Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்க் கள உறவுகளிடம் ஒரு பணிவான வேண்டுகோள்.

Featured Replies

சில உண்மைகள் மறைக்கப் படுவதால் இலங்கையரசின் போர் குற்றம் வெளி வராமலே போகப் போகிறது. அது மட்டுமல்லாது அவர்கள் புனைந்து விடும் கதைகளே நாளடைவில் உண்மை போல் தோன்ற வாய்ப்புள்ளது.

  • Replies 52
  • Views 13k
  • Created
  • Last Reply

15 நிமிடமாக GTV வேலை செய்யவில்லை ஏனென்று தெரியவில்லை

விடுதலைப் போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் முதன்மைப் பங்களிப்பை வழங்க வேண்டிய ஒரு நேரத்தில், பெரும் முரண்பாடுகளுக்குள் சிக்குப்பட்டிருக்கின்றோம். பெரும் ஆபத்தில் இருக்கின்றோம்.

போராட்டத்தை மக்கள் தமது கையில் எடுக்க வேண்டும்!

குறித்த நேர்காணலில் உள்ள செய்தியை இப்போதைக்குப் போட வேண்டாம் என்று இங்கு (கனடாவில்) அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை அப்படியான பெருந்துயர் தரக்கூடிய சம்பவம் இடம்பெற்றிருந்தால், எப்படி வேறு எந்த ஊடகத்துக்கும் வழங்காமல் குறித்த ஒரு ஊடகத்துக்கு மட்டுமே வழங்க முடியும்? அதேநேரம் தமிழந்நெற் போன்ற இணையத்தளங்களிலும் இதுகுறித்து எந்தச் செய்தியும் இல்லை. வழங்கப்பட்ட நேர்காணலிலும், இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் மற்றும் அது நடைபெற்ற திகதி குறித்த தெளிவான தகவலோ, ஏனய விடயங்களோ இல்லை. எதை நம்புவது?

விடுதலைப் போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் முதன்மைப் பங்களிப்பை வழங்க வேண்டிய ஒரு நேரத்தில், பெரும் முரண்பாடுகளுக்குள் சிக்குப்பட்டிருக்கின்றோம். பெரும் ஆபத்தில் இருக்கின்றோம்.

போராட்டத்தை மக்கள் தமது கையில் எடுக்க வேண்டும்!

தெளிவாக சொல்லமாட்டிர்களோ?

வினித்,

எதை தெளிவாகச் சொல்வது? தற்பொழுது பத்மநாதன் துரோகி ஆகி விட்டார். ஜீரிவி சிங்களத்திற்கு விலை போய் விட்டதாம்.

ஏன் சும்மா எங்களுக்கு தேவை இல்லாத வேலை? பேசாமல் ஏதாவது சினிமா விமர்சனம், கிசு கிசு எழுதி விட்டு கிடக்க வேண்டியதுதான்.

முப்பது ஆண்டுகளாக இந்தக் குரங்குகளை அந்தப் பெருந் தலைவர் எப்படி வழி நடத்தினார் என்று சிந்திக்க பெரும் வியப்பாக இருக்கின்றது.

உண்மையை ஏற்றுக் கொள்ள பக்குவமில்லாமல் அனைத்தையும் பொய் என்று நம்புவதும் எல்லோரையும் துரோகிகள் ஆக்குவதும் போராட்டத்திற்கு எந்த விதத்திலும் வலு சேர்க்கப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க வேண்டாம்..! தலைவர் குறித்த செய்தியை புலிகள் தவறு என்று சொல்லிவிட்டார்கள். பத்மநாதன் ஐயா வேறு ஏதோ சொல்லியிருப்பதாகச் சொல்கிறீர்கள்..!

உண்மை எதுவாகவும் இருந்துவிட்டுப் போகவும்..! ஆனால் தலைவரின் செய்தியைக் கொண்டு போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் திட்டம் நன்றாகவே நடந்து கொண்டிருப்பது மட்டும் தெளிவாகவே தெரிகிறது.

தலைவர் குறித்த இந்தச் செய்தியை எமக்கு நன்மையாகப் பயன்படுத்தக்கூடிய நல்ல வாய்ப்பும் தற்போது இருக்கிறது..! அதைக்கொண்டு நாம் எமது அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முன்வரவேண்டும்.

எங்களின் உணர்வுகளுடன் விளையாடுவதே இவர்களுக்கு வேலையாகிவிட்டது. நேற்றையதினம் கனடாவில் தலைவர் இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டு பின்னர் ஒரு கூட்டம் நடைபெறும் அதற்கு வாருங்கள் என்றுவிட்டு அங்கு சென்றபோது நாங்கள் சும்மாதான் சொன்னோம் என்றார்களாம்.

தற்சமயம் நான் நெடுமாறன் அவர்களுடன் தொடர்பு கொண்ட போது அவருடைய உதவியாளர் இந்த செய்தி பொய்யானது பத்மநாதன் யாருடையதோ வற்புறத்தலுக்காக இப்படி அறிக்கைவிட்டுள்ளார் என்று சொன்னார் என்னதான் நடக்கின்றது. இப்படி ஏன் எங்கள் உணர்வுகளை சாகடிக்கின்றார்கள் யாரொல்லஈாம் விலைபோகின்றார்கள் :unsure::D:lol::lol::lol::lol:

இப்பொழுதாவது தலைவர் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்தை நிறுத்தி விட்டு எமது பிரதான பணிகளை முன்கொண்டு செல்வோம்.

தமிழினத்தின் அடிமைத் தளையை அகற்ற முயன்ற ஒரு போராட்ட இயக்கத்திற்குப் பயங்கரவாதப் பட்டம் சூட்டி அதன் இராணுவ பலத்தைச் சிதைப்பதில் வெற்றி கண்டுவிட்ட சர்வதேசத்திடம் கேள்வி கேட்க வேண்டிய நேரமிது..

சிங்களத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்லுங்கள் செல்லுங்கள் என்று குரல் கொடுத்த சர்வதேச நாடுகள் அவர்கள் தொடர்ந்து அடைத்து வைக்கப்பட்டிருப்பதை நிறுத்துவதற்கு என்ன செய்யப் போகிறார்கள்

சர்வதேச தொண்டு நிறுவனங்களை அந்த முகாம்களில் அனுமதிப்பதற்கும் அந்த மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் என்ன செய்யப் போகிறார்கள்.

நியாயமான அரசியல் தீர்வு, என்று அடிக்கடி கூறி வந்த சர்வதேச நாடுகள் அந்தத் தீர்வை சிங்கள அரசு அமுல்படுத்த எந்தவிதமான நெருக்குவாரங்களைக் கொடுக்கப் போகின்றார்கள்?

இத்தகைய அழுத்தங்களைச் சர்வதேசத்திற்குக் கொடுப்பதற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் பெரும் போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்வைக்க வேண்டிய நேரமிது.

அதைச் செய்வோம்.

பிரபாகரன் கடவுளுக்கு நிகரானவர் உலகத்தமிழர்களின் நம்பிக்கை அவர்மரணிக்கவில்லை.

தேசியத்தலைவர் உணர்வுள்ள எல்லா தமிழர்களின் இதயங்களில் வாழ்கிறார்

அவர் தனிமனிதரல்ல உலகத்தமிழர்களின் நம்பிக்கை. கடவுள் இருக்கிறார் என்று நம்புவதைப்போல் அவர் எங்களோடு இருக்கிறார் அவர் எங்களுடைய போராட்டத்துக்கு துணை நிற்பார். அவருடய வழியில் தொடர்ந்து போராட எல்லோரும் உறுதி எடுத்துக்கொள்வோம். இலட்சிய வீரர்கள் தோற்றதும் இல்லை மரணிப்பதும் இல்லை.

Edited by suryaa

போயும் போயும் விடுதலைப்புலிகளால் துரோகிகள் என கூறப்பட்ட பீப்பீப்சீயிடமா செய்தியை உறுதிப்படுத்தினார்?

இப்பொழுதாவது தலைவர் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்தை நிறுத்தி விட்டு எமது பிரதான பணிகளை முன்கொண்டு செல்வோம்.

தமிழினத்தின் அடிமைத் தளையை அகற்ற முயன்ற ஒரு போராட்ட இயக்கத்திற்குப் பயங்கரவாதப் பட்டம் சூட்டி அதன் இராணுவ பலத்தைச் சிதைப்பதில் வெற்றி கண்டுவிட்ட சர்வதேசத்திடம் கேள்வி கேட்க வேண்டிய நேரமிது..

சிங்களத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்லுங்கள் செல்லுங்கள் என்று குரல் கொடுத்த சர்வதேச நாடுகள் அவர்கள் தொடர்ந்து அடைத்து வைக்கப்பட்டிருப்பதை நிறுத்துவதற்கு என்ன செய்யப் போகிறார்கள்

சர்வதேச தொண்டு நிறுவனங்களை அந்த முகாம்களில் அனுமதிப்பதற்கும் அந்த மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் என்ன செய்யப் போகிறார்கள்.

நியாயமான அரசியல் தீர்வு, என்று அடிக்கடி கூறி வந்த சர்வதேச நாடுகள் அந்தத் தீர்வை சிங்கள அரசு அமுல்படுத்த எந்தவிதமான நெருக்குவாரங்களைக் கொடுக்கப் போகின்றார்கள்?

இத்தகைய அழுத்தங்களைச் சர்வதேசத்திற்குக் கொடுப்பதற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் பெரும் போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்வைக்க வேண்டிய நேரமிது.

அதைச் செய்வோம்.

போயும் போயும் விடுதலைப்புலிகளால் துரோகிகள் என கூறப்பட்ட பீப்பீப்சீயிடமா செய்தியை உறுதிப்படுத்தினார்?

இதிலிருந்தே தெரியவில்லை நம்பகத்தன்மை பற்றி. இப்போது கனடாவிலும் வீரவணக்கம் செலுத்துகிறார்கள்.

அறிவழகன் எனப்படும் உலக புலனாய்வு செயலாளரை அறிமுகம் செய்தது தமிழ்நெட் இணையத்தளமே. எனவே, தமிழ்நெட் இணையத்தளமே பல குழப்பங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கின்றது.

தமிழ்நெட் இணையத்தளம் இந்தச் செய்தியை உடனடியாக தெளிவுபடுத்தவேண்டிய பாரிய பொறுப்பு இருக்கின்றது. அறிவழகன் என்பவர் யார்? இவரை நியமித்தது யார்? இவர் புலிகளின் சர்வதேச புலனாய்வு செயலாளர் என்பதை எப்படி நம்புவது? உண்மையாக இருக்கலாம். பொய்யாக இருக்கலாம்.

முதலில் அறிவழகன் என்பவரை சர்வதேச தொடர்புகள் தலைவருடன் தொடர்புகொள்ளச் சொல்லுங்கள். அல்லது சர்வதேச தொடர்புகள் தலைவரிடம் அறிவழகன் பற்றி கேளுங்கள். நன்றி!

நம்பகத்தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன் - பழ.நெடுமாறன்

விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19-05-2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார். இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19-05-2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார். இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சிறிதளவு கூட நம்பகத்தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள அரசும், இந்தியாவில் உள்ள சில ஊடகங்களும் பரப்பிய செய்திகளைப் போல இச்செய்தியும் நம்பகத் தன்மையற்றது. ஆழமான உள்நோக்கத்துடன் திட்டமிட்டு இச்செய்தி பரப்பப்படுகின்றது என்பதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும்.

பிரபாகரனின் சக தளபதிகளைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் உரிமை இல்லை. வேறு யார் என்ன அறிவித்தாலும் அதை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

இலங்கையில் சிங்கள இராணுவத்தின் கொடூரமானத் தாக்குதலின் விளைவாக 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களும்,போராளிகளும் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல், உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் மருத்துவ வசதியின்றி உயிருக்காக போராடி வருகின்றனர். மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு, மருந்து, குடிநீர்வசதி இல்லாமல் சாவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுத் துடிக்கின்றனர். பாதுகாக்கப்பட்ட வலயங்கள் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சித்ரவதைச் செய்யப்படுகின்றனர்.

போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒருபுறம் ஏமாற்றிக்கொண்டு மறுபறம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதலைச் சிங்கள இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இக்கொடுமைகளையெல்லாம் மறைப்பதற்காகவும், திசைதிருப்புவதற்காகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பொய்யானச் செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.

பிரபாகரன் எந்த இலட்சியத்திற்காகப் போராடி வருகிறாரோ அது இன்னமும் எட்டப்படவில்லை. தமிழீழ மக்களின் துயரம் தொடர்கிறது. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளும் தளபதிகளும் பிரபாகரனின் வழிகாட்டலுடன் அந்த இலட்சியத்தை நிறைவேற்றும் உறுதியுடன் களத்தில் போராடி வருகிறார்கள்.

சொல்லொணாத் துன்பங்களுக்கு நடுவிலும் சிறிதளவும் மனந்தளராமல் தமிழீழ மக்களுடன் உறுதியோடு போராளிகளுடன் ஒன்றிணைந்து நிற்கின்றனர். எனவே இந்தப் பொய்ச் செய்தி மீதான விவாதங்களைத் தவிர்த்து விட்டு இலட்சியத்தை முன்னெடுப்பதற்காகத் துணைநிற்கும் முயற்சிகளிலும் நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட வேண்டும். இதுதான் அவரை நாம் மதிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் உரிய அடையாளம் ஆகும்.

நன்றி: பதிவு

பத்மநாதனின் அறிவிப்பு தேசத்துரோகம் ஆகும் - வைகோ

தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரும், உலகத் தமிழர்களின் இதயநாயகனுமான பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார். அதில் எள் அளவும் எனக்குச் சந்தேகம் இல்லை. உரிய காலத்தில் தமி்ழ் ஈழத்தை வென்றெடுக்க வருவார்.

யுத்தகளத்தில் இருந்து வேனில் அவர் தப்பி ஓடும்போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்று, ஒரு பொய்ச் செய்தியை சிங்கள அரசு முதலில் வெளியிட்டது. இரண்டு நாள்கள் கழித்து, நந்திக்கடல் பகுதியில் அவர் உடல் கண்டு எடுக்கப்பட்டதாக, இன்னொரு பொய்ச் செய்தியைச் சொன்னது.

மே 19 ஆம் நாள் அன்று, ‘இதுதான் பிரபாகரனின் உயிர் அற்ற சடலம்’ என்று, முதலில் காட்டப்பட்ட அந்த உடலில், முகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்கள் பளிச்சிட்டன. முகம், நன்கு மழிக்கப்பட்டு இருந்தது. அவருடைய உடல் பருமனுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத உடல் அமைப்பு என்பதால், இது அக்கிரமமான பொய் என்பதை அறிந்து கொண்டோம்.

சில மணி நேரங்களில், வேறு ஒரு சடலத்தை சிங்கள இராணுவம் காட்டியது. இதில், வலது கண்மூடியும், இடது கண் இலேசாகத் திறந்தும் இருந்தது. முன் நெற்றியில் இருந்த காயத்தை, துணிபோட்டு மறைத்து இருந்தனர். பகைவர்கள் சுட்டு இருந்தால், உடலில் எராளமான குண்டுகள் பாய்ந்து இருக்க வேண்டும். அவரே ஒருவேளை தன்னைச் சுட்டுக் கொண்டாரா என்பதையும்

என்பதற்கு இல்லை.

தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள முடிவு எடுத்தால், வலது காதை ஒட்டினாற்போல் கன்னப் பொருத்தில்தான் ரவையைச் செலுத்த வேண்டும் என்று, அவரே போராளிகளுக்குப் பயிற்சி அளித்தவர் ஆவார். மேலும், இரண்டாவதாகக் காட்டப்பட்ட உடலும், முகத்தோற்றமும், இது சிங்கள இராணுவத்தின் செப்பிடுவித்தை, ஏமாற்று வேலை என்பதை எடுத்துக்காட்டியது.

அவரது சடலம் கிடைத்தது என்றால், அவரது குடும்பத்தினர், மெய்ப்பாதுகாப்பாளர்கள் சடலங்கள் எங்கே? என்ற கேள்விக்கு, சிங்கள இராணுவத்தின் பதில் ஏற்கத்தக்கதாக இல்லை. பிரபாகரனின் சடலம்தான் என்பதை, மரபு அணு சோதனையால் மெய்ப்பிக்க வேண்டியது சிங்கள அரசின் கடமை ஆகும். பிரபாகரனின் தந்தையார், உயிருடன்தான் இருக்கிறார்.

எனவே, அவருடைய உடம்பில் இருந்து, சோதனைக்குத் தேவையானவற்றை எடுத்து, டி.என்.ஏ. சோதனையை நடத்தி, சந்தேகத்துக்கு இடம் இன்றி, இறந்தது பிரபாகரன்தான் என்று உலக நாடுகளுக்கு, சிங்கள அரசு ஏன் அறிவிக்கவில்லை?

அவர்களிடம் இருப்பதாகச் சொல்லப்பட்ட பிரபாகரனின் சடலத்தை, அவசர அவசரமாக எரித்துச் சாம்பலாக ஆக்கி விட்டோம் இந்துமாக் கடலில் கரைத்து விட்டோம் என்று சிங்கள இராணுவத்தளபதி, கொலை வெறியன் சரத் பொன்சேகா அறிவித்ததன் மர்மம் என்ன?

இந்நிலையில், மே 18 ஆம் நாள் அன்று, பிரபாபரகன் உயிருடன் இருக்கிறார் என்று, ''சேனல் 4''என்ற இலண்டன் தொலைக்காட்சியில் அறிவித்த விடுதலைப் புலிகளின் அனைத்து உலகத்தொடர்புப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், திடீரென்று அந்தர் பல்டி அடித்து, ‘பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று அறிவித்தது, கடைந்து எடுத்த அயோக்கியத்தனமான துரோகச் செயல்

ஆகும்.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு ஏகப் பிரதிநிதியாக அறிக்கை விடும் அதிகாரம் அவருக்குக்கிடையாது. மிக அண்மையில்தான், அவர் இந்தப் பொறுப்புக்கே நியமிக்கப்பட்டார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களோடும், துரோகம் செய்து வெளியேறியவர்களோடும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, விடுதலைப்புலிகள் அமைப்பில் குளறுபடிகளை ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது. வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் பிடிக்குள் பத்மநாதன் சிக்கி இருப்பதற்கான

ஆதாரங்களும் கிடைத்து இருக்கின்றன.

தமிழ் ஈழத்தில் துன்பமும், துயரமும் சூடிநந்து, ஈழத்தமிடிந மக்கள், மனித குலம் சந்தித்து இராதஅவலத்துக்கும் அழிவுக்கும் ஆளாகி இருக்கின்றனர். ஈழத்தமிழ் இளம்பெண்கள், சிங்கள இராணுவ முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

தமிழ் இனத்தையே வருங்காலத்தில் சிங்களக் கலப்பு இனமாக்க, கொடியவன்

இராஜபக்சே திட்டமிட்டு விட்டான். இரத்த வெறி பிடித்த புத்த பிக்குகள், புராதனமான தமிழர்களின் ஊர்களுக்கு, சிங்களப் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று அறிவித்து உள்ளதை எண்ணும்போது, நம் இரத்தம் கொதிக்கிறது. ஏற்கனவே போராளிகளும், தமிழ் மக்களும் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டு விட்டனர். இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள், உணவு இன்றி,

மருந்து இன்றி, உயிர் துறக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இப்படிப்பட்ட கொடுந்துயரில் ஈழத் தமிழ் இனம் சிக்கி வதைபடும் நேரத்தில், செல்வராசா பத்மநாதனின் அறிவிப்பு மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். ஈழத்தமிழ் மக்களும், தாயத் தமிழகத்திலும், தரணி எங்கும் உள்ள தன்மான உணர்வு கொண்ட தமிழர்களும், இதைநம்ப வேண்டாம் தலைவர் பிரபாகரன் அவர்கள், உயிருடன் இருக்கிறார். தமிழ் ஈழவிடுதலைப் புலிகளின் அனைத்து உலகப் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர், அறிவழகன், தனது அறிக்கையில், பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்து உள்ளதையும்

சுட்டிக்காட்டவிரும்புகிறேன

  • கருத்துக்கள உறவுகள்

பத்மநாதனின் அறிவிப்பு உண்மையாகவும் இருக்கலாம் தேவை கருதியதாகவும் இருக்கலாம்.

இந்த அறிவிப்பு ஒரு விடயத்தை தெளிவாக உணர்த்துகிறது. தேசிய தலைவரின் பிரசன்னம் எனி நேரடியாக விடுதலைப் போராட்டத்தில் இருக்க வாய்ப்பில்லை என்பதையே. தேசிய தலைவரைக் காட்டி தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு வடுக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம்.

தேசிய தலைவர் எப்போதும் தேசிய தலைவர் தான். அந்த நிலை மாறப் போவதில்லை. ஆனால் தமிழ் மக்களின் போராட்டம் கருவறுந்து போவது மிக மோசமான நிலையையே தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும். அதைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு தேசிய தலைவரின் வேண்டுகோளிற்கு இணங்கக் கூட விடுக்கப்பட்டிருக்கலாம்.

தேசிய தலைவர் தானே தமிழ் மக்களின் போராட்டத்தின் அழிவுக்குக் காரணமாக இருக்கக் கூடாது என்பதற்காக தன்னைத் தானே அழித்தும் இருக்கலாம்.

ஆக அடிப்படையில் தேசிய தலைவரின் எதிர்பார்ப்பு என்பது தமிழ் மக்களின் விடுதலையே. அதை பெற்றுக் கொள்ள இவ்வாறான அறிவிப்புக்கள் உதவும் என்றால் அதை தேசிய தலைவர் உட்பட யாரும் எதிர்க்கப்போவதில்லை.

தடை விலக்கியாக இந்த அறிவிப்பு அமையின்.. அது தேசிய தலைவருக்கு மட்டுமல்ல முழுத் தமிழீழ தேசத்திற்கும் மிக உபயோகமாகவே இருக்கும்..! அதற்கான அறிவிப்பாகக் கூட இருக்கலாம்.

எமது பிரச்சனை தேசிய தலைவர் சார்ந்ததல்ல. எமது பிரச்சனை ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தமிழர் தேசத்தின் விடுதலை சார்ந்தது. அதுவே தேசிய தலைவரின் நிலைப்பாடும் ஆகும். தேசிய தலைவருக்கு கெளரவம் செய்ய வேண்டின் அவரின் போராளிகளின் மக்களின் கனவை நனவாக்குவதே இப்போதைய வேளையில் உலகத் தமிழ் மக்களின் கடமை.

தேசிய தலைவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதல்ல. எமது தேச விடுதலை என்பதுதான் முதன்மையானது. அதற்காகவே தேசிய தலைவர் உழைத்தார்.. வாழ்ந்தார்..! :)

-------------------

Sri Lanka's Tamil Tiger rebels have admitted for the first time that their leader Velupillai Prabhakaran is dead.

A statement issued by the Tigers said their "incomparable leader" had "attained martyrdom" and declared a week of mourning.

A spokesman for the group also told the BBC that it would now use non-violent methods to fight for Tamils' rights.

Sri Lanka's army last week released pictures it said showed Prabhakaran's body after its final offensive.

The statement from the Tamil Tigers (LTTE) said he was killed "fighting the military oppression of the Sri Lankan government" last Sunday.

The rebels had made a last stand in the north-east of the island after Sri Lankan troops cornered them in a coastal strip.

The Tigers' defeat brought to an end their 26-year fight for a separate Tamil homeland.

The statement was signed by the defeated group's head of international relations, Selvarasa Pathmanathan.

We have already announced that we have given up violence and agreed to enter a democratic process to achieve the rights for the Tamil (self) determination of our people

Selvarasa Pathmanathan

It said that the LTTE had declared a week of mourning for their dead leader, starting on 25 May.

The statement called on Tamils all over the world to "restrain from harmful acts to themselves or anyone else in this hour of extreme grief".

In a telephone interview with the BBC, Mr Pathmanathan said Prabhakaran had died on 17 May but did not give details of the circumstances.

Mr Pathmanathan said the Tigers would now use non-violent methods to fight for the rights of Tamils.

"We have already announced that we have given up violence and agreed to enter a democratic process to achieve the rights for the Tamil (self) determination of our people," he said.

Most of the Tamil Tigers senior leadership is believed to have been killed in the fighting.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8066129.stm

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தோடு இணைந்து கொண்ட, இணைந்து கொண்டிருக்கும் அனைத்து யாழ்க் கள உறவுகளுக்கும் எனது நன்றிகள். இது ஒரு கருத்தியல் ரீதியானதொரு மாற்றம் அல்லது புரிதலுக்கான தளமாக உள்ளதால் எமது மன உணர்வுகளை ஒருங்கினைப்பதும், அதனிடையேயான ஒரு புரிதலை ஏற்படுத்துதலுமே தேவையும் நோக்கமும் கூட. எனவே உறவுகளே நாம் ஒரு இறுக்கமானதும் துயரமானதும் சூழலில் நின்றவாறு எப்படி எம்மைப் புடமிட்டவாறு அடுத்த கட்டத்துள் நுளைய வேண்டுமென்பதை பெரும்பாலான தமிழர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

எந்த இறுக்கங்கள் வந்தபோதும், அணையாப் பெரும் சுடராய் வியாபித்திருக்கும், விடுதலைப் பெரு நெருப்பின் தீ நாக்குகள் நாமாகவும், தம்மை இந்த விடுதலைக்காக அர்பணித்த ஆயிரமாயிரம் மக்களையும், போராளிகளையும், தளபதிகளையும் அதனொளியாகத் தரிசித்தவாறு, எமது இலட்சியம் நோக்கி உறுதியோடு நடப்பதொன்றே இன்றைய காலமிடும் கட்டளையாகுமென்பதே உண்மையாகும். கைகளைக் கோர்ப்போம் காலத்தை வெல்லுவோம். எம் தேசத்தை மீட்போம்.

" தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் "

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசர்க்கூட்டங்களே?

அங்கை ஒவ்வொரு முகாமிலையும் விதம்விதமாய் பிரச்சனையள் இருக்கேக்கை இஞ்சை இன்னும் காத்தான் பூத்தான் சொன்னானெண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறியள்.

எங்களுக்கெண்டு ஒரு பாதை உருவாக்கிக்கிடக்கு.அதிலை இருக்கிற முள்ளுகளை விலக்கி அமைதியாய் அமசடக்காய் நடக்க வழியை பாருங்கோவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையை ஏற்றுக் கொள்ள பக்குவமில்லாமல் அனைத்தையும் பொய் என்று நம்புவதும் எல்லோரையும் துரோகிகள் ஆக்குவதும் போராட்டத்திற்கு எந்த விதத்திலும் வலு சேர்க்கப் போவதில்லை.

தலைவர் குறித்த இந்தச் செய்தியை எமக்கு நன்மையாகப் பயன்படுத்தக்கூடிய நல்ல வாய்ப்பும் தற்போது இருக்கிறது..! அதைக்கொண்டு நாம் எமது அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முன்வரவேண்டும்.

விசர்க்கூட்டங்களே?

அங்கை ஒவ்வொரு முகாமிலையும் விதம்விதமாய் பிரச்சனையள் இருக்கேக்கை இஞ்சை இன்னும் காத்தான் பூத்தான் சொன்னானெண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறியள்.

எங்களுக்கெண்டு ஒரு பாதை உருவாக்கிக்கிடக்கு.அதிலை இருக்கிற முள்ளுகளை விலக்கி அமைதியாய் அமசடக்காய் நடக்க வழியை பாருங்கோவன்

பத்மநாதனின் அறிவிப்பு உண்மையாகவும் இருக்கலாம் தேவை கருதியதாகவும் இருக்கலாம்.

இந்த அறிவிப்பு ஒரு விடயத்தை தெளிவாக உணர்த்துகிறது. தேசிய தலைவரின் பிரசன்னம் எனி நேரடியாக விடுதலைப் போராட்டத்தில் இருக்க வாய்ப்பில்லை என்பதையே. தேசிய தலைவரைக் காட்டி தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு வடுக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம்.

தேசிய தலைவர் எப்போதும் தேசிய தலைவர் தான். அந்த நிலை மாறப் போவதில்லை. ஆனால் தமிழ் மக்களின் போராட்டம் கருவறுந்து போவது மிக மோசமான நிலையையே தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும். அதைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு தேசிய தலைவரின் வேண்டுகோளிற்கு இணங்கக் கூட விடுக்கப்பட்டிருக்கலாம்.

தேசிய தலைவர் தானே தமிழ் மக்களின் போராட்டத்தின் அழிவுக்குக் காரணமாக இருக்கக் கூடாது என்பதற்காக தன்னைத் தானே அழித்தும் இருக்கலாம்.

ஆக அடிப்படையில் தேசிய தலைவரின் எதிர்பார்ப்பு என்பது தமிழ் மக்களின் விடுதலையே. அதை பெற்றுக் கொள்ள இவ்வாறான அறிவிப்புக்கள் உதவும் என்றால் அதை தேசிய தலைவர் உட்பட யாரும் எதிர்க்கப்போவதில்லை.

தடை விலக்கியாக இந்த அறிவிப்பு அமையின்.. அது தேசிய தலைவருக்கு மட்டுமல்ல முழுத் தமிழீழ தேசத்திற்கும் மிக உபயோகமாகவே இருக்கும்..! அதற்கான அறிவிப்பாகக் கூட இருக்கலாம்.

எமது பிரச்சனை தேசிய தலைவர் சார்ந்ததல்ல. எமது பிரச்சனை ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தமிழர் தேசத்தின் விடுதலை சார்ந்தது. அதுவே தேசிய தலைவரின் நிலைப்பாடும் ஆகும். தேசிய தலைவருக்கு கெளரவம் செய்ய வேண்டின் அவரின் போராளிகளின் மக்களின் கனவை நனவாக்குவதே இப்போதைய வேளையில் உலகத் தமிழ் மக்களின் கடமை.

தேசிய தலைவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதல்ல. எமது தேச விடுதலை என்பதுதான் முதன்மையானது. அதற்காகவே தேசிய தலைவர் உழைத்தார்.. வாழ்ந்தார்..! :)

அன்பான கள உறவுகளே புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்ட வீச்சை முனை மழுங்கச் செய்வதற்கான சதித்திட்டத்தின் ஒரங்கமே.இந்தச் செய்தியாகும்.இங்கே பலர் விலை போயிருக்கின்றார்கள்.என்னுடை

Edited by navam

அட சனியன்களே..

தினம் தினம் தண்ணி கூட இல்லாமல் செத்துக்கொண்டிருக்கும் எங்கட சனத்த காப்பாத்துறத்துக்கு வழிகளை பாருங்கள்.

விபரங்களை பரப்புங்கள்.

Edited by Panangkai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
  • கருத்துக்கள உறவுகள்

செல்வராசா பத்மநாதன் எவ்வளவு காலமாய் வெளிநாட்டில் இருக்கிறார் பிறகு ஏன் ஆங்கிலத்தை தட்டு தடுமாறி கதைக்குறார்? channel 4 க்குபேட்டி கொடுக்கும் போது பார்த்தேன்.

பிபிசி க்கு தான் முதலில் பேட்டி கொடுத்தாக சொன்னார்கள் அவரது நேரடியான பேட்டியை யாராவது கேட்டீர்களா?[அதாவது அவர் பிபிசிக்கு பேட்டி கொடுத்ததை]

நல்லதோ,கெட்டதோ தலைவர் செத்ததை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்றால் ஏன் உடனே சொல்லாமல் இல்லை என மறுத்து விட்டு பிறகு சொல்கிறார்?

உண்மையோ,பொய்யோ இதை கூறுவதன் மூலம் புலம் பெயர் மக்கள் போராட்டம் மழுங்கடிக்கப் போகிறது என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைவரின் கனவை நனவாக்க அனைவரும் உழைப்போம்.

உறுதியாக கூறுகின்ரேன் நம்புங்கள் நமக்கு தமிழீழமும் தலைவரும் ஒன்ராக கிடைத்திடும் நாள் வரும்! KP யின் பேச்சில் தொடக்கமே சரியில்லை அன்பான தமிழீழ மக்களே என அவரால் சொல்லகூடமுடியலை பிறகு எப்படி அவர் சுதந்திரமாக கதைக்க முடியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.