Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழருக்காய் போராட பதவியை துறந்தார் டி.ராஜேந்தர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

t-rajendran-250_25032008.jpg

சென்னை:மாநில சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து லதிமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

லட்சிய திமுக கட்சியை விடாமல் நடத்தி வரும் டி.ராஜேந்தர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போய்ச் சேர்ந்த முதல் கட்சித் தலைவராவார்.

அவரை கூட்டணிக்கு அன்போடு வரவேற்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சீட் தரவில்லை. இதையடுத்து அந்தக் கூட்டணியைவிட்டு திமுக கூட்டணிக்கு தாவி வந்தார்.

ஆனால், அங்கு இடப் பங்கீடு எல்லாம் முடிந்துவிட்டதால் அங்கும் சீட் கிடைக்கவில்லை. முதல்வர் கருணாநிதியின் இதயத்தில் மட்டுமே இடம் கிடைத்தது.

தனது கட்சி சார்பில் ஒரே ஒரு இடத்தில் போட்டியிட்டபடி திமுக கூட்டணிக்காக சூறாவளி பிரச்சாரம் செய்தார் டி.ஆர். தேர்தலில் திமுக வென்றது. அத்துடன் டி.ஆரும் மறக்கப்பட்டார்.

இதை நினைவுபடுத்தும் வகையில், தான் திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் ராஜேந்தர். இதையடுத்து அவரைக் கூப்பிட்டு அமைச்சர் அந்தஸ்துடனான சிறுசேமிப்பு ஆணைய துணைத் தலைவர் பதவியை வழங்கினார் முதல்வர்.

எந்தவிதமான அதிகாரமும் இல்லாத இந்தப் பதவி மூலம் டி.ஆருக்கு கிடைத்த ஒரே லாபம் சிவப்பு விளக்கு பொருத்திய சைரன் கார் மட்டும் தான்.

ஆனால், இந்த சைரனை சுழலவிட்டபடி இவரது கார் எங்கு போனாலும் மரியாதை மட்டும் கிடைக்கவே இல்லை.

இந்த நிலையில் சமீபத்தில் தமிழக, அரசின் பட்ஜெட் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தனது அதிருப்தியைக் காட்டினார் ராஜேந்தர்.

இந் நிலையில் இன்று தனது சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் டி.ராஜேந்தர் கூறுகையில்,

மாநில தேசிய சேமிப்பு ஆலோசனைக் குழு துணைத் தலைவர் பதவியிலிருக்கும் நான், தமிழக முதலமைச்சருக்கு என் நிலைப்பாடு குறித்து ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அந்த கடிதத்தில் நான் குறிப்பிட்டுள்ளவற்றை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்காக..:

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவ்விஷயத்தில் இலங்கை அரசை எச்சரிக்க வேண்டியது இந்திய அரசின் தலையாய கடமை. ஆனால் இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இந்தியாவே உதவி செய்வது வருத்தத்தை வரவழைக்கிறது.

இலங்கை ராணுவ தளபதி பொன்சேகாவுக்கு இங்கு வரவேற்பு அளிப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கை தான் இன்று இந்தியாவின் பிரதமராக சோனியா காந்தி அமர்த்தியிருக்கிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கையில் வாழும் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தான் வெடிகுண்டால் வீழ்த்தினார். அது கண்டனத்திற்கு உரியது. அதற்காக இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் இனத்தை புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்.

தமிழர்கள் கண்ணில் சுண்ணாம்பு வைக்கலாமா?:

சீக்கிய இனத்தின் கண்ணில் வெண்ணையை வைத்துவிட்டு, தமிழ் இனத்தின் கண்ணில் சுண்ணாம்பு வைக்கலாமா? இவ்விஷயத்தில் இந்திய அரசின் செயல்பாடு முரண்பாடாக இருக்கிறது. அதனால் சிங்கள ராணுவத்திற்கு இந்திய அரசு உதவக் கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 29ந் தேதி மதுரையிலும், ஏப்ரல் 5ந் தேதி சென்னையிலும் லட்சிய திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளேன்.

மாநில தேசிய சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராடுவது கூட்டணி கட்சிக்குள் குந்தகத்தை விளைவித்து விடக் கூடாது என்பதற்காகவும் தமிழக முதல்வருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும் இந்த பதவியிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்காக போராடுவதில் துவங்கி தமிழக மக்கள் பிரச்சனைக்காக லட்சிய திமுக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தும்.

இன்று காலை முறைப்படி விலகல் கடிதத்தை கொடுத்து அனுப்பினேன். ஒரு தடவை எடுத்த முடிவை எக்காரணத்தை கொண்டும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்றார் ராஜேந்தர்.

http://thatstamil.oneindia.in/news/2008/03...-dept-post.html

-----------

உங்கள் முயற்சி என்னவாயினும் வெற்றியளிக்க வாழ்த்துக்கள்.!

ராஜேந்தர் இயல்பாகவே தமிழுணர்வு உள்ள ஒருவர். ஈழத் தமிழருக்கு ஆதரவான குரல்களோடு அவருடைய குரலும் இணைவது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயம்தான்.

இது போன்று தமிழ்நாடு படிப்படியாக எழுச்சி பெற வேண்டும். கட்சி அரசியல்களிற்கு அப்பாற்பட்ட ஒரு ஒற்றுமையான விவகாரமாக ஈழத்தமிழர் விவகாரம் மாற வேண்டும்.

http://www.rediff.com/news/2008/mar/25actor.htm

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

:) நன்றிகளும், வாழ்த்துக்களும் ராஜேந்தர் !

உங்கள் பணி தொடர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரது சிந்தனைக்கும், எண்ணங்களுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் துணிச்சலுக்கு தலை வணங்குகின்றேன் ராஜேந்தர் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் ஈழத்தமிழருக்கான ஆதரவுப் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. டி. ராஜேந்தர் போன்ற மக்களைத் தம் பேச்சாற்றலால் கவரக்கூடிய தலைவர்கள் எமக்காகக் குரல் கொடுப்பது எம்மால் மிகவும் நன்றியுடன் நோக்கப்படவேண்டும். பரவலாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒலிக்கும் ஈழ ஆதரவுக்குரல்கள் திரு நெடுமாறன் ஐயா போன்றவர்களால் வழிநடத்தப்பட்டு ஒரே அணியின் கீழ் ஸ்தாபனப்படுத்தப்படுவது எமக்கான ஆதரவைப் புறக்கணிக்க முடியாத நிலைக்கு இந்திய நடுவண் அரசை இட்டுச் செல்லும். ஈழக்கோரிக்கையின் ஆணிவேர் தமிழகத்திலேயே வேரூன்றப்படவேண்டும். அதுவே எதிர்காலத்தில் சிங்களம் எமக்கெதிராகத் தீட்டும் திட்டங்களனைத்தையும் தவிடுபொடியாக்கி உலகில் ஈழதேசியத்தை அசைக்கமுடியா நிலைக்குக் கொண்டுவரும்.

Edited by karu

ஈழ விடுதலைக்காக என் பதவியைத் துறக்கிறேன்: டி.ராஜேந்தர்

[புதன்கிழமை, 26 மார்ச் 2008, 05:21 மு.ப ஈழம்] [காவலூர் சங்கீதன்]

இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், திரைப்பட இயக்குநரும் நடிகருமான விஜய டி.ராஜேந்தர், தமிழ்நாட்டு அரசில் தான் வகித்த முக்கிய பதவியை ஈழத் தமிழரின் விடுதலைக்காக முழுநேரமும் உழைக்கும் நோக்கத்திற்காக பதவி துறந்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சிகளில் ஒன்றாக இணைந்து, ஜனநாயக முன்னேற்றக் கூட்டணியில் அங்கம் வகித்ததுடன் அதன் வெற்றிக்குப் பெரிதும் பாடுபட்டிருந்தார்.

இதற்கான கைமாறாக, திராவிட முன்னேற்றக் கழகம் பதவியேற்றதும் தமிழ்நாட்டின் சிறு சேமிப்பு ஆலோசனைக் சபையின் உதவித் தலைவராக டி.ராஜேந்தர் நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி, தமிழ்நாட்டின் அமைச்சர் பதவிக்கு இணையான ஒரு உயர் நியமனமாகக் கருதப்படுகின்றது.

இந்தப் பதவியில் சிறப்பாகப் பணியாற்றி வந்த டி.ராஜேந்தர், தனது பதவியிலிருந்து விலகுவதாக நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்று வரும் பிரச்சினையில் ஈழத் தமிழரின் விடுதலைக்கு ஆதரவாகப் பணியாற்றப் போவதாகத் தெரிவித்த டி.ராஜேந்தர், தனது பணியினால் ஆளும் கட்சிக்கு எந்தவொரு அரசியல் அழுத்தங்களோ பிரச்சனைகளோ வரக்கூடாது என்பதனால் தனது பதவியைத் துறப்பதாகத் தெரிவித்தார்.

நேற்றிலிருந்து தனது பணி ஈழத்தமிழர்களின் விடிவுக்காக முழுநேரமும் உழைப்பதே என்று கூறிய ஈழ விடுதலை உணர்வாளர் டி.ராஜேந்தர், நாடு தழுவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களும் பயணித்து, ஈழ விடுதலை குறித்த விழிப்புணர்ச்சியைக் கொண்டுவர உழைக்கப் போவதாகவும் குறிப்பிட்டார்.

இதன் முதற்கட்டமாக மதுரை மற்றும் சென்னை ஆகிய மாநகரங்களில் மாபெரும் கூட்டங்களை நடத்தி அவற்றில் உரையாற்றவும் தீர்மானித்துள்ளதுடன் கூட்டத்திற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்ற போதிலும், இந்திய மத்திய அரசு, சிறிலங்கா அரசை எச்சரிக்கத் தவறியதனை வன்மையாகக் கண்டித்த டி.ராஜேந்தர், இது குறித்தும் தனது அதிருப்தியைத் தொடர்ந்து வெளிப்படுத்தத் தீர்மானித்திருப்பதாகக் கூறினார்.

தனது பதவியிலிருந்து விலகுவதற்கான பணி விலகல் கடிதத்தினை முதலமைச்சர் கருணாநிதிக்கு ஏற்கனவே அனுப்பிவிட்டதாகக் கூறிய அவர், தனது பதவி விலகலுக்கான காரணத்தையும் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

வாந்தோரை வாழவைப்பது தமிழருடைய வழக்கம்............ வாருங்கள் வாழ்த்துக்கள்!

முன்மும் ஈழதமிழர் பற்றி பல இடங்களில் இவர் குரல் கொடுத்ததை நான் கேட்டிருக்கிறேன் இவரிடம் தமிழ்பற்று இருக்கின்றது என்றுதான் நான் நினைக்கின்றேன். ஈழமக்களுகாக குரல் கொடுப்பதற்கு தமிழ் பற்றே தேவையில்லை மனித பற்றே போதும். காரணம் அங்கே நடக்கும் கொடுமை மனித வர்க்கத்திற்கு எதிரானது....... இவர் தனது பதவியையும் அதற்காக துறந்திருப்து நன்றிக்குரியது!

டிஆர் ராஜெநெந்தர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்

முதலில் எமதினத்த்தின் விடுதலைக்காக எம்மில் பலபேர் செய்யாமல் இருந்து கொண்டிருப்பதைக் கூட ஊக்கப்படுத்தும் வகையில் அமைச்சருக்கு ஈடான பதவியைத் துறந்து முழுநேர ஈழவிடுதலைக்காக செயற்பட ஆரம்பித்திருக்கும் ராNஐந்தர் அவர்களுக்கு வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவித்து கொள்வதோடு

கடந்த மாதத்தில் இவ்வாறு தான் ஈழமக்களிற்காக பதவியைக் கூடதுறப்பேன் என தெரிவித்திருந்த பொழுது பல பேருக்கு அது நகைப்பக் கிடமானதாகவும் ஏளனமாகவும்

இவர் எமக்காக எதை பெரிதாக புடுங்கப் போகிறார் என்றும் மட்டும்நிறுத்தி விடாது

அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குடும்பத்தையும் பற்றி தற்போது பல பேருக்கு நினைவிருக்காது என்பதை விட அப்படி ஓன்றையே தெரியாது என்பார்கள்.

ராஜேந்தர் மட்டுமல்ல இது ஒவ்வொரு தமிழக தமிழனின் கடமை ஆகும்

தமிழர் தேசிய இயக்கம், விடுதலைச் சிறுத்தைகள், பாமக மற்றும் திராவிட இயக்கங்களோடு ஈழத்தமிரின் உரிமைக்கான குரலைக் கொடுக்க வந்திருக்கும் இந்த தமிழ் உள்ளத்தையும் நன்றி உணர்வுடன் வரவேற்போம்.

உண்மையில் நல்ல முடிவு தான் ஆனால் உள் நாட்டு அரசியலுக்கு ஏற்ற மாதிரி ஈழ ஆதரவை பயன் படுத்தாவிட்டால் சரி

துணிச்சலானவர்...வாழ்த்துக்கள

எனக்கு பட்டதை சொல்லி அவரையும் மற்ற அனைவரையும் புண்படுத்த விருப்பமில்லை...

இருந்தாலும் இது ஒரு நல்ல முடிவுதான்... வாழ்த்துக்கள்

கடந்த மாதம் இது பற்றி செய்தி வந்த பொழுது பெரிதாக என்ன வெட்டி புடுங்கப் போறார் என எழுதிய தமிழ் தேசிய உணர்வுகாரர்கள் இவரது தற்பொழுதைய செயலுக்காகவும் செய்ய வேண்டிய வேலைக்காகவும் கேவலம் ஓரு வாழ்த்து சொல்ல நேரமில்லாமல் போய்விட்டது.

ஜம்மு பேபி கொன்ரோல் யூ செல்வ் :lol: ..(ராஜேந்தர் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் :D )..என்னவோ ஈழதமிழரை வைத்து காமேடி கிமேடி பண்ணாம இருந்தா சரி :lol: ..(என்னை ஒருத்தரும் ஏசி போடாதையுங்கோ :lol: )..பிறகு நானும் பதவியை திறந்திடுவன் சா..சா துறந்திடுவன்..(என்ன பதவி என்று கேட்கபடாது சொல்லிட்டன் :D )..

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு பேபி கொன்ரோல் யூ செல்வ் :wub: ..(ராஜேந்தர் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் :wub: )..என்னவோ ஈழதமிழரை வைத்து காமேடி கிமேடி பண்ணாம இருந்தா சரி :wub: ..(என்னை ஒருத்தரும் ஏசி போடாதையுங்கோ :huh: )..பிறகு நானும் பதவியை திறந்திடுவன் சா..சா துறந்திடுவன்..(என்ன பதவி என்று கேட்கபடாது சொல்லிட்டன் :wub: )..

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு,

டி.ராஜேந்தரை விடவும் நன்றாக அடுக்கு மொழியில் கதைக்கிறீங்கள் திறந்திடுவன்/துறந்திடுவன்...என்று..:lol:

இந்த நிலையில் இருந்து மாறாமல் இருந்தால் போதும் டி.ராஜேந்தர்....அவர்களே..

வாழ்த்துகள்..

..சினிமா காரங்க எப்ப வேண்டுமானாலும் மாறீடுவாங்க எண்ட அச்சம் போல..

அவர் பி.பீ.சீ.காரரை மடக்கி பேசிய விதம் ஆற்றிய செவ்வி..சிறப்பானது..

வாழ்த்துக்கள்..

உண்மையில் அவர் கொண்ட இலட்சியத்திலிருந்து

வழுவுவது இல்லை என்றால் அது மிகையாகது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஒரு சோடி கால்களின் பின் இன்னும் நிறை கால்கள் வர வேண்டும். இதுவே எங்கள் ஆசை.

ஜம்மு கூறியதுபோல் எங்களை வைத்து காமெடி கீமெடி பண்ணிவல்லையே

நிஜமானால் ராஜேந்தருக்கு என் வாழ்த்துக்கள்

இதையும் அவர் அரசியல் காமெடியாக்காமல் இருந்தால் சரி. இணைப்பில்லேயே அவரின் அரசியல் காமெடி தெளிவாக கூறப்பட்டுள்ளது..!

ஜம்மு,

டி.ராஜேந்தரை விடவும் நன்றாக அடுக்கு மொழியில் கதைக்கிறீங்கள் திறந்திடுவன்/துறந்திடுவன்...என்று..:wub:

எல்லாம் தமிழ் தங்கை அக்காவிடம் கற்ற தமிழ் தானே.. :wub: (மறக்கமுடியுமா)...ஏதாச்சும் பேபி பிழை விடக்க முதலில திருத்துறது நீங்க தானே.. :huh:

அப்ப நான் வரட்டா!!

இந்த ஒரு சோடி கால்களின் பின் இன்னும் நிறை கால்கள் வர வேண்டும். இதுவே எங்கள் ஆசை.

ஜம்மு கூறியதுபோல் எங்களை வைத்து காமெடி கீமெடி பண்ணிவல்லையே

நிஜமானால் ராஜேந்தருக்கு என் வாழ்த்துக்கள்

ம்ம்..போக..போக தெரியும்..நடா அங்கிள்.. :wub::wub:

அப்ப நான் வரட்டா!!

..சினிமா காரங்க எப்ப வேண்டுமானாலும் மாறீடுவாங்க எண்ட அச்சம் போல..

அவர் பி.பீ.சீ.காரரை மடக்கி பேசிய விதம் ஆற்றிய செவ்வி..சிறப்பானது..

வாழ்த்துக்கள்..

உண்மையில் அவர் கொண்ட இலட்சியத்திலிருந்து

வழுவுவது இல்லை என்றால் அது மிகையாகது..

இவரது தஞ்சாவூர் வீடு ஒரு காலத்தில் போராளிகள் இருப்பதற்காக கொடுக்கப்பட்டது.

சில காரணங்களுக்காக பலரோடு ராஜேந்தர் இணைந்தாலும்

பிடிவாதமானவர்.

எனவே வருவோரை அன்போடு வரவேற்க பழகுவோம்.

நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.