால், தென் பகுதியில் என் அனுபவத்திலும், அவதானிப்பிலும் தமிழ் மாணவர்கள் நடந்து கொள்ளும் முறை, சிங்கள மாணவர்களை விட மோசமானது.

உதாரணம்: சிங்கள மாணவர்களிடையே சில விதிகள் இருக்கின்றன. பகிடிவதையின் போது, கனிஷ்ட மாணவர் மீது கை, கால் படக் கூடாது. நேரடி வன்முறை தடை என்பது தான் இதன் அர்த்தம். இன்னொரு குறிப்பிடத்தக்க விதி, கனிஷ்ட மாணவர்களை சேவகம் செய்யும் வேலையாட்களாகப் பயன்படுத்த முடியாது. ஆனால் பேராதனையில் இந்த விதிகளை தினசரி மீறிய பல சிரேஷ்ட தமிழ் மாணவர்களை நான் அறிவேன். இதை சிங்கள மாணவர்கள் தடுக்க முனைந்தால், தமிழர்களைப் பிரித்து தனியாக அழைத்துச் சென்று சித்திரவதை செய்யும் வழக்கமும் தமிழ் மாணவர்களிடம் இருந்தது. அப்படித் தனியாக அக்பர் அறையொன்றிற்கு அழைத்துச் சென்று செய்த பகிடி வதையின் போது தான் வரப்பிரகாஷ் சுகவீனமுற்று இறந்தார்.

பகிடிவதை என்ற ஒரு சிறு வட்டத்தினுள் காணப்படும் இந்த நடத்தை வேறு பாடு, இலங்கையின் சிங்கள தமிழ் பிரச்சினையிலும் அப்படியே பிரதிபலிக்கும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை, இங்கே இருக்கும் அனேக உறவுகளுக்கும் இல்லை. உங்களுக்கு அத்தகைய எதிர்பார்ப்பு இருப்பது போல தெரிகிறது. இது இலங்கையில் இருந்து வெளியேறிய பிறகு , வெளிநாட்டில் ஒரு "முட்டைக் கோதுக்குள்" இருந்து செய்திகளை வாசித்ததால் வந்த விளைவாக இருக்கலாம்😂!

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2025 at 09:01, பிழம்பு said:

சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி , சித்திரவதை

மனிதத்துவம் தங்களிடமிருந்து

மரணித்தது தெரிந்தும்கூட,

சில மனிதர்கள் வாழ்கிறார்கள்

தங்களை மனிதர் என்று

சொல்லிக்கொண்டு

இன்னும் மரணிக்காமல்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

"முட்டைக் கோதுக்குள்" இருந்து செய்திகளை வாசித்ததால் வந்த விளைவாக இருக்கலாம்😂!

இருக்கலாம் ,சுபுட்நிக் செய்திகளை வாசிக்காத காரணமாக இருக்கலாம்.🤣..முட்டை ஒட்டை உடைத்து நாளைக்கே உலக செய்திகளை பார்க்க முடியும் ..

ஆனால் ஆனால் ஆனால்

சிங்கள அதிகார ஆட்சியாளர்களின் ,சிங்கள இனவாதிகளின் இரும்புத்திரைக்குள் மறைந்து இருந்தாலோ,அல்லது அதித காதல் வசப்பட்டு இரண்டர கலந்திருந்தாலோ வெளியே வருவது கடினம் ...🤣

இது அனுபவத்தில் கண்ட உண்மை ..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

"உண்மை விளம்பும்"😂 ஸ்புட்னிக் செய்தியை நீங்கள் பகிடி பண்ண உங்கள் கூட்டாளிகளுக்கு கோபம் வரப்போகுது கவனம்!

ஆனால், ஒரு கறுப்பு வெள்ளையான விடயத்தில் கூட "சரி பிழை" என்று சொல்ல முடியாமல், இனப்பிரச்சினைக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டு "நாங்கள் திறம்" எண்டு சாதிக்க அனுபவம் அவசியமில்லை. இதைக் கற்றுத் தராத "அனுபவம்" இருந்தாலும் ஒரு பயனுமில்லை😎!

  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2025 at 01:16, Justin said:

வட பகுதிப் பல்கலைகளின் நிலை எனக்கு அவ்வளவு தெரியாது, அங்கே நான் படித்ததில்லை

16 hours ago, Justin said:

ஆனால், ஒரு கறுப்பு வெள்ளையான விடயத்தில் கூட "சரி பிழை" என்று சொல்ல முடியாமல், இனப்பிரச்சினைக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டு "நாங்கள் திறம்" எண்டு சாதிக்க அனுபவம் அவசியமில்லை. இதைக் கற்றுத் தராத "அனுபவம்" இருந்தாலும் ஒரு பயனுமில்லை😎!

இந்த பெயரில் வரும் நபர் 🤣என்றாவது "கறுப்பு வெள்ளையான"விடயத்தில் தமிழர் சார்பாக கருத்து வைத்துள்ளாரா?இல்லை என்பது எனது அனுபவ கவனிப்பு.. இதை நான் இங்கு கருத்து எழுத தொடங்கிய நாள் முதல் அவதானித்த ஒன்று ....இந்த பெயர் நடுநிலையான கருத்தை வைத்திருந்தால் நீங்கள் சொல்லும் விடயம் சரி ...அதே போல உங்கள் பகிர்வுக்கு பச்சை போடும் நபர்களும் பக்கசார்பனவர்கள் தான் ...அது அவர்கள் நிலைப்பாடு ...

பகிடி வதையிலயே இனம்,மொழி,பிரதேசம் சார்ந்து கருத்து வைத்தது யார் ...?...

தமிழர் என்றால் ஒர் நிலைப்பாடு சிங்களம் என்றால் ஒர் நிலைப்பாடு தப்பே இல்லை 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பகிடிவதை என்பது இன்னொரு மனிதன் மீது, தனக்கிருக்கும் வக்கிரத்தை, சீனியர் என்ற தகுதியினை மட்டுமே வைத்துக்கொண்டு கட்டவிழ்த்துவிடுவது என்பது எனது கணிப்பு. சாதாரண சூழ்நிலையில் ஒரு மனிதன் மீது செய்ய முடியாத சில வக்கிரங்களை சீனியர் எனும் தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட பதவியினை வைத்து அவிழ்த்துவிட்டு சுய இன்பம் காணுவது. இது ஒரு மனோவியாதி என்பதைத்தவிர வேறு வழியில் விளக்கமுடியாது.

1995 இல் இருந்து 2000 வரை மொறட்டுவை பல்கலைக் கழகத்தில் நான் அனுபவித்த, நேரால் கண்ட வக்கிரங்களில் இருந்து நான் உணர்ந்துகொண்டது இதனைத்தான்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருந்து வரும் தமிழ் மாணவர்களும், தெற்கின் கிராமப் புரங்களில் இருந்து வரும் சிங்கள மாணவர்களும் பகிடிவதைக்கு அதிகம் முகம் கொடுப்பதோடு, இவர்களே அடுத்தவருடம் நடக்கும் பகிடிவதைகளுக்குத் தலைமையும் தாங்குவார்கள். நான் கொழும்பு மாவட்டத்திலிருந்து பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்தமையினால் என்மீது விசேட கவனம் செலுத்தினார்கள் எனது சீனியர்கள். "கொழும்பெண்டால் பெரிய கொழுப்போ உனக்கு, உனக்கிருக்கு, மாட்டுவாய்தானே, அப்ப பார்த்துக்கொள்ளுவோம்" என்று ன் நான் அவர்களின் பிடியில் இருந்து நழுவித் தப்பித்துச் சென்ற தருணங்களில் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இரண்டுமாத காலம் அவர்களின் வக்கிரங்களைத் தாங்கிக்கொள்ளவில்லை என்பதற்காகவே வெகு சிலரைத் தவிர‌ பல தமிழ் மாணவர்கள், எனது ஆண்டில் படித்தவர்கள் உட்பட, இன்றுவரை என்னுடன் பேசுவதில்லை. பல்கலை முடிந்தவுடன் நேராக வீட்டிற்குச் சென்றுவிடும் வசதி எனக்கிருந்தது. ஆனால் வட கிழக்கில் இருந்து வந்திருந்த பல மாணவர்களுக்கு அந்த வசிதியில்லை. ஆகவே சீனியர்கள் கட்டளையிட்டதற்கு அமைய மாலை 5 மணிக்கெல்லாம் அவர்களின் சித்திரவதைக் கூடங்களில் தவறாது ஆஜராகி, வக்கிரங்களைத் தாங்கி, உடலிலும் மனதிலும் வலிகளைச் சுமந்து தமது அறைகளுக்கு வரும் பல தமிழ் மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

இந்த வக்கிரங்களை வாரி வழங்குவதில் மாணவர்களிடையே வர்க்க வேறுபாடு இருப்பதில்லை. எஞ்சினியரிங்கில் இருந்து ஆரம்பித்து, குவான்ட்டிட்டி சேவயரிங், என் டி டி என்று எல்லாப் பாடநெறிகளிலும் இது நடந்தது. சில வேளைகளில் எஞ்சினியரிங் மாணவர்களால் சித்திரவதை செய்யப்பட்டு, அறைதிரும்பிக்கொண்டிருக்கும் மாணவர்களை குவான்ட்டிட்டி சேவயரிங் மாணவர்களோ அல்லது என்.டி.டி மாணவர்களோ தமது பங்கிற்கு இழுத்துச் செல்வதும் நடந்திருக்கிறது. எஞ்சினியரிங்கிற்கு வரும் மாணவர்களை குவான்ட்டிட்டி சேவயரிங் அல்லது என்.டி.டி மாணவர்களே அதிகம் கொடுமைப்படுத்துவது நடந்திருக்கிறது. இப்படி இவர்கள் நடந்துகொள்வதற்கு தமக்குக் கிடைக்காத பொறியியல்ப் பீடம் இவனுக்குக் கிடைத்துவிட்டதே என்கிற பொறாமையும் காரணமாக இருக்கலாம்.

இன்னும் சில சீனியர்களுக்கு பகிடிவதைக் காலமே பெண்களுடன் பேசுவதற்குக் கிடைத்திருக்கும் பொற்கால‌ம். ஆகவே சொற்களால் பெண்களைச் சித்திரவதை செய்து சுய இன்பம் காணுவார்கள். சாதாரண சூழ்நிலையில் தம்மைப் பெண்கள் ஏறெடுத்தும் பார்க்கப்போவதில்லை என்கிற நிலையில் பகிடிவதைக் காலத்தை தமது வக்கிரங்களைக் கொட்டும் காலமாகப் பாவிப்பது இவர்களின் வழமை.

வரப்பிரகாஷின் படுகொலையின்போது மொறட்டுவைப் பல்கலைக் கழகத்திலிருந்து பகிடிவதைக்குப் பெயெர்பெற்ற வக்கிரப் புத்தி கொண்டோர் ஒரு பேரூந்தினை வாடகைக்கு அமர்த்தி பேராதனைக்குச் சென்றுவந்தார்கள். அப்படிச் சென்றுவந்தவர்களில் எனது ஆண்டில் படித்துக்கொண்டிருந்த பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் தற்போது இங்கிலாந்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிபவருமான ஒருவரும் இருந்தார். பகிடிவதையின் உச்சமான பாலியல் வதையினைப் புரிவதில் இவர் பிரசித்தமானவர். பாலியல் வன்புணர்வைத்தவிர மீதி பாலியல் வக்கிரங்கள் இவரது சித்திரவதைக் கூடத்தில் நடைபெறும். வலியில் மாணவர்கள் அலறும்போது சிரித்துக்கொண்டு அதனை அனுபவிப்பவர். இவரது பிடிக்குள் அகப்பட்ட சில மாணவர்களை பகிடிவதையினை ஆதரிக்கும் இன்னும் சில மாணவர்கள் மீட்டெடுத்து வந்திருக்கிறார்கள். கொழும்பிலிருந்து தெரிவான சில மாணவர்கள் மீது இவர் தெரிரியாமல் கையை வைக்க, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, மயூராபதி அம்மண் கோயில் என்று பலவிடங்களில் அடிவாங்கியவர்.

1990 ஆம் ஆண்டில் என்று நினைக்கிறேன். முன்னர் யாழ்ப்பாணத்திலும் பின்னர் கொழும்பிலும் உயர்தரக் கணிதத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய ஆசிரியரான பிரேம்நாத்தின் நெருங்கிய உறவினர் ஒருவர் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகிச் சென்றார். பிரேம்நாத்திடம் முன்னர் கல்விகற்ற ஒரு பழைய மாணவர் அப்போது பேராதனையில் பொறியியல்ப் படித்துக்கொண்டிருந்தார். பிரேம்நாத்திற்கும் தனக்கும் இருந்த பழைய பகமை ஒன்றிற்காக அந்த புதிய மாணவரைக் கடுமையாகச் சித்திரவதை செய்து தனது வக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டார். பகிடிவதையின்போது இரு முழங்கால்களும் செயலிழந்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் பார்த்தீபன் என்கிற அந்த புதிய மாணவர் அனுமதிக்கப்பட்டார். தன்னால் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்ட பார்த்தீபன் இறந்துபோகலாம் என்கிற செய்தியை தனது சகமாணவர்கள் மூலம் சித்திரவதை செய்த மாணவர் அறிந்துகொண்டபோதிலும், அவரைச் சென்று பார்க்கவோ, தனது ஈனச்செயலுக்கு மன்னிப்புக் கோரவோ அவருக்கு மனம் வரவில்லை. நாட்கள் செல்லச் செல்ல பார்த்தீபன் உடல்நிலை மோசமாகி வருவதாகவும், இதற்காக சித்திரவதை செய்தவர் சிறை செல்ல நேரலாம் என்கிற செய்திகள் பரவத் தொடங்கியபோது வேறு வழியின்றி வைத்தியசாலைக்குச் சென்றார். ஆனால் மன்னிப்புக் கோர அவரது மனம் முன்வரவில்லை. சற்றுநேரம் அமைதியாக நின்றுவிட்டு, கூடவிருந்த சொந்தங்களின் மனக்குமுறலை கேட்டுவிட்டு வந்துவிட்டார். பார்த்தீபன் நீண்டகால சிகிச்சையின் பின்னர் பிழைத்துக்கொண்டார். அன்று மனோவியாதியால் சக மாணவனை சித்திரவதை புரிந்து தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பிய அந்த மாணவர் இன்று குடும்பத்துடன் சென்று புத்த சமயத்தைத் தழுவி, கண்டியில் வாழ்ந்து வருகிறார். இவரது தந்தையார் எனது தகப்பனாரின் சொந்தச் சகோதரன் என்பது வேறு விடயம்.

இவர்கள் வக்கிரம் கொண்டவர்கள். மனோவியாதியினால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, putthan said:

இந்த பெயரில் வரும் நபர் 🤣என்றாவது "கறுப்பு வெள்ளையான"விடயத்தில் தமிழர் சார்பாக கருத்து வைத்துள்ளாரா?இல்லை என்பது எனது அனுபவ கவனிப்பு.. இதை நான் இங்கு கருத்து எழுத தொடங்கிய நாள் முதல் அவதானித்த ஒன்று ....இந்த பெயர் நடுநிலையான கருத்தை வைத்திருந்தால் நீங்கள் சொல்லும் விடயம் சரி ...அதே போல உங்கள் பகிர்வுக்கு பச்சை போடும் நபர்களும் பக்கசார்பனவர்கள் தான் ...அது அவர்கள் நிலைப்பாடு ...

பகிடி வதையிலயே இனம்,மொழி,பிரதேசம் சார்ந்து கருத்து வைத்தது யார் ...?...

தமிழர் என்றால் ஒர் நிலைப்பாடு சிங்களம் என்றால் ஒர் நிலைப்பாடு தப்பே இல்லை 🤣

"தமிழர் சார்பாகக் கருத்து" என்பது தமிழர்களிடையே இருக்கும் செய்தி சொல்வது போன்ற மிருகக் குணங்களை ஆதரித்துக் கருத்து வைப்பதாக இருக்கக் கூடாது. அப்படி "தமிழேண்டா!" என்று நடந்து கொள்ளும் தீவிர தமிழ் தேசியப் பற்றாளர்களின் தடவல் பிரான்சில், அவுசில் எப்படி வன்முறைகளை ஊக்குவித்து, சாதாரண தமிழர்களை விலகிச் செல்ல வைத்திருக்கிறது என்பதை நீங்கள் அறிய வேண்டிய தேவையில்லை!

பகிடி வதையை இலங்கையின் தென் பகுதியில் பல வருடங்களாக அவதானித்தமையால் இந்த வேறு பாட்டை இங்கே விளக்கியிருக்கிறேன். இதே அவதானிப்பைப் புரிந்து கொண்டோர் நான் சொல்வதைப் புரிந்து கொள்வர். நீங்கள் "யானையைத் தடவிப் பார்க்கும் குருடன்" போல உங்களுக்குப் புரிந்ததை மட்டும் வைத்து அலட்டிக் கொண்டிருங்கள், பாதகமில்லை😎!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.