Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்களுக்கு மீசை அழகா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆணுக்கு அழகு மீசை. சங்க காலத்தில் ஆண்கள் முறுக்கு மீசையுடன் வலம் வந்தனர். நாகரீகம் வளர வளர மனிதனின் நடை, உடை பாவனை மாறியது. முறுக்கு மீசையும் தொங்கு மீசையானது. வெளிநாடுகளில் வசிக்கும் ஆண்களில் பெரும்பாலான பேர் மீசை இல்லாத முகத்தையே விரும்புகின்றனர். தமிழர்களில் பெரும்பாலான பேர் மீசை வைத்துக்கொள்வதை அவசியமாக கருதுகிறார்கள்.

இன்றைய இளைஞர்கள் கூட அரும்பு மீசையை தடவிப்பார்த்து `நாம பெரிய மனுசனாயிட்டோம்' என்று சந்தோஷப்பட்டுக் கொள்வதுண்டு. இப்படி பலருக்கு பல விதமான ரசனைகள் உண்டு.யாழ் கள உறுப்பினர்கள் இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? (தயவு செய்து நாட்டுக்கு இந்த கருத்து கணிப்பு தேவையா என கேட்காதீர்கள்)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மீசை பிடிக்கிறதில்ல. தாடி மீசை இரண்டும் என்றா கொஞ்சம் பிடிக்கும்..! சுத்தமான முகம் ரெம்பப் பிடிக்கும்...! நான் பாத்திருக்கேன் சில பெண்களுக்கும் மீசை இருக்குது. அவங்க இப்ப மழுச்சிட்டு வாழுறாங்க..! அதுயேன் பெண்களுக்கு மீசை முளைக்குது..??! :D:wub:

Edited by nedukkalapoovan

எனக்கு மீசை பிடிக்கிறதில்ல. தாடி மீசை இரண்டும் என்றா கொஞ்சம் பிடிக்கும்..! சுத்தமான முகம் ரெம்பப் பிடிக்கும்...! நான் பாத்திருக்கேன் சில பெண்களுக்கும் மீசை இருக்குது. அவங்க இப்ப மழுச்சிட்டு வாழுறாங்க..! அதுயேன் பெண்களுக்கு மீசை முளைக்குது..??! :lol::wub:

:D இதுக்குப் பதில் சொல்ல குருவியண்ணா தான் உகந்தவர். அவர் இப்ப எங்கேயோ. ம்ம் ம்ம் எல்லாம் காலம்.

மீசை இல்லாத ஆண்களின் முகம் தான் வடிவு. :blink::huh::lol::D ஜம்முத்தம்பி என்ன நித்திரையோ?

  • கருத்துக்கள உறவுகள்

மீசை இல்லாத ஆண்களின் முகம் தான் வடிவு. :D:blink::huh::lol: ஜம்முத்தம்பி என்ன நித்திரையோ?

நிலாதான் அந்த பச்சை பாலகனை கெடுக்கிறா போல இருக்கு.... :D:lol::wub:

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ்பாணத்தில் இருந்து மீசையோட கொழும்பிற்கு படிக்க போனனான் அப்ப அந்த வீட்டில் இருந்த முதியவர் தம்பி இந்த மீசையை எடுத்து போடு பார்க்க தமிழன் மாதிரி இருக்கு உங்க பிரச்சினைகுள்ள ஏன் மாட்டுபடுவான் என்று அறிவுரை கூறினார். :wub:

மீசைதான் ஆண்மைக்கு அழகு. :wub::D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கே அழகு இந்த மீசைதாங்க .

நிலாதான் அந்த பச்சை பாலகனை கெடுக்கிறா போல இருக்கு.... :D:blink::wub:

:huh::lol::D:lol::lol::( பெரிய கண்டுபிடிப்பு.

எனக்கு வேணும்தான். :D

ஜம்முத்தம்பி என்ன நித்திரையோ?

நிலா அக்கா எழும்பிட்டேன் மீசை இருந்தா தான் ஆம்பிளைக்கு அழகு சோ மீசை கட்டாயம் வேண்டும் பேபி கூட எவ்வளவு கஷ்டபட்டு மீசை வளர்த்து வைத்திருக்கு மம்மியிட்ட ஏச்சு வாங்கியும் :blink: ...........தாடியும் நேக்கு ரொம்ப பிடிக்கு மம்மியிட்ட பேச்சு விழுந்தது ஒருக்கா வளர்த்து வைத்திருந்ததிற்கு :D சோ தாடி இல்லை பட் மீசை கட்டாயம் வேண்டும் இது தான் பேபியின் தீர்ப்பு :D !!நிலா அக்கா மீசை இல்லாத ஆண்கள் முகம் தான் வடிவே அப்ப பேபி முகம் அழகில்லை என்று சொல்லுறது போல இருக்கு :lol: !!நுணாவிலன் அண்ணா உங்களுக்கு மீசை இருக்கோ சொல்லவே இல்லை!! :wub:

அப்ப நான் வரட்டா!!

நிலாதான் அந்த பச்சை பாலகனை கெடுக்கிறா போல இருக்கு.... :huh:

சபேஷ் மாமா நித்தாவால எழும்பி வந்துட்டேன் ஆமாம் நான் பச்சை பாலகன் தான் அது சரி மாமாவிற்கு மீசை இருக்கோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

தமிழனுக்கே அழகு இந்த மீசைதாங்க .

தமிழச்சிக்கு அழகு (தோ)சைதானுங்க.. :wub:

*சை .... வெட்கமாம்

நிலா அக்கா எழும்பிட்டேன் மீசை இருந்தா தான் ஆம்பிளைக்கு அழகு சோ மீசை கட்டாயம் வேண்டும் பேபி கூட எவ்வளவு கஷ்டபட்டு மீசை வளர்த்து வைத்திருக்கு மம்மியிட்ட ஏச்சு வாங்கியும் :wub: ...........தாடியும் நேக்கு ரொம்ப பிடிக்கு மம்மியிட்ட பேச்சு விழுந்தது ஒருக்கா வளர்த்து வைத்திருந்ததிற்கு :D சோ தாடி இல்லை பட் மீசை கட்டாயம் வேண்டும் இது தான் பேபியின் தீர்ப்பு

பேபி! இவ்வளவு தமிழ் பற்று உள்ள நீங்கள் வீட்டில் அம்மாவை மம்மி என்று அழைக்காமல் "அம்மா" என்றே அழைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

குழந்தை பேசும் முதல் வார்த்தை அம்மா! அந்த முதல் வார்த்தையையே

இரவல் எடுத்து பேசும் அளவுக்கு தமிழுக்கு வறுமை வந்து விட்டதா என நான் பல

தடவை பலரையும் பார்த்து வெறுப்படைந்து இருக்கிறேன்

Edited by vettri-vel

மீசைதான் ஆண்மைக்கு அழகு. :wub::D

நரைத்த மீசை அதை விட அழகு...சத்தியாமாய் என்னை சொல்ல வில்லை பாருங்கோ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு சின்ன கருத்து கணிப்பு என்னுடைய குடும்பத்தில் எடுத்து பார்த்தேன்.அப்பாவும் ஒரு தங்கச்சியும் மீசை வேண்டுமென்றும்,அம்மா,மற்ற தங்கச்சி,அண்ணா மீசை வேண்டாமென்று வாக்களிச்சினம்.அப்போ அம்மாவின் கட்சி 3:2 என்ற வாக்குகள் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.

பேபி! இவ்வளவு தமிழ் பற்று உள்ள நீங்கள் வீட்டில் அம்மாவை மம்மி என்று அழைக்காமல் "அம்மா" என்றே அழைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

குழந்தை பேசும் முதல் வார்த்தை அம்மா! அந்த முதல் வார்த்தையையே

இரவல் எடுத்து பேசும் அளவுக்கு தமிழுக்கு வறுமை வந்து விட்டதா என நான் பல

தடவை பலரையும் பார்த்து வெறுப்படைந்து இருக்கிறேன்

வெற்றிவேல் அண்ணா வீட்டை அம்மா என்று தான் கூப்பிடுறனான் "மம்மி: என்று கூப்பிட்டா அம்மாவிட்ட ஏச்சு தான் விழும் :D இங்கே சும்மா நம்ம கந்தப்பு தாத்தாவை டென்சன் ஆக்க தான் வெற்றி அண்ணா :huh: !!நாம இங்கே தான் மம்மி என்று எழுதுறோம் ஆனா இங்கே தமிழ் என்று சொல்லுறவை எல்லாம் என்ன செய்யீனம் என்று நேக்கு தானே தெரியும் :wub: !!நீங்கள் சொல்வது சரி தான் அண்ணா!! :blink:

அப்ப நான் வரட்டா!!

நானும் ஒரு சின்ன கருத்து கணிப்பு என்னுடைய குடும்பத்தில் எடுத்து பார்த்தேன்.அப்பாவும் ஒரு தங்கச்சியும் மீசை வேண்டுமென்றும்,அம்மா,மற்ற தங்கச்சி,அண்ணா மீசை வேண்டாமென்று வாக்களிச்சினம்.அப்போ அம்மாவின் கட்சி 3:2 என்ற வாக்குகள் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.

கள்ளவாக்கு போட ஏலாம் போயிட்டோ நுணாவிலன் அண்ணா!! :wub:

அப்ப நான் வரட்டா!!

நுணுக்கம்! அப்பிடிக் கூப்பிடலாமா? அனுமதி பிளீஸ்

ஆமா நலமோடு வாழும் பகுதிக்கும் மீசைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? ஆதிக்கு யோசிச்சு யோசிச்சு மூளையும் நரம்பும் களைச்சுப் போச்சு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் எங்கே போடலாம் என்றுதான் யோசித்து பார்த்தேன்.ஊரிலே பெரிய மீசை வைச்ச ஆட்கள் கூழ் குடிக்கேக்குள்ளே பார்த்திருக்கிறேன்.மீசை எல்லாம் பிரட்டி அடிச்சு ....அந்த கண்றாவியை பார்க்க முடியவில்லை.ஆகவே யாராவது இந்த வழியில் யோசிக்கிறாங்களோ என்று பார்த்தனான்.அது தான் இங்கு இணைத்துள்ளேன் :):D:)

நான் பாத்திருக்கேன் சில பெண்களுக்கும் மீசை இருக்குது. அவங்க இப்ப மழுச்சிட்டு வாழுறாங்க..! அதுயேன் பெண்களுக்கு மீசை முளைக்குது..??! :D:)

அது ஏன் சில ஆண்களுக்கு மீசை முளைக்கிது இல்ல? :)

  • கருத்துக்கள உறவுகள்
:):) ஒரு காலத்திலை ஏனடா மீசை வளருதில்லையெண்டு கவலை இப்ப இது ஏண்டா வளருது எண்ட கவலை. :D:D
  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் சில ஆண்களுக்கு மீசை முளைக்கிது இல்ல? :)

ஓ.. இந்தக் கணக்கை சரியெய்யத்தான் பெண்களுக்கு முளைக்குதோ...! இப்பதான் விளங்கிச்சிது..! :D:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது பரவலாக எல்லாக்கடைகளிலும் பெண்களுக்கான சேவிங்செற் விற்பனை செய்கின்றார்கள்! :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பரவலாக எல்லாக்கடைகளிலும் பெண்களுக்கான சேவிங்செற் விற்பனை செய்கின்றார்கள்! :)

அதுவா.. அது ஏனென்னா.. காலு கையி.. முகமு.. தலையை மட்டும் மறந்திட்டாங்க.. என்று எல்லா இடமும் உள்ள மயிர்களை மழுச்சி எறிஞ்சா தங்கட வடிவு கூடுமாம் என்று மழுக்கினம் பெண்கள். பாத்தாங்க ஆண்கள் சேவ் பண்ணிப் பண்ணி முகம் பொலிவாகிறாங்க.. பொறாமை தாங்க முடியல்ல.. உடன தாங்களும் இல்லாத பொல்லாத இடமெல்லாம் மழுயல் தான்..! :D:)

Edited by nedukkalapoovan

என்னங்கடா இது மீசையில துவங்கி இப்ப சப்ஜெக்ட் வேற எங்கையோ போகிது.

ஆண்களாயினும் சரி, பெண்களாயினும் சரி உடலில் உள்ள உரோமங்களை அகற்றுவது மேலைநாடுகளில் ஒன்றும் புதுசு இல்லை. முக்கியமாக சுகாதார காரணங்களிற்காக இப்படி செய்கின்றார்கள். அழகாக இருக்கவேண்டும் என்பதும் ஒரு காரணம்.

மற்றது, சேவ் எல்லாம் எடுத்து கஸ்டப்படத் தேவை இல்லை. லேசர்கதிர் மூலம் நிரந்தரமாக உரோமங்களை உடலில் இருந்து அகற்ற முடியும். உடலில் உள்ள உரோமங்களை முழுதாக அகற்ற கனடாக் காசில் சொல்வதானால் சுமார் $1,500 செலவாகும். பெண்கள் மட்டுமன்றி இங்கு ஆண்களும் அதிகளவில் இவ்வாறு உடலில் உள்ள உரோமங்களை அகற்றுகின்றார்கள்.

எனக்கும் யாராவது $1,500 காசு தந்தால் நானும் எண்ட உடலில தேவை இல்லாத இடங்களில் உள்ள உரோமங்களை அகற்ற ஆயத்தமாய் இருக்கிறன்.

கீழ சில படங்கள் இருக்கிது பாருங்கோ.

permanent_laser_hair_removal.jpg

hairpic.jpg

male-back-before-and-after.jpg

manchest2.jpg

laser4.jpg

back2.jpg

picture-03.jpg

ஆங்கிலம் தெரிஞ்ச ஆக்கள் மேலதிக தகவல்கள இஞ்சபோய் வாசியுங்கோ.. http://en.wikipedia.org/wiki/Laser_hair_removal

  • கருத்துக்கள உறவுகள்

உடலில் உள்ள முடிகளை செயற்கைத்தனமாக அகற்றுவதில் உள்ள சுகாதாரக் காரணிகள் என்ன..??! முகத்தில் உள்ள முடிகளை தவிர..!

தோலில் உள்ள முடிகள் மனிதனின் ஓர்சீர்த்திடநிலையை (Homeostasis).. அதாவது உடல்வெப்பச் சீராக்கலில் மிக முக்கிய பங்காற்றுகிறது..! மனித உடலைச் சுற்றி ஒரு காற்றுப்படையை சிறைபிடித்து வைக்க அது உதவுகிறது. இதன் மூலம் தோலின் புறச்சூழல் அதிக மாற்றமின்றி உடலின் வெப்பநிலையை அண்மித்திருக்க செய்யப்படுகிறது. குறிப்பாக காலநிலை மாற்றங்களோடு உடலின் ஓர்சீர்த்திடநிலையை கட்டிக்காக்கும் பணியில் இந்த உரோமங்களுக்கு முக்கிய பணி இருக்கிறது..!

அழகு என்று சொல்லி உரோமத்தை அகற்றுகின்றனர். மயிர்க்கணுக்களில் எண்ணைச் சுரப்பிகள் உள்ளன. அவைதான் தோல் உலராமல் இருக்க எண்ணையை சுரக்கின்றன. இந்த எண்ணையில் உள்ள anti microbial agents நுண்ணங்கிகள் தோலில் ஏற்படுத்தும் தொற்றை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. உரோமங்களை அகற்றும் போது மயிர்க்கணுக்களும் சேதமாக வாய்ப்புள்ளது. இதனால் தோல் உலர்வடையவும் இதன் மூலம் பல பாதகமான பின் விளைவுகள் நேரவும் வாய்ப்பு ஏற்படும். அதற்கு பரிகாரமாக கிறீம்களை தருவர். கிறீம்களின் பாவனை தோலில் உள்ள வியர்வைச் சுரப்பித் துவாரங்களை மூடுவதால் மனித உடலின் சீரான உடற்தொழிபாட்டில் குழப்பங்கள் நேர இடமளிக்கப்படுகின்றன.

ஆக உரோமம் அகற்றக் காசு.. பின் தோலைப் பராமரிக்க வழங்கும் செயற்கை கிறீம்களின் வியாபாரத்தால் காசு.. ஆக மொத்தத்தில் மனிதனை அழகுபடுத்திறன் என்று இயற்கையான உடற்பாதுகாப்புச் செயற்பாட்டினை சீரழிச்சு வியாபாரம் செய்யுறாங்க. படிச்ச கூட்டம் முதல் படிக்காதது வரை அழகின் ரசனை மட்டத்தை இறக்கி.. உடல் உரோமத்தில போய் நிற்கிறது.. இது ரெம்ப வேடிக்கையானது..!

அண்மைய பிரித்தானிய விஞ்ஞான பாட வினாத்தாள்களில் இந்த உரோமம் அகற்றுதலின் பின்னணியில் எழும் கிறீம்களின் பாவனை எவ்வாறு தோலின் செயற்பாடுகளை பாதிக்கின்றன என்பது குறித்தான வினாக்களை அவதானிக்க முடிகிறது. உலகம் வியாபாரத்துக்க சிக்கிக் கிடந்தாலும்..சிந்திக்கவும் செய்கிறது என்பதற்கு இது நல்ல சான்று..!

பொதுவாக ஆண்கள் முக முடி மற்றும் சில இடங்களைத் தவிர உடல் முடி அகற்றுவது குறைவு. பெண்கள் தான் முகத்தில முடியில்லை எண்ணாக் கூட முகப்பொலிவு நாடி மழிக்கின்றனர். நான் நேரடியா அவதானிச்சிருக்கிறன் கேட்டும் இருக்கிறன். பெண்கள் சரியான லூசுகளோ என்று கூட நினைக்கும் படி... அவர்களின் சில நடத்தைகள் அமைந்திருக்கின்றன.

உடலில் உள்ள உரோமங்களால் என்ன சுகாதாரக் கேடு.. என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா.. கலைஞன்..???! :):lol:

Edited by nedukkalapoovan

இந்த குளிரிக்கையும், வெக்கையுக்கையும் நாங்கள் ஹீட்டரையும் ஏசியையும் பாவிக்கிறம். நீங்கள் சொன்னமாதிரி உரோமம் ஒரு சீர்த்திடநிலையை ஏற்படுத்த காட்டுமனிதனுக்கு உதவக்கூடும். இஞ்ச மைனஸ் மூண்டு துவக்கம் மைனஸ் பதினைஞ்சு டிகிரியுக்க ஜக்கட்ட போட்டு, ஹீட்டருக்க இருந்தால் ஒழிய இல்லாவிட்டால் எங்கட கதை காலி. இத மாதிரி வெக்கை காலத்தில ஏசி...

மொடேர்ன் மனிதன் உரோமங்களை நம்பி வாழவில்லை. எல்லாம் பிசினசு உலகம். பல்லைக் காட்டினால் பலகோடி கிடைக்கும். உம்மெண்டு வாயை வச்சு இருந்தால் போலீசு பயங்கரவாதி எண்டு விசாரணைக்கு கூட்டிக்கொண்டு போகும்.

இப்படியான நிலமைகளில உரோமங்கள வளர்த்து காட்டுமிராண்டிகள் மாதிரி மற்ற ஆக்கள பயப்படுத்தாமல் நாகரீகமான மனிதனா டீசண்டா (ஆகக்குறைந்தது உடல் தோற்றத்திலாவது) இருக்கலாம்.

உரோமம் சாப்பாட்டுக்க விழுந்தால், போகக்கூடாத இடத்துக்க போனால் எல்லாம் சுகாதாரக் கேடுதான். இதுபற்றி மேலதிகமாக உங்களுக்கு விளக்கமா சொல்லி நிருவாகத்திடம் நான் வெட்டு வாங்கமுடியாது.

உரோமம் இல்லாமல் வழுக் வழுக் எண்டு உடம்பு இருந்தால் அதிலும் ஒரு சுகம் உள்ளது. கண்டபடி உடம்பை சொறியத் தேவையில்லை. இலகுவாக சவுக்காரம் போட்டு குளிக்கலாம். உடம்பில் ஊத்தை கிலோக் கணக்கில் ஒட்டிப்பிடித்துக்கொண்டு இருக்காது.

உங்களுக்கும் விருப்பம் எண்டால் லேசர் கதிர் மூலம் உரோமங்களை அகற்றி பாருங்கோ. வெட்கம் எண்டால் சொல்லுங்கோ, ரெண்டு பேரும் சேர்ந்து போவம். ஆனா என்ன இதுக்கு ஒரு $3,000 செலவாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.