Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் விடுதலை இராணுவம்?

Featured Replies

மக்கள் விடுதலை இராணுவம்? புதியதோர் விடுதலை அமைப்பு?

யாராவது அறிந்திருந்தால் அறியத்தாருங்கள்

இதைப்பற்றி மேலதிகமாக இங்கு ஆங்கிலத்தில் வாசிக்கமுடியும்:

http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6946605.ece#cid=OTC-RSS&attr=797093

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் விடுதலை இராணுவம்? புதியதோர் விடுதலை அமைப்பு?

யாராவது அறிந்திருந்தால் அறியத்தாருங்கள்

இதைப்பற்றி மேலதிகமாக இங்கு ஆங்கிலத்தில் வாசிக்கமுடியும்:

http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6946605.ece#cid=OTC-RSS&attr=797093

கோணேசின் பேட்டியைப் பார்த்தால் என்ன சொல்லுறதெண்டு தெரியேல்ல.. இதைப் பாருங்கோ..

Kones, a nom de guerre, claimed that the PLA had 300 active members and expected to recruit 5,000 volunteers from the 280,000 Tamil civilians recently freed from detention camps.

முகாமில இருந்து மக்களை விடுவிக்கக் கூடாது எண்டு மறைமுகமா சொல்லுறமாதிரி இருக்கு..! எனக்கென்னவோ புலிப்பூச்சாண்டி முடிஞ்ச கையோடு இன்னொரு பூச்சாண்டியை உருவாக்கும் வேலை போல தெரியுது..! மகிந்தருக்குத்தான் இது இப்போ அதிமுக்கிய தேவை..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் ,ஈழம் , தமிழ் ஈழம் இவை சிங்கள பாசிச வாதிகளுக்கு எதிரானவை. அவை இங்கு இல்லை. ஆகவே மகிந்த குரூப்போ,சிங்கள இனவாதிகளோ கற்பனையாக உருவாக்கிய தாக இருக்க அதிக வாய்ப்புண்டு. எமது ஆய்வாளர்கள் பலரின் கருத்துகள் தேவை. கிழக்கில் நடமாட முடியாத நிலை.எப்படி அவர்கள், சில வேளை மின்னேரியா இராணுவ முகாமில் இருக்கலாம்.

சிங்களவனின் சித்து விளையாட்டு

timesonline and daily mirror இல்தான் இந்த செய்தி வந்துள்ளது.

தமிழர்களின் அமைப்பாக விருந்தால் தமிழர் சம்பந்தப்பட்ட இணையங்களில் முதலில் வர வாய்ப்பு அதிகம். முடிவாக தாமாகவே தமது மூலத்தை கூறியுள்ளனர்

Edited by Mullaimainthan

  • கருத்துக்கள உறவுகள்

தேர்த்தலுக்கு முதல் ஒரு கொத்து ரொட்டி ஒன்று மகிந்தவுக்கு தேவை.அது தான் இப்படியான அறிக்கைகள்.சரத்துக்கும் ஒரு சத்த வெடிதான். :D:lol:

  • தொடங்கியவர்

என்ன இளவோ. தமிழர்களின் எதிர்காலம் சூநியமாய்த்தான் இருக்கு.

நல்லதுகள் நடக்க வாய்ப்பு அரிதாகத்தான் இருக்கு.

மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டமா? இனிமேலும் தமிழர்களால் iடுயமமயஅரனலைரஅயய?

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் விடுதலைப் படை பற்றிய செய்திக்கு பதில் அளிப்பது என்னுடைய நோக்கமில்லை. உலகமயமாகும் சூழலில் மேற்க்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் அச்சுறுத்தலான கியூபா இந்திய மாவோஸ்ட்டுகள் ஆதரவு பதையில் நாம் வெகுதூரம் போக வாய்ப்பில்லை. கடந்த சில மாதங்களாக இங்கு எழுப்பப் படும் கிழக்கு மாகானத்திலும் யால காடுகளிலும் கெரிலா அமைப்புகள் இயங்க முடியுமா என்கிற கேழ்விபற்றி மட்டுமே என் கருத்தைச் சில வரிகளில் எழுத விரும்புகிறேன்.

1981ல் மொனரகல மாவடத்தில் வெளிக்கள வேலை செய்த அனுபவத்திலும் 2006 வரை யால காடுகளின் கிழக்கு பாதியில் பயணம் செய்தவன் என்கிற முறையிலும் கெரிலா அடிப்படையிலான சிறு குழுக்களாக இயங்கும் அமைப்புகளால் அம்பாறை மொனராகல அம்பந்தோட்டை முக்கோணத்துக்குள் இருக்கும் யால காட்டுபகுதிகளிலும் வன்னி விபத்துக் காடுகளிலும் கிழக்கு மாகாணம் மலையக அனுராதபுரம் மாவட்டங்களின் பிற்புல காடுகளிலுமாக தமிழ் சிங்கள பகுதிக் காடுகளிலும் தொடர்ந்து செயல் பட முடியும். ஆழ்ப்பலத்தை நகர்தினாலும் முள்ளிவாய்க்கால் நிலமையை சுயேட்சையாக இயங்கும் சிறு கெரிலா அணிகலுக்கு ஏற்படுத்துவது எதிரிக்கு பெரும்பாலும் சாத்தியமில்லை.

ஆனால் சுயாட்ச்சி உள்ள பல கெரிலா தலைவர்களது கூட்டுத் தலைமையை அமைக்காமல் சரியான முஸ்லிம் மக்கள் உறவு தொடர்பான கொள்கை இல்லாமல் சரியான சிங்களவர் தொடர்பான கொள்கை இல்லாமல் இலங்கையின் சிதறிய காடுகளுள் ஒரு கெரிலா அமைப்பாக செயல்படுவது தமிழருக்குச் சாத்தியமில்லை. ஏகத்தலைமை கோசத்தைக் கைவிட்டுவிட்டு மக்கள் பங்குபற்றுதலுடன் சாத்தியமான ஐக்கிய முன்னணியைக் கட்டி எழுப்ப உழைக்காமல் ஒரு கெரிலா அமைப்பாக தொடர்வது சாத்தியமில்லை. ஏக பிரதிநிதித்துவம், ஏக தலைமை, மாற்றுக் கருத்துக்களுக்குச் சாவுமணி, மக்கள்மீது அதிகாரம் செலுத்துதல் என்கிற அடிப்படயோடு ஒரு நேரடி இராணுவத்தை மட்டுமே கட்ட முடியும். அத்தகைய நேரடி இராணுவம் எதிரி நம்மை அரசியல் இராஜதந்திர ரீதியாக தனிமைப் படுத்தவும் தொகை ரீதியாக சுற்றி வழைக்ககவும் வல்லமையை பெறும் வரைக்கும் மட்டுமே நிலைக்க முடியும். இதை மீறி நிலைப்பதானால் அயல்நாடுகளின் நேரடி உதவி அவசியப் படும். இன்றுள்ள அவசரப் பிரச்சினை போராட்டமல்ல மீழ் குடியேற்றமும் அரசயல் நடவடிக்கைகளுக்கான வெளியை மீண்டும் உருவாக்குவதும்தான். இது களத்தில் வாழும் பரந்துபட்ட மக்கள் தங்கள் தேவைகளையும் அரசியலையும் அடையாளம்காண அவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதையே கோரி நிற்க்கிறது. நம்மிடம் அவர்கள் உசுப்பேத்திவிடுங்கள் என்று கோரவில்லை. உயிர்த்தெழ கைகொடுங்கள் என்றே கோருகின்றனர்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தியாவின் சித்துவிளையாட்டு. வெளிநாட்டில் வாழகின்ற சில மசாலாப்பட ரசிகர்கள்பேன்ற மனநிலையுடைய அன்றேல் இன்னமும் தமது சொந்தங்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சொகுசுவாழக்கை வாழநினைக்கும் (இதில் சொகுசுவாழ்க்கை எள்ளளவும் இல்லை ஆனால் நாம்தான் இந்த அடிமைமணேநிலை வாழ்கையை சொகுசாக நினைக்கின்றோம்) புலம்பெயர் தமிழர்களது பொருளாதாரத்தை இலக்குவைத்து இந்தியா செய்ய நினைக்கும் செய்கூலிசேதாரமில்லா இனவழிப்பு நடவடிக்கையின் பிள்ளையார்சுழி. இவர்களை ஆதரித்தால், அதே அவலம் நாளையோ அன்றேல் இன்னும் சிலவருடங்களிலேயோ வரச்சாத்தியமுண்டு. தமிழ்மக்கள் இதை முளையிலேயே மறுதலிப்பது நன்மைபயக்கும். அல்லது இன்னமொரு முள்ளிவாய்க்காலுக்குத் தயாராகவிருங்கோ.

தமிழனுக்கு இன்னமும் புத்திவரவில்லை, உங்கள் பிறந்தமண்ணையும் அதன் வளங்களையும் சிங்களவனும், இந்தியனும், சீனாக்காரனும் மேற்குலகமும் பங்குபோட்டுக்கொள்ளப்போகிறார்கள். அதனை முதலில் தடுக்க முயற்சி செய்யுங்கள். முதலில் உங்கள் சொந்த ஊரிற்கு ஒரு தடவையேனும் குடும்பத்துடன் செல்லுங்கள். அதன்பின்பு தெரியும் அங்குள்ள யதார்த்தம். இப்படியே கனவுகாண்போமாயின் குண்டியில் ஒட்டிய மண்கூட எங்களுக்கு மிஞசாது.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்த்தலுக்கு முதல் ஒரு கொத்து ரொட்டி ஒன்று மகிந்தவுக்கு தேவை.அது தான் இப்படியான அறிக்கைகள்.சரத்துக்கும் ஒரு சத்த வெடிதான். :D:lol:

சிங்களவனுக்கு கொத்துரொட்டி சாப்பிட ஆசையாயிருந்தால் ...... நாங்கள் தான் கறி போலை. :o:o:o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை மீறி நிலைப்பதானால் அயல்நாடுகளின் நேரடி உதவி அவசியப் படும். இன்றுள்ள அவசரப் பிரச்சினை போராட்டமல்ல மீழ் குடியேற்றமும் அரசயல் நடவடிக்கைகளுக்கான வெளியை மீண்டும் உருவாக்குவதும்தான். இது களத்தில் வாழும் பரந்துபட்ட மக்கள் தங்கள் தேவைகளையும் அரசியலையும் அடையாளம்காண அவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதையே கோரி நிற்க்கிறது. நம்மிடம் அவர்கள் உசுப்பேத்திவிடுங்கள் என்று கோரவில்லை. உயிர்த்தெழ கைகொடுங்கள் என்றே கோருகின்றனர்.

Thanks POET

ஈழம் எண்ட சொல் வராமல் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது..

எங்கட பொக்குள் கேபிள் மேடை பேச்சாளர்கள், எடுத்து விடப்போகினம்.... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பேயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் அரசியல் வேளைகளை குழப்புவதுக்காக உருவாக்கப்பட்ட சதி என்று நான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ரோ விளையாடுகின்றது.இந்த அமைப்புக்கு ராம் விடுத்த மாவீரர் நாளுக்கு கிடைத்த வரவேற்பு தான் கிடைக்கும்.சிங்கள அரசை தன் சொல்படி ஆட வைப்பதற்கு இந்தியாவிற்கு ஒரு போராட்டக் குழு தேவை ஆனால் அதன் தலைமை ரோ சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டும் தலைவர் மாதிரி கொள்கையில உறுதியாய் இருக்கிற ஆட்கள் அவங்களுக்கு தேவை இல்லை.எடுத்த எடுப்பிலேயே உள்ளுர் ஊடகங்களுக்குத் தெரியாமல் ரைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி கொடுத்ததிலேயே இதன் பின்னால் பெரிய கை வேலை செய்வது தெரிய வருகிறது.தேர்தல் கால வன் முறைகளை எதிர்பார்க்கலாம்.

0

Edited by புலவர்

80 ஆண்டளவில்(PLA) இந்த பெயரில் E.P.R.L.F இன் இராணுவம் இருந்தது,அதன் தளபதி தோழர் டக்கிளஸ்,,,2009 இல் தோழர் அமைச்சராகி ஜயாவாக மாறிவிட்டார் ...

எடுத்த எடுப்பிலேயே உள்ளுர் ஊடகங்களுக்குத் தெரியாமல் ரைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி கொடுத்ததிலேயே இதன் பின்னால் பெரிய கை வேலை செய்வது தெரிய வருகிறது

:D:lol::o

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவிடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட ஆயுதப்போர்: தாக்குதலுக்கு தயாராகின்றது மக்கள் விடுதலை இராணுவம்

தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான ஆயுதப்போரட்டங்களை தீவிரப்படுத்தும் நோக்கத்துடன் புதிய விடுதலை அமைப்பு ஒன்று கிழக்கிலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவை தளமாக கொண்ட த ரைமஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போர் நிறைவுபெற்றுவிட்டதாக சிறீலங்கா அரசு அறிவித்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் வடக்கு - கிழக்கில் புதிய விடுதலை அமைப்பு ஒன்று உதயமாகியுள்ளது.

கியூபா மற்றும் பலஸ்த்தீன விடுதலை அமைப்புக்களுடன் தொடர்புள்ள மக்கள் விடுதலை இராணுவம் என்னும் அமைப்பு கிழக்கிலங்கையில் உருவாகிள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்னர் இது உருவாக்கப்பட்டதாகவும், தமிழ் ஈழத்தை பொறுவதற்கு படையினர் மீதும் படை நிலைகள் மீதும் தாக்குதல்ளை ஆரம்பிக்கப்போவதாகவும் அதன் கிழக்கு பிராந்திய கட்டளை அதிகாரி கோணேஸ் தெரிவித்துள்ளார்.

அவருடனான சந்திப்பு கிழக்கு மாகாணத்தில் உள்ள இரகசிய இடம் ஒன்றில் இடம்பெற்றிருந்தது. விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் தமிழ் மக்களுக்கான எந்த தீர்வும் முன்வைக்கப்படவில்லை. எனவே நாம் எமது இலட்சியத்தை அடைய தாக்குதல்களை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமது படையணியில் தற்போது 300 பயிற்சி பெற்ற வீரர்கள் உள்ளதாகவும், 5,000 தொண்டர் படையினரை இடம்பெயர்ந்த மக்களில் இருந்து இணைத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமது அமைப்பின் மத்திய குழு 10 பேரை கொண்டதாகவும், அது விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வேறுபட்டது எனவும் தெரிவித்துள்ள கோணேஸ் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்களும் தம்முடன் இணைந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் எமது படையில் உள்ளனர். ஆனால் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் சில தவறானவை. விடுதலைப்புலிகள் தற்போது முற்றாக முறியடிக்கப்பட்டுள்ளனர். நாம் அது தொடர்பில் கவலை கொள்ளவில்லை. நாம் பொதுவுடமை கொள்கை உடையவர்கள். நாம் ஒரு புதிய தமிழ் அமைப்பை உருவாக்க முனைகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆளுமை தொடர்பில் தெளிவின்மை உள்ளது. அதில் 1980 களில் சிறீலங்கா படையினருடன் போராடிய பலர் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தளபதி கோணேஸ் 40 வயது நிரம்பியவர் அவர் 1983 களில் இந்திய உத்திர பிரதேசத்தில் பயிற்சி பெற்றவர். அவர் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்திலும் பயிற்சி பெற்றவர். தமக்கு தற்போதும் பலஸ்த்தீன விடுதலை இயக்கம், கியூபா மற்றும் இந்திய மாவேஸ்ட் என்பவற்றுடன் தொடர்புகள் இருப்பதாகவும், அவர்கள் எம்மை போல தமது உரிமைகளுக்காக போராடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் முன்னர் சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தல்களுக்கு உட்பட்டிருந்தவர். பின்னர் ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு தப்பி சென்றிருந்தார். புதிய அமைப்பு ஒன்று மிகவும் சிக்கலான தருணத்தில் சிறீலங்காவில் தோன்றியுள்ளது. சிறீலங்கா வெற்றியை கொண்டாடும் போது புதிய அமைப்பு உருவாகி வருகின்றது. மகிந்தவும், பொன்சேகாவும் தேர்தலில் போட்டியிடும் போது மறுபுறம் ஆயுதப்போராட்டம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

அவர்கள் இருவரும் சிங்கள மக்களின் வாக்குளை பிரிக்க போகின்றனர், எனவே தமிழ் மக்களின் வாக்குகள் முக்கியமானவை, ஆனால் யாரை ஆதரிப்பது என தமிழ் மக்கள் இன்று வரை தீர்மானிக்கவில்லை. இந்த காலப்பகுதியில் உருவாகும் புதிய வன்முறைகள் நாட்டின் உறுதித்தன்மையை மேலும் சீர்குலககலாம். நாம் விடுதலைப்புலிகளை விட அரசியல் ரீதியாக அனுபவம் வாய்ந்தவர்கள், எனவே பயங்கரவாத முத்திரையை எவ்வாறு தவிர்ப்பது என்பது எமக்கு தெரியும் என கோணேஸ் தெரிவித்துள்ளார்.

எமது எதிரி சிறீலங்கா அரசு தான், நாம் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடுகின்றோம், நாம் அனைத்துலக சமூகத்திற்கு எதிரானவர்கள் அல்ல, அனைத்துலகத்தின் ஆதரவுகள் எமக்கு தேவை. விடுதலைப்புலிகளின் போரியல் உத்திகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எமக்கில்லை. ஆனால் கெரில்லா தாக்குதல்கள் தான் எமது பரந்த தெரிவு. பொருளாதார, இராணுவ மற்றும் நிர்வாக மையங்களே எமது இலக்குகள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எமது அடுத்த தாக்குதல் இலக்கு கருணா குழுவினர் மீதாகவே இருக்கும், நாம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றோம் எனவே தாக்குதலுககான காலம் நெருங்கிவிட்டது என இந்த அமைப்பை சேர்ந்த வேறு ஒரு போராளி தெரிவிதிருந்தார்.

கிழக்கு பகுதியில் உள்ள ஒரு பின்தங்கிய இடத்தில் சில நாட்கள் கோணேஸ் உடன் நாம் தங்கியிருந்து நேர்காணலை மேற்கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் மூன்று இளைஞர்கள் பயிற்சி முகாமிற்கு செல்வதற்கு காத்திருந்தனர். அவர்கள் 15 மற்றும் 16 வயது நிரம்பியவர்கள், மக்கள் விடுதலை இரணுவம் எம்மை கவர்ந்துள்ளது, அவர்களால் தான் எதனையும் தமிழ் மக்களுக்கு செய்ய முடியும் என அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இடம்பெயர்ந்த மக்களில் பலர் கடுமையான மன அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழாக்கம் நன்றி: ஈழம் இ நியூஸ்

The People's Liberation Army எண்டு கூகிள் பண்ணிணால் வருவது

:o:lol::o :o

The People's Liberation Army (PLA) is the unified military organization of all land, sea, and air forces of the People's Republic of China. ... :D

மிகுதியை இங்கே பார்கவும் !!!!

Edited by ஜெகுமார்

இது கருணா அல்லது பிள்ளையான் அரசோடு இணைந்து தேர்தலுக்காகவும் பின்னர் அரசியல் தீர்வை இழுத்தடிப்பதற்கு இப்படியான அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

இது அரசாங்கமே இப்படியான அமைப்பு இயங்குவதாக தெரிவித்துள்ளது. அரசாங்கத்துக்கும் இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளைப் போல் பலமான அமைப்பில்லாமல் ஒரு சிறிய அமைப்பு தேவைப்படுகிறது அதற்கான ஏற்பாடாகவே இதைப் பார்க்கிறேன்

மக்கள் விடுதலை இராணுவத்தை அரசு எதிர்கொள்ளும்: ரம்புக்வெல

திகதி: 07.12.2009 // தமிழீழம்

தமிழீழம் கிழக்குப் பகுதியில் "மக்கள் விடுதலை இராணுவம்" செயற்பட்டு வருவது குறித்து எமக்கு தெரியும். ஆனால் அது தொடர்பில் நாம் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என சிறீலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: "மக்கள் விடுதலை இராணுவம்" என்ற பெயரில் ஆயுதக்குழு ஒன்று செயற்பட்டு வருவது எமக்கு தெரியும். அதனை அரசு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக அரசு எதிர்கொள்ளும். இவ்வாறான நிலமைகள் உருவாகுவது உலகில் வழக்கமானதொன்று என அவர் தெரிவித்துள்ளார்.

thanks sankathi

Edited by suryaa

தமிழர்களின் அமைப்பாக விருந்தால் தமிழர் சம்பந்தப்பட்ட இணையங்களில் முதலில் வர வாய்ப்பு அதிகம். முடிவாக தாமாகவே தமது மூலத்தை கூறியுள்ளனர்

தமிழர் இணையங்களுக்காகத்தான் திரியை மூட்டியிருப்பார்களோ என்னவோ. சிங்களவருக்கு நன்றாகத் தெரியும், தொடர்ந்து எரிய வைக்கப் போவது அவைதானே.

இதனைக் கேள்விப்பட்டதிலிருந்து, புலம்பெயர் சனங்கள் தம்மையும், தமது பிள்ளைகளையும்,தம் சகோதரங்களையும் இந்த அமைப்பில் சேர்த்து விடுவதற்காக ஓடுபட்டு திரிவதாக ஒரு செய்தி அடிபடுகின்றது. இந்த விசயம் உண்மையா அல்லது வதந்தியா என தெரியவில்லை...

புலம்பேயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் அரசியல் வேளைகளை குழப்புவதுக்காக உருவாக்கப்பட்ட சதி என்று நான் நினைக்கிறேன்.

மே 19 இற்குப் பின் புலத்துத் தமிழரை அணி அணியாக பிரிக்கும் அரசியல், செயற்பாடுதானே புலம் பெயர்ந்து தமிழர் வாழும் தேசமெங்கும் இடம் பெற்று வருகின்றது.

பொறுப்பாளர்கள் தம் பொறுப்புணர்ந்து செயற்படுவதாக உணர முடியாது இருக்கின்றது.

Edited by kalaivani

இதனைக் கேள்விப்பட்டதிலிருந்து, புலம்பெயர் சனங்கள் தம்மையும், தமது பிள்ளைகளையும்,தம் சகோதரங்களையும் இந்த அமைப்பில் சேர்த்து விடுவதற்காக ஓடுபட்டு திரிவதாக ஒரு செய்தி அடிபடுகின்றது. இந்த விசயம் உண்மையா அல்லது வதந்தியா என தெரியவில்லை...

என்னிடமும் ஒருவர் எப்படி இந்த அமைப்பில சேர்வது என்டு கேட்டவர்...நான் அவரை இந்த அமைப்பின்ட புலம்பெயர் பொருப்பாளர் *** தொடர்பு கொள்ளும்படி சொல்லி விட்டனான் :D:lol:

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு கொத்துரொட்டி சாப்பிட ஆசையாயிருந்தால் ...... நாங்கள் தான் கறி போலை. :o:o:o

"ருசி கண்ட பூனை" என்று சொல்வார்கள். ஏற்கனவே பல கொலைகளை புலிகளை சாட்டி டக்ளசில் தொடங்கி சித்தார்த்தன், கருணா, பிள்ளையான் ஈறாக ஒசமா குழு வரை தமிழரை கொலை, பாலியல் வல்லுறவு, கடத்தல் என தாம் விரும்பியவாறு செய்து கொண்டிருந்தர்கள்.இன்று புலிகளை சாட்ட சந்தர்ப்பம் இல்லை. ஆகவே மக்கள் விடுதலை படை என ஒரு படை இருப்பதாக மாயை காட்டி தனக்கு எதிராக வேலைசெய்யும் தமிழ், முஸ்லிம்,மலையக மர்றும் சிங்கள அரசியல்வாதிகள்,பத்திரிகையாளர்கள் என பலரை தேர்த்தலுக்கு முதல் போட்டு தள்ள முடியும். மேலும் அகதிகளை வெளியேறாமல் தடுக்க முடியும்.சரத் போன்றவர்களுக்கு ஒரு வெருட்டும் கொடுக்க முடியும். பாருங்கள் சிறி ஒரு கல்லில் எத்தனை மாங்காய்கள் என.

புலம் பெயர் தமிழர்கள் எப்படி குறிவைக்கப்படுகிறார்கள் என மீண்டும் ஒரு தலைப்பில் பார்க்கலாம். சிறி, உங்களை நேரடியாக எனது கருத்து உங்களை தாக்கி இருந்தால் மன்னிக்கவும்.

என்னிடமும் ஒருவர் எப்படி இந்த அமைப்பில சேர்வது என்டு கேட்டவர்...நான் அவரை இந்த அமைப்பின்ட புலம்பெயர் பொருப்பாளர் *** தொடர்பு கொள்ளும்படி சொல்லி விட்டனான் :D:lol:

உள்ளதையும் இல்லாமல் பண்ண இந்தாளை போடலாம். :o:o:o எப்படியெல்லாம் வந்து சேர்கிறார்கள் பாருங்க,நெப்போலியன். :D:D

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6946605.ece

ஐயா பெரியோரே..., இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை... படித்ததை வெட்டி ஒட்டி உள்ளேன். ஒருத்தரும் என்னோட சண்டைக்கு வரப்படாது. இப்பவே சொல்லீட்டன். :P

இதனைக் கேள்விப்பட்டதிலிருந்து, புலம்பெயர் சனங்கள் தம்மையும், தமது பிள்ளைகளையும்,தம் சகோதரங்களையும் இந்த அமைப்பில் சேர்த்து விடுவதற்காக ஓடுபட்டு திரிவதாக ஒரு செய்தி அடிபடுகின்றது. இந்த விசயம் உண்மையா அல்லது வதந்தியா என தெரியவில்லை...

நானும் கேள்விப்பட்டனான் உண்மைபோலத்தான் தோணுது :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடமும் ஒருவர் எப்படி இந்த அமைப்பில சேர்வது என்டு கேட்டவர்...நான் அவரை இந்த அமைப்பின்ட புலம்பெயர் பொருப்பாளர் *** தொடர்பு கொள்ளும்படி சொல்லி விட்டனான் :D:lol:

வெள்ளைவான், ஓடத்தெரிந்தால் முன்னுரிமை கிடைக்கும் என்று சொன்னனீங்களா ...... :o:o

"ருசி கண்ட பூனை" என்று சொல்வார்கள். ஏற்கனவே பல கொலைகளை புலிகளை சாட்டி டக்ளசில் தொடங்கி சித்தார்த்தன், கருணா, பிள்ளையான் ஈறாக ஒசமா குழு வரை தமிழரை கொலை, பாலியல் வல்லுறவு, கடத்தல் என தாம் விரும்பியவாறு செய்து கொண்டிருந்தர்கள்.இன்று புலிகளை சாட்ட சந்தர்ப்பம் இல்லை. ஆகவே மக்கள் விடுதலை படை என ஒரு படை இருப்பதாக மாயை காட்டி தனக்கு எதிராக வேலைசெய்யும் தமிழ், முஸ்லிம்,மலையக மர்றும் சிங்கள அரசியல்வாதிகள்,பத்திரிகையாளர்கள் என பலரை தேர்த்தலுக்கு முதல் போட்டு தள்ள முடியும். மேலும் அகதிகளை வெளியேறாமல் தடுக்க முடியும்.சரத் போன்றவர்களுக்கு ஒரு வெருட்டும் கொடுக்க முடியும். பாருங்கள் சிறி ஒரு கல்லில் எத்தனை மாங்காய்கள் என.

புலம் பெயர் தமிழர்கள் எப்படி குறிவைக்கப்படுகிறார்கள் என மீண்டும் ஒரு தலைப்பில் பார்க்கலாம். சிறி, உங்களை நேரடியாக எனது கருத்து

உங்களை தாக்கி இருந்தால் மன்னிக்கவும்.

நுணாவிலான் நீங்கள் ஊரில் நடப்பதை தானே எழுதியிருந்தீர்கள்.

Edited by இளைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.