Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

30 வருட கால யுத்தம் ஒழிந்து துன்பியல் கலந்த வாழ்க்கை நீங்கியதற்கு இறைவனுக்கு நன்றி – யாழ் ஆயரின் நத்தார் வாழ்த்து

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30 வருட கால யுத்தம் ஒழிந்து துன்பியல் கலந்த வாழ்க்கை நீங்கியதற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதாக யாழ்ப்பாண ஆயர் அதி வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். நத்தார் தினத்தை முன்னிட்டு இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். 30 வருட காலம் இவ்வாறு கழிந்துள்ளது. துன்பியல் கலந்த வாழ்க்கைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இதற்கு இறைவனுக்கு நான் நன்றி கூறுகின்றேன். ஆனாலும் தமிழ் மக்களது பிரச்சினைகள் தீரவில்லை. வன்னி மக்கள் இதுவரை தமது வீடுகளுக்குத் திரும்வில்லை. என்று அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார்களோ அன்றே அவர்கள் ஒரு சமாதானத்தை அடைந்தவர்களாக அர்த்தப்படுத்த முடியும்.

வாழ்விடமின்றி தமிழ் மக்கள் அல்லலுறுகின்றனர். வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தமிழ் மக்கள் எதிர்கொள்கின்றனர். இந்த வகையில் இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதே அரசினதும் உதவி அமைப்புகளினதும் கடமையாகும். இந்த நத்தார் தினத்தில் வன்னி மக்களை மீண்டும் நாம் நினைவு கூருகிறோம். அவர்கள், தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என யாழ் ஆயர் விடுத்துள்ள நத்தார்தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18870&cat=1

  • Replies 58
  • Views 5.6k
  • Created
  • Last Reply

நாங்கள் பிச்சைகாறர்கள். நாங்கள் புரியானிக்கு ஆசைப்படுவது பிழை. ஆசைப்பட்டால் நாய்களை ஏவிவிடப்படும். எல்லொரும் சேர்ந்து தர்ம அடி விழும். நாலு நூற்றாண்டாக கோமாவில் கிடந்தது, இப்ப செத்து நாறி புதச்சும் விட்டச்சு. சும்மா 10% துள்ள 90% க்கு கஸ்டம்..இன்னும் நோண்டிகொண்டிருந்தால் பட்ட புண் மாறாது.

நக்கிவாழப்பழகுவோம்.. :)

30 வருட கால யுத்தம் ஒழிந்து துன்பியல் கலந்த வாழ்க்கை நீங்கியதற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதாக யாழ்ப்பாண ஆயர் அதி வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். நத்தார் தினத்தை முன்னிட்டு இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். 30 வருட காலம் இவ்வாறு கழிந்துள்ளது. துன்பியல் கலந்த வாழ்க்கைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இதற்கு இறைவனுக்கு நான் நன்றி கூறுகின்றேன். ஆனாலும் தமிழ் மக்களது பிரச்சினைகள் தீரவில்லை. வன்னி மக்கள் இதுவரை தமது வீடுகளுக்குத் திரும்வில்லை. என்று அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார்களோ அன்றே அவர்கள் ஒரு சமாதானத்தை அடைந்தவர்களாக அர்த்தப்படுத்த முடியும்.

வாழ்விடமின்றி தமிழ் மக்கள் அல்லலுறுகின்றனர். வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தமிழ் மக்கள் எதிர்கொள்கின்றனர். இந்த வகையில் இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதே அரசினதும் உதவி அமைப்புகளினதும் கடமையாகும். இந்த நத்தார் தினத்தில் வன்னி மக்களை மீண்டும் நாம் நினைவு கூருகிறோம். அவர்கள், தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என யாழ் ஆயர் விடுத்துள்ள நத்தார்தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18870&cat=1

ஆக முப்பது வருடம் துன்பியல் வாழ்க்கை புலிகளின் அழிவில்தான் முடிந்ததென்றும் அதுவே மகிழ்சி என்றும் இந்தப் பெருந்தகை கூறுகின்றாரா (இல்லை வழக்கம் போல மொழிபெயர்ப்பில் பிழை என்று ஊடகங்களுக்கு அறிக்கை விடுவாரா?)

ஜோசப்பரராஜ சிங்கம் நத்தார் அன்று தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்படும் போதே வாய்மூடி மெளனியாகி தம் நிறங்களை காட்டியவர்கள் அல்லவா இவர்கள்

இதனையும் பார்க்கவும்:

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை: 4 வருடங்கள் பூர்த்தி

Edited by நிழலி

புளைக்கத் தெரிந்தவங்கப்பா!

  • கருத்துக்கள உறவுகள்

புளைக்கத் தெரிந்தவங்கப்பா!

வெளியிலிருந்து யாழ் வந்தோரோடு ஐயா என்ன சொல்லி விட்டிருப்பார் என்று இப்பவாவது புரிகிறதா???

இதைவிட்டுவிட்டு

வெள்ளைகளையும் கறுவர்களையும் நாம் ஏசியபடி....

  • கருத்துக்கள உறவுகள்

அல்லப்பிட்டியில் காணமல் போன அருட்தந்தையின் நிலமை என்னாச்சு?வன்னியில் கொல்லப்பட்ட அருட்தந்தையிற்கு நீதி கிடைத்து விட்டதா? ஜோசப் பரராசசிங்கம் ஒரு நத்தார்த் தினத்தன்று தானே தேவாலயத்திற்குள் கொல்லப்பட்டார்.நீதிகிடைத்ததh?கொன்றவர்களைக் குளிர்விப்பதற்காக இப்படித் துதிபாடி தமிழினத்திற்கு துரோகமிழைப்பதா?உயிர்பிழைத்தவர்கள் இபபடிப் பேசினால்தான் பிழைக்க முடியும் போலும்.

நக்குண்டு வாழ்வாரே வாழ்வார்-மற்றெல்லாம்

மக்குண்டு மண்ணானவர்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தில் விபச்சாரமும் நடக்கின்றதாம் என்று வேறொரு தலைப்பில் வாசித்தேன்.

இப்போதுதான் முகவரியை தெரிந்துகொண்டேன்.

மிகநல்ல எடுத்துக்காட்டு

ஆனால்என்ன நோவது எமக்குத்தான்

ரொம்பவே வலிக்குது..........

நாம் மதிக்கும் அருட்தந்தையர்கள் கூட இப்படி இருப்பது வேதனையளிக்கின்றது.

இக்கருத்தினை யாழ் ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் அடிகளார் அவர்கள் உண்மையிலேயே சொல்லியிருப்பாரானால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க தமிழ் சமூகம் தயங்கக்கூடாது!

Edited by பருத்தியன்

அவர் இருப்பது யாழ்ப்பாணத்தில் புலம் பெயர்ந்த நாட்டில் அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த்தலைப்புக்கு வந்த பதில்களிலிருந்து தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளாரும் கருவேப்பிலையாக தூக்கிவீசப்பட்டுள்ளார் என்று துல்லியமாக கணித்துக்கொள்ளலாம். முன்பென்றால் மாமனிதர் அல்லது நாட்டுப்பற்றாளர் இரண்டிலொரு பட்டம்குடுத்து கௌரவிக்கப்பட்டிருக்கலாம். இன்றைய நிலையில் .....யாதோ???? :)

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் சொல்வதற்கும் அருட்தந்தை சொல்வதற்குமிடையில் என்ன வித்தியாசமிருக்கிறது ? அவனும் யுத்தம் முடிந்துவிட்டது, எல்லாரும் அமைதியாக வாழ்கிறார்கள் என்கிறான். இவரும் அதைத்தான் சொல்கிறார். ஆக 30 வருடகாலம் நடந்த விடுதலைப் போராட்டம் இவரைப் பொறுத்தவரையில் தமிழ்மக்களுக்கு இடைஞ்சலாகவும் துன்பியல் நாடகமாகவும் இருந்திருக்கிறது. புலிகளால்த்தான் இவ்வளவு காலமும் தமிழருக்குப் பிரச்சனையே இருந்திருக்கிறது.

இவரைப் பொறுத்தவரையிலும் வன்னி மக்களுக்கு வாழ்விடங்கள் சரியாக அமைந்துவிட்டால் எல்லாப் பிரச்சனையும் முடிந்துவிடும்.

பிறகு என்ன மயிருக்கு இனப்பிரச்சனை , வேலை வாய்ப்பின்மை என்று சப்பைக் கட்டல்கள்???

இவர் இப்படி காட்டிக் கொடுத்தது இதுதான் முதல்த்தடவை அல்ல. முன்னரும் பலமுறை இப்படியான கைங்கரியங்களைச் செய்திருக்கிறார். மடுத்தேவாலயத்தின் மீது சந்திரிக்கா ஏவிய பிசாசுகள் நடத்திய எறிகனைத் தாக்குதலை மறைத்து புலிகள் செய்திருக்கலாம் என்று கூறிய விசுவாசிதானே இவர்??

இவரையெல்லாம் எதற்கு அருட்தந்தை என்று சொல்ல வேன்டும். பேசாமல் அரச ஏஜெண்ட் என்று சொல்லலாம். எந்தச் சிங்கள அரசியல்வாதி யாழ்ப்பாணம் வந்தாலும் இவரது வாசஸ்த்தலத்தையும் விசிட் அடிப்பது இப்ப வழக்கமாகிப் போச்சுது.

வானியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து வந்து யாழ்ப்பானத்தில் தங்கியிருந்தபோது இவரும் இவரது அலுவலகமும் உதவிகள் செய்ய மறுத்திருந்ததாக ஒரு செய்தி வந்திருந்ததே?? அது சிலருக்கு நினைவிலிருக்கலாம்.

பிழைக்கத் தெரிந்தவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதே அரசினதும் உதவி அமைப்புகளினதும் கடமையாகும்

நான் இந்த பேச்சுக்கு/ உரைக்கு இப்படி ஒரு தலையங்கம் போடலாம் என்று சொல்கிறேன்... யுத்தம் முடிவடைந்து யுத்த பீதி இன்றி மக்கள் நிம்மதியாய் இருக்கிறார்கள் என்பதில் என்ன பிழை கண்டீர்களோ தெரியவில்லை. தனியே யுத்தம் முடிவடைந்து என்று சொல்லுவதில் தவறில்லை ஆனால் பிரச்சனை தீர்ந்து விட்டது என்று சொல்லவில்லைதானே? இது ஒவ்வொருவர் செய்தியை எடுக்கிற விதம், அவர் இருக்கிற இடத்தை பார்க்க வேண்டும், டக்லஸ் தேவானந்தா கலந்து கொண்டதாகவும் செய்தி வந்துள்ளது, அப்படியான நேரத்தில் இதைவிட எவ்வாறு சொல்லாம் என்று தெரியவில்லை... செய்திற்கு தலையங்கம் போடுவது அவர் அவர் விருப்பம்..நாங்கள் முள்ளிவைக்காலில் சண்டை நடந்தபோது, யுத்தம் வேண்டாம், மக்களின் பாதுக்கப்பு வேணும் என்றோம் ஆனால் அது முடிவடைந்த போது அது தேவையில்லாமல் போனபோது, இன்னுமொருவர் யுத்தம் முடிந்து மக்கள் பயப்பீதி (துன்பியல் ) இல்லாமல் இருக்கிறார்கள் என்றபோது அது பிழை என்கிறோம்..இது ஒருவகையான காழ்புணர்வு என்றுதான் நான் பார்கிறேன்..

இங்கு யாரும் சொல்லவில்லை மக்களின் நாளந்த, நீண்ட கால பிரச்சனைகள் தீர்ந்து விட்டது என்று... இது ஒருவிதமான நிம்மதி.....

30 வருட துன்பியல் தனியே விடுதலை புலிகளால் ஏற்பட்டது என்று அர்த்தம் கொள்ள தேவையில்லை, அக்காலத்தில் இருந்த எல்லோராலும் ஏற்பட்டது, 30 போராட்டம் நடந்ததால் அதன் தாக்கத்தை எல்லோரும் அனுபவித்தோம், அதன் தொடற்சில்களை இப்பவும் அனுபவிக்கிறோம், யுத்தத்திற்குரிய மூலங்கள் இப்பவும் இருக்கிறது, ஆனால் ஒன்று ?????விளங்கியுள்ளது யுத்தம் இதற்குரிய வழியல்ல...அல்லது நாங்கள் போரிட்ட வழி சரியல்ல... யார் மறுத்தாலும் அதுதான் உண்மை... ஏற்றுக்கொள்வது அவர் அவர் விருப்பம்...

எங்களுக்குள்ள இடைநிலைகள் என்னவென்று தெரியவேண்டும், யுத்தம் நின்றது அதில் ஒரு இடைநிலை என்றுதான் நான் பார்கிறேன்..அடுத்து அங்குள்ளவர்களின் வாழ்வாதார மிள்திரும்பல், பின்னர் எங்களுது உரிமைகள், சமத்துவங்கள், எல்லாம் ஒரே நேரத்தில் நடக்கும், நடக்க வேணும் என்று எதிர்பார்க்க முடியாது..அங்குள்ள இன்றைய நிலைமைகளை ஒருதலைவரோ அது தமிழரோ / சிங்களவரோ , அல்லது குழுவோ, கட்சியோ தலை கீழாக மற்ற முடியாது. இரண்டிற்கு மேற்பட்ட இனங்கள், 1008 கட்சிகள், ஒன்றிற்கு மேற்பட்ட நாடுகளின் நேரடி மறைமுக அழுத்தம் இலங்கையில் ஒரு தீர்வு பலபடி கொண்ட செயல்முறை... எல்லோருக்கும் தெரியும் ஆனால் பலர் ஏற்க மறுக்கிறோம்....

எனக்கு பட்டத்தை சொன்னேன்.

சில காலத்துக்கு முன்பு "முறிந்த பனை" PDF வாசிக்க கிடைத்தது ,விரும்பினால் வாசித்தது பாருங்கள்...எங்களுக்கு கிடைத்த எந்தனை சந்தர்பங்க்களை தவறவிட்டோம் என்று, அத்துடன் எத்தனை நடைமுறை சாத்தியமில்லாத தீர்வுகளை நாங்கள் எதிர்பார்த்தோம் என்று .. எனக்கு தெரியாது அது ஒரு முழுமையான ஆய்வு நுஉலோ என்று, ஆனால் ......உங்கள் விருப்பம் ...

ரொம்பவே வலிக்குது..........

நாம் மதிக்கும் அருட்தந்தையர்கள் கூட இப்படி இருப்பது வேதனையளிக்கின்றது.

இக்கருத்தினை யாழ் ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் அடிகளார் அவர்கள் உண்மையிலேயே சொல்லியிருப்பாரானால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க தமிழ் சமூகம் தயங்கக்கூடாது!

2005 ம் ஆண்டுக்கு பிறகு விடுதலைப் புலிகள் ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட பொழுது தனது எதிர்ப்பை எழுத்து மூலம் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு ப தமிழ்ச் செல்வனிடம் தெரிவித்தவர் இவர்.இவர் மாவீரன் மேயர் சிட்டுவின் உறவினருங்கூட.இந்திய தூதரக அதிகாரிகளின் நெருங்கிய நண்பரும் ஆவார்.வண பிதா தீயோகுப்பிள்ளை அவர்களுக்கு பிறகு யாழ் மாவட்ட ஆயர் பதவியை ஏற்றவர்.ஒரு சந்தர்ப்பத்தில் மன்னார் மறை மாவட்ட ஆயரும் கிழக்கு மாகாண ஆயர்களும் இலங்கையின் கத்கோலிக்க திருச்சபையின் தலைமையை தமிழர்களுக்கென்று ஒரு தலமை வேண்டும் என்று வத்திக்கானிடம் கேட்டிருந்த போது எட்ட நின்று வேடிக்கை பார்த்தவர்.

இந்த்தலைப்புக்கு வந்த பதில்களிலிருந்து தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளாரும் கருவேப்பிலையாக தூக்கிவீசப்பட்டுள்ளார் என்று துல்லியமாக கணித்துக்கொள்ளலாம். முன்பென்றால் மாமனிதர் அல்லது நாட்டுப்பற்றாளர் இரண்டிலொரு பட்டம்குடுத்து கௌரவிக்கப்பட்டிருக்கலாம். இன்றைய நிலையில் .....யாதோ???? :)

அன்றும் இன்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழலாம் என்ற எண்ணங் கொண்டவர்.

அடிகளாரின் கருத்தே பெரும்பான்மை தாயகத் தமிழர்களது கருத்தாக இருக்கின்றது. இதை புலம்பெயர் மக்கள் ஏற்க மறுக்கின்றோம். சிங்கள இனவாத அடக்குமுறை மக்களை எவ்வளவு அழுத்தத்திற்கு உட்படுத்தியதோ அந்தளவு இயக்கங்களுக்குள்ளான மோதல்களும் நம்பிக்கை இழப்பும் போரால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் இடப்பெயர்வுகள் சொல்லிலடங்கா பாதிப்புகள் ஊடாக மக்களின் இந்தக் கருத்தை புரிந்து கொள்ள முற்பட வேண்டும். சிங்கள அடக்குமுறையில் இருந்து மக்கள் எவ்வாறு தப்பியோடினார்களோ அவ்வாறே இறுதிக்காலங்களில் போராளிகளாவதில் இருந்து தப்பியோடினார்கள். அடக்குமுறையையும் அதற்கெதிரான போராட்டத்தையும் ஒரே நேர்கோட்டில் சந்திக்குமளவுக்கு மக்கள் தள்ளப்பட்டதற்கான காரணங்களை புரிந்து கொள்வதும் அவசியமானது. பெரும்பான்மை மக்கள் சிங்கள அடக்குமுறைக்கு உட்படாமலும் அதற்கெதிhரன போராட்டத்திற்கு உட்படமலும் அதே நேரம் பொருளாதராம் கல்வி மே;பாட்ட வாழ்வை வாழ முடியும் என்று நம்புகின்ற போது அடக்குமுறையும் அதற்கெதிரான போராட்டத்தில் இருந்தும் தப்பித்துக்கொள்ளவே முற்பட்டார்கள். இந்த நம்பிக்கையை கொடுத்தது புலம்பெயர்வாசிகள்.

புலம்பெயர்வாசிகள் மேற்கூறிய இரண்டு விடயங்களுக்குள்ளும் அகப்படாமல் தேசியத்துக்கு ஆதரவு என்றநிலையில் இருக்கின்றோம். சிங்கள அரசுடன் அனுசரித்து வாழப்பழகிய மக்கள் போராளிகளாக இறப்பதில் இருந்தும் அதன் நிமிர்த்தம் குடும்பங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதையும் கருத்தில் கொண்டு அரச கட்டுப்பாட்டில் வாழப்பழகினார்கள். பெரும்பான்மை மக்கள் இவ்வாறான இருபிரிவாக இருக்கின்றோம். அடிகளாரின் கருதுக்கு அப்பாற்பட்டதல்ல பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இருப்பது யாழ்ப்பாணத்தில் புலம் பெயர்ந்த நாட்டில் அல்ல.

யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் நேற்றிரவு நடைபெற்ற நத்தார் திருப்பலி ஆராதணையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

- ஈபிடிபி நியூஸ்

25.12.2009 - வெள்ளிக்கிழமை

"யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் நேற்றிரவு நடைபெற்ற நத்தார் திருப்பலி ஆராதணையில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டார்.

யாழ்.ஆயர் வண. தோமஸ் சௌந்தர்நாயகம் அவர்களால் நத்தார் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் ஆராதணையில் பெருந்திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பூசையில் கலந்துகொண்ட மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்த அதேசமயம் யாழ்.ஆயர் வண. தோமஸ் சௌந்தர்நாயகம் அவர்கள் அமைச்சருக்கு ஆசிகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

chu1.jpg

யாழ்.பெரிய கோவிலில் வழிபாட்டில் கலந்துகொண்ட மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த மே 18ம் திகதிக்கு முன்னர் ஏற்பட்ட வெடிச் சத்தங்கள் மக்களை அச்சுறுத்தி மேலும் பயபீதியை ஏற்படுத்துவதாக அமைந்திருந்ததாகவும் ஆனால் மே 18ம் திகதிக்கு பிந்திய வெடிச் சத்தங்கள் குறிப்பாக நத்தார் தினத்தில் மக்களால் ஏற்படுத்தப்பட்ட வெடிச்சத்தங்கள் மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தாகவும் தெரிவித்தார்.

இந்த வருட நத்தார் தின நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் அச்சமின்றி மக்கள் உணர்வு பூர்வமாக கொண்டாடுவது குறித்து தமது மகிழ்ச்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துக்கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும். தற்போதைய அமைதியான அச்சமற்ற சூழ்நிலை ஏற்பட்டமையையிட்டு அமைச்சருடன் தமது மகிழ்ச்சிகளை ஆராதணையில் கலந்துகொண்ட மக்கள் பரிமாறிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்."

- ஈபிடிபி நியூஸ்

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

:) இது வேறையா??

கோவிந்தா ...கோவிந்தா !!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

வழமையாக இந்த ஆயரின் பேச்சுக்கு மதிப்பளிக்கும் தமிழ்நெட் போன்ற தளங்கள் அண்மைக்காலமாக இவர் விடுத்து வரும் நீதிக்கும் விடுதலைக்கும் சமத்துவத்துக்கும் எதிரான கருத்துக்கள் கண்டு இப்போ இவரைப் புறக்கணித்துவிட்டுள்ளன... என்பதை நோக்குவதும் நன்று.

போர்.. ஆயுதம்.. மரணம்.. இவற்றுக்கு அஞ்சி இருந்தால்.. ஜேசுவும் நீதி விடுதலை சமத்துவம் என்று போய் சிலுவை ஏறி மடிந்திருக்க வேண்டி வந்திராது. அவரும் தள்ளாடும் வயதில் நரையோடு இப்படி வெள்ளை ஜிப்பாவில் ஒரு குருசு அணிந்து கொண்டு வாழ்ந்து செத்திருப்பார்.

மக்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற வைத்து அவர்களை நீதியோடும் சமத்துவத்தோடும் அன்போடும் சகோதரத்துவத்தை ஒரு மனிதன் மீது இன்னொருவன் காட்டியும் வாழ வழிகாட்டியவர் ஜேசு.

அதற்காகவே அவர் போராடி ஆயுதத்தால் வீழ்த்தப்பட்டார். அவரின் பிறப்பு முதல் இறப்பு வரை அவரின் பெயரால் எதிரிகளால் கொல்லப்பட்ட மக்கள் தொகையை செளந்தரநாயகம் போன்றவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். அவற்றைக் கண்டு ஜேசு எதிரிகளுக்கு அடிபணிந்தாரா.. இல்ல இறைவனின் கட்டளையை நிறைவு செய்யப் பயணித்தாரா...???!

ஆயுதங்கள்.. கொடும் சித்திரவதைகள்.. அடிமை வாழ்வுகள்.. இத்தனையையும் ஜேசுவை நேசித்த மக்கள் சந்தித்தனர். இரத்தம் சிந்தினர். ஜேசுவுக்காக தமது குழந்தைகள் தேடித் தேடி அழிக்கப்பட்ட போது கதறி அழுதனர். அப்போது கடவுள் தோன்றி இவன் தான் ஜேசு இவனை அழித்துவிட்டு மற்றக் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என்று ஏன் சொல்லவில்லை..???! ஜேசும் தன்னால் மக்கள் துன்பப்படுகிறார்களே.. கிடைத்த அந்த அடிமை வாழ்வையும் இழந்து தவிக்கின்றனரே என்று எதிரிகளிடம் போய் சரணடையவில்லை..???!

ஜேசுவிற்கு உதவியதாக எத்தனை அப்பாவி மக்கள் வாழ்க்கையை இழந்தார்கள். அதற்காக தோமஸ் செளந்தரநாயகம்.. ஜேசுவை பயங்கரவாதி என்று கூறி அவரை சிலுவையில் அறைந்த பின் தான் சமாதானமும் சகோதரத்துவமும்.. மனித அடிமை வாழ்வும் முடிந்ததாக இதே தேவாலயத்தில் வைத்து அகில உலகிற்கும் அறிவிப்பாரா... செய்வாரா..??!

ஜேசுவே ஒரு போராளியாக அவதாரம் எடுத்தவர். அடிமைப்பட்டுக் கிடந்த மக்களிற்காக அவர்களை ஆட்சி செய்த மக்களிடம் இருந்து விடுதலைக்காக உழைத்தவர். ஆனால் தோமஸ் செளந்தரநாயகம் போன்றவர்கள்.. ஜேசுவின் பெயரால் மக்களை அடிமைப்படுத்தி ஆட்சியாளர்களுக்கு கொடுங்கோண்மைக்கு உழைக்கிறார்கள். ஆனால் இவர்கள் அணிந்திருப்பதோ ஜேசுவின் பெயரால் பெறப்பட்ட பட்டங்களையும் ஆயர் ஸ்தானங்களையும். இப்படிப்பட்ட போலி மனிதர்கள்.. முதலில் அவற்றைத் திறக்க வேண்டும்.

அதன் பின் மக்களின் முன் கருத்துச் சொல்ல வர வேண்டும். மரணத்திற்கும்.. அழிவிற்கும் அஞ்சி இருந்தால் ஜேசு போராடி இருக்க வேண்டிய அவசியமில்லை. ரொட்டிக்கும் வீதி ஓர கடைவிரிப்புக்கும் ஆசைப்பட்டு வாழ்க்கை நடத்த முனைந்திருந்தால்.. ஜேசு போராடி இருக்கத் தேவையில்லை. இவற்றை எல்லாம் தாண்டி ஜேசு ஏன் போராடினார்...???! எதிரிகளிடம் நீதியும்.. விடுதலையும்.. சம வாழ்வும் அளியுங்கள் என்று ஏன் கேட்டார்...???! பேசாமல் அவர்கள் தான் வரி பிடிக்கிக் கொண்டு சாப்பாடு போடுகிறார்களே சாப்பிட்டு வாழ்க்கையை வாழ்ந்துவிடுங்கள் என்று ஏன் ஜேசு மக்களை வாழ விடவில்லை. எதற்காக போராட்டம் விடுதலை சமத்துவம்.. என்று போய் மக்களைப் பலியிட்டார்..??! இறுதியில் தன்னையும் பலியிட்டார்..???! அது வன்முறையில்லையா.. தற்கொலை இல்லையா...???! ஏன் இவற்றை மூடி மறைச்சுக் கொண்டு தமிழன் தன்னிலத்தில் தான் சுதந்திரமாக வாழப் போராடியதை மட்டும் இவர்கள் குறை சொல்கிறார்கள்.

இன்று குண்டு வெடிக்கவில்லை. ஆனால் குண்டுகளால் சூழப்பட்ட ஒரு இராணு ஆதிக்க ஆக்கிரமிப்பு வலயத்துக்குள் தான் தமிழர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழர்களுக்கு 1972 இல் விடுதலை கேட்டு ஆயுதம் தூக்க இருந்த காரணிகள் எல்லாமே இன்றும் அப்படியே இருக்கின்றன. அதைவிட மேலதிகமாக பல காரணிகள் இணைந்து கொண்டுள்ளன. இந்த நிலையில்.. இராணுவ துப்பாக்கிகள் சூழ்ந்து கொண்டிருக்க அங்கு சமாதானம் சமத்துவம்.. விடுதலை.. விடியல்.. வசந்தம்.. பூத்துக்குலுங்குவதா கதையளக்கும் இந்தப் போலி மனிதர்கள்.. மக்களுக்கு உண்மையான நிலையை விளக்க முன்வருவார்களா என்பது கேள்விக்குறியே.

இவர்களைப் பொறுத்தவரை மக்களுக்கும்.. ரொட்டிக்கும்.. குடிசைக்கும்.. ஒரு படகுக்கும் ஆசைப்படுபவர்களாகவே இருக்க வேண்டும். அப்போதுதானே இவர்கள் பெரிய ஸ்தானத்திலும் மக்கள் இவர்களை மதிக்கும் நிலையிலும் இருக்க முடியும்.

தோமஸ் செளந்தரநாயகம் ஆயர் ஆனது அவரின் பிறப்பால் அல்ல. அவரின் பணியால். அவர் அந்தப் பணிக்கு அருகதையற்ற நிலைக்கு இன்று வந்துவிட்டுள்ள நிலையில் அவரை ஒரு சாதாரண மனிதனாகவே நான் பார்க்கிறேன். அவருக்கு ஆயர் என்ற மரியாதையை வழங்க வேண்டும் என்ற நிலை இன்றில்லை. அவர் 1990 இல் ஒரு மாதிரியும் 2009 இல் இன்னொரு மாதிரியும் பேசுவார். ஆனால் இவரை வழி நடக்கும் ஜேசுவோ.. தனது மரணம் வரை சிலுவை ஏறும் வரை எடுத்த கொள்கைக்கு புறம்பாக வாழ்ந்ததில்லை. எத்தனையோ துயர்களை சந்தித்த போதும் ஜேசு விடுதலைக்காகப் போராடியதில் இருந்து ஓயவில்லை..!

ஒரு போராளியின் வாழ்வை அடித்தளமாகக் கொண்டு வாழும் இந்த செளந்தரநாயகம் போன்றவர்கள்.. குறைந்த அந்தப் போராளியின் கொள்கைகளையாவது மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பேச முதல் தனது வாழ்வின் பின்னணிகளை இந்த மனிதர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவர்கள் எவன் ஆயர் ஆக்கினான்...??! அவனும் இவர்களைப் போலவே போலியோ...??! :o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இருப்பது யாழ்ப்பாணத்தில் புலம் பெயர்ந்த நாட்டில் அல்ல.

முன்புதான் புலிகளை அனுசரித்துப் போகதவர்களை புலிகள் விட்டுவைக்கமாட்டார்கள் என்று சொன்னீர்கள். இப்பொழுது அரசாங்கத்தை ஆனுசரித்துப்(பேச)போக வேண்டும் என்று எழுதுகிறீர்கள்.அப்ப அரசு செய்வது உங்களுக்குத் தப்பாகத் தெரியவில்லையா?இதற்குத்தான் புலிகளை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நின்றீர்கள்?நீங்கள் எப்போது சுதந்திரமாக கருத்துச் சொல்லப் போகிறீர்கள்?

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

இதை இப்படியும் எழுதியிருக்கலாமே!அவர் பேசியது டக்ளசுக்கு முன்னால் என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் பொதுவாக எதற்கெடுத்தாலும் வசைபாடுகிறோம். அவர் என்ன சூழ்நிலையில் சொன்னார் என்ற பின்னணியையும் ஆராயவேண்டும். இலங்கையில் இருந்து கொண்டு யாருமே அரசுக்கு எதிராக கருத்துக் கூறமுடியாது என்பதற்கு பத்திரிகை ஆசிரியர் திஸ்ஸநாயகம் போன்றோர் நல்ல உதாரணம் அரசுக்கு எதிரான கருத்தை எழுதியதற்காக சிங்கள பெரும்பான்மை உறுப்பினரான பத்திரிகையாசிரியர் லசந்த விக்கிரமவின் கொலையே சாட்சி..அப்படி இருக்கும் ஆயரை நோவதில் எந்த பயனும் இல்லை.

அதை விட புலம்பெயர் நாடுகளில் இணையங்களில் இருந்து வரும் செய்திகள் கூட தாயக மக்களைச் சென்றடைவது குறைவு..அப்படி இருக்கும் போது நாம் இங்கிருந்து கத்தி என்ன செய்ய?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் பொதுவாக எதற்கெடுத்தாலும் வசைபாடுகிறோம். அவர் என்ன சூழ்நிலையில் சொன்னார் என்ற பின்னணியையும் ஆராயவேண்டும். இலங்கையில் இருந்து கொண்டு யாருமே அரசுக்கு எதிராக கருத்துக் கூறமுடியாது என்பதற்கு பத்திரிகை ஆசிரியர் திஸ்ஸநாயகம் போன்றோர் நல்ல உதாரணம் அரசுக்கு எதிரான கருத்தை எழுதியதற்காக சிங்கள பெரும்பான்மை உறுப்பினரான பத்திரிகையாசிரியர் லசந்த விக்கிரமவின் கொலையே சாட்சி..அப்படி இருக்கும் ஆயரை நோவதில் எந்த பயனும் இல்லை.

அதை விட புலம்பெயர் நாடுகளில் இணையங்களில் இருந்து வரும் செய்திகள் கூட தாயக மக்களைச் சென்றடைவது குறைவு..அப்படி இருக்கும் போது நாம் இங்கிருந்து கத்தி என்ன செய்ய?

இந்தப் பேச்சுகளுக்கு என்ன பின்னணிகள் இருக்கும் என்றெல்லாம் காரணம் தேடுகிறோம்.. ஆனால் இவர்கள் கடந்த 30 ஆண்டுகளில் எவ்வளவு சாணக்கியமான உரைகளை எல்லாம் வழங்கி இருக்கிறார்கள். விடுதலைப்புலிகளை நேரடியாக ஆதரித்து இவர்கள் பேசியது கிடையாது. போராட்டம் பற்றிய சில நியாயப்பாடுகளைச் செய்து கொண்டதோடு சரி. அவ்வளவு சாணக்கியம் அறிந்தவர்கள் இன்று தாங்கள் அன்று சொன்ன நியாயங்களையே மறுதலிப்பதுதான் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

அரச கட்டுப்பாட்டுக்குள் வாழ்வதற்காக அரசாங்கத்துக்கு வாழ்த்துப்பாடிக் கொண்டிருக்க வேண்டும் என்றில்லை.

பல தமிழ் மக்கள் கொழும்பில் வாழ நேரிட்டாலும் தமிழீழத்தை ஆதரிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பச்சோந்திகள்.. அப்படியல்ல. இந்த இக்கட்டான நேரங்களில் இவ்வாறான பேச்சுக்களைத் தவிர்த்து.. அல்லல்படும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் கைங்கரியங்களைச் செய்யலாமே. இப்படியான பேச்சுக்களைத் தவிர்க்க வழியா இல்லை. இருக்கிறது. ஆனால் அவர்கள் செய்யப்பிரியப்பட வில்லை என்பதுதான் உண்மை. வேதனை..!

இதற்கு எந்த வித நியாயப்படுத்தல்களுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாதவையே.

எத்தனையே மத தலைவர்கள் மெளனமாக இருந்து இக்கட்டுக்களை சமாளிக்கின்ற இவ்வேளையில்.. இவர் மட்டும்.. அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கை உள்ளடங்க பலவற்றை வெளிப்படையாக ஆதரித்து கருத்து வெளியிட்டு வருகிறார். இவர் ஜேசுவின் பாதைக்கு எதிரான திசையில் மக்களை வழிநடத்துவதாகவே அண்மைக்காலமாகச் செய்து வருகிறார். :o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பேச்சுகளுக்கு என்ன பின்னணிகள் இருக்கும் என்றெல்லாம் காரணம் தேடுகிறோம்.. ஆனால் இவர்கள் கடந்த 30 ஆண்டுகளில் எவ்வளவு சாணக்கியமான உரைகளை எல்லாம் வழங்கி இருக்கிறார்கள். விடுதலைப்புலிகளை நேரடியாக ஆதரித்து இவர்கள் பேசியது கிடையாது. போராட்டம் பற்றிய சில நியாயப்பாடுகளைச் செய்து கொண்டதோடு சரி. அவ்வளவு சாணக்கியம் அறிந்தவர்கள் இன்று தாங்கள் அன்று சொன்ன நியாயங்களையே மறுதலிப்பதுதான் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

புலிகளின் காலத்தில் சாணக்கியமாகப் பேசத் தெரிந்தவர்களுக்கு இப்பொழுது சாணக்கியமாகத் பேசத்தெரியாதா?; இவர் கருத்துத் தெரிவிக்க வேண்டும் யார் கேட்டார்கள்.பூஜை செய்தோமா வீட்டுக்குப் போனோமா என்றில்லாமல் அரசியல் அதுவும் பக்கச் சார்பாக அதுவும் இந்தத் தேர்தல் வேளையில் அரசியல் பேசச் சொன்னது யார்?

இந்த வேளையில் பிருத்தானிய பிரதம மதகுருவும் யுத்தம் சம்பந்தமாக கருத்து கூறியதையும் வினைவில் கொள்ளலாம்.

இதை நான் சொல்லவது கிறிஸ்தவர்களுக்கு எதிராகவில்லை... ஆனால் இன அழிப்புக்கு உடந்தையான கருத்துக்களை.

அடிகளார் நிச்சயமாக அரசியல் கலந்துதான் காணப்படுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயர் அவர்களின் உண்மை உருவத்தை 2006இல் நான் அறிந்தேன்

ஆனால் இங்கு எழுதுவது பொருத்தமான நேரமல்ல என்பதால் எழுதவில்லை

இன்று பலராலும் விமர்சிக்கப்படுவதால் எழுதுகின்றேன்

எனது மைத்துணி ஒருவர் தனது கணவனை யுத்தத்தால் இழந்து தனது 2 சிறுபிள்ளைகளுடன் மிகுந்த வறுமையில்வசித்து வருகிறார்

இவருக்கு கச்சேரியடியில் இவரது கணவனின் சொத்தான வீட்டை வாடகைக்கு விட்டு வருவதே வருமானமாகும்

இந்த வீடு தமது சேர்ச்சின் சொத்தொன கூறி

பலவிதமான பிரச்சினைகளை கொடுத்தனர்

அச்சுறுத்தினர்

இதை நான் முதலில் நம்பவில்லை

அது சரிவராததினால்

வழக்கு பதிவு செய்தனர்

அந்த வழக்குக்கு எனது மைத்துணியின் கணவர் குடும்பம் 55 வருடத்திற்கு மேலாக அவர்களது பெயரில் கட்டிய வரியையும் அதற்கான பற்றுச்சீட்டையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி இவர்களின் வக்கீலிடம் ஆயரை நேரடியாக சாட்சியம் அளிக்கவருமாறு கேட்டதால்

வாடகைக்கு இருப்பவரை பணம் கொடுத்து வாங்க முற்பட்டனர்

கணவன் இல்லாமல் தனியே இருக்கிறார்

வந்து இந்த வீட்டில் தனியே இரு பார்க்கலாம் என்று

இராணுவத்தினரை வைத்துக்கூட அச்சுறுத்தினர்

மைத்துணியிடம் ஆதாரங்கள் இருந்ததால் அவரது வீடு அவருக்கு கிடைத்தது

ஆதாரங்கள் போரின்போது அழிந்திருந்தால்.....????

போரின்றி மக்கள் நிம்மதியாக உள்ளனர் என்று சொல்ல இந்த ப....... அருகதையில்லை

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.ஆயர் வண. தோமஸ் சௌந்தர்நாயகம் அவர்களும் டக்ளஸ் தேவானந்தா

அவர்களும் பலவிடயங்களில்

கூட்டாளிகள்....

பங்காளிகள்....

தோழர்கள்....

ஏழை மக்களின் விரோதிகள்....

தமிழின துரோதிகள்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.