Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுவமடுவில் ஆட்லெறி பீரங்கித் தளம் விடுதலைப் புலிகளால் அழிப்பு

Featured Replies

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆட்லெறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • Replies 54
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆட்லெறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.

இது தொடர்பாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாவது:

விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்லெறி பீரங்கித் தளத்தை நேற்று முன்நாள் திங்கட்கிழமை இரவு தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.

ஆறு ஆட்லெறி பீரங்கிகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் அவற்றினை அங்கிருந்து இயக்கி சிறிலங்கா படையினர் மீது செறிவான பீரங்கித் தாக்குதல்களை மறுநாள் அதிகாலை வரை நடத்திய பின்னர் அத்தளத்தினை அழித்துவிட்டு தளம் திரும்பினர்.

இதில் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான எறிகணைகளும் வெடிமருந்துகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

இத்தாக்குதலில் சிறிலங்கா படையினர் தரப்பில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர் என வன்னி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

source:www.puthinam.com

களமாடி தளம் திரும்பிய வீரர்களுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு ஆட்லெறி பீரங்கிகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் அவற்றினை அங்கிருந்து இயக்கி சிறிலங்கா படையினர் மீது செறிவான பீரங்கித் தாக்குதல்களை மறுநாள் அதிகாலை வரை நடத்திய பின்னர் அத்தளத்தினை அழித்துவிட்டு தளம் திரும்பினர்.

துணிகரமான தாக்குதலை நடாத்திய , புலி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி..வெற்றி செய்தி தொடறட்டும்

களமாடி வீரர்களுக்கு வாழ்த்துக்கள்

Edited by kuddipaiyan26

நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்

போராட்டம் , கவனம் , களத்தில் எழுதுதல் இவற்றோடு சேர்ந்து கொஞ்சம் கடவுளை , ஆண்டவனை , இறைவனை , பகவானை கூட வேண்டுங்கள் . நம்மவர் வெல்ல வேண்டும் என்று . ஏனெனில் பிரார்த்தனைக்கும் வலு உண்டு என்பது நிருபிக்கப்பட்ட உண்மை . நினைவு அலைகளே சக்தியாக உருவெடுக்கிறது . பிரார்த்தனைகள் நமது நம்பிக்கைகள் வலுப்பெறசெய்யும் . வலுபெற்ற நம்பிக்கையே வெற்றிக்கான சக்தியை உருவாக்கும். நாளை நமதே . வெற்றி நம்முடனே

  • கருத்துக்கள உறவுகள்

இது புலிகளால் இவ்வாரம் அழிக்கப்பட்ட ரெண்டாவது பீரங்கித்தளம். முதலாவது கிளிநொச்ச்யி வரை ஊடறுத்து முன்னேறியுள்ள புலிகளின் அணியால் அழிக்கப்பட்டதென்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ்ப் பைத்தியம், இறை நம்பிக்கை வேண்டியதுதான், அதற்காக எல்லாவற்றுக்கும் கருத்தாக ஒரே வசனத்தைத் திருப்பித் திருப்பி எழுதுவீர்களா? உங்கள் பெயரில் உள்ள "தமிழ்" என்பதை எடுத்துவிடுங்கள். வெறும் "பைத்தியமாகவே" இருக்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ப் பைத்தியம், இறை நம்பிக்கை வேண்டியதுதான், அதற்காக எல்லாவற்றுக்கும் கருத்தாக ஒரே வசனத்தைத் திருப்பித் திருப்பி எழுதுவீர்களா? உங்கள் பெயரில் உள்ள "தமிழ்" என்பதை எடுத்துவிடுங்கள். வெறும் "பைத்தியமாகவே" இருக்கட்டும்.

<_<:lol: ரகு என்ன கடுப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழத்துக்கள் வீரர்களே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைத் தீவுப் பகுதியில் சிறிலங்காப் படைகளின் பீரங்கித் தளம் விடுதலைப்புலிகளால் தாக்கியழிப்பு

சிறிலங்காப் படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்ககுமிடைய

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகளுக்கு விமர்சனங்களும், விளக்கங்களும், வியாக்கியானங்களும் எழுதி எதிரிக்கு - எதிரியின் உளவு நிறுவனங்களுக்கு - கள நிலை தெரியப் படுத்த யாழ் களம் இருக்க வேண்டாம். எம்முள் செய்திகளைப் பகிர்வோம். ஆவன செய்ய முடிந்தவற்றைச் செய்வோம்.

Edited by Punithan

எங்கட பெடியக்கள் இனி அடிக்கத்தொடங்கிட்டாங்கள் நாங்கள் எல்லாம் விரதமிருந்து மொட்டையடித்து மஞ்சள் தடவி வண்டியிலும் கு^^^^^^லும் நாமம் தடவி.

காதில பூவும் சுத்தி.... சொறி சொறி காதில பூவும் குத்தி, தோப்புக்கரணமும் போட்டா தமிழீழம் விரந்துவரும். இதெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மை.

Sooravali Ragu உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையெண்டால் .... ....பொத்திக்கொண்டு இருங்கோ அல்லது ஏதாவது உருப்படிய செய்யுங்கோ அதை விட்டுட்டு சும்மா வியாக்கியானம் கதைக்கதைங்கோ <_<

நம்பிக்கைகள் இலக்கையடைய வேண்டுமானால் அதற்கு செயற்பாடு என்பது முக்கியம்.

தேவிபுர ஊடறுப்புத் தாக்குதல்களில் 500-க்கு அதிகமான படையினர் பலி! 1000-க்கு அதிகமான படையினர் காயம்!

விடுதலைப் புலிகளின் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றில் 500-க்கும் அதிகமான சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 1000-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலைக்கு தெற்கே அமைந்துள்ள தேவிபுரத்தினுள் ஊடறுப்புத் தாக்குதலை தொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் சிறீலங்காப் படையினருக்கு பலத்த ஆழணி உயிரிழப்புகளை ஏற்பட்டுத்தியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் 58வது படைப்பிரிவின் 3 கொம்பனிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. கடந்த இரு நாள் நடந்த ஊடறுப்புத் தாக்குதல்களில் 500-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1000-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

ஊடறுப்புப் தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளினால் சிறீலங்காப் படையினரின் படைக் கருவிகள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறீலங்காப் படையினரின் படைக்கருவிகளை பயன்படுத்தி கடந்த இரு நாட்களும் படையினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி, பல சதுரகிலோ மீற்றர் நிலப்பரப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ந தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகள் கடந்த திங்கட்கிழமை இரவு தளம் திரும்பியுள்ளன.

http://www.pathivu.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sooravali Ragu உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையெண்டால் .... ....பொத்திக்கொண்டு இருங்கோ அல்லது ஏதாவது உருப்படிய செய்யுங்கோ அதை விட்டுட்டு சும்மா வியாக்கியானம் கதைக்கதைங்கோ <_<

:lol: அப்படி நல்லாய் சொல்லுங்கோ அக்கா. :lol:

Sooravali Ragu உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையெண்டால் .... ....பொத்திக்கொண்டு இருங்கோ அல்லது ஏதாவது உருப்படிய செய்யுங்கோ அதை விட்டுட்டு சும்மா வியாக்கியானம் கதைக்கதைங்கோ <_<

கடவுள் நம்பிக்கை ஒருவகயெண்டா நம்பிக்கை இல்லாமல் இருப்பது இன்னொருவகை.

இரண்டு முறைமையும் மனிதர்களாலேயே பின்பற்றப்டுகிறது அப்போ எல்லாருக்கும் சம சந்தர்ப்பம் தானே.... விளங்கவில்லையா சம உரிமைதானே?

அப்பிடியிக்குக்கும்போது கடவுள் நம்பிக்கை தும்பிக்கையெண்டு நீங்கள் சொல்வதால் நாங்களும் பாதிக்கப்படுகிறோம்... அதுக்கு என்ன செய்யப்பொறிங்கள். சம உரிமை இல்லையென வாதிடப்போறிங்களா?

தனிப்பட்ட ரீதியில் எல்லோருக்கும் ஒரு தெரிவிருக்கலாம் அது தவறில்லை ஆனால் அதை நீங்கள் கருத்துக்களத்தில் கொணந்து வைச்சுப்போட்டு எங்களை சும்மா இருக்கசொல்வது சிங்களத்தனமா இல்லா இருக்கு?

எதிர்க்கருத்தையும் எற்கப்பழகுங்கோ.... சாமி சந்தனம் மட்டும் பூசாமல் கொஞ்சம் மூளைய பாவியுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

தீரத்துடன் களமாடிய வீரர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!!

Sooravali Ragu உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையெண்டால் .... ....பொத்திக்கொண்டு இருங்கோ அல்லது ஏதாவது உருப்படிய செய்யுங்கோ அதை விட்டுட்டு சும்மா வியாக்கியானம் கதைக்கதைங்கோ <_<

பிறகு எதுக்கு சண்டை பிடிச்சு எங்கட பெடியளின் உயிரை குடுக்க வேணும்..? முருகனுக்கு அலகு குத்தி பறவை காவடி எடுத்தால் தமிழீழம் கிடைக்கிற மாதிரி செய்ய ஏலாதோ....??

விடுதலைபோரில் இதுவரை உயித்தியாகம் செய்த அத்தனை மாவீரர்களும் சாமி சன்னியாசமெண்டு போகவில்லை, அவர்கள் எந்தஒரு மத்தத்தின்பாலும் தியாகம் செய்யவில்லை, அவர்களின் ஈகமெல்லாம் மதவாதத்திற்கு அப்பார்ப்பட்டது அதையும் விட தூய்மையானது.

போராட்ட சந்தர்ப்பத்தில் மரணங்களையும் அவலங்களையும் சாட்டாகவைத்து மதம்மாற்ற தவவுசெய்து இந்த கருத்துக்களத்தை பாவியாதேங்கோ... குறைஞ்சது இந்த திரியையாவது விடுங்கோ. இது இறந்த உடலங்களுடன் புனரும் சிங்களவங்களைவிட அசிங்கமானது.

  • கருத்துக்கள உறவுகள்

Sooravali Ragu உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையெண்டால் .... ....பொத்திக்கொண்டு இருங்கோ அல்லது ஏதாவது உருப்படிய செய்யுங்கோ அதை விட்டுட்டு சும்மா வியாக்கியானம் கதைக்கதைங்கோ :D

நீங்கள் சொல்வதை பார்த்தால் எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா என தெரியவில்லை :lol::lol:<_<

தேங்காய் அடிச்சு காவடி தூக்கினால் தமிழீழம் வந்து விடாதுங்கோ அதுக்கு எல்லோரும் தங்களை அற்பணிக்க வேணும் :lol:

Tigers blast 6 Sri Lankan artillery positions in Vanni

[TamilNet, Wednesday, 11 March 2009, 11:54 GMT]

...............

3 Black Tiger commandos died in the mission.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28685

கரும்புலிகள் மூவர் வீரச்சாவடைந்துள்ளனர்...

வணக்கங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

களமாடி வித்துடலான மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

களமாடிய வீரர்களுக்கு வணக்கங்கள்.

கரும்புலிகள் மூவர் வீரச்சாவடைந்துள்ளனர்...

விடுதலைக்காய் களமாடி, எதிரியின் தளத்தை கைப்பற்றி , வெற்றியுடன் வீழ்ந்த வேங்கைகளுக்கு வீரவணக்கம்

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீர வணக்கம் தோழர்களே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.