Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பை முன்னோடியாக வைத்து புலத்திலும் நாங்கள் உயர்குடி மக்களாக வாழ்வது எப்படி?

Featured Replies

இனிய வணக்கங்கள்,

உயர்குடி மக்களாக வாழ்வது என்பது ஓர் கலை. இது எல்லோராலும் முடியாது. கொழும்பில் வாழும் தமிழர்களை முன்னோடிகளாக வைத்து புலத்தில் உள்ளவர்களும் உயர்குடி மக்களாக வாழ ஒரு சில ஐடியாக்கள்:

  • மற்றவனுக்கு எந்தப்பாசை தெரியாதோ அந்தப்பாசையில் நீங்கள் உரையாடவேண்டும். அதிலும்... பலர் முன்னிலையில் நீங்கள் இதைச்செய்வது விஷேசம்.

  • குழந்தைகளை தனியார் பள்ளிகளிற்கு அனுப்பவேண்டும். அரசாங்கத்தின் இலவச சேவைகளை இயலுமான அளவு தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

  • உங்கள் குழந்தைகள் வேற்றினத்தவர்களுடன் பழகினாலோ, காதலித்தாலோ அல்லது கலியாணம் செய்தாலோ தப்பில்லை, ஆனால்.. அது தமிழராக இல்லாதவாறு பார்த்துகொள்ளவேண்டும்.

  • பணம் அதிகம் உங்களிடம் இருந்தாலும்.. ஏனைய பணக்காரர்களுடன் பழகும்போது உங்களிடம் ஒன்றும் இல்லை என்று சொல்லி கண்ணீர்விடவேண்டும். ஒன்றும் இல்லாதவர்களுக்கு முன்னால் உங்கள் பணச்செழிப்பை காட்டிக்கொள்ளவேண்டும்.

  • உங்கள் பிள்ளைகள் தவறுகள் செய்யும்போது அதை மற்றவர்களுக்கு பெருமையாக கூறிக்கொள்ள பழகிகொள்ளவேண்டும்.

  • இதர தமிழருடன் பழகாவிட்டாலும் பரவாயில்லை ஆனால்.. வேற்று இனத்தவர்களுடன் மிகவும் அன்னியோன்யமாக பழகத் தெரிந்து இருக்கவேண்டும். வேற்று இனத்தவருடனான உங்கள் அன்னியோன்னியம் மற்றும் நம்பிக்கை உங்கள் மனைவியை அல்லது கணவனை வேற்று இனத்தவர்களை மகிழ்விப்பதற்கு அவர்களுடன் படுக்கைக்கு அனுப்புவதை அனுமதிப்பதை ஏற்றுக்கொள்வதற்கு நிகரானதாய் இருக்கவேண்டும்.

  • இயலுமான அளவு பெரிய வீடாய் வாங்கிக்கொள்ள முயற்சிக்கவேண்டும். உங்கள் வீடு மிகவும் பெரியது என்பதை நம்மவர்களுடன் கதைக்கும்போது அடிக்கடி கூறுவதற்கு மறக்கக்கூடாது.

  • உங்கள் குடும்பத்துக்கு என்று தனிப்பட ஓர் வழக்கறிஞரை வைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி உங்கள் வழக்கறிஞர்மூலம் நம்மவர்களுக்கு பூச்சாண்டி காட்ட தெரிந்து இருக்கவேண்டும்.

  • நீங்கள் உங்கள் நாட்டு அரசுக்கு மிகவும் விசுவாசமானவர்கள் என்று வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டுக்கு முன்னால் பெரியதொரு கம்பம் நட்டு அதில் உங்கள் நாட்டு தேசியக்கொடியை பறக்கவிடலாம்.

  • சமயம், கோயில் என்பன உங்கள் செல்வச்செருக்கை, கெளரவத்தை மற்றவர்களுக்கு காட்டி மகிழ்வதற்கு ஓர் மிகச்சிறந்த வாய்ப்பு. எனவே, இவற்றை புத்திசாதூர்யமாக பயன்படுத்த தெரிந்து இருக்கவேண்டும். உதாரணமாக, ஓர் பெரிய கோயில் ஒன்றில் நீங்கள் உபயகாரராக இருந்து தேர்த்திருவிழா செய்யலாம். அப்படி பெரிய திருவிழாக்கள் செய்ய வாய்ப்பு கிடைக்காவிட்டால் நீங்களே ஓர் கோயிலை புலத்தில் உருவாக்கி அதன் அறங்காவலராக இருக்கலாம்.

  • எத்தனைவகை அரசியல் கட்சிகள் இருந்தாலும்.. அவர்கள் எப்படியானவர்களாக இருந்தாலும் முக்கியமான பிரபல எல்லா கட்சிகளுக்கும் பணம்கொடுக்க பழகிக்கொள்ளவேண்டும். அரசியல்வாதிகள் அனைவரும் உங்களுக்கு நண்பர்களே.

  • வலது கை தானம் செய்வதை இடதுகை அறியக்கூடாது என்கின்ற பழமொழி எல்லாம் உங்களுக்கு பொருந்தாது. நீங்கள் ஓர் சிறு உதவி செய்தாலும் அதை பறைதட்டி மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். இதற்காக நீங்கள் பத்திரிகை, மற்றும் இதர ஊடகக்காரரை கையுக்குள்போட்டு வைத்து இருக்கலாம்.

  • பல்துறையாளர்களான உள்ளூர், மற்றும் வெளிநாட்டு பிரபலங்களுடன் சேர்ந்து பழக, சேர்ந்து புகைப்படம் எடுக்க, உங்கள் வீட்டுக்கு விருந்தினராக அழைத்து தங்கவைக்க தெரிந்து இருக்கவேண்டும்.

உங்களுக்கும் புலத்தில் உயர்குடிமக்களாக வாழ வழிகள் தெரிந்து இருந்தால் சொல்லுங்கள். நாங்கள் எல்லோரும் உயர்குடி மக்களாக வாழ்ந்துகாட்டுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் சின்ன விசயங்கள். செய்வது சிரமம் இல்லை.உதுகுளை விட பெரிய விசயம் என்னவென்றால் ஒன்றுமே இல்லாத விசயத்துக்காக பக்கத்து வீட்டுக்காறியுடன் குழாயடி சன்டை போடுவதை நிப்பாட்ட வேனும்.நடக்குமா :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான ஒன்றை விட்டுட்டீங்க.. பிள்ளைகளை யுனிவார்சிட்டிக்கு அனுப்பி.. டாக்குத்தர்.. இஞ்சுனியர்.. அக்கவுண்டனுக்கு படிப்பிக்கிறதும்.. அதை ஊருக்கெல்லாம்.. ஊதுகுழல் வைச்சுச் சொல்லித் திரியுறதையும் விட்டுட்டியள்..! :lol: :lol:

  • தொடங்கியவர்

உயர்குடியாய் இருந்தால்.. இல்லாத விசயத்துக்காய் குழாய் அடிச்சண்டைக்காய் பக்கத்துவீட்டுக்காரனை கோர்ட்டுக்கு இழுத்து நாறவைக்கவேணும். உங்களால் முடியுமா சஜீவன்?

நினைவுபடுத்தியமைக்கு நன்றி நெடுக்காலபோவான். ஓம்..

  • புலத்தில இருக்கிற ஆட்கள் உங்கள் பிள்ளைகளை உயர் கல்விக்காய் உங்கள் நாட்டில இல்லாமல் வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்கலாம். உதாரணமாக... நீங்கள் கனடாவில இருந்தால் பிள்ளையை படிக்கிறதுக்கு யூகேயுக்கு அனுப்பி வைக்கலாம். யூகேயில இருந்தால் கனடாவுக்கு அனுப்பி வைக்கலாம். அவுஸ்திரேலியாவில இருந்தால் பிள்ளையை அமெரிக்காவுக்கும், அமெரிக்காவில இருந்தால் பிள்ளையை அவுஸ்திரேலியாவுக்கும் உயர்கல்விக்காய் அனுப்பி வைக்கலாம்.

  • உங்கள் குழந்தைகள் கலியாணத்தின்பின் சில மாதங்களில் விவாகரத்து எடுத்தால்.. அவர்களுக்கு பாராட்டுவிழா எடுக்கவேண்டும். இதேபோல் தங்கள் காதலனுக்கு அல்லது காதலிக்கு குழந்தைகள் ஆப்பு வைத்தாலும் பாராட்டு விழா செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உடையை மறந்து போனீங்கள் கலைஞன். எங்கடை கொஞ்ச பேர் போடும் உடையை பார்த்து வெள்ளையர்களே இமையை உயர்த்தும் அளவுக்கு நாகரீகம் உள்ளது. இதுவும் உயர்குடிக்கான பட்டயம் போலும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் புலத்தில் உயர்குடிமக்களாக வாழ வழிகள் தெரிந்து இருந்தால் சொல்லுங்கள். நாங்கள் எல்லோரும் உயர்குடி மக்களாக வாழ்ந்துகாட்டுவோம்.

புலம் பெயர் தேசத்திலை உயர்குடி மக்களாக வாழ இந்தப் பிரச்சினையை எப்படி சமாளிப்பது .....

சமையலுக்கு ஒரு வேலைக்காரி ,

தோட்டவேலைக்கு ஒரு வேலைக்காரன் ,

வீடு கூட்டி துடைக்க ஒரு Girl ,

பிள்ளைகளை பள்ளிக்கூடம் கூட்டிக் கொண்டுபோய் விட ஒரு Boy ,

டடியின்ரை காருக்கும் , மம்மியின்ரை காருக்கும் இரண்டு Driver .

  • தொடங்கியவர்

ஓகோ.. நான் நினைச்சன் நான் மாத்திரம்தான் கொழும்புக்கால உயர்குடி மக்களை தரிசனம் செய்துகொண்டு வந்தனான் எண்டு. இஞ்சையும் அனுபவம் உள்ள பலர் இருக்கிறீங்கள் போல.

  • மற்றவனிடம் இல்லாத ஒரு உடுப்பை, நகையை போடுவதே உயர்குடி மக்களுக்கு சிறப்பு. அப்படி ஏதும் உங்களுக்கு கிடைக்காவிட்டால் ஒன்றும் போடாமல் அம்மணமாக நிற்கலாம்.
  • ஒவ்வொரு அலுவலுக்கும் வேலைக்காரரை வைத்து இருப்பது என்பது உயர்குடிமக்களின் இன்னொரு சிறப்பு. இதற்கு புலத்திற்கு மிக அண்மையில் வருகைதந்த மற்றும் work permit இல்லாமல் திருட்டுத்தனமாக வேலை செய்யவிரும்புகின்ற அப்பாவிகளை பயன்படுத்தலாம்.

*அதுமட்டுமா.. தமிழ் கடைகளில் முகஸ்துதி பார்த்து.. சிலர் கடைக்கு வருகினம் என்ற உடனவே.. வாங்கம்மா.. வாங்கைய்யா.. என்று.. ஓடர் கொடுத்துவிட்டுப் போக.. கடைக்காரர் பக் பண்ணி.. ஒரு கோல் வேற கொடுப்பினம். கடைக்கு வாற சனம் கியூவில கிடக்குங்கள்..!

* அரசாங்கம் அதிகுறைந்த ஊதியமா ஒன்றை நிர்ணயிச்சிருக்கும். வேலைக்காரங்களுக்கு அதை விட குறைவா சம்பளம் கொடுக்கிறது..!

* கோவில் திருவிழாக்கள் நடத்த.. பெரிய தலைகளுக்கு முன்னுரிமை. அவையின்ர பிள்ளைகளுக்கு நிகழ்வரங்கங்களில் இலவச விளம்பரங்கள். அவர் இங்கு அது படிக்கும் மாணவி.. இவர் அங்க இது படிக்கும் மாணவன்.!

* புகழ்பெற்ற கல்லூரிகளில் பள்ளிகளில் படிக்க என்று பிள்ளைகளோடு ஊர்விட்டு ஊர் அலையுறது. இது ஒரு வியாதி.. எங்கட மேட்டுக்குடிகளுக்கு. ஊரில தான் அப்படின்னா.. இங்க கூட கச்மெண்ட் ஏரியா பார்த்து.. அதுக்குள்ள நல்ல ஸ்கூல் தேடி.. சொந்த வீட்டை வாடகைக்கு விட்டிட்டு.. அந்த ஊரில போய் வாடகைக்கு இருந்து.. ஸ்கூல் பிடிக்கினம்.. என்றால் பாருங்கோவன்.

ஊரில முந்தி வவுனியாவுக்கு கட் ஓவ் குறைவென்றிட்டு.. யாழ்ப்பாணத்தில ஓல் எடுத்திட்டு வவுனியாவில போய் ஏல் படிச்சிட்டு வருவினம்..! :lol: :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நெடுக்காலபோவானும் கசப்பான அனுபவங்களை பெற்று நொந்துபோய் இருக்கிறீங்கள் போல. கொழும்புவாழ் உயர்குடி மக்களை எனக்கு பிடிக்காமல் இருந்தாலும்... கொழும்பில பிடிச்ச ஓரிரு விசயங்கள் இருக்கிது. பிறிதொரு சந்தர்ப்பத்தில சொல்லிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவையெல்லாம் உயர்குடி அடையாளங்களா?

இனிய வணக்கங்கள்,

உயர்குடி மக்களாக வாழ்வது என்பது ஓர் கலை. இது எல்லோராலும் முடியாது. கொழும்பில் வாழும் தமிழர்களை முன்னோடிகளாக வைத்து புலத்தில் உள்ளவர்களும் உயர்குடி மக்களாக வாழ ஒரு சில ஐடியாக்கள்:

  • மற்றவனுக்கு எந்தப்பாசை தெரியாதோ அந்தப்பாசையில் நீங்கள் உரையாடவேண்டும். அதிலும்... பலர் முன்னிலையில் நீங்கள் இதைச்செய்வது விஷேசம்.

    புலத்தில் சொந்த சகோதரர்களே அந்நிய பாசையில்தான் உரையாடுறாங்க.

  • குழந்தைகளை தனியார் பள்ளிகளிற்கு அனுப்பவேண்டும். அரசாங்கத்தின் இலவச சேவைகளை இயலுமான அளவு தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

    இது மகா கடினம்.. ஏன்னா இங்க லஞ்சம்.. அன்பளிப்பு போன்ற வியாதிகள் இருக்கிறதா தெரியல.

  • உங்கள் குழந்தைகள் வேற்றினத்தவர்களுடன் பழகினாலோ, காதலித்தாலோ அல்லது கலியாணம் செய்தாலோ தப்பில்லை, ஆனால்.. அது தமிழராக இல்லாதவாறு பார்த்துகொள்ளவேண்டும்.

    கறுவல்களாகவும் இருக்கக் கூடாது. மற்றும்படி, றோட்டில இருக்கிற வெள்ளை எண்டாலும் பரவாயில்லை.

  • பணம் அதிகம் உங்களிடம் இருந்தாலும்.. ஏனைய பணக்காரர்களுடன் பழகும்போது உங்களிடம் ஒன்றும் இல்லை என்று சொல்லி கண்ணீர்விடவேண்டும். ஒன்றும் இல்லாதவர்களுக்கு முன்னால் உங்கள் பணச்செழிப்பை காட்டிக்கொள்ளவேண்டும்.

    யோசிக்க வேண்டிய விடயம்.

  • உங்கள் பிள்ளைகள் தவறுகள் செய்யும்போது அதை மற்றவர்களுக்கு பெருமையாக கூறிக்கொள்ள பழகிகொள்ளவேண்டும்.

    நானும் முந்தி இப்பிடித்தான்.. இப்ப இஎப்பிடீன்னு ஒரு பஞ்ச் டயலாக் விடலாம்தான்.

  • இதர தமிழருடன் பழகாவிட்டாலும் பரவாயில்லை ஆனால்.. வேற்று இனத்தவர்களுடன் மிகவும் அன்னியோன்யமாக பழகத் தெரிந்து இருக்கவேண்டும். வேற்று இனத்தவருடனான உங்கள் அன்னியோன்னியம் மற்றும் நம்பிக்கை உங்கள் மனைவியை அல்லது கணவனை வேற்று இனத்தவர்களை மகிழ்விப்பதற்கு அவர்களுடன் படுக்கைக்கு அனுப்புவதை அனுமதிப்பதை ஏற்றுக்கொள்வதற்கு நிகரானதாய் இருக்கவேண்டும்.

    ஒகோ அப்படியா?

  • இயலுமான அளவு பெரிய வீடாய் வாங்கிக்கொள்ள முயற்சிக்கவேண்டும். உங்கள் வீடு மிகவும் பெரியது என்பதை நம்மவர்களுடன் கதைக்கும்போது அடிக்கடி கூறுவதற்கு மறக்கக்கூடாது.

    யாருடைய வீட்டுக்கு போனாலும்.. இது சொந்த வீடா.. சொந்த வீடென்றால் இந்த சின்ன வீட்டில எப்பிடி வாழுறியள்.. என்றும் கேட்க வேண்டும்.. அவர்கள் பதில் கூறமுடியாமல் வெட்கப்பட்டால்தான் பெருமை.

  • உங்கள் குடும்பத்துக்கு என்று தனிப்பட ஓர் வழக்கறிஞரை வைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி உங்கள் வழக்கறிஞர்மூலம் நம்மவர்களுக்கு பூச்சாண்டி காட்ட தெரிந்து இருக்கவேண்டும்.

    வழக்கறிஞரை வைச்சிருக்கிறீங்களோ இல்லையோ.. நாலு தமிழர்கள் பார்க்கும்படி அவருடன் திரிய வேணும்.

  • நீங்கள் உங்கள் நாட்டு அரசுக்கு மிகவும் விசுவாசமானவர்கள் என்று வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டுக்கு முன்னால் பெரியதொரு கம்பம் நட்டு அதில் உங்கள் நாட்டு தேசியக்கொடியை பறக்கவிடலாம்.

    அதுவம் சரிதான்.

  • சமயம், கோயில் என்பன உங்கள் செல்வச்செருக்கை, கெளரவத்தை மற்றவர்களுக்கு காட்டி மகிழ்வதற்கு ஓர் மிகச்சிறந்த வாய்ப்பு. எனவே, இவற்றை புத்திசாதூர்யமாக பயன்படுத்த தெரிந்து இருக்கவேண்டும். உதாரணமாக, ஓர் பெரிய கோயில் ஒன்றில் நீங்கள் உபயகாரராக இருந்து தேர்த்திருவிழா செய்யலாம். அப்படி பெரிய திருவிழாக்கள் செய்ய வாய்ப்பு கிடைக்காவிட்டால் நீங்களே ஓர் கோயிலை புலத்தில் உருவாக்கி அதன் அறங்காவலராக இருக்கலாம்.

    ஆகக் குறைந்தது 7 பேருடன் ஒரு அமைப்பை பதிவு செய்து.. அதற்காவது தலைவரா இருந்து நோட்டீசுகள் விடலாம்.

  • எத்தனைவகை அரசியல் கட்சிகள் இருந்தாலும்.. அவர்கள் எப்படியானவர்களாக இருந்தாலும் முக்கியமான பிரபல எல்லா கட்சிகளுக்கும் பணம்கொடுக்க பழகிக்கொள்ளவேண்டும். அரசியல்வாதிகள் அனைவரும் உங்களுக்கு நண்பர்களே.

  • வலது கை தானம் செய்வதை இடதுகை அறியக்கூடாது என்கின்ற பழமொழி எல்லாம் உங்களுக்கு பொருந்தாது. நீங்கள் ஓர் சிறு உதவி செய்தாலும் அதை பறைதட்டி மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். இதற்காக நீங்கள் பத்திரிகை, மற்றும் இதர ஊடகக்காரரை கையுக்குள்போட்டு வைத்து இருக்கலாம்.

  • பல்துறையாளர்களான உள்ளூர், மற்றும் வெளிநாட்டு பிரபலங்களுடன் சேர்ந்து பழக, சேர்ந்து புகைப்படம் எடுக்க, உங்கள் வீட்டுக்கு விருந்தினராக அழைத்து தங்கவைக்க தெரிந்து இருக்கவேண்டும்.

உங்களுக்கும் புலத்தில் உயர்குடிமக்களாக வாழ வழிகள் தெரிந்து இருந்தால் சொல்லுங்கள். நாங்கள் எல்லோரும் உயர்குடி மக்களாக வாழ்ந்துகாட்டுவோம்.

சொல்லமாட்டேன்.. பிறகு எல்லாரும் உயர்குடியாயிடுவாங்க.. :D

கலைஞன் நீங்கள் சொன்ன பல விடயங்களை (அதுக்கும் மேலாகவே) ஏற்கனவே புலம்(ன்) பெயர்ந்த தமிழர்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

எனவே புதிதாக அங்கிருந்து பழக வேண்டிய தேவை இருக்காது என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உடையை மறந்து போனீங்கள் கலைஞன். எங்கடை கொஞ்ச பேர் போடும் உடையை பார்த்து வெள்ளையர்களே இமையை உயர்த்தும் அளவுக்கு நாகரீகம் உள்ளது. இதுவும் உயர்குடிக்கான பட்டயம் போலும். :D

அதையாவது போடுகிறார்கள் என்று மனதை தேற்றுவோம் என்று இல்லை புலம்பிறீங்கள்?

உடையென்பது மானத்தை மறைக்க போடுவது............. இல்லாதவருக்கு எதற்கு உடை என்ற அவர்களின் கேள்விக்கு விடையிருந்தால் நீங்கள் எழுதுங்கள்.

  • தொடங்கியவர்

இவையெல்லாம் உயர்குடி அடையாளங்களா?

இல்லாமல் வேற என்னவாம்?

கலைஞன் நீங்கள் சொன்ன பல விடயங்களை (அதுக்கும் மேலாகவே) ஏற்கனவே புலம்(ன்) பெயர்ந்த தமிழர்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே புதிதாக அங்கிருந்து பழக வேண்டிய தேவை இருக்காது என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொல்லிறதும் கொஞ்சம் சரிதான். ஏற்கனவே கொழும்பில இருந்த உயர்குடியினரில ஒருபகுதியினர் வெளிநாடுகளில இருக்கிறதால புலம்பெயர் சமூகத்திற்கு நல்லதொரு வழிகாட்டிகளாக வாழ்ந்துகாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

சோழியன் மாமா, அப்ப நீங்கள் விடுறன் இல்லையெண்டுதான் இருக்கிறீங்கள் என. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயர்குடி மக்களாக வாழ்வது என்பது ஒரு கலை என்கிறீர்கள். நான் நினைக்கிறேன், உயர் குடி மக்களாக தம்மை காட்டுவது தான் ஒரு கலை என்று!

நான் அதிகமான புலம் பெயர் தமிழர் மத்தியில் நிற்கும் சந்தர்ப்பம் இந்த வருடத்திலான போராட்ட பேரணிகளின் போது தான். அங்கு வந்தவர்கள் பலர் தமிழ் ஈழம் கேட்க வந்தார்களா? இல்லை ஆங்கில ஈழம் கேட்க வந்தார்களா என்று நினைக்க தோணியது. தமிழ் தெரிந்தாலும் தெரியாத மாதிரி காட்டும் சனத்தை கண்டால் - இவர்களின் அரை வேட்காட்டு தனத்திற்கு வேற்றினத்தார் பரவாயில்லை என பட்டது! அதனால் ஒரு விதத்தில் நீங்கள் குறிப்பிட்ட - "மற்றவர்களுடன் பழகலாம், ஆனால் தமிழர்களுடன் பழக ஏலாது!" என்ற மனநிலைக்கு சிலவேளைகளில் வர தூண்டுவதும் - தமிழரின் தமிழரில்லா தன்மையும் தான்! :D

மத அமைப்புகள் எதிலும் நம்பிக்கை இல்லா விட்டாலும், சனம் கூடும் கோயில் திருவிழாக்களை, திருமண வைபவங்கள், என்று எந்த மாதிரியான சபைகளையும் நான் புறக்கணிப்பதற்கு காரணம் தமிழரின் பகட்டு தனம் தான்.

என்னை பொறுத்த வரை கொழும்பு இல உள்ள யாழ்ப்பாண தமிழரை பளுதாக்கினது - வெளிநாட்டு காசு தான். அங்கு உள்ளவர்கள் பலருக்கு இங்கு உள்ளவர்களின் கஷ்டம் தெரிவதில்லை. அற்பனுக்கு காசு வந்தால்... என்ற கணக்கு தான் கொழும்பில் உள்ளவரை பார்க்கும் போது தோணும்.

சரி, கொழும்பில் உள்ள சனத்திற்கு கஷ்டம் தெரியாம வெளியில் உள்ளவர்கள் வைத்து இருக்கிறார்கள் என்றால் - இங்குள்ளதுகள் பலர் கடனுக்கு மேல கடன் பட்டு தான் நடப்பு காட்டுறது. ஏன்?? :D

அதிகம் இருந்தால் ஏதும் பிரயோசனமாக அடுத்துவரோடு பகிர்ந்து கொள்ளலாம், இல்லை அந்த மனப்பான்மை இல்லையென்றால்- சத்தம் இல்லாமல், எதிர்காலத்திற்காக எங்கும் முதலீடு செய்து விட்டு சோலியை பார்த்து கொண்டு இருக்கலாம். :D

முந்தி ஒரு காலத்தில் அதிகம் காசு பிளக்கம் இல்லாமல் இருந்ததும் - பின்பு காசு உழைக்கலாம் என்ற ஒரு நிலை வந்ததும் - "காசு காசு" என்று பொருளாதாரத்தை சுற்றிய அற்ப பகட்டுத்தனம் காட்டி தான் சனம் தங்களை சமூகத்தில் நிலை நிறுத்தி கொள்ள முற்படுகிறது.

உயர் குடி மக்களாக காட்டி கொள்வதால் - உயர் குடி மக்களாக ஆகி விட முடியாது என்ற நிலையை ஏற்படுத்தினால் தான் அளவு கணக்கு இல்லாமல் ஏறி கொண்டு போகும் சனத்தின் ஆலவட்டம் குறையும்! :D

உயர்குடியா இல்லையா என்பதை பணம் என்ற ஒன்று தீர்மானிக்க விடாமல்,

சனத்தின் மனங்கள், குணங்களை பொறுத்து தீர்மானிக்க வெளிக்கிட்டால் சிலவேளை திருந்தகூடும். :D

அல்லது திருந்திய மாதிரி காட்டும் கலையை என்றாலும் படித்து கொள்ளுங்கள் எங்கட சனம். இப்ப இருக்கிறதுக்கு அது பறவாய் இல்லாமல் இருக்கும். :D

சிலர் சொல்ல கூடும் ஏன் இந்த பிரிவினை இருக்க வேணும் என்று? மரியாதை என்ற ஒன்று நல்ல மாதிரி கொள்கைகளுடன் வாழ்பவர்களுக்கு கொடுத்தால் தான், அதன் முன்மாதிரியில் மற்றவர்களும் மாற கூடும். எங்கட சனத்தில உள்ள பிரச்சனை எதன் அடிப்படையில் இந்த மரியாதையை கொடுப்பது என்று ஜோசியாமல் போட்டி மனப்பான்மையை மட்டும் வளர்த்து வைத்திருப்பது தான்!

கொழும்புக்கு யாரும் ஊரில் இருந்து உறவினர்கள் அவர்கள் வீட்டில் தங்கவந்தால் பிச்சைக்காரரிலும் கேவலமா அங்கு தங்கயேலாது என்று நடப்புக்காட்டுற மாதிரி புலத்திலும் செய்தல்.

வெள்ளவத்தை ஓட்டோக்காரரிலிருந்து கடைக்காரர் வரைக்கும் வெளிநாட்டு காசை அள்ளிகொடுத்து( மற்ற இடங்களை விட வெள்ளவத்தையில் ஓட்டோக்காரரிலிருந்து கடைக்காரர் வரைக்கும் 3 மடங்கு விலையை கூட்டிட்டாங்கள்) பந்தா காட்டுற மாதிரி இங்கேயும் செய்தல்.

smiley-gen042.gif

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் புலத்தில் உயர்குடிமக்களாக வாழ வழிகள் தெரிந்து இருந்தால் சொல்லுங்கள். நாங்கள் எல்லோரும் உயர்குடி மக்களாக வாழ்ந்துகாட்டுவோம்.

எங்கடை பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்று சொல்வது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாடுகளில எங்கட ஆக்கள் காட்டுற உயர்குடித்தனமெல்லாம் எங்கட ஆக்களோட மட்டுந்தான். வெள்ளையனை கண்டால் சர்வமும் அடங்கிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில எங்கட ஆக்கள் காட்டுற உயர்குடித்தனமெல்லாம் எங்கட ஆக்களோட மட்டுந்தான். வெள்ளையனை கண்டால் சர்வமும் அடங்கிவிடும்.

இந்த கொத்தடிமைத்தனம்.. கொழும்பு வாழ் என்ன இலங்கை வாழ் தமிழர்களிடம் வெளிநாடு வாழ் தமிழர்களிடம் சிங்கள எஜமானர்கள் மீதும் இருக்கிறது. இல்ல குண்டு போட்டு 35 வருசமா கொன்ற சிங்களவனுக்கே... மாலை போட்டு.. மேளம் அடிச்சு.. மணவறை வைச்சு வரவேற்பு கொடுக்குங்களா..!

சிங்களவன் கூட கொழும்பை කොළඹ, pronounced [ˈkoləmbə]; என்பான்.. இவை கிளம்பு எண்டு வினம் என்றால் பாருங்கோவன்..! :D :D

கொத்தடிமைகள் அப்படித்தான்..! எஜமான விசுவாசத்தைக் காட்டி தங்கள் பிழைப்பை ஓட்டுவதே அதுகளின் புத்தியில் புத்திசாலித்தனமான செயல்..! ஆனால் தமக்குள் நான் பெரிசு நீ சின்னன் என்று பிரிச்சுக் காட்டி வெட்டிப் பெருமை பேசுவதே அதிகளின் உயர்நிலைச் சிந்தனை..! :D :D :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்று சொல்வது.

அதுமட்டுமா.. நாலு தமிழ் பேசுறவனைக் கண்டிட்டா.. தாங்கள் அவன் முன்னால ஆங்கிலத்தில பேசி (அது தப்பா இருந்தாக் கூட) பெருமை காட்டுறது. இந்த வெங்காயத்தனமே அதுகளின்ர மூஞ்சில உள்ளதை அப்படியே காட்டிடும். அதுக்குள்ள அவைக்கொரு ஆங்கிலம்.. கேடு..!

ஆனால் ஆங்கிலம் பேச வேண்டிய இடத்தில.. பேசாதுகள். ஆக்களைப் பார்த்து முழிஞ்சு கொண்டு நிற்குக்குங்கள். பெருமை பிடிச்ச ஜென்மங்கள் கணக்கா..! :D :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்லை எங்கடை முதுகு ஊத்தையை நல்லவடிவாய் உரஞ்சி கழுவுவம்

அதுக்குப்பிறகு மற்றவன்ரை

மூக்குச்சளியைப்பத்தி ஆலோஓஓஓஓஓஒசனை செய்வம் :D

  • கருத்துக்கள உறவுகள்

முதல்லை எங்கடை முதுகு ஊத்தையை நல்லவடிவாய் உரஞ்சி கழுவுவம்

அதுக்குப்பிறகு மற்றவன்ரை

மூக்குச்சளியைப்பத்தி ஆலோஓஓஓஓஓஒசனை செய்வம் :D

ஊர் உலகத்தில முதுகில அழுக்கு மூட்டையா இருக்கிற இடத்தில எங்க முதுகில.. சில அழுக்குப் படைகள் தான் இருக்கு கு.சா. அதை அகற்றுறது இலகு. ஆனால் அழுக்கு மூட்டையை காவிக்கிட்டு திரியுற நம்மாக்களை என்ன செய்யுது.. அகற்று விக்கப் போறீங்க...???! :D :D :D

முதல்லை எங்கடை முதுகு ஊத்தையை நல்லவடிவாய் உரஞ்சி கழுவுவம்

அதுக்குப்பிறகு மற்றவன்ரை

மூக்குச்சளியைப்பத்தி ஆலோஓஓஓஓஓஒசனை செய்வம் :D

சரியாச் சொன்னீர்கள் குமாரசாமித் தாத்தா!

இந்தப்புலன்பெயர்ந்த தமிழர்கள் புலத்திலே வெள்ளைக்காரனின் கோப்பையைக் கழுவி, ...... அதை இதைச் செய்து பிழைப்பார்கள். ஆனால் சிறிலங்கன் எயார்லைன்ஸ் பிளைற் பிடித்து கொழும்பில் வந்து இறங்கி நின்று கொண்டு செய்யும் உயர்குடித்தனச் செயல்களை எழுதுவதற்கு மணித்தியாலங்கள் தேவை.

முக்கால் காற்சட்டையும், எப்போதும் கழுத்தில் தொங்கும் காமிராவுமாய் ஏதோ வெள்ளைக்காரனின் நாட்டில் பணம் மரத்தில் காய்க்கிற தா என்று எண்ணும் விதமாய் பண்ணும் பந்தாவும் பின்னர் திரும்பி வந்து விட்டு அங்கே விசிறிய கறடிட் கார்ட் பணத்திற்காக இன்னோர் இடத்தில் கோப்பை கழுவுவதும் அடேயப்பா........

கலைஞன்!

புலன்பெயர்ந்தவர்களின் பந்தைவைப் பற்றி எழுதுவதற்கும் ஒரு பக்கம் திறவுங்கோ. பல சுவாரசியமான தகவல்கள் வரும்........

என்ரை தங்கைச்சி

:D

  • கருத்துக்கள உறவுகள்

அவன் அவன் என்னத்தை கழுவினால் என்ன....ஒவ்வொருத்தருக்கும் என்ன செய்யுதெண்டு தான் விளங்கவில்லை. உங்களிடம் வந்து ஏதாவது தனிப்பட்ட முறையில் தொந்தரவெண்டு குறைப்பட்டால் நியாயம். கஸ்டமோ நஸ்டமோ... உழைக்கிறது அவன்... செலவழிக்கிறது அவன். உங்களுக்கு என்ன செய்யுது? தன் தன் சொந்த உழைப்பில் வாற வருமானத்தில் அவர்கள் என்னத்தை செய்தால் என்ன...நீங்கள் ஏன் எரிகிறீர்கள்? :D:D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.