Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாட்டு கொத்து ரொட்டி சாப்பிடக் கூடாதோ?

Featured Replies

அனைவருக்கும் இனிய கொத்துரொட்டி வணக்கங்கள்... :icon_mrgreen:

எனக்கு கொத்துரொட்டி எண்டால் நல்ல விருப்பம்.. வீட்டில பக்கத்தில சாப்பாட்டு கடை ஒண்டு இருக்கிது. அதில சிலது கொத்துரொட்டி வாங்கி சாப்பிடுறது. சிலது நான் வீட்டில சொல்லிறது என்ன நான் கடையில வாங்கி சாப்பிட்டது எண்டு. சிலது சொல்லிறது இல்ல.. அப்ப என்ன எண்டால் கொத்துரொட்டி ஆசை வந்த உடன நான் கடைசியா மாட்டு கொத்து ரொட்டி பார்சல் ஒண்டு வாங்கிக்கொண்டு வந்து வீட்டில வச்சு சாப்பிட்டன். கடையில மாட்டு கொத்து மாத்திரம்தான் இருக்கிது எண்டு சொல்லிச்சீனம். சரி எண்டு அத வாங்கினன். பிறகு என்ன எண்டால்..

வீட்ட போன உடன சாப்பாட்டு பார்சலப்பாத்து அம்மா கேட்டா உது என்ன எண்டு. நான் மாட்டுகொத்துரொட்டி எண்டு சொன்னன். ஆ... எண்டு சொல்லி கத்திப்போட்டு எனக்கு சரியான பேச்சு விழுந்தது என்ன எண்டால் நான் மாட்டு கொத்துரொட்டி சாப்பிடக்கூடாதாம். கோழி, ஆடு, முட்டை கொத்துரொட்டிகள் எண்டால் பிழை இல்லையாம்.

எனக்கு என்னமோ இது விளங்க இல்ல. ஆடு, கோழி சாப்பிடலாம் எண்டால் ஏன் மாடு சாப்பிடக்கூடாது? மாடு பாவம் எண்டால் கோழி, ஆடு, பண்டி.. இதுகள் பாவம் இல்லையோ? :lol: மாட்டில இருந்து பால் கறக்கிறதாம். ஏன் ஆட்டில இருந்து பால் கறக்கிறது இல்லையோ?

நீங்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுறனீங்களோ? நான் மாடு எண்டு தெரிவு செய்து சாப்பிடுறது இல்ல. ஆனால் போகேக்க வரேக்க சரியான பசி எண்டால் கிடைக்கிறத சாப்பிடுறது. இத்தாலியன் ரென்ஸ்டோரண்டுக்கு போனால் சிலது அவங்கள் செய்யுற ஒரு பிரபலமான மத்தியான சாப்பாடு (லன்ச்) சாப்பிடேக்க மாடுதான் சாப்பிடுறது. நல்ல ருசியா இருக்கும். அந்த சாப்பாட்டிண்ட பெயர் இப்ப நினைவுக்கு வருகிது இல்ல.

நான் இதுவரைக்கும் நான் அறிஞ்ச வகையில எனக்கு தெரிஞ்சு ஆடு, மாடு, பண்டி, கோழி இறைச்சிகள் சாப்பிட்டு இருக்கிறன். நீங்கள் என்ன என்ன இறைச்சிகள் சாப்பிட்டு இருக்கிறீங்கள். மற்றது உந்த உம்பா அதான் மாட்டு இறைச்சி சாப்பிட்டு இருக்கிறீங்களோ... உம்பப இறைச்சி சாப்பிடுறது பற்றி என்ன நினைக்கிறீங்கள் எண்டும் கொஞ்சம் சொல்லுங்கோ. :(

நன்றி! வணக்கம்!

  • Replies 52
  • Views 12.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முரளி, மாட்டிறைச்சி வகைக்குள் முதன்மையானது. இதன் மூலம் கொலஸ்ரோல் மூலம் இரத்த ஓட்டம் நிறுத்தப்பட்டு இறப்பு உருவாவதாக விஞ்ஞான ரீதியாக நிரூபித்துள்ளார்கள். மற்றும் படி வேலையில் சில வேளை சாப்பாடு வாங்கும் போது கூட பல நாட்டவர்கள் நான் தெரியும் உணவு வகைகளை தெரிவது என்னை (அதாவது மாட்டிறச்சி இல்லாத உணவு ) பிரமிக்க வைத்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் இதே பிரச்சனைதான் முரளி. அம்மா சொல்லுவா நீ மாட்டிறைச்சி சாப்பிட்டு உனக்கு மாட்டு குணங்கள் தான் வரப்போகுது :lol: என்று ஆனால் நான் வீட்டுக்கு தெரியாமல் சாப்பிடுறது :icon_mrgreen: .

அட..கொத்துரொட்டியா..(வாய் ஊறுது).. :D எனக்கு இடியப்ப கொத்துவும் நன்ன விருப்பம் அல்லோ..நீங்களும் சாப்பிடுறனியளோ..??..எண்ட அம்மாவும் உங்கன்ட அம்மா மாதிரி தான் சொல்லுவா அல்லோ நாம வடிவா ஒமெண்டு கேட்டு போட்டு வெளியாள போய் சாப்பிடுவோம் அல்லோ.. :)

இப்ப எல்லாம் வெள்ளிகிழமையில நாம "மாட்டு இறைச்சி" தான் சாப்பிடுறனாங்க எண்டா பாருங்கோ :( நான் சாப்பிடுறது இருகட்டும் எண்ட நண்பன் வந்து ஒரு ஜயர் ஆக்கும் அவனே என்னோட சேர்ந்து சாப்பிடுவான் எண்டா பிறகு நம்மளிற்கு என்ன.. :) !!.நாம தனிய சாப்பிட்டா தான் பயப்பிடனும் இன்னொருத்தனும் நம்மோட சாப்பிட்டா நாம பயப்பிடமாட்டோம் தானே...(ஏன் எண்டா பாவம் இரண்டு பேருக்கும் தான் வரும் உது எப்படி இருக்கு).. :D

நானும் கோழி,ஆடு,மாடு,பன்னி கடசியா கங்காரு இறச்சியும் சாப்பிட்டாச்சு..உந்த கங்காரு இறச்சியும் பரவால்ல நன்னா தான் இருக்குது பாருங்கோ :D ..ஆனா நான் மாட்டு இறச்சி சாப்பிடுற விசயம் அம்மாவிற்கு தெரியா தெரிந்தா அத வேற சொல்லனுமா என்ன..ஆனா சரியான குளிர் பிரதேசங்களிள வாழ்பவர்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுறது தான் நல்லது எண்டு நினைக்கிறன்.. :)

மற்றது குருவே "பீவ் ஸ்டிக்"(beef steak) பற்றி சொல்லனுமா என்ன.. :(

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா தப்பு எண்டு நினைத்து கொண்டு செய்தா எதுவுமே தப்பு அப்படி நினைக்காட்டி எதுவுமே தப்பில்ல" :D

அப்ப நான் வரட்டா!!

எனக்கும் இதே பிரச்சனைதான் முரளி. அம்மா சொல்லுவா நீ மாட்டிறைச்சி சாப்பிட்டு உனக்கு மாட்டு குணங்கள் தான் வரப்போகுது :( என்று ஆனால் நான் வீட்டுக்கு தெரியாமல் சாப்பிடுறது :D .

அட..சித்தபுவிற்கும் உதா பிரச்சினை..(நம்மள மாதிரியே இருக்கிறார்) :) ...நம்ம அப்பாவும் "மாடு" சாப்பிடுவார் ஆனபடியா எனக்கு தனிய விழுறதில்ல இரண்டு பேருக்கும் சேர்த்து தான் :) ..உதில நானும் எண்ட அப்பாவும் கூட்டணி பிறகு இரண்டு பேரும் எதிர்கச்சி ஆக்கும்..உது எப்படி இருக்கு.. :)

மற்றது உந்த கொழும்பில சில சாப்பாட்டு கடைகளுக்கு வெளியாள வைத்து கொத்துவாங்களே...(அந்த சத்தம் இன்னும் ஒலிக்குதாக்கும்) :( ..கொத்து எண்டா "முஸ்லீம்" கடைக்கு தான் போகனும்..என்ன நான் சொல்லுறது சரியோ.. :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்லை மரக்கறி, மீன், கோழி, ஆட்டிறச்சி இதைத்தவிர வேறை எதுவும் சமைக்கமாட்டினம். பண்டி இறைச்சி கனவிலையும் நினைக்கேலாது.

18-20 வயதிலை பொடியளோடை ஊர்சுற்றேக்கை முதல்முதல்லை சாப்பாட்டுக்கடைவழிய மாட்டிறைச்சியைச் சாப்பிட்டுபார்த்தன்.

அப்ப அது அமிர்தம் மாதிரி இருந்துது. வீட்டிலை வந்து சொல்ல ஏன் தம்பி அங்கை இங்கை போய் சாப்பிடுற வாங்கிகொண்டுவா சமைச்சுத்தாறன் என்டு அம்மா சொல்ல நானும் அப்பிடியே சொஞ்சகாலம் செய்தன். ஊரைவிட்டு வெளிய வந்தாப்பிறகு எந்த இறச்சியை தந்தாலும் சாப்பிட பழக்கப்பட்டு போனன். இங்கை வந்தா வந்த இடத்திலை ஒரு தமிழனையும் காணேல்லை தமிழ்கடையளும் இல்லை. சமையலும் தெரியாது, மிளகாய்தூளும் வாங்கேலாது. வெளியிலைதான் சாப்பாடு. அவங்கள் தர்ர அளவுச்சாப்பாடு காணாதென்டு சிலவேளையிலை 2 தரமும் வாங்கி சாப்பிட்டிருக்கிறன். எல்லாம் நல்ல இறச்சிகள்தான் சமைக்கிறமாதிரி சமைச்சா. சுகவாழ்வோட ஆரோக்கியமா வாழவேண்டுமென்ட ஆசையிருக்கிறவை இறைச்சிவகையிலை மட்டுமில்லை எதிலையுமே கட்டுப்பாடா இருக்கிறது நல்லது.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி முரளி நமக்கு ஒத்துக்காது பாருங்க

நிறயப்பேர் அடிப்பினும் சொல்லமாட்டார்கள்

நடப்பது எல்லாம் நன்மைக்கே முனிவரின் ஆசிர்வாதங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

PongalMalar9_1508.jpg

தாயாக விளங்கும் பசு

வாயில்லா ஜீவன் என்று சொல்லப்படுகிற வர்க்கத்தைச் சார்ந்ததே பசு. அப்படியிருந்தாலும் அது "அம்மா" என்று அடி வயிற்றிலிருந்து வாய் விட்டுக் குரல் கொடுக்கிறது. "அம்மா" என்று சொல்கிற அந்தப் பசுவே நமக்கெல்லாம் அம்மாவாக இருக்கிறது.

அம்மாவின் முதல் லக்ஷணம் என்ன? பால் கொடுப்பது தான். நாம் குழந்தையாயிருந்த போது நம்மைப் பெற்றெடுத்த தாயார் நமக்குப் பாலூட்டி உயிரூட்டினாள். அந்தக் குழந்தைப் பிராயத்திலேயே பசுவும் நமக்குப் பால் கொடுத்து ப்ராண ரiக்ஷ தந்தது. பெற்ற தாய் பால் கொடுப்பது நம்முடைய குழந்தைப் பருவத்தோடு முடிந்து விட்டது. ஆனால் நமக்கு வயதான பின்னரும் பசு தரும் பாலும்இ அதிலிருந்து பெறப்படுகிற தயிர்இ மோர்இ நெய் ஆகியனவும் நம் ஆகாரத்தில் தொடர்ந்து இடம் பெறுகின்றன.

ரொம்பவும் வயதான தசையிலும்இ மற்ற ஆகாரங்கள் குறைந்து அல்லது நின்றே போன நிலையிலும் ஒரு மனிதருடைய உடலில் இருக்கிறது. நம்முடைய ஆயுளின் ஆரம்பத்தில் ஒரு குறுகிய கால கட்டத்தில் மாத்திரம் நம்மைப் பெற்றெடுத்த தாய் பால் தருகிறாளென்றால் பசுவோ நம்முடை யஆயுள் காலம் பூராவும் பால் தருகிறது. அதனால் தான் உறவுகளிலேயே பரமோத்தமமான தாயுறவைப் பசுவுக்குத் தந்து "கோமாதா" என்றே சொல்வது.

"கோ" என்றால் "பசு" என்று எல்லோருக்கும் தெரியும்.

அந்த "கோ"வை மாதாவாகவே நம்முடைய தேசத்தில் தொன்று தொட்டுக் கண்டு அன்பும் பக்தியும் செலுத்தியிருக்கிறார்கள்.

அன்பும் சாந்தமும் நிறைந்த தோற்றத்தோடு நிற்கிற ஒரு பசுவைப் பார்த்தாலே பெற்ற தாயாரைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்ச்சி தோன்றும்.

பெற்றெடுத்துப் பாலூட்டும் மாதாவை ஜனக மாதா என்பது. அதே மாதிரி இன்னும் ஒரு சில மாதாக்களைச் சொல்வதில் தான் கோமாதாவும் ஒன்று. பூமாதாஇ ஸ்ரீமாதா என்று இன்னும் இரண்டு மாதாக்கள்.

பசு கோமாதா சாதுவான பிராணி. மங்கலத்தின் சின்னம். கோமாதாவின் உடலில் மும்மூர்த்திகளும்இ பலகோடித் தேவர்களும்இ அனைத்துப் புண்ணிய தீர்த்தங்களும் குடி கொண்டுள்ளன. லட்சுமி வாசம் செய்யும் இடம்.

கோமாதாவை வலம் வந்தால் எல்லாத் தெய்வங்களையும் வணங்கிய பலனும் எல்லாப் புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனும் கிட்டும். இறைவனுக்கு அபிஷேகப் பாலையும் இறைவனின் திருமேனியை அலங்கரிக்கும் விபூதியையும்இ வேள்விக்கான வறட்டியையும்இ நெய்யையும் வழங்குவது கோமாதாதான். அந்தக் கோமாதாதான் சிவபெருமானின் வாகனமாக இருக்கும் நந்தி தேவர்.

எனவேதான்இ பிரதோஷ காலத்தில் நந்தி பெருமானை பாலாபிஷேகம் செய்து பூஜிப்பதால் சிவபெருமானின் அருளைப் பரிபூரணமாகப் பெறலாம். அந்தக் கோமாதா அதிகாலையில்இ ஆலயக் கதவுகள் திறந்ததும் மஞ்சள் பூசிஇ குங்குமப் பொட்டிட்டுஇ மாலையிட்டு பூஜை செய்து தீப ஆராதனைகளோடு முதல் அடி எடுத்து ஆலயத்திற்குள் பிரவேசிக்கும். அதன் பின்னால் இறைத் தொண்டு செய்பவர்களும்இ அதன் பின்னால் பக்தர்களும் ஆலயத்தில் அருணாசலேஸ்வரரை வணங்கச் செல்வார்கள்.

அதிகாலைப் பொழுதுஇ கிழக்கே கதிரவன் உதிக்கக் காத்திருக்கும் நேரம். மஞ்சள் நிற வானமாய் அண்ணாமலையும் பொன்மலையாகும் நேரம். மேள வாத்தியங்கள் முழங்குகின்றன. கோமாதா முதல் அடி எடுத்து வைத்து ஆலயத்திற்குள் நுழைகிறது. பிரம்ம தீர்த்தத்தின் மேல் கருடாழ்வார் பறந்து காட்சி அளிக்கிறது. ரமணாஸ்ரமத்தில் மயில் தோகை விரிந்து ஆடுகிறது.

""நமச்சிவாய வாழ்க. நாதன்தாள் வாழ்க.

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க.''

மாணிக்கவாசகரின் திருவாசகம் ஒலிக்கிறது. பள்ளியறையிலிருந்து முத்துப் பல்லக்கில் தங்க விக்ரகம் சந்தனம்இ ஊதுவத்திஇ சாம்பிராணி மணத்துடன் வருகிறது. கோமாதாவின் பசும்பால் ஆலயத்தில் உள்ள பசுக் காப்பகத்திலிருந்து வருகிறது. ஆலய மணி ஒலிக்கிறது. முதல் தீபாரதனை நடக்கிறது.

அண்ணாமலையே அருணாசலமே சரணம் சரணம் சரணம்

  • தொடங்கியவர்

IMG4930-1215966342.jpg

நல்ல விசயம்

மாட்டிறைச்சி சைவர்கள் சாப்பிடக்கூடாது என்றுதான் சொல்வார்கள். தெரியாமல் நான் சாப்பிட்டிருக்கின்றேன்

நான் சாப்பிட்ட இறைச்சி வகைகள்

ஆடு

மாடு

கோழி

பன்றி

மரை

மான்

முயல்

உடும்பு

காடை

கௌதாரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாடு கடவுளின் வாகனம் அதனால் இந்துக்கள் வீட்டில் சமைப்பதில்லைஆனால் மற்றவர்கள் சாப்பிடுவார்கள்

பண்றி நபிகள் நாயகத்தை காட்டிக்கொடுத்த மிருகம் அதனால் அதை முஸ்லீம்கள் சாப்பிட்டால் கறம்.ஆனல் மற்றவர்கள் சாப்பிடுவார்கள்.

சுறா இது மனிதர்களை சாப்பிடுவதால் வெள்ளைகள் இதை சாப்பிட விரும்புவதில்லை.ஆனால் நாம் சாபிடுவோம்.

பாம்பை நாம் சாப்பிடுவதில்லை ஆனால் சீனாக்காறன் சாப்பிடுவான்.

நாயை யாரும் சாப்பிட மாட்டார்கள் ஆனால் பிலிப்பைன்ஸ்காறர் சாப்பிடுவார்கள்.

குரங்கு இறச்சியை யாரும் சாப்பிட மாட்டார்கள் ஆனால் முருகண்டியில் தொங்கு மான் இறச்சி என்று தருவார்கள்பலர் சாப்பிட்டு இருப்பீர்கள். :D:lol::D

இறச்சியில் என்ன வேற்றுமை ருசியாக சமைத்தால் எல்லாம் சாப்பிடலாம் ஆனாள் அளவாக சாப்பிடுங்கள். சிறுவயதில் எம்மவர் பலர் மாரடைப்பில் புலம்பெயர் நாடுகளில் அதிகமாக மரணமடைகிறார்கள், பிழையான உணவு பழக்கமே இதன் காரணம். குளிர்காலத்தில் கொழுப்பு உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IMG4930-1215966342.jpg

ஒட்டுமொத்தமாய் உயிர்வதையே வேண்டாம் எண்டுறம் இதுக்குப்போய் கோழிக்குஞ்சு படத்துக்கு அம்புக்குறி கீறிக்கொண்டு......... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விசயம்

மாட்டிறைச்சி சைவர்கள் சாப்பிடக்கூடாது என்றுதான் சொல்வார்கள். தெரியாமல் நான் சாப்பிட்டிருக்கின்றேன்

நான் சாப்பிட்ட இறைச்சி வகைகள்

ஆடு

மாடு

கோழி

பன்றி

மரை

மான்

முயல்

உடும்பு

காடை

கௌதாரி

பிறகென்ன பட்டியலிலை அரைவாசி விலங்கினம் வந்துட்டுது :D நாய்,பூனை இன்னும் கண்ணிலை படேல்லைப்போலை கிடக்கு :lol:

தாவர, தானியங்களைச் சாப்பிடுவனவற்றை மனிதர் சாப்பிடலாம்.. மற்றவைகள் சமைக்க முதலே விரைவாகப் பழுதடைந்துவிடும்.

இதில ஆடென்ன மாடென்ன பன்றி என்ன? சமயமுறைப்படி வாழணும்னா மாமிசமே சாப்பிடக்கூடாது.. மாமிசம் சாப்பிட்டால் அதிலென்ன மாடு ஆடு என்ற பாகுபாடு? நானும் அரைகுறைதான்.. வெள்ளி ஆத்துக்காரி மாமிசம் இல்லைன்னுடுவா.. நாமளும் கடவுளை நினைக்காட்டிலும் மரக்கறிதான்.. சிலவேளை அதுக்கும் சோதனை வந்துடும்.. வேலை செய்யுற இடத்தில சட்டியளுக்கை இருக்குற பதார்த்தங்களுக்கை விரலை வைச்சு ருசியா இருக்கான்னு பார்த்துடுவன் பழக்கதோசத்தில.. ஆனா இதுகள எல்லாம் ஆத்துல சொல்ல முடியுமா, என்ன?! :lol:

நல்ல விவாதம் தான். எங்கள் வீட்டிலயும் பெரிய ஆட்டு இறைச்சி சமைப்பதில்லை. அதனால் நான் ஊரில் பழகவில்லை. இங்கு வந்தபிறகும் ஏனோ பழக வேண்டும் என்று தோணவில்லை. ஆக, நான் மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை. எனது வட்டம், ஆடு, பன்றி, கோழியுடன் நின்றுவிடுகிறது.

உண்மையில் சைவர் என்றால் எவ்வித மாமிசமும் சாப்பிடக்கூடாது தான்.

எங்கே எமது பெண் உறுப்பினர்களைக் காணம்? அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கள உறவுகளுக்கு ...............

"கொன்றால் பாவம் தின்றால் போச்சு " என்பார்கள் கேள்விபட்டதிலையா ?

மிருகங்களை கொன்றால் அது பாவம் . இதை சமைத்து பசியோடு

காத்திருக்கும் ஏழைகளுக்கு கொடுத்தால் அது பசி தீர்த்த புண்ணியமாய் போகும் .

நல்ல விவாதம் தான். எங்கள் வீட்டிலயும் பெரிய ஆட்டு இறைச்சி சமைப்பதில்லை. அதனால் நான் ஊரில் பழகவில்லை. இங்கு வந்தபிறகும் ஏனோ பழக வேண்டும் என்று தோணவில்லை. ஆக, நான் மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை. எனது வட்டம், ஆடு, பன்றி, கோழியுடன் நின்றுவிடுகிறது.

உண்மையில் சைவர் என்றால் எவ்வித மாமிசமும் சாப்பிடக்கூடாது தான்.

எங்கே எமது பெண் உறுப்பினர்களைக் காணம்? அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்.

இந்து சமயிகள்தான் சாப்பிடக் கூடாது.. சைவர்கள் சாப்பிடலாம்.. சைவக் கடவுள்களுக்கு ஆடு வெட்டி வேள்வி செய்ததைக் கேள்விப்படவில்லையா? :)

இப்போ சைவமும் இந்துவும் கலந்து அரைகுறையாதான் இருக்கு.. மதம் மட்டுமா அரைகுறை????

அனைவருக்கும் இனிய கொத்துரொட்டி வணக்கங்கள்... :)

எனக்கு கொத்துரொட்டி எண்டால் நல்ல விருப்பம்.. வீட்டில பக்கத்தில சாப்பாட்டு கடை ஒண்டு இருக்கிது. அதில சிலது கொத்துரொட்டி வாங்கி சாப்பிடுறது. சிலது நான் வீட்டில சொல்லிறது என்ன நான் கடையில வாங்கி சாப்பிட்டது எண்டு. சிலது சொல்லிறது இல்ல.. அப்ப என்ன எண்டால் கொத்துரொட்டி ஆசை வந்த உடன நான் கடைசியா மாட்டு கொத்து ரொட்டி பார்சல் ஒண்டு வாங்கிக்கொண்டு வந்து வீட்டில வச்சு சாப்பிட்டன். கடையில மாட்டு கொத்து மாத்திரம்தான் இருக்கிது எண்டு

நன்றி! வணக்கம்!

முறளி அண்ணை நீங்க யாரோட சொல்லையும் கேட்காதீங்க மாட்டிறைச்சி கொத்து சாப்பிடலாம். நான் தினமும் அதுதான் இப்ப சாப்பிடுறன் எண்டா பாருங்கோவன்.

சிறுவயதிலிருந்து அம்மா சொல்லுவா மாட்டிறச்சி சாப்பிடக்கூடாது .அதிலிருந்து சாப்பிடிறதில்லை. ஆட்டிறச்சி ரொம்ப விருப்பம். அதுவும் ஊரில ஆட்டு இரத்தம் சுண்டுவினம் என்ன ஒரு சுவை. அது எல்லாம் இனி எப்ப கிடைக்கும் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாட்டு கொத்து ரொட்டி சாப்பிட்டு முரளிக்கு மாட் கௌ டிசீஸ் வருத்தம் வந்து விட்டதா ஒரு செய்தி. அது தான் அவர் எழுதும் ஆக்கங்கள் கக்கூஸ்..... ஏதோ யே ...பாட்டுக்கள் என்றெல்லாம் தாறுமாறாய் வருதாம் :):(

http://www.cnn.com/2008/HEALTH/02/17/beef.recall/index.html

Edited by tamillinux

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமிச உணவுகளை புசித்தால் தேவையில்லாத நோய்நொடிகள் வரும்.விகாரமான எண்ணங்கள் மனதில் எழும்.கூடுதலான உழைப்பு உள்ளுறுப்புக்களுக்கு தேவைப்படும்.

ஒரு காலத்தில் முருங்கை இலை , அகத்தி இலை , வாழைக்காய்ப்பொத்தி பொருத்்துமான் இலை , முசுட்டை இலை இது போல பலவற்றை உண்பவர்களை கேவலமாக பார்த்தவர்கள் இன்று அதற்காக தவமிருக்கின்றார்கள்.

விவசாயிகளை தரக்குறைவாக பார்த்தவர்கள் இன்று காதில் எதையோ தொங்கவிட்ட வண்ணம் விசரன் பைத்தியகாரன் மாதிரி உடம்பு களைக்க ஓடுகின்றார்கள்.ஏனென்றால் உடம்பு களைக்க வேண்டுமாம் :(

ஒடியல் புட்டு சாப்பிடவர்களை பார்த்து சிரித்தவர்கள் இன்று அதை எப்படி சமைப்பது என்று திண்டாடுகின்றார்கள். :)

தேனீர் குடிக்கும் போது சீனியை நக்கி குடித்தவர்களை ஏளனம் செய்தவர்களுக்கு சீனி மட்டுமல்ல அவர்கள் வாய்க்கு ருசியாக எதுவுமே உண்ண முடியாத நிலைமை :(

Edited by குமாரசாமி

எனக்கு படிப்பிச்ச வாத்தியார் சொன்னவர் தம்பி பாம்பு தின்ற ஊருக்கு போனால் நடு முறி உனக்கென்டு வாங்கி சாப்பிடு என்று ஏன் என்றால் எங்கே சென்றாலும் நாம் பிழைக்கிற வழியை பார்க்க வேண்டும் என்று சொல்லுவார்

நான் அரபு நாட்டில் வேலைசெய்யும் போது என்னுடன் வேலை செய்த ஒரு தாய்லாந்து நாட்டவர் நாய் வளர்த்தார். சிறிது நாட்களின் பின் அந்த நாயை நான் காணவில்லை. விசாரித்ததிற்கு எங்களுடைய உறவினர்கள் வந்தார்கள் நாங்கள் விருந்து வைத்தோம் என்றார். அன்றிலிருந்து அவனுடன் கதைப்பதே பயம். .

  • கருத்துக்கள உறவுகள்

சித்தன் அவர்கள் குறிப்பிட்டதுபோல மாடு (நந்தி) சமயத்துடன் சம்பந்தப்படுவதால் சாப்பிடவேண்டாம் என்கிறார்கள். நான் பாவப்பட்ட சிக்கன், மீனுடன் வாழ்க்கையை ஓட்டிக்கினு கீறன்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

தாவர, தானியங்களைச் சாப்பிடுவனவற்றை மனிதர் சாப்பிடலாம்.. மற்றவைகள் சமைக்க முதலே விரைவாகப் பழுதடைந்துவிடும்.

இதில ஆடென்ன மாடென்ன பன்றி என்ன? சமயமுறைப்படி வாழணும்னா மாமிசமே சாப்பிடக்கூடாது.. மாமிசம் சாப்பிட்டால் அதிலென்ன மாடு ஆடு என்ற பாகுபாடு? நானும் அரைகுறைதான்.. வெள்ளி ஆத்துக்காரி மாமிசம் இல்லைன்னுடுவா.. நாமளும் கடவுளை நினைக்காட்டிலும் மரக்கறிதான்.. சிலவேளை அதுக்கும் சோதனை வந்துடும்.. வேலை செய்யுற இடத்தில சட்டியளுக்கை இருக்குற பதார்த்தங்களுக்கை விரலை வைச்சு ருசியா இருக்கான்னு பார்த்துடுவன் பழக்கதோசத்தில.. ஆனா இதுகள எல்லாம் ஆத்துல சொல்ல முடியுமா, என்ன?! :D

அட நம்மள மாதிரியும் ஊருக்குள்ள ஆக்கள் இருக்கிறதப்பாக்க சந்தோசமாக இருக்கு :wub:

நான் இதுவரை சாப்பிட்டதில்லை. ஆனால் மாடு ஆடுல நிறைய

கொழுப்பு இருக்கு சாப்பிடுறவை கவனம் ஒரே சாப்பிட்டு

வில்லங்கத்தை விலை குடுத்து வேண்டாதேங்கோ :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.