Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வியக்க வைக்கும் பச்சைத் தேநீர் !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியக்க வைக்கும் பச்சைத் தேநீர் !!

greenteapackcu6.jpg

ஒரு டீ குடுங்க என கடைக்காரரிடம் கேட்டு அவர் இரண்டரை இஞ்ச் குவளையில் நீட்டும் தேனீரை சுவைத்துக் குடிக்கும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் கிரீன் டீ என அழைக்கப்படும் பச்சைத் தேநீர் பற்றி ?

நிமிடத்துக்கு பத்து என விளம்பரங்களில் தலைகாட்டும் தேநீர்களின் பெயர்களைக் கேட்டுக் கேட்டுக் குழம்பிப் போயிருக்கும் நம்மில் பலருக்கும் தெரியாமலே போய்விட்ட ஒன்று தான் இந்த பச்சைத் தேநீர்.

இந்தத் தேனீரில் மகத்துவமே இருக்கிறது என ஆராய்ச்சிகள் வியந்து பேசுகின்றன என்பது தான் இந்தத் தேனீரைப் பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது என நானும் நினைப்பதற்குக் காரணம்.

இந்தத் தேனீரை அருந்தி வந்தால் உடல் பருமனாவதிலிருந்து தப்பலாம் எனவும், இந்த கிரீன் டீ உடலிலுள்ள இன்சுலின் சுரக்கும் தன்மையை வலிமைப்படுத்தும் எனவும் யூகேவின் பர்மிங்காம் பல்கலைக்கழகம் பச்சைத் தேநீர் பற்றி வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவிலிருந்தே துவங்குகிறேன்.

சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தேநீர் அருந்தத் துவங்கி விட்ட சீனாவில் தான் இந்த பச்சைத் தேனீரும் முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதே பெரும்பாலானோரால் ஒத்துக் கொள்ளப்பட்ட பச்சைத் தேநீர் வரலாறு. எனினும் சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் இந்தியா வில் இந்த பச்சைத் தேநீர் மிகப்பழங்காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதே பரவலான நம்பிக்கை.

எதற்குப் பயன்படுத்தினார்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யமானது. உடலில் காயம் ஏதேனும் ஏற்பட்டால் குருதி வழிதலைக் கட்டுப்படுத்தவும், காயத்தை ஆற்றவும், உடலின் வெப்பத்தை சமநிலைப்படுத்தவும், செரிமானத்தன்மையை அதிகப்படுத்தவும் மற்றும் குருதி சர்க்கரை அளவை மட்டுப்படுத்தவும் இந்த பச்சைத் தேநீர் பயன்படுத்தப்பட்டு வந்ததாம்.

“தி கிஸா யோஜோக்கி” ( பச்சைத் தேநீர் ) எனும் நூல் தான் பச்சைத் தேனீருக்கு இருக்கும் மகிமையை வியக்க வியக்க விவரிக்கும் முதல் நூல். இந்த நூலை எழுதியவர் ஒரு ஜென் துறவி. இவர் பச்சைத் தேனீரைக் குறித்து இந்த நூல் முழுக்க எழுதியிருப்பதைப் பார்த்தால் இந்த பச்சைத் தேநீர் ஒரு சர்வரோக நிவாரிணி என்பது போன்ற பிரமிப்பு உருவாகிறது.

உடலின் மிக முக்கியமான ஐந்து உறுப்புகளுக்கு இந்த பச்சைத் தேநீர் எப்படியெல்லாம் பயன்படுகிறது என ஒரு கைதேர்ந்த மருத்துவரைப் போல இவர் விரிவாக விவரித்துள்ளார். குறிப்பாக இதயத்துக்கு பச்சைத் தேநீர் ஒரு வரப்பிரசாதமாம். இந்த நூல் வெளியான ஆண்டு 1191.

பச்சைத் தேனீரைக் குறித்த மருத்துவப் பயன்களில் பல நிரூபிக்கப்பட்டவை, சில நிரூபிக்கப்படாத நம்பிக்கைகள். அந்த நம்பிக்கைகள் மறுக்கப்படவும் இல்லை என்பதே நம்பிக்கையுடன் பச்சைத் தேனீரை நோக்கி நம்மை அணுக வைக்கிறது.

அல்சீமர், பார்கின்ஸன் என மருத்துவ உலகம் அச்சத்துடன் அணுகும் அதிபயங்கர நோய்கள் வராமல் தடுக்கும் வலிமை பச்சைத் தேனீருக்கு இருக்கிறதாம்.

பற்களைப் பாதுகாக்கிறது என்பது முதல் புற்று நோய் வராமல் தடுப்பது, மாரடைப்பு வராமல் தடுப்பது என உயிர்க்கொல்லி நோய்களுக்கு எதிராகவும் பச்சைத் தேநீர் நிமிர்ந்து நிற்கிறது என ஆங்காங்கே பச்சைத் தேனீரைக் குறித்துக் கிடைக்கும் தகவல்கள் பிரமிப்பூட்டுகின்றன.

நியூயார்க் பத்திரிகையாளர் ஜாய் பானர், பச்சைத் தேநீர் மூளையின் வினையூக்கியாகச் செயல்படுகிறது, மூளையை சுறுசுறுப்புடனும் வலிமையுடனும் வைத்திருக்க உதவுகிறது என குறிப்பிடுகிறார்.

தினமும் ஐந்து கோப்பை பச்சைத் தேநீர் அருந்தி வந்தால் உடலிலிருந்து தேவையற்ற கொழுப்பு கரையும் என்கின்றனர் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள். உடற்பயிற்சிக் கூடத்தில் அரை மணி நேரம் ஓடுவதும் ஐந்து கோப்பை தேநீர் அருந்துவதும் ஒரே அளவு கலோரிகளைக் கரைக்கும் என்பது அவர்களது ஆராய்ச்சி முடிவு.

ஆறு வாரங்கள் நீங்கள் காபியை விரட்டி விட்டு பச்சைத் தேனீரை அருந்தி வாருங்கள் உங்கள் உடல் எடை நான்கு கிலோ குறையும் என வியக்க வைக்கிறார் மருத்துவர் நிக்கோலர் பெரிகோன்.

அமெரிக்க புற்று நோய் ஆராய்ச்சிக் கூடம் வெளியிட்ட அறிக்கை ஒன்று பச்சைத் தேனீருக்கு புற்று நோயைத் தடுக்கும் வலிமை உண்டு என மருத்துவர் ஹான் சியோ மூலமாக மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதேபோல அமெரிக்க மருத்துவக் கழக பத்திரிகை 1996 செப்டம்பர் 13 இதழில் பச்சைத் தேநீர் இதயம் சார்ந்த நோய்களைத் தடுக்கும் வலிமை கொண்டது என ஆய்வு முடிவு வெளியிட்டிருந்தது.

நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் அதிகப்படுத்துவதிலும், உயர் குருதி அழுத்தத்தைக் குறைப்பதிலும் தலை சிறந்தது பச்சைத் தேநீர் என்கின்றன சீன ஆய்வுகள். எல்லாவற்றுக்கும் மேலாக ஹைச்.ஐ.வி எனப்படும் எயிட்ஸ் கிருமி உடலின் டி-அணுக்களைப் பாதிக்காமல் பச்சைத் தேநீர் தடுக்கும் எனும் நிரூபிக்கப்படாத நம்பிக்கையும் மருத்துவ உலகில் நிலவுகிறது.

உடல் சார்ந்த இத்தகைய பயன்களோடு மன அழுத்தம் போன்றவற்றைக் குறைக்கும் வலிமை கூட பச்சைத் தேனீருக்கு உண்டு என ஒரு ஆராய்ச்சி வியக்க வைக்கிறது.

சற்றே மருத்துவ வாசனையில் சொன்னால், பச்சைத் தேனீரில் இருக்கும் எப்பிகலோகாட்ஸின் காலேட் ( EGCG ) எனப்படும் நச்சுத் தன்மையை எதிர்க்கும் பொருள் தான் பச்சைத் தேனீரை மருத்துவக் குணம் வாய்ந்த ஒன்றாக மாற்றுகிறது எனலாம். இந்தப் பொருள் தான் புற்று நோய் வர விடாமல் தடுப்பதுடன், உடலின் கொழுப்பைக் கரைத்தும், குருதிக் குழாய்களின் அடைப்பைக் கரைத்தும் உடலை ஆரோக்கியமாய் வைத்திருக்க உதவுகிறது.

எழுபத்தைந்து விழுக்காடு மக்களும் புகைக்கு அடிமையாகி இருக்கும் ஜப்பானில் இதய நோயாளிகள் குறைவாகவே இருக்கிறார்களே !!! ஏன் ? ஏன் ? அது ஏன் ?? எனும் மருத்துவ வினாவுக்குப் பின்னால் புன்னகைத்துக் கொண்டிருப்பது இந்த பச்சைத் தேநீர் தான்.

கெமீலியா சைனாஸிஸ் என தாவரவியல் பெயரிட்டழைக்கும் இந்த தேயிலை மரத்திலிருந்து வேறு சில தேநீர் வகைகள் தயாரிக்கப்படுகின்றன என்றாலும் தயாரிப்பு முறையினால் இந்த பச்சைத் தேநீர் அதிக மருத்துவ குணம் வாய்ந்ததாகி விடுகிறது.

சரி இந்தப் பச்சைத் தேனீரில் சிக்கல்களே இல்லையா என நீங்கள் கேட்பது புரிகிறது. உண்டு ! ஒரே ஒரு சிக்கல். பச்சைத் தேனீரிலும் காபியில் இருப்பது போன்ற காஃபைன் எனும் நச்சுத் தன்மை உண்டு. ஆனால் காபியுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது என்பதே சற்று நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கும் செய்தி.

ஒரு நாளைக்கு எத்தனை கோப்பை பச்சைத் தேநீர் அருந்தலாம் என்பதற்கும் பல்வேறு ஆய்வுகளும் பல்வேறு விதமான பதில்களைச் சொல்கின்றன. எல்லா ஆய்வுகளையும் கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப் பார்த்தால், தினமும் நான்கு அல்லது ஐந்து கோப்பை பச்சைத் தேநீர் அருந்துவது சாலச் சிறந்தது எனும் முடிவுக்கு வரமுடிகிறது.

இதயம், நுரையீரல், குருதி, எலும்புகள் என உடலின் எல்லா பாகங்களுக்கும் நன்மையை விளைவித்து இந்தப் பச்சைத் தேநீர் தலை நிமிர்ந்து…. மன்னிக்கவும் இலை நிமிர்ந்து நிற்கிறது !

http://xvi.wordpress.com/2009/01/05/greentea/

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள தகவல் பதிவுக்கு நன்றி

.என் நண்பி சொல்லி நான் இந்த தேநீர் குடிப்பது உண்டு.

நான் நினைச்சன் தேநீரின் நிறம் பச்சையாக இருக்குமாக்கும் அதுதான் பச்சை தேநீர்

என்று போட்டிருக்கு என்டு . வந்து பார்க்கத்தான் என்ன விசயம் என்டு விளங்குது

தகவலுக்கு நன்றி. நானும் அறிந்து இருந்தேன் கிறீன் ரீ உடலுக்கு நல்லம் என்டு

நான் இவ்வளவு நாளும் ஒரு கோப்பை தான் குடிக்கிறனான் இனி 4 அல்லது 5 தரம்

குடிக்க முயற்சி செய்யுறன்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அறிந்து இருந்தேன் கிறீன் ரீ உடலுக்கு நல்லம் என்டு

நான் இவ்வளவு நாளும் ஒரு கோப்பை தான் குடிக்கிறனான் இனி 4 அல்லது 5 தரம்

குடிக்க முயற்சி செய்யுறன்.

அத்துடன் பச்சைத் தேநீரிக்குடிக்கப் பழகுவதினால் சிறிலங்காவின் டில்மாத் தேநீரைக் குடிப்பதை நிறுத்த வாய்ப்பும் இருக்கிறது. இதனால் சிங்கள தேசத்துப் பொருட்களில் ஒன்றைப் புறக்கணிக்கும் சந்தர்ப்பத்தை அடைவீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் நல்ல தகவலாக இருக்கிறது. உபயோகித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள தகவல் பதிவுக்கு நன்றி

இணைப்பிற்கு நன்றி... என்ன விலைதான் கொஞ்சம் அதிகம்!

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை தேநீரில் பலவகை உண்டு அரேபியர்கள் அதிகம் தேநீர் குடிப்பார்கள் என்று எல்லோருக்கும் தெரியும் இவர்கள் பலவகை தேநீர் அருந்துவார்கள்

இதே போல் புதினாவால் செய்த தேநீர் பைகளும் உண்டு இதற்க்கும் GREEN TEA

அடுத்தது சாத்தர் என்பார்கள் அரபி பெயர் என நினைக்கிறேன் சாதரண தேநீர் தயாரிப்பது போல் பைகளில் உள்ளது சுடு நீரில் போட்டு எடுத்தால் நன்றாக இருக்கும் பயன் அடிக்கடி சலம் போகும்ZATER :)

அடுத்தது லெமன் ரீ இதே போல்தான் தேசீ இலைகளும் இன்னும் சில இலைகளினாலும் செய்திருப்பார்கள் வாசனை என்றால் சொல்ல தேவை யில்லைLEMON TEA :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாப் பிரயோனப்படும் போல இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுணா அண்ணா,

நல்ல தகவல் எனக்கு முகப்பரு காரணமாக என்னுடைய குடும்ப/நண்பர் வைத்தியர் ஒருவர் இதைப்பரிந்துரை செய்தார் கடந்த வைகாசி மாதம். முதலில் பழக்கப்படுத்த கொஞ்சம் கடினமாகவே இருந்தது. ஆனால் உடலுக்கு நல்லம் என்பது மனதில் பதிந்துவிட்ட படியால் சுடுநீரில் ஊறப்போட்டு கொஞ்சம் கொஞ்சமாய் பழக்கப்படுத்திக்கொண்டேன். அதன்பிறகு 'எங்கள் பால்தேனீர் குடிக்க மனசே வரவில்லை. காலையில் ஒரு தடவை நிச்சயம் குடிப்பது உண்டு. எனக்கு உடல் எடையில் மாற்றம் ஏதும் தெரியவில்லை. குறைந்ததாக ஆனால் எடை கூடவும் இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.

இதைக்குடிக்க முன்னர் பல ஆராய்ச்சித்தகவல்களை கூகுள் மூலம் தேர்ந்தெடுத்து வாசித்தேன். தற்போது எனக்கு விருப்பமே பச்சைத்தேனீர்" என்று சொல்லுமளவிற்கு என்னை ஆக்கிரமித்துவிட்டது.

நன்றி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பச்சைத் தேநீர் தயாரிக்கும் போது பெட்டியில் குறிக்கப்பட்ட நேரம் தான் அதை சுடுநீரில் வைக்க வேண்டும்.

அதை அதிக நேரம் வைப்பதால் அதன் மருத்துவ குணங்களை இழந்து விடுகிறது என்பதைப் பற்றி வாசித்து இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை தேனீர் உணவு செமிபாட்டுக்கு நல்லம்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நுனா!!! நான் இதை அடிக்கடி அருந்துவதுண்டு. அதுவும் சீனி சேர்க்காமல் சூட்டோடு சர்க்கரையைக் கடித்துக்கொண்டு குடிக்க சுவையாக இருக்கும்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி நுனா!!! நான் இதை அடிக்கடி அருந்துவதுண்டு. அதுவும் சீனி சேர்க்காமல் சூட்டோடு சர்க்கரையைக் கடித்துக்கொண்டு குடிக்க சுவையாக இருக்கும்!!!

சீனியோ, சர்க்கரையோ சேர்க்காதீங்கோ....சுவி அவர்களே..

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை தேநீரை கடைகளில் கண்டுள்ளேன் , ஆனால் அது எப்படி இருக்கும் என்ற யோசனையில் இது வரை வாங்கவில்லை .

இந்த பதிவையும் , அதற்கு வாசகர்கள் கூறிய கருத்துக்களையும் , பார்த்தபோது நிச்சயம் அடுத்தமுறை பச்சை தேநீர் வாங்குவேன் .

பச்சை தேநீரை கடைகளில் கண்டுள்ளேன் , ஆனால் அது எப்படி இருக்கும் என்ற யோசனையில் இது வரை வாங்கவில்லை .

இந்த பதிவையும் , அதற்கு வாசகர்கள் கூறிய கருத்துக்களையும் , பார்த்தபோது நிச்சயம் அடுத்தமுறை பச்சை தேநீர் வாங்குவேன் .

இந்த தேனீரை நான் ஒரு மாதமாக பாவிக்கின்றேன் பலனும் அடைந்துள்ளேன் நான் பாவிப்பது லிப்டன் தேயிலை. கிட்டதட்ட ஒன்பது றாத்தல் வரை குறைந்துவிட்டேன்.தொப்பை நீங்குவதுதான் கடினமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேனீரை நான் ஒரு மாதமாக பாவிக்கின்றேன் பலனும் அடைந்துள்ளேன் நான் பாவிப்பது லிப்டன் தேயிலை. கிட்டதட்ட ஒன்பது றாத்தல் வரை குறைந்துவிட்டேன்.தொப்பை நீங்குவதுதான் கடினமாக இருக்கிறது.

பேசாமல் அறுத்து விடுங்கள் சும்மா சொன்னேன்

அதிகாலையில் எழுந்தவுடன் நீங்கள் உங்கள் படுக்கையில் [நிலத்தில்,கட்டிலில் இல்லை வானத்தை பார்த்தவாறு மல்லாக்க படுத்தவாறு] உங்கள் தலையை உயர்த்தி காலயும் கொஞ்சம் தூக்கிகொள்ளுங்கள் பின்பு உங்கள் கால்களை கொஞ்சம் சைக்கில் ஓட்டுவது போல் ஒவ்வொரு நாளும் செய்யுங்கள் தொப்பை காணாமல் போய்விடும்

1) அதே நேரத்தில் தலையை துக்கியவாறு விரித்து விரித்து ஒடுக்குங்கள் கால்களை

2)நீட்டிய காலை உங்கள் நெஞ்சுக்கும் உள்வாங்கி கொள்ளுங்கள் வயிறு வற்றிவிடும் முதல் இருநாட்களில் வயிறு வலியாக இருக்கும் வலி பின்பு இறுகிவிடும் வயிறு முனிவர் உடற்பயிச்சியில கொஞ்சம் அதிகம் அக்கறை கொண்டவர் :rolleyes::mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தேனீரை நான் ஒரு மாதமாக பாவிக்கின்றேன் பலனும் அடைந்துள்ளேன் நான் பாவிப்பது லிப்டன் தேயிலை. கிட்டதட்ட ஒன்பது றாத்தல் வரை குறைந்துவிட்டேன்.தொப்பை நீங்குவதுதான் கடினமாக இருக்கிறது.

-உங்கள் பாதணி நாடாவை குனிந்து கொண்டு கட்டுங்கள்; உயரமான இடத்தில் உங்களுக்கு வாகாகத்தூக்கி வைத்துக்கொண்டு கட்டாதீர்கள்

- தொலைக்காட்சி பார்க்கும் போது அதை மட்டும் பாருங்கள் வாயுக்குள் நொறுக்குத்தீனி போடாதீர்கள் அதுவும் எண்ணெயில் பொரித்த/வறுத்த எந்தப்பொருளுகும் 'வேண்டாம்" என்று உறுதிபடச்சொல்லுங்கள்

- எழுந்து போய் தொலைக்காட்சியை நிற்பாட்டுங்கள்

-வாளியில் நீர் நிறைத்து கோப்பையால் அள்ளி அள்ளிக்குளியுங்கள்

-குடைந்து நெளிந்து படுக்காமல் கைகால்களுக்கு ஓய்வு கொடுக்குமாறு படுங்கள். இரவு படுக்கை ஆடை கொஞ்சம் தளர்வாக இருப்பது நல்லது வயிற்றை இறுக்கும் ஆடைகள் கூடாது.

- கோக்/பெப்சி போன்ற வாயு அதிகம் கொண்ட பானங்களை அறவே தவிர்த்து விடுங்கள்

-உங்கள் ஆடைகளை நீங்களே தோயுங்கள்/துவையுங்கள் பெண்கள் மட்டுமல்ல வீட்டில் ஆண்களும் சுத்தம் செய்யலாம்/கூட்டலாம் குப்பை இருந்தால் குனிந்து பொறுக்கி அதை குப்பைத்தொட்டியில் போடுங்கள்.

"தொப்பை தொலைதூரம் ஓடிவிடும்"

நன்றே செய்யுங்கள் அதையும் இன்றே செய்யுங்கள்'

  • கருத்துக்கள உறவுகள்

-உங்கள் பாதணி நாடாவை குனிந்து கொண்டு கட்டுங்கள்; உயரமான இடத்தில் உங்களுக்கு வாகாகத்தூக்கி வைத்துக்கொண்டு கட்டாதீர்கள்

- தொலைக்காட்சி பார்க்கும் போது அதை மட்டும் பாருங்கள் வாயுக்குள் நொறுக்குத்தீனி போடாதீர்கள் அதுவும் எண்ணெயில் பொரித்த/வறுத்த எந்தப்பொருளுகும் 'வேண்டாம்" என்று உறுதிபடச்சொல்லுங்கள்

- எழுந்து போய் தொலைக்காட்சியை நிற்பாட்டுங்கள்

-வாளியில் நீர் நிறைத்து கோப்பையால் அள்ளி அள்ளிக்குளியுங்கள்

-குடைந்து நெளிந்து படுக்காமல் கைகால்களுக்கு ஓய்வு கொடுக்குமாறு படுங்கள். இரவு படுக்கை ஆடை கொஞ்சம் தளர்வாக இருப்பது நல்லது வயிற்றை இறுக்கும் ஆடைகள் கூடாது.

- கோக்/பெப்சி போன்ற வாயு அதிகம் கொண்ட பானங்களை அறவே தவிர்த்து விடுங்கள்

-உங்கள் ஆடைகளை நீங்களே தோயுங்கள்/துவையுங்கள் பெண்கள் மட்டுமல்ல வீட்டில் ஆண்களும் சுத்தம் செய்யலாம்/கூட்டலாம் குப்பை இருந்தால் குனிந்து பொறுக்கி அதை குப்பைத்தொட்டியில் போடுங்கள்.

"தொப்பை தொலைதூரம் ஓடிவிடும்"

நன்றே செய்யுங்கள் அதையும் இன்றே செய்யுங்கள்'

இப்படி செய்தால் ஒரு வருடத்திற்க்கு பின்புதான் தமிழ் தங்கை :rolleyes::mellow::unsure:

இப்படி செய்தால் ஒரு வருடத்திற்க்கு பின்புதான் தமிழ் தங்கை :rolleyes::mellow::unsure:

வருட ஆரம்பம் என்கிறபடியால் முடிவோடு முயற்சி செய்கிறேன்.தற்போது முடியாது.னாட்டு நிலமை காரணமாக கொஞ்சம் பிஸி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!!

on 16-01-2009 14:54

கிரீன் டீ (Green Tea) ஒரு அற்புதமான தேநீர். இதை தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் உடம்பில் எந்த ஒரு நோயும் அண்டாது. முக்கியமாக கேன்செர் (Cancer), கொலஸ்டரால் (Cholesterol) இருதைய நோய் (Cardiac Deceases), நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் (Diabetics) . கிரீன் டீயில் இருக்கும் பாலிஃபீனால்ஸ் (Polyphenols) + ஆன்டிஆக்ஸிடன்ட் (Antioxidant) உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிறது. கிரீன் டீயில் பலவகை உள்ளது. அதில் ஜபநீஸ் கிரீன் டீ, சைனீஸ் கிரீன் டீ தான் மிகவும் பிரபலமானது. இன்று எல்லாக் கடைகளிலும் கிரீன் டீ கிடைக்கிறது.

முக்கால் வாசி போலியானவைகளே. கிரீன் டீ வாங்கும் பொழுது நல்ல தரமானதாக வாங்கவேண்டும் . வாங்கும் பொழுது ஆர்கானிக் கிரீன் டீ (Organic) வாங்குங்கள். டீயை ரொம்ப நாள் வைத்து இருந்தால் அதன் சுவை மாறி விடும். கொஞ்சம் கொஞ்சமாக வாங்க பழகி கொள்ளுகள். முன்பெல்லாம், இந்தியா (india), சீனா (china), ஜப்பான் (Japan), மற்றும் தைவான் (Taiwan) ஆகிய நாடுகள்தான் கிரீன் டீயை உற்பத்தி செய்தார்கள். தற்போது ஐரோப்பிய நாடுகளும் (European Countries) கிரீன் டீ உற்பத்தி செய்து வருகிறது.

கேமெலியா சினென்சிஸ் (Camellia sinensis) என்ற செடிகளில் இருந்துதான் கிரீன் டீ தயாரிக்கப்படுகிறது. கிரீன் டீ மிதமான சூட்டில் மாத்திரமே தயார் செய்யவேண்டும். அதிக சூட்டில் கிரீன் டீ தயாரித்தால் அதன் அசல் சுவை மாறிவிடும். அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் போதுமானது. பொதுவாக கிரீன் டீ பருகுவதற்கு சுவையாக இருக்காதென ஒரு கருத்து நிலவுகிறது. உண்மைதான் ஆனால் சில நாட்கள் பழகிவிட்டால் அந்தச் சுவைகூடப் பிடித்துவிடும். பியர் (Beer), விஸ்கி (Whiskey) மற்றும் பிராந்தி (Brandy) போன்ற மதுபானங்கள் கூட குடிப்பதற்கு சுவையாகவா இருக்கிறது. ஆனால் அதை விரும்பி, நாம் நாளைடைவில் குடிப்பதில்லையா? (உடனே நான் குடிப்பேனா? எனக் கேட்காதீர்கள்! நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்!) ஆனால் அவை உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடியவை. அவை மாத்திரமல்ல குளிர்பானங்கள் போர்வையில் வெளிவரும் கோக், பெப்ஸி போன்றவைகளும் உடலுக்குக் கேடு விளைவிப்பவைகள்தான்.

இந்த கிரீன் டீயில் வேண்டுமானால் கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலை கொஞ்சம் கலந்தோ அல்லது சிறிது சர்க்கரை கலந்தோ ஆரம்பத்தில் பருகலாம். பிறகு முழுக்க முழுக்க ஏதும் கலக்காத கிரீன் டீயை பருகுவதே நல்லது. இன்றைய எந்திர யுகத்தில் நமது முகம், தோல் போன்றவை விரைவில் சுருக்கம் விழுந்து 5-6 ஆறு வயது அதிகமாகத் தெரிகிறதல்லவா? அவற்றைப் போக்கி, அதாவது முன்கூட்டிய முதிர்ச்சியைப் போக்கி (Ante-Aging) இளமையாக இருப்பதற்கு இன்றைய வியாபார உலகத்தில் வந்திருக்கும் அழகு சாதனப்பொருட்களில் 90 சதம் கிரீன் டீ சேர்த்தே தயாரிக்கப்படுகிறது. அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் (Anti-Oxidant) தோல் சுருக்கத்தைப் போக்குகிறது. வயிற்றுப் புண் (Ulcer) மற்றும் அமிலத்தன்மை பிரச்சினைகள் (Acidity) இருப்பவர்கள் கிரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி இந்த கிரீன் டீயில் கஃபைன் (Caffeine) என்ற கெட்ட தாதுப்பொருள் குறைந்த சதவிகிதத்தில் உள்ளது. ஆனால் சாதாரணமாக நாம் அருந்தும் காஃபியில் (Coffee) இருக்கும் அளவைவிடக் குறைவாகவே உள்ளதாக ஆராய்ச்சிக் குறிப்பொன்று தெரிவிக்கிறது. எனவே இந்த கிரீன் டீயை (Green Tea) தைரியமாக நாம் அருந்தலாம்.

அதிகாலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.