Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

523924771_1276428937229163_1455535064141

523922957_1276428893895834_3085888596834

வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு!

பயங்கரவாதி ஷாகறான்.

கொழும்பு, ஜூலை 22, 2025: 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிழையான தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும், தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான ஒரு பொலிஸ் பரிசோதகர் நேற்று (திங்கட்கிழமை, ஜூலை 21) கொழும்பில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுணதீவு சம்பவத்தின் பின்னணி (2018):

2018 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி இரவு, மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவுப் பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களான கணேஸ் தினேஸ் (28, கல்முனை) மற்றும் வல்பிட்ட கமகே நிரோசன் இந்திக்க பிரசன்ன (35, காலி) ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். அவர்களது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கிகளும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது இந்தக் கொலைகள் சுமத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். தமிழ் அரசியல் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

உண்மை வெளிச்சத்திற்கு வந்த வழி:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போதுதான், வவுணதீவு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான பயங்கரவாதக் குழுவிற்கும் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இந்தத் தாக்குதல்களைத் திசைதிருப்பி, முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது பழிசுமத்துவதற்காகப் போலியான ஆதாரங்கள் உருவாக்கப்பட்டதாகவும், இதில் அரச புலனாய்வுச் சேவை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சில அதிகாரிகள் முன்னின்று செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, ஒரு மோட்டார் சைக்கிள் ஜக்கெட் சம்பவ இடத்திற்கு அருகே மறைத்து வைக்கப்பட்டு, அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தவறான தகவல் அளிக்கப்பட்டதும் விசாரணைகளில் தெரியவந்தது.

தற்போதைய கைது மற்றும் விசாரணைகள்:

படுகொலைச் சம்பவத்தின் உண்மைத் தன்மையை மூடிமறைத்து, விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது குற்றத்தைச் சுமத்தப்பட்டதை பொலிஸார் கண்டறிந்தனர். இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியவரும், தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான பொலிஸ் பரிசோதகர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்புக்கு விசாரணைக்கு அழைத்து, விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாகப் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தக் கைது, வவுணதீவு இரட்டைக் கொலை வழக்கு விசாரணைகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

Liked Tamil

AB Amam

#########

@satan, @alvayan, @goshan_che, @ஈழப்பிரியன், @கிருபன் , @Paanch , @ஏராளன் , @விசுகு, @குமாரசாமி, @ரசோதரன், @பெருமாள், @புலவர் , @ரஞ்சித் , @நன்னிச் சோழன் , @Sasi_varnam , @நியாயம் , @suvy , @நிழலி, @இணையவன் , @vasee, @அக்னியஷ்த்ரா , @உடையார் , @தனிக்காட்டு ராஜா

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு. வவுணதீவு பொலிஸார் இருவர் படுகொலை தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் கைது

23 JUL, 2025 | 10:17 AM

image

மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வெட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவலை  வழங்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை  திங்கட்கிழமை (21)  குற்றபுலனாய்வு பிரிவினர் கொழும்பில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

கைதான பொலிஸ் பரிசோதகர் மட்டு. மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பின்னர் தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவர் என பொலிஸ் உயர் அதிகாரி மேலும் ஒருவர் தெரிவித்தார். 

இது பற்றி தெரியவருவதாவது,   

கடந்த 2018 நவம்பர் 29 ஆம் திகதி வவுணதீவு வலையிறவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருந்த பொலிஸ் சாஜன்ட் மற்றும் பொலிஸ் கொஸ்தாபர் ஆகியோரை இனந் தெரியாதோர் இருவர்  துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கத்தியால் வெட்டியும் கொலை செய்துவிட்டு பொலிஸார் இருவரின் துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் விடுதலைப்புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்று வெளிவந்த வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பாவித்து வந்த ஜக்கட்  பாலத்தின் கீழ் வீசி எறிந்து கிடப்பதாகவும் அவர் இந்த படுகொலையை செய்ததாக அரச மற்றும் புலனாய்வு பிரிவினர் அறிக்கையிட்டதையடுத்து அவரை கடந்த 2018 நவம்பர் 30 ம் திகதி பொலிஸார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  கொழும்பிலுள்ள குற்ற புலனாய்வு திணைக்களத்தின் நான்காம் மாடியில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் 2019 ஏப்பிரல் 21 உயித்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஜ.எஸ்.ஜ.எஸ் பயங்கரவாத அமைப்பின் சஹரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் சஹரானின் சாரதி உட்பட நால்வரை கைது செய்ததன் பின்னர் அவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளதாக தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்ட முன்னாள் பேராளியை விடுதலை செய்தனர். 

இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைபற்றியதையடுத்து இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்த நிலையில் இந்த பொலிஸார் படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பத்தை மூடிமறைத்து விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது சுமத்தப்பட்டதை கண்டறிந்தனர். 

இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக அப்போது மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் பரிசோதகர்  கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு  விசாரணைக்கு  திங்கட்கிழமை (21) அழைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்ரல்  8ம் திகதி மட்டக்களப்பு கரடியனாறு தேசிய புலனாய்வு சேவை பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை குற்றபுலனாய்வு பிரிவினர் கைது செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

https://www.virakesari.lk/article/220695

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

சம்பூர் கடற்கரையோர பகுதியில் மனித எச்சங்கள் கண்டு பிடிப்பு. அல்வாயனுக்கு ஒரு பதிவிட்டிருந்தேன். "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது." நான் யாரையும் பிடிக்கவில்லை என்று சிலவற்றை சுட்டிக்காட்டி ஒரு சொல்லில் எழுதினால், ஆதாரம் இருக்கா? வெறும் காழ்ப்புணர்ச்சி என்று சொல்வார்கள். ஆதாரங்களை சேர்த்து எழுதினால், அதற்கு மறுத்து ஆதாரம் வைக்க தெரியாவிட்டால், முடியாவிட்டால் பந்தி எழுதுகிறேன் என ஒரு குற்றச்சாட்டு என்மேல் உண்டு. அதனாலேயே ஒரு சில வரிகளுடன் விட்டேன். வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதும் நன்று என்று இன்று தெரிகிறது. கிழக்கில் இத்தனை கொடூரங்களும் யாரால், ஏன் நிறைவேற்றப்பட்டது என்பதும் மெல்ல மெல்ல திரை விலகுகிறது. அன்று, தாம் பதவியை கைப்பற்ற முஸ்லிம்களை வைத்து தாக்குதலை நடத்தினர். இன்று புலிகளை சாட்டி ஒரு கலவரத்தை ஏற்படுத்த முற்படுகின்றனர். துப்பாக்கியையும் கொடுத்து, போலீசாருக்கும் அறிவித்து, நான் நினைக்கிறன் பயத்தில் தடுமாறுகிறார்கள் என்று. அன்று அனுரா சிறிய பையன். இவர்களின் திரிப்புகளை உண்மையென நம்பியிருக்கலாம், இப்போ வெளிவருபவை உண்மைகளை வெளியே கொண்டுவருகின்றன. அன்று பூட்டிய அறைகளுக்குள் காதோடு காதாக பேசியவை, ரகசியமாக செய்தவை இன்று பகிரங்கப்படுத்தப்படுகின்றன. இனிமேலும் பித்தலாட்டம் ஆட வெளிக்கிட்டால்தாங்களாகவே பொறியில் சிக்குவார்கள். கிழக்கில் முஸ்லிம்களை பலிகொடுத்து, தமிழரை பலி எடுத்து ஆடிய ஊழியாட்டம் வெளியில் வர இருக்கிறது. எத்தனை பலம், படை இருந்து, தமிழரின் நிலங்களை, உயிர்களை, கோயில்களை பறிக்க அதிகாரம் இருந்ததென்றால்; அந்த முஸ்லிம்களை காக்க முடியவில்லையா? அப்போ எந்த அதிகாரத்தினால் இதை சாதித்தேன் என்று சவால் விட்டார் ஹிஸ்புல்லா? முஸ்லீம் அரபு நாடுகளிடம் முதலில் உதவி கேட்டு சென்றபோது முஸ்லிம்களுக்கு அங்கு ஒரு ஆபத்துமில்லை ஆகவே உதவி செய்ய தயங்கிய அந்த நாடுகளிடம், புலிகள் முஸ்லிம்களை சுத்திகரிப்பு செய்கிறார்கள் ஆகவே உதவி செய்யுங்கள் என்று மீண்டும் போனால்; அங்கு என்ன நடந்திருக்கு என்று சொல்லாமலே புரியும். எந்த நாடும் இந்த நாட்டில் முதலிடலாம், வியாபார, கல்வி, சமய கருமங்களை ஆற்றலாம். ஆனால் தமிழருக்கு இடமில்லை, அவர்களை அழிக்க உதவுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள் என்றால்; இவர்களின் தந்திரோபாயத்தை என்னவென்று சொல்லலாம்? எத்தனையோ சாட்சிகளை கொலை செய்திருக்கிறார்கள், இன்னும் சிலருக்கு அதிகாரிகள் வற்புறுத்தி பொய் சாட்சி சொல்ல வைத்தார்கள் என்று கதை எழுதினார்கள். ஒன்றை மறைக்க பல கொலைகளை அஞ்சாமல் செய்து காரியத்தை சாதித்தார்கள். இப்போ அதற்கான விலை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. சாட்சிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும், விசாரணை அதிகாரிகள், நீதிபதிகள், ஜனாதிபதி போன்றவர்களும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அரசியல்வாதிகளின் பாதுகாப்பை குறைத்து இவர்களுக்கு அளிக்கப்படவேண்டும். இந்த குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட முடியாது, பழைய கொலைகலாச்சாரத்தை அரங்கேற்றுவார்கள். காலம் எப்படி சுற்றி வளைத்திருக்கிறது பாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

523924771_1276428937229163_1455535064141

523922957_1276428893895834_3085888596834

வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு!

பயங்கரவாதி ஷாகறான்.

கொழும்பு, ஜூலை 22, 2025: 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிழையான தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும், தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான ஒரு பொலிஸ் பரிசோதகர் நேற்று (திங்கட்கிழமை, ஜூலை 21) கொழும்பில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுணதீவு சம்பவத்தின் பின்னணி (2018):

2018 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி இரவு, மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவுப் பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களான கணேஸ் தினேஸ் (28, கல்முனை) மற்றும் வல்பிட்ட கமகே நிரோசன் இந்திக்க பிரசன்ன (35, காலி) ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். அவர்களது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கிகளும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது இந்தக் கொலைகள் சுமத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். தமிழ் அரசியல் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

உண்மை வெளிச்சத்திற்கு வந்த வழி:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போதுதான், வவுணதீவு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான பயங்கரவாதக் குழுவிற்கும் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இந்தத் தாக்குதல்களைத் திசைதிருப்பி, முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது பழிசுமத்துவதற்காகப் போலியான ஆதாரங்கள் உருவாக்கப்பட்டதாகவும், இதில் அரச புலனாய்வுச் சேவை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சில அதிகாரிகள் முன்னின்று செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, ஒரு மோட்டார் சைக்கிள் ஜக்கெட் சம்பவ இடத்திற்கு அருகே மறைத்து வைக்கப்பட்டு, அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தவறான தகவல் அளிக்கப்பட்டதும் விசாரணைகளில் தெரியவந்தது.

தற்போதைய கைது மற்றும் விசாரணைகள்:

படுகொலைச் சம்பவத்தின் உண்மைத் தன்மையை மூடிமறைத்து, விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது குற்றத்தைச் சுமத்தப்பட்டதை பொலிஸார் கண்டறிந்தனர். இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியவரும், தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான பொலிஸ் பரிசோதகர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்புக்கு விசாரணைக்கு அழைத்து, விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாகப் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தக் கைது, வவுணதீவு இரட்டைக் கொலை வழக்கு விசாரணைகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

Liked Tamil

AB Amam

#########

@satan, @alvayan, @goshan_che, @ஈழப்பிரியன், @கிருபன் , @Paanch , @ஏராளன் , @விசுகு, @குமாரசாமி, @ரசோதரன், @பெருமாள், @புலவர் , @ரஞ்சித் , @நன்னிச் சோழன் , @Sasi_varnam , @நியாயம் , @suvy , @நிழலி, @இணையவன் , @vasee, @அக்னியஷ்த்ரா , @உடையார் , @தனிக்காட்டு ராஜா

இந்த சம்பவத்துக்கு புல்லாதான் முதல் காரணி...முழு தமிழின் எதிர்ப்பை காட்டியவர்...ரணிலின் தயவால் பறித்த கம்ம்பசையும் கைப்பற்ரி...கக்கிமின் உதவியால் எம் பியும் ஆகி வெள்ளை வேட்டி கள்வன்...இன்று பார்லிமென்டில்...முழு ஊழல்வாதி ..இப்ப அனுரவின் வீட்டில் சுகபோகம் ..

  • கருத்துக்கள உறவுகள்

வவுண‌தீவில் கொல்லப்பட்ட இரு பொலீஸாரும் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைக் கொல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட டி 56 ரகத் துப்பாக்கி 1990 ஆம் ஆண்டு ஏறாவூர் பொலீஸ் நிலையத்திலிருந்து முஸ்லீம் ஊர்காவற்படையினன் ஒருவனால் அன்று எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. அத்துப்பாக்கியே 28 வருடங்களுக்குப் பின்னர் வவுணதீவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பாவியான கிளிநொச்சியைச் சேர்ந்த 48 வயதுடைய ராசநாயகம் சர்வானந்தமே இக்கொலைகளைச் செய்ததாக பொலீஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டதுடன் கடுமையான சித்திரவதைகளுக்கும் உள்ளாகியிருந்தார். சஹ்ரான் குழுவினரே இத்தாக்குதலைச் செய்தார்கள் என்று நன்கு தெரிந்திருந்தும் அப்பாவியான தமிழர்மீது கொலைப்பழியைச் சுமத்தி, விசாரணைகளைத் திசைதிருப்பிய வவுணதீவு ஒ ஐ சி யே இன்று கந்தளாயிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

இதில் வேதனை என்னவென்றால், சஹ்ரான் குழுவினருடன் தொடர்பில் இருந்துகொண்டு, இக்கொலைகளை அவர்களே செய்தார்கள் என்பதை அறிந்திருந்த கிழக்கின் மீட்பரான முரளிதரன் கூட இத்தாக்குதலை "புலிகளின் மீள் எழுச்சி" என்று வர்ணித்ததுதான்.

2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவையில் இடம்பெற்ற பயணிகள் பேரூந்து மீதான கிளைமோர் தாக்குதல் மற்றும், வெலிக்கந்தை சிங்கள விவசாயிகள் மீதான தாக்குதல்கள், நுகேகொடை பஸ் மீதான தாக்குதல் என்று அனைத்தையும் புலிகள் மீது மகிந்தவின் அரசு போட்டிருந்தது. நான் இதுபற்றி இங்கு எழுதியபோது சிலர் வந்து புலிகளுக்கு நான் வெள்ளையடிக்கிறேன் என்று எள்ளி ந‌கையாடினார்கள். ஆனால் இன்று அவை வெளிச்சத்திற்கு வருகின்றன. இதுகுறித்து ஒரு திரியை ஆரம்பிக்க விருப்பம். நேரமிருந்தால் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சிறி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் கைது செய்யப் பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கு பின்னாலும்... எத்தனை சதி வேலைகள் பின்னப் பட்டு இருக்கின்றதோ யாரறிவர்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

523924771_1276428937229163_1455535064141

523922957_1276428893895834_3085888596834

வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு!

பயங்கரவாதி ஷாகறான்.

கொழும்பு, ஜூலை 22, 2025: 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிழையான தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும், தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான ஒரு பொலிஸ் பரிசோதகர் நேற்று (திங்கட்கிழமை, ஜூலை 21) கொழும்பில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுணதீவு சம்பவத்தின் பின்னணி (2018):

2018 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி இரவு, மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவுப் பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களான கணேஸ் தினேஸ் (28, கல்முனை) மற்றும் வல்பிட்ட கமகே நிரோசன் இந்திக்க பிரசன்ன (35, காலி) ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். அவர்களது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கிகளும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது இந்தக் கொலைகள் சுமத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். தமிழ் அரசியல் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

உண்மை வெளிச்சத்திற்கு வந்த வழி:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போதுதான், வவுணதீவு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான பயங்கரவாதக் குழுவிற்கும் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இந்தத் தாக்குதல்களைத் திசைதிருப்பி, முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது பழிசுமத்துவதற்காகப் போலியான ஆதாரங்கள் உருவாக்கப்பட்டதாகவும், இதில் அரச புலனாய்வுச் சேவை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சில அதிகாரிகள் முன்னின்று செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, ஒரு மோட்டார் சைக்கிள் ஜக்கெட் சம்பவ இடத்திற்கு அருகே மறைத்து வைக்கப்பட்டு, அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தவறான தகவல் அளிக்கப்பட்டதும் விசாரணைகளில் தெரியவந்தது.

தற்போதைய கைது மற்றும் விசாரணைகள்:

படுகொலைச் சம்பவத்தின் உண்மைத் தன்மையை மூடிமறைத்து, விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது குற்றத்தைச் சுமத்தப்பட்டதை பொலிஸார் கண்டறிந்தனர். இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியவரும், தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான பொலிஸ் பரிசோதகர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்புக்கு விசாரணைக்கு அழைத்து, விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாகப் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தக் கைது, வவுணதீவு இரட்டைக் கொலை வழக்கு விசாரணைகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

Liked Tamil

AB Amam

#########

@satan, @alvayan, @goshan_che, @ஈழப்பிரியன், @கிருபன் , @Paanch , @ஏராளன் , @விசுகு, @குமாரசாமி, @ரசோதரன், @பெருமாள், @புலவர் , @ரஞ்சித் , @நன்னிச் சோழன் , @Sasi_varnam , @நியாயம் , @suvy , @நிழலி, @இணையவன் , @vasee, @அக்னியஷ்த்ரா , @உடையார் , @தனிக்காட்டு ராஜா

அடப்பாவி இரட்டை கொலைக்கேஸ் செய்தியில் எனது பெயரை டாக் செய்துவிட நான் பயந்தே போய்விட்டேன். நாம ஒரு ஓரமா உட்கார்ந்து நாலு வரியில் எதையோ சொல்லிவிட்டு போகின்றோம். அதற்காக இப்படி எல்லாம் பயம் காட்டக்கூடாது சிறியர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.