Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு

putin.png

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற அறுவை சிகிச்சைகள் மூலம் அதிக நாட்கள் வாழ முடியுமா?

இதுகுறித்து சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கும் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் பேசிக்கொண்டது வைரலாகி வருகிறது.

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் சதுக்கத்தில் இராணுவ அணிவகுப்புக்கு நடந்து செல்லும்போது இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட உரையாடல் மைக் திடீரென ஆன் ஆனதால் கசிந்தது.

அவர்கள் பேசியதாவது,

ஷி ஜின் பிங்: கடந்த காலத்தில், மக்கள் 70 வயதைத் தாண்டி வாழ்வது அரிது என்று கூறினோம். ஆனால் இன்று உங்கள் 70 களில் கூட, (நீங்கள்) இன்னும் ஒரு குழந்தையாகவே இருக்கிறீர்கள்.

புதின்: ஆம். மிகச் சில ஆண்டுகளில், உயிரி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், மனித உறுப்புகள் தொடர்ந்து மாற்றப்படும். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அவ்வளவு இளமையாக இருப்பீர்கள். அந்த வகையில், இறவாமை சாத்தியமாகும்.

ஷி ஜின்பிங்: இந்த நூற்றாண்டில் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழ முடியும் என்று சிலர் கணிக்கின்றனர்.

இருவருடன் நடந்து சென்ற வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இதைக் கவனித்து சிரித்தார். உரையாடலின் மொழிபெயர்ப்பை அவர் கேட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் இது குறித்து கேட்டபோது, புதின் உரையாடலை உறுதிப்படுத்தினார்.

“நாங்கள் அணிவகுப்புக்கு நடந்து சென்றபோது ஷி ஜின்பிங் இதைப் பற்றிப் பேசினார் என்று நான் நினைக்கிறேன். தொழில்நுட்பம், சுகாதார அமைப்புகள் மற்றும் அறுவை சிகிச்சையின் திறனைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் மனிதகுலம் மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ முடியும்” என்று புதின் கூறினார்.

https://akkinikkunchu.com/?p=339524

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அமெரிக்காவுக்கு... விசர் பிடித்து இருக்குமே. animiertes-herz-smilies-bild-0040.gif 😂

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

இப்ப அமெரிக்காவுக்கு... விசர் பிடித்து இருக்குமே. animiertes-herz-smilies-bild-0040.gif 😂

எனக்கே விசர் பிடிக்குது ராசா. எத்தனை ஏழை எளிய மக்களின் உறுப்புகளை இந்த அரக்க அரசியல்வாதிகள் புடுங்க போகிறார்களோ????

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கிருபன் said:

இருவருடன் நடந்து சென்ற வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இதைக் கவனித்து சிரித்தார்.

😟

புதின் , ஷி ஜின்பிங் ,கிம் ஜாங் உன்னும் தாங்கள் வாழ்க்கை வாழ்வதற்காக உலகநாடுகளை ஆக்கிரமித்து மக்களின் உறப்புக்களை அபகரிக்க கூடிய பயங்கரவாதிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் உடலுறுப்புகளை அதிகமாக திருடுகின்றார்கள்.அதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.சில தினங்களுக்கு முன் வந்த உடலுறுப்பு திருட்டு பற்றி வந்த செய்தியின் ஈரம் கூட இன்னும் காயவில்லை.

2 hours ago, தமிழ் சிறி said:

இப்ப அமெரிக்காவுக்கு... விசர் பிடித்து இருக்குமே. animiertes-herz-smilies-bild-0040.gif 😂

அமெரிக்காவில் வசிக்கும் பிரபல்யங்களுக்கு வயதுக்கு வராதவர்களின் இள இரத்தம் பிடிக்குமாம்.😂

சட்டபூர்வமாக உள்ள கிட்னி மாற்றம்,கண் மாற்றம்,இரத்த மாற்றம்,ஈரல் மாற்றம்,இருதய மாற்றம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?😎

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது வாகனங்களை மீண்டும் புதிய பாகங்களை பொருத்தி புனர்நிர்மாணம் செய்வது போல ........ அப்பாடா எனக்கு இன்னொரு 70 வருடங்கள் இருக்கு . ......... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

அதாவது வாகனங்களை மீண்டும் புதிய பாகங்களை பொருத்தி புனர்நிர்மாணம் செய்வது போல ........ அப்பாடா எனக்கு இன்னொரு 70 வருடங்கள் இருக்கு . ......... ! 😂

ஆகா எனக்கு 80 வருடங்கள் இருக்கு.

சார் இளமையாகவும் இருக்கலாமா?

அல்லது மருந்து மாத்திரையுடன் தான் இருக்க வேண்டுமா?

39 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா எனக்கு 80 வருடங்கள் இருக்கு.

சார் இளமையாகவும் இருக்கலாமா?

அல்லது மருந்து மாத்திரையுடன் தான் இருக்க வேண்டுமா?

அது நீங்கள் மாற்றும் உறுப்புகளைப் பொறுத்தது 😁

ஒவ்வொரு உறுப்புகளும் காலப்போக்கில் பழுதடைவது போல மூளைக்கும் ஆயுட்காலம் உண்டு. அது ஆகக் கூடுதலாக 120 வருடங்கள் இயங்குமாம். பெரும்பாலானோருக்கு 90 வயதுக்குமேல் ஆட்டம் கொடுக்கும். ஏனைய உறுப்புகளை மாற்றியபின் உங்களை நீங்களே மறந்து விட்டால் என்ன பிரயோசனம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

எனக்கே விசர் பிடிக்குது ராசா. எத்தனை ஏழை எளிய மக்களின் உறுப்புகளை இந்த அரக்க அரசியல்வாதிகள் புடுங்க போகிறார்களோ????

இவர்கள் 3D பிறின்டட் உடலுருப்புக்களை (3D Printed organs) பற்றிப் பேசியிருப்பார்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, இணையவன் said:

அது நீங்கள் மாற்றும் உறுப்புகளைப் பொறுத்தது 😁

ஒவ்வொரு உறுப்புகளும் காலப்போக்கில் பழுதடைவது போல மூளைக்கும் ஆயுட்காலம் உண்டு. அது ஆகக் கூடுதலாக 120 வருடங்கள் இயங்குமாம். பெரும்பாலானோருக்கு 90 வயதுக்குமேல் ஆட்டம் கொடுக்கும். ஏனைய உறுப்புகளை மாற்றியபின் உங்களை நீங்களே மறந்து விட்டால் என்ன பிரயோசனம் 😂

என்ன இணையவன் ஒரு சின்ன ஆசை.

அதிலும் மண்ணை அள்ளி போடுகிறீர்களே?

  • கருத்துக்கள உறவுகள்

"மரணமில்லா வாழ்வு" - ரஷ்யா, சீனா அதிபர்கள் பேசியது என்ன?

7 மணி நேரங்களுக்கு முன்னர்

சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் உச்சி மாநாடு மற்றும் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்க சென்றார் ரஷ்ய அதிபர் புதின். அப்போது ஒரு தருணத்தில் ரஷ்ய அதிபரும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் நடந்து செல்லும் போது அவர்கள் இருவருக்கு இடையில் பேசிக் கொண்டவை அருகில் இருந்த மைக்கில் பதிவாகியது.

இருவரும் தங்கள் மொழிகளில் பேசிக் கொண்ட நிலையில், மொழிபெயர்ப்பாளர்களின் குரல் பதிவு வெளியாகியுள்ளது.

அதில் அவர்கள் உறுப்பு மாற்று சிகிச்சை குறித்தும், சாகா நிலைக்கான சாத்தியங்கள் இருப்பது குறித்தும் பேசும் சுவாரஸ்யமான உரையாடலை கேட்க முடிகிறது.

"கடந்த காலத்தில், மக்கள் அரிதாகவே 70 வயதுக்கு மேல் வாழ்ந்தனர், ஆனால் இன்று 70 வயதிலும் உங்களை ஒரு குழந்தை என அழைக்கின்றனர்." என்று ஷி ஜின்பிங் கூறினார்.

இதற்கு பதிலளித்த புதின்,"மனித உறுப்புகளை தொடர்ந்து மாற்றலாம். எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அவ்வளவு இளமையாக மாறுவீர்கள். சாகாநிலைக்கும் கூட செல்லலாம்" என்றார்.

இந்த நூற்றாண்டில், மனிதர்கள் 150 வயது வரை வாழக்கூடும் என்று சிலர் கணிக்கிறார்கள்

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c7013lrryzpo

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

அதாவது வாகனங்களை மீண்டும் புதிய பாகங்களை பொருத்தி புனர்நிர்மாணம் செய்வது போல ........ அப்பாடா எனக்கு இன்னொரு 70 வருடங்கள் இருக்கு . ......... ! 😂

இருபது வயதில் ஒருவரிடமிருந்து அபகரித்து நாம் இன்னும் 70 வருடங்கள் வாழ்வது மகிழ்ச்சி தருமா அண்ணா எமக்கு???

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இருபது வயதில் ஒருவரிடமிருந்து அபகரித்து நாம் இன்னும் 70 வருடங்கள் வாழ்வது மகிழ்ச்சி தருமா அண்ணா எமக்கு???

அத விடுங்கோ , மகாபாரதத்திலேயே மகனின் ஆயுளை வாங்கி மங்கையரின் உறவை அனுபவித்த மன்னனின் கதை உண்டு . ....... முதல்ல ஷி ஜின்பிங்கும் புடினும் எத்தனை வயதுவரை வாழுகின்றார்கள் என்று பார்த்து விட்டு இது பற்றி கலந்துரையாடலாமே விசுகர் . .......அதுவரை இதை சீரியஸாய் எடுக்கவேண்டாம் . ....... இரவுத் தூக்கம் முக்கியம் . ......! 😀

  • கருத்துக்கள உறவுகள்

வயித்தெரிச்சலை கிளப்புவதற்காக இது திட்டமிட்டு கசிய விட்டிருப்பார்களோ🤣, இதற்கான கதை வசனத்தினை நிகழ்ச்சிக்கு முன்னதாக ஒத்திகையும் பார்த்திருப்பார்கள் 🤣, சீனாவின் சுப்பர் கியூமன் பற்றிய வதந்திகள் ஏற்கனவே உள்ளது, இரஸ்சியா தனது குடிமக்களுக்கு இலவச புற்றுநோயிற்கு mRNA தடுப்பூசி இலவசமாக கொடுக்கின்றது என்பதற்கே பல சர்ச்சைகளாக உள்ளது இதற்கிடையில் இதனை வேறு கிளப்பிவிட்டுள்ளார்கள்😁.

15 hours ago, விளங்க நினைப்பவன் said:

😟

புதின் , ஷி ஜின்பிங் ,கிம் ஜாங் உன்னும் தாங்கள் வாழ்க்கை வாழ்வதற்காக உலகநாடுகளை ஆக்கிரமித்து மக்களின் உறப்புக்களை அபகரிக்க கூடிய பயங்கரவாதிகள்.

விளங்கநினைப்பவன் இந்த பொறியில் மாட்டிவிடாதீர்கள்😂.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.