Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காற்று மழை வந்து கேட்ட தமிழ்ப்பாட்டு நேற்று வந்ததே நினைவோடு! கேட்டு மனமெங்கும் கும்மாளம்போட்டு வாழ்த்த வந்ததே கனிவோடு!

Featured Replies

வணக்கம், இந்தப்பாடல் எனது அன்பு மருமகனின் பிறந்தநாளுக்காக இன்று செய்து இருந்தன். காது குடுத்து கேட்கறமாதிரி இருக்கிதோ என்று சொல்லுங்கோ. ஒருநாளில உருவாகிய பாடல். அப்பிடி இப்பிடி பாடலில ஏதாச்சும் குறைகள் இருக்கலாம். பொறுத்தருளவும். பாடலை இசையமைச்சு ஒலிப்பதிவு செய்தபின்னர் நான் பாடலை உருவாக்க பயன்படுத்தும் மென்பொருள் கொஞ்ச சில குழப்படிகள் விட்டதில நுணுக்கமான திருத்தம் செய்வதற்கு நேரம் இருக்க இல்லை. பாடலை அக்கா ஆரம்பத்தில வேறு இசையில அமைச்சு இருந்தா. பிறகு நான் அவவிண்ட இசையோட மிக்ஸ் பண்ணி என்ர விளையாட்டையும் காட்டி இருக்கிறன்.

+++

http://karumpu.com/wp-content/uploads/2010/01/Tamil-Birthday-Song2.mp3

பாடல்வரிகள்: பவித்திரா [எனது அக்கா]

தனன

காற்று மழை வந்து கேட்ட தமிழ்ப்பாட்டு

நேற்று வந்ததே நினைவோடு!

கேட்டு மனமெங்கும் கும்மாளம்போட்டு

வாழ்த்த வந்ததே கனிவோடு!

காற்று மழை வந்து கேட்ட தமிழ்ப்பாட்டு

நேற்று வந்ததே நினைவோடு!

கேட்டு மனமெங்கும் கும்மாளம்போட்டு

வாழ்த்த வந்ததே கனிவோடு!

கோர்த்துகோர்த்து வார்த்தை ஜாலம்செய்தது

பார்த்த காட்சி இன்று கவிதையானது!

கோர்த்துகோர்த்து வார்த்தை ஜாலம்செய்தது

பார்த்த காட்சி இன்று கவிதையானது!

காற்று மழை வந்து கேட்ட தமிழ்ப்பாட்டு

நேற்று வந்ததே நினைவோடு!

கேட்டு மனமெங்கும் கும்மாளம்போட்டு

வாழ்த்த வந்ததே கனிவோடு!

தனன

காலை புலர்ந்தது புதுமை பூத்ததே

சோலை வெளியெங்கும் பசுமை மிஞ்சுதே!

நாணல்கள் பூக்கள் நாட்டியம் காண

நீலக்குருவிகள் வந்ததே!

காலை புலர்ந்தது புதுமை பூத்ததே

சோலை வெளியெங்கும் பசுமை மிஞ்சுதே!

நாணல்கள் பூக்கள் நாட்டியம் காண

நீலக்குருவிகள் வந்ததே!

அன்புகொண்டு அழகுகண்டு வாழ்வாய்!

வானம் பூமி யாவும் வாழ்த்துதே!

காற்று மழை வந்ததே!

காற்று மழை வந்ததே!

தனன

கொட்டும் அருவி கடல் கூடும் பறவையினம்

பாடுகின்றதே சந்தம் சொல்லுதே

வயலோரம் வண்ண ஓவியம் கண்டு

கனவுகள் கூடி வந்ததே!

கொட்டும் அருவி கடல் கூடும் பறவையினம்

பாடுகின்றதே சந்தம் சொல்லுதே

வயலோரம் வண்ண ஓவியம் கண்டு

கனவுகள் கூடி வந்ததே!

பவள மாலை கொடிகள் ஆடி அசையும்!

தென்றல் பூக்கள் தூவிச் சென்றதே!

ஆசிகள் தந்ததே!

ஆசிகள் தந்ததே!

தனன

காற்று மழை வந்து கேட்ட தமிழ்ப்பாட்டு

நேற்று வந்ததே நினைவோடு!

கேட்டு மனமெங்கும் கும்மாளம்போட்டு

வாழ்த்த வந்ததே கனிவோடு!

காற்று மழை வந்து கேட்ட தமிழ்ப்பாட்டு

நேற்று வந்ததே நினைவோடு!

கேட்டு மனமெங்கும் கும்மாளம்போட்டு

வாழ்த்த வந்ததே கனிவோடு!

கோர்த்துகோர்த்து வார்த்தை ஜாலம்செய்தது

பார்த்த காட்சி இன்று கவிதையானது!

கோர்த்துகோர்த்து வார்த்தை ஜாலம்செய்தது

பார்த்த காட்சி இன்று கவிதையானது!

காற்று மழை வந்து கேட்ட தமிழ்ப்பாட்டு

நேற்று வந்ததே நினைவோடு!

கேட்டு மனமெங்கும் கும்மாளம்போட்டு

வாழ்த்த வந்ததே கனிவோடு!

+++

பாடல் பிடிச்சு இருந்தால் இதில இறக்கலாம் http://www.zshare.net/audio/7135090115b8afec/

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

முரளி

நாட்டுப்புறப் பாடலின் தாளக்கட்டோடு கேட்ட உங்கள் பாடல் மிக அருமை

உங்கள் அக்காவின் கவிதை வரிகள் அற்புதம்

மருமகனுக்கு எம் மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பாடலின் வரிகள் ...பாடும் உற்சாகம் ....தாளக்கட்டு , மத்தள இசை கிராமிய பாடல் மணம்.வீசும் அனைத்தும் அருமை . மருமகனுக்கு என் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி இப்ப என்ன ஒரே பாட்டும் கும்மாளமாய் திரியிறியள்? :)

நல்ல முன்னேற்றம் தெரியுது!

  • தொடங்கியவர்

நன்றி கண்மணி அக்கா, நிலாமதி அக்கா, குமாரசுவாமி அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்று தான் இப் பாடல் கேட்டேன்...உங்கள் அக்காவின் குரல் வளம்,பாடிய விதம் அருமை ஆனால் ஒலித் தொகுப்பில் தான் குறை இருக்கிறது என நினைக்கிறேன்..திரும்ப திரும்ப குறை சொல்கிறேன் என தப்பாக நினைக்காதீர்கள்.உங்கள் மருமகனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்

நன்றி ரதி. அது அக்காவின் குரல் இல்லை. என்ர குரல் மூன்றுவிதமான குரல் அதில இருக்கிது. ஒலிப்பதிவு பற்றி, அது நான் ஒவ்வொன்றிலும் இரண்டு Tracksஐ சேர்த்து இருக்கிறன். என்னட்ட இப்ப நல்ல ஒலிவாங்கி இல்லை. இதனால இப்பிடி செய்யவேண்டி இருக்கிது. தனி ஒரு Trackஐ போடும்போது தெளிவுகூடவாகவும், இன்னமும் இனிமையாகவும் இருக்கும். நல்லதொரு ஒலிவாங்கி கிடைச்சபின்னர் அப்படி செய்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரதி. அது அக்காவின் குரல் இல்லை. என்ர குரல் மூன்றுவிதமான குரல் அதில இருக்கிது. ஒலிப்பதிவு பற்றி, அது நான் ஒவ்வொன்றிலும் இரண்டு Tracksஐ சேர்த்து இருக்கிறன். என்னட்ட இப்ப நல்ல ஒலிவாங்கி இல்லை. இதனால இப்பிடி செய்யவேண்டி இருக்கிது. தனி ஒரு Trackஐ போடும்போது தெளிவுகூடவாகவும், இன்னமும் இனிமையாகவும் இருக்கும். நல்லதொரு ஒலிவாங்கி கிடைச்சபின்னர் அப்படி செய்கிறன்.

தவறுக்கு மன்னிக்கவும்...உங்கள் இருவரின் குரல் கிட்டதட்ட ஒரே மாதிரி இருந்ததால் உங்கள் சகோதரி என நினைத்து விட்டேன்.

  • தொடங்கியவர்

தவறுக்கு மன்னிக்கவும்...உங்கள் இருவரின் குரல் கிட்டதட்ட ஒரே மாதிரி இருந்ததால் உங்கள் சகோதரி என நினைத்து விட்டேன்.

பரவாயில்லை ரதி. உங்கட கருத்து எனது குரலுக்கு கிடைச்ச ஒரு அங்கீகாரம் மாதிரி இருக்கிது. :)

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களை படைப்பதால்....................... நீங்களும் இறைவனே!

  • தொடங்கியவர்

மிக்க நன்றி மருதங்கேணி

+++

ரதி, அந்த ரெண்டு Tracks இல தடிச்ச குரலில இருந்த Trackஐ நீக்கிப்போட்டு Softஆன குரலில பாடின Trackஐ மாத்திரம் இணைச்சு இருக்கிறன். இப்ப இரைச்சல் நல்ல குறைவாய் இருக்கும் என்று நினைக்கிறன். எப்பிடி இருக்கிது இப்ப? நேரம் மினக்கட்டால் இன்னனும் ஸ்டூடியோ குவாலிட்டியில செய்யலாம். ஆனால் யார் குந்தி இருந்து மினக்கடுறது..

  • கருத்துக்கள உறவுகள்

முரளி இப்படியா அதிர்ச்சி அடைய வைப்பது? :)

நன்றாக இருக்கிறது கூல் எடிட் புரோ மூலமாக தனித்தனியாக இசைக்கருவிகளின் ஒலிகளை இணைத்தீர்களா? அல்லது ஒவ்வொரு கருவிக்கும் ஒவ்வொருவர் இருந்து வாசித்தார்களா?

முரளி வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். முக்கியமாக பாடல் வரிகள் அருமையாக இருக்கின்றன.

முயற்சிக்கு வாழ்த்துகள் முரளி. பாடல் வரிகள் அழகாக இருக்கின்றன. வாத்தியங்களின் சத்தம் பாடுபவரின் குரலை விட அதிகமாக இருக்கின்றத்தை எதிர்வரும் முயற்சிகளில் சரி செய்தால் இனிமையாக இருக்கும் என நம்புகின்றேன்

  • தொடங்கியவர்

நன்றி சகாரா அக்கா, நிழலி.

+++

நான் முன்பு Calkwalk, Cubase பாவிச்சது. இப்ப Audocity பாவிச்சு இருக்கிறன். Audocity இலவசமானது, வலைவழி இறக்கலாம் என்பதோட பயன்படுத்தும் முறையும் மிகவும் இலகுவானது.

இதில ஏழு பியானோ Tracksஐ தனித்தனியாக வாசிச்சு இணைச்சு இருக்கிறன். அத்தோட ஒரு தாளம் Trackம் [டிங் டிங் எண்டு விட்டுவிட்டு கேட்கிறது], ஒரு Drum kit Trackம் [தபேலா] ஒழுங்குபடுத்தி இணைச்சு இருக்கிறன். மற்றது ஒலிப்பதிவு செய்யப்பட்ட வாய்ப்பாட்டு Track.

ஒலிவாங்கி, மற்றும் நான் பயன்படுத்தும் interfaceஇன் பலம் போதாமல் இருக்கிறதால குரலை நல்லாய் வெளியில கொண்டு வாறதில, musicஐ mixபண்ணி balance பண்ணுறதில கொஞ்ச சிக்கலுகள் இருக்கிது.

எதிர்காலத்தில இன்னமும் professionalஆக பாட்டை செய்கிறதெண்டால் கலையகத்துக்குபோய் வாய்ப்பாட்டை மட்டும் ஒலிப்பதிவு செய்துபோட்டு மிச்சம் வீட்டவச்சு விளையாட்டு காட்டலாம்.

டங்க்ஸ் [இசைக்கலைஞனும்] தன்ர கிட்டாரை Tune upசெய்து கொண்டு இருக்கிறார். விரைவில் சமயம் கிடைக்கும்போது இசைக்கலைஞனின் கிட்டார் வாத்திய இசையும் சேர்ந்து யாழில கதறப்போகிது.

யாழ் உறவுகளின் கவிதைகளை எடுத்து டங்க்ஸ் உடன் சேர்ந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு பாடலாவது செய்யாலாம் என்று நினைக்கிறன், பார்ப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மச்சான்

உங்கள் முயற்சி மிக நன்று...இசையின் ஆதிக்கம் உங்கள் குரலை மிஞ்சிவிடுகிறதாக இருக்கிறது இருந்தும் ஒவ்வொருவரியும் மிகத் தெளிவாகவே கேட்கின்றது.....அடுத்தடுதத முயற்சிகளில் இதைய்ல்லாம் சரி செய்துவிடுவீர்கள் என்பது என் நம்பிக்கை...அடுத்து இன்னுமொரு விசயம் குறையாக நினைக்க வேண்டாம் பல்லவி, சரணம் 1, சரணம் 2 எல்லாம் ஒரே மெட்டில் அமைந்துள்ளதும் பாடலைக் கேட்பவர்களுக்கு சிறிது சலிப்பை ஏற்படுத்திவிடும்... மிகவும் குறைவான பாடல்களே பல்லவி, சரணம் எல்லாம் ஒரே மெட்டில் அமைந்துள்ளன....

தகவலுக்காக... நானும் உங்களைப் போன்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் ஆனாலும் பல தடங்கல் காரணம் சரியான உபகரணமின்மை தான்...உதாரணம் குரலை பதிவுசெய்யும் மைக்கிரோ போனுக்கு கொன்டென்சர் மைக் தான் சிறந்தது ஆனால் என்னிடம் இருப்பதுவோ டைனமிக் மைக்கிரோபோன் தான் இதுபோன்ற சிக்கலால் தான் சிறிது தாமதம் இருந்தும் விரைவில் எனது ஒலிப்பதிவு ஒன்றையும் உஙள் எல்லாருக்காகவும் நிச்சயம் தருவேன்...

உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...உங்கள் அக்காவின் மகனின் பிறந்த நாளுக்கும் என் வாழ்த்துக்கள் , உங்கள் அக்காவின் பாடல் வரிகளுக்கும் என் வாழ்த்துக்கள்...

  • தொடங்கியவர்

நன்றி இளங்கவி.

நீங்கள் ஒலிவாங்கியை நேரடியாக கணணிக்கு இணைத்தால் ஒலிப்பதிவு தரம் குறைவானதாக இருக்கும். இதற்கு ஓர் mixer board | interface தேவைப்படும். சுமார் $50டாலர்களில் இருந்து இந்த interfaceகள் இசை உபகரணங்கள் விற்கும் கடைகளில் வாங்கலாம். உங்கள் படைப்புக்கள் தொடரவும், முயற்சிகள் கைகூடவும் வாழ்த்துகள்.

நேரம் மினக்கட்டால் தரமான மற்றும், இனிமையும், ஈர்ப்பும் கூடிய பாடல்களை உருவாக்கலாம். இது ஒருநாளில் உருவாகிய பாடல். வழமையில் இசையமைப்பாளர்கள் பாடல்களை உருவாக்கும்போது நீண்டகாலம் – கிழமைக்கணக்கு, மாதக்கணக்கு, வருசக்கணக்கு செலவளிப்பார்கள்.

சினிமா பாடல்களை உருவாக்குபவர்கள் ஏற்கனவே நீண்டநேரம் செலவளித்து பல்வேறு விதமான இசைக்கோவைகளை உருவாக்கி வைத்து இருப்பார்கள். சமயம், தேவைக்கு தகுந்தபடி ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த கோவைகளில் பொருத்தமானதை பயன்படுத்துவார்கள். நாங்கள் பொழுதுபோக்காக செய்வது. இப்படி எல்லாம் மினக்கட ஏலாது. அவர்களுக்கு மினக்கட்டால் வரும்படி கிடைக்கும்.

எதிர்காலத்தில் நீங்கள் சொன்னதுபோன்ற ஈர்ப்புமிக்க பாடல்களை உருவாக்க முயற்சிக்கின்றேன்.

  • 3 months later...
  • தொடங்கியவர்

வணக்கம், இன்றைக்கு மீண்டும் பழைய திரியை தூசு தட்டி கடுப்பை கிளப்புவதாய் நினைக்ககூடாது. :rolleyes: பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு யோசனையில நான் முந்தி யாழில பாடி இணைச்ச பழைய பாட்டுக்கள் எப்படி இருக்கிது என்று கேட்டுப்பார்த்தன். நான் பாடினதை எனது குரலை நானே மீண்டும் கேட்க சிரிப்பாய் இருக்கிது. அண்மையில செய்த சத்திரசிகிச்சை காரணமாய் பல மாதங்கள் பாட்டு பாட முடியாமல் தடங்கல் ஏற்பட்டு இருந்திச்சிது. மீண்டும் ஏதாவது பாடுவது சாத்தியமா என்று தெரிய இல்லை, பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

குருஜி! அபாரமாய் இருக்கிறது! எளிமையான, கச்சிதமான பாடல் வரிகள். அந்த ஓஓ இன்னும் கொஞ்சம் நீளமாக அலையாக இருந்தால் நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன்!

கனகாலம் இந்தப் பக்கம் வராததால் தவற விட்டுட்டன்! மனம் தளர வேண்டாம், குரலுக்கு ஏற்ற மாதிரி தாளத்தையும் பாடல் வரிகளையும் அமைத்தால் சிறப்பாக வரும். சி.எஸ். ஜெயராமன், சந்திரபாபு போன்றோர் மாதிரி. ஊக்கத்தைக் கைவிட வேண்டாம். அதுசரி இந்த யாழிலேயே அதுக்கு உதாரணம் நீங்கள்தான்! வாழ்த்துக்கள் உங்கள் கூட்டணிக்கு!! :rolleyes::lol:

வணக்கம் மச்சான் ..உங்கள் உருவாக்கும் திறமைக்கு முதற்கண் எனது வாழ்த்துக்கள் ..ஏ .ஆர்.ரஹ்மானின் இசை மாதிரி சில இடங்களில் பாடல் வரிகளை கேட்க விடாமல் பின்னனி இசை கரைச்சல் கொடுக்குது..மற்றது யாழ்ப்பாண நாட்டார் பாடல்கள் மட்டகளப்பு நாட்டர் பாடல்கள் எடுத்து உங்கள் பாணியில் இசைமைத்து றீமிக்ஸ் பண்ணி இந்த யூரூயூப்களிலை போடலாமே. அழிந்து போகும் இந்த ..நாட்டார் பாடல்களை சேர்த்து யாரும் செய்யவேணும் என்ற ஆசை ...உங்களுக்கு அந்த திறமை இருப்பதால் ...ஒரு வேண்டுகோள் தான்...நன்றாயிருக்கிறது மச்சான் உண்மையிலை நீங்கள் ஒரு கலைஞன் தான் கேட்க முரளி மனோகரமாக இருக்கு :rolleyes:

Edited by sinnakuddy

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் மச்சான்..பேசாமல் கலைஞன் என்றே பெயரை மாற்றிவிடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் தந்த பல குரல் மன்னன் மச்சானுக்கு வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்

நன்றி குருஜி, சின்னக்குட்டி அண்ணை, சாத்திரி அண்ணை, கறுப்பி. சின்னக்குட்டி அண்ணை, இந்தப்பாடலுக்கு அப்பிடி இசை தற்செயலாய் வந்திட்டிது. நாட்டுப்புற பாடல் பற்றி எனக்கு அறிவு ஒன்றும் பெரிசாய் இல்லை. வசதிவரும்போது நீங்கள் சொல்வது போல முயற்சி செய்து பார்க்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமை!!! தொடரட்டும் உங்கள் கலைச்சேவை.காலப் போக்கில் நல்ல கலைஞனாக வர வாழ்த்துக்கள். பாப்பாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

நன்றி புலவர்.

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் இந்த பாட்டை கேட்டன் .நல்லா இருக்கு மச்சான்.. வாழ்த்துக்கள் .......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.