Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொத்தாமான தாலிக்கொடி

Featured Replies

ஓம்...ஓம் நல்லா இருக்கு...... நாட்டை முழுவதுமா பிடிச்சாச்சு எமது நாட்டு மக்களை திருப்பி அனுப்பலாம் என மஹிந்த ஒரு அறிக்கைவிட்டால் போதும் எல்லோரும் போக வேண்டியது தான். அதுசரி மொத்தமான தாலிக்கொடி இருந்தால் நல்லது தான் வித்தாவது சாப்பிடலாம் . ஓய் ஏன் காணும் யார் மொத்தமாய் போட்டால் என்ன மெல்லீசா போட்டால் என்ன நீங்கள் ஏன் காணும் ஓய் அதுகளை பாக்கிறீங்கள். பார்த்து விட்டு ஏன் காணும் எரிச்சலில் வார்த்தைகளை அள்ளி விடுகின்றீர்கள். இருக்கின்றவள் ஆசை உள்ளவள் போடுகின்றாள் உங்களாலும் முடிந்தால் போடுங்கள் இல்லாவிட்டால் முடியாவிட்டால் இப்படி எரிந்து புகைவது நியாயம் இல்லை

  • Replies 155
  • Views 52.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பு தாலி பற்றியது என்று நான் நினைக்கிறேன்....

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் குமாரசுவாமிஅண்ணே?

மருதங்கேணி! தாலிக்கொடியைப்பற்றிய தலைப்பிலைதான் நான் என்னக்கு தெரிஞ்ச இன்னும் இரண்டொரு விசயத்தையும் சேர்த்து என்ரை பாசையிலை சொல்லியிருக்கிறன்.

மொத்த தாலிக்கான காரணங்களிலை ஒண்டையும் மறைமுகமாக சொல்லியிருக்கிறன். :rolleyes:

சரி எல்லாத்தையும் விடுவம்.உதாரணத்துக்கு ஒரு கலியாணவீட்டிலையோ இல்லாட்டி செத்தவீட்டிலையோ அங்கை கூடியிருக்கிற ஆக்கள் மாப்புளைபொம்புளையைபற்றியோ இல்லாட்டி செத்த ஆளைப்பற்றியோ தொடர்ந்து கதைச்சுக்கொண்டிருக்க மாட்டினம்.அப்பப்ப இடைக்கிடை வேறை வேறை விசயங்களும் வந்துபோகும் கண்டியளோ?அதுமாதிரித்தான் இதுவும் எண்டு நினையுங்கோவன். :(

அதையதை அந்த இடத்திலைதான் நிண்டு சொல்லோணுமெண்டால் கனபேருக்கு கனவிசயங்கள் தெரியாமல் போடும் மருதங்கேணி. :(

மற்றது எனக்கு இந்த தலைப்பை திசை மாத்தோணும் எண்ட எண்ணம் எள்ளளவும் இல்லை :)

அதுசரி மருதங்கேணி! இஞ்சை அனேகமான தலைப்புகளிலை எல்லாம் திசைமாறி சிக்குப்பட்டு நிக்கேக்கை இதிலை மட்டும் என்னவிசயம் உங்களுக்கு சுட்டுப்போட்டுது? :lol:

மருதங்கேணி தயவுசெய்து பதிலளிக்கவம்.நான் திருந்துவதற்கு வசதியாக இருக்கும். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம்...ஓம் நல்லா இருக்கு...... நாட்டை முழுவதுமா பிடிச்சாச்சு எமது நாட்டு மக்களை திருப்பி அனுப்பலாம் என மஹிந்த ஒரு அறிக்கைவிட்டால் போதும் எல்லோரும் போக வேண்டியது தான். அதுசரி மொத்தமான தாலிக்கொடி இருந்தால் நல்லது தான் வித்தாவது சாப்பிடலாம் . ஓய் ஏன் காணும் யார் மொத்தமாய் போட்டால் என்ன மெல்லீசா போட்டால் என்ன நீங்கள் ஏன் காணும் ஓய் அதுகளை பாக்கிறீங்கள். பார்த்து விட்டு ஏன் காணும் எரிச்சலில் வார்த்தைகளை அள்ளி விடுகின்றீர்கள். இருக்கின்றவள் ஆசை உள்ளவள் போடுகின்றாள் உங்களாலும் முடிந்தால் போடுங்கள் இல்லாவிட்டால் முடியாவிட்டால் இப்படி எரிந்து புகைவது நியாயம் இல்லை

என்ன தங்கச்சி? ஏன் தங்கச்சி? ஏன் இதெல்லாம்? ஆர் போகப்போறான்?மகிந்தன் எப்ப சொன்னவன் வெளிநாட்டிலை இருக்கிற ஆக்களை திருப்பி அனுப்பவேண்டாமெண்டு?

ஆருக்கு தங்கச்சி எரிச்சல் பொறாமை எல்லாம்?இந்த அண்ணை நல்லதைத்தானே சொன்னவன்?நகைநட்டு வாங்கிறது இப்ப பெரிய பிரச்சனையே?எல்லாரும் எல்லாந்தான் வாங்கலாம்.அதுஅதுக்கெண்டு அளவு மதிப்புமரியாதை ஒண்டு இருக்கெல்லே தங்கச்சி :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி! தாலிக்கொடியைப்பற்றிய தலைப்பிலைதான் நான் என்னக்கு தெரிஞ்ச இன்னும் இரண்டொரு விசயத்தையும் சேர்த்து என்ரை பாசையிலை சொல்லியிருக்கிறன்.

மொத்த தாலிக்கான காரணங்களிலை ஒண்டையும் மறைமுகமாக சொல்லியிருக்கிறன். :unsure:

சரி எல்லாத்தையும் விடுவம்.உதாரணத்துக்கு ஒரு கலியாணவீட்டிலையோ இல்லாட்டி செத்தவீட்டிலையோ அங்கை கூடியிருக்கிற ஆக்கள் மாப்புளைபொம்புளையைபற்றியோ இல்லாட்டி செத்த ஆளைப்பற்றியோ தொடர்ந்து கதைச்சுக்கொண்டிருக்க மாட்டினம்.அப்பப்ப இடைக்கிடை வேறை வேறை விசயங்களும் வந்துபோகும் கண்டியளோ?அதுமாதிரித்தான் இதுவும் எண்டு நினையுங்கோவன். :)

அதையதை அந்த இடத்திலைதான் நிண்டு சொல்லோணுமெண்டால் கனபேருக்கு கனவிசயங்கள் தெரியாமல் போடும் மருதங்கேணி. :unsure:

மற்றது எனக்கு இந்த தலைப்பை திசை மாத்தோணும் எண்ட எண்ணம் எள்ளளவும் இல்லை :unsure:

அதுசரி மருதங்கேணி! இஞ்சை அனேகமான தலைப்புகளிலை எல்லாம் திசைமாறி சிக்குப்பட்டு நிக்கேக்கை இதிலை மட்டும் என்னவிசயம் உங்களுக்கு சுட்டுப்போட்டுது? :o

மருதங்கேணி தயவுசெய்து பதிலளிக்கவம்.நான் திருந்துவதற்கு வசதியாக இருக்கும். :)

குமாரசாமியண்ணே.

நீங்கள் என்னை தவறாக புரிந்துள்ளீர்கள்!

நான் உங்களை குறைகாணவுமில்லை குற்றம்சொல்லவுமி;ல்லை.

நீங்கள் எழுதிய கருத்தில் இரட்டை அர்த்தம் நிறையவே இருக்கின்றது. அதை நீங்கள் தெரியாமலும் எழுதியிருக்கலாம் தெரிந்தும் எழுதியிருக்கலாம். அதை தெரிந்துகொள்ளவே நான் பகிடியா உங்களை வினாவினேன். தலைப்பு தாலிபற்றியது என நான் நினைக்கிறேன் என்று.

நீங்கள் எழுதிய கருத்தை விலக்கிவிட்டு நான் எழுதியதை மட்டுமே பார்த்ததால்தான் உங்களுக்கு அப்படி தெரிந்திருக்கின்றது என நினைக்கிறேன். என்னை மன்னித்துக்கொள்ளவும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்...ஓம் நல்லா இருக்கு...... நாட்டை முழுவதுமா பிடிச்சாச்சு எமது நாட்டு மக்களை திருப்பி அனுப்பலாம் என மஹிந்த ஒரு அறிக்கைவிட்டால் போதும் எல்லோரும் போக வேண்டியது தான். அதுசரி மொத்தமான தாலிக்கொடி இருந்தால் நல்லது தான் வித்தாவது சாப்பிடலாம் . ஓய் ஏன் காணும் யார் மொத்தமாய் போட்டால் என்ன மெல்லீசா போட்டால் என்ன நீங்கள் ஏன் காணும் ஓய் அதுகளை பாக்கிறீங்கள். பார்த்து விட்டு ஏன் காணும் எரிச்சலில் வார்த்தைகளை அள்ளி விடுகின்றீர்கள். இருக்கின்றவள் ஆசை உள்ளவள் போடுகின்றாள் உங்களாலும் முடிந்தால் போடுங்கள் இல்லாவிட்டால் முடியாவிட்டால் இப்படி எரிந்து புகைவது நியாயம் இல்லை

ஒரு சமூக பழக்க வழக்கங்களை....... எடுத்தோம் எறிந்தோம் என நாம் கடைபிடித்தால் அது பற்றி வினாவவும் விழங்கவும் அது சார்ந்த சமூகத்திற்கு நிறையவே பங்குண்டு என நான் நினைக்கிறேன். எதை செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்ற கேள்வியில்லாமல் ஒருவன் வாழ்ந்து வந்தால் அவனால் பல இடர்களை அவனை சூழ உள்ளோர் தாங்க நேரிடும். ஆகவே அவனுக்கு தேவையான அறிவை கல்வியூடாவோ சமூக விழிப்புணர்வு ஊடாகவோ தற்போதைய உலகில் எல்லா சமூகமும் ஊட்டி வருகின்றது. இந்து கடவுளை முன்நிறுத்தி ஒரு கோவிலை நீங்கள் கட்டினால் இந்து மத கோட்பாட்டை நீங்கள் நன்கு அறிந்து அன்றி அதை அறிந்தவரை நாடி அதற்கமைவாக கட்டினால்தான் அது இந்து மதத்திற்கும் அது சார்ந்தோருக்கும் துணை நிற்கும். நான் கட்டுறன் விரும்பினா வந்து கும்பிடுங்கோ இல்லாட்டி உங்கட வேலையை பாருங்கோ என்ற எண்ணம்தான் இப்போது இந்து மதத்தில் எத்தனை கடவுள்கள் உள்ளார்கள் என்பது யாருக்குமே தெரியாதுபோய் வெறும் சாதி வளர்கும் அருவெருப்புடைய சமயமாக நிற்கின்றது. அதை ஆதியில் நிறுவியவர்களின் எண்ணம் நிற்சயமாக அதுவாக இருந்திராது மாறாக அந்தகால மனிதர்கள் நலன் பெற கூடியதாகவே அது இருந்திருக்கும். பிற்காலத்தில் தமது சொந்த வயிறை வளர்க்க பாம்புபுற்றிற்கு பாலுற்றி வந்த வினைகள்... நான் எழுதி தெரியவேண்டியதில்லையே. ஆகவே உங்கள் கருத்து தனிமனித சுதந்திரம் எனும் பொருள்படா. மாறக திட்டமி;ட்ட சமூக சீர்குலைப்பு என்பதுதாகவே இது பார்க்க படவேண்டும்.

அப்ப இதன் மூலம் மற்றவன் என்ன செய்கின்றான் என அவனின் தனிப்பட்டவிடயங்களுக்குள் எல்லாம் எம் மூக்கைவிட்டு அலசி அலசி பார்க்கனும் என கூறுகின்றீர்கள்? ஒரு கதைக்கு எடுத்துக்கொண்டால் தனி ஒரு பெண் தனது சொந்த பணத்தில் தனக்கே மொத்தமான தாலிக்கொடி போடுவதால் சமூகத்துக்கு ஏற்படும் பிரச்சினைகளை கூறமுடியுமா?

  • தொடங்கியவர்

31 பவுணில் தாலிக்கொடி செய்த நண்பிக்கு திருமணம் முடிந்து விட்டது. நானும் திருமணத்திற்கு சென்றதால் ஒரு விடயத்தின் அவதானித்தேன், மணமக்களுக்கு வாள்து தெரிவிக்க சென்றவர் பெரும்பாலோர் இங்கால் வந்து தமக்குள் கொடி எத்தனை பவுணாக இருக்கும் என்று தான் பேச்சு. அப்படியானால் எல்லோரும் என்னத்தை நோக்குகிறார்கள் என்பது புரியும். பெண் வீட்டார் கூட கொடி வடிவாகத் தெரிய வேன்டும் என்றதில் அக்கறையாக அவர் அணிந்திருந்த மாலைகள் கொடிYஐ மறைக்காத வண்ணம் பார்துக்கொண்டனர். எனது நண்பி தான் பாவம், மற்றவர்களுடைய விருப்பத்ற்காக தனது சொந்தப்பணத்தில் கொடி செய்து கிட்டதட்ட 1/4 கிலோதஙத்தை சுமந்து கொண்டு இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

கொடி எப்படியிருந்தாலும் தாலி ஒரு பவுனுக்குமேல் செய்வது வழக்கமில்லை. அதுபோல் கொடிக்கும் ஒரு கட்டுப்பாடு இருந்திருந்தால் நல்லாயிருந்திருக்கும்!

எப்படியாயினும் கொடி பெரிதானால் பாக்கிறவைக்கு கண்ணை உறுத்தும், கட்டியிருக்குறவைக்கு கழுத்தை அரிக்கும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

"அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு " ............அளவு ,போதும் என்ற மனம் ,பாதுகாப்பு என்பதை கருத்தில் கொண்டால் ,எல்லாமே நன்று ." படித்தவர்கள் " எல்லாருமே " வாழ்கையை" படித்தவர்கள் ஆக மாட்டார்கள் . அது வெறும் புத்தக படிப்பாக இருக்கலாம் .சிந்தித்து செயல் பட்டு ,(பின் வருவதை )வாழ்வதே வாழ்கை .

  • கருத்துக்கள உறவுகள்

நான் பேசாமல் நைலோன்[மஞ்சள்] கயிரை கட்டலாம் என நினைக்கிறேன் :o:unsure::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பேசாமல் நைலோன்[மஞ்சள்] கயிரை கட்டலாம் என நினைக்கிறேன் :o:unsure::unsure:

ஓமோம் அப்பத்தான் தூக்கி மாட்ட சுகம். ஆச்சிரமத்திலேயே கணக்கா எலும்புக்கூடுகள் இருக்கு அதுபற்றிய விசாரணைகளை டங்குவார் தொடங்கப்போறார்.மச்சான் சிறி பார்த்திங்களே இவற்ற வேலையை இப்படியென்றால் நான் எப்படி ஆச்சிரமத்தை கொடுப்பன் சொல்லுங்கோ :)

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் அப்பத்தான் தூக்கி மாட்ட சுகம். ஆச்சிரமத்திலேயே கணக்கா எலும்புக்கூடுகள் இருக்கு அதுபற்றிய விசாரணைகளை டங்குவார் தொடங்கப்போறார்.மச்சான் சிறி பார்த்திங்களே இவற்ற வேலையை இப்படியென்றால் நான் எப்படி ஆச்சிரமத்தை கொடுப்பன் சொல்லுங்கோ :unsure:

அது தானே ..... மச்சான் , ஆச்சிரமம் பறி போனதோடை முனிவருக்கு புத்தி பிசகீற்றுது போலை ..... :o

  • கருத்துக்கள உறவுகள்

நான் பேசாமல் நைலோன்[மஞ்சள்] கயிரை கட்டலாம் என நினைக்கிறேன் :o:unsure::)

சரியான தீர்ப்பு. முனிபக்குவரே.! இப்ப எல்லாம் ஆண்கள் இரவில நிம்மதியா நித்திரையே கொள்ள முடியுதில்லையாம். அப்படி இருக்கேக்க.. கழுத்தில ஒரு நைலோன் கயிறை மாட்டி வைக்கிறது.. அவசரத்துக்கு பிடிச்சு.. இழுத்து.. இறுக்கி தற்காத்துக் கொள்ள ஆண்களுக்கு உதவும்..! :unsure: :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறுவது சரி, ஆனால் பல பெண்களுக்கு தாலிக்கொடியின் அளவு எவ்வளவு என்று தாலி கட்டும் போது தானே தெரிகிரது, எனவே அச்சந்தர்பத்தில் என்ன செய்ய முடியும். எனது கணவர் எனக்குத் தாலி கட்ட பக்கத்தில் வந்து நின்ற போது தான் புரிந்தது அதன் மொத்தம் என்ன என்று !!! எனது கணவர் 25 பவுணில் செய்யப் போகிறென் என்று எனக்குக் கூறவே இல்லை !!!!!

.சரி,நீங்கள் 25 பவுனில் செய்த கொடியை போட்டுக்கொன்டு வலம் வருவதை பெருமையாக நினக்கிறீர்களா அல்லது அவமானமாக நினைக்கிறீர்களா?

  • தொடங்கியவர்

எனக்கு தாலிக்கொடியின் அளவு பற்றி அக்கரை இருந்ததில்லை. ஆனால் அதற்கு எண்டு ஒரு மரியாதை உண்டு, அதை வைத்திருக்கிரேன். என்னைப் பொறுத்த்வரையில் அதன் அளவு என்பது அணிவிப்பவரின் விருப்பம் அது 5 பவுணாக இருந்தாலும் சரி 50 பவுணாக இருந்தாலும் சரி, எந்தவிதமான குறையும் சொல்லாமல் அணிய வேண்டியது மனிவியின் கடமை. ஆனால் என்னுடைய கொடியைப் பார்த்து பலர் பகிடி பண்ணியது உண்டு. தவறு என்று சொல்ல மாட்டேன் ஏனென்றால் நானும் அவ்வறு கடந்த காலத்தில் நினைத்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதன் மூலம் மற்றவன் என்ன செய்கின்றான் என அவனின் தனிப்பட்டவிடயங்களுக்குள் எல்லாம் எம் மூக்கைவிட்டு அலசி அலசி பார்க்கனும் என கூறுகின்றீர்கள்? ஒரு கதைக்கு எடுத்துக்கொண்டால் தனி ஒரு பெண் தனது சொந்த பணத்தில் தனக்கே மொத்தமான தாலிக்கொடி போடுவதால் சமூகத்துக்கு ஏற்படும் பிரச்சினைகளை கூறமுடியுமா?

கொடி மட்டும் இல்லை இந்த நகை போடுற விசயமே மற்றவன் பாக்கிறதுக்காக செய்யிறதுதானே.உதாரனத்துக்கு நான் நேரடியாக பார்த்த இரன்டு சம்பவத்தை கூறுகிறேன்.ஒருமுறை நான் கொழும்பில் விடுதியில் தங்கி நின்ற போது ஒரு வெளிநாட்டுக் குடும்பம் வந்து இறங்கியது.அதில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரம் ஒரு நடமாடும் நகைக்கடை.அப்போது அங்கு ஏற்கனவே இருந்த ஒரு உள்ளூர் தாய்யும் மகளும்.அதில் அந்த மகள் தாய்யைப்பார்த்து,அம்மா அங்க பார் அவர்கள் போட்டிருக்கிறதுகளை என்று.அதுக்கு அந்த அம்மா,அதுகளுக்கென்ன அதுகள் வெளிநாட்டுச்சனம் அதுகள் போடுங்கள் தானே என்று சொன்னா.இது பாதிப்புஇல்லையா?(எந்தக்காரனத்தால வெளிநாட்டுக்கு வந்து கிலோக்கணக்கில நகை வாங்க கூடியதாக இருந்துதோ அதே காரனத்தால அங்கு நொந்து நூலாய்ப்போயிருக்கும் மக்களுக்கு பிலிம் காட்டுறது)மற்றது ஊரில ஒரு அண்ணன் வெளி நாட்டிலிருந்து வந்து நிக்கும் தன் தங்கையிடம் சொல்கிறார் பெட்டி நிறைய நகையிருந்தும் ஆசைக்கு போட முடியவில்லை என்று(கள்ளர் பயமாம்)ஆசைக்கு போட வேண்டும் என்றால் இரவில் வீட்டைப்பூட்டிப்போட்டு போட்டுக்கொன்டு அங்கும் இங்கம் கொஞ்ச நேரம் நடந்து திரியலாம் தானே.ஆனால் அது இல்லையே ஆசை.நாலு பேர் பார்க்க வேனும்,ஏங்க வேனும்,விசாரிக்க வேனும்.இது தானே நோக்கம்.இப்ப உங்களுக்கு பிடிச்ச ஒரு சாப்பாடு சாப்பிடுகிறீர்கள்.அது மற்றவர்களுக்கு தெரிந்தாலும் சரி தெரியாவிட்டாலும் சரி உங்களுக்கு திருப்தி.ஆனால் நகை விசயம் அப்படி இல்லையே :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதன் மூலம் மற்றவன் என்ன செய்கின்றான் என அவனின் தனிப்பட்டவிடயங்களுக்குள் எல்லாம் எம் மூக்கைவிட்டு அலசி அலசி பார்க்கனும் என கூறுகின்றீர்கள்? ஒரு கதைக்கு எடுத்துக்கொண்டால் தனி ஒரு பெண் தனது சொந்த பணத்தில் தனக்கே மொத்தமான தாலிக்கொடி போடுவதால் சமூகத்துக்கு ஏற்படும் பிரச்சினைகளை கூறமுடியுமா?

தாலியை ஒரு பெண் தானாகவே அணிந்தால் நீங்கள் சொல்வது பொருத்தமானதே.

ஆனால் அது ஒரு சமூகத்திற்கு சாட்சியாக வழங்கபடுகிறது. சமூகத்தின் கலாச்சார பின்னணியே இங்கு தலைநிமிர்ந்து நிற்பதை உங்களால் உணர்ந்துகொள்ள முடிகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

25 பவுணோ,50 பவுணோ காசு செலவழித்து வாங்கிய பின்னர் பெட்டிக்கு உள்ளையும்,லொக்கருக்கு உள்ளையும் சும்மா இருக்கும் போது அதை விட விலை கூடிய உடுப்புகள்,JACKET வேண்டி போட்டுக் கொண்டு திரியலாம்.தாயகத்தில் எவ்வளவு சனம் சாப்பாடு இல்லாமல் கஸ்டப்படுது.தாலியை சின்னதாக செய்து கொண்டு மிச்ச காசை அவர்களுக்கு குடுத்தால் புண்ணியமாவது கிடைக்கும்.

  • தொடங்கியவர்

இங்கே படிதவர்கள் மொத்தமாக தாலிகொடி போடுவதால் அவர்களையும் கண்டித்து இருக்க்றீர்கள் ஆனால், அதே படிப்பை காரணம் காட்டி சீதனம் வாங்குகிறார்களே அதை என்னவென்று கூறுவது??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை நான் நினைச்சதை நீங்கள் சொல்லிட்டிங்கள் ஆமா.....றூம் போட்டிருந்து யோசிப்பிங்களோ?

அப்புறம் தாலிக்கொடி போடுறதெல்லாம் வந்து வேள்விக்கு ஆடு வெட்ட முதல் மாலை போட்டு,நல்லா குழை எல்லாம்

குடுத்திட்டு வெட்டுறது போலத்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பேசாமல் நைலோன்[மஞ்சள்] கயிரை கட்டலாம் என நினைக்கிறேன் :D:o:(

எண்டைக்கோ ஒருநாளைக்கு பெட்டையள்(சிஷ்யைமார்) உங்களை தூக்கி கட்டத்தான்போறாளவையள்.அது நிச்சயம். :o

எதுக்கும் நைலோன் கயிறை விட்டுட்டு சணல்கயிறாய் பாத்து கட்டுங்கோ. பிற்காலத்துக்கு உதவும் :(

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியண்ணை ,

நீங்கள் பொருத்தமான இடங்களில் , பொருத்தமான படங்கள் போடுவதில் வல்லவர் .

மொத்தமான தாலிக்கொடி படத்தை போட்டு விடுங்கோவன் , பாத்து பசியாறுவம் .

  • கருத்துக்கள உறவுகள்

எண்டைக்கோ ஒருநாளைக்கு பெட்டையள்(சிஷ்யைமார்) உங்களை தூக்கி கட்டத்தான்போறாளவையள்.அது நிச்சயம். :)

எதுக்கும் நைலோன் கயிறை விட்டுட்டு சணல்கயிறாய் பாத்து கட்டுங்கோ. பிற்காலத்துக்கு உதவும் :D

ச்ச கு.சா அண்ணை நான் தாலியெல்லாம் கட்டுவதில்லை அதனால கயிறு தேவைப்படாது என நினைக்கிறேன் மற்றது பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் அப்படி யெல்லாம் செய்யாது :):)

தமிழ் சிறி Posted Today, 09:38 AM

குமாரசாமியண்ணை ,

நீங்கள் பொருத்தமான இடங்களில் , பொருத்தமான படங்கள் போடுவதில் வல்லவர் .

மொத்தமான தாலிக்கொடி படத்தை போட்டு விடுங்கோவன் , பாத்து பசியாறுவம் .

தமிழ்சிறி நீங்கள் படம் கேட்க கு.சா அவர்ர மனைவியின் தாலிக்கொடியை கழட்ட அவா இவர் அடகுவைக்க போறார் என்று போட்டு அடிக்க என்ன வேலை இது நல்லா இல்லை அமா சொல்லிபோட்டன் :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் , நான் நினைக்கிறன் குமாரசாமியண்ணை " கமெரா " வோடை தாலிக்கொடி படம் பிடிக்கபோயிட்டார் . :o

கடவுளே ....... என்று நொந்து ... நூடில்ஸ் ஆகாம , அவர் வரவேணும். :)

நான் 9 பவுனில் தான் தாலி போட்டு இருக்கிறன். அதனால் அது எப்பவுமே எனது கழுத்தில் தான் இருக்கிறது. எனது திருமணத்தின் போது எனது கணவர் கேட்டார் எத்தனை பவுன்னில் வேண்டும் என்று ,குறைந்தது எத்தனை பவுனில் செய்யலாமோ அதில செய்யச்சொன்னன் ஏனெனில் அது எப்பவுமே எனது கழுத்தில் இருக்கனும் என்று நினைத்தேன் அத்தோடு என் கணவருக்கு பணக்கஸ்டத்தை கொடுக்க விரும்பவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.