Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மத்திய அரசு ஈழத்தமிழரை வெறுப்பதற்கு காரணம் என்ன?

இந்திய மத்திய அரசு ஈழத்தமிழரை வெறுப்பதற்கு காரணம் 50 members have voted

  1. 1. இந்திய மத்திய அரசு ஈழத்தமிழரை வெறுப்பதற்கு காரணம் (ஒன்றிற்கு மேற்பட்ட பதில்களுக்கும் வாக்களிக்கலாம்.)

    • இராஜிவ் காந்தி மரணம்.
      11
    • வட இந்தியருக்கு தமிழரை பொதுவாக பிடிக்காது.
      20
    • தமிழ் ஈழம் உருவானால் தமிழ்நாடு பிரியலாம் என்ற பயம்.
      27
    • தமிழ் ஈழம் இந்தியாவிலும் பார்க்க பலம் பொருந்திய நாடாகும் என்ற பயம்.
      11
    • தமிழ் ஈழம் இந்தியாவிற்கு எதிரான நாடுகளுடன் அணைந்து செயற்படும் என்ற எண்ணம்.
      1
    • வேறு காரணங்கள்.
      7

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மத்திய அரசு தொடர்ச்சியாக ஈழத்தமிழருக்கு எதிராக செயற்பட்டு வருகிறது. இது பற்றிய சிந்தனையை தூண்டுவதே இந்த வாக்கெடுப்பின் நோக்கமாகும்.

இந்தியாவின் உண்மையான பயம் தமிழன் வென்று விடுவானோ? என்பது தான். ஆனாலும், நட்பு கொள்ள வேண்டிய நிலை, அடக்கி வாசித்து நண்பனாக்குவோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜீவின் கொலை ஒரு காரணமல்ல. ஆனால் அதனை ஏதுவாகவைத்து சாதிக்கிறார்கள். அண்மையில் ஒரு தளத்தில் வாசித்தது. ரஜீவ் மரணிக்கும் போது அவர் பிரதமரே அல்ல. அந்த சமையம் காபந்து அரசு தான் இருந்ததாம்.

தமிழீழம் உருவாகினால் தமிழகம் நம்முடன் இணைந்திடும் என்ற பயம். தவிர இந்தியாவை ஆழ்வது அரசோ அல்லது இனமோ அல்ல. சாதிகள் தான். அதனால் தான் எவ்வளவு ஆதரவுக்கரங்களை கண்டாலும் பிரயோசனம் இல்லாமல் போய்விடுகிறது. உயர் பதவியில் இருக்கும் அவர்கள் அனைத்தையும் முடக்கிவிடுகிறார்கள்.

எல்லாம் நல்லவைக்கே என்ற எண்ணத்துடன் காத்திருப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம் ஆதரவின்றி புதிய நாடு உலகில் உருவாகக் கூடாது என்பதே இந்திய, அமெரிக்க நாடுகளின் நிலைப்பாடு. UDL (Unilateral Declaration of Indeprnence) என்ற ஐ.நா. விதி இருந்தாலும் அங்கீகாரம் பெற்ற அனைத்து நாடுகளின் நிலைப்பாடும் அதுவே.

தமிழீழம் இந்தியாவுக்கு எதிராக அமையும் என இந்திரா காந்தி நினைக்கவில்லை. அவரது மறைவுக்கு பின் நிலை மாறியது. தமிழகத்தில் சிலர் அகன்ற தமிழகம் எனப்பது போன்று பேசிய பேச்சுகளும் ,சில இயக்கங்கங்கள் இந்தியாவுக்கு எதிரான கமியூனிச நாடுகளை பின்பற்றத் தொடங்கிமையும் ஒரு சில காரணங்களாக இந்தியாவை ஆரம்பத்தில் சிந்திக்க வைத்தது.

இலங்கை ஜனாதிபதி ஜேஆரின் ராஜதந்திர குள்ளநரித்தனத்துக்குள் அகப்பட்ட ராஜிவ் இந்தியா விரும்பும் ஒரு தீர்வை தமிழருக்கு திணிக்க முற்பட்டதால் அந்த உறவு முறிவுக்கு வந்தது. ராஜீவ் படுகொலை இந்தியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இமாலயத் தவறாக கருதவைத்து விட்டது. அதைத்தவிர வேறு குற்றச்சாட்டுகள் இலங்கை தமிழரிடம் முன்வைக்க எதுவுமேயில்லை. எனவே ராஜீவ் படுகொலையை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறது டில்லி.

பீஜேபீ ஆட்சிக்கு வந்தால்?..... மாறலாம்.

தவிரவும் தமிழகம் பிரிவதற்கு தமிழீழம் ஒரு காரணமாகிவிடும் எனும் அச்சம் டில்லியிடம் : குறிப்பாக பாதுகாப்பு துறையில் இருக்கவே செய்கிறது. எனவே இந்தியாவை எதிர்த்து உலக நாடுகள் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது. இதுவே கொடுமை.

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தியின் மரணத்துக்கு முன்பே , அவர்கள் எங்களுடன் திரை மறைவில் தான் விளையாடியவர்கள் .

அவர்களுக்கு தமிழனை பிடிக்காது .

இந்திய மத்திய அரசு ஈழத்தமிழரை வெறுப்பதற்கு காரணம் என்ன?

1. ஈழத்தமிழர் சார்பாக நடந்து கொண்டால் சிறிலங்கா தனது எல்லைக்கப்பால் சென்றுவிடும் என்பது முதற்காரணம்.

2. சிறிலங்கா சார்ந்த செயற்பாட்டால் தனது எதிரி நாடுகளின் ஊடுருவல்களை ஓரளவேனும் கட்டுப்படுத்தலாம்.

3. விடுதலைப்புலிகள் பிராந்தியத்தின் பலமான சக்தியல்ல.

ஈழத்தை இந்திய காங்கிரஸ் அரசு வெறுப்பதுக்கு வேறு காரணங்கள்தான் உண்டு.... இராசீவ் மரணம் என்பது ஒரு சாட்டு மட்டுமே...

1- விடுதலை புலிகளை அவர்களுக்கு சுத்தமாக பிடிக்க வில்லை... புலிகள் தங்களுக்கு மண்டி இடவில்லை பிச்சை கேட்க்க வில்லை என்பதுடன் தங்களின் பழய கனவை கலைத்த புலிகளை அவர்கள் மன்னிப்பதாக இல்லை...

2- 100% பழமை வாதிகளான முதியவர்களை கொண்ட காங்கிரஸ் அரசில் பழைய கசப்பை நன்கு உணர்ந்தவர்கள்தான் இப்போதும் பொறுப்பில் இருக்கிறார்கள்...

3- புலிகளை வளர்த்து தங்களின் நலன்களை காப்பதை விட இலங்கை அரசின் கால்களின் விழுந்து காப்பது இலகுவானதாக இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திப்பது...

சோனியாவின் கையில் ஆட்ச்சி இருப்பபது தான் காரணம்

சிங்களவனை சுலபமாக ஏமாற்றலாம் தமிழனை ஏமாற்ற முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

பிராந்திய ரீதியாகாக இலங்கை முக்கிய இடத்தில் இருப்பதால் எல்லோருக்கும் குறீப்பாக இந்தியா இலங்கை மீது கண் வைத்துள்ளது.குறீப்பாக திருகோணமலை துறைமுகம் மீது அது தமிழ் மக்களூக்கு ஈழம் கிடைத்தால் எப்போதும் கிடைக்காமல் போய் விடும் என்ற பயம் தான் காரணம்.

என்னகாரணாமாகவும் இருக்கலாம் எல்லாம் சேர்ந்த காரண்மாகவும் இருக்கலாம்...

ஆனாலும் இந்தியாவைச்சுத்தி இந்தியாவுக்கு நட்புநாடுகள் குறைவு..... அதுக்கு இந்தியாவே காரணம்.

இந்திய மத்திய அரசு ஈழத்தமிழரை உண்மையாகவே வெறுப்பதென்றால் இன்னும் எவ்வளவோ பெரிய சக்தியை போராட்டத்திற்கு எதிரான திசையில் இறக்கிவிடலாம். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. இந்தியா சிங்களத்திற்கு செய்யும் இராணுவ உதவிகள் மட்டுப்படுத்தப் பட்டவை. இதனால் போராட்டத்திற்கு சில பெரிய நன்மைகளும் உண்டு. உதாரணமாக சீனா , பாகிஸ்த்தான் போன்றவற்றின் நேரடித்தலையீடுகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

இந்த சிங்களத்திற்கான இந்திய உதவி சிங்களவன் கேட்டு கிடைத்ததல்ல. இந்தியா தன்னை வலுக்கட்டாயமாக நுழைத்துக்கொண்ட ஒன்று. ( மற்றவர்களை விலத்துவதற்கு ) இதன் மூலம் உண்மையில் இந்தியா போராட்டத்திற்கு ஒரு வெளிப் பாதுகாப்பு வட்டமாகத்தானிருகின்றது.

இந்தியாவின் இராணுவ உதவி திரை மறைவில் தான் நடக்கின்றது. இதிலிருந்து இந்தியாவின் நடவடிக்கைகள் ஒரு எல்லையைத் தாண்டப் போவதில்லை என்பது தெளிவு. எனவே புலிகள் இந்திய யுத்தம் என்ற ஒன்று இனிமேல் இல்லை.

தமிழ் ஈழம் வந்தால் தமிழகம் பிரிந்துவிடும் என்று இந்திய கொள்கை வகுப்பாளர்கள் நினைப்பதற்கு காரணம் எதுவும் இல்லை. இதைப்பற்றி ஏற்கனவே பல முறை அவர்கள் ஆராய்ந்து பார்த்திருப்பார்கள். தமிழ் நாடு பிரிந்து போவதற்கு ஏதுவான காரணிகள் அங்கு இல்லை என்று அவர்களுக்குத் தெரியும்.

ஈழத்திற்கு ஆதரவான இரண்டு பலமான சக்திகள் இந்தியாவில் உண்டு. ஒன்று தமிழ் நாடு. மற்றது பா.ஜ.க. இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட மூன்றாவது நாடு உலகத்தில் தோன்றுவது வி.எச்.பி. இற்கு இனிப்பான செய்தி. அவர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். இது செயலிலும் இருக்கும்.

இந்தியாவின் தலையிடி, ஒருபுறம் தமிழ்நாடு மறுபுறம் எதிரிகளிடம் சரணடைவேன் என்னும் சிங்கள நாடு. இவற்றைச் சமாளித்துக்கொண்டு இந்தியா இராஜதந்திரத்தை நகர்த்துகின்றது.

எந்த நாடு எதிர்க்கின்றதோ இல்லையொ, களத்தில் நிற்பது சிங்கள இராணுவம் ஒன்று மட்டுமே.

பாராட்டுக்கள் ஈசன்.

பலவேளைகளில் உங்கள் நிதானமான எதையும் நன்கு கிரகித்து வைக்கும் கருத்துக்கள் என்னை வியப்படைய வைத்திருக்கின்றன. அதுபோலவே இந்தியா பற்றிய உங்கள் பார்வையையும் மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள்.

ஆனால் பா.ஜ.க. பற்றிய உங்கள் கருத்தில் தான் எனக்குச் சிறிது முரன்பாடு. பா.ஜ.க. எப்போதும் இந்துமதப் போர்வையை தேவை கருதி மட்டுமே பாவிக்கும் ஒரு கட்சி. அதை வைத்து அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஏதாவது செய்வார்கள் என நினைப்பதில் எவ்வித பிரயோசனமுமில்லை. ஏற்கனவே இவர்கள் ஆட்சியிலிருந்த போது என்ன செய்தார்கள் என்பதை ஒருமுறை ஞாபகப்படுத்திப் பாருங்கள்.

''யாதும் ஊரே யாவரும் கேளீர்''

என்பதன் பொருள், சொல்ல வரும் கரு என்பன என்ன??

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு உள் காரணம் தான். அது புலிகள் தங்களுக்கு அடிபணியாமல் (தமது சொல்லை கேளாமல்) இருப்பது தான் . இதனை ராஜீவ் காந்தியை கொலை செய்ததை சாட்டாக கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் நாடு பிரிவதற்கான சாத்திய கூறு இந்த நூற்றாண்டில் இல்லை.

எனவே புலிகள் இந்திய யுத்தம் என்ற ஒன்று இனிமேல் இல்லை.

மறைமுக யுத்தம் நிறையவே நடக்கிறது. நடக்கும்.

இந்தியாவைச்சுத்தி இந்தியாவுக்கு நட்பு நாடுகள் குறைவு.....

கடைசி இலங்கையையாவது தனது கைக்குள் போட்டுக்கொள்ளலாம் எனும் நப்பாசை.

ஆனால் பா.ஜ.க. பற்றிய உங்கள் கருத்தில் தான் எனக்குச் சிறிது முரன்பாடு. பா.ஜ.க. எப்போதும் இந்துமதப் போர்வையை தேவை கருதி மட்டுமே பாவிக்கும் ஒரு கட்சி. அதை வைத்து அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஏதாவது செய்வார்கள் என நினைப்பதில் எவ்வித பிரயோசனமுமில்லை. ஏற்கனவே இவர்கள் ஆட்சியிலிருந்த போது என்ன செய்தார்கள் என்பதை ஒருமுறை ஞாபகப்படுத்திப் பாருங்கள்.

நன்றி வசம்பு :icon_idea:

முன்னைய பா.ஜ.க. வின் ஆட்சியில் காங்கிரஸ் ஆட்சிபோல் புலிகளின் மேல் அழுத்தமோ இல்லை சிங்களவருக்கு ஆதரவோ இருக்கவில்லை. மாறாக புலிகள் சார்பு நிலைதான் மறை முகமாக இருந்தது. உதாரணத்திற்குச் சொல்வதானால் புலிகள் ஓயாத அலைகள் மூலம் யாழை நோக்கி முன்னேறியபோது யாழ் இராணுவத்தைச் சரணடையுமாறு கேட்டிருந்தனர்.

35,000 இராணுவம் சில ஆயிரம் பேரிடம் சரணடைவது என்பது நடைமுறைச் சாத்தியம் அற்றது. மேலும் வன்னியில் இருந்த ஜயசிக்குறு இராணுவம் போல் யாழ் இராணுவம் மனோவலிமை இழந்திருக்கவில்லை.

இன்னிலையில் பா.ஜ.க அரசு இராணுவத்தை யாழில் இருந்து வெளியேறுவதற்கு கப்பல்களைத் தந்து உதவுவதாக சந்திரிக்காவைக் கேட்டது. இதற்கு மட்டும் சந்திரிக்கா ஒத்துக் கொண்டிருந்தால் தமிழரிற்கு ஒரு பெரிய வெற்றியாக முடிந்திருக்கும்.

பா.ஜ.க. ஐ விட அதைப் பின்னின்று இயக்கும் வி.எச்.பி. தான் கொள்கை உறுதியானது.

தனி நாடு ஒன்றிற்குத் தேவையான சகல வேலைகளையும் நாம் தான் செய்ய வேண்டும். பிரிவினைக்கு இந்தியாவின் பங்கு என்னெவென்றால்

1. அந்நிய சக்திகள் இலங்கைக்குள் ஊடுருவாதபடி பார்த்துக் கொள்வதன் மூலம் தனது நலன்களையும் அதே நேரம் தமிழர் நலன்களையும் பாதுகாத்தல்.

2. குறைந்த பட்சம், போராட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்காதிருத்தல். ( ஆதரவு நாம் கேட்கவில்லை )

3. போராட்ட‌ உச்ச‌க் க‌ட்ட‌த்தில் மிக‌ச் சில‌ ( ஒன்றிர‌ண்டு ) இராச‌ த‌ந்திர‌ உத‌விகளை வ‌ள‌ங்குத‌ல்.

முத‌லாவ‌தை காங்கிர‌ஸ் உட்ப‌ட‌ எந்த‌ க‌ட்சியும் செய்யும், ஏனென்றால் இந்திய‌ ந‌ல‌ன் அங்கு உள்ள‌து.

இரண்டாவது, காங்கிர‌ஸ் ஓர‌ள‌விற்குப் பொறுத்தாலும் நில‌மை சிக்க‌லாக‌ பின் வாங்கிவிடும். பா.ஜ‌.க‌. இதை அமுள் ப‌டுத்தியிருக்கின்ற‌து (க‌ட‌ந்த‌ முறை).

மூன்றாவ‌து காங்கிர‌ஸ் செய்யாது. பா.ஜ‌.க‌. விற்கு க‌ப்ப‌ல் உதார‌ண‌த்தைச் சொல்ல‌லாம்.

சில‌ உள்ளூர் , பிராந்திய‌ சிக்க‌ல்க‌ள் கார‌ண‌மாக‌ இந்தியாவின் எந்த‌க்க‌ட்சியும் தொட‌ர்ச்சியாக‌ ஈழ‌ப்பிரிவினைக்கு ஆத‌ர‌வு வ‌ள‌ங்க‌ முடியாது. அவ‌ர்க‌ளால் ஒரு சில‌ போராட்ட‌த்தைத் தீர்மானிக்கும் க‌ண‌ங்க‌ளில் ம‌ட்டுமே ஆத‌ர‌வாக‌ச் சில‌ இராச‌த‌ந்திர‌ ந‌க‌ர்வுக‌ளை மேற்கொள்ள‌ முடியும். ஆக‌வே இந்த‌க் க‌ண‌ங்க‌ள் வெற்றியைத் தீர்மானிக்கும் க‌ண‌ங்க‌ளாக‌ இருக்க‌ வேண்டும் என்றால் போராட்ட‌ம் அத‌ற்குரிய‌ வ‌கையில் முன்னேறியிருக்க வேண்டும்.‌

இன்று ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் தாக்குத‌ல்க‌ளால் இந்திய‌ர்க‌ள் ம‌த‌ ரீதியாக‌ முனைவாக்க‌ம் அடைந்துள்ளார்க‌ள். இந்நிலையில் வி.எச்.பி. போன்ற‌வ‌ற்றை ந‌ம்ம‌வ‌ர்க‌ள் அணுகினால் சாத‌க‌மான நிலை தோன்றும்.

''யாதும் ஊரே யாவரும் கேளீர்''

என்பதன் பொருள், சொல்ல வரும் கரு என்பன என்ன??

எல்லாம் என்னுடைய ஊர். எல்லாரும் என்னுடைய உறவினர். என்று அர்த்தம் என்று நினைக்கிறன்.

சொந்த‌ இட‌ம் தீவுப்ப‌குதி. சீவிச்ச‌து ந‌ல்லூர். இர‌ண்டு ஊர்ல‌யும் ஆசை.

ம‌ற்ற‌ப்ப‌டி சொல்ல‌வார‌ அள‌வுக்கு அதில‌ பெரிய‌ க‌ருத்து இல்லை. :icon_idea:

நன்றி வசம்பு :D

முன்னைய பா.ஜ.க. வின் ஆட்சியில் காங்கிரஸ் ஆட்சிபோல் புலிகளின் மேல் அழுத்தமோ இல்லை சிங்களவருக்கு ஆதரவோ இருக்கவில்லை. மாறாக புலிகள் சார்பு நிலைதான் மறை முகமாக இருந்தது.

ஆரம்பத்தில் பா.ஜ.க ஆட்சியில் புலிகள் ஆதரவு நிலை இருந்தது உண்மை தான். ஆனால் அது படிப்படியாக மாற்றம் பெற்று, இலங்கை அரசிற்கு புலிகளின் ஆயுதக் கப்பல்களைக் காட்டிக் கொடுக்கும் நிலையாக மாறியதை நீங்கள் மறந்து விட்டீர்கள். முதன் முதலாக இலங்கை அரசிற்கு புலிகளின் ஆயுதக் கடத்தல்கள் சம்பந்தமான உளவுகளை வழங்கத் தொடங்கியதே பா.ஜ.க அரசு தான்.

ஆரம்பத்தில் பா.ஜ.க ஆட்சியில் புலிகள் ஆதரவு நிலை இருந்தது உண்மை தான். ஆனால் அது படிப்படியாக மாற்றம் பெற்று, இலங்கை அரசிற்கு புலிகளின் ஆயுதக் கப்பல்களைக் காட்டிக் கொடுக்கும் நிலையாக மாறியதை நீங்கள் மறந்து விட்டீர்கள். முதன் முதலாக இலங்கை அரசிற்கு புலிகளின் ஆயுதக் கடத்தல்கள் சம்பந்தமான உளவுகளை வழங்கத் தொடங்கியதே பா.ஜ.க அரசு தான்.

வித்தியாசமாக கருத்து எழுதுறீங்கள் வசம்பண்ணா & ஈசன்...

இந்தியா இப்ப மட்டும் அல்ல நீண்ட காலமாகவே ஈழத்தமிழரை பலவீன படுத்தி கொண்டு இருக்கு... அதை மறைச்சு இரண்டு பேரும் காப்பாத்துறார்கள் என்பது போல கதை விடுவது சரியானதா...???

இண்று வரைக்கும் இந்தியாவின் நிழலில்தான் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்... அதை எல்லாம் இந்தியா காவல் போட்டு காக்கிறது என்பது எல்லாம் வறட்டு வாதம்...

இண்டைக்கு மட்டும் அல்ல ஆரம்ப காலங்கள் முதலே இந்தியா எமது விடுதலை போரை பலவீன படுத்தி கொண்டு இருக்கிறது... அதில் பல இயக்கங்களை உருவாக்கி ஆயுதங்களை கொடுத்து அடித்து கொள்ள வைத்தது மிக முக்கியமானது...!!

ஆரம்பத்தில் பா.ஜ.க ஆட்சியில் புலிகள் ஆதரவு நிலை இருந்தது உண்மை தான். ஆனால் அது படிப்படியாக மாற்றம் பெற்று, இலங்கை அரசிற்கு புலிகளின் ஆயுதக் கப்பல்களைக் காட்டிக் கொடுக்கும் நிலையாக மாறியதை நீங்கள் மறந்து விட்டீர்கள். முதன் முதலாக இலங்கை அரசிற்கு புலிகளின் ஆயுதக் கடத்தல்கள் சம்பந்தமான உளவுகளை வழங்கத் தொடங்கியதே பா.ஜ.க அரசு தான்.

நீங்கள் சொல்வது சரி.

பா.ஜ.க படிப்படியாக மாறியது உண்மைதான்.

இதற்கு கதிர்காமரின் சூழ்ச்சிகள் காரணமாக இருந்திருக்கின்றன. கதிகாமரின் வேலைகளினால் அமெரிக்கா பிரச்சனையில் மூக்கை நுழைக்க ஆரம்பித்தது. இது பா.ஜ.க. அரசின் அணுகுமுறையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தது.

இந்தியாவில் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வரலாம். ஆனால் மாறாமல் இருப்பது "றோ" ஒன்றுதான். "றோ" வின் செல்வாக்கு பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

60 வருட சுதந்திர இந்தியாவில் 40 வருடம் காங்கிரஸ் ஆண்டிருக்கிறது. ஆகவே காங்கிரஸ் ஆட்கள் "றோ" உட்பட பல்வேறு கட்டமைப்புக்களில் இருப்பது தவிர்க்க முடியாது. இதுவும் பா.ஜ.க. விற்கு பிரச்சனை.

ஆனால் பா.ஜ.க. வின் ஒரு சில செய்கைகளை வைத்துக்கொண்டு அது ஈழத்திற்கு எதிரானது என்ற முடிவிற்கு வரமுடியாது. பா.ஜ.க. வின் பாதுகாப்பமைச்சர் பெனான்டஸ் தனது வீட்டிலேயே ஈழ ஆதரவுக்கூட்டங்கள் நடாத்தியவர்.

பி.ராமனின் பின்வரும் காட்டுரையை படியுங்கள். அவர் இந்தியா எவ்வெப்பொது புலிகளின் ஆயுதக்கப்பல்களை காட்டிக் கொடுத்தது என்று சொல்கிறார். அவர் சொல்லும் ஆண்டுகள் காங்கிரஸ் கால ஆண்டுகள். பா.ஜ.க. ஆண்டுகள் எதுவும் இல்லை. (ப‌குதி 4 உம் 5 உம்).

http://www.southasiaanalysis.org/%5Cpapers...Cpaper1802.html

இந்தியா தனது நலனின் அடிப்படையில் இயங்குகிறது. அதற்கு தன்மானம் சுயமரியாதை இன உணர்வு அற்ற அறிவியல் ரீதியில் பிற்போக்கான தமிழர்கள் என்ற தரப்பு பகடைக் காய்களாக பாவிக்கப்படுகிறது.

இதற்காக தமிழர்கள் இந்தியாவை வெறுத்தால் அதனால் இலாபம் அடைவது தமிழர் அல்லாத எல்லாத்தரப்பும் தான்.

இந்தியாவின் இடத்தில் வேறு ஒரு நாடு இருந்தாலும் இதையே தான் செய்வார்கள். அவர்கள் சில வேளைகளில் இந்தியாவை விட மூர்க்கமாக தமிழரிற்கு எதிராக இயங்கி கூட இருந்திருக்கலாம். ஏன் என்றால் அந்தளவிற்கு கீள்தரமான எதற்கும் பயனற்ற ஒரு இனம் தான் தமிழ் இனம்.

இந்தியா போன்ற ஒரு நாட்டினால் தமிழர்கள் தம்மைத்தாமே திருத்திக் கொள்வதற்கு கால அவகாசமாகுதல் கிடைக்கிறது. ஆனால் அதை தமிழர்கள் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்பது வேறு கதை. அத்தோடு இப்படி கால அவகாசம் கொடுக்கப்படுவதை தொடர அனுமதிக்கும் நிலையில் சிங்களம் இன்று இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தளவிற்கு கீள்தரமான எதற்கும் பயனற்ற ஒரு இனம் தான் தமிழ் இனம்.

எந்த அடிப்படையில் அவ்வளவு அறிதியாக உங்களால் இப்படி கூறமுடிகிறது என கூற முடியுமா?

எந்த அடிப்படையில் அவ்வளவு அறிதியாக உங்களால் இப்படி கூறமுடிகிறது என கூற முடியுமா?

தான் சாப்பிட்ட கோப்பையில் மலம் இருக்கிறவர் எனும் அடிப்படையில்தான்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.