Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் எழுத முடியாத சோகம். இதிலிருந்தும் நாம் ஒரே விடயத்தைத் தான் மீளக் கற்றுக் கொள்ள வேண்டும்: தமிழர்களுக்கு ஈழத்தைத் தவிர வேறு வழி இல்லை. ஒன்று ஈழம் அல்லது நம் எல்லோருக்கும் மரணம்! எங்கள் எல்லோரதும் மூத்த சகோதரத்துக்கு அஞ்சலி வார்த்தைகளால் செலுத்தப் படமுடியாதது.

  • Replies 152
  • Views 33.3k
  • Created
  • Last Reply

செய்தியை பார்க்க மிகவும் அதிர்ச்சியாக இருக்கின்றது, நம்பமுடியவில்லை..

இதய அஞ்சலிகள்..

  • கருத்துக்கள உறவுகள்

வீரகாவியமாகிவிட்ட தமிழ்ச்செல்வன் அண்ணாக்கும் மற்றபோராளிகளுக்கும் வீர வண்கங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்.

கண்ணீர் அஞ்சலிகள் :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமானப்படை குண்டுவீச்சில் தமிழ்ச்செல்வன் மரணம்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி பிரதேசத்தில் இன்று காலை 6 மணிக்கு அரச விமானப்படைகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனும் வேறு 5 விடுதலைப் புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகச் செயலாளர் சீரன் அறிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், அலெஸ் என்றழைக்கப்படும் லெப் கேணல் அன்புமணி, மேஜர் மிகுதன், கப்படன் நேதாஜி, லெப்.ஆட்சிவேல், லெப்.வாகைக்குமரன் ஆகியோர் கொல்லப்பட்டனர் என விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தினால் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டுள்ளது.

இன்று காலை 4 மணி முதல் கிளிநொச்சி நகரப்பிரதேசத்தில் அரச விமானப்படைக்குச் சொந்தமான வேவு விமானம் ஒன்று வட்டமடித்து, வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும், இதனையடுத்து, காலை 6 மணியளவில் கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் குண்டு வீச்சு விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகவும் கிளிநொச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதன்போது சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டதுடன், வேறு 5 பேர் காயமடைந்ததாகவும் முன்னர் வந்த தகவல்கள் தெரிவித்தன.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மீண்டும் வான்பரப்பினுள் வந்த குண்டு வீச்சு விமானங்கள் இரண்டாவது தடவையாக நடத்திய குண்டுத் தாக்குதலின்போதே விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனும் ஏனையோரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் நம்பப்படுகின்றது.

விமானக்குண்டுத் தாக்குதல் நடைபெற்றவேளை கொல்லப்பட்ட தமிழ்செல்வனும் ஏனையோரும் எங்கிருந்தனர் எப்படி தாக்குதலுக்கு உள்ளாகினர் என்ற விபரங்களை விடுதலைப் புலிகள் உடனடியாக வெளியிடவில்லை.

தமிழ்ச்செல்வனின் மரணத்தையடுத்து, கிளிநொச்சி நகரப்பகுதியிலும், விடுதலைப் புலிகள் மத்தியிலும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை அரச விமானப்படையின் விமானக்குண்டு வீச்சுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டுள்ளதை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளதாக அரச தரப்புத் தகவல் ஒன்றும் தெரிவித்துள்ளது.

பிபிசி தமிழ்.

5_coff450Jpg_1.jpg

5_CRW_3_1.jpg

5_CRW_7_1.jpg

5_CRW_9_1.jpg

கண்ணீர் அஞ்சலிகள் இதை தவிர வேறு எதுவும் எழுத கை வருகுதில்லை

எழுத முடியவில்லை..................... அண்ணா

தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கும் மற்றும் 6 வேங்கைகளுக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்.

தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் அவருடன் வீரச்சாவை தழுவிக்கொண்ட ஏனைய வீர மறவர்களுக்கும் எனது வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ச்செல்வன் அண்ணாக்கு வீரவணக்கம்

தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கும், அவரோடு வீரச்சாவடைந்த எல்லாப் போராளிகளுக்கும் எமது இதயபூர்வமான வீர அஞ்சலிகள்.

தமிழ் இன விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலந்தொட்டு இழப்புக்கள் பலவற்றைக் கடந்து திறமையுள்ள புதியவர்கள் அறிமுகமாகியபடியே உள்ளனர். ஆயினும் ஒரு சிலரது பிரிவுகளை எங்களால் இன்னமும் ஈடுசெய்ய முடியாமலிருக்கிறது.

பாலசிங்கம் ஐயாவின் மறைவுக்குப் பின் அரசியல் வேலைத்திட்டங்களை முனைப்போடு மேற்க்கொண்டு வந்த தமிழ்ச்செல்வன் அண்ணாவையும் இன்று இழந்து நிற்க்கிறோம். பேச்சு வார்த்தைக்குழுவை வழிநடத்துவது மட்டுமல்லாது எமது பக்க நியாயங்களை பக்குவமாக எடுத்துக் கூறி பல மட்டத்தலைவர்களிடையே எமக்கு ஆதரவு தேடுவதிலிருந்து தோல்விகளால் தொட்டாச்சினுங்கிகள் போல் துவண்டு போகும் வெளிநாட்டுத் தமிழரை தூக்கி நிறுத்துவது உட்பட இன்னும்பல புதுப்புது வேலைத்திட்டங்களை பொறுப்போடு செய்த அரசியல் பொறுப்பாளரை இன்று இழந்து தவிக்கிறோம்.

ஆயினும் விழுதுகள் வீழ்வது வேரும் விருட்ஷமும் உறுதியோடு ஓங்கிவளர. வீர புருஷர்கள் நினைவுகளோடு எமது பயணம் வெற்றித் தமிழீழ இலக்கைநோக்கி வீறுகொள்ளும் என்பது மட்டும் உறுதி.

வீழ்வது நாமாயினும் வாழ்வது எம் தமிழ் என வாழ்ந்து, தம் இன் உயிரை அர்பணித்த விடுதலை வீரர்களுக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள். இவர்கள் மீண்டும் ஈழத்தாய் வயிற்றில் உயிர்பெற்று தமிழ் ஈழம் காண்பார்கள்.

Edited by adithadi

மூத்த தளபதியும் அரசியல்துறை பொறுப்பாளருமான...

எமது அன்பிற்குரிய தமிழ்செல்வன் அவர்கட்கு எனது

கண்ணீர் அஞ்சலிகள்......

மீண்டும் கவலையை அடைக்க நினைக்கின்ற முனைகின்ற போதிலும் நினைவுகளால் மீண்டும் கண்கள் குளமாகின்றன.

வீர வணக்கங்கள்!

ஆறில் வந்திடும் சிலருக்கு

அது நூறில் வந்திடும் சிலருக்கு

சாவு என்றும் வருவதில்லை வீரனுக்கு

நீ வாழும் போதும் வரலாறு

நீ வாழ்ந்து முடிந்ததும் வரலாறூ

நாளை வருகின்ற வரலாறூ

தமிழீழம் மலர்கின்ற வரலாறூ

வீரன் நீ விரும்பாதது கண்ணீர்!

அவன் வீழந்து போதும்

கண்ணீருக்கு வேலை இல்லை

அழுது புரள்வதல்ல நாம் உனக்கு செய்யும் கைமாறு

அடைந்தே தீர்வது தமிழீழம்! அதுவே உன் ஆன்மாவுக்கு

செய்யும் கைமாறு

Edited by vettri-vel

சுப தமிழ்செல்வன் அண்ணாவிற்கும் மற்றும் தளபதிகளுக்கும் எமது வீரவணக்கத்துடன் கூடிய கண்ணீர் அஞ்சலிகள்.

தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கும், அவரோடு வீரச்சாவடைந்த எல்லாப் போராளிகளுக்கும் எமது இதயபூர்வமான வீர அஞ்சலிகள்.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவையிட்டு எதிர்வரும் 5 ஆம் நாள் வரை தேசியத் துக்க நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.

வன்னிப் பெருநிலம் எங்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் மக்கள் கறுப்பு- சிவப்பு- மஞ்சள் கொடிகளையும் கட்டி வருகின்றனர்

20071102016.jpg

20071102017.jpg

20071102018.jpg

20071102019.jpg

20071102020.jpg

http://www.puthinam.com/full.php?203mOAcdb...471e64ccbKcYO3e

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீரணிக்கமுடியவில்லை.தமிழ் மக்களின் குரல்வளையை நசுக்குவதிலேயே சிங்கள அரசும் சர்வதேசமும் முனைப்பாக இருக்கின்றன.தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கும், அவரோடு வீரச்சாவடைந்த எல்லாப் போராளிகளுக்கும் எனது வீரவணக்கங்கள்.

Edited by குமாரசாமி

உங்கள் சேவைக்கு நன்றி தமிழ்செல்வன் அண்ணே...

உங்கள் பிரிவால் மிகவும் மனவருத்தமடைகிறேன்.

X

வீரர்களை விதைக்கிறோம்

விடுதலையை அறுவடை செய்வோம்

வீரவணக்கம் வேங்கைகளே!

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

கண்களால் செய்தியை படித்தாலும் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இரத்த உறவில்லாத ஒரு உறவின் இழப்பையிட்டு மிகுந்த வேதனை அடைகிறேன். தமிழ்செல்வன் அண்ணாவிற்கும் அவருடன் வீரமரணம் எய்திய மற்றய போராளிகளுக்கும் எனது வீரவணக்கங்களுடனான கண்ணீர் அஞ்சலிகள்.

-சபேஸ்

Edited by Sabesh

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் தமிழ்செல்வன் அண்ணாவிற்கும், கூடவே வீரச்சாவடைந்த போராளிகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.

எதிரியின் தாக்குதல் தொடர்பாக ஒவ்வொரு மூத்த உறுப்பினர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகின்றது.

ஏனென்றால் என்னும் எதிரி தாக்குவதற்கு முயற்சிப்பான். நீங்கள் இருப்பதால் தான் நாங்கள் இருக்கின்றோம். அதுக்காகவாது எதிரி குறித்து அவதானமாக இருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.