Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகோதரி நடிகை நக்மா கிறிஸ்தவளாக மாறியது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Nagamha.jpg

சகோதரி நடிகை நக்மா கிறிஸ்தவளாக மாறியது ஏன்?

ஏசு தான் எனக்கு சூப்பர் ஸ்டார் - நக்மா கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்

நடிகை நக்மா கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். சென்னையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் அவர் பேசினார். “தற்கொலை உணர்வில் இருந்து ஏசு என்னை காப்பாற்றினார்” என்று அவர் கூறினார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி பட உலகிலும் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர், நக்மா. சினிமாவில், `மார்க்கெட்’ இழந்ததும் சில காலம் அரசியலில் இருந்தார். பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கினார்.

பெங்களூரில் உள்ள `வாழும் கலை’ என்ற அமைப்பில் சேர்ந்தார். சில வருடங்கள் அந்த அமைப்புக்காக பணியாற்றினார். பின்னர் அந்த அமைப்பில் இருந்தும் அவர் விலகிவிட்டார்.

இப்போது அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். ஊர் ஊராக சென்று கிறிஸ்தவ மத கூட்டங்களில் பேச அவர் முடிவு செய்து இருக்கிறார்.

பிரபல கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ், திரையுலகினருக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு நக்மா `பைபிள்’ பிரசங்கம் செய்து, கூட்டத்தினரை ஆச்சரியப்படுத்தினார்.

ஒவ்வொரு அத்தியாயத்தில் உள்ள வாசகங்களை மேற்கோள் காட்டி பேசி, அனைவரையும் வியக்க வைத்தார். அவர் பேசியதாவது:-

“நான் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் `சூப்பர்ஸ்டார்’ நடிகர்களுடன் நடித்து விட்டேன். ஆனால் எனது உண்மையான சூப்பர்ஸ்டார் ஏசுதான்.

அரசியலில் சில காலம் இருந்தேன். அப்போது எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. நிம்மதி இழந்து தவித்தேன். அழுதேன். தற்கொலை உணர்வுகளும் வந்து போனது. அந்த நேரம் `பைபிள்’ என் கைக்கு கிடைத்தது. படித்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாக என்னை அழுத்திய துக்கங்கள் விலகின. மகிழ்ச்சியும், சந்தோஷமும் மனமெங்கும் பரவின.

எனக்கு இப்போது அம்மா, அப்பா, சொந்தபந்தம் எல்லாமே `பைபிள்’தான். நான் கர்த்தரின் மகள். ஏசு, என் வாயில் இருந்து பிரசங்கம் செய்கிறார். தேவன் என்னிடம் சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன்.

எனக்கு இனி கர்த்தர்தான் உலகம். அவருக்காக ஊழியம் செய்யப்போகிறேன்.”

இவ்வாறு நக்மா பேசினார். தொடர்ந்து அவர், `பைபிள்’ வாசகங்களை சொல்லி பிரசங்கம் செய்தார்.

‘ஏசுவின் இரண்டாம் வருகை’ நிச்சயமாக நடக்கப்போகிறது. அதற்காக நாமெல்லாம் காத்திருக்க வேண்டும்” என்றார் நக்மா.

http://unmaiadiyaan.wordpress.com/

Nagamha.jpg

சகோதரி நடிகை நக்மா கிறிஸ்தவளாக மாறியது ஏன்?

“நான் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் `சூப்பர்ஸ்டார்’ நடிகர்களுடன் நடித்து விட்டேன். ஆனால் எனது உண்மையான சூப்பர்ஸ்டார் ஏசுதான்.

http://unmaiadiyaan.wordpress.com/

ஏசுவோடயும் நடிக்கலாம் என்கிறாரா? ஒண்டுமே புரியல.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஏசுவோடயும் நடிக்கலாம் என்கிறாரா? ஒண்டுமே புரியல.. :rolleyes:

உங்களுக்கு எப்பதான் விழங்கபோகுதோ........................?

அவா கொஞ்ச நாளாலா சொல்லுவா ஜேசு வந்து சொன்னவர் நான் படம் நடிச்சா உன்னுடன்தான் நடிப்பேன் என்று கனவில சொன்னவர் என்டு. ஜேசுவே நடிக்க ஆசைபட்ட நடிகை என்று................ பேந்தென்ன ஒரு கோடி கொடுத்து படமெடுக்க ஒரு கூட்டமே இருக்குதே.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் சில காலம் இருந்தேன். அப்போது எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. நிம்மதி இழந்து தவித்தேன். அழுதேன். தற்கொலை உணர்வுகளும் வந்து போனது. அந்த நேரம் `பைபிள்’ என் கைக்கு கிடைத்தது. படித்தேன்.

இங்கே தூயவன் இணைக்கிற பகுதிகளையெல்லாம் படித்திருப்பாரோ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இரவு நித்திரையில் நக்மா என் கனவில் வந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இரவு நித்திரையில் நக்மா என் கனவில் வந்தார்.

சிறி, உங்களுக்கும் கிற்ஸ்துவனாக மாறும் சாத்தியகூறுகள் உண்டு. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு சரத்குமார்,கங்குலி தான் உலகம் என்றார். இன்று கர்த்தார் தான் உலகம் என்கிறார். நாளை?

நக்மா ஒன்றும் தமிழ், இந்தி, தெலுகு என கொடிகட்டி பறக்கவில்லை. எல்லா இடமும் அவரது உடைகள் தான் காற்றில் பறந்தன.

சரி, கொஞ்சக்காலம் கதாகாலட்சேபம் செய்யட்டும். அதுவும் ஒருநாள் சலிக்கத்தான் போகிறது.

உங்களுக்கு "தீபா" என்ற நடிகையை ஞாபகம் இருக்கிறதா? "ரோசாப்பு ரவிக்கைக்காரி", "முந்தானை முடிச்சு", "மீண்டும் கோகிலா" போன்ற படங்களில் நடித்தவர். ஒரு சிறந்த கவர்ச்சி நடிகை.

அவர் தற்பொழுது ஒரு கிறிஸ்தவ மத போதகராக இருக்கிறார்.

நக்மா ஒன்றும் தமிழ், இந்தி, தெலுகு என கொடிகட்டி பறக்கவில்லை. எல்லா இடமும் அவரது உடைகள் தான் காற்றில் பறந்தன.

:unsure::unsure: ஸ்ரைலு ஸ்ரைலு தான் அது சூப்பர் ஸ்ரைலு தான் :wub::wub:

உங்களுக்கு "தீபா" என்ற நடிகையை ஞாபகம் இருக்கிறதா? "ரோசாப்பு ரவிக்கைக்காரி", "முந்தானை முடிச்சு", "மீண்டும் கோகிலா" போன்ற படங்களில் நடித்தவர். ஒரு சிறந்த கவர்ச்சி நடிகை.

அவர் தற்பொழுது ஒரு கிறிஸ்தவ மத போதகராக இருக்கிறார்.

உன்னி மேரி என்ற இயற்பெயர் கொண்ட தீபா பிறவியிலேயே கிறிஸ்தவர் தான்!

கவர்ச்சி நடிகையாக இருந்தவர் தற்பொழுது "கன்னியாஸ்திரி வேடம்" தரித்திருக்கிறார் என்பதைத்தான் குறிப்பிட்டேன்.

உன்னிமேரி மதம் மாறியவர் அல்ல என்பதை குறிப்பிடாதது தவறுதான். சுட்டிக்காட்டிய வெற்றிவேலுக்கு நன்றி.

மலையாளப் படங்களில் அவர் உன்னிமேரி என்ற பெயருடன்தான் நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அப்படித்தானே?

A V M ராஜன் என்ற முன்னைநாள் நடிகரும் மதம் மாறி மதபோதகராத்தான் இருக்கிறார்

தன்நிலை அறியாதவனும் மனக்கட்டுப்பாடு இல்லாதவர்களும்தான் இவர்கள்

கண்டபடி ஆட்டம்போடுபவர்களும் மதம் மாற்றப்படுபவர்களும் இவர்கள்தான்

Edited by vvsiva

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் என்ன இருக்கின்றது? ஒரு கிறிஸ்தவராக இந்த கிண்டல்களை நான் எதிர்க்கின்றேன்.... நக்மாவை போல பலரை மாற்ற நாங்கள் எவ்வளவு கஸ்ட பட வேண்டி இருக்கின்றது...... இது எல்லாம் உங்களுக்கு புரிந்தால் தனே.....

தந்தை இந்து, தாய் முஸ்லிம், மகள் கிறிஸ்தவம்.... எம்மதமும் சம்மதம்...... பிரபலமான எவருக்கும் சம்மதம்...

Edited by chumma....

அச்சோ..உந்த கொடுமை எப்ப நடந்தது.. :D (பிறகு நம்ம நக்மா அக்கா கன்னியாஸ்திரியா போகலை தானே)..பிறகு நான் அழுதிடுவன் சொல்லிட்டன் :D ..கடசியா "சூப்பர் ஸ்டார்" ஜேசு ஆகிட்டார் என்ன கொடுமை இது...அப்ப எனி படத்தில நடிக்க வாய்ப்பு கிடைத்தா என்ன செய்வார் சொல்லவே இல்ல அத பற்றி.. :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில் பல் ஸ்டார்கள் வரலாம் ஆனா சூப்பர் ஸ்டார் உனக்கு நீயே தான்" :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேசுதாஸ் எப்படி ஜயப்ப பக்தனா மாறினார் :D

எனக்கு தலை போற வேலை உதுக்கு பதில் எழுத நேரமில்லை...கீகீகீகீஈஈஈஈ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அச்சோ..உந்த கொடுமை எப்ப நடந்தது.. :( (பிறகு நம்ம நக்மா அக்கா கன்னியாஸ்திரியா போகலை தானே)..பிறகு நான் அழுதிடுவன் சொல்லிட்டன் :lol: ..கடசியா "சூப்பர் ஸ்டார்" ஜேசு ஆகிட்டார் என்ன கொடுமை இது...அப்ப எனி படத்தில நடிக்க வாய்ப்பு கிடைத்தா என்ன செய்வார் சொல்லவே இல்ல அத பற்றி.. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில் பல் ஸ்டார்கள் வரலாம் ஆனா சூப்பர் ஸ்டார் உனக்கு நீயே தான்" :unsure:

அப்ப நான் வரட்டா!!

டேய்ய் டேய் அலட்டாமல் சும்மா இரு ஒரு பக்கத்திலை நாங்க பெரிய ஆக்கள் கதைக்கிறமெல்லே இடையிலை சும்மா வந்துக்கிட்டு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்காலத்திலை பெரிசுகளை விட சிறுசுகளுக்கு கொஞ்சம் விளக்கம் கூட போல கிடக்குது குமாரசாமியண்ணை .

கொஞ்ச நாளா யாழில இந்தக் கருத்தாடல் ஓடிக்கொண்டு இருக்கிது. இண்டைக்குத்தான் தலைப்பு கருத்தையும் பதில் கருத்துக்களையும் வாசிக்க சந்தர்ப்பம் கிடைச்சிது.

நக்மாவும் ஒரு மனுசப்பிறப்புத் தானே? அவர் கிறிஸ்தவராக மாறினால் என்ன.. இஸ்லாமியராக மாறினால் என்ன... அவர் விருப்பம். நீங்கள் ஏன் கோவிச்சுக் கொள்ளுறீங்கள். இடையில் கிறீஸ்தவராக மாறினவர் என்றால் மதப்பிரச்சாரம் செய்யுறது பிழையோ?

இப்ப குஷ்புவும் முஸ்லீமா இருந்து இப்ப இந்துவா இருக்கிறதா யாரோ சொல்லிச்சீனம். இதுவும் உண்மையோ? இதப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்.

நக்மா செய்ததில பிழையாக என்ன இருக்கிது எண்டு எனக்கு தெரிய இல்ல. சிலது இனி நக்மாவ பூவும் பொட்டுமா அர்ச்சனைத் தட்டோட கோயில் காட்சிகளில படங்களில பார்க்க ஏலாது எண்டு நீங்கள் யாரும் கவலைப்படுறீங்களோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நக்மா ....என்றால் .

நாகம்மாவின் திரிபு ஆக இருக்கலாமோ....

எதுக்கும் போய் தான் ஆராய வேணும்.

எனக்கு தலை போற வேலை உதுக்கு பதில் எழுத நேரமில்லை...கீகீகீகீஈஈஈஈ

உங்கட தலை உங்கள விட்டு எங்க போகுது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தலை போற வேலை உதுக்கு பதில் எழுத நேரமில்லை...கீகீகீகீஈஈஈஈ

அப்ப என்ன இழவுக்கு இந்தப்பக்கம் வந்தனியள்? கீக்கீ காட்டவோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதம் மாறப் போவதாக வதந்தி :மறுக்கிறார் நடிகை நக்மா

மே 25,2008,00:00 IST

சென்னை : கிறிஸ்துவ மதத்திற்கு மாறப்போவதாக கூறப்பட்ட வதந்தியை, நடிகை நக்மா மறுத்துள்ளார். "நான் ஆன்மிகவாதி. ஆனால், எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் சேர்ந்தவள் இல்லை. அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்' என, அவர் கூறியுள்ளார். றிஸ்துவ மத போதகர் ஒருவர் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு, நக்மா பேசியதாக வெளியான தகவலை அடுத்து, இந்த வதந்தி பரவியது.இதை நக்மா மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:கிறிஸ்துவ மதம் பற்றி அறிந்து கொள்வதற்காக, அதுகுறித்த தகவல்களை படித்தேன். அப்போது, அந்த அமைப்பினருடன் தொடர்பு ஏற்பட்டது. நற்செய்தி கூட்டத்திற்கு வரும்படி என்னை அழைத்தனர். மரியாதை நிமித்தமாக கலந்து கொண்டேன். இவ்வளவு தான் நடந்தது. அதற்குள், நான், கிறிஸ்துவ மதத்திற்கு மாறப்போவதாக செய்திகள் வெளியாகி விட்டன.நான், ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ள பெண். அதற்காக, எந்த ஒரு குறிப்பிட்ட மத முத்திரையும் என் மீது குத்தப்படுவதை,விரும்பவில்லை. அனைத்து மதங்களுக்கும் பொதுவானவள். மத மாற்றம் தொடர்பான விஷயங்களில் எல்லாம், எனக்கு நம்பிக்கை இல்லை. யாரையும் மதம் மாறும்படி கட்டாயப்படுத்த முடியாது.எனது தாயார், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். தந்தை இந்து. நான், கிறிஸ்துமஸ் தினத்தன்று பிறந்தேன். கிறிஸ்தவ பள்ளியில் தான் படித்தேன். எனது குடும்பத்தினர், அனைத்து மதங்களையும் மதிப்பவர்கள். பகவத் கீதை, குரான், பைபிள் என, அனைத்தையும் படிக்கிறேன். மத சார்பற்ற பெண், என கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். மதபோதகராகும் திட்டம் எதுவும் இல்லை. நடிகையாவேன் என்று கூட நினைத்தது இல்லை. எனது எதிர்காலம் பற்றி, கடவுளுக்கு மட்டுமே தெரியும். கடவுள் தான், அதை முடிவு செய்ய வேண்டும். கடவுளைத் தேடி, எங்கும் அலைந்து திரிய வேண்டிய அவசியம் இல்லை. நமக்குள்ளேயே கடவுள் இருக்கிறார். இவ்வாறு நக்மா கூறினார்.

Dinamalar

அப்பிடி எண்டால் இப்ப இஞ்ச ரெண்டு கிழமையா எல்லாரும் சொன்ன கருத்துக்கள என்ன செய்யுறது? இந்தப்பகுதிய நிருவாகத்துக்கு நகர்த்தலாமோ? பாவம் நக்மா. கடைசியில யாழிலையும் எல்லாரிண்ட நக்கலுக்கும் ஆளாகவேண்டி வந்திச்சிது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.