Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனனி ஜனநாயகம் தோல்வி - சுயேட்சை வேட்பாளர்களில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றார்.

Featured Replies

ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் லண்டனில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளரான ஜனனி ஜனநாயகம் தோல்வியடைந்துள்ளார். எனினும் லண்டனில் தனித்துப்போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிகூடிய வாக்குகளை ஜனனி ஜனநாயகம் பெற்றுள்ளார். 50 014(2.9 வீதம்) வாக்குகள் அவருக்குக் கிடைத்துள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் லண்டனில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளரான ஜனனி ஜனநாயகம் தோல்வியடைந்துள்ளார். எனினும் லண்டனில் தனித்துப்போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிகூடிய வாக்குகளை ஜனனி ஜனநாயகம் பெற்றுள்ளார். 50 014(2.9 வீதம்) வாக்குகள் அவருக்குக் கிடைத்துள்ளன.

மின்னல்

அவர் பெற்ற வாக்குளின் எண்ணிக்கையாலும் வீத்தத்தாலும் உண்டாகக்கூடிய சாத்கபாதகங்களை தெரிந்தால் இணையுங்கள்.

தமிழர்கள் முழுமையாக வாக்களிக்வில்லையா? அல்லது ஈவ்வளவு வீதம் தமிழர்களுக்குதான் வாக்குரிமை இருக்கின்றதா? <_< <_< <_< <_< <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஆக 50 ஆயிரம் தமிழ் மக்கள் தான் வாக்களிக்கத் தகுதியானவர்களா??? 2ஆயிரம் வாக்குகள் வேற்றினத்தவர் என்று வைத்துக் கொண்டாலும் 48 ஆயிரம் வருகிறது. நான் நினைக்கிறேன் பெரும்பாலான தமிழர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்யவில்லை என்பதே உண்மை.இருந்த போதிலும் இதன் மூலம் அரசியல் கடசிகளுக்கு ஒரு செய்தி சொல்லப் பட்டுள்ளது. பொதுவாக முன்பு தமிழர்களின் வாக்குகள் பெருமளவில் தொழிற் கட்சிக்கே கிடைத்துள்ளது. இந்த முறை தொழிற் கட்சி பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. தமிழர்கள் இந்த முடிவை வைத்து அமைப்பு ரீதியாக இயங்கி கட்சிகளுடன் பேரம் பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்படி அமைப்பு உருவாக்கப் படும் சந்தர்ப்பத்தில் முழுக்க இளைய சமுதாயமே களத்தில் வேட்பாளர்களாக இறங்க வேண்டும்.பெரியவர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தால் போதும்.இப்பொழுதே அனைத்துத் தமிழர்களும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளுங்கள். தபால் மூல வாக்காளர்களாக பதிவு செய்தால் மறதி பங்சி போன்றவை இருந்தாலும் வாக்களிக்காமல் இருக்கம் சந்தர்பங்கள் குறைவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐனனி ஜனநாயகம் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியடையவில்லை. இருப்பினும் அவர் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, ஒரு திருப்புமுனையாகவே இந்தத் தேர்தல் அமைந்திருக்கிறது. இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் மீது நடைபெறுவது ஒரு இனவழிப்பு நடவடிக்கை என்பதை நிறுவி அதனடிப்படையில் இரண்டு தேசங்கள் கொண்ட ஒரு தீர்வினை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கைக்கு இத்தேர்தல் வலுச் சேர்த்திருக்கிறது.

ஒரு சுயேட்சை உறுப்பினராக, அதுவும் மூன்று வாரங்களே பரப்புரையை மேற்கொண்ட அவர் பெற்ற 50,014 வாக்குகளும் தமிழ் மக்களின் அரசியற் பாதையில் கிடைத்த வெற்றியாகவே கருதப்படவேண்டும் முழு பிரித்தானியாவிலும் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தனித்து ஒருவராக தேர்தலில் நின்ற அவரது வாக்குகள் 16வது இடத்திலிருப்பதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேர்தல் பரப்புரைக்கு சாதகமில்லாத காலகட்த்தில் அவர் பெற்றிருந்;த வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால், பிரித்தானியா வாழ் தமிழர்களின் ஆதரவு அவருக்கு இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

ஏற்கனவே இங்குள்ள முக்கிய கட்சியொன்று ஐனனியின் பரப்புரையில் ஈடுபட்டவர்களை வரும் பொதுத் தேர்தலில் தங்களுக்காக செயற்படுமாறு கேட்டுள்ளனர் என்ற வகையில், தமிழ் மக்களின் வாக்குகளை இங்குள்ள கட்சிகள் காத்திரமானவையாக கருதுகின்றன என்று குறிப்பிட முடியும்.

சுயேட்சையாகப் போட்டியிட்டு 50 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற ஜனனிக்கும் இவரது முயற்சியில் பின்னின்று பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்.

தமிழர்கள் முழுமையாக வாக்களிக்வில்லையா? அல்லது ஈவ்வளவு வீதம் தமிழர்களுக்குதான் வாக்குரிமை இருக்கின்றதா? <_< <_< <_< <_< <_<

சோழன் நான் நினைக்கிறேன் இங்க கன பேருக்கு வாக்குரிமை கிடைக்க வில்லை.... எனக்கு தெரிந்தவர்கள் நிறைய பேருக்கு வாக்குரிமை கிடைக்க வில்லை... நான் இருக்கும் இடத்திலை கூட ஒரு தமிழ் ஆக்களும் போட போக வில்லை... ஒருவருக்கும் வாக்குரிமை கிடைக்க வில்லை...

தமிழர்கள் முழுமையாக வாக்களிக்வில்லையா? அல்லது ஈவ்வளவு வீதம் தமிழர்களுக்குதான் வாக்குரிமை இருக்கின்றதா? <_< <_< <_< <_< <_<

3 லட்சம் தமிழர்கள் இருக்கும் பிரித்தானியாவில்... 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 1.5 லட்சம் அதில் எதனை பேர் லண்டனில் வாழ்கிறார்கள்?... (காரணம் லண்டனில் உள்ளவர்கள் மட்டுமே இந்தத் தேர்தலுக்கு வாக்களிக்க முடியும்) வாக்குரிமை பெற்றவர்கள் எத்தனை பேர்??... எல்லாத்தையும் விட, புல்லுருவிகள் எத்தனை பேர்???... அதை எல்லாம் கணக்குப் பார்த்து தான் தேர்தல் பிரச்சாரம் செய்தவர்கள் உங்கள் நண்பர்களையும் ஜனனிக்கு வாக்களிக்கும் படி கேட்கச் சொல்லி சொனார்கள்...

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே, ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு இவ்வளவு வாக்குகள் இதுவரை கிடைத்ததில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் ஜனனி வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த சில கட்சிகளின் வேட்பாளர்களை விட ஜனனி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அனைத்து சுயேச்சை வேட்பாளர்களும் மொத்தமாக பெற்ற வாக்குகளை விட 2 மடங்கு அதிக வாக்குகளையும் ஜனனி பெற்றுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்துக்கு 50,000க்கும் மேற்பட்ட வாக்குகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற தேர்தலில், ஒரு சுயாதீன வேட்பாளராக நின்று, இன அழிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்த ஜான் ஜனநாயகம் அவர்கள், 50,014 வாக்குகளைப் பெற்று, பாராளுமன்றத்தில் இடம் கிடைக்காமல் போனாலும், சுயேட்சையாகப் போட்டியிட்டவர் என்ற நிலைமையில் சாதனையான முடிவையே பெற்றுள்ளார்.

வாக்காளர் பதிவு செய்தலுக்கான முடிவுத் திகதிக்கு சில நாட்களுக்கும் மற்றும் வாக்களிப்புத் திகதிக்கு 4 கிழமைகளுக்கும் முன்பே ஜனநாயகம் தேர்தலில் நிற்பது என்பது முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மிகக் குறுகிய காலத்துக்குள் எடுக்கப்பட் தேர்தல் பிரச்சாரத்தில் அவருக்கு கிடைத்த 50,000க்கும் மேற்பட்ட வாக்குகள் ஒரு வெற்றியென்றே அவரின் பிரச்சார ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

[Puthinam]

ஜனனி அவர்கள் தொடர்ந்தும் எம்மினத்துக்காக குரல் கொடுப்பார் என்று நினைகிறேன்... கொடுக்கவேண்டும் என்று தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

கொன்சவேட்டிவ் கட்சி சார்பாக போட்டியிட்ட நிரஞ்சன் தேவா என்ற இனவாதச் சிங்களவன் தென்கிழக்கு பிரித்தானியா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

http://news.bbc.co.uk/2/shared/bsp/hi/elec...ukregion_35.stm

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையைச் சேர்ந்த நிரஞ்சன் தேவாதித்யா ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் அமோக வெற்றி:

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட நிரஞ்சன் தேவாதித்யா ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் அமோக வெற்றியீட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிரஞ்சன் தேவாதித்யா, ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழ் சிங்கள மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கடந்த முறைத் தேர்தல்கள் முடிவுகளுடன் ஓப்பீடு செய்யும் போது தேவாதித்யா சுமார் 50 வீதமான மேலதிக வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

2004ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலின் போது நிரஞ்சன் தேவாதித்யா 542,006 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன், இம்முறை 814,238 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த வெற்றி ஆச்சரியத்திற்குரிய வெற்றியல்ல என அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட இலங்கைச் சேர்ந்த ஜனனி ஜனநாயகம் ஆசனமொன்றை பெற்றுக்கொள்ளக் கூடியளவு வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவில்லை.

தமிழர் இன அழிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பதே ஜனனியின் தேர்தல் பிரசார கருப்பொருளாக அமைந்திருந்தது.

ஜனனி மொத்தமாக 29 சதவீதமான வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/tamil_news....10439&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

------

ஏற்கனவே இங்குள்ள முக்கிய கட்சியொன்று ஐனனியின் பரப்புரையில் ஈடுபட்டவர்களை வரும் பொதுத் தேர்தலில் தங்களுக்காக செயற்படுமாறு கேட்டுள்ளனர் என்ற வகையில், தமிழ் மக்களின் வாக்குகளை இங்குள்ள கட்சிகள் காத்திரமானவையாக கருதுகின்றன என்று குறிப்பிட முடியும்.

சுயேச்சையாக நின்று அதிக வாக்குகளைப் பெற்று சாதனை படைத்த ஜனனிக்கு வாழ்த்துக்கள் .

நம்மூர் மாதிரி இங்கு சுயேச்சையில் நின்று வெற்றி பெறுவது கடினம் .

இனி வருங்காலங்களில் அவர் ஒரு கட்சியில் இணைந்து போட்டியிட்டால் , தேர்தல் செலவுகளும் , பிரச்சாரமும் அதிகம் கிடைக்கும் .

அதன் மூலம் வெற்றியை தனதாக்கி கொள்ளலாம் .

ஜனனி அதிக வாக்குகள் பெற்ற கடுப்பிலேயோ தெரியாது பிரித்தானிய வெளிநாட்டமைச்சர் நேற்று எமக்கெதிராக ஒரு அறிக்கை விட்டிருந்தார் .

இதே சந்தர்ப்பத்தை பயன் படுத்தி , ஸ்ரீ லங்கா வெளிநாட்டமைச்சரும் இங்கிலாந்து வந்து சந்தர்ப்பத்தை பயன் படுத்தியுள்ளார் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote name='nunavilan' date='Jun 9 2009, 05:49 AM' post='521771']

இலங்கையைச் சேர்ந்த நிரஞ்சன் தேவாதித்யா ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் அமோக வெற்றி:

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட நிரஞ்சன் தேவாதித்யா ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் அமோக வெற்றியீட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிரஞ்சன் தேவாதித்யா, ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழ் சிங்கள மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கடந்த முறைத் தேர்தல்கள் முடிவுகளுடன் ஓப்பீடு செய்யும் போது தேவாதித்யா சுமார் 50 வீதமான மேலதிக வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

2004ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலின் போது நிரஞ்சன் தேவாதித்யா 542,006 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன், இம்முறை 814,238 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த வெற்றி ஆச்சரியத்திற்குரிய வெற்றியல்ல என அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட இலங்கைச் சேர்ந்த ஜனனி ஜனநாயகம் ஆசனமொன்றை பெற்றுக்கொள்ளக் கூடியளவு வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவில்லை.

தமிழர் இன அழிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பதே ஜனனியின் தேர்தல் பிரசார கருப்பொருளாக அமைந்திருந்தது.

ஜனனி மொத்தமாக 29 சதவீதமான வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/tamil_news....10439&cat=1

Edited by MI7

கொன்சவேர்ட்டிவ் கட்சியின் பட்டியலில் 3வது இடத்தினைப்பிடிக்கும் அளவிற்கு அவர் கட்சியில் செல்வாக்குப் பெற்றுள்ளார் என்பதுதான் இங்கு கவனிக்கவேண்டியது.

்நக்கிற தொழிலை நாய் சரியாக செய்தால் இறைச்சி துண்டுகளால் பாத்திரம் நிறையும்தானே...

கொன்சவேட்டீவ் கட்ச்சி பெரும் பணக்காறர்களின் கட்ச்சி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பிய அரசியலில் அடியெடுக்கும் தமிழச்சி

ஜனனி ஜனநாயகம், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்திற்கு சுயேட்சை வேட்பாளராக நின்று 50,000 த்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளார். அவர் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு அங்கத்தவராக செல்லும் வாய்ப்பை இழந்துள்ள போதும், போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்களில் அதிகூடிய வாக்குகளை பெற்று, ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்களில் அதிக வாக்குக்கள் பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இத்தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியை தந்துள்ளதாக கூறியுள்ள ஜனனியின் தேர்தல் ஆதரவுக்குழுவினர், மூன்று வார காலப்பகுதியிலேயே இத்தேர்தலில் போட்டியிட வேண்டுமென தீர்மானித்ததாகவும், வேட்புமனுத்தாக்கல் நடைபெறுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னமே இறுதி முடிவை எடுத்ததாகவும், தெரிவித்துள்ளனர்.

எனினும்,மக்கள் அளித்துள்ள ஆதரவு, பிரித்தானியாவின் சார்பாக போட்டியிட்ட சிறிய கட்சிகள் பலவற்றிலும் பார்க்க அதிகப்படியான வாக்குகளை ஜனனிக்கு பெற்றுக்கொடுத்திருக்கிறது என அக்குழுவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு, அங்கத்துவ நாடுகளில் இருந்து மொத்தம் 736 பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகின்றனர். அதில் குறிப்பாக பிரித்தானியாவில் இருந்து மட்டும் 76 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். இதற்கு லண்டன் பிராந்தியத்தின் ஊடாக 8 பேர் தெரிவாகின்றனர். மத்திய லண்டனை பிரதிநிதித்துவப்படுத்தியே ஜனனி ஜனநாயகமும் போட்டியிட்டார்.

இதில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்களும் (479,037வாக்குகள்), ஆளும் தொழிளாலர் கட்சியை சேர்ந்த (372,590 வாக்குகள்) 2 உறுப்பினர்களும், லிபரல் டிமோகிரட்ஸ்,கிரீன் கட்சி, பிரித்தானிய சுந்ததிர கட்சி ஆகியவற்றின் தலா ஒரு வேட்பாளர்களாக 3 பேரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதேவேளை பிரித்தானிய தேசிய கட்சிக்கு 86,420 வாக்குகளும், கிறிஸ்ட்டியன் தேசிய கட்சிக்கு 51,336 வாக்குகளும் கிடைத்த போதும் ஆசனமேதும் கிடைக்கவில்லை. எனினும் அதற்கு அடுத்தபடியாக, சுயேட்சையாக போட்டியிட்ட ஜனனி ஜனநாயகம் 50,014 வாக்குகள் பெற்று இருக்கிறார்.

ஜனனியை விட கட்சிகள் குறைவான வாக்குகளையே பெற்றிருந்தன.

ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாக வேண்டுமாயின் விகிதாசார முறைப்படி 100,000 வாக்குகள் கிடைக்கப் பெற்றிருக்கவேண்டும். ஜனனி ஜனநாயகம், பிரித்தானியாவின் குடியுரிமை பெற்றவராயினும், தமிழர் தாயகத்தை பிறப்பிடமாக கொண்டவர். Tamils Against Genocide (Tag) இன் பிரித்தானிய பிரதிநிதி ஆவார். கடந்த மே 19 ஆம் திகதி பிரித்தானியாவின் வேட்புமனு தாக்கல் இடம்பெற்ற போது, அதற்கு ஒரு சில நாட்கள் முன்னமே ஜனனி போட்டியிடப்போவதாக தீர்மானித்தார். அதற்கு பின்னர் குறுகிய கால இடைவெளிக்குள் (மூன்று வாரங்களுக்குள்), ஜூன் 4 ஆம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான பிரித்தானிய வேட்பாளர்களின் தேர்தல் நடைபெற்றது. இடைப்பட்ட காலத்தினுள், மிக கடுமையாக உழைத்த, ஜனனி மற்றும் தேர்தல் குழுவினர், நீண்டகாலமாக அவர்களுக்கு இருந்த அரசியல் தொடர்பு, பிரித்தானிய தமிழ் மாணவர்கள், சமூக நிறுவன தொண்டர்கள், ஆகியோர், பிரித்தானியா முழுவதும் நடத்திய தொடர் கவனயீர்ப்புக்கள், வீடுவீடான பிரச்சாரங்கள் என்பன ஜனனிக்கு மிகப்பெரிய ஆதரவை பெற்றுக்கொடுத்துள்ளது.

பிரித்தானியாவின் பல பிரதான கட்சிகள் நீண்டநாட்களுக்கான திட்டமிடலுடன் தமது பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்ததுடன், பாரிய நிதியினையும் செலவளித்திருந்தன. எனினும் தற்போது போட்டியிட்ட பிரதான கட்சி வேட்பாளர்கள், சிறிய கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும்

ஆச்சரியமான விடயம், ஒரு சுயேட்சை வேட்பாளர் இவ்வளவு அதிகப்படியான வாக்குகளை பெற்றதே.

ஜனனிக்கு அடுத்த நிலையில் அதிக்கப்படியான வாக்குகளை பெற்றவர் பிரித்தானியா வாழ் சீன மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ஸ்டீவன் சுவெங், இவர் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 5000.

எதிர்காலத்திலும் தொடர்ந்து பிரித்தானியாவின் அரசியற்கட்சிகள், சமூக அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணி, சட்ட ரீதியான நிலைகளை எதிர்கொள்ள தாம் தயாராகி வருவதாக ஜனனியின் அரசியற்குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தாயகத்திலும் வெளிநாடுகளிலும் நடைபெற்று வரும் இனப்படுகொலைகளை கண்டித்துவருவதுடன், மனித உரிமைகள், பொதுமக்களின் சுந்ததிரம் ஆகியவற்றிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஜனனி, இத்தேர்தலின் மூலம் பிரித்தானிய சமூகத்தில் தனது அரசியல் ரீதியான ஒரு அந்தஸ்த்தையும், அறிமுகத்தையும் செல்வாக்கையும் நிலைநிறுத்தியுள்ளார்.

மேலும் தனது முயற்சிகளுக்கு பூரண ஆதரவு வழங்கி, கூட நின்று உழைத்த பிரித்தானிய மாணவ சமுதாயத்துக்கும், சமூக தொண்டூழியர்களுக்கும், தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளும், ஜனனி, வாக்களித்த அனைத்து தமிழ் மக்களுக்கும், பிரித்தானிய மக்களுக்கும், பிரித்தானிய குடியுரிமை பெற்ற சிறுபான்மை இன மக்களான குர்திஷ் இன மக்கள், ஜுவிஷ் இனமக்கள், பிரச்சாரத்திற்கு உதவிய சமூக அமைப்புக்கள், ஊடகங்கள் என்பனவற்றிற்கும் ஜனனி ஜனநாயகமும் அவரது குழுவினரும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய சமூகத்தினரிடையே, ஜனனி தனித்து போட்டியிட்டு, புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவினால் பெற்றிருக்கும் இவ் 50,000 வாக்குகள் ஐரோப்பிய முக்கிய அரசியட் கட்சிகளுக்குள் தமிழர்களை உள்வாங்ககூடிய இருப்பினை தோற்றுவிக்கும், அதன் காரணமாக தமிழர்கள் சார்பான அரசியல் நகர்வுகளுக்கு பலம் சேர்க்கும்.

-ஸாரா

  • கருத்துக்கள உறவுகள்

2004ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலின் போது நிரஞ்சன் தேவாதித்யா 542,006 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன், இம்முறை 814,238 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இவர் ஒரு கட்சிக்கு போட்டியிடும் போது வாக்குகள் கட்சிக்காக தானே போடப்படும். இவருக்கு தனிப்பட வாக்குகள் எப்படி கிடைத்தது?

ஜனனி 150000 தமிழ் வாக்காளர்கள் உள்ளனர் என்றும் இன்னும் 20000 வாக்குகள் வெளியாரிடம் பெற்றால் வெற்றி பெறலாம் என்று? மிகுதி தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லையா?

BBC கூட முன்னுரிமை கொடுக்கின்றது

http://news.bbc.co.uk/2/hi/uk_news/politics/8089744.stm

A Tamil rights campaigner won more than 50,000 votes in the European elections - making her one of the most successful independent candidates ever.

Jan Jananayagam gained more votes than some political parties in the London region and more than all the other independents in the UK put together.

The student, a spokesman for the Tamils Against Genocide campaign, was backed by some Sri Lankan community groups.

Her campaign was also boosted by the support of Oscar-nominated rapper MIA.

Ms Jananayagam has been involved in the Tamil protests taking place in Parliament Square.

Since April thousands of Tamils have staged sit-down protests and other demonstrations outside the House of Commons to call for a ceasefire in the Sri Lankan civil war.

Ms Jananayagam, a former banker who used Facebook and her own internet site to mobilise support for her candidacy, had a range of policies including financial transparency, the environment and women's rights.

But it was the alleged treatment of Tamils in her native Sri Lanka that provided the main focus for her campaign.

'Positive feedback'

She told BBC News: "It was one issue, but it appealed to a broad range of ethnic minorities generally. They identified with the wider civil liberties issues such as stop and search and how the anti-terror laws are being used to stop them.

"Ordinary people liked it. I got a lot of positive feedback on my leaflet."

Ms Jananayagam also believes she was backed as a protest vote against the anti-immigration British National Party.

"When I walked down the street, young Asian men would stop and say they had voted for me to stop the BNP getting in.

"I hadn't been talking about that, I'd been talking about genocide, but a lot of people voted for me on the wider issue."

She said it had been very difficult to tell how the campaign was going as it was "organic and chaotic" but she was very happy with the result.

'Raise questions'

There have been a number of independent MEPs elected to the Strasbourg Parliament in different member states, including the Parliament's former president Pat Cox who was twice elected in the 1990s in Ireland.

In 2004, so-called "metric martyr" Neil Herron made a splash in the North-East of England when he polled 39,658, or 5.1% of the vote, on an anti-EU ticket, although he failed to gain enough votes to be elected.

Independents have traditionally had a hard time making their voices heard in British elections - particularly at the European polls, which use a closed "party list" system.

Jan Jananayagam gained 2.3% of the vote in the London region, where she was standing.

That was more than established parties such as the English Democrats, the trade union-backed No2EU, the Socialist Labour Party, Libertas and Jury Team, a new umbrella group for Independents, all of which were running national campaigns and had the benefit of party political broadcasts.

Ms Jananayagam would have needed about 10% of the vote to stand a chance of winning a seat, but she did not enter the contest until the last minute, meaning she had just three weeks to mobilise support.

Her campaign was given a major boost by Grammy and Oscar-nominated rapper MIA, who urged fans to vote for her on Twitter and said she would create a new song to download for free.

The Sri Lanka-born musician, real name Mathangi Arulpragasam, told Sky News Ms Jananayagam was "the first person that I've seen in politics who can actually raise questions and be about the people".

The Tamil Tiger rebels, regarded by the British government as a terrorist organisation, were defeated last month after a conflict lasting about 30 years.

The group fights for a separate state in the north and east of the island.

BBC கூட முன்னுரிமை கொடுக்கின்றது

The Tamil Tiger rebels, regarded by the British government as a terrorist organisation, were defeated last month after a conflict lasting about 30 years.

The group fights for a separate state in the north and east of the island.

எப்ப தான் உத கொப்பி பண்ணி எல்லா செய்தியின்ர கடைசிலயும் போடுறத விடுவாங்களோ தெரியாது??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tamil candidate comes third in Harrow EU poll

1:47pm Tuesday 9th June 2009

Comments (1) Have your say »

By Tristan Kirk »

A TAMIL candidate won support from Harrow voters in last week's European elections for her campaign on civil and human rights for people in Sri Lanka.

City banker Jan Jananayagam, who used to live in Harrow, only decided to run in the elections four weeks before polling day and stood to highlight the Sri Lankan situation and put pressure on the international community to intervene.

She came third with 6,856 votes and polled 11 per cent of the vote to beat established parties including the Liberal Democrats, the United Kingdom Independence Party (UKIP) and the Green Party.

Ms Jananayagam said she believed the Tamil community came out in force to give their vote.

"I reached out to other communities, but I had to base my vote where the core support was, in the Tamil community. I was very pleased. We went door to door and the support we got held up in the vote.”

Ms Jananayagam's platform attacked the Sri Lankan Government and the International Monetary Fund (IMF)and United Nations for helping to prop up the administration.

She claimed: “British taxpayers' money is being used to support genocide.

“The IMF makes its own decisions to finance Governments and does not take into account legislation that doesn't permit public funds being given to countries that are violating human rights.”

Ms Jananayagam is the UK spokesman for Tamils Against Genocide, an organisation pushing for convictions against top-ranking Sri Lankan officials.

She said: “British people are asking why there is a demonstration in Parliament Square, but people aren't being told the full truth about what is happening behind closed doors."

However, despite scoring 50,014 across London, Ms Jananayagam, said she had no immediate plans to run in future elections.

A full breakdown of the votes cast in Harrow is listed below:

Conservative Party: 20793

Labour Party: 12135

Jan Jananayagam: 6856

Liberal Democrat Party: 6054

United Kingdom Independence Party: 5837

Green Party: 4181

British National Party: 1835

Christian Party "Proclaiming Christ's Lordship": 1558

English Democrats Party: 793

No2EU : Yes to Democracy, 526

Socialist Labour Party (Leader: Arthur Scargill): 371

Jury Team: 320

Pro Democracy: Libertas.eu: 312

Sohale Rahman: 269

Steven Cheung: 151

The Socialist Party of Great Britain: 137

Yes 2 Europe: 110

Haroon Saad: 66

Gene Alcantara: 46

http://www.harrowtimes.co.uk/news/4427936....Harrow_EU_poll/

  • கருத்துக்கள உறவுகள்

நிரஞ்சன் தேவாதித்யா, ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழ் சிங்கள மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

தமிழர்கள் ஏன் இந்த இனவெறியனுக்கு ஆதரவு அளிப்பார்கள்?. சிறிலங்காவின் பாதுகாப்பு இணையத்தளத்தில் இந்த இனவெறியன் ஒக்ஸ்போட்டில் புலிகளை எதிர்த்துக் கதைத்தது வந்திருக்கிறது. குளோபல் தமிழ் இணையம் தவறான செய்திகளை வெளியிடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஏன் இந்த இனவெறியனுக்கு ஆதரவு அளிப்பார்கள்?. சிறிலங்காவின் பாதுகாப்பு இணையத்தளத்தில் இந்த இனவெறியன் ஒக்ஸ்போட்டில் புலிகளை எதிர்த்துக் கதைத்தது வந்திருக்கிறது. குளோபல் தமிழ் இணையம் தவறான செய்திகளை வெளியிடுகிறது.

உண்மைதான்

2004ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலின் போது நிரஞ்சன் தேவாதித்யா 542,006 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன், இம்முறை 814,238 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இவர் ஒரு கட்சிக்கு போட்டியிடும் போது வாக்குகள் கட்சிக்காக தானே போடப்படும். இவருக்கு தனிப்பட வாக்குகள் எப்படி கிடைத்தது?

ஜனனி 150000 தமிழ் வாக்காளர்கள் உள்ளனர் என்றும் இன்னும் 20000 வாக்குகள் வெளியாரிடம் பெற்றால் வெற்றி பெறலாம் என்று? மிகுதி தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லையா?

அரசாங்கத்தின்ர பிச்சை காசிலை வாழ்கிறவை, விசா இல்லாதவை எல்லாம் வாக்காளர்களாக பதிய இல்லையாம் எண்டு நிறையப்பேர் சொன்னார்கள்...

எதனாலை பதிய இல்லை எண்டதுக்கு ஒருத்தரிட்டையும் சரியான விளக்கம் இல்லை... தனி நபராக இருக்கும் சில பெடியள் நிரந்தரமாக விலாசம் இல்லை அதனால் பதிய இல்லை எண்டு சொன்னார்கள்( அது ஓரளவுக்கு நியாயமாகவும் இருந்தது)

இத்தனைக்கும் இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் வந்து 6 மாதம் தங்கி இருக்கும் ஒருவர் கூட இங்கிலாந்தில் வாக்களிக்க பதிந்து கொள்ள முடியும்... வாக்களிக்க முடியும்..

...

இத்தனைக்கும் இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் வந்து 6 மாதம் தங்கி இருக்கும் ஒருவர் கூட இங்கிலாந்தில் வாக்களிக்க பதிந்து கொள்ள முடியும்... வாக்களிக்க முடியும்..

அது எப்படி தயா? இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் வந்து 6 மாதம் தங்கி இருக்கும் ஒருவர் கூட இங்கிலாந்தில் வாக்களிக்க பதிந்து கொள்ள முடியும்... வாக்களிக்க முடியும்.. என்று சொல்கிறீர்கள்?

60 வயதிற்கு மேட்பட்டவர்களைச் சொல்கிறீர்களா?

6 மாதங்கள் வந்து தங்கி நின்று திரும்பிப் போற நிலையில் இருப்பவர்கள், வாகாளரகப் பதியலாம் என்று சொல்லுகிறீர்களா?

அல்லது 6 மாதங்களுக்குப் பிறகு நாடு திரும்ப முடியாத நிலையில் சுற்றுல விசாவை Extend பண்ணி அல்லது நிரந்தர விதிவிட விசாவுக்கு பதிந்தவர்களைப் பற்றி சொல்லுகிறீர்களா??

அப்போ மாணவர்களுக்குரிய விசாவில் (2,3 வருடங்கள் படிப்தற்கு) வந்தவர்கள் வாக்குரிமை பெற்றவர்களா???

வாக்குப் பதிவு செய்யும் இணையத்தில் இப்படியல்லவா போட்டு இருக்கிறார்கள்...

Who can register to vote?

You can register to vote if you are:

• 16 years old or over and

• a British citizen

• an Irish, EU or qualifying Commonwealth citizens. Qualifying Commonwealth citizens are those who have leave to enter or remain in the UK, or do not require such leave

https://www.aboutmyvote.co.uk/register_to_v...pplication.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அணிசேரா நாட்டைச் சேர்தவர்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து பிரிட்டனில் தேர்தல்களில் வாக்களிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

இங்கும் தமிழர்களின் ஒற்றுமையைப் பார்த்து வியந்து போனேன்.

கிழக்கு லண்டனில் ஒரு வாக்குச் சாவடிக்கு நண்பர்கள் சகிதம் சென்ற போது வாக்குச் சாவடியின் வாசலில் போல் சத்தியநேசன் நின்று கொண்டு தொழிற்கட்சி வேட்பாளர் இலக்கம் 11 க்கும் வாக்களிக்கக் கேட்கிறார். அவருக்கு முன்னே சிலர் ஜான் ஜனநாயகத்துக்கு வாக்களிக்கச் சொல்கின்றனர். இப்படி.. அண்ணன் அவலப்பட்டாலும் தம்பி அவல் தான் திண்ணுவன் என்று நிற்கும் போது.. எப்படி தமிழன் உருப்படுவான்.

நிச்சயமா தமிழனுக்கு தமிழனே எதிரி. வேறொருவரும் இல்லை...!

ஜான் ஒரு கட்சி சார்ந்து போட்டி இட்டுருப்பின்.. தனது கொள்கைகளை சரியாக மக்களுக்கு விளக்கி இருப்பின்.. இன்னும் இன்னும் வாக்குகளை கவர்ந்திருக்கலாம்.

பெஸ்ட் ஒவ் லக் நெக்ஸ்ட் டைம்.

ஜானின் சில விளம்பரங்கள் தொடர்பில் கருத்து முரண்பட்டாலும் எனது வாக்கு இலக்கம் 17 இற்கே. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஜான் கடசி சார்ந்து கேட்டிருந்தால் அவருக்கு2 வது அல்லது 3வது அல்லது வெற்றி பெறக் கூடிய இடம் கொடுப்பார்களா?கடைசி இடம் கொடுத்த விட்டு தமிழர்களின் வாக்குகளைப் பெற்று தாங்கள் பாராளுமன்றம் சென்றிருப்பார்கள்.தனியாக நின்று பலத்தைக் காட்டியிருக்கிறாhர் ஜனனி இனி வரும் தேர்தல்களில் பேரம் பேசும் சக்தியை தமிழினம் பெற்றிருக்கிறது; இனி கட்சிகள் எல்லாம் ஓடி வருவார்கள்.தமிழர்கள் இனி அமைப்பு ரீதியாக இயங்கி தங்கள் பேரம் பேசும் சக்தியைக் கூட்ட வேண்டும் அதை விட்டு ஒரு சில பதவிகளுக்காக கட்சி ரீதியாக பிரிந்து நிற்பது பயனற்றது.முக்கியமாக பெரியவர்கள் எல்லோரும் ஒதுங்கி இளையவர்களுக்கு வழிவிடவேண்டும். இளையவர்களே பதவிகளை சமூகத்திற்கு பயன் படக் கூடிய மாதிரி பயன் படுத்துவார்கள் பெரியவர்கள் அதை ஒரு கௌரவமாகவும் காசு பார்க்கும் தொழிலாகவும் வெள்ளைகளை அனுசரித்துப் போவதற்குமே பயன்படுத்துவார்கள் துணிந்து தங்கள் உரிமைகளை பாதுகாக்கப் போராட மாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.