Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேய்முனை, வலைப்பாடு பகுதிகளை கைப்பற்றியதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

பானை பொங்குவதுபோல்

நன்றாக எரித்து எரித்து

அளவை கூட்டிக்குறைத்து கொதிநிலைக்கு கொண்டுவந்தாயிற்று

இனி

எந்தப்பக்கத்தாலாவது பொங்கியெழவேண்டும்

அது எந்தப்பக்கம் எப்போது எப்படி எந்த வகையில் எந்த முறையில் எந்தபாகையில் என்பதுதான் கோடிபெறும் கேள்வி இன்று

ஆனால் பானைபொங்கியே ஆகவேண்டும்

ஆனால் பானை பொங்கலுக்குத்தான் பொங்கும் என்பதே பானையின் இன்றையநிலையில் மிகத்தாமதம்தான்........

  • Replies 92
  • Views 9.1k
  • Created
  • Last Reply

யுகே ராச்சு

படையினர் ஏ32 பாதையிலை நேரடியாக முன்னேற முயற்சிக்கவும் இல்லை, அதற்குப் புலிகள் இடம்கொடுக்கவும் இல்லை. ஏ32 சாலையில் இருக்கிற இடங்களைப் பிடிக்கிறதுக்கு முன்னர் அதற்கு கிழக்காக சமாந்தரமாக முன்னேறி அல்லது அதனையும் தாண்டிய பின்னரே அந்த இடங்களைப் படையினர் கைப்பற்றினர்.

பாhலமடு-விடத்தல்தீவு கைப்பற்றப்படமுதல் அவற்றுக்குச் சமாந்தரமாக 10 கி.மீட்டர்களிற்கு அப்பால் பெரியமடுவைக் கைப்பற்றி வடமேற்குத் திசையில் முன்னேறி விடத்தல்தீவிற்கு வடக்காக ஏ32 சாலையில் ஏறிய பின்னர்தான் விடத்தல் தீவு படையினர் வசமானது. அதேபோன்று இலுப்பைக்கடவை வெள்ளாங்குளம் பகுதிகளிற்கு கிழக்காக 20 கி.மீட்டர்களிற்கு அப்பால் உள்ள வவுனிக்குளம் வரை வந்த பின்னர்தான் படையினர் குறித்த பகுதிகளை கைப்பற்றினர். அண்மையில் வீழ்ந்த நாச்சிக்குடாவை கைப்பற்ற பல காலத்திற்கு முன்னேரேயே அதற்கு வடகிழக்காக நெடுந்தொலையில் அக்கராயன்குளப் பகுதியிலிரும், நாச்சிக்குடாவிற்கு குத்துமதிப்பாக வடக்காக இருக்கும் மணியன்குளம், பல்லவராயன்கட்டிற்கு அண்மையான பகுதிகளிலும் படையினர் நிலை கொண்டிருந்தனர். அதன்பின்னர்தான் புலிகள் இல்லாத நாச்சிக்குடாவை முற்றுகையிட்டு படையினர் கைப்பற்றினர்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் படையினர் தனியே ஏ32 வீதியில் முன்னேற முயற்சிக்கவில்லை. ஏ32 வீதியில் மாத்திரம் படையினரை புலிகள் முன்னேற அனுமதிக்கவில்லை. இந்தப் படைநவடிக்கைகளின் தொடக்கத்திலிருந்து கிழக்குப் பக்கமாக படையினர் முன்னேற அனுமதித்த பின்னரேயே ஏ32 வீதியில் படையினரை அவர்கள் முன்னேற அனுமதிக்கின்றனர்.

நீங்கள் சொல்வதுபோல ஏ32 வீதியால் மட்டும் படையினர் முன்னேறியிருந்தால் இன்றுவரை கூட படையினரால் விடத்தல்தீவைக் கூட கைப்பற்ற முடியாத நிலையே இருந்திருக்கும். காரணம் கிளாலி முகமாலை நாகர்கோவில் போன்று புலிகள் வலுவான நிலைகளை அமைத்து தமது முழுமையான சூட்டுவலுவையும் அங்கே குவித்து படையினரின் அனைத்து நகர்வுகளையும் முறியடித்திருப்பர். இன்று படையினரால் வேகமாக முன்னேற முடிகிறதென்றால் பல முனைகளால் மேற்கொள்ளப்படும் முன்னகர்வு நடவடிக்கைகள்தான்.

அப்பு ராசா வேலுப்பிள்ளை பிரபாகரன் எண்டவர் தன்ரை பதின்ம பருவத்திலிருந்து போராடி வருகிறார். இந்த போராட்டக் காலத்திலை அவர் எண்ணுக்கணக்கற்ற படை நடவடிக்கைகளை பார்த்திருக்கிறார். அவற்றுக்கெதிரான முறியடிப்புத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நெறிப்படுத்தியிருக்கிறார். பல படை நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வெற்றிகரமாக நெறிப்படுத்தியிருக்கிறார். அவரிற்குத் தெரியும் எப்ப என்னத்தைச் செய்கிறதெண்டு. அவரிற்குப் புத்தி சொல்லுற வேலைகளை நீங்கள் செய்ய வேண்டாம். இங்கை லண்டனிலை இருந்து கொண்டு படையினரை முன்னேற அனுமதித்தால் சூட்டுப்பலம் செறிவாக ஒரு பகுதிக்கை விழுகிற பிரச்சினையை உம்மாலேயே ஊகிக்க முடியுமென்றால் அங்கே கணத்திற்கு கணம் அந்த எறிகணை மழைக்குள்ள நிக்கிறவை உங்களைவிட அதிகமாக யோசிப்பினம் எண்டதைக் புரிஞ்சு கொள்ளுங்கோ.

மின்னல் அண்ணை ஏன் டென்சன் ஆகிறியள். அவர் இளைப்பாறிய பிரிகேடியர் லண்டன் வன்னியனா இருக்கலாம். அடுத்த கட்டுரையை எப்பிடி எழுதினா வரவேற்பு கிடைக்கும் எண்டு ஆழம்பாக்கிறாரோ தெரியாது. நீங்கள் ஏன் கலர் கலராக எழுதி பிபி அய் ஏத்திறியள்?

நம்மடை புகழ்பெற்ற படைத்துறை விஞ்ஞானி இப்ப A., Wales ஆனவுடன் அவருடைய பூவிறிசுகள் insights based on \"intelligence\" என்றாகவில்லையா அப்பிடித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு ராசா வேலுப்பிள்ளை பிரபாகரன் எண்டவர் தன்ரை பதின்ம பருவத்திலிருந்து போராடி வருகிறார். இந்த போராட்டக் காலத்திலை அவர் எண்ணுக்கணக்கற்ற படை நடவடிக்கைகளை பார்த்திருக்கிறார். அவற்றுக்கெதிரான முறியடிப்புத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நெறிப்படுத்தியிருக்கிறார். பல படை நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வெற்றிகரமாக நெறிப்படுத்தியிருக்கிறார். அவரிற்குத் தெரியும் எப்ப என்னத்தைச் செய்கிறதெண்டு. அவரிற்குப் புத்தி சொல்லுற வேலைகளை நீங்கள் செய்ய வேண்டாம். இங்கை லண்டனிலை இருந்து கொண்டு படையினரை முன்னேற அனுமதித்தால் சூட்டுப்பலம் செறிவாக ஒரு பகுதிக்கை விழுகிற பிரச்சினையை உம்மாலேயே ஊகிக்க முடியுமென்றால் அங்கே கணத்திற்கு கணம் அந்த எறிகணை மழைக்குள்ள நிக்கிறவை உங்களைவிட அதிகமாக யோசிப்பினம் எண்டதைக் புரிஞ்சு கொள்ளுங்கோ.

தகவலுக்கு நன்றி

மிகவும் புரியும்படியாக எழுதியுள்ளீர்கள்

அதேநேரம் எதால்வந்தாலும் பரந்தனுக்கோ

அல்லது கிளிநொச்சிக்கோ வந்துவிட்டால்............????

எவ்வளவு இடங்கள் கைவிட்டுப்போகும் என்பது அந்த இடங்களை அறிந்தவர்களுக்கு நன்றாகத்தெரியும்

நீங்கள் குறிப்பிடுவதுபோல் தலைவர்மேல் நம்பிக்கையற்றோ

அல்லது போராளிகளின் மதிநுட்பம்பற்றிய அறியாமையாலோ வருவதல்ல இந்தப்பதட்டம்

அவர்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்ற அவசரத்தில் வருவது

இப்படி எடுத்துக்கொள்ளலாமே இதை

ஆபத்தான நிலையிலுள்ள நமது உறவினர் ஒருவருக்கு நல்லவரும் ஆழ்ந்த அனுபவமுமுள்ள ஒரு வைத்தியர் சிகிச்சை செய்கிறார் என்பதற்காக உறவினர்கள் பதட்டப்படாமல் இருக்கமுடியுமா????????????

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் படையினர் தனியே ஏ32 வீதியில் முன்னேற முயற்சிக்கவில்லை. ஏ32 வீதியில் மாத்திரம் படையினரை புலிகள் முன்னேற அனுமதிக்கவில்லை. இந்தப் படைநவடிக்கைகளின் தொடக்கத்திலிருந்து கிழக்குப் பக்கமாக படையினர் முன்னேற அனுமதித்த பின்னரேயே ஏ32 வீதியில் படையினரை அவர்கள் முன்னேற அனுமதிக்கின்றனர்.

நீங்கள் சொல்வதுபோல ஏ32 வீதியால் மட்டும் படையினர் முன்னேறியிருந்தால் இன்றுவரை கூட படையினரால் விடத்தல்தீவைக் கூட கைப்பற்ற முடியாத நிலையே இருந்திருக்கும். காரணம் கிளாலி முகமாலை நாகர்கோவில் போன்று புலிகள் வலுவான நிலைகளை அமைத்து தமது முழுமையான சூட்டுவலுவையும் அங்கே குவித்து படையினரின் அனைத்து நகர்வுகளையும் முறியடித்திருப்பர். இன்று படையினரால் வேகமாக முன்னேற முடிகிறதென்றால் பல முனைகளால் மேற்கொள்ளப்படும் முன்னகர்வு நடவடிக்கைகள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன எழுதப்போறார??????????

பார்ப்போம்;

இவர் என்ன எழுதப்போறார??????????

பார்ப்போம்;

  • கருத்துக்கள உறவுகள்

நடுவில் வரமுடியுமா என்று முயற்சித்தப்பார்த்தேன்

அவ்வளவே

தவறாக எடுக்கவேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் அண்மைய செவ்வியில் இருந்து..

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான படைகளைக் கொண்ட சிங்கள இராணுவத்துடன் எமது விடுதலைப் போராளிகள் வீரமுடன் போராடி வருகின்றனர். பல நூற்றுக்கணக்கான போராளிகள் களத்தில் வீரமுடன் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர். பல வல்லரசு நாடுகள் சிறிலங்கா அரச படைகளுக்கு உதவி செய்து வருவதால் அவர்கள் பீரங்கிக் குண்டுகளையெல்லாம் மழைபோல் பொழிந்த வண்ணமுள்ளனர். வானூர்தி குண்டுவீச்சுக்களும் அவ்வாறேதான். ஆனால் எமது விடுதலைப் போராளிகள் மனம் சலிக்காது ஆவேசத்துடன் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

யுத்த முனையில் வலிந்த தாக்குதலை மேற்கொள்வதென்பது எமக்குச் சாதகமான சூழல் ஏற்படும்போதே மேற்கொள்ளலாம். அதுவரை நாம் எமது இழப்புகளைத் தவிர்ப்பதற்காகவும், எதிரியின் பலவீனமான சூழலை எதிர்பார்த்தும் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்றுள்ளது. சிங்கள அரச படைகள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான படை வலுவைக் கொண்டதாகும். எமது படை வீரர்களின் எண்ணிக்கை அதைவிட மிகக் குறைவானதே. குறைந்த மனித வலுவையுடைய படையணிகளையுடைய நாம் மிகவும் தந்திரமாகவும், சமயோசிதமாகவும் செயற்பட வேண்டியுள்ளது. ஆனால்,எமது படை வீரர்களின் மனவலிமை அரச படைகளை விட அதிகமானது. தேசிய ரீதியாக, அனைத்துலக ரீதியாக எமக்குச் சாதகமான அரசியல் இராணுவ சூழ்நிலைகளை வைத்தே நாம் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும். இதுவே களமுனைகளில் வெற்றியை ஈட்டித் தரும்.

காலம் இன்னமும் கனியவில்லைப் போலுள்ளது..

யாழ்ப்பாணத்து சனத்துக்கு பூநகரி ஊடாக சாப்பாடு கொண்டு போனால் நல்லதுதானே...!

  • கருத்துக்கள உறவுகள்
northvi6.jpg

Edited by கந்தப்பு

பூநகரி நோக்கி முன்னேறி வரும் படையினர் நேற்று வியாழக்கிழமை பேய்முனை மற்றும் வலைப்பாடு பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

பூநகரி நோக்கி முன்னேறி வரும் படையினர் நேற்று வியாழக்கிழமை பேய்முனை மற்றும் வலைப்பாடு பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

http://vakthaa.tv/play.php?vid=2577

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் இருந்த புலி வீரனை ஜீப்பில் தேடிவந்த காலம் போய்.....முப்படையுடன் பல பிரிகேட்டுடன் பெரும் தளத்தில் தேடும் காலம் இது......

  • கருத்துக்கள உறவுகள்

:) வலைப்பாடுப் பகுதி ராணுவத்தால் வல்வளைக்கப்பட்ட போது புலிகளின் பெண்போராளிகள் மூவரும் உயிருடன் படையினரால் பிடிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஆங்கில ஆசிரியர்(28) , இன்னும் இரு பெண்கள், ஒருவர் 19 மற்றையவர் 18 என்று மூன்று பேரும் தம்மிடம் சரணடைந்ததாக ராணுவம் கூறுகிறது.

ராணுவ இணையத் தளத்தில் இவர்கள் மூவரினதும் செவ்விகள், படங்கள் என்பன போடப்பட்டிருக்கின்றன. மேலும் காயப்பட்ட அப்பெண் போராளிகளில் ஒருவருக்கு வைத்தியம் நடைபெறுவதோடு அவர்கள் அனைவருக்கும் உணவு மற்றும் குளிர்பாணம் போன்றவையும் வழங்கப்படுகின்றன.

அவர்கள் தம்மைக் கட்டாயப்படுத்திப் புலிகள் இணைத்துக்கொண்டதாகவும், மூன்று நாள் உணவின்றி சண்டையிட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.

சந்தர்ப்ப வசத்தால் பிடிபட்ட இந்தப் போராளிகளை ராணுவம் தனது பிரச்சாரத் தேவைக்குப் பயன்படுத்துகிறது. முன்னரும் புலிகள் யாழ் நகர் நோக்கி நகரும்போது நாவற்குழிச் சமரில் ராணுவத்தால் ஒரு பெண்போராளி பிடிபட்டார். அதன்போதும் இதைத்தான் ராணுவம் செய்தது.

இந்தச் செய்தியை இங்கு இணைக்கலாமா வேண்டாமா என்று சற்றுத் தயங்கினேன். ஆனால் நாம் இந்தச் செய்தியை மறைக்கிறோம் என்பதற்காக இப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று நாம் உலகத்தை நம்பவைக்க முடியுமா? அதுதான் இணைத்தேன்.

அரசின் பிரச்சாரத்தை இங்கே நடத்துகிறேன் என்று யாரும் நினைத்தால் தயவுசெய்து மன்னித்து விடுங்கள். நான் இதை வேறு எவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக இணைக்கவில்லை. நான் அறிந்ததை உங்கள் அனைவருடனும் பகிந்து கொள்ள வேண்டும் என்ற அவாவில்தான் இணைக்கிறேன்.

அவர்கள் உண்மையில் போராளிகளா.. அல்லது வீடு பார்க்கப் போன இடத்தில பிடிபட்டவர்களா..??! அல்லது களப் பின்புல வேலைகளுக்குப் போனவர்களாக இருக்கலாம்.

உண்மையான போராளிகள் நிச்சயம்.. சயனைட் வைத்திருந்திருப்பார்கள். அவர்கள் இலகுவில் பிடிபட வாய்ப்பில்லை.

வன்னிக்களத்தில்..

இராணுவம்.. சிறு சிறு குழுக்களாக.. ஆழ ஊடுருவி நிலையெடுத்துக் கொள்கிறது. அதன் பின்னரே அவ்விடங்களுக்கு மேலதிக துருப்புக்களை அழைத்துவிட்டு.. இடங்களைப் பிடித்துவிட்டதாக அறிவித்துக் கொள்கிறது.

வன்னி பரந்த பிரதேசம். அங்கு அங்குலம் அங்குலம் போராளிகளை நிறுத்தி வைக்க முடியாது. அதுமட்டுமன்றி கேந்திர ஸ்தானங்களை தான் தக்க வைக்கப் போராட முடியும். வன்னிக்குள் இராணுவம் எவ்வாறு ஊடுருவி வருகிறதோ அதேபோல்.. இராணுவம் விடுவித்த பகுதிகளுக்குள்ளும் போராளிகள் தாராளமாக ஊடுருவலாம். இராணுவத்தை அங்குலம் அங்குலமா நிறுத்தி வைக்க வேண்டின் பல ஆயிரம் பேரை அங்கு பணிக்கு அமர்த்த வேண்டும்.

உண்மையில் ஏ 32 பாதையைத் திறக்க விடுதல் ஒரு வகையில் நன்று எனலாம். இராணுவத்தின் கவனத்தை வளத்தை அப்பாதையை மையப்படுத்திக் கொள்ளச் செய்வதன் மூலம்.. இப்போ குடா நாட்டுக்குள் 43000 படையினரை முடக்கி வைத்திருப்பது போல குறிப்பிட்ட எண்ணிக்கையான படையினரை வன்னிக் காட்டுக்குள் முடக்கலாம்.

பின்னர் சாதகமான களங்களில் சாதகமான காலங்களில் வலிந்து தாக்குதல் நடத்துவதன் மூலம்.. இராணுவத்திற்குப் பேரழிவுகளை உருவாக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் இராணுவம்.. ஆனையிறவை மையப்படுத்தி தனது குடாநாட்டு இராணுவ வளத்தைக் கொண்டு தாக்குதலை ஆரம்பிக்க பூநகரி வீழ்ச்சி நிச்சயம் உந்து சக்தியாக அமையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா மின்னல்,

நீங்கள் கூறுவது போன்று நான் யாரையும் தரக்குறைவாக மதிப்பிடவில்லை.

ஆனால் கேணல் தர தளபதியொருவர் 2006ம் ஆண்டு ஆவணி மாதம் தன்னிடம் 40 ஆயிரம் ஆட்லெறி எறிகணைகளின் சூட்டாதரவை தந்தால் யாழ்ப்பாணத்ததை மீட்பேன் என்று அடம்பிடித்து அதற்கு தலைவரும் அரைகுறை மனதுடன் அனுமதி கொடுத்து என்ன நடந்தது? அந்த தளபதியால் இராணுவத்தின் முதல் முன்னணி பாதுகாப்பு அரணை உடைப்பதற்கே தடுமாற வேண்டிய நிலை.

அநியாயமாக தமிழர்களின் உயிர்களை பலி கொடுத்ததுதான் மிச்சம்.

அதே போன்று மாவிலாற்றில் தணிணீரை ப+ட்டி சண்டித்தனம் செய்த மற்ற கேணல் தர தளபதியின் செய்கையால் இன்று கிழக்கே போய்விட்டது.

ஆனால் அவர் தான்விட்ட தவறை, இழப்பை மீட்பார் என்பதில் உறுதியாய் இருக்கின்றார். நல்லது.

இப்படியே போனால் எம்மக்களின் நிலை என்ன?

ஐயா மின்னல் நீங்கள் கூறியது போலல்லாது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓவ்வொரு நடவடிக்கையையும் விமர்சிப்பதற்கு இந்ந ப+மியிலுள்ள தமிழ் மொழி பேசுகின்ற அனைவருக்கும் உரிமையிருக்கிறது.

அதேபோல் புலம்பெயர் மண்ணில் தமிழீழ போராட்டத்திற்கு பங்களித்தவருக்கு நாளை தமிழீழத்தில்(?) என்ன வசதி வழங்கப்படுகிறதோ அதே வசதி பங்களிக்காதவருக்கும் வழங்கப்படும். ஆனால் தமிழர் விடுதலைப் போரட்டத்திற்கு எதிராக செயற்பட்டவருக்கு அந்த வசதி வாய்ப்புக்கள் மேலதிகமாக வழங்கப்படும்.

சரி இனி கள நிலமையை பார்ப்போமானால் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்திற்கும் பேச்சு வார்த்தைக்கும் வருவதற்கு முன்னர் களத்தில் அவர்களுக்கு ஒரு பாரிய வெற்றி கிடைக்க வேண்டும். இன்று இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் அழுத்தங்களின்றியும் சிங்கள மக்களின் ஆதரவுடனும் இராணுவ ரீதியில் தமிழர்களை அழித்து வன்னிப் பெருநிலத்தில் முன்னேறி வருகிறது. இதே வேளையில் தமிழர் தரப்பு வன்னியிலுள்ள பொதுமக்களின் எதிர்ப்பை பெருமளவில் சம்பாதித்துக் கொண்டு இராணுவத்தை எதிர்க்க திண்டாடி வருகிறது.

எனவே விடுதலைப்புலிகள் இந்த ஆண்டில் கட்டாயம் ஒரு சிறிய வெற்றியையும் 2009ம் ஆண்டில் வன்னிப் பிரந்தியம் தவிர்ந்த ஒரு பிரதேசத்தில் பாரிய வெறியையும் ஈட்ட வேண்டும்.

அதுதான் அவர்களுக்கு 1995ல், 1996ல் ஏற்பட்ட யாழ்ப்பாண இழப்பையோ அல்லது கிழக்கு மாகாண இழப்பையோ ஈடுசெய்யும்.

Edited by ukraj

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் நீங்கள் எவ்வளவு தூரம் தமிழர் போராட்டத்தையோ அல்லது விடுதலைப்புலிகள் அமைப்பையோ அதன் தலைவரையோ புரிந்து வைத்துள்ளீர்கள் என்பது தெரியாது.

தலைவர் எப்போதும் ஒரு போராளியின் அநியாய இழப்பை ஏற்று கொண்டதில்லை.

இங்கு பிடிபட்டவர்கள் நஞ்சருந்துவதால் என்ன இலாபம். இன்றய சூழ்நிலையில் பிடிபட்ட இம்மூவரும் அரசாங்கத்தினால் நன்றாக பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளார்கள். எனவே இனி அவர்களை சித்திரவதை செய்ய முடியாது, நேரே நிதிமன்றில் நிறுத்தி சிறையிலடைக்கதான் முடியும். குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அவர்கள் வெளியே வருவார்கள்.

அல்லது சித்திரவதை செய்தாலும் அவர்களுக்கு எந்தவித இரகசியங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் புதிதாக இணைந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நினைத்தால் அழுவதாக, சிரிப்பதாக தெரியவில்லை... இதை விட, புலத்து அரசியல் ஆய்வாளர்கள் திறம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா மின்னல் நீங்கள் கூறியது போலல்லாது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓவ்வொரு நடவடிக்கையையும் விமர்சிப்பதற்கு இந்ந ப+மியிலுள்ள தமிழ் மொழி பேசுகின்ற அனைவருக்கும் உரிமையிருக்கிறது.

பேச்சு உரிமை எல்லாருக்கும் உள்ளது.

ஆனால் மல்ரி பரல் மழை நடுவிலும், கிபிர், MI-24 வான் தாக்குதல் நடுவிலும், எண்ணுக்கணக்கற்ற படைகளை எதிர்கொள்வது என்பது UK இலிருந்து கணனியில் type செய்வதிலும் சற்றுக் கடினம் என்பதாக என் சிற்றறிவுக்குக் படுகின்றது. :rolleyes:

Edited by காட்டாறு

ஐயா மின்னல்,

நீங்கள் கூறுவது போன்று நான் யாரையும் தரக்குறைவாக மதிப்பிடவில்லை.

ஆனால் கேணல் தர தளபதியொருவர் 1996ம் ஆண்டு ஆவணி மாதம் தன்னிடம் 40 ஆயிரம் ஆட்லெறி எறிகணைகளின் சூட்டாதரவை தந்தால் யாழ்ப்பாணத்ததை மீட்பேன் என்று அடம்பிடித்து அதற்கு தலைவரும் அரைகுறை மனதுடன் அனுமதி கொடுத்து என்ன நடந்தது? அந்த தளபதியால் இராணுவத்தின் முதல் முன்னணி பாதுகாப்பு அரணை உடைப்பதற்கே தடுமாற வேண்டிய நிலை.

அநியாயமாக தமிழர்களின் உயிர்களை பலி கொடுத்ததுதான் மிச்சம்..

புலிகள் ஆட்டிலறிப் பீரங்கியை கைப்பற்றியது 1996ம் ஆண்டு ஆடி மாதம் 18ம் திகதி. இரண்டு ஆட்டிலறிப் பீரங்கிகளும் அவற்றுக்குத் தேவையான 960 வரையான எறிகணைகளுமே புலிகளால் கைப்பற்றப்பட்டன. நீர் கூறும் 1996ம் ஆண்டு ஆவணி மாதத்தில் கிளிநொச்சியைக் கைப்பற்றும் சத்ய படை நடவடிக்கை நடைபெற்ற நேரம். கைப்பற்றப்பட்ட ஆட்டிலறிகளைப் புலிகள் அப்போது பயன்படுத்த பழகிக்கொண்டிருந்த காலம். அத்துடன் கிளிநொச்சி நோக்கி படைநகர்வு நடைபெற்றுக் கொண்டிருக்க வெறும் 960 எறிகணைகளே இருந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற 40 ஆயிரம் எறிகணைகளை ஒரு தளபதி அடம்பிடித்தாராம், தலைவரும் அரை மனதுடன் கொடுத்தாராம். உயிர்கள் நாசமாகிப் போயிட்டுதாம்.

உடைந்து உள்நுழைய முடியாமல் புலிகள் திண்டாடிய அந்த யாழ். குடாநாட்டுக்கான முன்னரங்க நிலை எங்கையப்பு இருந்தது?

கண்டகிண்ட நாய்கள் குரைகிறதையெல்லாம் உண்மையென நினைச்சு இங்க வந்து மடத்தனமாக எழுதாதேயும். முதலிலை போராட்ட வரலாற்றைப்படியும். (அன்ரன் பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்" நூலிருந்தால் படியும்.) அதோட ஈழத்தின் வரைபடம் கூகிளிலை தேடி ஈழத்தின் பூகோளத்தையும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளும் பிறகு வந்து மாவிலாற்றில் கேணல் தண்ணியைப் பூட்டி கிழக்கையே பறிகொடுத்தார். இன்னொரு கேணல் யாழைப் பிடிக்கப்போய் உயிர்களை அழித்தார். இப்படிப் போனால் தமிழரின் நிலை என்ன என்ற கதைகளைக் கதைக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2006 ஆம் ஆண்டு முகமாலையில் நடந்த முன்னேற்ற முயற்சி தானப்பு அது. இந்த சண்டையின் பின்னரே ஏ9 பாதை மூடப்பட்டது.

2006 ஆம் ஆண்டு முகமாலையில் நடந்த முன்னேற்ற முயற்சி தானப்பு அது. இந்த சண்டையின் பின்னரே ஏ9 பாதை மூடப்பட்டது.

2006 ஏனப்பு 1996 எண்டு எழுதுறீர்?

யாரப்பு உமக்கு 40ஆயிரம் ஆட்டிலறிக் கதை சொன்னது?

யாழ்ப்பாணத்தை மீட்பதற்கான சண்டை என்று புலிகள் எந்த ஊடகத்திலாவது அந்த நடவடிக்கையை சொல்லியிருக்கின்றனரா? இல்லையே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் எப்ப தோல்வியடைந்த நடவடிக்கைகளை ஊடகங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

உமக்கு தெரியாவிட்டால் மற்றவர்களுக்கு தெரியவராது என்ற நினைப்பை கைவிடுங்கள்.

யார் கதை சொன்னது? எப்ப சொன்னது? என்ற துளவாரம் ஏன்.

உண்மையில் ஏ 32 பாதையைத் திறக்க விடுதல் ஒரு வகையில் நன்று எனலாம். இராணுவத்தின் கவனத்தை வளத்தை அப்பாதையை மையப்படுத்திக் கொள்ளச் செய்வதன் மூலம்.. இப்போ குடா நாட்டுக்குள் 43000 படையினரை முடக்கி வைத்திருப்பது போல குறிப்பிட்ட எண்ணிக்கையான படையினரை வன்னிக் காட்டுக்குள் முடக்கலாம்.

பின்னர் சாதகமான களங்களில் சாதகமான காலங்களில் வலிந்து தாக்குதல் நடத்துவதன் மூலம்.. இராணுவத்திற்குப் பேரழிவுகளை உருவாக்க வாய்ப்பிருக்கிறது.

மிக அருமையான, எந்த இராணுவ ஆய்வாளனாலும் கண்டுபிடிக்க முடியாது போன, ஆழமான பார்வை. சிறப்பான அலசல். வேல்ஸ் அரூஸ், கனடா ரிஷி ஆகியோரின் பார்வையிலும் விட உன்னதமான நோக்கு. சிங்களவனுக்கு இதெல்லாம் தெரியாமல் மோட்டுத்தனமாக போய் நல்லா மாட்டுப்பட போறான். இனி எமக்கெல்லாம் கொண்டாட்டம்தான்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.