Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

30 வருட கால யுத்தம் ஒழிந்து துன்பியல் கலந்த வாழ்க்கை நீங்கியதற்கு இறைவனுக்கு நன்றி – யாழ் ஆயரின் நத்தார் வாழ்த்து

Featured Replies

"அவர் இருப்பது யாழ்ப்பாணத்தில் புலம்பெயர்ந்த நாட்டில் அல்ல". பலர் ஏதோ அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியில் இருப்பதால் அவர் அப்படி பயத்தில் பேசுகின்றார் என்று எழுதியதாக எடுத்துவிட்டார்கள்.அதிலும் ஒரு சிறிது உண்மையுள்ளது ஆனால் நாட்டில் உள்ளவர்களின் உண்மையான இன்றைய நிலைபாட்டைத்தான் அவர் பிரதிபலித்திருகின்றார்.சுகனும்,வொல்கானோவும் அதைத் தெளிவாக எழுதியிருந்தார்கள்.

எங்களது கிரிஸ்மஸ் கொலிடெய் நல்ல தண்ணியில் ரேக்கியுடனும்,அவரார் படத்துடனும் பிள்ளைகளின் பரிசுகளுடனும் போய்க்கொண்டிருக்கின்றது.அவர்கள் கடைசி ஒரு துவக்கு சத்தம் இல்லாமல் 30 வருடத்திற்கு பிறகு இருக்கின்றார்கள் என்ற்ரு சந்தோசப்படுவதை விட்டு குற்றம் கண்டுபிடிப்பது மாத்திரம் அல்ல தனிநபர் தூற்றலில் மறுபடியும் ஆரம்பிக்கின்றார்கள்.இனி நாலு பேர் தொடங்கி விடுவினம் 10 வயசு பெட்டையின் கையை பிடிச்சவன்,12 வயசு பெடியனைத் தனிய கூப்பிட்டவன் என்று.இதைதான் நீங்கள் இந்த 30 வருடங்களும் செய்தனீர்கள்.இனி இந்த பருப்பு வேகாது.யாழ்ப்பாணத்திற்கு ஒருக்கா போன் போட்டுப் பாருங்கோ விளங்கும்.

  • Replies 58
  • Views 5.6k
  • Created
  • Last Reply

உங்கள் தகவலுக்கு நன்றி...

யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் நேற்றிரவு நடைபெற்ற நத்தார் திருப்பலி ஆராதணையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

- ஈபிடிபி நியூஸ்

25.12.2009 - வெள்ளிக்கிழமை

"யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் நேற்றிரவு நடைபெற்ற நத்தார் திருப்பலி ஆராதணையில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டார்.

யாழ்.ஆயர் வண. தோமஸ் சௌந்தர்நாயகம் அவர்களால் நத்தார் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் ஆராதணையில் பெருந்திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பூசையில் கலந்துகொண்ட மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்த அதேசமயம் யாழ்.ஆயர் வண. தோமஸ் சௌந்தர்நாயகம் அவர்கள் அமைச்சருக்கு ஆசிகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

chu1.jpg

யாழ்.பெரிய கோவிலில் வழிபாட்டில் கலந்துகொண்ட மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த மே 18ம் திகதிக்கு முன்னர் ஏற்பட்ட வெடிச் சத்தங்கள் மக்களை அச்சுறுத்தி மேலும் பயபீதியை ஏற்படுத்துவதாக அமைந்திருந்ததாகவும் ஆனால் மே 18ம் திகதிக்கு பிந்திய வெடிச் சத்தங்கள் குறிப்பாக நத்தார் தினத்தில் மக்களால் ஏற்படுத்தப்பட்ட வெடிச்சத்தங்கள் மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தாகவும் தெரிவித்தார்.

இந்த வருட நத்தார் தின நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் அச்சமின்றி மக்கள் உணர்வு பூர்வமாக கொண்டாடுவது குறித்து தமது மகிழ்ச்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துக்கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும். தற்போதைய அமைதியான அச்சமற்ற சூழ்நிலை ஏற்பட்டமையையிட்டு அமைச்சருடன் தமது மகிழ்ச்சிகளை ஆராதணையில் கலந்துகொண்ட மக்கள் பரிமாறிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்."

- ஈபிடிபி நியூஸ்

நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பேச்சுகளுக்கு என்ன பின்னணிகள் இருக்கும் என்றெல்லாம் காரணம் தேடுகிறோம்.. ஆனால் இவர்கள் கடந்த 30 ஆண்டுகளில் எவ்வளவு சாணக்கியமான உரைகளை எல்லாம் வழங்கி இருக்கிறார்கள். விடுதலைப்புலிகளை நேரடியாக ஆதரித்து இவர்கள் பேசியது கிடையாது. போராட்டம் பற்றிய சில நியாயப்பாடுகளைச் செய்து கொண்டதோடு சரி. அவ்வளவு சாணக்கியம் அறிந்தவர்கள் இன்று தாங்கள் அன்று சொன்ன நியாயங்களையே மறுதலிப்பதுதான் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

அரச கட்டுப்பாட்டுக்குள் வாழ்வதற்காக அரசாங்கத்துக்கு வாழ்த்துப்பாடிக் கொண்டிருக்க வேண்டும் என்றில்லை.

பல தமிழ் மக்கள் கொழும்பில் வாழ நேரிட்டாலும் தமிழீழத்தை ஆதரிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பச்சோந்திகள்.. அப்படியல்ல. இந்த இக்கட்டான நேரங்களில் இவ்வாறான பேச்சுக்களைத் தவிர்த்து.. அல்லல்படும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் கைங்கரியங்களைச் செய்யலாமே. இப்படியான பேச்சுக்களைத் தவிர்க்க வழியா இல்லை. இருக்கிறது. ஆனால் அவர்கள் செய்யப்பிரியப்பட வில்லை என்பதுதான் உண்மை. வேதனை..!

இதற்கு எந்த வித நியாயப்படுத்தல்களுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாதவையே.

எத்தனையே மத தலைவர்கள் மெளனமாக இருந்து இக்கட்டுக்களை சமாளிக்கின்ற இவ்வேளையில்.. இவர் மட்டும்.. அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கை உள்ளடங்க பலவற்றை வெளிப்படையாக ஆதரித்து கருத்து வெளியிட்டு வருகிறார். இவர் ஜேசுவின் பாதைக்கு எதிரான திசையில் மக்களை வழிநடத்துவதாகவே அண்மைக்காலமாகச் செய்து வருகிறார். :o

பொதுவாகவே யாழ் செல்லும் எந்த அரசியல் வாதியாக இருந்தாலும் சரி,வெளிநாட்டு தூதுவர்களானாலும் சரி யாழில் சந்திக்கும் மதத்தலைவர்களில் யாழ்.ஆயர் வண. தோமஸ் சௌந்தர்நாயகம் அவர்களும், நல்லை ஆதீன முதல்வரும் முக்கியமானவர்கள் அதனால் இப்படியானவர்களின் கருத்துக்களே மக்களின் மனநிலையாகவும் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது அதைவிட இன்று சகலவற்றுக்கும் புலிகள் மேல் பழி போட்டு தாம் தப்பித்துக்கொள்ளவே நினைக்கின்றனர் இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் அவர்களின் கருத்தும் இவ்விடயத்தில் நோக்க வேண்டி உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67189 இணைப்பை பார்க்கவும்.

ஆக இவர்கள் எல்லாருமே நடந்த சம்பவங்களுக்கு புலிகளே காரணம் என்று அரசின் படுகொலைகளை மறைக்கவே முயல்கின்றனர் இதுவே எமது பரிதாப நிலைக்கு காரணம்.

ஜயா எப்ப போவார் திண்ணை எப்ப காலியாகும் என்று இருந்திருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

"அவர் இருப்பது யாழ்ப்பாணத்தில் புலம்பெயர்ந்த நாட்டில் அல்ல". பலர் ஏதோ அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியில் இருப்பதால் அவர் அப்படி பயத்தில் பேசுகின்றார் என்று எழுதியதாக எடுத்துவிட்டார்கள்.அதிலும் ஒரு சிறிது உண்மையுள்ளது ஆனால் நாட்டில் உள்ளவர்களின் உண்மையான இன்றைய நிலைபாட்டைத்தான் அவர் பிரதிபலித்திருகின்றார்.சுகனும்,வொல்கானோவும் அதைத் தெளிவாக எழுதியிருந்தார்கள்.

எங்களது கிரிஸ்மஸ் கொலிடெய் நல்ல தண்ணியில் ரேக்கியுடனும்,அவரார் படத்துடனும் பிள்ளைகளின் பரிசுகளுடனும் போய்க்கொண்டிருக்கின்றது.அவர்கள் கடைசி ஒரு துவக்கு சத்தம் இல்லாமல் 30 வருடத்திற்கு பிறகு இருக்கின்றார்கள் என்ற்ரு சந்தோசப்படுவதை விட்டு குற்றம் கண்டுபிடிப்பது மாத்திரம் அல்ல தனிநபர் தூற்றலில் மறுபடியும் ஆரம்பிக்கின்றார்கள்.இனி நாலு பேர் தொடங்கி விடுவினம் 10 வயசு பெட்டையின் கையை பிடிச்சவன்,12 வயசு பெடியனைத் தனிய கூப்பிட்டவன் என்று.இதைதான் நீங்கள் இந்த 30 வருடங்களும் செய்தனீர்கள்.இனி இந்த பருப்பு வேகாது.யாழ்ப்பாணத்திற்கு ஒருக்கா போன் போட்டுப் பாருங்கோ விளங்கும்.

யாழ்பாணத்துக்கு புலத்தில் இருந்து நீங்கள் இரண்டொருவர்தான் போன்போடவதாக நினைத்துகொண்டிருக்கின்றீர்களா?

கிணத்து கட்டாலே ஏறி கொஞ்சம் வெளியேயும் வர எத்தணியுங்கள்.

நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன!

நச்சென்று நாலுவார்த்தை!

30 வருட காலம் இவ்வாறு கழிந்துள்ளது. துன்பியல் கலந்த வாழ்க்கைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இதற்கு இறைவனுக்கு நான் நன்றி கூறுகின்றேன்.

இவர் தொடர்ந்து இது போன்ற பச்சோந்தித் தனமான கருத்துக்களைத் தெரிரிவித்து வருவது தொடர் நிகழ்வாகவே இருந்து வந்துள்ளது. சர்வதேசச் சமூகப் பிரதிநிதிகள் தாயகம் செல்லும் போது இவர்களைப்போன்றவர்களின் கைகளைக் குலுக்கும்போது இந்தவகையான கருத்துக்களைத்தானே முன்வைத்து இருப்பார்கள்.

புலத்திலும் இந்த வகையான புத்திசீவிகளின் பங்கும், பெரும்பங்கு வகித்துள்ளது.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

நத்தார் தினத்தில் தேவாலயத்தில் கொல்லப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம் கொல்லப்பட்டது பற்றி வாயே திறக்கவில்லை. இவரெல்லாம் ஆயராகி மக்களின் உயிரை வாங்க தான் முடியும்.

வெளியிலிருந்து யாழ் வந்தோரோடு ஐயா என்ன சொல்லி விட்டிருப்பார் என்று இப்பவாவது புரிகிறதா???

இதைவிட்டுவிட்டு

வெள்ளைகளையும் கறுவர்களையும் நாம் ஏசியபடி....

நல்ல அவதானிப்புகள்.

இவர் வெளியாரின் விசுவாசமான வேலையாளா அல்ல‌து

இன‌த்தை குழிப‌றிப்ப‌த்த‌வ‌ரா ?

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் புலித்தமிழ்....

பாருங்கோ வந்து குவியும் நிறைய புலித்தமிழ். :o:lol:

எங்கட எஜமானிகள் புலியை அழிச்சு ஒரு வருசமாகப்போகுது................. மக்கள் அதை கொஞ்சம் கொஞசமாக மறந்து சாற நேரத்தில்!

நீங்கள் ஏன் இப்ப புலி புரளியை கிழப்புறீங்கள்?

(அதுதானே சோறுபோடும்?)

2005 ல மட்டக்களப்பு புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாத்தான் இருந்தது

அண்ணோய்

மட்டக்களப்பு நகரம் எப்போதே இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

மிச்சத்துக்கு கிழக்கின் விடிவெள்ளிகள் தான் மட்டக்களப்பை கலக்கினார்கள்... இப்பிடி இருக்க பழியை புலிகள் மீது போடுவது சரியில்லை.

புலிகள் கொலை செய்யாதவர்கள் என்றுநான் சொல்ல வரவில்லை. ஆனால் ஆதாரமில்லாமல் சும்மா பழிபோடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்க சில அதி மேதாவிகள்(!?) யாழ்ப்பாணத்து சனத்தின்ர எண்ணத்தை நாடி பிடித்துப் பார்த்துத்தான் கருத்தே எழுதீனம் !! ஏனென்றால் அவையின்ர தொலைபேசியைத் தவிர வேறு எதுவும் அங்கே வேலை செய்யாது கண்டியளோ?!அதனால இவை சொல்லுறதைத்தான் அங்க யாழ்ப்பாணத்தில சனம் சொல்லுது பாருங்கோ!!!!!!!

ஆனால் எனக்கு ஒண்டு விளங்கேல்லப் பாருங்கோ, சனத்துக்கு சுதந்திரமும் வேன்டாம், மயிரும் வேண்டாமெண்டால் என்னென்டு கடந்த உள்ளூராட்சித் தேர்தலில சனம் உப்பிடித் தெளிவா நிண்டதென்டு?? சிலவேளை இவை சொல்லுறது அந்த ஒற்றைத் தொலைபேசி வைச்சிருக்கிற "ஒட்டுமொத்த யாழ்ப்பாணத்துச் சனத்தை" பற்றியோ??

இவ்வளவு காலமும் புலி இருந்துதெண்டு எதிர்த்தாங்கள், இப்ப புலியுமில்லை, ஆனால் பழக்க தோஷம், யாரையாவது எதிர்க்க வேணும். சரி, இனிப் புலம்பெயர் தேசத்தில வேற வேலையில்லாமல் தேசியம், சுதந்திரம், கருத்துக்கணிப்பு எண்டு மினக்கெடுகிற ஆக்களை எதிர்ப்பம். அப்படிச் செய்தாத்தானே நாங்கள் இருக்கிறதும் வெளியில தெரியுது??

சுதந்திரம், தேசியம், தனிநாடு ஆருக்கு வேணும். எங்களுக்கு கிறிஸ்மஸ் வெடிச்சத்தமில்லாமல் கொண்டாடிக் கேக்கும் வெட்டினால் காணும். சிங்களவன் ஆரைக் கொன்றாலென்ன, கெடுத்தாலென்ன??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் எனக்கு ஒண்டு விளங்கேல்லப் பாருங்கோ, சனத்துக்கு சுதந்திரமும் வேன்டாம், மயிரும் வேண்டாமெண்டால் என்னென்டு கடந்த உள்ளூராட்சித் தேர்தலில சனம் உப்பிடித் தெளிவா நிண்டதென்டு?? சிலவேளை இவை சொல்லுறது அந்த ஒற்றைத் தொலைபேசி வைச்சிருக்கிற "ஒட்டுமொத்த யாழ்ப்பாணத்துச் சனத்தை" பற்றியோ??

அப்ப நீங்கள் அழைத்த இலக்கம் பாவனையில் இல்லைபோல....

உள்ளுராச்சி தேர்தலில் த. தே. ௬ தோல்லிவியடைந்தது தெரியாது போல... முன்பும் ஒருவர் இப்படி எழுதியிருந்தவர்.

இப்ப யாழ்ப்பான மேயர் EPDP கட்சியை சார்ந்த நான் நினைக்கிறேன் ??பொதுமக்கள் ஐக்கிய முன்னணியில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்ட ??யோகேஸ்வரி ??பற்குணநாதன் ....

கனவுகள் காணும் காலம் யாவும் கலைந்து போகும் நேரங்கள்....:o

பிறகு வரதில்லை நானும் டக்கிளசின் ஆள் என்று..

  • கருத்துக்கள உறவுகள்
:o ஓமோம், நீங்கள் டக்கிளஸ் அரசியல் நடத்துறது சுத்த ஜனநாயகத்தில்த்தான் என்று நினைக்கிறது தெரியுது?! அந்த நாய் வெறும் 9 வாக்குகளுடந்தான் பாராளுமன்றம் போனதெண்டு ஆரும் உந்த மரை கழன்றதுக்குச் சொல்லுங்கோவப்பா!!!! கடி தாங்கேலாமல் கிடக்கு, ஆனாலும் சிங்கள ஜனநாயகத்தின்ர தேர்தலில நல்ல நம்பிக்கைதான் வைச்சிருக்கிறியள் போங்கோ !!!!!!! வாழ்க ஜனநாயகம் !!!!!! நான் உங்களை டக்கிளசின்ர ஆளெண்டு சொல்லப்போவதில்லை, நான் சொன்னாப்போல நீங்கள் ஓமெண்டு சொல்லப்போறியளா??
  • கருத்துக்கள உறவுகள்

quote name='Volcano' date='27 December 2009 - 04:58 AM' timestamp='1261889900' post='557351']

அப்ப நீங்கள் அழைத்த இலக்கம் பாவனையில் இல்லைபோல....

உள்ளுராச்சி தேர்தலில் த. தே. ௬ தோல்லிவியடைந்தது தெரியாது போல... முன்பும் ஒருவர் இப்படி எழுதியிருந்தவர்.

இப்ப யாழ்ப்பான மேயர் EPDP கட்சியை சார்ந்த நான் நினைக்கிறேன் ??பொதுமக்கள் ஐக்கிய முன்னணியில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்ட ??யோகேஸ்வரி ??பற்குணநாதன் ....

கனவுகள் காணும் காலம் யாவும் கலைந்து போகும் நேரங்கள்....:o

பிறகு வரதில்லை நானும் டக்கிளசின் ஆள் என்று..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகுநாதன், புலவர்..

என்ன சொல்லவாறியல் என்று விளங்கவில்லை. நான் எழுதியது ரகுநாதன் எழுதியது பிழை / தவறான தகவல் என்றும் , அதைத்தவிர முந்தியும் ஒராள் இப்படி எழுதினபடியால் தான் எழுதவேண்டி வந்தது என்று. ஏனெனில் இங்கே இந்த யாழ் களத்தில், சும்மா பேய்த்தனமா எழுதுகிறவர்களின் ஒரு கோஷ்டி இருக்குது அவர்களுக்கு உண்மை எப்பவும் கசக்கும். அவர்களுக்காய் தான் அதை எழுதினனான். அதுக்கும் உங்கடை விளக்கங்களை தந்தால் தாங்கேலாதப்பா. யாரும் யாருக்கும் சொல்லாம் கிணத்துக்கால வாங்கோ, குளத்துக்கால வாங்கோ என்று, ஆனால் அதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். முடிவா ஒன்று மட்டும் உண்மை தமிழ் சனம் நிம்மதியாய் இருந்தால் உங்களை போன்ற தமிழ் ஆட்களுக்கே பிடிக்காது என்று. யுத்தம் முடிந்து சனம் நிம்மதியாய் இருக்கெண்டால் 1000 கதை......இது விளங்கிறதுக்கு 43 பதில்...உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்லுவது பிழைஎண்டு , சும்மா வீம்புக்கும், வேறவேற காரணங்களுக்கையும் விவாதித்து கொண்டிருக்கிறீர்கள். வேற உருப்படியாய் பாக்கிற அலுவலை ( ஏதும் இருந்தா ) பாருங்கோ.

வவுனியாவில அகதிமுகாம்களில் கொடுக்கும் உலருணவின் ஒரு பகுதியை விற்றுத்தான் தாங்கள் மிகுதி உணவுப்பொருட்களை வாங்குவதாக இன்று பீ.பீ.சியில் கேட்டேன்.நாட்டு நிலைமை இப்படியிருக்க, இங்கிருந்து கொண்டு முழு சுகவாழ்வையும் அனுபவித்துக்கொண்டு அங்கிருக்கும் மக்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்லும் மந்தைகூட்டத்தைதான் நாம் வெறுக்கின்றோம்.

கிணற்றுக்குள் இருந்து எங்களை வெளிவரச் சொல்லுகின்றீர்களே,30 வருடங்கள் கிணற்றுக்குள் இருந்து விட்டீர்கள். இனியாவது வெளிவந்து தமிழரின் விடிவிற்கு ஒரு வழி பாருங்கோ.இல்லை மாட்டம் என்று, நாடு கடந்த தமிழீழம்,வட்டுக்கோடைதீர்மானம் என்று உங்களை சுற்றுபவனை இனியும் நம்புகின்றீர்களே என்னவென்று சொல்வது.

யாழ்ப்பாணதில் டக்கிளசின் ஆட்சி,வவுனியாவில் புளோட்டின் ஆதிக்கம், கிழக்கில் பிள்ளயான் முதலமைச்சர்,கருணா மந்திரி இதுதான் உண்மையும் யதார்த்தமும். இனிஎன்ன செய்யலாம் என்று யோசிக்கின்றதை விட்டு,இங்கிருந்து கொண்டு அங்கு அவதிப்படும் மக்களை குறை சொல்ல என்ன யோக்கியதை இருக்கின்றது. மக்களுக்கு அன்றன்றாட பிரச்சனைகள்தன் முக்கியமே தவிர ,உங்கட தேசியம் சோறுபோடாது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணதில் டக்கிளசின் ஆட்சிஇவவுனியாவில் புளோட்டின் ஆதிக்கம்இ கிழக்கில் பிள்ளயான் முதலமைச்சர்இகருணா மந்திரி இதுதான் உண்மையும் யதார்த்தமும்.

இது சரி என்கிறீர்களா?

பிழை என்கிறீர்களா?

கஷ்டப்படும் மக்களுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு பரிதவிக்கும் போராளிகள் அவர்தம் குடும்பங்களுக்கும் சரியென்றுபட்டால் சரி. பிழையென்று பட்டால் பிழை. எங்கள் சரி, பிழைகளுக்கு எதுவித அர்த்தமும் இல்லை, நன்மைகளும் இல்லை.

நேர்மையாக நியாயமான முறையில அவர்களிடம்

சரி பிழையை எப்படி அறிந்துகொள்வது?

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையாக நியாயமான முறையில அவர்களிடம்

சரி பிழையை எப்படி அறிந்துகொள்வது?

அவர்களின் அவலங்களை வைத்து பிழைப்பு நடாத்தும் ஈனத்தனத்தை விட்டுவிட்டு (தனிப்பட்ட ரீதியில் சொல்லவில்லை), அவர்கள் தம் சொந்த வீடுகளில் குடியமர்ந்து, தினசரி வாழ்க்கையை ஆரம்பித்து தமது சொந்தக் காலில் நின்ற பின்னர் போய்க் கேட்டால் எல்லாம் வடிவாகச் சொல்வார்கள்.

Edited by கிருபன்

ஈனத்தனம் நான் செய்யவில்லை

அவர்களின் அவலங்களை வைத்து

நான் எதுவித பிழைப்பும் செய்யவில்லை

எழுதுவதையும் எழுதிவிட்டு

தனிப்பட்ட ரீதியில் சொல்லவில்லை என்று

எழுதுவது சப்பைக்கட்டு

நான் உங்களிடம் பண்பாகத்தான் கேட்டேன்

இவ்வளவு காலமும் புலி இருந்துதெண்டு எதிர்த்தாங்கள், இப்ப புலியுமில்லை, ஆனால் பழக்க தோஷம், யாரையாவது எதிர்க்க வேணும். சரி, இனிப் புலம்பெயர் தேசத்தில வேற வேலையில்லாமல் தேசியம், சுதந்திரம், கருத்துக்கணிப்பு எண்டு மினக்கெடுகிற ஆக்களை எதிர்ப்பம். அப்படிச் செய்தாத்தானே நாங்கள் இருக்கிறதும் வெளியில தெரியுது??

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய்

மட்டக்களப்பு நகரம் எப்போதே இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

மிச்சத்துக்கு கிழக்கின் விடிவெள்ளிகள் தான் மட்டக்களப்பை கலக்கினார்கள்... இப்பிடி இருக்க பழியை புலிகள் மீது போடுவது சரியில்லை.

புலிகள் கொலை செய்யாதவர்கள் என்றுநான் சொல்ல வரவில்லை. ஆனால் ஆதாரமில்லாமல் சும்மா பழிபோடக்கூடாது.

மட்டகிளப்பை தட்டி தவறியும் வரைபடத்திலும் பார்க்காதுகளிடம் இருந்து நீங்கள் எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணதில் டக்கிளசின் ஆட்சிஇவவுனியாவில் புளோட்டின் ஆதிக்கம்இ கிழக்கில் பிள்ளயான் முதலமைச்சர்இகருணா மந்திரி இதுதான் உண்மையும் யதார்த்தமும்.

இது சரி என்கிறீர்களா?

பிழை என்கிறீர்களா?

இதை எழுதியவரிடம் இருந்து பதில் வராதோ???

ஊருக்கு உபதேசம் செய்வதை நிறுத்துதலே முதலாவது செய்யவேண்டியது

மக்கள் தெளிவாகத்தான் உள்ளனர்

அப்படி இல்லாவிட்டாலும் சிங்களவன் விடப்போவதில்லை

இது வரலாறு.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிப் போரின் இறுதிக்காலத்தில் மக்கள் பல துன்பங்களை அனுபவித்தார்கள். இராணுவத்தினால் முழுப் பிரதேசங்களும் கைப்பற்றப்பட்டபோது, இராணுவப் பிரதேசங்களுக்கு (குறிப்பாக முகாம்களுக்கு) சென்ற மக்கள் தற்போது (ஆறு மாதங்களின் பின்னர்) விடுதலையை உணர்கின்றார்களா அல்லது அடக்குமுறையை உணர்கின்றார்களா?

மக்களின் என்ன மனநிலையில் உள்ளார்கள் என்பதை அறிவதை விட்டுவிட்டு, அவர்கள் அப்படி இருக்கவேண்டும், இப்படி இருக்கவேண்டும் என்று புலம்பெயர்ந்து வாழ்வோர் தங்கள் விருப்பங்களை அவர்கள்மேல் திணிக்காமல் இருக்கவேண்டும். பல்வேறு திரிகளில் உள்ள தாயக நிலைமைகளைப் பார்த்தால் புலம்பெயர்ந்தவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப மக்கள் இல்லை என்பதுதான் தெரிகின்றது. எனவே யாழ் ஆயரின் கூற்று சரியா பிழையா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.