Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா தழுவிய வரலாற்றுத் தேர்தல், கனடிய தமிழ் மக்கள் ஆணை - "தமிழீழமே தீர்வு" என 99.82 சதவீத மக்கள் தீர்ப்பு

Featured Replies

கனடா தழுவிய வரலாற்றுத் தேர்தல், கனடிய தமிழ் மக்கள் ஆணை - "தமிழீழமே தீர்வு" என 99.82 சதவீத மக்கள் தீர்ப்பு

திகதி: 20.12.2009 // தமிழீழம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்காக கனடியத் தமிழ் மக்களிடையே, நேற்று 19-12-2009 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடத்தப்பட்ட வாக்குக்கணிப்பு மொத்தமாக 48,583 வாக்காளர்கள் வரலாறாகி தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

அதில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவாக ‘ஆம்' என்று 48,481 வாக்குகளும், எதிராக ‘இல்லை' என்று 85 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் 17 வாக்குகள் செல்லுபடியற்றவையாக தேர்தல் நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்டன. இதன் பிரகாரம் 99.82 வீதமான மக்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் ‘ஆம்' என்று வாக்களிக்கப்பட்டதால் வாக்களிப்பில் ‘ஆம்' வெற்றி பெற்றதாக தேர்தல் நிறுவனத்தினால் உத்தியோகபூர்வ முடிவாக அறிவிக்கப்பட்டது.

தேர்தலை நடத்திய ES&S என்ற நிறுவனம் 40 ஆண்டுகளாக சனாதிபதித் தேர்தல் முதற்கொண்டு பல்வேறு தேர்தல்களை நடத்தி பெயர்பெற்ற வட அமெரிக்க தேர்தல் நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது. நேர்த்தியான தொழிநுட்பத்துடன் கூடிய இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரங்கள் மூலம் நடத்தப்பட்ட தேர்தலாகையால், தேர்தல் முடிந்த சில நிமிட நேரங்களிலேயே முடிவுகள் வெளிவர ஆரம்பித்தன.

கனடாவில் எந்த ஒரு சமூகமும் முனையாத முன்முயற்சியாக சனநாயக ரீதியாக அமைந்த இவ்வாக்குக்கணிப்பை கனடிய தேசிய ஊடகங்கள் பலவும் முதன்மையாகவும் தொடர்ச்சியாகவும் ஒலி - ஒளி பரப்பியமை முக்கிய விடயமாகக் நோக்கத்தக்கது.தொகுதிவாரியான தேர்தல் பற்றிய முழு விபரம் பின்னர் அறியத் தரப்படும www.sankathi.com

கனடா தமிழர் கனடாத்தமிளர்கள் தான்.

நன்றி உறவுகளே..

அது சரி.. வெறும் 48500 பேர்தானா?

  • கருத்துக்கள உறவுகள்

இது டக்கிளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் பெற்ற வெற்றி போல் தெரிகிறது. எம்மவரின் தமிழீழ ஆர்வத்தைக் கண்டு வியக்கிறேன். :):D

கனடாவில் மொத்த தமிழர்களின் எண்ணிக்கை 400,000 க்கும் அதிகம். ஆனால் அளிக்கப்பட்ட வாக்குகளோ வெறும் 10% மே. இந்த நிலையில் இத்தேர்தலை எவ்வாறு சட்ட ரீதியான அங்கீகாரத்தைப் பெற பிரேரிக்க முடியும்.

நோர்வேயிலும் இதேதானாம் நடந்தது. தேர்தல் முடிந்து தமிழ் ஊடகங்கள் 90% 95% என்று பேசிக்கொண்டிருக்க நோர்வே அரசியல் வட்டாரங்களில் வெறும் 30% வாக்குப் பதிவோடு எம்மால் திடமான நிலைப்பாட்டை தமிழ் மக்களின் ஆர்வம் தொடர்பில் எடுக்க முடியாது என்று கூறப்பட்டதாம்.

கனடாவில் வாழும் 50,000 பேரைத் தவிர மிச்சம் பேருக்கு.. தமிழீழத்தில் ஆர்வம் இல்லை என்பது இதன் மூலம் சிங்கள அரசு வெளி உலகுக்குக் காட்டவும் இந்தத் தேர்தல்கள் பயன்படலாம்.

எனவே தேர்தல்களை விளையாட்டாக நடத்தாது.. சரியான திட்டமிடலுடன் தீர்க்க தரிசனமாக நடத்த வேண்டும். இதற்கு இளையோர்களை சரியாக வழி நடந்த பெரியவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் முன்வர வேண்டும்.

விளையாட்டு வினையாகாது இருப்பின் நன்று..! :(:D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கனேடிய உறவுகளே!!!!! பிரான்ஸில் 30.000 மேற்பட்டவர்கள் வாக்களித்திருக்கையில் வெறும் 46.000 ஆயிரம் மக்கள் வாக்களித்திருப்பது. மக்களின் சோம்பேறித் தனத்தை அல்லது அக்கறையின்மையைக் காட்டுகிறது.3 இலட்சம் தமிழர்களில் குறைந்தது 1 இலட்சம் தமிழர்களாவது வாக்களிக்கும் உரிமை உள்ளவர்களாக இருந்திருப்பார்கள். ஏன் இந்த அக்கறையின்மை? இதில் பணரீதியாகவோ உடல்ரீதியாகவோ எந்தப் பாதிப்பும் உங்களுக்கு இல்லையே? பிரித்தானியாவிலும் அக்கறையற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.ஆனால் பிரச்சாரம் மந்தகதியில்தான் இருக்கிறது. இதையே பெரும்பான்மையானவர்கள் தேர்தலைப் புறக்கணித்துவிட்டார்கள் என்று வாதிடுபவர்களுக்கு சாதகமாக இருக்கப் போகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்குதான் நமது சிறீலன்கன் எயார் லைன்ஸ், லெமன் பஃப், நெக்டொ போன்ற இலங்கை பொருட்களை புறக்கணிக்க மனமின்றி பலர் உள்ளனரே? (மன்னிக்கவும் புறக்கணிப்போரே)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது டக்கிளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் பெற்ற வெற்றி போல் தெரிகிறது. எம்மவரின் தமிழீழ ஆர்வத்தைக் கண்டு வியக்கிறேன். :D:(

கனடாவில் மொத்த தமிழர்களின் எண்ணிக்கை 400,000 க்கும் அதிகம். ஆனால் அளிக்கப்பட்ட வாக்குகளோ வெறும் 10% மே. இந்த நிலையில் இத்தேர்தலை எவ்வாறு சட்ட ரீதியான அங்கீகாரத்தைப் பெற பிரேரிக்க முடியும்.

நோர்வேயிலும் இதேதானாம் நடந்தது. தேர்தல் முடிந்து தமிழ் ஊடகங்கள் 90% 95% என்று பேசிக்கொண்டிருக்க நோர்வே அரசியல் வட்டாரங்களில் வெறும் 30% வாக்குப் பதிவோடு எம்மால் திடமான நிலைப்பாட்டை தமிழ் மக்களின் ஆர்வம் தொடர்பில் எடுக்க முடியாது என்று கூறப்பட்டதாம்.

கனடாவில் வாழும் 50,000 பேரைத் தவிர மிச்சம் பேருக்கு.. தமிழீழத்தில் ஆர்வம் இல்லை என்பது இதன் மூலம் சிங்கள அரசு வெளி உலகுக்குக் காட்டவும் இந்தத் தேர்தல்கள் பயன்படலாம்.

எனவே தேர்தல்களை விளையாட்டாக நடத்தாது.. சரியான திட்டமிடலுடன் தீர்க்க தரிசனமாக நடத்த வேண்டும். இதற்கு இளையோர்களை சரியாக வழி நடந்த பெரியவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் முன்வர வேண்டும்.

விளையாட்டு வினையாகாது இருப்பின் நன்று..! :(:D:)

:(:o:)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கனேடிய உறவுகளே!!!!! பிரான்ஸில் 30.000 மேற்பட்டவர்கள் வாக்களித்திருக்கையில் வெறும் 46.000 ஆயிரம் மக்கள் வாக்களித்திருப்பது. மக்களின் சோம்பேறித் தனத்தை அல்லது அக்கறையின்மையைக் காட்டுகிறது.3 இலட்சம் தமிழர்களில் குறைந்தது 1 இலட்சம் தமிழர்களாவது வாக்களிக்கும் உரிமை உள்ளவர்களாக இருந்திருப்பார்கள். ஏன் இந்த அக்கறையின்மை? இதில் பணரீதியாகவோ உடல்ரீதியாகவோ எந்தப் பாதிப்பும் உங்களுக்கு இல்லையே? பிரித்தானியாவிலும் அக்கறையற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.ஆனால் பிரச்சாரம் மந்தகதியில்தான் இருக்கிறது. இதையே பெரும்பான்மையானவர்கள் தேர்தலைப் புறக்கணித்துவிட்டார்கள் என்று வாதிடுபவர்களுக்கு சாதகமாக இருக்கப் போகிறது.

கனடாவில் வாழும் 50இ000 பேரைத் தவிர மிச்சம் பேருக்கு.. தமிழீழத்தில் ஆர்வம் இல்லை என்பது இதன் மூலம் சிங்கள அரசு வெளி உலகுக்குக் காட்டவும் இந்தத் தேர்தல்கள் பயன்படலாம்.

எனவே தேர்தல்களை விளையாட்டாக நடத்தாது.. சரியான திட்டமிடலுடன் தீர்க்க தரிசனமாக நடத்த வேண்டும். இதற்கு இளையோர்களை சரியாக வழி நடந்த பெரியவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் முன்வர வேண்டும்.

விளையாட்டு வினையாகாது இருப்பின் நன்று

கனடாத்தமிழர் எம்மை ஏமாற்றிவிட்டனர்

இந்தியாவையும் தமிழகத்தையும் விமர்சிக்க எமக்கு என்ன தகுதி இருக்கிறது...........?????

  • கருத்துக்கள உறவுகள்

எவரும் அவசரப்பட்டு விமர்சிக்க வேண்டாம். 4 லட்சம் பேரில் வாக்களிக்கும் தகுதியுடையோர் 2 லட்சமிருக்கும். ஆக 25 வீதமானோர் வாக்களித்திருக்கின்றனர். சிலவேளை பரப்புரை செய்யப்பட்ட காலம் குறைவாகவோ அல்லது பலருக்கு இதன் முக்கியத்துவம் தெரியாமலோ இருந்திருக்கலாம். கடுமையாக விமர்சிப்பதன் மூலம் வாக்களித்த 48500 பேரையும் அல்லவா சேர்த்து நோகடிக்கிறோம்.

எவரையும் கட்டாயப்படுத்தி வாக்களிக்குமாறு கூறமுடியாது. அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்கள் செய்யலாம். மக்களுக்கு இன்னும் இதன் முக்கியத்துவம் விளங்கவில்லை என்றே தெரிகிறது. அது அவர்களின் தவறில்லை. ஏனென்றால் தமிழ் ஊடகங்களிலேயே இந்த வாக்கெடுப்பிற்கு எதிரான பிரச்சாரமும், வானொலிகளில் "வாக்களிக்கும் தமிழர் சிங்கள அரசால் கைதுசெய்யப்படுவார்கள்" என்று விசமத்தனமாக தொடர் பிரச்சாரமும் செய்யப்படும்போது என்னதான் செய்வது?? அதைவிட அங்கே கடும் குளிர், கொட்டும் பனி என்று செய்திகள் வந்தவண்ணமுள்ளன. ஆகவே பல காரணங்கள் இருக்கலாம்.

வாக்களித்த தமிழீழ மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளத் தவறிய ஏனைய தமிழீழ மக்கள் தேசியத்தை உறுதிப்படுத்தும் இனிவரும் நடவடிக்கைகளில் கலந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் !!!

  • கருத்துக்கள உறவுகள்

ஏனென்றால் தமிழ் ஊடகங்களிலேயே இந்த வாக்கெடுப்பிற்கு எதிரான பிரச்சாரமும்இ வானொலிகளில் "வாக்களிக்கும் தமிழர் சிங்கள அரசால் கைதுசெய்யப்படுவார்கள்" என்று விசமத்தனமாக தொடர் பிரச்சாரமும் செய்யப்படும்போது என்னதான் செய்வது?? அதைவிட அங்கே கடும் குளிர்இ கொட்டும் பனி என்று செய்திகள் வந்தவண்ணமுள்ளன. ஆகவே பல காரணங்கள் இருக்கலாம்.

இதை நானும் அறிந்தேன்

நான் தொலைபேசியில் பேசியபோது சொன்னார்கள்

வாக்களிப்போரது விபரங்கள் நேரடியாக ஸ்ரீலங்கா அரசுக்கு அனுப்பப்படுவதாக.....

தாம் கட்டுநாயக்காவுக்கு போகமுடியாது வரும் என்றெல்லாம் கதைத்தார்கள்

முள்ளியவளையில் மக்கள் போராடவில்லை என்பவர்களுக்கு இது சமர்ப்பணம்

  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட அங்கே கடும் குளிர் கொட்டும் பனி என்று செய்திகள் வந்தவண்ணமுள்ளன

இதை ஏற்றுக்கொள்ள முடியாது

அதற்காகத்தான் அந்தந்த பகுதிகளில் வாக்களிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டன

வயதுபோனவர்கள் சிலநேரம் வரமுடியாதிருந்திருக்கலாம்

ஆனால் நான் என் தாயாரை கைத்தாங்கலாக கொண்டு சென்றுதான் வாக்களிக்க விட்டேன்

முள்ளிவாய்க்காலில் என்ன இருந்தது அந்த மக்கள் போராட....??

ஏதாவது ஒன்று சொல்லமுடியுமா???

வாக்களிக்கத் தகுதியுள்ளோரில் 25 வீதத்தி;ற்கும் குறைவானோர் வாக்களித்ததற்கு மக்களை மட்டும் குறை கூறிப் பயனில்லை. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நாடு கடந்த அரசிற்கான தேர்தல் உலகளாவிய ரீதியில் நடத்தப்படும் என அதன் ஒருங்கிணைப்பார் குழுத் தலைவர் திரு. உருத்திரகுமாரன் அவர்கள் அறிவித்துள்ள நிலையிலும் வட்டுக் கோட்டைத் தீர்மானம் குறித்த வாக்களிப்பு அவசியமற்றது என்ற தொனியில் அவர் கருத்துத் தெரிவித்துள்ள நிலையிலும் இதில் ஆர்வம் உள்ளவர்கள் கூட குழம்பிப் போயிருந்தனர்.

இது ஏட்டிக்குப் போட்டியாக அவசர அவசரமாக நடத்தப்படும் தேர்தல் எனப் பலரும் சந்தேகப்பட்டார்கள். இது குறித்து அறியாத மக்கள் பலரும் இருந்தார்கள். அதற்குக் காரணமும் இருந்தது. சில ஊடகங்கள் மூலம் செய்யப்பட்ட பிரச்சாரம் மட்டும் போதுமானதாக இருந்தததா என்ற சந்தேகம் இருக்கிறது. இன்னும் சில நாட்களை எடுத்து அவசரமின்றி நல்ல முறையில் பிரச்சாரங்களை முன்னெடுத்து இந்தத் தேர்தல் நடத்தப்பட்டிருக்கலாம்.

தமிழீழ ஆர்வத்துடன் பல போராட்டங்களிலும் முன்னின்று கலந்து கொள்ளும் நோர்வே உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் குறைந்த அளவில் வாக்களித்ததற்கும் இந்த ஏட்டிப் போட்டித் தன்மை தான் காரணம் என்ற கசப்பான உண்மையையும் நாம் ஜீரணித்துத் தான் ஆக வேண்டும்.

இத்தகைய அவசர தேர்தல்களும் ஒன்றுக்கொன்று முரணான அறிவித்தல்களும் தான் மக்கள் குறைந்த அளவில் வாக்களித்ததற்கு ஒரு காரணம். இது சிங்கள அரசின் கையில் பொல்லைக் கொடுக்கின்ற வேலை. புலம்பெயர் மக்கள் தமிழீழத்தில் அக்கறையற்றவர்கள் என்ற பிரச்சராத்தை முன்னெடுக்க நாங்களே வழியெற்படுத்திக் கொடுக்கின்றோமா?

இந்தத் தேர்தல் குறித்து விசனப்பட்ட என் நண்பர்கள் சிலர் சிங்கள அரசின் பிரச்சாரத்திற்கு வாய்ப்பாகப் போய்விடக் கூடாதே என்பதற்காகச் சென்று வாக்களித்தார்கள் என்பதையும் நான் கண்டேன்.

Edited by oviyan

நெடுக்காலபோவான்,

கனடாவில 450,000, 500,000 தமிழர் இருக்கிறீனம் எண்டுறது நம்மட குத்து மதிப்புத்தான். கனடா புள்ளிவிபரவியல் திணைக்களம் அப்பிடி சொன்னதாய் இல்லை. சுமார் 350,000 என்பது கிட்டத்தட்ட சரியாக இருக்கலாமோ தெரியாது. அதுவும் டொரோண்டோ மாநகரில இருப்பவர்கள் 250,000 சொச்சமே என்று ஊகிக்கப்படுகிது.

இனி இந்த 350,000 சொச்சத்தில வாக்களிக்க தகுதியானவர்கள் சுமார் 100,000இற்கும் குறைவாகவே இருக்கக்கூடும். தவிர வாக்களிப்பு நிலையங்களுக்கு சகலருக்கும்போய் வாக்களிக்க வாய்ப்பு கிடைத்து இருக்காது. ஏராளம் முதியவர்கள் இருக்கலாம்.. இவர்களுக்கு விருப்பம் இருந்தாலும் அவர்களை கூட்டிக்கொண்டுபோக ஒருவரும் இல்லாமல் இருந்து இருக்கலாம், அண்மையாக வாக்களிப்பு நிலையங்கள் இல்லாமல் இருந்து இருக்கலாம்.

48,000 சொச்சம் வாக்குகள் என்பது.. அதுவும் இது தேவையில்லாத வேலை என்று நமது ஊடகங்களே எதிர்ப்பிரச்சாரம் செய்தநிலையில்... இந்த 48,000 பேரின் வாக்களிப்பு என்பது மிகப்பெரியவிசயம். மிகுந்த குளிரில்மத்தியில் 48,000பேர் சிரமங்களையும் பாராது தமது நேரத்தை செலவளித்து வாக்கெடுப்பில் பங்குகொண்டு இருக்கின்றார்கள் என்பது பெரியவிசயம்.

கனடா தமிழ் காங்கிரஸ்கூட இதற்கு ஆதரவு அளிக்கவில்லை.. வெளியில் நின்று ஆர்வத்துடன் (?) வேடிக்கை பார்த்தது என்பதுதான் கடுப்பானவிசயம்.

Edited by மச்சான்

48000 என்னமோ கருத்துக்கணிப்பு என்று பார்த்தாலும் 99.82% என்பது பேரு வெற்றியே.

இந்த தேர்தலுக்கு முன்னர் ஒரு கனடா ஆங்கில செய்தித்தளம் ஒன்று 50 000 பேர் வாக்களிப்பார்கள் என்று சொல்லி இருந்தது

அதன் அடிப்படையில்48500 பேர் க்குள் 99.82 வீதம் ஒரு நல்ல முடிவுதான்.

வாக்களித்தவர்களின் எண்ணிக்கை சற்று ஏமாற்றம் தந்தாலும் ரொரண்டோ பெரும்பாகத்தில் பெரும் எண்ணிக்கையானோர் வாக்களித்துள்ளமையும் ஏனைய பகுதிகளான மொன்றியல் போன்ற இடங்களில் குறைவாக வாக்களித்துள்ளமையையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. ஏனைய இடங்களில் மனித வளப் பற்றாக்குறை, காலநிலை, வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை என்பனவும் செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம். ரொரண்டோவில் நேற்று காற்றுடன் கூடிய

-14 (Minus 14) குளிர் காணப்பட்டது. ஏனைய பகுதிகளில் இதனை விட அதிகமாக இருந்திருக்கு.

எப்படி இருப்பினும் நான் ஆகக் குறைந்தது 70,000 வாக்குகளாவது கிடைக்கும் என நம்பியிருந்தேன். என்னுடன் பழகிய/கதைத்த அனைவரும் வாக்களித்ததைப் பார்த்து எல்லாரும் வாக்களிப்பினம் என்று நம்பியிருந்தேன். ஆயினும் வாக்களித்து 48000 சொச்ச மக்களுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

குளிரையும் பொருட்படுத்தாது வாக்களித்த மக்களுக்கு நன்றிகள்.குறிப்பாக வயோதிபர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

ash0078.jpg

48இ000 சொச்சம் வாக்குகள் என்பது.. அதுவும் இது தேவையில்லாத வேலை என்று நமது ஊடகங்களே எதிர்ப்பிரச்சாரம் செய்தநிலையில்... இந்த 48இ000 பேரின் வாக்களிப்பு என்பது மிகப்பெரியவிசயம். மிகுந்த குளிரில்மத்தியில் 48இ000பேர் சிரமங்களையும் பாராது தமது நேரத்தை செலவளித்து வாக்கெடுப்பில் பங்குகொண்டு இருக்கின்றார்கள் என்பது பெரியவிசயம்.

கனடா தமிழ் காங்கிரஸ்கூட இதற்கு ஆதரவு அளிக்கவில்லை.. வெளியில் நின்று ஆர்வத்துடன் (?) வேடிக்கை பார்த்தது என்பதுதான் கடுப்பானவிசயம்.

மே 19 இற்குப் பின், புலம் பெயர்ந்து வாழும் மக்களுடைய அரசியல் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதற்கான தாக்குதலும், தற்காப்பு யுத்தமொன்றும் இடம் பெற்று வரும் நிலையில். புலம் பெயர் தமிழ்ச் சமூகம் ஒன்று திரள்வதற்கும், ஒன்று திரட்டுவதற்கும் தமிழ்ச் சமூகத்துள் இடம் பெறும் இந்தயுத்தம் தடையாக உள்ளது. புலம் பெயர்தேசமெங்கும் முன்னாள் இன்னாள் செயற்பாட்டளர்கள், பொறுப்பாளர்களின் பொறுப்பற்ற நிலைப்பாடு இந்த வாக்களிப்பில் மக்களின் பங்களிப்பைத்தீர்மானித்துள்ளது.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே

  • கருத்துக்கள உறவுகள்

அந்த 48,000 பேருக்கு மனம் நோகாம சில விசயங்களைக் கவனிக்க வேணும். பல காரணங்கள் போகக் கூடியவர்கள் போய் வாக்குப் போடாததற்கான காரணங்களாகச் சொல்லப் படுகுது. நான் சில நேரம் சனி ஞாயிறு சி.எம்.ஆர் கேட்கும் போது. துணிக்கடை நகைக் கடை விளம்பர நிகழ்ச்சிகள் போகும். சில நேரம் 2 - 3 மணி நேரம் பயணம் செய்து சாமான் வாங்க எங்கட சனம் வரும் வந்து இந்தக் குளிருக்க கஷ்டப் பட்டு வந்து அது வாங்கினம் இது வாங்கினம் எண்டு வீணி வடிக்கும். ஆனா எங்கட நாட்டுப் பிரச்சினை எண்டவுடன இந்தக் குளிர் ம-ர் எல்லாம் ஒரு பெரிய காரணமாகப் போகும் எங்களுக்கு. சனத்துக்குத் தெரியாதா இது நடக்கப் போறது? இது அறிய இன்ரர்னெட் தேவையெண்டில்லை, போற வாற இடத்தில எங்கட இன சனத்தோட கதைச்சாலே தெரிய வராதா? தெரியாது எண்டிறத விட தெரிந்து கொள்ள முயற்சி செய்ய இல்லை எண்டது பொருத்தமாக இருக்கும். இப்ப பொறுத்திருந்து பாப்பம், வேட்டைக் காரன் படம் எந்தத் தியேட்டரில எத்தனை மணிக்கு ஓடுது எண்டு எத்தினை பேருக்கு "தானாக" தெரிய வரப் போகுது எண்டு பார்த்தால் நமக்கு எதில ஆர்வம் எண்டு நல்லா வெளிச்சமாகும்.

போய் சரி போட்ட 48,000 பேர் நன்றிக்குரியவர்கள். ஆனால் ஒட்டு மொத்த முடிவு: எங்களுக்கு வேற யாராவது எங்களுக்காக எல்லாத்தையும் செய்து எங்களுக்கு தின்னத் தந்தால் சரி என்கிற மன நிலை தான் இருந்தது, இப்பவும் இருக்குது, இனியும் இருக்கும்-இந்த மனநிலை சிவாஜி லிங்கத்தையும் வரும் தேர்தலில டக்ளஸ் லெவலுக்கு கட்டாயம் இறக்கி விடப் போகுது.

a)48000 or 99.82% என்பது பேரு வெற்றியே.

Voter Turnout at Federal Elections and Referendums, 1867-2008:

http://www.elections.ca/content.asp?section=pas&document=turnout&lang=e

in 14 October 2008 elections, only 58.8% voted!

Saddam Hussein's 2002 referendum was claimed to have had 100% participation.[13] Opposition parties sometimes boycott votes they feel are unfair or illegitimate, or if the election is for a government that is considered illegitimate.

b)இதன் நோக்கம்?

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் எனப்படும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சிறிலங்காவில் விடுதலைப்புலிகளின் அமைப்பின் வீழ்ச்சிக்கு பின்னர் சளைத்துவிடவில்லை. தமது மக்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கு சர்வதேச அளவில் ஆதரவு தேடும்வகையில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்திவருகிறார்கள்.

அந்தந்த நாடுகளில் உள்ள அரச அதிகாரிகளின் அனுசரணையுடன் அந்நாட்டு தேர்தல் கண்காணிப்புடன் முறையான தேர்தலாக இதனை நடத்தி அந்த முடிவுகளை அந்நாட்டு அரசுக்கு சமர்ப்பித்துவருகிறார்கள்.

Canadians of Tamil descent were asked whether they still support the Vaddukkoaddai Resolution of 1976, which called for the recreation of an independent sovereign state for the Tamil people in the northern and eastern portions of Sri Lanka. ( http://toronto.ctv.ca/servlet/an/local/CTVNews/20091219/tamil_vote_091219/20091219/?hub=TorontoNewHome )

c) நன்றி உறவுகளே!

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு இனமடா. இந்த இனத்தை வைத்து போராட்டம், புறக்கணிப்பு மண்ணாங்கட்டி.

மாவீரர்களே! புதைத்தது உங்களை மட்டுமல்ல. உங்கள் கனவுகளையும்... நிரந்தரமாகவே புதைத்துவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தொலைக்காட்சியில், நேற்று நடந்த ஒரு கலந்துரையாடலில் இத்தகவலைச் சொன்னார்கள். கனடாவில் மூன்று லட்சம், நான்கு லட்சம் என்று சகட்டு மேனிக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கனேடிய புள்ளிவிவரத்துறையின் ஆய்வின்படி ஈழத்தமிழர்கள் என்று சொல்லப்படக்கூடியவர்கள் ரொரொண்டோ பெரும்பாகத்தில் 93,000 மட்டும்தானாம். இவர்களில் சிறுவர்கள் போக ஏனைய இடங்களில் கிடைக்கப்பெற்ற வாக்குகளையும் சேர்த்துப் பார்க்க 48,000 வாக்குகள் என்பது சாதாரணமாக எந்த ஒரு வாக்கெடுப்பிலும் கிடைக்கக்கூடிய 60% ஐத் தாண்டுமாம்.

இந்தத் தகவலின் அடிப்படையில் நோக்கும்போது, நடந்துமுடிந்த தேர்தல் தமிழருக்கான முதலாவது ஒரு தேர்தல் எனும் அடிப்படையில் வெற்றபெற்றுள்ளதாகவே கொள்ள வேண்டும். ஆனால் வரும்காலங்களில் தற்போது நேரிட்ட குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு இன்னும் சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பதே பெரும்பாலோரின் கோரிக்கையாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தொலைக்காட்சியில்இ நேற்று நடந்த ஒரு கலந்துரையாடலில் இத்தகவலைச் சொன்னார்கள். கனடாவில் மூன்று லட்சம்இ நான்கு லட்சம் என்று சகட்டு மேனிக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கனேடிய புள்ளிவிவரத்துறையின் ஆய்வின்படி ஈழத்தமிழர்கள் என்று சொல்லப்படக்கூடியவர்கள் ரொரொண்டோ பெரும்பாகத்தில் 93இ000 மட்டும்தானாம். இவர்களில் சிறுவர்கள் போக ஏனைய இடங்களில் கிடைக்கப்பெற்ற வாக்குகளையும் சேர்த்துப் பார்க்க 48000 வாக்குகள் என்பது சாதாரணமாக எந்த ஒரு வாக்கெடுப்பிலும் கிடைக்கக்கூடிய 60 ஐத் தாண்டுமாம்.

ஆறுதலான செய்தி

நன்றி இ.கலைஞன்

எங்க வீட்டில 4 பேர் ஆனா 2 பேருக்குத்தான் வாக்கு போடும் உரிமை இருக்கு, பக்கத்து வீட்டில 6 பேர் ஆனா 2 பேருக்கு தான் வாக்கு போடும் உரிமை இருக்கு. இப்படி பார்க்கப்போனா 48000 வாக்குகள் பரவாயில்லைப்போல . :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாக்கெட்டுப்பில் பிரான்ஸ் 30000 கனடா 49000. அப்போ பிரான்ஸிலும் பார்க்க ஆக 1.5 மடங்கு தமிழரே கனடாவில் வசிக்கின்றனர். :unsure:

தங்கட இயலாமையை மூடிமறைக்க கனடா புள்ளிவிபரத் துறையின் ஆய்வை ஆதாரம் காட்டுகிறார்கள். சென்ஸசுக்கு (குடியாளர்கள் தங்கள் பற்றிய தரவுகளை நிரப்பி அனுப்பும் பத்திரம்) கூட பல தமிழர்கள் தங்களின் இன அடையாளத்தை மறைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. வாழ்க கனடா வாழ் இனமானத் தமிழர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கெட்டுப்பில் பிரான்ஸ் 30000 கனடா 49000. அப்போ பிரான்ஸிலும் பார்க்க ஆக 1.5 மடங்கு தமிழரே கனடாவில் வசிக்கின்றனர். :unsure:

தங்கட இயலாமையை மூடிமறைக்க கனடா புள்ளிவிபரத் துறையின் ஆய்வை ஆதாரம் காட்டுகிறார்கள். சென்ஸசுக்கு (குடியாளர்கள் தங்கள் பற்றிய தரவுகளை நிரப்பி அனுப்பும் பத்திரம்) கூட பல தமிழர்கள் தங்களின் இன அடையாளத்தை மறைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. வாழ்க கனடா வாழ் இனமானத் தமிழர்கள்.

காட்டாறு..

பல தமிழர்கள் புள்ளிவிவரத்துறைக்கு தாங்கள் தமிழர்கள் எனும் விபரத்தை மறைத்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பலர் அகதிகளாக வந்திருப்பார்கள். அவர்கள் தாங்கள் தமிழர்கள் என்பதை எப்படி மறைப்பது? மறைத்தால் வழக்கில் வெற்றி பெற்றிருக்க முடியாதுதானே?

அதுபோல பிரான்சையும் கனடாவையும் ஒப்பிடுவதும் சரியல்ல. ஏனென்றால் கனடாவின் பரப்பளவு முழு ஐரோப்பாவையும் விடப் பெரியது. மக்கள் பரந்துபட்டு வாழ்வார்கள். ரொரோண்டோ பெரும்பாகத்தில் கிடைத்த பெறுபேறுகளே இந்தத் தேர்தலில் பிரதிபலிக்கப் பட்டுள்ளன. ரொரோண்டோவுக்கு வெளியே 200 கி.மீ தூரத்தில் உள்ள லண்டன் (ஒன்டரியோ) இல் கூட வாக்குச் சாவடிகள் வைக்கப்படவில்லை. எல்லோரும் பலமணித்தியாலங்கள் செலவழித்து வந்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே..

இதற்கிடையில், தேர்தலில் வாக்களிப்பவர்கள் இலங்கை செல்ல முடியாது போகலாம் என்று வேறு ஒரு வானொலியில் அறிவித்தார்களாம். இத்தனைக்கும் மத்தியிலும் இவ்வளவு பேர் வாக்களித்ததை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

தட்ஸ் ஆல் யுவர் ஆனர்..! :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.