Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை தமிழீழத்தை ஆதரிக்க வைப்பது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசுக்கு பெருமளவில் இராணுவ ஆதரவு தருவது இந்தியாவே என்று பெருமளவிலான யாழ்கள உறவுகள் நம்புகிறார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=48599

இந்த நிலையில் இந்திய ஆதரவு தமிழீழ விடுதலைக்கு கிடைப்பது பெருமளவு பயனுள்ளதாக இருக்கும்.

Edited by வலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

"பாரத மாதா"வுடன் ஈழத்தமிழர் உறவை மேம்படுத்த மேற்சொன்ன எந்த செயற்பாடுமே உதவாது. அதுவும் சீனாவுடன் அணுகும் உத்தி பற்றிச் சொல்லவே தேவையில்லை.

எனவே எனது வாக்கைப் பயன்படுத்தவில்லை.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் நடைபெறும் அவலங்கள் எவ்வாறு எம்மை வந்து சேருகின்றதோ அவ்வாறு தமிழ் நாட்டு உறவுகளை சென்றடைய வேண்டும். அங்கு நடைபெறும் தேர்தல்களில் இந்த விசயம் முக்கியமானதாக இருக்குமளவு தமிழக மக்களுக்கும் எமக்குமான உறவு வலிமைபடும் போது ஒரு திருப்பம் வரும். எமக்கும் தமிழக மக்களுக்குமான உறவை வலுப்படுத்துதல் அவசியமானது. மற்றபடி சீனா எம்பக்கம் திரும்ப ஒரு காரணமும் இல்லை. சீனாவுக்கு அப்படியான ஒரு அவசியம் இல்லை. இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையில் ஈழத்தை மையமாக வைத்து ஒரு முக்கியத்துவமும் இன்றய காலகட்த்தில் இருப்பதாக தெரியவில்லை. எமக்கும் சீனாவுக்குமான உறவு முக்கியத்துவத்தை விட சீனாவுக்கும் இலங்கைக்கும் மற்றும் இந்தியாவுக்குமான உறவு பல நூறுமடங்கு பெரியது.

இந்தியா எமது தரப்பு நியாயங்களை ஏற்றுக்கொள்ளும் போது அது என்னும் பல நாடுகளை ஏற்றுக்கொள்ள வைக்கும் அதே போல் புலம்பெயர்ந்த மக்கள் வாழும் நாடுகள் எமது தரப்பு நியாயங்களை ஏற்றுக்கொள்ளும் போது இந்தியாவும் மாறுவதற்கான சாத்தியம் உள்ளது. எனவே எமது நியயங்களை எமது மக்களின் அவலங்களை எவ்வளவு தூரம் சர்வதேச சமூகத்திடம் கொண்டு செல்கின்றோமோ அதை அடிப்படையாக வைத்தே இந்திய ஆதரவு உட்பட எதுவும் சாத்தியப்படும். இதை தவிர்ந்த எந்தவித குறுக்கு வழியும் எமக்கு குழியாகவே அமையும். உலக நாடுகளுக்கு எமது முக்கியத்துவம் மிக குறைந்தது. முக்கியத்துவம் என்பது பொருளாதராம் வர்த்தகம் பாதுகாப்பு என்பனவற்றை அடிப்படையாக கொண்டு அமைவது.

இன்றளவும் இலங்கைக்கு உதவி வழங்கும் ஒரு நாட்டை கூட எமது பிரச்சாரங்கள் வெகுசன போராட்டங்கள் ஊடாக தடுக்க முடியவில்லை. இதுதான் உண்மை. பாகிஸ்தான் சீனா இந்தியா மற்றும் அமெரிக்க ஐரோப்பிய ராணுவத்தளபதிகளை ஒன்றாக அழைத்து ஆலோசனை பெறக்கூடிய நிலையில் தான் சிங்களத்தின் ராஜதந்திரம் உள்ளது. இலங்கைக்கு உதவி வழங்கும் நாட்டில் ஒன்று உதவிகளை நிறுத்தி இலங்கை அரசின் பேரினவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் போது மாற்றங்கள் ஆரம்பமாகும். அந்த ஆரம்ப இலக்கை கூட நாம் எட்டவில்லை.

எமது பிரச்சாரங்கள் எமக்குள்ளேயே பெரும்பாலும் முடங்கியது. சர்வதேச சமூகத்திடம் விரிவாக்கம் பெறவில்லை. பெரும்பான்மையான ஈழத்து புத்திஜீவிகள் இலங்கை அரசின் பக்கம் இருப்பதும், நடுநிலை என்ற பெயரில் நடிப்பதும், கண்ணை மூடிக்கிடப்பதும் எமக்கு ஏற்பட்ட தூரதிஸ்டம். பிரச்சாரத்தை முன்னெடுக்கும் சாதராண மக்கள் அவலங்களை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவதை விட கள முனையில் கவனம் செலுத்தினர். கள முனை மாற்றங்களுக்கு ஏற்ப தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதின் ஊடாக போராட்த்தில் பங்குபெறுவதாக நம்புகின்றனர். இதில் வானொலி பத்திரிகைகள் என்பனவும் அடக்கம். எமது குறைபாடுகளை விவாதித்து நிவர்த்தி செய்யும் போது எமக்கான மாற்றமும் ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாரத மாதாவுடன் ஈழத்தமிழர் உறவை மேம்படுத்த மேற்சொன்ன எந்த செயற்பாடுமே உதவாது. அதுவும் சீனாவுடன் அணுகும் உத்தி பற்றிச் சொல்லவே தேவையில்லை.

எனவே எனது வாக்கைப் பயன்படுத்தவில்லை.

பாரத மாதாவுடன் ஈழத்தமிழர் உறவை மேம்படுத்த மேற்சொன்ன எந்த செயற்பாடுமே உதவாது. அதுவும் சீனாவுடன் அணுகும் உத்தி பற்றிச் சொல்லவே தேவையில்லை

ஆனால் தமிழகமக்களின் ஆதரவோடு

தேசியக்கட்சிகளையும் அதனுடன் கூட்டுவைக்கும் துரோகக்கட்சிகளையும் தோற்கடிப்பதன் ஊடாக

எமக்கு ஆதரவான நிலையைக்கொண்டுவரலாம்என்பதையும் சேர்த்திருக்கலாம்

நான் முதலாவதற்கு வாக்களித்துள்ளேன் வேறு இல்லாததனால்

Edited by KUGATHASAN

ஜூட் நான் எதிர்பார்த்த பதில் உங்கட தெரிவில இல்லை. எண்டாலும் நான் இதை தெரிவு செய்தனான்:

அரசியல் செல்வாக்குள்ள வடஇந்தியருடன் மத அடிப்படையில் நெருங்கி உறவாடி அவர்கள் மூலம் தமிழீழத்துக்கு இந்திய ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும்

நான் எழுதிய கருத்து ஒன்றைக் காணவில்லை. நிர்வாகம் விளக்கம் தந்த பிற்பாடு அந்தக் கருத்தின் அடிப்படையில் மிகுதியை எழுதுகிறேன்.

ஆனால் இப்பொழுது இன்னொரு விடயத்தைப் பார்ப்போம்.

இங்கே தரப்பட்டுள்ள தெரிவுகள் எனக்குச் சிரிப்பைத்தான் வரவழைக்கின்றன. ஆனால் கடைசியாகத் தரப்பட்டுள்ள தெரிவு எனக்குக் கோபத்தை ஏற்படுத்துகின்றது.

இந்தியாவிற்கு எதிராக குண்டு வைக்கும் பயங்கரவாதிகளை ஈழத் தமிழர்கள் காட்டிக் கொடுத்து இந்தியாவிடம் நல்ல பெயரைப் பெறலாமாம்.

பயங்கரவாதிகள் என்று நீங்கள் யாரைச் சொல்கின்றீர்கள்?

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்

எங்களைப் பயங்கரவாதிகள் என்று எந்த நாடுகளும் எந்த ஊடகங்களும் சொல்கின்றனவோ, அதே நாடுகளும் ஊடகங்களும்தான் அவர்களையும் பயங்கரவாதிகள் என்கின்றன.

"பயங்கரவாதிகளான" எங்களுக்கு அவர்களைப் பயங்கரவாதிகள் என்று சொல்கின்ற உரிமை எங்கிருந்து வந்தது? இதில் அவர்களைப் காட்டிக் கொடுக்கின்ற கயமைப் புத்தி வேறு வருகின்றதா?

நீங்கள் உருப்பட்ட மாதிரித்தான்!

தமிழீழம் மத வரயறைக்கு உட்பட்டு அமையாது

தமிழக உறவுகளின் எதிரி நமக்கும் எதிரி என தேசியத்தலைவர் சொல்லி இருகின்றார்

நமக்கு தமிழக உறவுகளே உதவுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை

எம்மை பயங்கரவாதிகள் என்று கூறும்போது எமக்கு கோபம்வருமாக இருந்தால்

வேறு எவரையும் அந்தப்பெயரால் அழைக்கமாட்டோம்........................???

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யூட் என்று வருகிறவரே ஒரு குளப்பமான நபர் நான் யாழில் பல ஆண்டுகளிற்கு முன்னரும் கருத்து மோதல்களில் ஈடுபட்டிருக்கிறேன். திடீரென காணாமல் போவார் . பிறகு இப்படி ஈழம் சம்பந்தப் பட்ட சில விடயங்களுடன் திரும் வருவார். அதாவது வானம்பாடியைப்போலவே . வானம் பாடி என்பவரும் செய்தி இணைக்கிறேன் என் தொடங்கி சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தின செய்திகளைஇணைக்கத் தொடங்குவார் பிறகு யாராவது அதை சுட்டிக்காட்டினால் காணாமல் போய்விடுவார். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எமது நியயங்களை எமது மக்களின் அவலங்களை எவ்வளவு தூரம் சர்வதேச சமூகத்திடம் கொண்டு செல்கின்றோமோ அதை அடிப்படையாக வைத்தே இந்திய ஆதரவு உட்பட எதுவும் சாத்தியப்படும்.

சுகன் சொன்ன இதுவே தான் எனது கூற்றும்

இந்தியாவுடன் கடுமையான வழிகளைக் கையாள வேண்டும் என்று எழுதியிருந்தேன். தமிழீழத்தின் இன்றைய அணுகுமுறைக்கு அது எதிரானதாக இருப்பதாகக் கருதி அக் கருத்து நீக்கப்பட்டு விட்டது.

பரவாயில்லை!

"எல்லாவற்றையும் விட முக்கிமான இன்னொரு விடயத்தையும் நாங்கள் இந்த உலகத்திற்குச் சொல்ல வேண்டும்.

இந்த உலகம் எமக்கு இன்று இழைக்கின்ற இந்த அநீதியை தமிழர்கள் என்றும் மறக்கமாட்டர்கள் என்பது தான் அது.

எங்களது ஆன்மாக்களில் இந்தக் காயம் என்றும் ஆறாமல் அப்படியே இருக்கும் என்பதை நாம் இந்த உலகத்திற்குச் சொல்ல வேண்டும்.

எங்களது வேதனையும், எங்களது கோபமும் அப்படியே எம் மனதில் இருக்கும் என்பதை நாம் இந்த உலகத்திற்குச் சொல்ல வேண்டும்.

எங்களது குழந்தைகளுக்கும், குழந்தைகளின் குழந்தைகளுக்கும் நாம் இந்த வரலாற்றைச் சொல்லுவோம்

இந்த உலகம் எங்களை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டு நாங்கள் அழியும் நாளுக்காகக் காத்திருந்தது என்பதை எமது பரம்பரைக்கே சொல்லுவோம் என்பதை நாம் இந்த உலகத்திற்கு உணர்த்த வேண்டும்."

இந்த வரிகள் "ஒரு கடிதம் - போர் முனை" என்ற ஆக்கத்தில் இருக்கின்றது.

சில இடங்களில் எங்களின் கோபத்தை சொல்ல வேண்டிய தேவை எழுகின்றது. முக்கியமாக இந்தியாவிற்கு சொல்ல வேண்டிய அவசியம் வருகின்றது.

தமிழீழ அரசின் இன்றைய அணுகுமுறை வேறாக இருக்கலாம். ஆனால் தமிழீழ மக்களிடம் இந்தியா குறித்த பெரும் கோபம் உருவாகி வருகின்றது என்பதையும், அது நாளை தமிழீழத்தின் அணுகுமுறையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதையும் இந்தியாவிற்கு சொல்வது அவசியம் என்று நினைக்கின்றேன்.

சபேசனின் கருத்தை ஒத்தாகவே நானும் கருதுகிறேன்.

தமிழ் நாட்டிலும் ஒரு பிரபாகரன் உருவாகாமல் இந்தியா தனது கொள்கைகளை மாற்றப் போவதில்லை என்று சொன்ன சீமானுடனும் உடன் படுகிறேன்.தமிழ் நாட்டு மக்கள் தங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் வாதிகளுக்கு எதிராகக் கிளர்ந்து போராடாமால் அவர்கள் மக்களின் எழுச்சியைப் புரிந்து கொள்ளப் பாவதில்லை.ஜனநாயாக ரீதியான மக்களின் போராட்டங்கள் செவி சாய்க்காத போதே வன் முறைப் போராட்டங்கள் உருவாகின்றன.அந்த நிலைக்கே தமிழ் நாடு இனிச் செல்ல இருக்கிறது.இதனை இவர்கள் உணர்வார்கள் போல் தெரியவில்லை.

வாக்கெடுப்பில் தெரிவுகள் மட்டுப்படுத்தப் பட்டவையாகவும், வாக்கெடுப்பு குழப்பகரமானதாகவும் இருப்பதால் கருத்து மூடப்படுகின்றது.

சிறிலங்கா அரசுக்கு அதிக அளவில் இராணுவ உதவி செய்யும் நாடு எது?

அமெரிக்கா [ 6 ] [11.76%]

இந்தியா [ 23 ] [45.10%]

சீனா [ 9 ] [17.65%]

முன்னாள் சோவியத் நாடுகள். [ 0 ] [0.00%]

பாகிஸ்தான் [ 11 ] [21.57%]

ஈரான் [ 2 ] [3.92%]

என்ற கருத்து யாழ்களத்திலுள்ளவர்கள் மத்தியில் இருக்கிறது.

சரி இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை மாற்ற ஏன்ன செய்யலாம்?

பாகிஸ்தான் [ 11 ] [21.57%]

ஈரான் [ 2 ] [3.92%]

பாகிஸ்தானும் .... :wub: ஈரானும் .... :wub: அதிக அளவில் உதவி செய்வதாக கால்வாசிக்கும் '' :wub: '' அதிகமானோர் நினக்கிறார்கள் எண்டால் பிரச்சினையின் வீரியத்தை பாருங்கள்....

smiley-shocked.png

தேசிய தலைமைக்கு மாற்றீடாக கருணா அல்லது டக்ளஸ்(ஆயுததாரிகள் வேண்டாம் எண்றால் சங்கரி) தலைமையை தமிழ்மக்கள் ஏற்று கொண்டால் இந்தியா ஒருவேளை தமிழீழத்தை ஆதரிக்கும்....!!

எல்லாரும் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள முயலுங்கள்.... தேசியத்தலைவரின் வேண்டுகோள் தமிழ் மக்களை அழிக்கும் சிங்களத்துக்கு இந்தியாவோ சர்வதேசமோ மனிதாபிமானமாக நடந்து உதவிகளை நிறுத்த வேண்டும் எங்களை அங்கீகரிக்க வேண்டும் என்பது மட்டுமே...

அங்கீகாரம் என்பது எங்களை எதிரிகளாக கருத்த வேண்டாம், நாங்கள் அமைக்கும் நாட்டை வாழவிடுங்கள் எனும் அடிப்படை சம்பந்தமானது...

எங்களுக்கு ஆயுத உதவிகளோ போராட்ட வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என்பதில்லை.... சுருங்க சொன்னால் உதவி செய்யா விட்ட்டாலும் உபத்திரவம் செய்யாதீர்கள் என்பதாகும்...!!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களின் உரிமைப்போரை பயங்கரவாதக் கிளர்ச்சியாகவும் விடுதலைப்புலிகள் தமிழ்மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் அல்லர் எனவும் இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு விடுதலைப்புலி இயக்கமும் தேசித்தலைவரும் தான் தடையாக இருக்கிறது என்று உலகுக்கு காட்ட சிங்களப் பேரினவாதிகள் எடுக்கும் பரப்புரை முயற்சிகளுக்கு பல சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் காதுகொடுத்து வருகின்றன என்பதாகவே நான் தற்போது அவதானிக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.