Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிராணப் முகர்ஜி அவசரமாக இலங்கைக்குப் பயணம்

Featured Replies

முல்லைத்தீவில் மாவட்டத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கை நிலவரம் குறித்து நேரில் ஆராய இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று கொழும்பு செல்கின்றார் என இந்திய தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

பிராணப் முகர்ஜி அவசரமாக இலங்கைக்குப் பயணம்

தமிழர்களை கொல்லும் அரக்கன் மகிந்தாவுக்கு ஆசி சொல்லப் போகிறாரோ? அல்லது இன்னும் அதிக ஆயூத உதவிகள் தேவையா என்று கேட்கப் போகிறாரோ?

Pranab Mukherjee rushing to Sri Lanka

External Affairs Minister Pranab Mukherjee will rush on Tuesday to Sri Lanka where the military claims to have captured the last LTTE bastion of Mullaittivu two days back.

During the two-day visit, Mukherjee will meet President Mahinda Rajapaksa and Foreign Minister Rohitha Bogollagama and discuss the latest situation in the northern part of the island nation, sources said.

Mukherjee is expected to impress upon Rajapaksa government the need for finding a political solution to the ethnic problem to ensure lasting peace.

He is also expected to press for early implementation of the devolution package to ensure that the ethnic Tamils get rights and privileges at par with others.

India has been maintaining that military victory will not address the ethnic problem facing Sri Lanka and that the government there needed to look for a political settlement wherein all communities, including ethnic Tamils, can live with respect and dignity within united Sri Lanka.

Mukherjees's visit comes in the back drop of strong demands by Tamil Nadu Chief Minister M Karunanidhi and some other parties from the state that the external affairs minister should visit Sri Lanka and prevail upon Rajapaksa government to go for ceasefire.

During the recent weeks, Sri Laknan army has made rapid progress in its campaign to capture areas under the LTTE control. The military claimed on Sunday to have captured the garrison town of Mullaittivu, the last urban stronghold of the LTTE asserting that the 25-year-long ethnic conflict was now '95 per cent over'.

http://www.ndtv.com/convergence/ndtv/story...%209:30:00%20AM

பற்றி எரியும் இலங்கை - இன்று கொழும்பு விரைகிறார் பிரணாப்

செவ்வாய்க்கிழமைஇ ஜனவரி 27இ 2009இ 10:19 ஜஐளுவுஸ

டெல்லி: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் பலர் பலியாகி வரும் சூழ்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று கொழும்பு விரைகிறார்.

முல்லைத்தீவை விடுதலைப் புலிகளிடமிருந்து 2 நாட்களுக்கு முன்பு ராணுவம் கைப்பற்றியது. ஆனால் தொடர்ந்து அப்பாவித் தமிழர்களை அது குறி வைத்துக் கொன்று குவித்து வருகிறது.

நேற்று நடந்த பயங்கரத் தாக்குதலில் 300 தமிழர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் 2 நாள் பயணமாக பிரணாப் முகர்ஜி இன்று கொழும்பு விரைகிறார். அப்போது அதிபர் ராஜபக்சேஇ வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார்.

இனப் பிரச்சினைக்கும்இ நீடித்த அமைதிக்கும் சுமூகப் பேச்சுவார்த்தையே சிறந்தது என ராஜபக்சேவிடம் பிரணாப் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.

மேலும் அதிகாரப்பகிர்வுத் திட்டத்தை விரைவில் அமல்படுத்துமாறும் அவர் ராஜபக்சேவை கேட்டுக் கொள்வார் எனக் கூறப்படுகிறது.

பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி போரை நிறுத்த வைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியும்இ தமிழக தலைவர்களும் தொடர்ந்து கோரி வந்தனர். இதுதொடர்பாக இருமுறை சட்டசபையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

சமீபத்தில் இறுதி வேண்டுகோள் என்ற பெயரில் மத்திய அரசுக்கு கிட்டத்தட்ட எச்சரிக்கை விடுக்கும் வகையில் தீர்மானமும் நிறைவற்றப்பட்டது. ஆனால் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வதற்கான அறிகுறியே இல்லாமல் இறுந்தது.

இந்த நிலையில் அப்பாவித் தமிழர்கள் 300 பேர் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியின் பின்னணியில்இ பிரணாப் கொழும்பு செல்லும் செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2009/01...-sri-lanka.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போய் இன்னும் கொஞ்ச செல்லடிக்க சொல்லி ஐடியா குடுப்பார் போல இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாட்டு தூதுவர்கள் இலங்கைக்கு வாரதும், வந்த பின் மஹிந்தாவுக்கு புகழாரம் சூட்டுவதும் தானே நடக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2009, 10:18 மு.ப ஈழம்] [ந.ரகுராம்]

முல்லைத்தீவில் மாவட்டத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கை நிலவரம் குறித்து நேரில் ஆராய இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று கொழும்பு செல்கின்றார் என இந்திய தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு நாள் பயணமாக இன்று செவ்வாய்க்கிழமை செல்லும் அவர், அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவையும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவையும் சந்தித்திக்கவுள்ளார்.

இருவரையும் சந்தித்து இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுமாறு வலியுறுத்துவார் என இந்திய தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

நன்றி:புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் கண்துடைப்பு நாடகம். மக்களுக்கு இப்போதைய உடனடித் தேவை போர் நிறுத்தமும் மனிதாபிமான உதவிகளுமே. அரசியல் தீர்வு அல்ல.!!

வருவார் போவருக்கெல்லாம் தன் தன் கவலை திருவாற்ற பெண்டிலுக்காக யாருக்கும் அழுகைவரல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இன்னும் கொஞ்சம் லேட்டா வரலாமே?...

கண்துடைப்புக்கு சில வார்த்தைகளை கூறிவிட்டு போகாமல்

உருப்படியான காரியம் எதையாவது செய்துவிட்டு போனால் சரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஒருபோதும் அனுதாபம் காட்ட முடியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

எனினும் இலங்கையில் அப்பாவித் தமிழர்களின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறும் மோதலில் அவர்கள் பாதிக்கப்படாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் அவர் புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரை இந்தியா ஆதரிக்கும் என்றும், விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பு என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் அப்பாவி தமிழர்களின் நிலைமை குறித்தும், அதிகார பகிர்வு குறித்தும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவுடனும், வெளியுறவு அமைச்சர் ரோகிதா பொகலகாமாவுடனும் தாம் பேசப்போவதாக பிரணாப் முகர்ஜி கூறினார்.

முன்னதாக இன்று காலை பிரணாப் முகர்ஜி, முதலமைச்சர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி தனது இலங்கை பயணம் குறித்து தெரிவித்ததாக தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அன்பழகன் அறிவித்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாசமொருக்கா அவர் வெளிக்கிடாட்டிக்கு சம்பளம் இல்லை போல..........

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அசரம் என்றால் இலங்கை போறார்? இந்தியாவில் கக்கூஸ் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் அவர் புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோதுஇ பயங்கரவாதத்திற்கு எதிரான போரை இந்தியா ஆதரிக்கும் என்றும்இ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பு என்றும் தெரிவித்தார்.

என்னத்துக்கு போறார் என்று அவரே சொல்லியிருக்கிறார்

சனம் நிம்மதியாக இருந்த மாதிரித்தான்.........???

பிரணாப் முகர்ஜீ தமிழின அழிப்பை துரிதபடுத்தவே சிங்கள இராணுவத் தாக்குதலுக்கு உதவ இந்திய இராணுவ டாங்கிகளையும் 3000 இராணுவ வீரர்களையும் கேரளத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை மிக வேகமாகச் செய்து முடித்து உள்ளதாகத் தகவல் வந்து உள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2009/01...ka.html#cmntTop

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் அடிக்கச்சொல்லப்போறார்போல

Edited by வில்லன்

Feb 13 திமுக கூட்டத்தின் பின் கலைஞரின் அறிக்கை: "எங்கள் பொறுமைக்கு பலன் கிடைத்துள்ளது. பிரணாப் சென்று மகிந்தவுடன் கதைத்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பிற்கு மகிந்த உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளார். ஆகவே இன்னும் சிலநாள் பொறுத்திருப்போம்." :o:D :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி அவசரமெண்டால் பிரணாப் இந்தியாவின் கோடிக்கரையிலை நிண்டு மகிந்தனை கூவி அழைச்சு கதைச்சிருக்கலாமே.

நேரடியாக போய் கதைப்பது என்பதும் இப்போது போய் புலிகளைப் பற்றி விமர்சிப்பதும் கருணையில்லாத தமிழக தலைவருக்கு

மத்திய அரசு கொடுக்கும் வெறும் அல்வா.

  • கருத்துக்கள உறவுகள்

.

உண்மைதான் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு உழைப்பதே ஒரே முடிவாகும். விடியல் எமதாகும். தமிழினத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தை, மனிதாபிமானத்துக்கான யுத்தம் என மகிந்த துவங்கியதை, இப்போ மனிதாபிமான உதவிகளை வழங்க நிறுத்தமாறு உலகையே சொல்லவைத்த அரசியல் நுண்ணறிவை குறைத்து மதிப்பிடாது, நாம் எமது சுயநிர்ணய உரிமைக்கான குரலை உலக அரங்கிலே உரக்கச் சொல்லிட உங்களுங்கள் நாடுகளில் நடைபெறும் கவனயீர்ப்பு ஒன்று கூடல் மற்றும் பேரணிகளில் பேரலையாகக் கலந்து கொள்வதூடாக உலகை வெல்வோம்! உரிமையை மீட்போம் !

56? 57? 58? .... இப்ப பாய்ந்து விழுந்து ஓடுகிறார். :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.