Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாமத்திய வீடு கொண்டாடுவது அசிங்கமா?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாமத்திய விழாவிற்குப் எடுத்துச் செல்ல வசதியாக ஏதாவது கார்ட் இருக்கா? பேர்த்டே கார்ட், வலன்ரைன் கார்ட், வெடிங் கார்ட், அனிவேர்சரி கார்ட் எல்லாம் இருக்கு.. ஆனால் பியூபேர்ற்றிக் கார்ட் அகப்படுதில்லை..

மேடையில் போய் என்ன சொல்லலாம்? வெல் டன்??, யூ டிட் இற்??>

தமிழ் உலகத்தில் காட் அனுப்புறது, கேக் வெட்டுறது எல்லாம் வருதோ என்று தமிழ்பற்றாளர்களாக்க காட்டிக் கொள்ளுகின்ற நக்கீரன், ஈழவேந்தன் ஐயாமாரிட்ட தான் கேட்க வேணும்.

  • Replies 52
  • Views 11.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சாமத்திய விழாவிற்குப் எடுத்துச் செல்ல வசதியாக ஏதாவது கார்ட் இருக்கா? பேர்த்டே கார்ட், வலன்ரைன் கார்ட், வெடிங் கார்ட், அனிவேர்சரி கார்ட் எல்லாம் இருக்கு.. ஆனால் பியூபேர்ற்றிக் கார்ட் அகப்படுதில்லை..

மேடையில் போய் என்ன சொல்லலாம்? வெல் டன்??, யூ டிட் இற்??> :icon_mrgreen:

ஏன் இல்லை. தமிழ் பிள்ளையளைத்தானே வாழ்த்திறீர்கள். தமிழில வாழ்த்துங்கோ..! :icon_idea:

http://www.tamilcardshop.com/artikel.php?id=36

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்திய விழாவிற்குப் எடுத்துச் செல்ல வசதியாக ஏதாவது கார்ட் இருக்கா? பேர்த்டே கார்ட், வலன்ரைன் கார்ட், வெடிங் கார்ட், அனிவேர்சரி கார்ட் எல்லாம் இருக்கு.. ஆனால் பியூபேர்ற்றிக் கார்ட் அகப்படுதில்லை..

மேடையில் போய் என்ன சொல்லலாம்? வெல் டன்??, யூ டிட் இற்??> :icon_mrgreen:

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் என்று மொட்டையாகச் சொல்ல முடியாதே. எதற்கு என்று சொல்ல வேண்டுமே!! :icon_mrgreen:

பெண் பூப்படைவது என்பது பெண்ணினுடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்வு.

தங்களுடைய மகள் எவ்வித பிரச்சனையும் இன்றி பூப்பெய்தி விட்டாள், பருவத்தின் அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டாள் என்று பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவது புரிந்து கொள்ளக்கூடியதுதான்.

அந்த மகிழ்ச்சியை தமது உறவினர்களோடு கொண்டாடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது.

ஆனால் தற்பொழுது செய்வது போன்று ஊர் உலகத்திற்கு சொல்லி ஆர்ப்பட்டம் செய்வது சரியா என்பது என்னுடைய கேள்வி.

வேறொரு இனமும் கொண்டாடுகிறது என்ற காரணம் ஒரு சடங்கை நியாயப்படுத்த போதுமானது அல்ல.

இதுவே என்னுடைய கருத்தும்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் என்று மொட்டையாகச் சொல்ல முடியாதே. எதற்கு என்று சொல்ல வேண்டுமே!! :)

இப்படியான விழாக்களுக்கு உங்களை மாதிரி இளைஞர்கள் போறதே தப்பு.அதுக்குள்ளே வாழ்த்து வேற சொல்லப்போறாராம் :rolleyes:

சாமத்திய விழாவிற்குப் எடுத்துச் செல்ல வசதியாக ஏதாவது கார்ட் இருக்கா? பேர்த்டே கார்ட், வலன்ரைன் கார்ட், வெடிங் கார்ட், அனிவேர்சரி கார்ட் எல்லாம் இருக்கு.. ஆனால் பியூபேர்ற்றிக் கார்ட் அகப்படுதில்லை..

மேடையில் போய் என்ன சொல்லலாம்? வெல் டன்??, யூ டிட் இற்??> :)

கான் யூ பிளீஸ் டெமொண்ஸ்ரேட் இட் நவ்? எண்டும் கேக்கலாம்.. (ஆனால் செருப்படி விழக்கூடும்.. :rolleyes: )

அசிங்கம்.

அருவருப்பு.

உவ்வாக்.

விபச்சாரம்

வியாபாரம்

உவ்வாக்.

இளைஞன்.

எனது மகள் வயதுக்கு வந்து விடாள் என்பதை சொல்லி , அவள் இனிமெலும் சிறுமி அல்ல எண்றும் அவளுக்கு தீங்கு நடக்காமல் காப்பது உறவுகளின் கடமை அதை ஒரு நன்நாளில் உறவுகளை கூட்டி அவளை வாழ்த்துவதை எப்படி அசிங்கம் அருவருப்பு என்கிறீர்கள்...???

எங்கட சமூக கடமைப்பின் படி, சிறுவனாகவோ இல்லை பெரியவனாகவோ ஒருவர் தவறு செய்யும் போது நாங்கள் வீடு செல்ல முன்னர் விடயம் வீட்டுக்கு போய்விடும்... சமூகம் எல்லாருமாக சேர்ந்து எடுக்கும் கூட்டு நடவடிக்கை அப்படி இருக்கும்...

ஒரு சிறுவன் வயது முதிர்ச்சியில் பெரியவனாகிறான்.. அதேமாதிரி எண்றாலும் சிறுமி பூப்படைவது 12டிலும் நடக்கலாம் 18 லும் நடகலாம்... அது நடந்ததின் பிற்பாடு அவளுக்கு பதுகாப்பு அளிக வேண்டிய பாதுகாப்பு அளிக்க வேன்டியது சமூகத்தின் கடமை... அந்த அமூகத்துக்கு மகளின் விடயத்தை ஒரு சடங்காக செய்கிறார்கள்.... வசதியில் கூடியவர்கள் விமரிசையாக செய்கிறார்கள்...

இது புலபெயர் நாட்டில் தேவையா என்பது எனக்கு சொல்ல தெரியவில்லை..

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அசிங்கம்.

அருவருப்பு.

உவ்வாக். :D

விபச்சாரம்

வியாபாரம்

உவ்வாக். :)

ஐயையோ வாந்தி வருகின்றதா????எதற்கும் நல்ல வைத்தியரிடம் காட்டுங்கள்,சிலவேளைகளில் முழுகாமல் இருக்கலாம் :):(

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ வாந்தி வருகின்றதா????எதற்கும் நல்ல வைத்தியரிடம் காட்டுங்கள்,சிலவேளைகளில் முழுகாமல் இருக்கலாம் :unsure::lol:

முழுகாமல் இருந்தா வாந்தி வரும் என்றீங்க. ஏன் பெண்கள் முழுகனும். மாதவிடாய்க்கும் முழுக்குக்கும் என்ன சம்பந்தம்.

மாதவிடாய் என்பது பெண்கள் முட்டை இட்டு அது கருட்டாமல் விடப்படும் போது அந்த முட்டை அழிவடையும். கருப்பையும் ஒவ்வொரு முட்டையும் கருக்கட்டி முளையாமாகப் பதியப்படும் என்று எதிர்பார்த்து தன்னை பொலிஷ் பண்ணி வைக்கும். ஆனால் அது நடக்கிறதில்லை. உடன முட்டையழியும் போது கருப்பையும் தனது மேலணிகளை உதிர்த்து தன்னை மீள பொலிஷ் பண்ணும். அடுத்த முட்டை கருக்கட்டினால் பதிய வைக்க என்று..! அதுவும் நடக்காட்டி மீள உதிர்த்தல் புதுப்பித்தல் என்று நடக்கும்.. இது தொடர்சியாக மாதம் மாதம் நிகழ்வதால்.. மாதவிடாய் என்றாச்சுது.

மாதவிடாயின் போது பெண்ணின் இனப்பெருக்க பகுதியில் இருந்து குருதியும் சிதைந்த மேலணிக்கலங்களும் வெளியேறும். அது நுண்ணங்கிகளுக்கு நல்ல போசனையை வழங்கலாம் என்பதால இனப்பெருக்க உறுப்பை சுத்தமா வைச்சிக்கிறது அவசியம். அதோட ஓமோன்களின் ஆதிக்கத்தால் பிறப்புறுப்புப் பகுதியில் சில சுரப்பிகள் தூண்டப்பட சுரப்புக்கள் உருவாகும் அவையும் மற்றும் உதிரும் இரத்தம் மற்றும் கலங்கள் வெளியேறும் போதும் அருவருப்பான துர்நாற்றம் வீசலாம். இதையும் தவிர்க்கனும். இப்போ எல்லாம் பெண்களுக்கு இவற்றைக் கட்டுப்படுத்த என்று மிகவும் சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட செயற்கை வாசனையூட்டப்பட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன.

அப்படி இருக்க முழுகாம இருக்கிறது என்பதன் அர்த்தம் என்ன..??! முழுகிறதுக்கும்.. முழுகாததற்கும் பெண்களுக்கும் என்ன தொடர்பு. முழுகிறதால தலையைச் சுத்தம் செய்யலாம். ஆனால் மாதவிடாயின் போது தலையைவிட இனப்பெருக்க உறுப்புப் பகுதிதானே அதிகம் நுண்ணங்கி தொற்றலுக்கு இலக்காக வாய்ப்பைக் கொண்டிருக்குது..??! ஒருவேளை முழுகுவதன் மூலம் தான் பெண்கள் தங்களை பரிபூரணமா சுத்தப்படுத்தினம் என்றால்.. கருக்கட்டிய பின்னும் முழுகத்தானே வேணும். அப்படியே முழுகாம இருந்திட்டா என்னாகிறது. பிறக்கும் குழந்தை பல தொற்றுநோய்களோட நுண்ணங்கிகளைக் காவிட்டுத்தான் பிறக்கும்..! எனவே முழுகாம இருக்கிறது என்பது கருட்டி இருக்கிறது என்பதை மறைமுகமாகச் சொல்லுதல் என்று நினைக்கிறன். அதை நேரடியாகவே கருக்கட்டி இருக்கிறன் என்றது. அதில என்ன வெட்கம். கலியாணம் என்று ஆணும் பெண்ணும் புணர அனுமதிக்கிறதைக் கொண்டாடினம்.. இதில வெட்கமாம்..??!

அண்மையில் உயிரியல் மருத்துவ ஆய்வு ஒன்றில் குழந்தை ஒன்றைப் பிறப்பிக்க இருந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து பெறப்பட்ட திரவ மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்திய போது அதில் மொத்தம் 6 வகையான ஆபத்தான நுண்ணங்கிகள் இருந்தன. அதுவும் ஒரு வளர்ந்த நாட்டில்.. இக்கதியென்றால்.. பொதுவா நம்மூர் பெண்களோ.. தனிச் சுகாதாரத்தில் வெளிப்பூச்சுத்தான். எங்கெங்க சுகாதாரம் பேணணுமோ அங்க பேணாங்க..! அவை முழுகாமவும் விட்டா கதியென்ன..!

இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தான்..! சுத்தம் சுகம் தரும் பாருங்கோ. சும்மா முழுகாம இருக்கிறதென்று முழுகிறதையும் விட்டுடாதேங்கோ..! :(:lol:

சாமத்தியவீடு செய்யுறது ஒரு வகையில் இது தொடர்பான அறிவூட்டலை வழங்கிறதாக் கூட இருக்கலாம். பெண்ணைக் குளிக்க வைச்சு.. புத்தாடை அணிவிச்சு.. இப்படி செய்யுறது தொற்றுக்களைத் தவிர்க்கச் சொல்லுறதாக் கூட இருக்கலாம். அதைச் சமூகத்தைக் கூட்டிச் சொல்லுறது இது தொடர்பில் சமூக விழிப்புணர்வை ஊட்டவும் என்றமையலாம்.

சில ஆண்களுக்கு இது பற்றிய அறிவு அவசியம். சில ஆண்கள் எப்பபார் பெண்கள் கூட உடல் ரீதியான உறவை வேண்டிறவையா இருக்கலாம். அப்படி இருக்கிறவையில் அறிவுடையவையும் இருப்பினம் அறிவில்லாதவையும் இருப்பினம். பெண்கள் எப்போதும் உடல் ரீதியான உறவுக்கு தயார் ஆனவங்க இல்ல. அவங்களுக்கு தேவையைப் பொறுத்துத்தான் உடல் ரீதியான உறவுக்கு விருப்பு வெறுப்பு ஏற்படும். அதற்கு ஓமோன்களின் பங்களிப்பு முக்கியம். ஆண்கள் போல அன்றி பெண்களின் ஓமோன் கள் சிலவற்றின் அளவு குருதியில் கூடிக் குறையும் அதற்கேற்ப அவர்களின் நடத்தை விருப்பு வெறுப்பு கோபம் சினம்.. மகிழ்ச்சி என்பனவும் மாறுபடும். இதையெல்லாம் ஆண்கள் கவனிக்கிறாங்களா என்ன..??!

சொல்லப் போனால் பெண்கள் ஆண்களிடம் வாழ்க்கையில் ரெம்பவே எதிர்பார்த்துப் போராடிக் களைச்சுப் போறாங்க. புரிஞ்சுக்கிற ஆண்கள் ரெம்பவே குறைவு. புரிஞ்சுக்கிறன் என்றவங்க கூட தங்கள் தேவை முடியும் வரைதான். முடிஞ்சாப்பிறகு.. புரிஞ்சது போதுண்டி என்றிட்டுப் போயிடுறாங்க.

சாமத்தியச் சடங்கு வெறும் வீடியோ ஒளிப்பதிவு செய்ய என்று நில்லாமல் மக்களை பெண்களின் சுகாதாரம் தொடர்பில் அறிவுறுத்தும் என்றால் அதை எப்பவும் கொண்டாடுங்க. ஆண்களும் பெண்களின் சுகாதாரத்திலும் தங்களின் சுகாதாரத்திலும் கவனம் எடுக்கனும் என்பதுதான் ஆண்களையும் சாமத்தியச் சடங்குக்கு அழைக்கிற நோக்கமா இருக்கலாம்.

அதைவிட்டிட்டு.. ஆளாளுக்கு கண்டபடி கதை எழுதாதேங்க. ஒன்றைப் பற்றி கொஞ்சம் என்றாலும் அறிவியல் பூர்வா சிந்திச்சு... வழிகாட்ட முனையுங்க..! :lol:

Edited by nedukkalapoovan

எனது மகள் வயதுக்கு வந்து விடாள் என்பதை சொல்லி , அவள் இனிமெலும் சிறுமி அல்ல எண்றும் அவளுக்கு தீங்கு நடக்காமல் காப்பது உறவுகளின் கடமை அதை ஒரு நன்நாளில் உறவுகளை கூட்டி அவளை வாழ்த்துவதை எப்படி அசிங்கம் அருவருப்பு என்கிறீர்கள்...???

எங்கட சமூக கடமைப்பின் படி, சிறுவனாகவோ இல்லை பெரியவனாகவோ ஒருவர் தவறு செய்யும் போது நாங்கள் வீடு செல்ல முன்னர் விடயம் வீட்டுக்கு போய்விடும்... சமூகம் எல்லாருமாக சேர்ந்து எடுக்கும் கூட்டு நடவடிக்கை அப்படி இருக்கும்...

ஒரு சிறுவன் வயது முதிர்ச்சியில் பெரியவனாகிறான்.. அதேமாதிரி எண்றாலும் சிறுமி பூப்படைவது 12டிலும் நடக்கலாம் 18 லும் நடகலாம்... அது நடந்ததின் பிற்பாடு அவளுக்கு பதுகாப்பு அளிக வேண்டிய பாதுகாப்பு அளிக்க வேன்டியது சமூகத்தின் கடமை... அந்த அமூகத்துக்கு மகளின் விடயத்தை ஒரு சடங்காக செய்கிறார்கள்.... வசதியில் கூடியவர்கள் விமரிசையாக செய்கிறார்கள்...

இது புலபெயர் நாட்டில் தேவையா என்பது எனக்கு சொல்ல தெரியவில்லை..

வயதுக்கு வந்த பெண்ணைப் பலர் முன்னிலையில் குளிக்க வைத்து வீடியோ எடுப்பது எந்த வகையிலும் பண்பாடாகாது. ஒருவேளை முற்காலத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக சாமத்திய வீடு கொண்டாடப்பட்டிருக்கலாம். ஆனால் இப்போது புலம் பெயர் நாடுகளில் அது திரிபடைந்து ஷம்பெயின் உடைத்து கேக் வெட்டுமளவிற்கு வந்துள்ளது. இது தேவயற்ற ஒன்றே.

புலம் பெயர் நாடுகளில் சாமத்திய வீடு பிறந்த நாள் திருமணம் செத்தவீடு முப்பத்தொண்டு துவசம் எல்லாம் எமது சனங்கள் ஒன்று கூடி ஒரு சமூக உறவு ஏற்பட வாய்பாகின்றது. அவ்வாறான ஒரு கோணத்தில் புலம்பெயர் நாடுகளில் இந்த நிகழ்வுகள் வரவேற்கத்தக்கது.

சாமத்திய வீட்டை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட பெண்ணின் விருப்பு வெறுப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதே ஆரோக்கியமானது. அவளின் விருப்புவெறுப்புக்கு அப்பாற்பட்டு அவளை பயன்படுத்துவது தவறு.

நாட்டில் மிக ஒற்றுமையாக இருந்த இருகுடும்பம் ஒரு திருமணவிழா அழைப்பின்மையால் புலம்பெயர் நாட்டில் பிரிந்துள்ளது. சம்மந்தப்பட்டவர் தனது திருமணத்திற்கு தன்னுடைய சாதியயை தவிர்ந்த ஏனையவரை அழைக்கவில்லை. அதை கொளரவக்குறைவாக நினைத்தார். அவ்வாறான காரணத்தால் நாட்டில் அயல்வீடுகளாக இருந்தும் நல்ல நட்பாக இருந்தும் சாதிப்பாகுபாடு என்பது வித்தியாசமாக வெளிப்பட்டது.

அடுத்து உலங்கு வானூர்த்தி வாடைகக்கு எடுத்து திருமணம். கப்பல் திருமணம். அழகிய தீவுகளை வாடகைக்கு எடுத்து திருமணம். 300 0000 ஆயிரம் கனேடிய டொலர்கள் செலவழித்து திருமணம் போன்று இன்னாட்டு செல்வந்தர்களே வியக்கும் திருமணங்கள் வர்க்க மேலாண்மையை நிலைநிறுத்துகின்றது தவிர அதில் எமது கலாச்சாரம் பண்பாடு எமது மக்களை ஒன்றுகூடி வாழ்த்துவது என்பது என்று எதுவும் இல்லை. எமது கலச்சாரம்வர்க்க மேலாண்மைக்கு பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுகின்றது.

எமது மக்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளுக்கு இவ்வகையான நிகழ்வுகள் தீர்வாக அமையும் வகையில் வரவேற்கத்தக்கது. இதுவே நிகழ்வுகளில் பிரதானமானதாக கருதப்பட்டது. உறவுகள் பகையை மறந்து ஒன்றுகூடும்சந்தர்ப்பங்கள் என்பது எப்போதும் வரவேற்கத்தக்கது. ஆனால் அது நேரெதிர்க்கோணத்தில் முரண்பாடுகளை வளர்க்குமானால் நிகழ்வுகள் கவலைக்குரியது.

உண்மையானதை அப்பட்டமாக விவரித்துள்ளீர்கள். சுகனுக்கு என் வாழ்த்துக்கள் :unsure:

என் அனுபவத்தை சொன்னால்

எனக்கு அடி விழுந்தாலும் விழும்

வேண்டாம் இந்த வேதனை............ :unsure:

சாமத்தியச் சடங்கு பற்றி பல்வேறு தடவைகள் இங்கு கருத்துக்களத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இங்கு சில இணைப்புகள்

http://www.yarl.com/forum/viewtopic.php?t=235

http://www.yarl.com/forum3/index.php?showtopic=15037

முற்றம் பகுதியில் இருந்து: http://www.yarl.com/articles/node/166

முழுகாமல் இருந்தா வாந்தி வரும் என்றீங்க. ஏன் பெண்கள் முழுகனும். மாதவிடாய்க்கும் முழுக்குக்கும் என்ன சம்பந்தம்.

அப்படி இருக்க முழுகாம இருக்கிறது என்பதன் அர்த்தம் என்ன..??! முழுகிறதுக்கும்.. முழுகாததற்கும் பெண்களுக்கும் என்ன தொடர்பு. முழுகிறதால தலையைச் சுத்தம் செய்யலாம். ஆனால் மாதவிடாயின் போது தலையைவிட இனப்பெருக்க உறுப்புப் பகுதிதானே அதிகம் நுண்ணங்கி தொற்றலுக்கு இலக்காக வாய்ப்பைக் கொண்டிருக்குது..??! ஒருவேளை முழுகுவதன் மூலம் தான் பெண்கள் தங்களை பரிபூரணமா சுத்தப்படுத்தினம் என்றால்.. கருக்கட்டிய பின்னும் முழுகத்தானே வேணும். அப்படியே முழுகாம இருந்திட்டா என்னாகிறது. பிறக்கும் குழந்தை பல தொற்றுநோய்களோட நுண்ணங்களைக் காவிட்டுத்தான் பிறக்கும்..! எனவே முழுகாம இருக்கிறது என்பது கருட்டி இருக்கிறது என்பதை மறைமுகமாகச் சொல்லுதல் என்று நினைக்கிறன். அதை நேரடியாகவே கருக்கட்டி இருக்கிறன் என்றது.

எல்லாம் தெரிந்த உங்களுக்குமா இதில சந்தேகம்.

மாதம் மாதம் வரக்கூடிய தீட்டுக்காலம் முடிந்த பின்னர் எல்லாவிதமான அசுத்தங்களும் போகவென முழுக்கு ஒன்று போடுகிறார்கள் பெண்கள். முழுக்கு என்பது இந்தக்காலத்தில் ஒவ்வொரு முறையும் சம்பூ வைத்து தோய்வது போன்றதல்ல அந்தக் காலத்தில். சீயாக்காய் இன்னும் பல பொருட்கள் சேர்த்து அரைத்து அதை வைத்து முழுகுவார்கள். அதுதான் அந்தக் காலத்து சம்பூ.

இனி ஒவ்வொரு மாதமும் ஒழுங்காக முழுகிற ஒரு பெண் முழுகாம இருக்கிறாள் என்றால் என்ன அர்த்தம். அந்தக் காலத்து தமிழர்கள் பண்பு தெரிந்தவர்கள். இதைவிட நாசூக்காக ஒரு பெண் கர்ப்பம் உண்டாயிருக்கிறாள் என்று சொல்ல முடியாது.

:unsure:

முதற்கண் உங்கள் புதுவரவுக்கு வாழ்த்திக் கொண்டு உங்கள் பதிலுக்கும் நன்றி சொல்லிக் கொள்ளுறன்.

ஆனால்...

தீட்டு என்பது என்ன..??! அரப்பு சீயாக்காய் வைச்சு முழுகினாத்தான் அது போகும் என்பதற்கு.. அதென்ன உடலோடு ஒட்டிய அழுக்கா... இல்ல மனசோட ஒட்டிய அழுக்கா...??! ஏனுன்னா உடலோட ஒட்டிய அழுக்கென்றால் அதை சம்பூவும் போக்காட்டும் அரப்பு சீயாக்காயும் போக்காட்டும்..! அதுதான் கேட்டேன்.

அப்போ மாதவிடாயின் போது தாங்கள் அழுக்காக இருக்கிறதா பெண்கள் உணர்கிறார்கள் எங்கிறீர்கள்.. மனதளவிலும்..??! (நான் பெண்ணில்லை அதனால் எனக்கு இந்த உணர்வைப் பற்றித் தெரியாது. நான் படித்த நூல்களிலும் அப்படி எதுவும் குறிப்பிட்டதா நான் அறியல்ல. அறியாமல் இருக்கலாம்..!) :lol:

முதற்கண் உங்கள் புதுவரவுக்கு வாழ்த்திக் கொண்டு உங்கள் பதிலுக்கும் நன்றி சொல்லிக் கொள்ளுறன்.

ஆனால்...

தீட்டு என்பது என்ன..??! அரப்பு சீயாக்காய் வைச்சு முழுகினாத்தான் அது போகும் என்பதற்கு.. அதென்ன உடலோடு ஒட்டிய அழுக்கா... இல்ல மனசோட ஒட்டிய அழுக்கா...??! ஏனுன்னா உடலோட ஒட்டிய அழுக்கென்றால் அதை சம்பூவும் போக்காட்டும் அரப்பு சீயாக்காயும் போக்காட்டும்..! அதுதான் கேட்டேன்.

அப்போ மாதவிடாயின் போது தாங்கள் அழுக்காக இருக்கிறதா பெண்கள் உணர்கிறார்கள் எங்கிறீர்கள்.. மனதளவிலும்..??! (நான் பெண்ணில்லை அதனால் எனக்கு இந்த உணர்வைப் பற்றித் தெரியாது. நான் படித்த நூல்களிலும் அப்படி எதுவும் குறிப்பிட்டதா நான் அறியல்ல. அறியாமல் இருக்கலாம்..!) :unsure:

நிச்சயமாக. இதற்கும் மனத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது வெறும் உடல் சம்பந்தப்பட்டதே. மேலதிக விளக்கம் தேவையெனில் மீண்டும் இரண்டாவது பக்கத்தில் நீங்கள் எழுதிய மாதவிடாய் சம்பந்தமான உடலியற் செயற்பாட்டை வாசித்துப் பார்க்கவும்.

வரவேற்புக்கு நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமத்தியச் சடங்கு பற்றி பல்வேறு தடவைகள் இங்கு கருத்துக்களத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இங்கு சில இணைப்புகள்

http://www.yarl.com/forum/viewtopic.php?t=235

http://www.yarl.com/forum3/index.php?showtopic=15037

முற்றம் பகுதியில் இருந்து: http://www.yarl.com/articles/node/166

ஐயா மோகன்!இதிலையிருந்து என்ன தெரியுது? சாமத்தியவீடு எண்டாலே யாழ்களம் ஒரே கலகலப்பாயிருக்குது :unsure: அதோடை இப்ப மாதவிடாயைப்பத்தியும் விவாதிக்க ஆரம்பிச்சாச்சு அதுதான் ஊரிலை "தொடமாட்டா" எண்டு சொல்லுவினம் :lol:

அதோடை புதுசாய் வந்திருக்கிற அவதாரம் முதலிலை எங்கை கால் வைச்சிருக்கிறார் பாத்தியளே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக. இதற்கும் மனத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது வெறும் உடல் சம்பந்தப்பட்டதே. மேலதிக விளக்கம் தேவையெனில் மீண்டும் இரண்டாவது பக்கத்தில் நீங்கள் எழுதிய மாதவிடாய் சம்பந்தமான உடலியற் செயற்பாட்டை வாசித்துப் பார்க்கவும்.

வரவேற்புக்கு நன்றி

நான் எழுதியதையே நான் வாசிக்கனும் என்றது...??! ரெம்ப ஓவர்.

நான் உங்கள் "தீட்டு" என்ற பதத்தின் பின்னணியில் உள்ளதை வெளியில் எடுக்க முனைந்தேன். ஆனால் நீங்கள் அழகாக நழுவிவிட்டீர்கள்..! :unsure:

எல்லாரும்உங்கட பிள்ளைகளுக்கு கொண்டாடுங்கோ..

விரும்பாதவை கொண்டாடாதேங்கோ...

ஏன் எங்களை போட்டு கொல்லுறீங்கோ... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எழுதியதையே நான் வாசிக்கனும் என்றது...??! ரெம்ப ஓவர்.

நான் உங்கள் "தீட்டு" என்ற பதத்தின் பின்னணியில் உள்ளதை வெளியில் எடுக்க முனைந்தேன். ஆனால் நீங்கள் அழகாக நழுவிவிட்டீர்கள்..! :lol:

மாதவிலக்கு என்பது ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் விதித்த ஒன்றாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மாதவிலக்கு (ஹைள்) என்பது பெண் பருவ வயதையடைந்தால் கர்ப்பப் பையிலிருந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் வெளியேறும் இரத்தத்தைக் (Menstruation) குறிக்கும். குறித்த காலத்திற்கும் கூடுதலாகவும் வெளியாகக்கூடிய இரத்தம் ''உயர் இரத்தப் போக்கு'' (இஸ்திஹாளா) எனப்படும். மாதவிலக்கு இரத்தமானது கர்ப்பப் பையின் ஆழத்திலிருந்து வெளியாகும். உயர் இரத்தப் போக்கானது கர்ப்பப் பையின் வாய்ப்பகுதியிருந்து கசியும் இரத்தமாகும். இந்த இருவகை இரத்தங்களிலும் வித்தியாசம் உண்டு அதுபோல் இதற்கான சட்ட விதிமுறைகளிலும் வேறுபாடு உண்டு.

பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் காலங்களில் அவர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு, மாதவிலக்கை அனுபவிக்கும் பெண்கள் அசுத்தமானவர்கள் எனவும் அவர்கள் தொடும் பொருளும் தீட்டு என்றும் ஒதுக்கி வைக்கப்பட்ட அறியாமைக் காலத்தில், தீட்டு, தீண்டாமை போன்ற மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இஸ்லாம் அன்றே குரல் எழுப்பியது. அது பற்றி இங்கு சற்றுச் விரிவாகப் பார்ப்போம்.

''மாதவிலக்கு பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் (இயற்கை) உபாதை. எனவே, மாதவிலக்கின் போது (தாம்பத்திய உறவு கொள்ளாமல்) பெண்களிடமிருந்து விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மை அடைந்து விட்டால், அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அவர்களிடம் செல்லுங்கள். பாவத்திலிருந்து மீள்வோரை அல்லாஹ் நேசிக்கிறான், தூய்மையானவர்களையும் நேசிக்கிறான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன், 002:222)

இந்த வசனம் பெண்கள் மாதவிலக்குக் காலங்களை அடையும்போது அவர்களிடம் தாம்பத்திய உறவு கொள்ளாமல் அவர்களை விட்டும் விலகியிருங்கள் என்ற ஒரு நிபந்தனையை மட்டும் தடையாக விதிக்கிறது.

அல்குர்ஆனின் மேற்கண்ட 002:222வது வசனம் அருளப்பட்ட பின்னணி...

"யூதர்கள் மாதவிலக்கு ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள். வீடுகளில் அவர்களுடன் கலந்து உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டார்கள்! அப்போது, (நபியே) மாதவிலக்கு பற்றி உம்மிடம் கேட்கின்றனர்... எனும் அல்குர்ஆன் 002:222 என்று தொடங்கும் வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ''தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது 'நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம்' என்று கூறினர். எனவே உசைத் பின் ஹுளைர்(ரலி) அப்பாத் பின் பிஷ்ர்(ரலி) ஆகியோர் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே (மாதவிலக்கு ஏற்பட்டுள்ள) பெண்களுடன் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன?'' என்று கேட்டனர்.

(இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறிவிட்டது. ஆகவே (கேள்வி கேட்ட) அவர்கள் இருவர் மீதும் நபியவர்களுக்குக் கோபம் ஏற்பட்டு விட்டதோ என்று நாங்கள் எண்ணினோம். அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றதும் நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்ட பால் அவ்விருவரையும் எதிர்கொண்டது. உடனே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பின் தொடர்ந்து ஆளனுப்பி அவர்களை அழைத்து வரச் சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) அவர்கள் இருவருக்கு (அந்தப் பாலை) பருகக் கொடுத்தார்கள். தங்கள் மீது நபியவர்களுக்குக் கோபமில்லை என்று அவர்கள் இருவரும் புரிந்து கொண்டனர்." அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்கள் - முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், தாரிமீ.

இன்னும் இது பற்றி வேறு அறிவிப்புகளும் பதியப்பட்டுள்ளன. இந்நபிமொழியிலிருந்து, யூதர்கள் மாதவிலக்கை அடைந்த பெண்களை இல்லத்தில் வழக்கம்போல் இயங்க விடாமல், தீட்டு, தீண்டாமை என்ற பெயரில் அவர்களை ஒதுக்கி இருந்தார்கள். இது இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனை என்று நிறுவி, மேலும் பெண்கள் மாதவிலக்குக் காலங்களை அடையும்போது அவர்களிடம் தாம்பத்திய உறவை மட்டும் தவிர்த்துக் கொண்டு, பெண்கள் வழக்கம் போல் குடும்பப் பணிகளில் ஈடுபடலாம். கணவன், குழந்தைகளைத் தொடலாம் அதனால் எந்தத் தீண்டாமை அசுத்தங்களும் ஏற்பட்டு விடாது என அன்றைய யூதர்களின் மூடநம்பிக்கைக்கு மேற்குறிப்பிட்ட நபிமொழி சாவு மணி அடிக்கிறது.

''எங்களில் ஒருவருக்கு மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும்போது கீழாடைக் கட்டிக் கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள் (ஆடை கட்டிக் கொண்ட) பின்னர் அணைத்துக்கொள்வார்கள்'' அன்னை ஆயிஷா(ரலி) அன்னை மைமூனா (ரலி) நூல்கள், புகாரி, முஸ்லிம்.

''நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. மாதவிலக்குக் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து அதை அணிந்தேன். 'உனக்கு மாதவிலக்கு ஏற்பட்டுவிட்டதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'ஆம்' என்றேன். ஆயினும், அவர்கள் என்னை(த் தம்மருகில்) அழைத்தார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்'' அன்னை உம்மு ஸலமா (ரலி) புகாரி, முஸ்லிம்.

மேற்கண்ட நபிமொழிகள், மாதவிலக்கு ஏற்பட்ட மனைவியிடம் தாம்பத்திய உறவைத் தவிர மனைவியைக் கட்டியணைப்பதையும், மனைவியுடன் சேர்ந்து ஒரே படுக்கையில் படுப்பதையும் தடை செய்யவில்லை.

மாதவிலக்கு ஏற்பட்ட பெண்கள் குடும்பத்தினருடன் கலந்து பழகுவதில் இஸ்லாம் எவ்விதத் தடையும் விதிக்கவில்லை என்பதை மேற்கண்ட நபிமொழிகள் மற்றும் திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால் அதே சமயம், மாதவிலக்கு ஏற்பட்ட பெண்கள் தொழுகை, நோன்பு, காபாவை வலம் வருதல் இந்த வணக்க வழிபாடுகளைச் செய்வதை விட்டும் இஸ்லாம் விலக்கு அளித்துள்ளது. இந்தத் தடை இக்காலகட்டங்களில் பலவீனமாக இருக்கும் அவர்களின் உடல்நிலையைப் பேண இஸ்லாம் வழங்கியிருக்கும் மிகப்பெரிய அருட்கொடை எனலாம்.

ஏனெனில், உயிரோடு இருக்கும் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவனுடைய இக்கட்டானப் பலச் சூழல்களுக்கு ஏற்ப பல்வேறு கடமை மற்றும் சட்டங்களைப் பேணுவதில் இருந்து விலகி இருக்க அனுமதி வழங்கியிருந்தாலும் தொழுகை விஷயத்தில் மட்டும் இஸ்லாம் மிகக் கடுமையாகவே உள்ளது.

"நமக்கும் நிராகரிப்பாளருக்கும் இடையிலான வித்தியாசம் தொழுகையில் உள்ளது; யாரொருவர் தொழுகையை விட்டு விட்டாரோ அவர் காஃபிராகி விட்டார்" என மிகக் கடுமையாக நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

அத்தகைய எதிரிகளின் அச்சத்தில் இருக்கும் போர் வேளைகளில் கூட கண்டிப்பாகக் கடைபிடிக்கக் கடமையான மிக முக்கியத்துவம் வாய்ந்தத் தொழுகையினை விட்டுவிடுவதற்கான அனுமதி, மாதவிலக்கிலுள்ள பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் அருட்கொடையாகும்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் ''மாதவிலக்கு ஏற்பட்ட பெண்ணின் நிலை என்ன? (விடுபட்டத்) தொழுகைகளை மீண்டும் தொழக் கூடாதா?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ''நீ 'ஹரூரா' எனும் இடத்தைச் சேர்ந்தவளா?'' என்று கேட்டார்கள். ''நான் ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவள் அல்லள். ஆயினும் (தெரிந்து கொள்வதற்காகவே) கேட்கிறேன்'' என்றேன்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், ''எங்களுக்கும் அது (மாதவிலக்கு) ஏற்படத்தான் செய்தது. அப்போது விடுபட்ட நோன்பை மீண்டும் நோற்குமாறு நாங்கள் பணிக்கப்பட்டோம். விடுபட்டத் தொழுகையை மீண்டும் தொழுமாறு நாங்கள் பணிக்கப்படவில்லை'' என்று பதிலளித்தார்கள். நூல், முஸ்லிம்.

''நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். 'ஸரிஃப்' என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிலக்கு ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, 'உனக்கு என்ன? மாதவிலக்கு ஏற்பட்டுவிட்டதா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'இந்த மாதவிலக்கானது ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாஹ்வை வலம் வருவதைத் தவிர ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் நீ செய்து கொள்' என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியருக்காக மாட்டைக் 'குர்பானி' கொடுத்தார்கள்'' அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) நூல், புகாரி.

மாதவிலக்கு ஏற்பட்ட பெண்கள், தொழுகை, நோன்பு, காபாவை தவாப் செய்தல் போன்ற வழிபாடுகளை செய்யக்கூடாது. மாதவிலக்குக் காலத்தில் விடுபட்டத் தொழுகையை களாச் செய்ய வேண்டியதில்லை. விடுபட்ட நோன்பைப் பிந்தைய நாட்களில் நோற்க வேண்டும் என்பதையும் மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து விளங்குகிறோம். கன்னிப் பெண்கள், மாதவிடாய்ப் பெண்களும் வெளியே சென்று நன்மையான காரியங்களிலும், முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கு கொள்ளலாம். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்கும் செல்லலாம். மாதவிடாய் பெண்கள் மட்டும் தொழுகையை விட்டு விலகியிருக்க வேண்டும் என்பதையும் நபிமொழிகளிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

மாதவிலக்கு முடிந்து குளிப்பது:

மாதவிலக்கு முடிந்த பின் குளிக்கும் முறை பற்றி அஸ்மா பின்த் ஷகல்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் கேட்டனர் அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''உங்களில் ஒருத்தி குளிப்பதற்காக தண்ணீரையும், இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளட்டும். அதன் பிறகு தலையின் மீது தண்ணீரை ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும் வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத் துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்து கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.

அதற்கு அஸ்மா(ரலி) அவர்கள், ''அதை வைத்து எவ்வாறு சுத்தம் செய்வாள்?'' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) அதனால் சுத்தம் செய்து கொள்ளட்டும்'' என்று சொன்னார்கள்.

உடனே நான், ''இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள்'' என்று - பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச் சொன்னேன்.

மேலும் அஸ்மா நபி(ஸல்) அவர்களிடம், பெருந் தொடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு ''தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்கு தண்ணீர் ஊற்றி தலையினட சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று!'' என்றார்கள்.

''பெண்களில் அன்ஸார்களின் பெண்களே சிறந்தவர்கள். அவர்கள் மார்க்கத்தைக் கேட்டு தெளிவு பெறுவதிலிருந்து அவர்களது வெட்கம் அவர்களைத் தடுக்கவில்லை'' என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். நூல், முஸ்லிம்.

உயர் இரத்தப்போக்கு:

''பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?' என்று கேட்டதற்கு, 'அது ஒரு நரம்பு நோய். அது மாதவிலக்கன்று. மாதவிலக்கு ஏற்படும்போது தொழுகையைவிட்டு விடு. மாதவிலக்குக் காலம் கழிந்ததும் இரத்தத்தைச் சுத்தம் செய்துவிட்டுத் தொழுது கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்'' என அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்கள், புகாரி, முஸ்லிம்.

''நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் மஞ்சள் நிற உதிரப் போக்கு இரத்தத்தைக் காணும்போது தமக்கடியில் ஒரு தட்டை வைத்து நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாப் இருந்தவாறு தொழுதார்'' என அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். நூல், புகாரி.

பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படுவது போல் பெரும் உதிரப் போக்கும் ஏற்படுவதுண்டு. இந்த உதிரப் போக்கை ஒரு நரம்பு நோய் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். மாதவிலக்கிலிருந்து இந்த இரத்தப் போக்கு, வணக்க வழிபாடுகளில் விதி விலக்குப் பெறுகிறது. ''இஸ்திஹாளா'' எனும் பெரும் இரத்தப் போக்கு நோய் உள்ளவர்கள் தொழுகை, நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றலாம் அதை இஸ்லாம் தடை செய்யவில்லை

சத்தியமார்க்கத்திலிருந்து........

அதோடை புதுசாய் வந்திருக்கிற அவதாரம் முதலிலை எங்கை கால் வைச்சிருக்கிறார் பாத்தியளே :lol:

உங்கள் குறும்பை இரசிக்கிறேன் :lol::)

பகுத்தறிவுப் பக்கத்தில் முதலில் கால் வைப்போம் என்று நினைத்தேன். முதல்முதலாக இருந்தது இந்த விடயம்தான். உங்கள் பார்வையில் "களைகட்டியிருந்த விடயம்"

தவிர இது ஒன்றும் அசிங்கமான விடயமோ, பேசத் தகாத விடயமோ இல்லையே.

எல்லாரும்உங்கட பிள்ளைகளுக்கு கொண்டாடுங்கோ..

விரும்பாதவை கொண்டாடாதேங்கோ...

ஏன் எங்களை போட்டு கொல்லுறீங்கோ... :lol:

ஹீ ஹீ வசி எப்படி இப்படி உங்களால மட்டும் முடியுது??? :):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.