Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெல்சன் மண்டேலாவுக்கு மகாத்மா காந்தி விருது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெல்சன் மண்டேலாவுக்கு மகாத்மா காந்தி விருது

வீரகேசரி நாளேடு 7ஃ24ஃ2008 5:39:57 Pஆ - அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது தென் ஆபிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா டர்பனில் உள்ள மகாத்மா காந்தி அறக்கட்டளை மற்றும் சத்தியாகிரக அமைப்பே அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதை நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கியுள்ளது.

தியாகத்தாலும் பங்களிப்பாலும் உலக மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்றும் அவர் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் மண்டேலா கலந்து கொள்ளவில்லை. விருதை அவருக்கு பதிலாக அவரது சிறைத் தோழரும் அரசியல் ஆலோசகருமான அகமது கத்ராடா பெற்றுக் கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமையன்றே மண்டேலா தனது 90ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. நு-அயடை வழ ய கசநைனெ

நன்றி:- வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

காந்திபெயராலை விருதைக் குடுத்து மண்டேலைவையும் களங்கப் படுத்தப்போறாங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்தங்கள் மூலம் வெற்றி பெற்ற பிரித்தானியாவிற்கு அகிம்சையை மதிக்கத் தெரிந்தது, அகிம்சை மூலம் வெற்றிபெற்ற இந்தியாவிற்கு ஈழத்தில் அதை மதிக்கத் தெரியவில்லை. திலீபன், அன்னைபூபதியைச் சாகடித்தது.

காந்தி ஒரு சிறந்த தலைவர். ஆனால் அவர் கொண்ட நாடு தான் தவறான போக்குக் கொண்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாம் உலகப் போர் என்ற ஒன்றே வராமல் இருந்திருந்தால் இந்தியாவிற்கு காந்திய வழியில் சுதந்திரம் கிடைத்திருப்பதற்கான வாய்ப்பு மிக மிக அரிது என்பேன்.

மேலும் சுபாஸ் சந்திரபோஸை தலையெடுக்கவிடாமல் செய்ததில் காந்தி பெரும் பங்கு வகித்திருக்கிறார். சுபாஸ் தலைமையில்லான போரில் இந்தியா சுதந்திரத்தை பெற்றிருந்தால் நிச்சயமாக இந்தியா ஒரு எழுச்சி மிக்க தேசமாகவும் ஆங்கில மோகத்தில் திளைத்திராத சமூகமாகவும் உருவெடுத்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

காந்திபெயராலை விருதைக் குடுத்து மண்டேலைவையும் களங்கப் படுத்தப்போறாங்கள்

சரியா சொன்னீங்கள். :o

மேலும் சுபாஸ் சந்திரபோஸை தலையெடுக்கவிடாமல் செய்ததில் காந்தி பெரும் பங்கு வகித்திருக்கிறார். சுபாஸ் தலைமையில்லான போரில் இந்தியா சுதந்திரத்தை பெற்றிருந்தால் நிச்சயமாக இந்தியா ஒரு எழுச்சி மிக்க தேசமாகவும் ஆங்கில மோகத்தில் திளைத்திராத சமூகமாகவும் உருவெடுத்திருக்கும்.

அதற்காக தான் திட்டமிட்டு வெள்ளையர்கள் நேரு குடும்பத்தையும் காந்தியையும் முன்னிலைபடுத்தினார்கள். :huh:

காந்தி என்ன செய்தார், செய்யவில்லை என்பது வேறு. ஆனால் நெல்சன் மண்டேலா ஒரு இணையற்ற போராளி, எனவே அவரை இன்னொருவர் பெயரால் கெளரவிப்பது(?) என்பது சரியாகாது. இந்தியர்களுக்கு இதுவே ஒரு பொழுதுபோக்கு. இப்போது கூட அரசியல் தலைவர்கள்(?) பழைய தலைவர்களைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்களே ஒழிய தாங்கள் அவ்வழி நடப்பதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காந்திபெயராலை விருதைக் குடுத்து மண்டேலைவையும் களங்கப் படுத்தப்போறாங்கள்

காந்தி என்ன செய்தார், செய்யவில்லை என்பது வேறு. ஆனால் நெல்சன் மண்டேலா ஒரு இணையற்ற போராளி, எனவே அவரை இன்னொருவர் பெயரால் கெளரவிப்பது(?) என்பது சரியாகாது. இந்தியர்களுக்கு இதுவே ஒரு பொழுதுபோக்கு. இப்போது கூட அரசியல் தலைவர்கள்(?) பழைய தலைவர்களைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்களே ஒழிய தாங்கள் அவ்வழி நடப்பதில்லை.

நான் கூற நினைப்பதும் இவைதான். : )

காந்தி என்ன செய்தார், செய்யவில்லை என்பது வேறு. ஆனால் நெல்சன் மண்டேலா ஒரு இணையற்ற போராளி, எனவே அவரை இன்னொருவர் பெயரால் கெளரவிப்பது(?) என்பது சரியாகாது.

இதையே நானும் நினைத்தேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இதையே நானும் நினைத்தேன்

எழுதினது அழிந்துவிட்டதா? :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மா காந்தி அவர்களை நான் மதிக்கின்றேன்

அவரது காலத்தில் அவர் சரியாகவே செயற்பட்டார்

அதேபோல் நெல்சன் மண்டேலா அவர்களும் உலகத்தவர்களால் போற்றப்படுபவர்

எனவே இந்த விருது என்பது காந்தீய கொள்கைகளை பின்பற்றுவதற்கு ஊக்குவிப்பதாக இருக்கலாம்

ஆனால் நெல்சன் மண்டேலா அவர்கள் காந்தீய கொள்கைகளை மட்டும் பின்பற்றியவர் அல்ல.......

ஏனெனில் அவரது காலத்தில் அது சரிவராது என அறிந்தவர்......

எனவே அவர் இரண்டையும் தெரிவு செய்தார்

ஆனால் இன்றைய காலத்தில் ஒன்றே ஒன்றுதான் வேலைசெய்யும்.................

இதையே நானும் கொப்பியடிக்க நினைக்கிரேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாட்டு விருதையும் யார்ர தலையிலயாவது

கட்டணுமே

:) மாட்டினார் நெல்சன்

இதை வைத்தே அரசியல் நடாத்துவாங்கப்பா

காந்தி விருது வழங்கியதால் காந்திக்குத்தான் பெருமை . . ஏன் எனில் நெல்சன் மண்டேலா காந்திக்கு முன்பு இருந்திருந்தால் காந்திக்குத்தான் மண்டேலா அவர்களின் விருதை வழங்கி இருப்பார்கள்.

கறுப்பு இனத்தவர்களிற்கு பெருமை தேடித்தந்த ஒரு இணையற்ற மனிதன். . . எம் தலைவனிற்கு அடுததபடியாக நான் நேசிக்கும் ஒருவர். . .

இந்தியாவுக்கு வெளியே தமிழர்களுக்காக முதல் முதல் போராடியதும் அடி வாங்கியதும் மகாத்மா காந்தி தான், காந்தியின் போராட்டங்களுக்கு பயந்த பிரிட்டிஷ் அரசு தென்னாபிரிக்காவில் இருந்து அவரை இந்தியாவிற்கு நாடு கடத்தியது.

தென்னாபிரிக்க போராட்ட வரலாற்றையும், நெல்சன் மண்டேலாவின் சுயசரிதையையும் வாசித்தவர்கள் புரிந்து கொள்வார்கள், தென்னாபிரிக்க மக்களும் திரு. நெல்சன் மண்டேலாவும் காந்தியின் மேல் வைத்திருக்கும் மதிப்பு எவ்வளவு என்று.

ஏன் இன்று, எங்கள் விடுதலை போராட்டத்திற்கு மிகவும் ஆதரவாக செயற்படும் தென்னாபிரிக்க தமிழர்கள் சிலரை கேட்டாலே சொல்வார்கள், அவர்கள் காந்தியின் மேல் வைத்திருக்கும் மதிப்பு எவ்வளவு என்று.

ஒரு காலகட்டத்தின் தேவைக்கேற்பவே போராட்ட வடிவம் அமைகிறது.

இன்றைய இந்தியாவின் அரசியல் செயற்பாடுகளை வைத்துக்கொண்டு காந்தியை விமர்சிக்க முயற்சிப்பது பொருத்தமற்றது.

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி நல்லவரோ கெட்டவரோ வேறுவிடையம்.அவர் இன்று உயிருடன் இருந்து ஏதாவது ஒரு காரனத்துக்காக இந்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தால் அவரையும் இந்தஅதிகார வர்க்கம் சாகடித்து இருக்கும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி நல்லவரோ கெட்டவரோ வேறுவிடையம்.அவர் இன்று உயிருடன் இருந்து ஏதாவது ஒரு காரனத்துக்காக இந்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தால் அவரையும் இந்தஅதிகார வர்க்கம் சாகடித்து இருக்கும். :rolleyes:

இருந்திருக்கும் ஆனால்

குண்டர்ஸ் ,பயங்கரவாத தடைசட்டம்

பொடா என்று

எதிலையாவது உள்ளயும் போட்டிருக்கும்

நெல்சனுக்கு காந்தி விருதைக்கொடுத்துட்டு

பிறகு நெல்சனே காந்தி விருதை பெருமையாய் பெற்ரவரெண்டு

ஊரெல்லாம் சொல்லி நெல்சனையும் தங்கட பிரச்சாரத்துக்கு இளுக்கிறதுதான் உந்த திட்டம்

வட இந்தியர்களா கொக்கா?...

  • கருத்துக்கள உறவுகள்
[quote name='vettri-vel' date='Jul 27 2008, 02:20 PM' post='432399']
இந்தியாவுக்கு வெளியே தமிழர்களுக்காக முதல் முதல் போராடியதும் அடி வாங்கியதும் மகாத்மா காந்தி தான், காந்தியின் போராட்டங்களுக்கு பயந்த பிரிட்டிஷ் அரசு தென்னாபிரிக்காவில் இருந்து அவரை இந்தியாவிற்கு நாடு கடத்தியது.

தென்னாபிரிக்க போராட்ட வரலாற்றையும், நெல்சன் மண்டேலாவின் சுயசரிதையையும் வாசித்தவர்கள் புரிந்து கொள்வார்கள், தென்னாபிரிக்க மக்களும் திரு. நெல்சன் மண்டேலாவும் காந்தியின் மேல் வைத்திருக்கும் மதிப்பு எவ்வளவு என்று.

ஏன் இன்று, எங்கள் விடுதலை போராட்டத்திற்கு மிகவும் ஆதரவாக செயற்படும் தென்னாபிரிக்க தமிழர்கள் சிலரை கேட்டாலே சொல்வார்கள், அவர்கள் காந்தியின் மேல் வைத்திருக்கும் மதிப்பு எவ்வளவு என்று.

[b]ஒரு காலகட்டத்தின் தேவைக்கேற்பவே போராட்ட வடிவம் அமைகிறது. [/codebox]

தென்னாபிரிக்காவிலிருந்து காந்தி நாடுகடத்தப் படவில்லை. அவருக்கு இந்தியாவில் அலுவல்கள் காத்திருந்ததால் தான் விரும்பியே போனார்.

தென்னாபிரிக்காவிலிருந்து காந்தி நாடுகடத்தப் படவில்லை. அவருக்கு இந்தியாவில் அலுவல்கள் காத்திருந்ததால் தான் விரும்பியே போனார்.

நீங்கள் சொல்வது சரிதான்!!! ஆனால் அரசியல் அழுத்தங்கள் இருந்ததும் உண்மை!!!

Gandhi's work in South Africa

Gandhi's work in South Africa dramatically changed him, as he faced the discrimination commonly directed at blacks and Indians. One day in court at Durban, the magistrate asked him to remove his turban. Gandhi refused and stormed out of the courtroom. He was thrown off a train at Pietermaritzburg, after refusing to move from the first class to a third class coach while holding a valid first class ticket. Traveling further on by stagecoach, he suffered other hardships on the journey as well, including being barred from many hotels. These incidents have been acknowledged by several biographers as a turning point in his life, explaining his later social activism. It was through witnessing firsthand the racism, prejudice and injustice against Indians in South Africa that Gandhi started to question his people's status, and his own place in society. However, these events by no means explain why he inculcated non-violence instead of aggressive revolution.

At the end of his contract, Gandhi prepared to return to India. However, at a farewell party in his honour in Durban, he happened to glance at a newspaper and learned that a bill to deny the right to vote to Indians was being considered by the Natal Legislative Assembly. When he brought this up with his hosts, they lamented that they did not have the expertise necessary to oppose the bill, and implored Gandhi to stay and help them. He circulated several petitions to both the Natal Legislature and the British Government in opposition to the bill. Though unable to halt the bill's passage, his campaign was successful in drawing attention to the grievances of Indians in South Africa. Supporters convinced him to remain in Durban to continue fighting against the injustices levied against Indians in South Africa. He founded the Natal Indian Congress in 1894, with himself as the Secretary. Through this organization, he molded the Indian community of South Africa into a homogeneous political force, publishing documents detailing Indian grievances and evidence of British discrimination in South Africa. Gandhi returned briefly to India in 1896 to bring his wife and children to live with him in South Africa. When he returned in January 1897, a white mob attacked and tried to lynch him.[1] In an early indication of the personal values that would shape his later campaigns, he refused to press charges against any member of the mob, stating it was one of his principles not to seek redress for a personal wrong in a court of law.He was a hero to his people.

At the onset of the South African War, Gandhi argued that Indians must support the war effort in order to legitimize their claims to full citizenship, organizing a volunteer ambulance corps of 300 free Indians and 800 indentured labourers called the Indian Ambulance Corps, one of the few medical units to serve wounded black South Africans. He himself was a stretcher-bearer at the Battle of Spion Kop, and was decorated. At the conclusion of the war,

however, the situation for the Indians did not improve, but continued to deteriorate. In 1906, the Transvaal government promulgated a new Act compelling registration of the colony's Indian population. At a mass protest meeting held in Johannesburg on September 11th that year, Gandhi adopted his methodology of satyagraha (devotion to the truth), or non-violent protest, for the first time, calling on his fellow Indians to defy the new law and suffer the punishments for doing so, rather than resist through violent means. This plan was adopted, leading to a seven-year struggle in which thousands of Indians were jailed (including Gandhi himself on many occasions), flogged, or even shot, for striking, refusing to register, burning their registration cards, or engaging in other forms of non-violent resistance.

While the government was successful in repressing the Indian protesters, the public outcry stemming from the harsh methods employed by the South African government in the face of peaceful Indian protesters finally forced South African General Jan Christiaan Smuts to negotiate a compromise with Gandhi.

கட்டுரையில் இந்தியர்கள் என்று குறிப்பிடப்படுவர்களில் முக்கால்வாசி பேர் தென்னாபிரிக்க தமிழர்கள் ஆவர்

http://en.wikipedia.org/wiki/Gandhi's_...in_South_Africa

Edited by vettri-vel

வெற்றிவேல்

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. காந்தி தென்னாபிரிக்கர்களுக்காக குரல் கொடுத்ததற்காக பிரிட்டிஷ் அரசு அவருக்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் கொடுத்தது உண்மை. இன்றும் நெல்சன் மண்டேலாவும், தென்னாபிரிக்க மக்களும் மதிக்கும் ஒரு தலைவராகவே காந்தி இருக்கின்றார். தென்னாபிரிக்காவிலுள்ள காந்தியின் நினைவு மண்டபங்கள் இதை பறை சாற்றுகின்றன. நெல்சன் மண்டேலா ஒரு போராளியாக தன் வாழ்க்கையைத் தொடங்கிய போதும், அவர் காந்தியைப் போல தனது போராட்டத்தையும் அகிம்சைப் போராட்டமாக மாற்றிய போதுதான் உலகின் கவனம் கூடுதலாக அவர் பக்கம் திரும்பியது. நிச்சயம் தான் மதிக்கும் ஒரு தலைவரின் பெயரால் தனக்குக் கிடைக்கும் ஒரு விருதால் நெல்சன் மண்டேலா பெருமைப்பட்டுக் கொள்வார்.

ஆனால் இங்கு எம்மவர் சிலர் இந்திய அரசின் மீதுள்ள ஆதங்கத்தில், காந்தியையும் சேர்த்து விமர்சிக்க முனைகின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.