Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணத்துக்கு வெகு அருகில்.. நான் செய்ய வேண்டிய கடமைகள்: பிரபாகரன் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sweatdreams.jpg

புத்தகங்கள்,காயமுற்ற போராளிகள், செஞ்சோலை சிறுபிள்ளைகள் இவர்களோடே அதிக நேரம்செலவிடுவதாய் பிரபாகரன் அவர்கள் நேர்காணலில் கூறியிருந்ததால் காயமுற்ற போராளிகள் இல்லத்தையும், யுத்தத்தில் பெற்றோரை இழந்த பிஞ்சுகளுக்கு தானே தகப்பனாகி, அவர்களைத் தாலாட்டும் தாய்மடியாய் அவர் உருவாக்கிய செஞ்சோலை இல்லத்தையும் தரிசிக்க விரும்பினேன். அடுத்தநாள் காலை காயமுற்ற பெண் போராளிகள் இல்லத்திற்கு கூட்டிச் சென் றார்கள்.

முல்லைக்கொடி படர்த்திய புறவேலி. வெயில் நிறுத்தம் செழித்த தென்னை மரங்கள். நீர்தெளித்த முற்றம். நாற்புறமும் பூச் செடிகள். என் தெய்வம் வாழும் இடமொன்று கண்டேன். இருபது படுக்கைகள் இருந்திருக்கு மென நினைக்கிறேன். அனைவருமே இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள்ளான பெண் போராளிகள். பாதிப்பேர் முதுகெலும்பில் காயம்பட்டு கழுத்துக்குக் கீழ் முழுதாக அசைவும்,உணர்வும் இழந்தவர்கள். மீதிப்பேர் இடுப்புக்குக் கீழே செயல்திறன் இழந்தவர்கள். கட்டிலில் உடலும் களத்திலே உணர்வுமாய் படுத்திருந்த அப்பிள்ளைகளின் புன்னகைபோல் பூமியில் வேறு எவரிடத்தும் நான்பார்த்ததில்லை. உணராத உணர்வொன்று ஈர்த்தென்னை ஆட்கொண்டு விழி நீராய் வெளிப்பட்ட இரண்டாவது திருக்கோயிலில் நின்றிருந்தேன். முதற் கோயில் பிரான்சு நாட்டிலுள்ள லூர்து மாதா திருத்தலம்.

களமாட முடியாத கவலையின்றி நிரந்தரமாய் படுக்கையிலாகிவிட்ட துயரம் கடுகளவும் அந்தப் பிள்ளைகளுக்கு இருக்கவில்லை. உடல் செயலற்று செத்ததுபோல் ஆனாலும் வெம்பகை முடித்து தமிழீழம் வெல்லும் வேகம் மட்டும் குறையவில்லை. வார்த்தைக்கு வார்த்தை "தமிழீழம் வெல்லும்' என்றார்கள்.

""இஞ்செ வாங்கோஃபாதர்'' என்று உரிமையோடு அருகில் அழைத்தார் மதி என்ற போராளி.

""நானும்கேத்தலிக் (ஈஆபஐஞகஒஈ) தான் ஃபாதர். அரியாலை சர்ச், சிஸ்டர் (கன்னியாஸ்திரி) ஆக வேண்டி கான்வென்ட்லெ படிச்சுக் கொண்டிருந்தப்பதான் ஒருத்தருக்கும் சொல்லாத இயக்கத் துக்குப் போனேன். எங்கட நாட்டு நிலையிலெ கான்வென்ட்லெ இருக்கிறதும் புலிகள் இயக்கத்திலெ இருக்கிறதும் ஒன்றுதானே ஃபாதர். கஷ்டப்படாத சனத்துக்காகவும், நீதிக்காகவும் தானே இயேசப்பா சிலுவையிலெ மரிச்சார்? சரிதானே, சொல்லுங்க ஃபாதர்'' என்றார். வரலாற்றில் வந்து போன தேவகுமாரர்களை நமது காலத்திற்கேற்றபடி மீள் கண்டெடுத்தல் செய்யும் கடமை தங்களுக்கு உண்டு என கருதியும் எழுதியும் வரும் எனக்கு தனது கடவுளை தமிழீழப் போர்க்களத்திற்கு கொண்டு வந்து நிறுத்திய மதி, மிகுந்த மனநிறைவுதந்தார்.

அப்போல்லோ மருத்துவமனை உயர் பராமரிப்பு பார்த்திருக்கிறேன். ஸ்ரீ ராமச்சந்திராவில் நானே அனுபவித்திருக்கிறேன். தேர்ந்த மருத்துவர்கள், தூய்மை, சரியான மருந்து, நல் உணவு, நேசம் தோய்ந்த கண் காணிப்பு இவைதான் உயர்தர பராமரிப்பின் வரையறையெனக் கொண்டால் அப் போராளிகள் பராமரிக்கப்பட்டவிதம் அப்போல்லாவைவிட ஸ்ரீராமச்சந்திராவை விட மேல்.

உக்கிரபோர் நடக்கும் காலத்தில்கூட வாரம் ஒரு மாலைப்பொழுது இவர்களோடுதான் இருப்பாராம் பிரபாகரன். சாக்லெட் கொண்டு வருவார், அவர்களோடு உணவருந்துவார். களத்தின் கதைகள் பேசிக்கொண்டிருப்பார் என்றார்கள்.

இடுப்புக்கு கீழே செயலிழந்து ஆனால் இரு கைகளும் நன்றாயிருந்த போராளிகளுக்கு கம்ப்யூட்டர் கல்வி கற்றுக்கொடுக்கும் ஏற்பாடுகளை பிரபாகரன் செய்திருந்தார். ஒரு கை இழந்த போராளி ஒருவருக்கு ஜெர்மனியில் எலக்ட்ரானிக்கை விற்கப்படுவதை அறிந்து 46 லட்ச ரூபாய் செலவில் வாங்கிப் பொருத்தியிருக்கிறார்..

உடல்வலி தவிர்த்தலும், உயிரைக் காத்தலும் பொதுவாக சராசரி மனித வாழ்வின் முதன்மையான அக்கறைகள். அதற்காகவே நமது முயற்சிகள், போராட்டங்கள்,சமரசங்கள், சரணடைதல்கள், பொய்கள், அடிபணிதல்கள் அனைத்தும் அமைகின்றன.

இங்கே ஈழ நிலத்தில் அச்சமில்லா புன்னகையோடு மரணத்தை எதிர்கொண்டு உயிரினை ஈகை செய்ய ஆயிரமாயிரம் இளையர்கள் அணிவகுத்து நிற்பதை எண்ணி காரணங்களும் விடைகளும் தேடிய நாட்கள் உண்டு. தங்களது தமிழ் இனத்தின் நீண்ட துன்பவரலாற்றை முடிவுக்குக் கொண்டுவரும் தமிழ் ஈழக் கனவு மட்டுமே அத்

தியாகத்திற்குக் காரணம் என அதுவரை நான் எண்ணியிருந்தேன். ஆனால்பிரபாகரன் என்ற தலைவனின் நேசமும் அதற்குக் காரணம் என்பதை காயமுற்று அசைவின்றிக் கிடந்த இப்போராளிகளின் திருக்கோயிலில் நின்று அறிந்தேன், அகம்நிறைந்தேன்.

அப்போது தாரணிஎன்ற போராளி. ""ஃபாதர்... நீங்க சிவசங்கரியின்டெ கடிதம் வானொலியிலெ படிச்சினிங்களே... சிவசங்கரியின்டெ பருத்தித்துறைதான் என்டெ ஊரும். பள்ளிக்கூடத்திலேர்ந்து நேரா இயக்கத்துக்கு ஓடி வந்திட்டேன். மூன்டு மாசத்துக்குப் பிறகுதான் கேட்டு கேட்டு அம்மா வந்து அழுதது. எனக்கும் அன்டு ரா முழுக்க அழுகையாத்தான் இருந்தது. என்னெண்டு செய்ய ஃபாதர்...சிங்கள ஆமிக்காரன் பள்ளிக்குப்போற எங்கட பிள்ளையள தினமும் சோதனையிடுறகாலம் முடியணும். எங்கட தலைவர் காலத்திலேயே முடியணும்''.

அரைநாள் அப் பரிசுத்த தேவதைகளின் கதைகள் கேட்டேன். ஒவ்வொருவரோடும் தனித்தனியாகப் புகைப்படம் எடுக்க வற்புறுத்தினார்கள்.. ஒரு வாரத்திற்குள் புகைப்பட பிரதிகள் அனுப்ப வேண்டு மென்றும் உத்தரவிட்டார்கள். அவர்களுடனான உரையாடலில் அறிந்து உறைந்து போன முக்கியமான உண்மையொன்று என்னவென்றால் அங்கிருந்தவர்களில் முக்கால்வாசிப் பேர் படுகாயமுற்றது.

சிங்களராணுவத்துடனான சண்டைக்களத்தில் அல்ல, சமருக்குத் தங்களையே ஆயத்தம் செய்த பயிற்சி முகாமில் என்ற விபரம். நிஜமாகவே ஆடிப் போனேன்.

பயிற்சி முகாம் பார்க்க ஆசைப்பட்டேன். அனுமதி கடினம். சாத்தியமில்லை என்றார்கள்.

அப்போதைய அரசியற்பிரிவு பொறுப் பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் கால்பிடிக்காத குறையாய் கெஞ்சினேன். ஒருவாரகால போராட்டத்திற்குப்பின் பயிற்சிப் பிரிவிற்குப் பொறுப்பான...இரு வாரங்களுக்கு முன் தலைவரைப்பாதுகாத்து வீரமரணமடைந்த கடாஃபி அவர்களோடு தொடர்பு ஏற்படுத்தித் தந்தார்.மெய்சிலிர்க்கும் பயிற்சி முகாம் அனுபவத்தை பின்னர் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பிரபாகரன் அவர்களுடன் நேர்காணல் எளிதாய் நடந்துவிட பயிற்சி முகாம் பார்க்க ஒருவார போராட்டமென்றால் அதன் முக்கியத்துவத்தைநீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள், காத்திருங்கள்.

விடைபெறுமுன்அத்தனை பிள்ளைகளும் சேர்ந்து என்னைக் கேட்டது... ""ஏன் ஃபாதர் இந்தியா எங்கட போராட்டத்தை அழிக்க நினைக்குது? எங்கட சனத்தையும் இந்தியாவையும் விட்டா உலகத்துல எங்களுக்கு வேற யார் ஃபாதர் இருக்கிறாங்கள்? இந்தியா மனசுவெச்சா எங்களுக்கு கெதியிலெ தமிழ் ஈழம் கிடைக்கும்.'' இன்றும் அவ்வப்போதுஎன்னைப் பிராண்டும் அப்பிள்ளைகளின் கேள்வி : ""எங்கட சனத்தையும் இந்தியாவையும் விட்டா உலகத்துல எங்களுக்கு வேற யார் இருக்கிறார்கள்?''

விடுதலைப்புலிகளின் நுண்கலைப் பிரிவிற்குப் பொறுப்பாளராயிருந்த சேரலாதன்தான் என்னை தன் வாகனத்தில் கூட்டிச் சென்றிருந்தார்.

"மீண்டும் உங்களை சந்திக்கவருவேன்'' என்று கூறி வணங்கிப் புறப்பட்டேன்.

அடர்ந்து கனத்த கனவெளிபோல் மனது நிறைந்திருந்தது. எவருக்கும் தெரியாமல் பூத்துச் சிரிக்கும் காட்டுப்பூக்கள் பல்லாயிரமாய் என்னுள் கண்சிமிட்டி மலர்ந்திருந்தன. என்லூர்து மாதா திருத்தலம்போல் இங்கும் நான் கழுவப்பட்டிருந்தேன். சமீபத்தில் கிளிநொச்சி நகர் சிங்கள ராணுவத்திடம் விழுந்தபோது என் நினைவுக்கு வந்து என்னை தவிக்கவிட்டது காயமுற்ற இத்தேவதைகள்தான். ""கடவுளே, மாதாவே இப்பிள்ளைகளை காத்தருள்வீர்'' என்று அதிகாலைவரை ஓரிரவு மன்றாடினேன். நக்கீரன் வாசகர்களே, காட்டுக்குள் இப்பிள்ளைகள் எத்தீங்கும் நேராமல் நல்ல செய்திகள் பிறக்கும் பிறிதொரு நாளுக்காய் உயிர்வாழ வேண்டுமென நீங்களும் உங்கள் விருப்ப தெய்வங்களை மன்றாடுங்கள்.

இன்று உணர்வாளர்கள் அனைவரது மனதிலும் எழுகின்ற கேள்வி, ""பிரபாகரன்எங்கிருக்கிறார்?'' இதனை நான் எழுதுகையில் சிங்கள ராணுவம் முல்லைத்தீவில் தமிழ் மக்கள் மீது இறுதி யுத்தம் தொடங்கிவிட்டது. ஞாயிறு இரவு தொடங்கி திங்கள் நண்பகலுக்குள் 1100 தமிழர்கள் கொல்லப்பட்டு 1700க்கும் மேல் படுகாயமடைந்துள்ளனர்.

பிரபாகரன் சரணடைய 24 மணிநேரம் சிங்களம் கெடு விதித்துள்ளது. களநிலையை உள்ளுணர்வோடு யூகிக்க மட்டுமே முடிகிறது. பிரபாகரன் முல்லைத்தீவில் இல்லை என்பதே என் கணிப்பு. படையணிகளும் எதிர்காலப் போராட்டத்திற்காய் பல திசைகளிலும் பிரிந்து சென்றுள்ளார்கள்.

""எனதுசாம்பல்கூட எதிரிகள் கையில் கிடைக்கக் கூடாது'' என தன்னுடன் நிற்கும்தோழர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார் பிரபாகரன். எனது நேர்காணலின் போதுமரணத்திற்கு வெகு அருகில் தான் சென்று வந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

இயற்கை உங்களை ஏதோ ஒன்றிற்காய் காத்து வருகிறதெனக் கருதலாமா?'' என்று கேட்டேன். ""நான் செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் இருப்பதாக இயற்கை நினைக்கிறது போலும்'' என சிரித்துக்கொண்டே சொன்னார்.

மனிததர்மங்கள் முழுவதுமாய் தோற்கிறபோது இயற்கை இறங்கி வரும். காடுகளுக்குள் துன்புறும் அப்பாவி மக்களைப்போல் வேடமிட்டு சிங்கள சிறப்பு அதிரடிப்படைபிரிவுகள் பிரபாகரன் வருகைக்காய் காத்திருப்பதாய் செய்திகள் வருகின்றன. ஈழத்து எல்லைகளின் காவலன் நல்லூர் முருகன் துணையிருப்பான். பிரபாகரன்அவர்கள் சொன்ன இன்னும் பல விஷ யங்கள்...

நன்றி: நக்கீரன் வாரஇதழ்

Edited by pepsi

மிகவும் உருக்கமானது....நானும் அனைவருடன் இணைந்து தொழுகின்றேன் எங்கள் மக்களிற்காகவும், போராளிகளுக்காகவும் எங்கள் தேசிய தலைவர் தமிழின் ஒளி, பிரபாகரனுக்காகவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி நெஞ்சு விம்மி வெடித்து நான் அழுதததில்லை....!! இன்று அலுவலகத்தில் இருந்தும் கூட கண்ணீரை என்னால் கட்டுப்படுத்தமுடியவில்லை.

உன்னத இலட்சியத்திற்காய் புறப்பட்ட எங்கள் போராளிகளையும் வழி நடத்தும் எங்கள் தலைவரையும் இறைவா!!!!!!!!!!! காத்திடு!..

மனசு முழுக்க முழுக்க பாரமாய் இருக்கிறது...ஒப்பற்ற தலைவனே நீ நீடூழீ வாழ்க! வெல்க!

மனசு இறுகிப் போய் பல நாட்களாகி விட்டது. என் பிள்ளையின் புன் சிரிப்பு கூட வெறுப்பை தரும் அளவிற்கு மரத்து விட்டது. மனைவியிடம் ஒரு வார்த்தை மனுசத் தனமாக கதைத்து பல வாரங்களாகி விட்டது. அலுவலகத்தில் எழுதி முடிக்க வேண்டிய பல program கள் அப்படியே பாதி வழியில் நிற்கின்றது.

ஆயினும் ஆயினும் விடுதலை குறித்த நம்பிக்கைகள் இன்னும் மிச்சம் இருக்கின்றன. பிரபாகரனிற்கு பின்னரான காலத்தில் கூட அது அணையாத நெருப்பாய் தகிக்க வைக்க வேண்டும் என்ற அவா பெருகி வழிகின்றது. இளைய சமுதாயத்தில் இருந்து புறப்படும் ஒளிக்கீற்றுகளின் நம்பிக்கையில் தொக்கி நிற்கின்றது எஞ்சிய வாழ்வு

  • கருத்துக்கள உறவுகள்

உன்னத இலட்சியத்திற்காய் புறப்பட்ட எங்கள் போராளிகளையும் வழி நடத்தும் எங்கள் தலைவரையும் இறைவா!!!!!!!!!!! காத்திடு!..

ஏன் கவலைப்படுகின்றீர்கள் நினைத்ததை முடிக்காமல் எங்கள் தலைவன் மாண்டிடுவாரோ? தலைவரை பற்றி நாங்களே இப்படி கவலைப்படும்போது கோழிஇறகுக்குள் குஞ்சுகளை காப்பதுபோல் காக்கும் அந்த வீரர்கள் விட்டிடுவாரோ கயவர் படை அழித்திட.

வெற்றி எமக்கு நிச்சயம்.

அழுதது போதும்

தமிழ்தங்கை உன் வழி

தெரியும் உனக்கு

உன்பணியும் தெரியும்

உனக்கு .

கண்களில் கண்ணீர் வரக்கூடாது

கண்களில் எரிமலை பிறக்கட்டும்.

அதில் தடைகள் உடையட்டும்.

கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனை வீண்போகாது. தலைவரின்பின் அணிவகுப்போம். தமிழீழத்தை பெற்றுக்கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பை வாசித்தவுடன் , என்னால் தொடர்ந்து வாசிக்க மனம் இடம் கொடுக்கவில்லை .........

பிரபாகரன் , அண்ணா உங்களுக்கு ஒன்றும் நடக்கக் கூடாது என்பதே என் பிரார்த்தனை .

பலகாலத்திற்கு முன் இந்திய வார இதழ் ஒன்றில் டாக்டர் எம்.எஸ் . உதயமூர்த்தி , சுஜாதா போன்றவர்கள் உங்களைப்பற்றி இப்படி எழுதியதை வாசித்த ஞாபகம் .

"உலகில் எத்தனையோ கோடி தமிழர் இருந்தும் , அவர்களுக்கு ஒரு நாடில்லை என்னும் ஏக்கத்தை தீர்க்க புறப்பட்ட வீரன் பிரபாகரன் ." என்று அந்த கட்டுரை தொடர்கின்றது ......

அதனை நீங்கள் பல முறை உங்கள் வீரதீர செயல்களால் நிரூபித்தும் காட்டியுள்ளீர்கள் .

எல்லாம் பதமாக வரும் போது சட்டி உடைந்த கதையாக ......

காட்டிக்கொடுக்கும் பிறப்புகள் தமிழனிடம் தொன்று தொட்டே இருக்கிறது .

இந்த உணர்வற்ற தமிழருக்காக தனிநாடு கேட்கப்போனதை இட்டு வெட்கப்படுகின்றேன் .

நாம் தமிழர் இனி குனிந்தே வாழ்வோம் . தினமும் பத்து , நூறு , ஆயிரம் என்னும் கணக்கில் மெல்ல , மெல்ல அழிந்து போவோம் .

( பிரபாகரன் அண்ணா என்று நான் உரிமையுடன் அழைப்பதை மன்னித்தருளுங்கள் )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி நெஞ்சு விம்மி வெடித்து நான் அழுதததில்லை....!! இன்று அலுவலகத்தில் இருந்தும் கூட கண்ணீரை என்னால் கட்டுப்படுத்தமுடியவில்லை.

உன்னத இலட்சியத்திற்காய் புறப்பட்ட எங்கள் போராளிகளையும் வழி நடத்தும் எங்கள் தலைவரையும் இறைவா!!!!!!!!!!! காத்திடு!..

மனசு முழுக்க முழுக்க பாரமாய் இருக்கிறது...ஒப்பற்ற தலைவனே நீ நீடூழீ வாழ்க! வெல்க!

உங்கள் கருத்து அதை விட பாரமாய் உள்ளது..

மனதை தொட்ட கட்டுரையும் நெஞ்சை தொட்ட கருத்தும்

  • கருத்துக்கள உறவுகள்

%7Boption%7Dஅப்போதைய அரசியற்பிரிவு பொறுப் பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் கால்பிடிக்காத குறையாய் கெஞ்சினேன். ஒருவாரகால போராட்டத்திற்குப்பின் பயிற்சிப் பிரிவிற்குப் பொறுப்பான...இரு வாரங்களுக்கு முன் தலைவரைப்பாதுகாத்து வீரமரணமடைந்த கடாஃபி அவர்களோடு தொடர்பு ஏற்படுத்தித் தந்தார்.மெய்சிலிர்க்கும் பயிற்சி முகாம் அனுபவத்தை பின்னர் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

:icon_mrgreen:

இந்த தளபதிக்கு ஒரு தரும் வீர வணக்கம் செய்ய வில்ல..அவர் எப்ப இறந்தார் என்றும் கூட சொல்ல வில்ல..

தீவன் அண்ணா துர்க்கா அக்கா என்று எத்தனை பெரிய ஆக்களை இழந்தாச்சு இன்று வரைக்கும் .. ஆனால் நாங்கள் அவர்களின் படங்களுக்கு ஒரு அஞ்சழி கூட செய்தது இல்லை இது வரைக்கும் :lol:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வறை தோன்றா ஒரே தமிழ் மாவீரன் என் உயிர் பிரபா தான் .அய்யா கடவுளே என் உயிரை எடுத்து கொண்டாவது என் ஆயுளை என் உயிர் பிரபாவிர்க்கு கொடு.என்னால் முடியவிள்ளை என் இனம் செத்து கொண்டு இருப்பதையும், விருந்தோம்பல் படைக்கும் என் இனம் .உணவிற்க்கு பிட்சை காரர்களை போல் அலைவதை பர்க்கும் போது ,ஆத்திரம் ,அழுகை,என் இயலாமையை நினைத்து தற்கொலை எண்ணம்,அப்படியும் தற்கொலை ஏன் செய்ய வேண்டும்,என் இனத்திற்க்கு துரோகம் செய்யும் ஒருவனையாவது போட்டுவிட்டுதான் சாகனும். நான் என்ன செய்வது.என் தலைவா நீ தப்பிவிடு நீ வேண்டும் எங்களுக்கு, வஞ்சகம் நிறைந்த உலகில்

உன் குழைந்தைகள் எங்களால் நீ இன்றி வாழ இயலுமா

சென்ற 20ம் திகதி மட்டும் வன்னியில் 1500 எம் ஈழ தமிழ் உறவகள் இன வெறி பிடித்த சிங்கள காடயர்கலாள் கௌ;ளப்பட்ட செய்தி கேடடதும் கதறி அழுதேன். இன்று ஆழிப்பேரலையாய் வந்து இறங்கி இருக்கும் இந்த செய்தியால் எனது உணர்சிகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நேயர்களே தலைவரின் பேட்டியை விட உங்களின் நம்பிக்கையின்மையயையே என்னால் ஐpரனிக்க முடியாமல் உள்ளது தலைவர் இல்லையேல் தனித்தமிழிழம் இல்லை எமக்கு. எச்சந்தர்பத்திலும் உங்களின் நம்பிக்கையை இழந்து விடாதிர்கள் அவர் வெகு விறைவில எம் கண் முன் தனித்தமிழிழத்தில் உலா வறுவார்.

இயற்கை தந்த கெடையாகி ஈழப்பிறப்பின் வேராகி இன்பத்தமிழின் உயிராகி இனிது வாழ்வாய் தமிழுயிரே உலகப் பரப்பில் தமிழர்க்காய் உருக்கி வார்க்கும் தமிழிழம் உள்ள வரையில் நீ வாழ்வாய் உரிமை பொங்க வாழ்த்துகிறோம் பிரபாகரனின் சக்திதனில் பிறக்கும் தமிழர் சுதந்தரங்கள் உரமாய் ஓங்கி வாழ்ந்திடுமே உயர்வின் ஒளியாய் வாழ்ந்திடுவீர்.

இயற்கை புதிய வடிவங்களை எடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவன் காலத்தில் தமிழீழம் கிடைக்கும்.நெருப்பாற்றை நீந்திக் கடப்பார் எம் தலைவர்.ஆகவே தமிழர்களே கவலை தவிர்மின்!கடமை உணர்மின்.

நிச்சயம் காரணம் இருக்கும்....................

பாரிய வல்லரசுகள் விளையாடும் திடலில் 30 வருஷமாய் மல்லுக்கு நிக்கிறவை, அலுக்கோசுக்கள் இல்லை......

நிச்சயம் காரணம் இருக்கும்....................

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen:

இந்த தளபதிக்கு ஒரு தரும் வீர வணக்கம் செய்ய வில்ல..அவர் எப்ப இறந்தார் என்றும் கூட சொல்ல வில்ல..

தீவன் அண்ணா துர்க்கா அக்கா என்று எத்தனை பெரிய ஆக்களை இழந்தாச்சு இன்று வரைக்கும் .. ஆனால் நாங்கள் அவர்களின் படங்களுக்கு ஒரு அஞ்சழி கூட செய்தது இல்லை இது வரைக்கும் :lol:

குட்டிப்பையன் ,

எந்த ஒரு தமிழ் இழப்புகளையும் நான் தாங்க மாட்டேன் .

இந் நேரத்தில் நீங்கள் கவலைப்படுவது விநோதமாக உள்ளது .

யாருக்கு , யார் ஆறுதல் சொல்வது என்னும் நிலைமையில் நாம் உள்ளோம் .

புரிந்து கொள்வ்வீர்கள் என்று நம்புகின்றேன் .

Edited by தமிழ் சிறி

எங்கள் தலைவர் தலைமையில் எங்கள் மண்ணை மீட்டெடுப்போம். அது நடக்கும்.

உண்ணாநிலையிலுள்ள உறவைப் பார்த்துவிட்டு கனத்த மனதுடன் தமிழீழப் பாடல்களை வானெலியில் கேட்டவண்ணம் யாழ்தளத்திற்கு வந்தேன், இதை வாசித்து கண்ணீர் கட்டுக்கடங்காமல் ஓடியது. என்ன உலகமிது? வாழ்க்கையே வெறுத்துப்போகிறது!

கல்லால் செதுக்கிய ஆண்டவனே, நீ உண்மையில் கல்நெஞ்சம் கொண்டவனா? கோடானகோடி மக்களின் கண்ணீரும், பல்லாயிரக்கணக்கான ஈழப்போராளிகளினதும், அப்பாவி ஈழத்தமிழரினதும் செங்குருதியில் நனைந்துமா உன் கல்நெஞ்சம் ஈழத்தமிழனுக்காக இளகவில்லை?

Edited by குட்டி

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவியங்களா!

நீங்களுமா?

  • கருத்துக்கள உறவுகள்

:unsure:

இந்த தளபதிக்கு ஒரு தரும் வீர வணக்கம் செய்ய வில்ல..அவர் எப்ப இறந்தார் என்றும் கூட சொல்ல வில்ல..

தீவன் அண்ணா துர்க்கா அக்கா என்று எத்தனை பெரிய ஆக்களை இழந்தாச்சு இன்று வரைக்கும் .. ஆனால் நாங்கள் அவர்களின் படங்களுக்கு ஒரு அஞ்சழி கூட செய்தது இல்லை இது வரைக்கும் :(

இது கவலைப்படுவதற்குரிய நேரம் அல்ல. போர்க்களத்தில் இழப்புக்கள் சகஜம். அதுவும் பலமான எதிரியுடனான போரில்.. இது எதிர்பார்க்கப்பட வேண்டியதே. மாண்ட வீரர் கனவு பலிக்க அதை சுமக்க நாம் தான் அவர்களின் இடங்களை நிரப்ப முன் வர வேண்டும். அதைவிடுத்து கவலைப்படுவதாலோ.. அழுவதாலோ.. எதிரிகளின் நோக்கங்களை முறியடித்து வித்தான அந்த மாவீரர்களின் கனவை நனவாக்க முடியுமா..???! எம்மில் எத்தனை பேர் வீழ்ந்த அந்த வீரர்களின் ஆயுதங்களை ஏந்தத் தயாராக இருக்கிறோம். உண்மையில் அழுவது.. கவலைப்படுவது.. ஒரு வீரனுக்குச் செய்யும் அஞ்சலியல்ல. அவன் சுமந்த இலட்சியத்தோடு அவன் விட்டுச் சென்ற ஆயுதத்தைப் பற்றிக் கொண்டு அவன் இலட்சியம் வெல்லும் வரை போராடுவது தான் உண்மையான அஞ்சலி.. எம்மில் எத்தனை பேர் இதனைச் செய்யத் தயாராக இருக்கிறோம்...??! நாம் எமக்கு ஆபத்தில்லாத வகையில் போராட்டம் அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது போல.. போராட்டம் அமையாது. உயிருக்கு வாழ்வுக்கு ஆசைப்பட்டால்.. அதிகார ஆதிக்க எண்ணம் கொண்ட மனிதர்களிடம் இருந்து சாதாரண மக்களுக்கு விடுதலை என்பது கிடைக்காது. தியாகங்கள் மூலமே ஒரு இனத்தின் எதிர்கால வளமான வாழ்வுக்கான விடுதலையை பெற்றுக் கொடுக்க முடியும். எதிர்கால சந்ததியின் வளத்துக்காக நாம் எம்மை அழிக்கத் தயாராக இருக்கிறோமா...???! நாம் இன்னொரு தீபன் அல்லது துர்க்காவாக தாயாராக இருக்கிறோமா..???! :unsure:

ஓ மரணித்த வீரனே... உன் சீருடைகளை எனக்குத்தா.. உன் ஆயுதங்களை எனக்குத் தா...!

Edited by nedukkalapoovan

:unsure:

அழுது புலம்பிறதில என்ன இருக்கு?.... எந்தக்காலத்துக்கு எது சரியான முடிவோ அதை தலைவர் எடுப்பார்.... அவருடைய வழிகால்லலில் செயற்படும் எங்கள் விடுதலைப் போராட்டத்துக்கு அழுது புலம்பி சரிவராது.

தையிரியமும் நம்பிக்கையுமெ வெற்றியை துரிதப்படுத்தும்.

இது எனக்கு ஏதோ RAW காரணுடைய வேலை போல் தெரிகிறது, இப்படியான கட்டுரைகளை இணைக்க வேண்டாம். இது எமது போராட்டத்தின் வேகத்தை குறைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.