Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளைமோர்த் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் பலி

Featured Replies

கிளைமோர்த் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் பலி

[வியாழக்கிழமை, 06 மார்ச் 2008, 03:35 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் நாடாளுமன்ற அமர்வை முடித்து திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் படையினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

puthinam.

தமிழரசுக் கட்சி யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் திரு. கே. சிவநேசன் வன்னியில் கிளேமோர் தாக்குதலில் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆதாரம்: Daily Mirror

TNA MP dead following claymore attack

TNA Jaffna district MP K. Sivanesan died following a claymore attack targeting his vehicle in Wanni this afternoon. His driver also died in the attack. He was on his way to Killinochchi at the time of the attack.

  • கருத்துக்கள உறவுகள்

கிளைமோர்த் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் பலி

[வியாழக்கிழமை, 06 மார்ச் 2008, 03:35 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் நாடாளுமன்ற அமர்வை முடித்து திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் படையினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

puthinam.

இக்கொலைக்கு புலிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். வன்னியில் இராணுவம் ஆழ ஊடுருவுவதை கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவே இது.

தெற்கில் இப்போ கணிசமான அளவுக்கு கிளைமோர் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்ட பின் இராணுவம் சுயாதீனமாக சுதந்திரமாக வன்னியில் கிளைமோர்களை வெடிக்க வைக்கிறது.

இன்றிலிருந்து கடந்த இரு வாரத்தில் மட்டும் 14 பொதுமக்கள் உட்பட ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் வன்னியில் இராணுவத்தின் கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். :D:rolleyes:

சிவநேசனின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

அட கணக்கு கொஞ்சம் தவறிட்டுது

சிவாஜிலிங்கம், அல்லது கஜேந்திரன் தான் அடுத்த இலக்கு என்று பார்த்தால் கடைசியில் இலக்கு எங்கையோ போய்ட்டுது.

  • தொடங்கியவர்

2ம் இணைப்பு)சிறிலங்காப் படையினரால் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் படுகொலை

[வியாழக்கிழமை, 06 மார்ச் 2008, 03:35 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் (வயது 51) படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றுவிட்டு கொழும்பிலிருந்து சிவநேசன் திரும்பிக்கொண்டிருந்த போது இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இக்கிளைமோர்த் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் சிவநேசன் மற்றும் அவரது ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

1957 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் நாள் சிவநேசன் பிறந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டுச் சென்ற சிவநேசனை மதவாச்சியில் உள்ள சோதனை நிலையத்தில் சிறிலங்கா படையினர் வழிமறித்து அச்சுறுத்தியிருந்தனர். இது தொடர்பில் கடந்த பெப்ரவரி 21 ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றில் தெரிவிக்கையில், தனது நாடாளுமன்ற பதவிக்குரிய சிறப்புரிமையை மீறும் வகையில் படையினர் செயற்பட்டனர் என்று குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலளித்திருந்த சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, இத்தகைய சோதனைகளுக்கு வன்னியிலிருந்து வரும் எவரும் முகம் கொடுத்தே ஆக வேண்டும். யாருக்காகவும் இச்சோதனைகளை நிறுத்தமாட்டோம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும்போது இக்கிளைமோர் தாக்குதலை சிறிலங்கா அரசாங்கம் நடத்தியுள்ளது.

புதினம்

இவருடன் இவருடைய வாகனச் சாரதியும் உயிரிழந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ கடவுளே இது என்ன எம் இனத்திற்கு வந்த சோதனை.கிளைமோர் தாக்குதல்களால் எத்தனை பேரை இழந்துள்ளோம்.இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும்.நாடாளுமன்ற உறுப்பினருக்கும், வாகனச் சாரதிக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் திரு சிவனேசன் குடும்பத்தினருக்கு.

Edited by nunavilan

இக்கொலைக்கு புலிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். வன்னியில் இராணுவம் ஆழ ஊடுருவுவதை கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவே இது
.

நீங்கள் போய் கட்டுப்படுத்தலாமே? :rolleyes:

ஐயோ போதும் போதும் இன்னும் எத்தனைபேர் இந்தக்கிளைமோருக்கு பலிகொடுக்கவேண்டும். எப்படி ஏ9 வீதியில் எமது பகுதிக்குள் நடந்தது. வெட்கப்படும்படியாகிவிட்டதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ போதும் போதும் இன்னும் எத்தனைபேர் இந்தக்கிளைமோருக்கு பலிகொடுக்கவேண்டும். எப்படி ஏ9 வீதியில் எமது பகுதிக்குள் நடந்தது. வெட்கப்படும்படியாகிவிட்டதே.

வெக்கப்படுவதைப் பார்த்தால் நாளைக்கே வன்னிக்குக் கிளம்பிப் போய்க் கிளைமோர் நடத்துற இராணுவத்தைத் தடுக்கப் போராடப்போறீங்கள் போலக் கிடக்குதே?

வெக்கப்பட வேண்டுமென்றால், இந்தப் போராட்டம் நடக்கும்போது நாட்டை விட்டு ஓடி வந்தததற்கு முதலில் வெக்கப்படுங்கோ

சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் (வயது 51) படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் போய் கட்டுப்படுத்தலாமே? :rolleyes:

தெற்கில் 150000 கண்காணிப்பாளர்களை உருவாக்கி அரசு கிளைமோர் மற்றும் குண்டு வெடிப்புக்களை குறைச்சுத்தானே இருக்குது.

வன்னில உள்ள மக்களின் உதவியோடு மக்களைப் பாதுகாக்கிற நடவடிக்கை எடுக்காட்டி.. அப்புறம் போராட்டம் எதற்காக. வன்னிக் காட்டு மரங்களை பாதுகாக்கவா...???!

இப்படியே கிளைமோரிலும் விமானக் குண்டு வீச்சிலும் விழ விழ.. எரிந்த சாம்பலில் இருந்து எழ தமிழன் ஒன்று கற்பனை பீனிக்ஸ் பறவையல்ல. இவை போராட்டத்தில் பின்னடைவுகள். எதிரிக்கு உற்சாகம் என்பதை இலகுவாக மறந்திடுறீங்க..! :D:D

Edited by nedukkalapoovan

தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கே. சிவநேஷன் இன்று பிற்பகல் கிளேமோர் தாக்குதலுக்கு பலியானார்.

கிளேமோர் தாக்குதல் பிற்பகல் 1.30 ற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற அமர்வை முடித்துக் கொண்டு தனது வாகனத்தில் இவர், கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு சென்றவேளையிலேயே வன்னி – கனகராயன்குள பகுதியில் வைத்து கிளேமோர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.இவரது வாகன சாரதியும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கே. சிவநேஷன் நேற்றைய பாராளுமன்றத்துக்கு வந்துவிட்டு திரும்பி கிளிநொச்சியை நோக்கி செல்லும் போதே அவர் கொல்லப்பட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்த பின் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.. அவர்களில் 4 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்குவர்.

http://www.ajeevan.ch/content/view/551/1/

Edited by AJeevan

Sri Lanka rapped over 'disappeared'

The security forces are accused of abducting hundreds of people

Sri Lanka's government is one of the world's worst perpetrators of enforced disappearances, US-based pressure group Human Rights Watch (HRW) says.

An HRW report accuses security forces and pro-government militias of abducting and "disappearing" hundreds of people - mostly Tamils - since 2006.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7280050.stm

இந்த செய்தி வந்த நேரத்தில் ஒரு படுகொலை....

அன்னார்ருக்கு அஞ்சலிகள்....!

  • கருத்துக்கள உறவுகள்

சிவநேசனின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

பாராளுமன்றத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் மதிக்கச் சிங்களம் தவறுகின்றது என்றால் நாமும் பதிலுக்கு சிங்கள நாடாளுமன்றத்தை மதிக்காமல் இருப்பது தான் வழி;

அதற்காக தமிழ் உறுப்பினர்கள் பாராளமன்றத்திற்குச் செல்லாமல் இருப்பது உசிதமல்ல.

மாறாக சிங்களப் பாராளுமன்ற நிகழ்வை கோமாளிக் கூத்தாக மாற்ற வேண்டும்.

எமது பாராளுமன்ற உறுப்பினராக ஒரு சித்த சுவாதீனம் குறைந்தவரையோ மிகவும் வயதாகி இன்றைக்கோ நாளைக்கோ என்று இருக்கின்ற நோயாளியையொ நியமிக்க வேண்டும்.

அவர் பாராளுமன்றத்திற்கு இடுப்பில் துண்டு போன்ற குறுகிய ஆடையுடன் சென்று அ ஆ என்று எழுத்திக் கூட்டி வாசிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிவநேசனின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

சிவநேசன் மற்றும் அவர் சாரதி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ..!

  • கருத்துக்கள உறவுகள்

சிவநேசன் அய்யா மற்றும் அவரது ஓட்டுனருக்கு கண்ணீர் வணக்கம்..!

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சி துன்னாலை மண் தந்த 2 பாராளுமன்ற உறுப்பினர்களில் அமரர் சிவநேசனும் ஒருவர் என நினைக்கின்றேன். மற்றவர் திரு. கஜேந்திரன்.

வாழ்க்கையில் மிகவும் போராடித்தான் முன்னுக்கு வந்தவர். எத்தனை கொலை மிரட்டலுக்கும், பணத்தாசை காட்டி வாங்க முயற்சித்த எவருக்கும் விலை போகாமல் தலைவரின் வழி நின்று போராடிய அன்னாருக்குக் கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிவநேசனின் குடும்பத்துக்கும் அவரது சாரதியின் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

கண்ணீர் அஞ்சலிகள்.

இப்போதுதான் தற்செயலாக இந்தச் செய்திய பார்த்தன். அதிர்ச்சியாக உள்ளது.

அடுத்த எலெக்ஷன் வரும் முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் கொலை செய்யப்பட்டு விடுவார்கள் போல இருக்கிதே?

சிவநேசன் அவர்கள் வவுனியாவில் அண்மையில் ஆமிசெக் பொயின்ரில் ஏதோ பிரச்சனைப்பட்டு, பின் அது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட மாதிரி ஒரு செய்தியை வானொலியில் கேட்டதாய் நினைவு.

மாறி மாறி ஒரே கொலைகளா விழுகிது. இதற்கு ஒரு முடிவு இல்லையோ? விடியக்காலம்பற நித்திரையா முளிச்சு வாசிக்க வந்தா வாற செய்தி எல்லாம் ஒரே இழவுச் செய்தியா இருக்கிது.

இண்டைக்கு வேற சிவராத்திரி எண்டு யாரோ சொல்லிச்சீனம். இப்ப சிங்களவன் கிறிஸ்மஸ், புதுவருடம், சிவராத்திரி... இப்பிடி நாட்களில ஆக்கள கொல்லிறதுதான் சிறீ லங்காவில இப்ப லேட்டஸ்ட் டிரெண்டோ?

இதுகளப் பாத்தால் இதுக்கு எல்லாம் பின்னால காவி உடுத்த பிக்குகள் கூட்டம் இருக்கிது போல தெரியுது.

எம்.பி செத்தா என்ன ...........எந்த தமிழன்; செத்த என்ன ஒருநாடும் எங்களை திரும்பிப் பாக்காது. அரசாங்கத்தை கட்டுப்படுத்தவும் மாட்டுது பிறகு எப்பிடி எங்களுக்கு விடிவு....

சிவநேசன் ஐயாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

சிவநேசன் ஐயாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

தலைவணங்குகிறோம்

எமக்காய் கடைசிவரை உழைத்தாய்

எதற்கும் விலைபோக மறுத்தாய்

மண்ணை நேசித்தாய்

விடுதலைப்பாதையில் ஒருபடி நீபோட்டாய்

மறக்கோமய்யா

எமதுயிர் போனபின்பும்

உமது திருநாமம் வாழும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.