Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக செயற்பட்ட தப்பியுள்ள சிலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழரசு கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (14) இடம்பெற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விளக்கம் கோரி எழுதிய கடிதங்கள்

மேலும் தெரிவிக்கையில், கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக இதன்போது பேசப்பட்டது. ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்கள் சம்மந்தமாக கட்சியின் உடைய தீர்மானங்களை மீறி செயற்பட்டவர்கள் அனைவருக்கும் எதிராக விளக்கம் கோரி கடிதம் அனுப்பபட்டுள்ளன.

கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை | Who Act Against Party Will Be Expelled From Party

நேரடியாக எங்கள் கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருக்கின்றனர்.

அதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட சிலர் எங்கள் கவனக்குறைவால் தப்பியுள்ளனர்.

அவர்களுடைய பெயர்களும் சொல்லப்பட்டுள்ளது. அவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். விளக்கம் கோரி எழுதிய கடிதங்களுக்கு சிலர் பதில் எழுதாமல் இருக்கின்றனர். சிலர் பதில் எழுதி இருக்கின்றனர்.

ஆகவே பதில் எழுதாதவர்கள் அவர்களுக்கு கொடுப்பதற்கு விளக்கம் எதுவும் இல்லை என நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் அதை அவர்களுக்கு அறிவிக்கின்றோம். அதற்கு மேலதிகமாக விளக்கம் எழுதப்படாவிட்டால் நடவடிக்கை எடுப்போம்.

கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நடவடிக்கை

அதேவேளை விளக்கம் எழுதியவர்கள் தொடர்பாக அவர்களது விளக்கத்தை ஆராய்ந்து அவர்களை கட்சியின் ஒழுக்காற்று முறைமைக்குள்ளே அவர்கள் குற்றம் செய்தவர்களாக இருந்தால் குற்றவாளிகளாக காணப்பட்டு ஒழுக்ககாற்று நடவடிக்கை மூலமாக அவர்களை கண்காணிப்பது அல்லது ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பதாக இருந்தால் கொடுப்பது என்ற கருத்துக்கள் நிலவி இருக்கின்றன.

கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை | Who Act Against Party Will Be Expelled From Party

அது தொடர்பாக ஒவ்வொரு விடயங்களை எடுத்து வெளிப்படுத்துவோம்.

ஆகவே கட்சியின் கட்டுப்பாடு சம்மந்தமாக மிக தெளிவான அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலே கட்சி தீர்மானத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றவர்களுக்கு எதிராக கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என தீர்மானித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்

Tamilwin
No image preview

கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரி...

இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக செயற்பட்ட தப்பியுள்ள சிலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழரசு கட்சியின் பிரத...
  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் 2 பேர் மட்டுமே மிஞ்சும்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புலவர் said:

கடைசியில் 2 பேர் மட்டுமே மிஞ்சும்

அந்த இரண்டு பேர்... சுமந்திரனும், சிவஞானமும்தான். 😂

அவர்கள் மாறி, மாறி... முதுகு சொறிஞ்சு கொண்டு இருக்க, சோக்காக இருக்கும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

கடைசியில் 2 பேர் மட்டுமே மிஞ்சும்

இரண்டு பேர் மட்டும் இருக்கும் ஒரு கட்சியை வைச்சுக் கொண்டு தேர்தலில் தனக்கு ஒரு சீற் வெல்லலாம் என்று முன்மாதிரி காட்டியிருக்கிறாரே ஒரு அரசியல் வாதி? யாரென்று தெரிகிறதா😎?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

அந்த இரண்டு பேர்... சுமந்திரனும், சிவஞானமும்தான். 😂

அவர்கள் மாறி, மாறி... முதுகு சொறிஞ்சு கொண்டு இருக்க, சோக்காக இருக்கும். 🤣

வணக்கம் சிறித்தம்பி! கண்டு கனகாலம்.😎

வெளிநாடுகளில் ஒரு அரசியல்வாதி தனக்கு மக்கள் செல்வாக்கு குறைகின்றது அல்லது இல்லை என தேர்தல் களங்கள் உணர்த்தும் போது தாமாகவே அரசியலிருந்து ஒதுங்கி விடுவார்கள். இது நாலும் படித்தவர்கள் செய்யும் செயல்.அடிக்கடி வெளிநாடு வந்து தங்கி உல்லாசமாக இருந்து விட்டு போகும் சுமந்திரனுக்கு இந்த வெளியுலகு அரசியல் நாகரீகம் புரியவில்லையா? 😂

இரண்டு தடவைகள் வாக்காள பெருமக்கள் செருப்படி கொடுத்தும் இன்னும் திருந்தவில்லை என்றால் இனவாத சிங்களத்தின் எடுபிடியாகவே இவரை சந்தேகிக்கின்றேன்.🧐

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ, இவர் கட்சியின் கட்டுப்பாட்டை, விதிமுறைகளை மீறி கருத்துச்சொல்லும்போது, பதவிகளை இறுக்கப்பற்றிக்கொண்டிருக்கும்போதும், தனக்காக இல்லாத புது பதவிகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்போதும் இவருக்கெதிராக யார் நடவடிக்கை எடுப்பது? ஒன்று, உவர் தானாக கட்சியை விட்டு வெளியேற வேண்டும், இல்லையேல் உவரை விட்டு மற்றவர்கள் வெளியேறவேண்டும். கறையான் புற்றெடுக்க விஷ கரு நாகம் இடையில் புகுந்திருந்து புற்றையே கலைக்குது. இவ்வளவு அவமானப்பட்டும் திருந்தவில்லை, என்ன ஜென்மமோ? இதில சட்டத்தரணி வேற.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

குமாரசாமி அண்ணை... நமது அரசியல்வாதிகள் எல்லோரும். மக்கள் சேவை செய்ய என்று பாராளுமன்றம் போவதெல்லாம் தமது சந்ததிக்கு சொத்து சேர்க்க மட்டுமே. இப்போ இருக்கும் இந்தத் தற்குறி அரசியல்வாதிகளால்... மக்களுக்கோ, இனத்திற்கோ எந்தவித பிரயோசனமும் இல்லை என்பதுடன், இருக்கும் பிரச்சினைகளை இழுத்தடித்து மேலும் சிக்கலாக்கி மீள முடியாத நிலைக்கு கொண்டு வந்து விட்டு விடுவார்கள். இந்த இழுத்தடிப்பு நேரத்தில் எதிரியானவன்... பலமடங்கு முன்னேறி எம்மை விழுங்கி விடுவான்.

அண்மையில்... ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டத்தை நீங்கள் கவனித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். ரணில் ஜனாதிபதியாக இருந்த போது ... சாணக்கியனுக்கு 60 கோடி ரூபாயும், சுமந்திரனுக்கு 90 கோடி ரூபாயும் கொடுக்கப் பட்டதாம். உடனே சாணக்கியன், மக்களின் தேவைகளை நிறைவேற்றவே அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டதாக சுய வாக்குமூலமும் கொடுத்து இருந்தார். ஆக சாணக்கியனும், சுமந்திரனும் எப்போதும் பின்கதவால் ஜனாதிபதிகளை சந்தித்து தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இருக்கின்றார்கள். "நக்குண்டார் நாவிழந்தார்" என்பது போல்... இவர்கள் தமிழ் மக்களுக்கு பலன் பெற்றுக் கொடுப்பார்கள் என்பது முட்டாள்தனமானது.

ரணிலிடம் வாங்கிய 90 கோடி ரூபாயை பற்றி, சுத்துமாத்து சுமந்திரன்... ஒன்றும் நடவாதமாதிரி அதைப்பற்றி கதைக்கவே இல்லை. அண்மையில் ரணில் கைது செய்யப் பட்ட போது ... விழுந்தடித்து ரணிலுக்கு ஆதரவாக அறிக்கை விட்டதன் மர்மமும்... அந்த செஞ்சோற்று கடன் அன்றி வேறு இல்லை. பல வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு குரல் கொடுக்க முடியாத சுமந்திரனுக்கு, ஊழல் செய்த ரணிலை கைது செய்தவுடன்.. பாசம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.

இதுகள்... எல்லாம், தமிழருக்கு கிடைத்த சாபக்கேடுகள்.

சிலர் இதற்கு வழக்கம் போல் ஆதாரம் வேண்டும் என்று கேட்கலாம். கோடிக்கணக்கில் கள்ளக் காசு வேண்டுகின்றவன் ஆதாரம் எல்லாம் வைத்துக் கொண்டு இதுகளை செய்வான் என்று நம்புகின்றமை.... அடிப்படை அறிவும் இல்லாத விதண்டாவாதக் காரர்களாகத்தான் இருப்பார்கள் என்பதை பலரும் அறிவார்கள்.

தீய சக்திகளுக்கு வெள்ளையடிக்க வரும் அவர்களை கணக்கில் எடுக்கத் தேவை இல்லை. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புலவர் said:

கடைசியில் 2 பேர் மட்டுமே மிஞ்சும்

ஆனால், ஒருவரே தலைவர். ஒருவரே உறுப்பினர் உள்ள கட்சிகளும் இலங்கைத்தீவில் உள்ளனவாமே. சனநாயகத்தில் இதெல்லாம் இல்லாதவையா?

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை... நமது அரசியல்வாதிகள் எல்லோரும். மக்கள் சேவை செய்ய என்று பாராளுமன்றம் போவதெல்லாம் தமது சந்ததிக்கு சொத்து சேர்க்க மட்டுமே. இப்போ இருக்கும் இந்தத் தற்குறி அரசியல்வாதிகளால்... மக்களுக்கோ, இனத்திற்கோ எந்தவித பிரயோசனமும் இல்லை என்பதுடன், இருக்கும் பிரச்சினைகளை இழுத்தடித்து மேலும் சிக்கலாக்கி மீள முடியாத நிலைக்கு கொண்டு வந்து விட்டு விடுவார்கள். இந்த இழுத்தடிப்பு நேரத்தில் எதிரியானவன்... பலமடங்கு முன்னேறி எம்மை விழுங்கி விடுவான்.

அண்மையில்... ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டத்தை நீங்கள் கவனித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். ரணில் ஜனாதிபதியாக இருந்த போது ... சாணக்கியனுக்கு 60 கோடி ரூபாயும், சுமந்திரனுக்கு 90 கோடி ரூபாயும் கொடுக்கப் பட்டதாம். உடனே சாணக்கியன், மக்களின் தேவைகளை நிறைவேற்றவே அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டதாக சுய வாக்குமூலமும் கொடுத்து இருந்தார். ஆக சாணக்கியனும், சுமந்திரனும் எப்போதும் பின்கதவால் ஜனாதிபதிகளை சந்தித்து தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இருக்கின்றார்கள். "நக்குண்டார் நாவிழந்தார்" என்பது போல்... இவர்கள் தமிழ் மக்களுக்கு பலன் பெற்றுக் கொடுப்பார்கள் என்பது முட்டாள்தனமானது.

ரணிலிடம் வாங்கிய 90 கோடி ரூபாயை பற்றி, சுத்துமாத்து சுமந்திரன்... ஒன்றும் நடவாதமாதிரி அதைப்பற்றி கதைக்கவே இல்லை. அண்மையில் ரணில் கைது செய்யப் பட்ட போது ... விழுந்தடித்து ரணிலுக்கு ஆதரவாக அறிக்கை விட்டதன் மர்மமும்... அந்த செஞ்சோற்று கடன் அன்றி வேறு இல்லை. பல வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு குரல் கொடுக்க முடியாத சுமந்திரனுக்கு, ஊழல் செய்த ரணிலை கைது செய்தவுடன்.. பாசம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.

இதுகள்... எல்லாம், தமிழருக்கு கிடைத்த சாபக்கேடுகள்.

சிலர் இதற்கு வழக்கம் போல் ஆதாரம் வேண்டும் என்று கேட்கலாம். கோடிக்கணக்கில் கள்ளக் காசு வேண்டுகின்றவன் ஆதாரம் எல்லாம் வைத்துக் கொண்டு இதுகளை செய்வான் என்று நம்புகின்றமை.... அடிப்படை அறிவும் இல்லாத விதண்டாவாதக் காரர்களாகத்தான் இருப்பார்கள் என்பதை பலரும் அறிவார்கள்.

தீய சக்திகளுக்கு வெள்ளையடிக்க வரும் அவர்களை கணக்கில் எடுக்கத் தேவை இல்லை. 😂

"இதுக்கெல்லாம் ஆதாரமில்லை" என மனம் தளர்வது ஏன்? "பச்சைக் கலரு சிங்குச்சா, சிவப்புக் கலரு சிங்குச்சா" என்று நீங்கள் பத்து இடத்தில் எழுதி விட்டாலே அது சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் வரை நின்று பிடிக்கக் கூடிய ஆதாரமாகி விடுமே😇??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, தமிழ் சிறி said:

ரணில் ஜனாதிபதியாக இருந்த போது ... சாணக்கியனுக்கு 60 கோடி ரூபாயும், சுமந்திரனுக்கு 90 கோடி ரூபாயும் கொடுக்கப் பட்டதாம். உடனே சாணக்கியன், மக்களின் தேவைகளை நிறைவேற்றவே அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டதாக சுய வாக்குமூலமும் கொடுத்து இருந்தார். ஆக சாணக்கியனும், சுமந்திரனும் எப்போதும் பின்கதவால் ஜனாதிபதிகளை சந்தித்து தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இருக்கின்றார்கள். "நக்குண்டார் நாவிழந்தார்" என்பது போல்... இவர்கள் தமிழ் மக்களுக்கு பலன் பெற்றுக் கொடுப்பார்கள் என்பது முட்டாள்தனமானது.

இவர்களைப்போன்ற மனிதர்களால் தான் தமிழினம் அழியும் நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. என்னை விடு நான் செய்கிறேன் என அப்பாவி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து விட்டு சிங்களத்தின் சலுகைகளை அனுபவிக்கும் அருவருடிகள்.
சம்பந்தன் இல்லாத அரசியல் தமிழர்களுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என ஒரு ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் போது சுமந்திரன் போன்றோர்களால் இன்னும் மோசமாக போவதையே காணக்கூடியதாக இருக்கின்றது. மக்களால் நிகாரிக்கப்பட்ட பின்னரும் மூக்கை நுழைக்கும் நபர் சுமந்திரன்.

அது சரி சம்பந்தனின் கண்டுபிடிப்பிடம் பெரிதாக எதை எதிர்பார்க்க முடியும். அது எட்டடி பாய்ந்தால் இது பதினாறடி பாயுது.🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2025 at 22:38, குமாரசாமி said:

வணக்கம் சிறித்தம்பி! கண்டு கனகாலம்.😎

வெளிநாடுகளில் ஒரு அரசியல்வாதி தனக்கு மக்கள் செல்வாக்கு குறைகின்றது அல்லது இல்லை என தேர்தல் களங்கள் உணர்த்தும் போது தாமாகவே அரசியலிருந்து ஒதுங்கி விடுவார்கள். இது நாலும் படித்தவர்கள் செய்யும் செயல்.அடிக்கடி வெளிநாடு வந்து தங்கி உல்லாசமாக இருந்து விட்டு போகும் சுமந்திரனுக்கு இந்த வெளியுலகு அரசியல் நாகரீகம் புரியவில்லையா? 😂

இரண்டு தடவைகள் வாக்காள பெருமக்கள் செருப்படி கொடுத்தும் இன்னும் திருந்தவில்லை என்றால் இனவாத சிங்களத்தின் எடுபிடியாகவே இவரை சந்தேகிக்கின்றேன்.🧐

தேர்தலில் மக்கள் நிராகரித்தால் விலகி போகும் வழக்கம் தமிழ்நாட்டுக்கு பொருந்தாதா🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

தேர்தலில் மக்கள் நிராகரித்தால் விலகி போகும் வழக்கம் தமிழ்நாட்டுக்கு பொருந்தாதா🤣

தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கபட்ட சீமானுக்கு என்றால் நீதி சாஸ்திரங்கள் எல்லாம் ... சாப்பிட சென்றுவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, goshan_che said:

தேர்தலில் மக்கள் நிராகரித்தால் விலகி போகும் வழக்கம் தமிழ்நாட்டுக்கு பொருந்தாதா🤣

சுமந்திரன் அவர்கள் தமிழர்களின் ஏகோபித்த அபிமானமும் ஆதரவும் உள்ள கட்சியில் சுயலாபத்திற்காக இணைந்து கொண்டவர். அவர் அக்கட்சியினை வளர்த்தெடுக்கவில்லை. அதற்காக பாடுபடவும் இல்லை. மற்றவர்கள் கட்டி பாதுகாத்த கோட்டையில் சுலபமாக புகுந்த கருநாகம் சுமந்திரன் என்பவர்.

சீமான் அப்படியல்ல.அவர் உருவாக்கி வளர்ந்துவரும் கட்சி அது.எந்த/எவர் முதலீடும் இல்லாமல் கொள்கை ஒன்றை மட்டும் வைத்து முன்னேறி வரும் கட்சி அது. வாக்குக்கு பணம் செலுத்தாத கட்சி அது. கட்சி கூட்டங்களுக்கு பணம் செலுத்தி மக்களை கூட்டாத கட்சி அது.

😃சும்மா எதற்கெடுத்தாலும் சொப்பன சுந்தரி விஜயலச்சுமி மாதிரி உளறப்படாது.🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இங்கே ஒப்பீடு தமிழரசு, நாதக கட்சிகள் பற்றியதல்ல.

கட்சிகள் மேற்கில் கூட ஒரு தேர்தலில் தோற்றவுடன் கடையை சாத்திவிட்டு கிளம்புவதில்லை.

இங்கே ஒப்பீடு தேர்தலில் மக்களால் ஒருதடவை தேரப்பட்டு, ஒரு தடவை நிராகரிக்க பட்ட சுமனுக்கும்….போட்ட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் டெபாசிட் இழந்த சீமானுக்கும்.

On 15/9/2025 at 22:38, குமாரசாமி said:

வெளிநாடுகளில் ஒரு அரசியல்வாதி தனக்கு மக்கள் செல்வாக்கு குறைகின்றது அல்லது இல்லை என தேர்தல் களங்கள் உணர்த்தும் போது தாமாகவே அரசியலிருந்து ஒதுங்கி விடுவார்கள்.

கவனிக்கவும். நீங்கள் கூட அரசியல்வாதிகள் பற்றித்தான் சொல்லி உள்ளீர்கள். கட்சிகள் பற்றியல்ல.

பிகு

ஆட்டுக்குள் மாட்டை விடவில்லை.

ஆனால்….

சுமந்திரன் ஒரு தேர்தல் தோல்வியோடு விலகி விட வேண்டும், என மேற்கை ஆதாரம் காட்டும் நீங்கள்…

சீமான் எத்தனை தேர்தலில் டெபாசிட் இழந்தாலும் அதை ஆதரிக்கும் …

இரெட்டை நிலைப்பாட்டை மட்டுமே சுட்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2025 at 22:54, புலவர் said:

கடைசியில் 2 பேர் மட்டுமே மிஞ்சும்

CSXc53.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

இங்கே ஒப்பீடு தமிழரசு, நாதக கட்சிகள் பற்றியதல்ல.

கட்சிகள் மேற்கில் கூட ஒரு தேர்தலில் தோற்றவுடன் கடையை சாத்திவிட்டு கிளம்புவதில்லை.

இங்கே ஒப்பீடு தேர்தலில் மக்களால் ஒருதடவை தேரப்பட்டு, ஒரு தடவை நிராகரிக்க பட்ட சுமனுக்கும்….போட்ட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் டெபாசிட் இழந்த சீமானுக்கும்.

கவனிக்கவும். நீங்கள் கூட அரசியல்வாதிகள் பற்றித்தான் சொல்லி உள்ளீர்கள். கட்சிகள் பற்றியல்ல.

பிகு

ஆட்டுக்குள் மாட்டை விடவில்லை.

ஆனால்….

சுமந்திரன் ஒரு தேர்தல் தோல்வியோடு விலகி விட வேண்டும், என மேற்கை ஆதாரம் காட்டும் நீங்கள்…

சீமான் எத்தனை தேர்தலில் டெபாசிட் இழந்தாலும் அதை ஆதரிக்கும் …

இரெட்டை நிலைப்பாட்டை மட்டுமே சுட்டுகிறேன்.

சுமந்திரன் ஒரு பெரும் கட்சியில் இணைந்து அதுவும் ஒட்டுமொத்த தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பேரால் போட்டியிட்டு இரு தடவை தோல்வியடைந்தவர். அந்த கட்சிக்கு இன்றும் ஒரு பெரிய மரியாதை இலங்கை அளவில் இருக்கின்றது. சர்வதேச அளவில் இலங்கை இனப்பிரச்சனை என்றால் எல்லோரும் அணுகுவது அக்கட்சி தலைமையில் இருப்பவர்களை மட்டுமே.அப்படிப்பட்ட ஒரு மாபெரும் கட்சி முக்கியஸ்தர் தோல்வியடைகின்றார் என்றால் அவர் மீதுள்ள நம்பிக்கை இல்லையென்ற அர்த்தத்தை தவிர வேறொன்றுமில்லை.

மற்றவர்கள் பார்வையில் சுமந்திரன் ஒரு தடவை மட்டும் தோல்வியுற்றதாக தெரியலாம். எனது பார்வையில் இரு தடவைகள்.சுமந்திரனின் முதலாவது தோல்வியில் சசிகலா ரவிராஜ் பலிக்கடாவாக்கப்பட்டார்.இரண்டாவது தோல்விக்கு காரணம் மக்கள் இன்னும் நன்றாக தங்களை சுதாகரித்து கொண்டனர்.

😂 பெண் சாபமும்/பாவமும் சும்மா விடாது கோஷான் 🤣

மீண்டும் சொல்கிறேன். எனக்கு இரட்டை நிலைப்பாடு எங்கும் எதிலும் இருந்ததில்லை.ஏனென்றால் இந்த உலகில் அரசியல் கொள்கையும் நீதி நியாயங்களும் ஒரே தராசில் வைத்து பார்க்க முடியாதவை.

ஒரு இடத்தில் மரண தண்டனை சரியாக தெரியும். இன்னொரு இடத்தில் மரணதண்டனை பிழையாக தெரியும். இதே போல் தான் அரசியல் கொள்கைகளும் என நான் நினைக்கின்றேன்.

கவனிக்க👉 சீமான் வளர்ந்து வரும் கட்சியை சேர்ந்தவர். அவர் வளர இன்னும் இடமுண்டு. அவரது கொள்கைகளை அடிமட்ட/பாமர மக்கள் புரிந்து கொள்ள கால அவகாசங்கள் நிறைய தேவை.தமிழ்நாட்டு அரசியல் என்பது சினிமா ஆதிக்கம் உள்ள அரசியல்.இரண்டரை மணி நேர சினிமாவில் முதல்வர் ஆவது போல் கனவு இருப்பவர்களுக்கு அது சாத்தியமாகலாம்.ஆனால் சீமான் கட்சி கொள்கை அப்படியல்ல என நினைக்கின்றேன்.எத்தனை தடவைகள் கட்டுப்பணம் இழந்தாலும் ஒரு காலத்தில் நாம் தமிழர் கட்சி பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக வரும் என நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு சவாலானவர்களை நீக்குவார், ஒத்தூதுபவர்களை பதவியில் இருத்துவார், இறுதியில் இவரால் நீக்கப்பட யாரும் இருக்கமாட்டார் கட்சியில், இவரை நீக்கவுவும் யாருமிலர். தானாகவே கோப்பு கட்டுகளோடு நீங்குவார். அப்போ; சுமந்திரன் என்றால் தமிழரசுக்கட்சியை வேரோடு நாசம் செய்தவர் என்றே மக்களுக்கு நினைவு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்காக மக்களால் அமைக்கப்பட்டு, பிரதிநிதிகளை தம் சார்பாக தெரிந்தெடுத்து, தமது பிரச்சனைகளை பாராளுமன்றம் எடுத்துச்சென்று தீர்த்து வைப்பதும், அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுப்பதும் மக்கள் பிரதிநிதிகளின் கடமை. கட்சி மக்களுக்காவன்றி கட்சிக்காக மக்களல்ல. அப்படியிருக்கும் போது, ஜனாதிபதி வேட்ப்பாளருக்கு கணிசமான மக்கள் வாக்களித்துள்ளார்கள். அவர்களின் விருப்பும் அதுவாகத்தான் இருந்தது. மக்களின் விருப்புக்கு, ஆதரவாக செயற்பட்ட உறுப்பினரை, கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் உரிமையில்லை. அப்படி ஒருவர் மக்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக செயற்படுபவராக இருந்தால், அவரை மக்கள் தங்கள் பிரதிநிதியாக, கட்சியின் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து, கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும், அதுதான் நடந்தது. ஆனால் அதை குறித்த நபர், ஏற்றுக்கொள்ள மறுத்து, தன்னிச்சையாக, கட்சி உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாக கட்சியையும், அதன் பதவிகளையும் கையகப்படுத்தும் போது, மக்கள் அந்தக்கட்சியை நிராகரிக்க வேண்டிய கட்டாயம், தேவை ஏற்படுகிறது. இந்த எதேச்சாதிகார உறுப்பினரின் நடவடிக்கையால் கட்சியிலிருந்து நீக்கப்படும், பழிவாங்கப்படும் உறுப்பினர்களை எங்கிருந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தயாராக வேண்டும். மக்களுக்கு சேவை செய்பவர்கள், மக்களின் விருப்பு வெறுப்புக்கு முன்னுரிமை வழங்குபவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் அவர்கள் சேவை தொடரும். கட்சி முக்கியமல்ல, மக்களுக்கான சேவையே முக்கியம். உறுப்பினர்களுக்கு குடைச்சல் கொடுத்து, அவமானப்படுத்தி வெளியேற்றுவது. பின், சவால் விடுவது குற்றம் சுமத்துவது இந்த பிடாரியின் வழக்கம். தமிழரசுக்கட்சி மக்களுக்கான கட்சி. சுமந்திரனின் வீட்டுச்சொத்தல்ல. தமிழரசுக்கட்சியை சுமந்திரன் இறுக்கப்பிடித்தால், மக்கள் வேறொரு கட்சியை உருவாக்க வேண்டிய தேவையை இவரே உருவாக்குகிறார். தமிழரசுக்கட்சியை விட்டு வெளியேறி வேறொரு கட்சியில் நின்று வென்று காட்டுங்கள் பாப்போம் என்று சவால் விட்டவர், தமிழரசுக்கட்சியில் நின்றே வென்று காட்டட்டும், பாப்போம் மக்கள் நாம்! இது மக்கள் அவருக்கு வைக்கும் சவால்!

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

இரு தடவை தோல்வியடைந்தவர்.

எந்த இரு தடவை?

2010 இல் தேசியப்பட்டியல், 2015,20 இல் வெற்றி. 2024 இல் தோல்வி.

இதுதான் சுமனின் தேர்தல் வரலாறு.

மீண்டும் சொல்கிறேன் சுமன் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்பதுதான் என் நிலைப்பாடும்.

ஆனால் அரசியல்வாதிகள் மக்காலால் தேர்ந்தெடுக்கபடுவதும் இல்லாமல் போவதும் சகஜம்.

தந்தை செல்வா கூட காங்கேசந்துறையில் தோற்றார் அல்லவா? அரசியலை விட்டே போனாரா?

நீங்கள் சொல்லும் மேற்கில் கூட பல உதாரணக்கள் உள்ளன,

உங்கள் பாசத்துக்குரிய டிரம்ப் உட்பட.

ஆகவே சுமனுக்கு வந்தால் தக்காளி சோஸ், சீமானுக்கு வந்தால் ரத்தம் என்பது இரெட்டை நிலைப்பாடே.

அதைத்தான் அம்பலப்படுத்தினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2025 at 09:14, குமாரசாமி said:

சும்மா எதற்கெடுத்தாலும் சொப்பன சுந்தரி விஜயலச்சுமி மாதிரி உளறப்படாது.

36 லட்சத்துக்கும் அதிக வாக்கு எடுத்தவனை 5 க்கும்... 10 க்கும் அல்லாடுற அல்லு சில்லறைகளோடு ஒப்பிடுவதே மேதாவித்தனம் கண்டியலே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எந்த இரு தடவை?

2010 இல் தேசியப்பட்டியல், 2015,20 இல் வெற்றி. 2024 இல் தோல்வி.

இதுதான் சுமனின் தேர்தல் வரலாறு.

மீண்டும் சொல்கிறேன் சுமன் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்பதுதான் என் நிலைப்பாடும்.

ஆனால் அரசியல்வாதிகள் மக்காலால் தேர்ந்தெடுக்கபடுவதும் இல்லாமல் போவதும் சகஜம்.

தந்தை செல்வா கூட காங்கேசந்துறையில் தோற்றார் அல்லவா? அரசியலை விட்டே போனாரா?

நீங்கள் சொல்லும் மேற்கில் கூட பல உதாரணக்கள் உள்ளன,

உங்கள் பாசத்துக்குரிய டிரம்ப் உட்பட.

ஆகவே சுமனுக்கு வந்தால் தக்காளி சோஸ், சீமானுக்கு வந்தால் ரத்தம் என்பது இரெட்டை நிலைப்பாடே.

அதைத்தான் அம்பலப்படுத்தினேன்.

ஏன் இவ்வளவு facts சொல்லி மெனக்கெடுகிறீர்கள் எனத் தெரியவில்லை😂.

சுமந்திரன் பின்கதவு (தேசியப் பட்டியல்), ஆனால் கஜேந்திரன் தேசியப் பட்டியல் (முன்கதவு).

கஜேந்திரகுமார் தேர்தல்களில் எத்தனை தடவைகள் தோல்வி?

சுமந்திரன் லவ்வர்சுக்கு facts என்பது பாகைக் காய் மாதிரி!

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

36 லட்சத்துக்கும் அதிக வாக்கு எடுத்தவனை 5 க்கும்... 10 க்கும் அல்லாடுற அல்லு சில்லறைகளோடு ஒப்பிடுவதே மேதாவித்தனம் கண்டியலே.

பரவாயில்லை, இப்போதாவது மலசலம் கலக்காமல் எழுத முயன்றுள்ளீர்கள்.

வாத்தியார் குட்டு வேலை செய்கிறது.

வாழ்த்துக்கள்.

உங்கள் அடி முட்டாள்தனமான வாக்கு எண்ணிக்கை ஒப்பீட்டுக்கான பதில் கீழே.

  1. 36 இலட்சம் எடுத்தது 234 சட்டமன்ற தொகுதிகளில் 39 பாராளுமன்ற வேட்பாளர்கள் சேர்ந்து 🤣.

  2. சுமன் எடுத்தது யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மட்டும்.

  3. யாழ் மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை ஐந்து லட்சத்து நாற்பதினாயிரம்.

  4. தமிழ் நாட்டின் மொத்த (234 தொகுதி) - ஆறு கோடி முப்பத்தாறு இலட்சம்.

பிகு

மேலே உள்ள தரவுகளை உள்வாங்கினால் (முடிந்தால்)….

ஒரு தனி வேட்பாளர் 5.4 இலட்சம் வாக்காளரிடம் பெற்ற வாக்குகளையும்…

234 தொகுதியில் 39 வேட்பாளர் 6.3 கோடி வாக்காளரிடம் பெற்றதையும்

ஒன்றென்ன எண்ணி ஒப்பிடுபவரின் அதி, அதி புத்திசாலிதனத்தை விளங்கி கொள்ளலாம்.

*2021 இல் திருவெற்றியூரில் சீமான் எடுத்தது 48,000 சொச்சம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள விளக்கம், எழுதியவருக்கும், லைக்கியவருக்கும்.

🤣🤣🤣

பொறுப்பு துறப்பு

மேலே கருத்தாளரை அன்றி, வாக்கு ஒப்பீட்டு முறையையே அடிமுட்டாள்தனமானது என விளித்துள்ளேன்.

வாசிப்போர் எப்படி பொருள்கொள்கிறார்கள் என்பற்கு நான் பொறுப்பல்ல🤣.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:
  1. 36 இலட்சம் எடுத்தது 234 சட்டமன்ற தொகுதிகளில் 39 பாராளுமன்ற வேட்பாளர்கள் சேர்ந்து 🤣.

  2. சுமன் எடுத்தது யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மட்டும்.

  3. யாழ் மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை ஐந்து லட்சத்து நாற்பதினாயிரம்.

  4. தமிழ் நாட்டின் மொத்த (234 தொகுதி) - ஆறு கோடி முப்பத்தாறு இலட்சம்.

அது தான் சீமான் மீதான கண்மூடித்தனமான அவர்கள் பக்தி அவர்கள் கண்ணை மறைத்து விடுகின்றது என்பதிற்கு இதுவும் ஒரு உதாரணம்.(லைக்கியவரும் வேறு இருக்கின்றார் 🤣)

கீமான் திரள்நிதி ஏமாற்றி பெற்று கொள்கின்ற இரகசியமும் அது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எவ்ரி பாடி கதறு (f)பைங் ... தாட்ஸ் இன(f)ப் (f)போர் நௌ!!! 😁🗣️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.