Jump to content

யாழ் இணையத்தில் தற்போது உள்ள இழுபறிகள், கெடுபிடிகள், மனக்கசப்புக்கள் நீக்கப்படுவதற்கு நாங்கள் கூறுகின்ற ஆலோசனைகள்..!


Recommended Posts

பதியப்பட்டது

யாழ் கள உறவுகள், மற்றும் வாசகர்களிற்கு வணக்கம்,

யாழ் இணையம் அண்மையில் தனது பத்தாவது அகவையைக் கொண்டாடி இருந்தது. இது மகிழ்ச்சிக்குரிய விடயம். இதற்காக யாழ் இணையத்தின் உருவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமானவர்களிற்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும்..

அண்மையில் யாழ் இணையத்தின் முகப்பு மாற்றப்பட்டு.. தோற்றம், அமைப்பு மறுசீரமைக்கப்பட்டு பொழிவுடன் திகழ்கின்றது. அழகுடன் ஜொலிக்கின்றது. இதற்காக இரவு, பகலாக உழைத்தவர்களிற்கும் பாராட்டுக்களும், நன்றிகளும்.. ஆனால்..

யாழ் இணையத்தின் அடிப்படை விசயமான கருத்தாடல் தளத்தில் உள்ள பிரச்சனைகளும்... பிடிபாடுகளும், இழுபறிகளும்... முன்புபோலவே எதுவித மாற்றமும் இன்றி அப்படியே இருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால்.. முன்பை விட கெடுபிடிகள் அதிகமாக இருக்கின்றது. இதற்கான காரணங்களாக வாசகர்களான நீங்கள், மற்றும் கள உறவுகள் என்ன நினைக்கின்றீர்கள்? தற்போது யாழ் இணையத்தில் நிலவும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நீங்கள் கூறும் பரிந்துரைகள் எவை? உங்கள் கருத்துக்களை msivagur@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். அனுப்பி வைக்கப்படும் கருத்துக்கள் எதுவித மாற்றமும் செய்யப்படாது அப்படியே இங்கு பிரசுரிக்கப்படும் (ஆனால் நாகரீகமான முறையில் எழுதப்படவேண்டும்..)

முதலில் நான் எனது பரிந்துரைகளை இங்கு முதலில் கூறுகின்றேன். மினக்கட்டு எழுதப்படும், ஆராயப்படும் ஒரு பிரச்சனையை நான் யாழில் மட்டும் நேரடியாக இணைத்தால் அது கடாசப்படக்கூடும். எனவே, எனது கருத்தை இங்கு கூறிவிட்டு யாழுக்கு இணைப்பு கொடுக்கின்றேன்.

முதலாவது கேள்வி, யாழ் இணையத்தில் நடுவுநிலமை எனப்படும் ஒரு தன்மை இருக்கின்றதா? யாழின் மட்டறுத்துனர்களாக இருப்பவர்கள் நடுவுநிலமை பொருந்தியவர்களா?

சரி இனி விசயத்துக்கு வருவம்...

எனது சிபாரிசுகள்

1. கொஞ்ச நாளைக்கு மட்டறுத்தல் வேலைகளில் இருந்து வலைஞன் அவர்கள் ஒதுங்கி இருப்பது நல்லது. இது தற்போது உள்ள மனக்கசப்புக்கள் குறைவதற்கு உதவும். மட்டறுத்தல் தவிர்ந்த ஏனைய நிருவாக வேலைகளை மட்டும் தற்போதைக்கு வலைஞன் செய்வது சிறந்தது. தற்போதைக்கு மோகன் அவர்கள் மட்டறுத்தல் வேலைகளில் அதிக கவனம் எடுப்பது நல்லது.

2. தற்போது மட்டறுத்துனர்களாக இருக்கும் யாழ்பாடி, எழுவான், யாழ்பிரியா என்போர் தினமும் யாழுக்கு வருவதில்லை. யாழ் இணையத்தில் மட்டறுத்துனர் என்பது என்ன ஒரு கெளரவப்பட்டமா? தினமும் வந்து இவர்களால் மட்டறுத்தல் செய்ய முடியாது இருந்தால், இவர்கள் நீக்கப்பட்டு இவர்களிற்கு பதிலாக புதிய மட்டறுத்துனர்கள் தெரிவு செய்யப்படவேண்டும். மேலும், மட்டறுத்துனர்களை தெரிவு செய்யும்போது அவர்கள் யார் என்று கள உறவுகளிற்கு தெரியப் படுத்தப்படவேண்டும். புதிய ஒரு உறுப்புரிமையுடன் மட்டறுத்துனர் என்று பதவியாக ஒன்றும் ஒருவருக்கும் கொடுக்கப்படக்கூடாது. மேலும், மட்டறுத்துனர்களாக யாரைப்போடலாம் என்று கள உறவுகளிடம் பகிரங்க ஆலோசனை கேட்கலாம்.

3. தற்போது யாழ் இணையத்தில் உள்ள களவிதிமுறைகள் அனைத்தும் மீளவும் மறுசீரமைக்கப்பட வேண்டும். யாழ் கள உறவுகளின் ஏகமனதான சிபாரிசின் அடிப்படையில் புதிய களவிதிமுறைகள் உருவாக்கப்படவேண்டும். தற்போது உள்ள ஹிட்லர் தன்மையிலான, கள உறவுகளை அச்சுறுத்தும் பாணியிலான விதிமுறைகள் அனைத்தும் உடனடியாக நீக்கப்படவேண்டும். எதிர்காலத்தில் கருத்துக்கள விதிமுறை ஒன்று புதிதாக உருவாக்கப்படுமாயின் அதுபற்றி முன்கூட்டியே கருத்துக்கள உறவுகளிற்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைகளும் பெறப்படவேண்டும். சர்வாதிகாரமான முறையில் ஒருதலைப்பட்சமாக விதிமுறைகள் கொண்டுவரப்படக்கூடாது.

4. நிருவாகத்திற்கு ஒரு கருத்தாடல் - தலைப்பு நகர்த்தப்படுமாயின் அதுபற்றி முதலில் அந்த கருத்தாடலை ஆரம்பித்தவருக்கு அறிவித்தல் கொடுக்கவேண்டும். தகுந்த காரணம் கூறப்படவேண்டும். இதுபோல் ஒரு கருத்தாடல் தலைப்பு மூடப்படுமாயின் கருத்தாடலை ஆரம்பித்தவருக்கு தகுந்த காரணம் கூறப்படவேண்டும். இதுபோல் தான் ஆரம்பித்த கருத்தாடல் ஒன்றை கள உறவு ஒருவர் மூடுமாறு கேட்டால் உடனடியாக அது மூடப்படவேண்டும்.

எனது மிகுதி சிபாரிசுகளை பின்பு சொல்கின்றேன்..

யாழ் இணையம் என்பது எனது தாய் - அன்னை போன்றது. ஒரு சிலரின் தெரிந்து நடைபெறும் அல்லது தெரியாமல் தவறான செயற்பாடுகள் மூலம் எமது தாயிற்கு களங்கம் ஏற்படுவதை நாம் எல்லோரும் தடுத்து நிறுத்துவோம்.

ஒருவருடன் ஒருவர் அன்புடன் - புரிந்துணர்வுடன் கருத்தாடல் செய்ய முயற்சிப்போம். இதுவே - அன்பு - மற்றும் புரிந்துணர்வு, மனிதாபிமானம் இவையே எமது தாயின் மடியில் நாம் என்றென்றும் சுகமாகச் சாய்ந்து இருப்பதற்கு உதவும்.

உங்கள் கருத்துக்களையும் இங்கு பிரசுரிப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். இங்கு பிரசுரிக்கப்படும் கருத்துக்களை நிருவாகம் தூக்கமுடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

நன்றி! வணக்கம்!

Posted

எனக்கு இங்க என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. கண்டபாட்டுக்கு அடிபாடு நடக்குது. அது மட்டும் தெரியுது..! ஏதோ பிரச்சினைகளை கெதியா தீரூங்கோ

Posted

உறவோசை எனும்பகுதியே கருத்தாடுபவர்கள் தங்களின் மனவோட்டங்களையும், மனவுளைச்சல்களையும் பதியும் இடம்... அங்கு தலைப்புகள் தூக்கப்பட்டு, கருத்துக்கள் கத்தரிக்கப்பட்டும் கடாசப்பட்டும் இருக்கிறது...

குறித்த கருத்து தலைப்புக்கு சம்பந்தமில்லாதவைகளை கடாசி இருப்பதை ஓரளவுக்கு ஏற்று கொள்ள முடியும்.. ஆனால் பலதும் தங்கள் மீதான விமர்சனங்களை ஏற்று கொள்ள முடியாது கடாசப்பட்டவை...!

தங்கள் மீதான தவறுகளை களைவைதை விட அதை நியாயப்படுத்துவதே குறிக்கோளாக வைத்து இருக்கிறார்கள்...!

தவறுகள் திருத்தப்பட வேண்டியவை நியாயப்படுத்த பட கூடாது- இதை சொன்னவர் கிறிஸ்ணகுமார் ( கிட்டு அண்ணா) எனும் தமிழீழ இணை இல்லா தளபதிகளில் முக்கியமானவர்... அதனால்தான் அவர் பெரிய தளபதியாக விளங்கினார், முன்னுதாரணமாக திகழ்கிறார்...!

Posted

யாழ் இணையத்தில் இழுபறிகள், கெடுபிடிகள், மனக்கசப்புகள் வருவதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை.

தவறு கருத்தாளர்கள் மீது என்றுதான் நான் நினைக்கிறேன். வெட்டுப்படாத மாதிரி உங்களுக்கு கருத்துகளை வைக்கத் தெரியவில்லை. வெட்டியோடவும் பழக வேண்டும்.

நீங்கள் நினைப்பது போன்று கருத்துக்களை வைக்க வேண்டும் என்பதை விட, நீங்கள் கொண்டிருக்கும் கருத்தும், அதன் காரணங்களும் மற்றவர்களை சென்றடைய வேண்டும் என்பதுதான் முக்கியம்.

சில கருத்துக்களை படித்து "செம்மறியள்" என்று நான் நினைப்பேன். அதை அப்படியே எழுத முடியுமா? எழுதினால் வெட்டுப்படத்தான் செய்யும். அதை விட்டு "இது போன்ற சிந்தனைகள் மந்தைத்தனமாக இருக்கின்றன" என்று நாகரீகமாக எழுத வேண்டியதுதான்.

Posted

அடிச்சாலும் பிடிச்சாலும் அண்ணன் தம்பி நாங்கடா ;)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சில கருத்துக்களை படித்து "செம்மறியள்" என்று நான் நினைப்பேன். அதை அப்படியே எழுத முடியுமா? எழுதினால் வெட்டுப்படத்தான் செய்யும். அதை விட்டு "இது போன்ற சிந்தனைகள் மந்தைத்தனமாக இருக்கின்றன" என்று நாகரீகமாக எழுத வேண்டியதுதான்.

நான் இதை நங்கு அறிவேன். சில தடவைகள் நிர்வாகத்துக்கு உங்களின் எழுத்தின் தன்மையைச் சுட்டிக்காட்டியும் இருக்கிறேன். ஆனால் அவை பாரபட்சமா தவிர்க்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் எனக்கு நிர்வாகத்தின் போக்கில் அவ்வளவு திருப்தி இருந்ததில்லை. ஆனால் நாம் நிர்வாகம் ஒன்றிங்கு இருக்கிறது என்று தெரிந்து அவர்களுக்கு கீழ் கருத்தெழுதனும் என்று வரவில்லை. எங்கள் தாய் மொழியின் மீது கொண்ட அக்கறையின் பால் தாயகத்தின் மீது கொண்ட அக்கறையின் பால் தமிழில் எழுத வந்தோம். ஆனால் அக்களத்தை சிலர் தங்களின் சுய பிரச்சாரத்துக்காக எடுத்துக் கொண்டதால் தான் இங்கு பிரச்சனைகள் அதிகமாயின.

தாயகம்.. தமிழ் தேசியம் போன்ற விடயங்கள் சுருங்கி.. வேறு திசையில்.. களம் போய்க்கிட்டு இருக்கிறது. அவற்றில் பல அர்த்த மற்ற விடயங்கள். மக்களை தவறாக வழிநடத்தக் கூடிய விடயங்கள். அதில் தான் பலருக்கு கருத்து மோதலும்.. பிரச்சனைகளும் தோன்றுகின்றன.

சபேசனின் கருத்தின் பாணியை இன்று கூட ஒரு தலைப்பில் உதாரணமாக்கி காட்டி இருந்தேன். இப்போ அவரே.. ஒருவரை எவ்வாறு செம்மறின்னு சொல்லுறது இங்கு நிலைக்கும் என்று சொல்லி இருக்கிறார். அவர் மட்டுமல்ல.. சில மட்டுறுத்தினர்களும் இக்குள்ள கருத்தாளர்களை செம்மறியள் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. :lol::lol:

Posted

மட்டுறுத்துனர்களும் ஒவ்வொரு கருத்தாளர்களாக இருந்தால் இன்னும் நல்லம் எல்லோ :lol:

முந்தி 2005 இல் இருந்த போல ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மட்டுறுத்தினரை நியமித்தால் நல்லதென நினைக்கின்றேன். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

முரளி

நீங்கள் உங்கட புள்ளி நிறுவனத்தை ஒரு புளொக் ஆக்கினால் அதிலேயே நாங்கள் மறுமொழிகளை போடலாம் தானே

இது அங்கை படிச்சிட்டு இங்கை வரவேண்டியிருக்கு -

உங்களுக்கு கூழுக்கும் ஆசை

மீசைக்கும் ஆசையாக்கும் :lol:

Posted

கருத்து மோதல்கள் நல்லதுதானே. அதற்குத்தானே கருத்தக் களம். கருத்து மோதல்கள் வருகின்ற போதுதான் எங்களுடைய சிந்தனைகள் கூர்மையடைகின்றன.

உங்களுடைய கருத்து எனக்கு முட்டாள்தனமாக படலாம். என்னுடைய கருத்து உங்களுக்கு முட்டாள்தனமாக படலாம்.

இதை "நீங்கள் ஒரு முட்டாள்" என்று சொல்லக் கூடாது.

"உங்களுடைய இந்தக் கருத்து எனக்கு முட்டாள்தனமாக படுகிறது" என்று சொல்லலாம். அங்கே உங்களை முட்டாள் என்று பொதுப்படையான கருத்து வைக்கப்படவில்லை.

உங்களுடைய குறிப்பிட்ட கருத்துத்தான் முட்டாள்தனமானது. கெட்டிக்காரத்தனமான வேறு கருத்துக்கள் உங்களிடம் இருக்கலாம். அது மட்டுமல்ல. குறிப்பிட்ட கருத்து முட்டாள்தனமாகத்தான் எனக்குத்தான் படுகிறது. மற்றவர்களுக்கு அது நல்ல கருத்தாக இருக்கலாம்.

இப்படியான கருத்துக்களை உள்ளடக்கியபடி எழுதுகின்ற பொழுது, அது வெட்டுப்படுவதற்கு சந்தர்ப்பங்கள் வெகு குறைவு.

ஆனால் "நீங்கள் ஒரு முட்டாள்" என்று எழுதினால் அது வெட்டுப்படும். யாழ் களத்தில் அப்படியான முறையில் எழுதிவிட்டு "ஐயோ என்னுடைய கருத்தை வெட்டி விட்டார்கள்" என்று சொல்வது சரியல்ல.

கருத்தின் உட்பொருள் சிதையாமல் கருத்துக்களை வைப்பதற்கு பல வழிமுறைகள் உண்டு. நீங்கள் அதைப் பற்றி சிந்திக்காது, இப்படித்தான் என்னுடைய கருத்தக்களை வைப்பேன் என்பது எனக்கு அறிவுள்ள செயலாகப் படவில்லை.

Posted

கொழும்புத்தமிழர் சிலர் தற்போதய கைதுகள் காணமற்போதல்களை "அவையளுக்கு தொடர்பு இருக்குதாம்" என்று கூறி நியாயப்படுத்துகினம். அதாவது தாங்கள் கொஞ்சம் வெள்ளன இங்கால வந்து இடம்பிடிச்சு OIC யை பழக்கம் பிடிச்சவுடன அவையளால இப்படி கதைக்க முடியுது! அதோட இப்ப புதுசா யாழ்பபாணத்தில இருந்து வந்து சத்தமா தமிழில கதைக்கிற ஆக்களை அவையளுக்கு அவ்வளவா பிடிக்கிறதும் இல்லை.

சபேசனின் கருத்தும் இது போலதான் இருக்கு!

Posted

யாழ் இணையத்தில் இழுபறிகள், கெடுபிடிகள், மனக்கசப்புகள் வருவதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை.

எனக்கும் புரியல புரியல புரியல

மண்டையப்போட்டு பிச்சிக்கிறன்

Posted

இங்கே பிரச்சனைப்படுபவர்கள் பெரும்பாலானவர்களை விட நான் யாழுக்கு பிந்தி வந்தவன். எனக்கு யாரையும் பழக்கம் கிடையாது.

"பூனைக்குட்டி" என்று கருத்தாளர் இருக்கிறார். அனேகமாக என்னுடைய மனதில் இருக்கின்ற கருத்துக்களையே எழுதுவார். ஆனால் அவருடைய கருத்துக்கள் அனேகமாக வெட்டுப்படும். காரணம் அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் அப்படி.

அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் காரணமாக அவருடைய கருத்துக்கள் வெட்டுப்படுவது பற்றி எனக்கு கவலைதான். "இந்த மனுசன் இந்தக் கருத்தை ஒழுங்கான வார்த்தைகளில் எழுதினால் கருத்து நிலைக்குமே" என்று நான் கவலைப்படுவது உண்டு.

இதுதான் எல்லாத் தரப்பினருக்கும் நடக்கிறது. நிர்வாகம் பாரபட்சம் பார்ப்பதாக நான் நினைக்கவில்லை.

Posted

இதுதான் எல்லாத் தரப்பினருக்கும் நடக்கிறது. நிர்வாகம் பாரபட்சம் பார்ப்பதாக நான் நினைக்கவில்லை.

உங்கட மனச்சாட்சிய தொட்டு சொல்லுங்கோ

எனக்கம் அதுதான் காரணமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது கருத்துக்களை வெட்டினாலும் நான் தொடர்ந்து எழுதிகொண்டேயிருப்பேன்.................

..

காரணம் நான் எனது வாழ்வில் முதன் முதலாக ஒரு பொது கருத்துகளத்தில் கருத்தெளுத தொடங்கியது "இந்த யாழ்களத்தில்தான்" எனது கருத்துக்கள் கத்தரிக்கப்படுகின்றன என்றால்.............. அதன் பொருள் ஒரு பொது களத்தில் நாகரீகமான முறையில் என்னால் கருத்தை முன்வைக்க முடியவில்லை என்பதுதானே? ஆகவே நான் பொது களத்தில் எழுதுவதுபற்றி கற்றுகொள்வதற்கு இன்னமும் நிறையவே இருக்கின்றது.

ஒரு வேளை ....... நான் நல்ல எழுத்தாளன் ஆகி நோபல் பரிசிற்கும் சிபாரிசு செய்யபட்ட தருணத்தில் நான் அதுபற்றி எழுதும்போது அதை நிர்வாகம் கத்தரித்தால்...........??? பரிசை தந்துவிட்டு அவர்கள் என்னை சில நிமிடங்கள் பேசுவதற்கு அனுமதிப்பார்கள்............. நிச்சயமாக யாழ்கள நிர்வாகத்தைதான் பேசுவேன் என்பதை இப்போதே அறிய தருகிறேன்.

சிலநேரங்களில் நாம் என்ன எழுதினோம் என்பது முக்கியமல்ல..... எங்கே எழுதினோம் என்பதே முக்கியமானது. இதை சக உறவகள் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கின்றேன்!

Posted

கருத்தின் உட்பொருள் சிதையாமல் கருத்துக்களை வைப்பதற்கு பல வழிமுறைகள் உண்டு. நீங்கள் அதைப் பற்றி சிந்திக்காது, இப்படித்தான் என்னுடைய கருத்தக்களை வைப்பேன் என்பது எனக்கு அறிவுள்ள செயலாகப் படவில்லை.

சபேசன்

நீங்கள் என்னை சாதி வெறி பிடித்தவர் எண்று நேரடியாக திட்டியதை நான் மறக்கவில்லை...

அப்போது உங்களிம் தரம் என்ன என்பது தெளிவாக புரிந்தது... அதுக்காக காரணம் எல்லாம் பின்னால் அடுக்கினீர்கள்...

அதே பாணியில் என்னாலும் கருத்து எழுத முடியும் என்பதை காட்ட முடியும் .. ஆனால் எனது கருத்து தூக்கப்பட்டு உங்களது கருத்து அப்படீயே இருக்கும்... அதை தட்டிக்கேட்டால் சம்பந்தமில்லாத விளக்கத்தை வலைஞன் வழங்குவார்...!

நீங்கள் யாராவது களவுறவை எப்படீ எண்று நினைப்பீர்கள் என்பதை எழுதி இருந்தீர்கள்... எனக்கும் உங்கள் மீதான அபிப்பிராயம் அதுதான்....!! ( இப்படி சொல்லும் போது உங்களின் மன நிலை என்ன என்பதை சிந்தித்து பாருங்கள் அதன் வலி புரிய முடியலாம்)

உங்களால் மரியாதை கொடுக்க முடியவில்லை எண்றால் நீங்களும் அதை எதிர்பார்க்கும் தகுதி அற்றவர் ஆகிவிடுகிறீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இழுபறிகள், கெடுபிடிகள், மனக்கசப்புக்கள் எல்லாம் மனிதருக்கு வருவது இயல்பே. அதற்காகச் சேணம் கட்டாத குதிரைவண்டிப் பயணமாக யாழை ஆக்க முயல்வோரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஒவ்வொருவரும் தான் நினைத்த சட்டங்கள் இருக்கவேண்டும் என்பதும், சிலருக்கு சிபார்சு கிடைக்கின்றது என்று சிறுபிள்ளைகள் போல் அழுதுவடிவதும் முதிர்ச்சியற்ற தன்மையைத்தான் காட்டுகின்றது. இதற்குள் தங்களை அடிக்க ஆளே இல்லை என்ற நினைப்பில் எழுதுவதும் நடக்கின்றது.. நமது சமூகத்தை யாழ் பிரதிபலிப்பதால் எதுவும் தவறாகப்படவில்லை!

Posted

வெட்டுபவர்கள் வெட்டட்டும். அது அவர்கள் பணி!

நாம் நமது கருத்துக்களை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்போம் அது எங்கள் பணி!!

அப்படி நினைத்துக்கொள்ளுங்கள். பிரச்சினையே இல்லை.

எதிர்நீச்சல் போட்டு கிடைக்கும் வெற்றியே அலாதி தான்!!!:D

Posted

தயா,

உங்களை சாதிவெறியர் என்று எழுதியிருக்கிறேன் என்று சொல்கிறீர்கள். அங்கு கூட நான் வார்த்தைகளை கவனமாகப் பாவித்திருப்பேன் என்றுதான்நான் நம்புகிறேன். சாதிவெறியர்கள் யார் என்ற என்னுடைய பார்வையை சொல்லி, என்னுடைய கருத்துக்கள் நீங்கள் எப்படிப் பொருந்துகிறீர்கள் என்பதையும் சொல்லியிருப்பேன். என்னுடைய கருத்து தவறு என்று நீங்கள் சுட்டிக்காட்டுகின்ற போது, அதற்கும் வருத்தம் தெரிவித்திருப்பேன்.

என் மனதில் படுவதை ஒரு கருத்துக்களத்திற்கு ஏற்ற வகையில் தெரிவிக்கவும், என்னுடைய கருத்து தவறு என்று தெரிகின்ற போது அதற்கு வருத்தம் தெரிவிக்கவும் கூடிய பண்பு என்னிடம் உண்டு.

ஒரு கள உறவை பற்றி நான் கொண்டிருக்கும் அதே கருத்தை, என்னைப் பற்றியும் யாராவது வைத்திருப்பார்கள் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம்தான்.

நாம் ஒருவரை "செம்மறி" என்று கருதுகின்ற போது, அதே கருத்தை அவர் எம்மைப் பற்றிக் கொண்டிருப்பதற்குமான உரிமையை வழங்கி விடுகிறோம். இது ஒரு இயல்பான விடயம். இதனால் நான் வலி ஒன்று அடையப்போவது இல்லை.

"என்னை செருப்பால் அடிக்க வேண்டும்" என்ற கருத்தும் யாருக்காவது இருக்கலாம். ஒரு கள நண்பர் அதை மறைமுகமாக வெளிப்படுத்தியும் இருந்தார். ஆனால் அவர் அதை சாதூரியமாக வெளிப்படுத்தியதால், அது வெட்டுப்படாமல்அப்படியே இருக்கிறது.

இதைத்தான் நான் சொல்கிறேன். நீங்கள் இங்கே மிகக் கடுமையான காட்டமான கருத்துக்களை கூட வைக்க முடியும். அதை எப்படி வைக்கிறீர்கள் என்பதுதான் இங்கே உள்ள பிரச்சனை.

ஒரு பொதுத்தளத்தில் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளை பயன்படுத்தி உங்கள் கருத்தை நீங்கள் தாரளமாக எழுதலாம். அப்படி எழுதாது உங்களின் குற்றம். நிர்வாகத்தை குறை சொல்லிப் பயனில்லை.

அதே வேளை சில செய்திகள் முற்றுமுழதாக நீக்கப்படுவது பற்றி என்னால் கருத்துச் சொல்ல முடியவில்லை. அதற்கான காரணத்தை நிர்வாகம்தான் சொல்ல வேண்டும். முற்று முழுதாக ஒரு தலைப்பை நீக்குகின்ற போது, அதற்கான காரணத்தை நிர்வாகம் சுருக்கமாக என்றாலும் தெரிவிக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

Posted

பொதுவாகவே நான் நீங்கள், உஙகள் என்று எழுதுவதே வழக்கம் சிலவேளைகளில் நீர், உமது என்று எழுதியிருக்கின்றேன். அப்படி எழுதிய போதெல்லாம் ஒருமையில் எழுதியுள்ளேன் என்று சுட்டிக்காட்டி அதை மாற்றியுள்ளனர். ஆனால் இங்கே நீ ,நாய், பொறுக்கி, டே ய், சனியன் போன்ற பல சொற்கள் பல்லையிளித்து நிற்பதை பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. சிலவேளை மட்டுறுத்தினர்கள் கவனிக்கவில்லையென்று யாராவது சாட்டுச் சொல்லலாம். ஆனால் அப்படி தரக்குறைவாக எழுதிய கருத்தொன்றுக்கு அடுத்ததாக ஒரு மட்டுறுத்தினரே கருத்தெழுதியுள்ளார். அவர் அதைக் கவனிக்கவில்லையென்றால் நம்ப முடியுமா?? அதே போல் சில கருத்துக்கள் எழுதிய அடுத்த நிமிடமே கடாசப்படுகின்றது. ஆனால் சில கருத்துக்கள் மற்றவர்களால் சுட்டிக்காட்டிய பின்பு கூட கடாசப்படாமலேயே விட்டு வைக்கப்படுகின்றது அல்லது சில நாட்களின் பின்பே கடாசப்படுகின்றது.

முதலில் நிர்வாகம் பக்கச் சார்பாக நடந்து கொள்வதை நிறுத்தினாலே பல பிரைச்சினைகள் காணாமல் போய்விடும்.

Posted

யாழ் இணையத்தில் இழுபறிகள், கெடுபிடிகள், மனக்கசப்புகள் வருவதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை.

தவறு கருத்தாளர்கள் மீது என்றுதான் நான் நினைக்கிறேன். வெட்டுப்படாத மாதிரி உங்களுக்கு கருத்துகளை வைக்கத் தெரியவில்லை. வெட்டியோடவும் பழக வேண்டும்.

சபஸேன் துயவன் ஆகிய இருவரும் கூடுதலாக வேறு செய்திகளிலும் மத மறுப்பு மத நம்பிக்கைய தங்கள் பதிலாக வைத்தை பார்த்தேன்.. எது என்று இப்ப சொல்ல முடியவில்லை

இதை நான் குற்ற சாட்டாக சொல்லவில்லை.

மோகன் அண்ணாவில் இருந்து சில உறவுகளுக்கு எல்லாம் தெரியும் யாழ்களத்துக்கு நாய் நரி ஓனாய் என்ர காட்டு மிருகங்களை எல்லாம் கூட்டி கொண்டு வந்ததில் நானும் ஒருதன் தான் ஆனா நான் கூட ஏதாவது ஒரு விடயத்தில் என்னோடு மோதியவனோடு ஒற்றுமையாக( ஆக கூடியது பெண்கள் விடயத்திலாவது) கருத்து வைத்து இருக்கிறோம் அல்லது ஒன்று பட்டு போய்விடுவோம் ஆனா நீங்கள் அப்படி இல்லை அங்கும் முட்ட பார்ப்பிர்கள் அப்படி இல்லல இருவரும் ஒரே கருத்துள்ள தலைபில் எழுதுவதை தவித்துள்ளிர்கள்...

மேலாக் இன்று சில கருதாளர்கள் களத்தை விட்டு போய்விட்டார்கள்....

தயவு செய்து இதை குற்ற சாட்டாக எடுக்க வேண்டாம்.. யாழில் அறிமுகம் ஆகும் போது இருவரும் போராட்டத்தின் மீது வைத்து இருந்த மதிப்பை பர்த்து நீங்களுஇம் துயவனும் எழுதும் அனைத்து கருத்தையுமே வவசிப்பேன் ஆனா போக போக உங்கள் இருவர் கருத்தும் ஒன்ரையே சுற்றி வந்தது அதன் பின் ஆர்வம் குறைந்துவிட்டது.

அது போல தான் நாரதர் அண்ணாவும் குறுக்காலபோனவரும் என்ன அற்புதமான கருத்து வைத்த இருவரும் கானவில்லை அதுவும் குறுக்கால போனவர் நல்ல தொடர்ந்து எழுதி கொண்டு வ்அந்துவிட்டு மற்ற பெடியலை சும்மா இடக்கிட ஏதும் சொன்னாலும் பறவாய் இல்லை எல்லா தலைப்பிலும் அவன்களை கிண்டல் நக்கல் என்று வெறுப்பேத்திகொண்டு திரிந்து விட்டு இன்று அதுவும் எழுதாமல் போய்விட்டார்..

யாழ்கள நல்லா வளந்து நல்ல சந்தர்ப்பத்தை கொடுத்து இருக்கு எங்கள் கருத்துகளை வைக்க அதை வடிவாக பயன்படுத்துவதை விடுத்து வீண் மோதல்களல் கானாமல் போவது( ஒழித்து ஒட்டுவது) நல்லது இல்லை.....

இதில் சிலரின் பெயர் சொல்லி எழுதி இருக்கிறேன் தவறு ஆயின் மன்னிக்கவும் மாறக என்னை தடை செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்ய கூடாது( அவரவர் மூளைக்கு ஏற்ற மாதிரி தானே கருத்து எழுத முடியும்)

Posted

இதுதான் எல்லாத் தரப்பினருக்கும் நடக்கிறது. நிர்வாகம் பாரபட்சம் பார்ப்பதாக நான் நினைக்கவில்லை.

முழு பூசனிக்காயை சோற்றில் புதைக்க நினைக்கும் உங்களை என்னவென்பது?

நல்ல தமிழில் எழுதினால் வெட்டமாட்டார்கள் என உரியவர்களுக்கு சப்புகட்டும் உங்கள் சுயநலம் வாழ்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நட்பின் கலைஞா,

இது யாழ்களத்தில் மட்டுமல்ல பரவலாக எல்லாக் குழுமங்கள் வலைத்தளங்களிலும் எழும்பிரச்சனைதான். சொல்லுக் கேட்காமல் படங்களில் வில்லன் சொல்வது போல் 'முதலில் அவனை நிறுத்தச் சொல் பிறகு நான் நிறுத்துகின்றேன் என்றால்!! 'நிர்வாகமும் என்ன தான் செய்யும்? !! அதனால் தான் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வருகின்றார்கள்.

" வரைமுறைகளை மீறாதவனுக்கு விதிமுறைகள் தேவையில்லை"

இங்கு எல்லோரும் வளர்ந்தவர்கள் தானே. நமக்கு அடிக்கும் போது எப்படி வலிக்குமோ அதே வலிதான் அடுத்தவனை அடிக்கும் போதும் ஏற்படும் என்பதை ஒரே ஒரு கணம் உணர்ந்தால் போதும். "தப்புக்குத் தப்பு சரியாகிவிடாது" அது நம்மைச் சராசரியாக்கிவிடும்.

கருத்துக்களுடன் ஆன மோதல்களைத் தவிர்த்து அதைத் தனிப்பட்ட தாக்குதலாக நினைத்து விழும் வார்த்தைகளால் தான் மனங்கள் துண்டாடப் படுகின்றன. வார்த்தைகளில் கண்ணியம் மிக மிக அவசியம் அதுவும் பொது இடம் என்று வந்துவிட்டால் எல்லை மீறிய பொறுமையும் தேவையாகத்தான் இருக்கிறது.

நிர்வாகிகளையும் சரி இங்குள்ள உறவுகளிலும் சரி யாரையும் நான் நேரே காணவில்லை தனிப்பட்ட விதமாகவும் தெரியாது. ஒரு நாள் சந்திக்கும் நிலை ஏற்பட்டால் முகம் பார்க்க வேண்டாமா? எழுத்துக்கள் தானே நம்மை இணைக்கின்றது.

பலநேரங்களில் வந்து பார்த்துவிட்டுப் போவதோடு சரி கருத்துக்களை முன் வைக்க விரும்புவதில்லைக் காரணம். " தவறுகளை நியாயப்படுத்தும் முனைப்போடு இருப்பவர்களிடம் எந்த வார்த்தைகளும் எடுபடுவதில்லை; அதைவிட மெளனமே சாலச் சிறந்தது என்றுதான்.

கருத்துக்களில் செறிவையும் வார்த்தைகளில் கண்ணியத்தையும் முடிந்தவரை முயன்று தமிழிலும் எழுதுங்கள்.

மொழிக்கான போராட்டம்தான் எம் ஈழத்தில் நடக்கின்றது அப்படியிருக்க மொழி இங்கு பந்தாடப்படுவது சரியல்ல;

ஒவ்வொருவரும் உணரவேண்டும் ஒற்றுமை வேண்டும். எல்லோரும் வெளிநாட்டில் இருக்கின்றோம் இங்குள்ள நிலமைகள் தெரியும் யாழ்பக்கம் வந்தால் அங்கும் பிரச்சனைகள் என்றால் என்னதான் செய்வது? நேரம் பொன்னானது அதை ஆக்கபூர்வமாக்குவோம்.

புரிந்துணர்விற்கு மிகுந்த நன்றி!

Posted

தயா,

உங்களை சாதிவெறியர் என்று எழுதியிருக்கிறேன் என்று சொல்கிறீர்கள். அங்கு கூட நான் வார்த்தைகளை கவனமாகப் பாவித்திருப்பேன் என்றுதான்நான் நம்புகிறேன். சாதிவெறியர்கள் யார் என்ற என்னுடைய பார்வையை சொல்லி, என்னுடைய கருத்துக்கள் நீங்கள் எப்படிப் பொருந்துகிறீர்கள் என்பதையும் சொல்லியிருப்பேன். என்னுடைய கருத்து தவறு என்று நீங்கள் சுட்டிக்காட்டுகின்ற போது, அதற்கும் வருத்தம் தெரிவித்திருப்பேன்.

என் மனதில் படுவதை ஒரு கருத்துக்களத்திற்கு ஏற்ற வகையில் தெரிவிக்கவும், என்னுடைய கருத்து தவறு என்று தெரிகின்ற போது அதற்கு வருத்தம் தெரிவிக்கவும் கூடிய பண்பு என்னிடம் உண்டு.

ஒரு கள உறவை பற்றி நான் கொண்டிருக்கும் அதே கருத்தை, என்னைப் பற்றியும் யாராவது வைத்திருப்பார்கள் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம்தான்.

நாம் ஒருவரை "செம்மறி" என்று கருதுகின்ற போது, அதே கருத்தை அவர் எம்மைப் பற்றிக் கொண்டிருப்பதற்குமான உரிமையை வழங்கி விடுகிறோம். இது ஒரு இயல்பான விடயம். இதனால் நான் வலி ஒன்று அடையப்போவது இல்லை.

"என்னை செருப்பால் அடிக்க வேண்டும்" என்ற கருத்தும் யாருக்காவது இருக்கலாம். ஒரு கள நண்பர் அதை மறைமுகமாக வெளிப்படுத்தியும் இருந்தார். ஆனால் அவர் அதை சாதூரியமாக வெளிப்படுத்தியதால், அது வெட்டுப்படாமல்அப்படியே இருக்கிறது.

இதைத்தான் நான் சொல்கிறேன். நீங்கள் இங்கே மிகக் கடுமையான காட்டமான கருத்துக்களை கூட வைக்க முடியும். அதை எப்படி வைக்கிறீர்கள் என்பதுதான் இங்கே உள்ள பிரச்சனை.

ஒரு பொதுத்தளத்தில் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளை பயன்படுத்தி உங்கள் கருத்தை நீங்கள் தாரளமாக எழுதலாம். அப்படி எழுதாது உங்களின் குற்றம். நிர்வாகத்தை குறை சொல்லிப் பயனில்லை.

அதே வேளை சில செய்திகள் முற்றுமுழதாக நீக்கப்படுவது பற்றி என்னால் கருத்துச் சொல்ல முடியவில்லை. அதற்கான காரணத்தை நிர்வாகம்தான் சொல்ல வேண்டும். முற்று முழுதாக ஒரு தலைப்பை நீக்குகின்ற போது, அதற்கான காரணத்தை நிர்வாகம் சுருக்கமாக என்றாலும் தெரிவிக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

இதுக்கு நான் எழுதிய பதிலை எதுக்காக வெட்டினார்கள்...???

அறிவு பூர்வமாக துணிச்சலாக விவாதம் நடத்த வெட்டின மட்டுறுத்துனரை அழைக்கிறேன்...!!

துணிவு இருந்தால் மட்டும் வெளி வரவும்...!

( நேரம் இல்லை எண்டு பதிலை அழிக்க முன்னம் நாங்கள் எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்களோ என்பதுக்கும் பதில் வேண்டும்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதோ,கெட்டதோ சகல பிரச்சனைகளுக்கும் மோகன் வந்து பதிலளித்தால் நன்றாக இருக்கும்.(அமைதியாவார்கள்)

Posted

நல்லதோ,கெட்டதோ சகல பிரச்சனைகளுக்கும் மோகன் வந்து பதிலளித்தால் நன்றாக இருக்கும்.(அமைதியாவார்கள்)

இங்கு நாங்கள் பதில் கேட்டு கருத்து எழுதவில்லை... சக கள உறவுகளிற்கும் வாசகர்களிற்கும் எமது உணர்வுகளைத் தெரிவிக்கின்றோம்... அவ்வளவுதான்...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.