Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர் நிவாரணத்திற்காக பாதணி சுத்தம் (பொலிஷ்) செய்யும் தமிழக இளைஞா

Featured Replies

இலங்கை தமிழர் நிவாரணத்திற்கு ஷூ பாலிஷ் செய்யும் இளைஞர்

திருநெல்வேலி: இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்காக, இளைஞர் ஒருவர் பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து ஷூ பாலிஷ் செய்து, நிதி திரட்டி வருகிறார். நெல்லையை சேர்ந்தவர் பாபுராஜ் (30). சமூக சேவைகள் செய்து வருகிறார். அண்மையில் சென்னை அருகே திருக்கழுக்குன்றத்தில் இதயேந்திரன் என்ற மாணவர் விபத்தில் சிக்கி இறந்தபோது அவரது இதயம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்ததற்காக அவரது தந்தை டாக்டர் அசோகனுக்கு, நெல்லையில் பாராட்டி விருது வழங்கினார்.

இவர் நேற்று காலையில் பாளையங்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து அங்கு வருகிற பயணிகளின் ஷூக்களுக்கு பாலிஷ் செய்தார். அதற்கு கட்டணம் என்றில்லாமல் நன்கொடையாக எவ்வளவு தந்தாலும் வாங்கிக் கொள்கிறார். ஒரு வாரத்திற்கு இதே போல ஷூ பாலிஷ் செய்து இதன் மூலம் கிடைக்கும் தொகையை, இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

thanks dinamalar

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்கு நிதி திரட்ட 'ஷூ பாலிஷ்'

சனிக்கிழமை, நவம்பர் 1, 2008

நெல்லை: நெல்லையைச் சேர்ந்த பாப்புராஜ் என்கிற போட்டோகிராபர், இலங்கைத் தமிழர்களுக்கு நிதி திரட்ட ஷூ பாலிஷ் போட்டு நிதி சேகரிக்கிறார்.

நெல்லை சாந்திநகரை சேர்ந்தவர் பாப்புராஜ். பட்டதாரி. போட்டோகிரபராக உள்ளார். ஆண்டுதோறும் ஏழை, ஊனமுற்ற குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

இலங்கை தமிழர்களுக்கு நிவாரண உதவி அளிக்க வித்தியாசமான முறையில் யாரிடம் பணம் வசூலிக்காமல் நிதி திரட்ட பாப்புராஜ் முடிவு செய்தார்.

நெல்லை புதிய பஸ் ஸ்டாண்டில் மக்களுக்கு ஷூ பாலிஷ் போடும் பணியை அவர் துவக்கினார். இப்பணியை வரும் 5ம் தேதி வரை மேற்கொள்ள அவர் முடிவு செய்துள்ளார்.

தினமும் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை ஷூ பாலிஷ் போடும் பணியை அவர் மேற்கொண்டுள்ளார்.

முதல்நாளான அவருக்கு ஷூ பாலிஷ் போட்டதில் ரூ.300 கிடைத்தது. 5ம் தேதிக்குள் எப்படியும் அதிக அளவு பணம் வசூலாகிவிடும் என்ற நம்பிக்கை பாப்புராஜூக்கு உள்ளது.

இதுகுறித்து பாப்புராஜ் கூறும்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்டும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டு ஷூ பாலிஷ் போட்டு வருகிறேன்.

என் வழக்கமான பணி பாதிக்காத படி காலையில் மட்டும் ஷூ பாலிஷ் போடுகிறேன். ஷூ பாலிஷ்க்கு அவரவர் இஷ்டப்படி அளிக்கும் பணத்தை பெற்றுக் கொள்வேன். சிலர் 1 ரூபாய் தந்தனர். கண்பார்வையற்ற ஒருவர் 10 ரூபாய் தந்து ஊக்கப்படுத்தினார்.

5ம் தேதி வரை ஷூ பாலிஷ் போட்டு கிடைக்கும் பணத்தை கலெக்டர் அலுவலகத்தில் அளிக்க முடிவு செய்துள்ளேன். இலங்கை தமிழர்களுக்கு உதவுவதில் நான் பலருக்கு முன் மாதிரியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

குஜராத் பூகம்பத்திற்கும் இதே போல ஷீ பாலிஷ் போடும் பணியை மேற்கொண்டு 6 ஆயிரத்து 500 ரூபாய் சேகரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாப்புராஜ் அனுப்பினார். சுனாமி நிவாரண நிதிக்கும் ஷூ பாலிஷ் மூலம் 8 ஆயிரம் ரூபாய் சேகரித்து அளித்தார்.

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெல்லை ஜங்ஷன் முதல் டவுன் வரை உள்ள கடைகளில் டெலிபோன் சுத்தம் செய்து 2 ஆயிரம் ரூபாய் சேகரித்து அனுப்பியுள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதியுதவி அளிக்க ஷூ பாலிஷ் போடும் பணியை மேற்கொண்டுள்ள பாப்புராஜ் நெல்லையில் பலர் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

thatstamil.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் ஒன்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். உண்மையான தமிழகத் தமிழன்.. மற்றும் தமிழக உறவுகள் எம்மீது வைத்துள்ள பாசத்தைப் போன்று நாம் அவர்கள் மீது வைத்திருக்கிறமா என்பது கேள்விக்குறியே. ஏன் எம்மவர்கள் எம்மவர் மீது வைத்திருக்கிறார்களா என்பதே கேள்விக்குறி.

ஒரு காலத்தில் ஈழத்தமிழருக்காக தீக்குளித்து மாண்ட தமிழக உறவுகளும் இருக்கின்றனர். அவர்களை எல்லாம் மறக்கக் கூடாது. ஏனெனில்... போராளிகளைத் தவிர.. சாதாரண ஈழத்தமிழன் ஈழத்தமிழனுக்காக இவ்வளவு துன்பப்பட முன் வரமாட்டான். எப்போ எங்கோ ஓடிப்போய் தான் சொகுசாக வாழ்ந்து கொண்டு.. விடுப்புப் பேசலாம் என்று தான் நினைப்பானே தவிர.. இவர்கள் அளவுக்கு ஈழத்தமிழன் மீது பாசம் காட்டமாட்டான்.. ஈழத்தமிழனே.

அந்த வகையில் தாய் மண் உறவான தமிழக உறவுகளின் பாசத்துக்கு அதில் உள்ள உண்மைத்தன்மைக்கு தலை வணங்கித்தான் ஆக வேண்டும். அவர்கள் இன்றல்ல.. பல காலமாகவே எமக்கு கடமை செய்கின்றனர். ஆனால் நாம்.. எமது மக்களுக்கான கடமையை கூட செய்ய மறுக்கின்றோம்.

அண்மையில் தமிழக வைத்தியர்கள் வன்னி செல்ல அனுமதி கேட்டிருந்தார்கள். ஆனால் உலகம் பூரா பரந்து வாழ்ந்து கொலரை இழுத்துவிட்டுக் கொண்டு திரியும்.. ஈழத்தமிழர்களில் எத்தனை டாக்டர்கள் வன்னிக்குப் போக.. தயாராகி.. அனுமதி கேட்டு சர்வதேச ஸ்தாபனங்களோடு தொடர்பு கொண்டனர்..??! :lol::lol:

ஆனால் சுனாமி காலத்தில் பலர் அள்ளுப்பட்டு போய் தென்னிலங்கையில் கூட சேவை செய்துவிட்டு வந்து.. புளுகி அடித்தித் திரிந்தனர். இவ்வாறான.. ஈனத்தனங்கள் ஈழத்தமிழனிடம் நிறைந்திருக்கின்றன. அவர்களோடு ஒப்பிடும் போது.. தமிழக உறவுகள் பல மடங்கு தமிழினப் பாசம் நிறைந்தவர்கள் என்று கூறலாம். அவர்களிடத்தில் இவை புதுமையல்ல. :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

இவ்வேலையில் யாழை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்தபோது, தமிழகத்தில் ஆதரவுக்கரங்கள் எல்லாம் அடக்கப்பட்டிருந்த வேளையில், ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள் என்ற ஆத்மார்த்த குரலுடன் எமக்காக தன் உயிரையே தியாகம் செயத "அப்துல் ரவூத்" என்ற இஸ்லாமிய சகோதரனையும் நினைவில் கொள்ளுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்த்தும் நம்மவர் உதவி புரிவாராக............

நெல்லை: நெல்லையைச் சேர்ந்த பாப்புராஜ் என்கிற போட்டோகிராபர், இலங்கைத் தமிழர்களுக்கு நிதி திரட்ட ஷூ பாலிஷ் போட்டு நிதி சேகரிக்கிறார்.

இவ்வேலையில் யாழை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்தபோது, தமிழகத்தில் ஆதரவுக்கரங்கள் எல்லாம் அடக்கப்பட்டிருந்த வேளையில், ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள் என்ற ஆத்மார்த்த குரலுடன் எமக்காக தன் உயிரையே தியாகம் செயத "அப்துல் ரவூத்" என்ற இஸ்லாமிய சகோதரனையும் நினைவில் கொள்ளுவோம்.

இது போன்ற தகவல்கள் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படவேண்டும்.

இவை இனவாதத்துக்கும் இனப்பற்றுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை உணராத நம்மவர் சிலரிடம் நல்ல மனமாற்றத்தை ஏற்படுத்தும்.

Edited by vettri-vel

உயர்ந்த உள்ளம். உளம் கனிந்த நன்றிகள். :icon_mrgreen:

மனிதநேயமும்..இரத்தபாசமும்...உள

்ள இந்த இளைஞர் உண்மையில் இதயத்த்pல் உயர்ந்து நிற்கிறார்.

ஈழத்தமிழர்கள் ஒன்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். உண்மையான தமிழகத் தமிழன்.. மற்றும் தமிழக உறவுகள் எம்மீது வைத்துள்ள பாசத்தைப் போன்று நாம் அவர்கள் மீது வைத்திருக்கிறமா என்பது கேள்விக்குறியே. ஏன் எம்மவர்கள் எம்மவர் மீது வைத்திருக்கிறார்களா என்பதே கேள்விக்குறி.

:icon_mrgreen:

இனியாவது தேவையற்று யார் குறித்தும் பேசுவதை நிறுத்தினால் போதும். அந்த உடன்பிறப்புக்கு எமது நன்றிகள்.

இரத்தபாசம் என்பதை விட [விகடகவி குறிப்பிட்டது போல்] மனிதநேயம் என்பதே பொருத்தமானது. அவருடைய முன்னைய முயற்சிகளைப் பார்க்கிறபோது அந்தத் தோழனின் மனிதாபிமானமும் - அதற்காய் அவர் நிதி சேர்க்கும் நேர்மையும் சிறப்பானது.

  • கருத்துக்கள உறவுகள்

உளம் கனிந்த நன்றி பாபுராஜ் . :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாபுராஜின் மனித நேயம் மிக்க செயலால் ஈழத்தமிழ் நெஞ்சங்களை நெகிழவைத்து விட்டீர்கள்.

இளங்கவி

''இவ்வேலையில் யாழை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்தபோது, தமிழகத்தில் ஆதரவுக்கரங்கள் எல்லாம் அடக்கப்பட்டிருந்த வேளையில், ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள் என்ற ஆத்மார்த்த குரலுடன் எமக்காக தன் உயிரையே தியாகம் செயத "அப்துல் ரவூத்" என்ற இஸ்லாமிய சகோதரனையும் நினைவில் கொள்ளுவோம். ''

அப்துல் ரவூத் போன்றோரின் பெயர்களெல்லாம் எங்கள் சுதந்திர தமிழீழத்தின் வரலாறுகளில் நிச்சயம் பொறிக்கப் படும்.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக உறவுகள் காலத்தால் செய்யும் இந்த உதவிகள் விலைமதிப்பற்றவை. மறக்கப்படக் கூடாதவை. நன்றிகள் கோடி உறவுகளே..!!

  • கருத்துக்கள உறவுகள்

பாபுராஜின் உணர்வுகள் மதிக்கபடவேண்டியது ....

உண்மையில் இவரது மனித நேயம் பாராட்டப் பட வேண்டியது. இவர் இதன் மூலம் எவ்வளவு பணம் சேர்த்தாலும், அதன் ஒவ்வொரு சதமும் இலட்சத்தை விட பெறுமானமுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழினத்தின் ஆதரவும்(மக்கள் புரட்சி) இவற்றுக்கெல்லாம் மணி மகுடம் வைத்தால் போல் திகழும் தமிழரது வரலாற்று தலமையும் விடுதலைக்காக அளப்பரிய தியாகங்களைப்புரியும் ஈழத்தமிழ்மக்களும் விடுதலையை வென்றெடுப்பர்

இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக, இளைஞர் ஒருவர் பேருந்து நிறுத்தகத்தில் அமர்ந்து பாதணிகளை சுத்தம் (பொலிஷ்) செய்து நிதி திரட்டி வருகிறார். நெல்லையை சேர்ந்தவர் பாபுராஜ் (30) சமூக சேவைகள் செய்து வருகிறார். அண்மையில் சென்னை அருகே திருக்கழுக்குன்றத்தில் இதயேந்திரன் என்ற மாணவர் விபத்தில் சிக்கி இறந்த போது அவரது இதயம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்ததற்காக அவரது தந்தை டாக்டர் அசோகனுக்கு, நெல்லையில் பாராட்டி விருது வழங்கினார். இவர் நேற்று காலையில் பாளையங்கோட்டை புதிய பேருந்து நிறுத்தகத்தில் அமர்ந்து அங்கு வருகின்ற பயணிகளின் பாதணிகளுக்கு பொலிஷ் செய்தார்.

ஒரு வாராத்திற்கு இதே போல பாதணிகள் பொலிஷ் செய்து இதன் மூலம் கிடைக்கும் தொகையை இலங்கை தமிழ் நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

நன்றி வீரகேசரி வா.வெளியீடு

http://img151.imageshack.us/my.php?image=shoevx7.jpg

நன்றி சகோதரனே நீ உன் உழைப்பால் சேகரிக்கும் அந்த சிறு தொகை சுயநலத்திற்காக சேகரிக்கப்படும் கோடிகளுக்கு மேல் கோடி பெறும்.

Edited by Janarthanan

வறுமையில் வாடும் ஒரு நாடக நடிகை (1000 ருபாய் தான் அவர் சம்பளம்)... 200 ரூபாய் நன்கொடை கொடுத்தார்....

தமிழக மக்கள் இந்திய அரசை மீறி உதவி செய்வது கடினம் .... விடுதலைப்போராட்ட வீரர்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களே பொருளாதார ரீதியில் உதவி அவர்கள் சிங்கள ராணுவ முதுகெலும்பை முறிக்க பின்புலமாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாபுராஜ் அவர்களுக்கு இதயம்கனிந்த நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.