Jump to content

வெளிநாடுகளில் வாழும் 8 லட்சம் தமிழர்க்காக இனியும் சிலுவை சுமக்க நாம் தயாரில்லை - இடம்பெயர்ந்த வன்னி மக்கள் !


Recommended Posts

மேலே புலம் பெயர்ந்தவர்களுக்காகப் போராட்டம் நடந்தது என்னும் கருத்து வேண்டுமென்றே சிறிலங்கா அரசாலும் அதன் அடிவருடிகளாலும் பரப்படுகிறது.அதனையே சிலரும் பலரும் காவாஇ வருகின்றனர். உலகில் இன்னொருவனுக்காக வேறு எவனும் போராடியது கிடையாது.உலக வரலாறு என்பது அவன் அவனுக்கு இருக்கும் முரண்பாடுகளின் அடிப்படையில் எழும் பிரச்சினைகளௌக்கான தீர்வைத் தேடிய போராட்டங்களினாலையே எழுதப்பட்டது.வரலாற்றைப் பொருள்முதல்வாத அடிப்படையில் விளங்கிக் கொள்ளும் மார்க்சிய அடிப்படியிலையே பல வரலாற்று நிக்ழவுகளுக்கான காரணக்களைத் தேட முடியும்.

இன்றிருக்கும் நிலையை அதாவது மிககொடூரமான ஒரு போரின் பின்னரான மன நிலையை வைத்து மட்டுமே தமிழரின் போராட்ட வரலாற்றையோ அதன் தேவையையோ மதிப்பிட்டு விட முடியாது.ஒரு கசப்பான அனுபவத்தைப் பெற்றவர் அதனில் இருந்து விடுபட்டு தனது இயல்பு நிலையை அடைந்ததும் அவரின் இயல்பான வாழ்க்கைப் போராட்டம் ஆரம்பமாகும்.தமிழர்கள் சிறுபான்மையினர் என்னும் அடக்குமுறைச் சிந்தனை உடைய பேரினவாத அடிப்படையிலான அரசு இருக்கு மட்டும் தமிழர்களின் அரசியற் பொருளாதாரச் சுதந்திரதிற்கான போராட்டத்திற்கான காரணக்கள் இருந்து கொண்டே இருக்கும்.போராட்டம் என்பது அங்கிருந்தே எழும்.புலத்தில் இருந்து அல்ல.இன்றிருக்கும் காலம் மக்கள் தங்களைப் பலப்படுதுவதற்கான காலமே.

அண்ணை இருக்கும் போது பாசிஸ்டுக்கள் என்றூ விமர்சிதவர்கள் இன்று அவர் இல்லாத நிலையில் நடக்கும் முரண்பாடுகளை விமர்சிப்பது நகைப்புக்கிடமானாது.இது தான் ஜனனாயாகம் ஒருவர் நாடுகடந்த அரசு என்பார் இன்னொருவர் வட்டுக் கோட்டை என்பார் இன்னொருவர் மகிந்த என்பார் இன்னொருவர் சரத் என்பார்,ஈற்றில் எவை எவை என்பதை மக்களின் தேவைகளே தீர்மானிக்கின்றன.இன்று மக்களுக்கு மூச்சு விட ஒரு இடைவெளி தேவையாக இருக்கிறது, மேலும் புலிகளின் போராட்ட வழிமுறைகளை விமர்சிதவர்கள் மாற்றுப் பாதை தம்மிடம் உண்டு என்போர் என்று எலோருமே இன்று களத்தில் தமிழருக்கான் தீர்வைக்காட்டலாம்.ஈற்றில் நடகப்போவது ஒன்றே, பேரின்வாதாம் தன்னை முன் நிறுத்தும் எந்தத் தீர்வும் எவராலும் வழங்க முடியாது போகும், இயல்பு வாழ்க்கைக்கு ஏங்கும் மக்களை சிங்கள இராணுவம் தொடர்ந்தும் அட்க்கு முறைக்கு உள்ளாக வைதிருக்க் அமுயற்ச்சிக்கும், ஜனனாயாகமான போராட்டங்களை நசுக்கும்.தமிழ்த் தேசிய உற்பதியை பொருளாதராத்தைச் சிதைக்கும்.சிங்கள் அமயமாக்கலை தயகத்தில் நடாத்தும் .மீண்டும் மக்கள் தமது போராட்டத்தைத் தொடர்வார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தும் ஆதங்கமும் தேசியவாத உணர்வுக்குள்ளாகவே சுற்றுகின்றது. ஆனால் பிரச்சனையின் சாரம் அதுவல்ல. இன்று புலம்பெயர்ந்த ஒருவனும் அவன் சார்ந்து தாயகத்தில் இருக்கும் குடும்பமும் பொருளாதார நெருக்கடிகளை ஈடுகொடுத்து வாழமுடிகின்றது. அதேபோல் போராட்டங்களில் இருந்து விலகி அரசை அண்டிப்பிழைக்கும் சனமும் பொருளாதார நெருக்கடிகளை சமாளித்து வாழ முடிகின்றது. கல்வி மற்றும் இதர விசயங்களில் முன்னேற்றம் காண முடிகின்றது. இதுவே புதிய வர்க்க நிலை. புலம்பெயர் உதவிகள் இன்றியும் தேசியப்போராட்டத்தை சுமந்தும் அரசின் அழுத்தங்களுக்கும் உட்பட்ட மக்கள் வாழ்விழந்து நிர்கதியாகி நிற்கின்றார்கள். பொருளாதாரம் கல்வி இதர விசயங்களில் அடிமட்டத்துக்கு சென்றுவிட்டார்கள். நாம் தேசிய உணர்வுடனும் பிறந்த மண் உறவுகள் மீதான பற்றுடனும் இங்கே பல போராட்டங்களை செய்தாலும் இந்த புதிய வர்க்க நிலையை சமன்செய்ய முனைந்தோமா? நிச்சயமாக இல்லை மாறாக வர்க்க நிலையை மேலும் ஏற்றதாழ்வுள்ளதாக மாற்றுகின்றோம். இங்கிருந்து நாம் எமது உறவுகளுக்கு பணம் அனுப்பி அவர்களை முதலாளிகளாக்க முனைகின்றோம் தாவிர சமுகத்தை பொதுவாக முன்னேற்ற முனையவில்லை. ஒவ்வொரு மக்களின் மனதிலும் குடும்பத்தில் ஒருவனை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் பொருளாதார அடிப்படையிலே உருவாகின்றது. தாயக மீட்பை விட இந்த எண்ணம் வலுவானது. எமக்கு முன் புலம்பெயர்ந்தோர் எமக்கு வழிகாட்டினார்கள் நாம் தாயகத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டி நிற்கின்றோம். இதே போல் போராட்டத்தை சுமந்த மக்களுக்கு அதிலிருந்து விலகி நின்ற மக்கள் வழிகாட்டி நிற்கின்றார்கள். இவற்றுக்கான முக்கியத்துவமே அதிகமானது தவிர தேசியம் தன்னாட்சி சுயநிர்ணயம் என்பன இரண்டாம்பட்சமானது என்பது தான் நடைமுறையில் நிஜம். இதை நிருபிக்கும் அடயாளமே புலம்பெயர்ந்த நாங்கள் தான். பொருளாதார அடிப்படையில் தாயக மக்களை சமன்படுத்தவேண்டும். எமது பற்று உண்மையாயின் எமது உதவிகள் தனிநபர்சார்ந்ததன்றி பொதுமையாக வேண்டும். ஓரளவான வர்க்க சமநிலையிலேதான் நாம் அடுத்த கட்டத்திற்கு போக முடியும். அதே போல் மத இறுக்கம் அற்ற சூழ்நிலையை அறிவார்ந்த பொதுச் செயற்பாடு மூலம் தோற்றுவிக்க வேண்டும். நாம் வர்க்க மற்றும் மதம் பிரதேசவாதம் போன்ற இனத்தை சிதைக்கும் விசயங்களை ஒரு கையிலும் மறுகையில் இனத்தேசியத்தையும் வைத்திருக்கின்றோம். இதனால் என்றும் விமோசனம் இல்லை.

சுகன் நீங்கள் சொல்கின்ற விடயத்தில் வர்க்க மற்றும் மதம், பிரதேசவாதம் என்பனவற்றை இலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஆனால் இனத்தேசியம் என்று நீங்கள் குறிப்பிடும் பதம் எனக்குக் குழப்பமாகவே இருக்கிறது. இனத்தேசியம் என்று நீங்கள் குறிப்பிடுவதைப்பற்றி மேலதிகமாக விளக்குங்கள் சுகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயகத்தில் சிங்களம் எவரும் எதையும் கொடுத்துவிடப் போவதில்லை. இனரீதியான நெருக்குதல்கள் அதிகமாகலாம். ஆனால் அவற்றால் இன்னொரு தடவை மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என சொல்ல முடியாது.

80 களின் இன நெருக்குதல்கள் ஆரம்பித்த போது - இரண்டு வெவ்வேறு விளைவுகள் ஏற்பட்டன. ஒன்று போராட்டத்தில் குதித்தனர். மற்றயது வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர். இந்த 2 விளைவில் ஒன்று மிகுந்த அடிவாங்கியிருக்கிறது. மற்றயது ஒப்பீட்டளவில் ஒப்பேற்றியிருக்கிறது.

மீளவும் இன நெருக்குதல்கள் ஆரம்பிக்கின்றபோது திரும்பவும் ஒன்றில் போராடவேண்டும் அல்லது புலம்பெயர வேண்டும் என்ற நிலைவரின் ஒரு பொது மனித மனத்தின் விருப்பு புலம்பெயர்வதாகவே இருக்கும். கடந்தகாலத்தையொட்டி அவ்வாறு சிந்திப்பதில் தவறுமல்ல.

சிம்பிளா கேட்கிறன் ஐயா ஒரு கேள்வி..

கிட்டத்தட்ட 25 லட்சம் மக்கள் தாயகத்தில் இருப்பதாகக் கேள்வி. அவர்கள் குஞ்சு குருமன் பெண்டிர் பெருமன் என எல்லோரும் புலம்பெயர்வை விரும்பி சுவிஸ் கனடா லண்டன் பிரான்ஸ் போவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது சாத்தியமற்றது என நினைக்காதீர்.. கடந்த 20 வருசத்தில் 10 லட்சம் மக்கள் வெளியேறி புலம்பெயர்ந்த நாடுகளில் புகுந்திருக்கிறார்கள். ஆக இன்னொரு 40 வருடத்தில் சாத்தியமான விடயமே இது.

அல்லது ஒரு பேச்சுக்கு அனைத்து இலங்கைத் தமிழர்களையும் பொறுப்பெடுத்து பராமரிக்க கனடா தயார் என்று வைத்து கொள்வோம். அவர்களும் வந்துவிட விரும்புகிறார்கள். அந்நிலையில் நாம் என்ன செய்யலாம்.. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: வோல்கனோ,

நான் எனது நண்பர் பற்றி முதலில் சொல்ல விரும்பவில்லை. ஆனாலும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்.

அவர் ஒரு முன்னால் ஈரோஸ் ஆதரவாளர். பாலகுமார் இயக்கத்தைக் கலைத்துவிட்டுப் புலிகளுடன் சேர்ந்து இயங்கியதில் கடும் கோபம் கொண்டிருந்தவர். புலிகள் பற்றியும், விடுதலைப் போராட்டம் பற்றியும் எப்போதுமே ஒரு ஏளனப் போக்கைக் கொண்டிருந்தவர். 2004 இல் ரணிலுடன் புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, "இருந்து பாருங்கோ என்ன நடக்கப் போகுது எண்டு, ரணிலும் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை எண்டு உவையள உலகமெல்லாம் கொண்டு திரிஞ்சு அலைக்கழிக்கப்போறான், கொஞ்சநாளில உவையின்ர போரட்டக்குணம் எல்லாம் போய் அழியப் போயினம். கடைசியா யாசீர் அரபாத்துக்கும் பி.எல். ஓ வுக்கும் நடந்த கதிதான் உங்கட தலைவருக்கும் இயக்கத்துக்கும் நடக்கப் போகுது" என்று எனக்குச் சொன்னவர். அதை இப்போது அடிக்கடி சொல்லியும் காட்டுவார்.

இங்கு நடக்கும் போராட்டங்களுக்கு வரும்படி கேட்டால், " வன்னியில சன ஆயிரக்கனக்கில சாகும்போதே இந்த உலகம் கண்டு கொள்ளவில்லையாம், இப்பமட்டும் ஏதாச்சும் செய்யப்போகுதோ??உதெல்லாம் விசர் வேலை" என்று தட்டிக்கழித்து வருபவர்.

"அங்க சனத்துக்கு இப்ப போராட்டம், சுதந்திரம், புலிகள் என்ற பெயர்களே மறந்து போச்சுது, அதைப்பற்றிக் கவலைப்படவே அதுகளுக்கு நேரமில்லை, இஞ்சதான் சனம் சும்ம கத்திக்கொண்டு திரியுது" என்று இப்போது சொல்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி

நன்றி உங்கள் கருத்துகளுக்கு

"வொல்கனோ நான் உங்களை மாதிரி படிக்கவில்லை நீங்கள் மெத்த அறிவாளி நான் ஏற்றுக் கொள்கிறேன் எனக்கு உங்களை மாதிரி சிந்திக்க தெரியாது"

நான் அந்தளவு மெத்த அறிவாளி அல்ல (அந்த அறிவாளி விடயம் esan என்னை புண்ணாக்கு என்று கூப்பிடுவதர்ற்கு பதிலாக பாவித்த சொல)...ஒரு பல்கலை பட்டமும் அதனோடு இணைந்த சிலகால வேலை அனுபவமுமே...வேருஒரிடத்தில் சொல்லியிருந்தேன் எனது இளமைக்காலத்தை பனைமரங்களின் பின் கழிந்ததை இலகுவில் மறப்பேனோ என்று..அதற்கு மேல் ஏன் தம்பி UK ஸ்டுடென்ட் விசாவில் 20 மணித்தியால வேலையில் தன்னையும் பார்த்து வீடுக்கு காசு அனுப்புவது எவ்வளவு கடினம் என்று எனக்கு தெரியும். மற்றும்படி

இந்த கருத்து தொடர்பாக நான் சொல்லவருவது இங்கே நாரதர் சொன்னபடி, அதையே தான் முதலில் நானும் எழுதியுள்ளேன், இந்த நேரத்தில், இனி போராட்டம் அங்குள்ளவர்களுடன் இணைந்து செல்ல வேண்டும்./ அவர்கள் தான் தொடங்கவேண்டும், நாடுகடந்த அரசாங்கம் தேவையா/ வட்டுக்கோட்டை தேவையா/ சர்வாதேச நீதிமன்ற விசாரணை தேவையா என அவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் சொல்லவேண்டும். எங்களை பிரதானமாக பிரதிப்படுத்துகிற கட்சி, அதற்கு மேல் அங்குள்ள மக்கள் ஒருவித நிம்மதியுடன் தேர்தலில் பங்கெடுக்கிறார்கள் என்றால் அதற்கு நாங்கள் எங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும், அதைவிடுத்து அவர்களையே குறைபிடிப்பதனால் யாருக்கு என்ன பலன்? கூட்டமைப்பு இந்த தீர்மானம் ஒரு நிரந்தர தீர்வை கொண்டுவரும் என்று நம்பியா சரத்தை ஆதரிக்கிறார்கள்? மக்கள் என்ன தங்கள் அண்ணன், தம்பி, அக்கா, தங்கையின் இறப்பை மறந்தா இந்த நிலைக்கு வந்துள்ளார்கள்? சில காலத்துக்கு முன்பு பல்கலை மாணவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று ஒரு குரல்....எல்லாம் இப்போது சாத்தியமில்லை?

நான் நினைக்கிறேன் 2005 கடைசி கால பகுதியில் தமிழ் செல்வனுடனான ஒரு சந்திப்பில் சொன்னது 6 மாதம் எல்லாவற்றையும் பூட்டி ஒத்துழைப்பு தாருங்கள், பிறகு ஒன்றும் வேண்டாம் என்கிற மாதிரி..அங்குள்ள எல்லோரும் எல்லாவற்றையும் பூட்டினது பாதியும், பூட்டாதது பாதியையும் வேலைசெய்தது எனக்கு தெரியும்..அதன் பிறபாடு A 9 திறந்தால்தான் காம்பஸ் திரும்ப ஓபன் பண்ணுவம் என்று எத்தனை நாள் பூட்டியுருந்தாது...அதற்கு மேல் எல்லாவிடங்களிலும் கிளைமோர், கிரனைட் ....எத்தனை இளைஞ்சர் யுவதிகளை கொளைசெய்தவவர்கள்...ஓரளின் பெயரில் இன்னுமொராள் , கடைதிறந்து நோர்மல் வந்தால் ஒராக்களுக்கு பிடிக்காது..கடைதிறக்காட்டி மற்றாக்களுக்கு பிடிக்காது...இதை சாட்டி அதை பெருப்பிப்பதற்காக எத்தனை கொலை .....அவர்கள் அந்த பாதை எல்லாம் கடந்துதான் இப்ப இருக்கிறார்கள்..ஆனால் அவர்களையே குறை சொன்னால்...அவர்கள் படும் பட்ட பாட்டுடன் ஒப்பிடும் போது நாங்கள் செய்தது செய்து கொண்டிருப்பது எதுவும் அல்ல...இங்கே நான் வந்தவுடன் எல்லாரும் என்னை கேட்ட கேள்விகளில் ஒன்று தம்பி எப்ப அம்மா அப்பாவை கூப்பிட போகிறீர்கள்? யாரும் யாரையும் அங்கு வைத்திருக்க விரும்பவில்லை...இதுதான் யதார்த்தம்..அந்தநேரத்தில் அங்குள்ளவர்கள்..தங்களுக்கு தெரிந்த மாதிரி மஹிந்தாவிர்ற்கோ, சரத்துக்கோ வோட் பண்ணினால்...இங்குள்ளவர்கள் சிவாஜிலிங்கத்துடன் பேசுகிறார்கள், சம்பந்தன் வெளிப்படையாக தாயகத்தின் நிலைமைகளை புரிந்து செயற்படுங்கோ என்றால் அதை விரோதமாக பார்கிறார்கள்...சிவாஜிலிங்கத்திர்ற்கு சார்பாக இருப்பதோ, இல்லாமல் விடுவதோ அவர் அவரின் விருப்பம், ஆனால் அங்குள்ள மக்களே போராட்டத்தை மறந்துவிட்டார்கள், அவர்களுக்கு அரசியல் தெரியாது என்பது போன்ற கருத்துக்கள் எங்கள் இடைவெளியை கூட்டுமே தவிர வேறு எதுவும் தராது...( இதை சொன்னாலே நான் இங்கே வந்து இல்லாத இடைவெளியை உருவாக்குவதாக சொல்லவும் ஆட்கள் உள்ளார்கள்..

வன்னித்தமிழர்களை நான் சொல்லவில்லை ... அவர்கள் இந்த புவியில் வாழ உரித்தில்லாதவர்கள்...எனக்கு இப்பவும் மனதில்/ நபகத்தில் உண்டு, சிலர் சொல்லியது ..ஆர்மி கொன்றோல் ஏரியா க்கு வந்து என்ன நடக்கும் அங்கே வந்தாலும் சாவுதானே , அதைவிட போராடி சாவது மேல்.... அதுதான் எங்களின் மிகப்பெரிய வரலாற்று துன்பியல் நிகழ்வு...அதைபற்றி எழுதி திரியின் போக்கை மாற்ற விரும்பவில்லை....

இப்பவுள்ள நிலை என்னவென்றால் அங்குள்ளவர்களுடன் இணைந்து செயற்படுங்கள் என்றால் , சொல்லுபவர்களையே விரோதமாக பார்கிறார்கள்...எல்லாவற்றிக்கும் துரோகி , தியாகி ......இப்ப சிங்கள பிரச்சார சதிவலைக்கு சிக்கியதாக சொல்லுகிறார்கள். நான் இந்த நாடுகடந்த அரசாங்கம், வட்டுகோட்டை தீர்மான வாக்கேடுப்பிர்ற்கு எதிரானவன் அல்ல.. ஆனால் அதுவல்ல நிகழ்கால தேவை...வன்னியில் இருந்து AFP செய்தியாரிடம் சனம் சொல்லுது ...கொஞ்ச்சமாது தூக்கி விடுங்கோ நாங்கள் எங்களை பார்ப்போம் என்று...அதற்க்கு யாரும் செவி சாய்ப்பார் இல்லை...இங்கே போராட்ட காலத்தில் பொருள், பணம் கொடுத்தாவர்கள் அதை ஒழுங்குபடுத்தினவர்கள் ஏன் அதை இப்போது செய்யமுயாதுள்ளது...இதுவும் ஒரு போராட்டமே ஆனால் ஏனோ எங்களுக்கு அது போராட்டமாய் தெரியவில்லை..

முதலில் சொன்னபடி அவர்கள் பயணிகள் ..நீண்ட பயணத்தின் பயணிகள் அவர்கள் விரும்பினபடி ஒய்வு எடுக்கட்டும்..நாங்கள் விழிப்பாய் இருப்போம், அவர்களின் குரலுக்கு செவிசாய்க்க ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol: தமிழ்க் கூட்டமைப்பினர் சரத்தை ஆதரிப்பதற்காக எத்தனை காரணம் சொன்னார்கள்?? தமது 10 அம்சக் கோரிக்கையைக் கூட அவர் ஏற்றுக்கொண்டு விட்டார் என்றெல்லாம் கூடச் சொன்னார்கள். ஆனால் சரத் தென்னிலங்கையில் மக்களுக்கு சொல்லியிருக்கும் செய்தியைப் பார்த்தால் எல்லாம் தெளிவாகப் புரிகிறது. இதற்குப் பிறகும் சரத்தை கூட்டமைப்பினர் ஆதரிப்பதை எப்படிச் சரியென்று சொல்ல முடிகிறது ?
Link to comment
Share on other sites

:lol: தமிழ்க் கூட்டமைப்பினர் சரத்தை ஆதரிப்பதற்காக எத்தனை காரணம் சொன்னார்கள்?? தமது 10 அம்சக் கோரிக்கையைக் கூட அவர் ஏற்றுக்கொண்டு விட்டார் என்றெல்லாம் கூடச் சொன்னார்கள். ஆனால் சரத் தென்னிலங்கையில் மக்களுக்கு சொல்லியிருக்கும் செய்தியைப் பார்த்தால் எல்லாம் தெளிவாகப் புரிகிறது. இதற்குப் பிறகும் சரத்தை கூட்டமைப்பினர் ஆதரிப்பதை எப்படிச் சரியென்று சொல்ல முடிகிறது ?

அப்ப மகிந்தாவை ஆதரிப்போமா??

Link to comment
Share on other sites

சூறாவளி...

இந்த திரியை தொடங்கினபோது எதோ நாலு நல்லவிடயத்தை கதைக்கேக்க நானும் என்னுடைய கருத்தை சொல்லுவம் என்றுதான் இருந்தேன்..ஆனா இப்ப இது ஒரு கொமிக் சீரிஸ் மாதிரி இருப்பதால்..

உங்களிட்டையும் ௨ கேள்வியை கேட்பம் எண்டுதான் ....

எரிமலை

உங்கள் எல்லாகேல்விக்கும் என்னால் பதில் தரமுடியாது...

சிலதுகளை சொல்லலாம்...

மக்களை புலிகள்தான் சுட்டார்கள் என்று சொல்லும்போது அவர்களிடம் போய் கேள்விகேட்டு விசாரணை நடத்த நான் அங்கோ போகவில்லை.

எனது உறவினர்கள் எங்க இருக்கிறார்கள் என்று நீக்கள் கேட்டிர்கள்.... எனது எல்லா உறவினர்களும் சிறிலங்காவின் தென்பகுதிகளிலே இருக்கிறார்கள்.

ஊருக்குப்போனது தெரிந்தவர்களுக்கு உதவி செய்யத்தான்... நீங்கள் சொல்லும் ஆடம்பரப் பொருட்கள் எல்லாம் யாருக்கும் கொடுக்கவேண்டிய தேவை எனக்கு ஏற்படவில்லை.

தங்கள் தலைவிதியை நொந்தவர்கள்... ஈழம் போயிட்டோ அல்லது பிரபாகரன் போயிட்டார் என்டதுக்கோ எண்டு எனக்கு தெரியாது. வன்னில இருந்த பாவத்துக்கும் வேலை செய்த பாவத்துக்கும்... ஊரூராக அலைந்து கடைசியா முகாமில் அடைபட்டுக்கிடந்ததைத் தான் அவர்கள் நொந்தார்கள்.

அவர்கள் வெளியேவந்து சகஜமாக வாழும்போது என்னும் சொல்வார்கள்....

இதுக்குமேல் உமக்கு கேள்வி வந்தால் தனிமடல் அனுப்பவும்... முடிந்தால் ஒருக்கா எண்டாலும் அங்கு போய் நீங்களே நேரில் காணவும். இங்கே கதைப்பது சுலபம் அங்கே போய்பார்த்தால் தான் தெரியும் nடையஅயi.

Link to comment
Share on other sites

அப்ப மகிந்தாவை ஆதரிப்போமா??

யாரையும் ஆதரிக்காமல் இருப்பது கடினமோ...???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாடுகளில் வாழும் 8 லட்சம் தமிழர்க்காக இனியும் சிலுவை சுமக்க நாம் தயாரில்லை - இடம்பெயர்ந்த வன்னி மக்கள் !

சிலுவையோடு உங்களையும் சேர்ந்து சுமந்தவர்கள் வெளிநாட்டுத் தமிழர்கள் எண்டத மறக்கவேணாம்... தப்பி ஓட வழியிருந்ததாலலல தப்பி வந்திட்டம் நாங்கள்.... வழியில்லாததாலல நீங்கள் சிலுவை பற்றிக் கதைக்கிறீங்கள்.... நீங்களும் தப்பி ஓடுற நினைப்பில தான் இருந்தனீங்கள்.... இன்னும் இருக்கிறீங்கள்.... இதுக்குள்ள எங்களுக்காக சிலுவை சுமந்ததா அரைவேக்காட்டுத்தனமா சொன்னது நீங்களா இருக்காது எண்டு நினைக்கிறன். வெளிநாட்டுக்கு ஓடிவந்திட்டதால தமிழீழம் பற்றிக் கதைக்கிற உரிமை எங்களுக்கு இல்லையெண்டு சொல்லுறதுக்கு எந்தப் ப* உரிமையில்ல.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் தப்பி ஓடுற நினைப்பில தான் இருந்தனீங்கள்.... இன்னும் இருக்கிறீங்கள்...

அவையும் தப்பி ஓடுற நினைப்பிலதான் இருக்கினமென்றபடியால பிறகு ஆருக்கு தமிழீழம் கேட்கிறம்.. முற்றத்து மாமரத்துக்கும் பின்வளவு பனை மரத்திற்குமா? தனக்கென்றொரு நாடு வேணுமென்று ஆசைப்படுற அதே நேரம் அங்கை போய் நிரந்தரமா இருக்க விரும்பாத , என்னவென்றே விளங்கிக் கொள்ளமுடியாத ஒரு தினுசான இனம் நாங்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் போய் இருக்கிறனோ..... என்ர புருசன் போய் இருக்கிறானோ..... என்ர பிள்ளையள் போய் இருக்குதுகளோ...... இல்லையோ.... முற்றத்து மாமரத்துக்கோ பின்வளவு பனை மரத்திற்கோ.... எனக்கு தமிழீழம் வேணும்.... அது என்ர உரிமை.... அத கேக்குறதுக்கும் எனக்கு உரிமை இருக்கு..... அதப்பற்றி உங்களுகஇக என்ன கவலை???????? உங்களுக்கு தேவையில்லையெண்டால் பொ* போகவேண்டியதுதானே.......

Link to comment
Share on other sites

நான் எழுதிய சில விடயங்களைத் தெளிவாக்க விரும்புகிறேன்.

புலம் பெயர்ந்தவர்களுக்கு தமீழீழம் பற்றிக் கதைக்க விரும்ப உரிமை இருக்கிறது.அதே போல் களத்தில் இருப்பவர்களுக்கு தாங்கள் என்ன எப்ப எது செய்ய வேண்டும் என்று செய்வதற்கும் உரிமை இருக்கிறது.இதில் ஒருவர் மற்றவரைப் பார்த்து நீ இதைப் பற்றிக் கதைக்க முடியாது செயற்பட முடியாது என்று சொல்வதற்க்கு எதுவித உரிமையும் கிடையாது.ஒருவருக்கு ஒரு நியதி மற்வர்க்கு இன்னொரு நியதி கிடையாது.தமீழீம் என்னும் தேசம் காண்பதற்கான் தேவை இரண்டு பகுதிக்கும் இருந்தெ போது ஒரு நேர்கோட்டில் ஒரு தலமையின் கீழ் பயணித்தோம்.இன்று களத்தில் அது தற்காலிகமாக சாத்தியம் அல்லாது போய் விட்டது. நாளை அதற்கான் தேவை ஏற்படும்.ஏனெனில் தமீழம் என்பதை தமிழர்கள் வந்தடைததற்கான் காரணிகள் இன்னும் அங்கே இருந்து கொண்டிருக்கின்றன.

புலம் பெயர்ந்தவர்கள் எந்தப் போராட்ட வழிமுறைக் கைக்கொள்வது எவர் தலமை ஏற்பது என்பது பற்றி புலம் பெயர்ந்தவர்களே தீர்மானிக்கமுடியும். நாடு கடந்த அரசு மக்கள் சார்ந்தா அல்லது மேற்குலகு சார்ந்தா இயங்கப் போகிறது என்னும் சந்தேகத்தை தமிழ் நெற் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.இது பற்றி மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லி வருகிறது.இது நியாயமானதே , இன்று பல நாடுகள் தத் தம் நலன் சார்ந்தே தமிழ்ரை அணுகுகின்றன,இதில் நாங்கள் எமது நலன் சார்ந்து இயங்க வேண்டும்.

களத்தில் இருக்கும் எல்லோரும் புலம் பெயர விரும்பினாலும் எத்தினை பேரிற்கு புலம் பெயர்வதற்கான பொருளாதார வாய்புக்கள் இருக்கின்றன? இது எல்லோராலும் சாத்தியப் படாத ஒன்று.அவ்வாறு எல்லோரும் புலம் பெயர்ந்தால் தமீழதிற்கான தேவை என்பது இல்லாது போகும் என்பது உண்மையே.ஆனால் அது நிதர்சனத்தில் நடக்கப்போவதில்லை.ஏனெனில் மேற்குலகம் புலம் பெயர்தலைத் தடுப்பதற்க்கு மிகக் கடுமையான தடைகளை ஏற்படுத்தி உள்ளது.தடைகள் கூடும் போது புலம் பெயர்வதற்கான செலவும் அதிகரிக்கிறது.

Link to comment
Share on other sites

சாதி அடிப்படையில் பிரித்து, பிறகு பிரதேச அடிப்படையில் பிரித்து இப்ப புலம்பெயர் தமிழர் என்கிற பெயரில் பிரிப்பா? அடுத்தது, புலம்பெயர் தமிழருக்குள்ளே கனடாத் தமிழர், லண்டன் தமிழர் என்றும் வரும். எதுக்கும் தயாராகவே இருப்பம். :lol:

இனிமேலும் சிலுவை சுமக்கத் தயாரில்லை என்று ஒருத்தர் சொல்லுறார். அவர் என்ன தாயக மக்களால் அறுதிப் பெரும்பான்மையுடன் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதியா? ஜனநாயக அரசியலில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அரசியல் அபிலாசைகள். அவரவர் அதற்கேற்ப நடந்து கொள்கிறார்கள். அதை யாரும் குறைசொல்ல முடியாது.

புலம்பெயர் தமிழர் போராடச் சொன்னால் தாயக மக்கள் உடனே போராடப் போவினமா? இதைவிட தாயக மக்களை சிந்தனையற்றவர்களாகச் சித்தரிக்கமுடியாது.

Link to comment
Share on other sites

கலைஞன்,

உண்மை தான் இது திட்டமிட ரீதியில் சிறிலங்கா படைப் புலானாய்வுப் பிரிவினராலும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் இபிடிபி ஒட்டுக்குழுவாலும் வெளியிடப்பட்ட பிரசுரம்.இத்தகைய திட்டமிட்ட பிரச்சாரத்திற்கு அரசியற் தெளிவற்றவர்கள் எடுபடுவார்கள்.மக்களின் உண்மையான விருப்பம் என்ன என்பது வரும் நாட்கள் வருடங்களில் தெளிவாகும்.அப்போது இதுவும் கடந்து போகும்.

நானும் வன்னியில் இருந்து யாழ் வந்தோருடன் கதைத்து உள்ளேன்.பலரும் தாம் மீண்டும் வன்னி சென்று வாழ்வதையே விரும்புகிறார்கள்.ஏனெனில் அவர்கள் வன்னியில் வளமாகவே வாழ்ந்தார்கள்.சுதந்திரமாக வாழ்ந்த மக்களிடம் அதற்கான தாகம் தொடர்ந்து இருக்கவே செய்யும்.வன்னியில் மக்கள் இங்கே சொல்வதைப்போல் சிலுவை சுமக்க வில்லை.எந்த மக்கள் போராடினார்களோ அந்த மக்களிடமே அரசியல் அதிகாரம் இருந்தது.புலிகளின் ஆட்சியின் கீழ் சமூக சமத்துவம் நிலவியது.வன்னியில் புலிகளின் ஆட்சியின் கீழ் புலம் பெயர்ந்தவர்கள் அதிகாராம் பெற்று இருக்கவில்லை.புலம் பெயர் தேச நடவடிக்கள் எல்லமுமே வன்னியில் இருந்தே நெறிப்படுத்தப்பட்டன. நிலமை அவ்வாறு இருந்த நிலையில் புலம் பெயர் மக்களுக்காக வன்னி மக்கள் சிலுவை சுமந்தனர் என்று சொல்வது எவ்வகையில் நியாயமானாது? அதற்கான வழியை புலிகள் திறந்து வைத்திருக்கவில்லை.ஆனால் இன்று நிலமை தலைகீழாக யாழில் உள்ளது.அங்கு பழைய சாதிய வர்க்கப் பிரிவினைகள் மேலோங்கி இருக்கின்றன.சமூகச் சீரழிவு என்பது சிறிலங்காப் படையப் புலானாவுப் பிரிவினரால் ஒரு யுக்தியாகாப் பாவிக்கப்பட்டு வருகிறது.இவற்றை எல்லாம் கடந்து வெளிவரக் கூடிய தெளிவு மக்களிடம் இருக்கிறது என்றே நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் ஒற்றுமையை உடைப்பதற்கு சிங்கள புலனாய்வு தமது வேலையை தொடங்கி விட்டது.. நாங்களும் இனித்தூபம் போட்டு வளர்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தமிழர் போராடச் சொன்னால் தாயக மக்கள் உடனே போராடப் போவினமா? இதைவிட தாயக மக்களை சிந்தனையற்றவர்களாகச் சித்தரிக்கமுடியாது.

அப்ப தேர்தலில் பங்கெடுப்பது/ புறக்கணிப்பது அல்லது இன்னாரைத்தான் ஆதரவளிக்க வேண்டும் என்று சொல்லுவது எந்தவகையில் அடங்கும்??

தேர்தல் முடிவு முடிந்த பிறகு இப்படித்தான் இன்னார் நடப்பார் /அவர் இவரை பேய்க்காடுவார் என்று சொல்லுவது எந்தவகை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்தில் இருக்கும் எல்லோரும் புலம் பெயர விரும்பினாலும் எத்தினை பேரிற்கு புலம் பெயர்வதற்கான பொருளாதார வாய்புக்கள் இருக்கின்றன?

அப்படிப் புலம் பெயரமுடியாத தமிழனுக்கு இருக்கவே இருக்கிறது ஒரு தீர்வு: சிங்களவனோடு இரண்டறக் கலந்து சிங்களவனாகவே மாறிவிடுதல். உதாரணம்: நீர்கொழும்பு.

Link to comment
Share on other sites

யாழில் எழுதி நான் என்ன விமோசனமா தேடப்போகின்றேன்.எனக்கு தெரிந்ததை நடந்ததை கொஞ்சம் சொல்லலாம் என்றால் பக்கிறவுண்ட் செக்சப் வேறு செய்ய வேணும் போல கிடக்கு.

ஒருக்கா கொஞ்சம் சொல்லுகின்றேன். 83 கலவரம் நடந்த நேரத்தில் லண்டன் சிடியில் ஒரு 100 பேருக்கு கிட்ட கூடினோம்.ஆளுக்கொரு ஜ்டியா சொன்னார்கள்.லண்டனில் இருக்கும் சிங்களவருக்கு அடி போட வேண்டும்,சிறி லங்கா பொருட்களை புறக்கணிக்க வேணும்(அப்பவே).இயக்கத்திற்கு காசு சேர்க்க வேணும்,(அப்ப ஒரு இயக்கமும் பெரிதாக இருக்கவில்லை),நாட்டுக்கு போய் போராட வேண்டும்.அந்த நூறுபேரீல் எதற்கும் பலர் துணிந்திருந்தார்கள் நாட்டிற்கு போவதை விட.எனது அண்ணர் கூட நண்பர்களுடன் போய் இரவு வேலையால் வந்த சிங்களவர்களை அடித்துவிட்டு வந்திருந்தார்.அவரை நான் பேசினேன் வெட்கமமயில்லை வேலையால் களைத்து வீட்டிற்கு போகும் அப்பாவிகளை அடிக்க என்று. அண்ணர் உட்பட எனது அனைத்து நண்பர்களும் இப்பவும் லண்டனில் அந்த மாதிரி இருக்கின்றார்கள்.இடக்கிடை கொடி பிடித்தபடி.

டெல்கியில் ஏறாத எம்பசியெல்லாம் ஏறி எமது பிரச்சனையை சொல்லித்திரிந்து,(டெல்கியில் 84 களில் நாம் செய்ததை தொடர்ந்து செய்திருந்தால் எப்பவோ எமக்கு ஒரு விடுதலை கிடைத்திருக்கும்) அகதிமுகாமெல்லம் அலைந்து திரிந்து முடிந்த மட்டும் வெளிநாட்டு மிசன்களின் உதவியெடுத்து அந்த அகதிகளுக்கு உடையும் ,உறைவிடவும்(இருக்க இடம் எடுத்துக் கொடுக்க பாட்டபாடு வேறு கதை)எடுத்துக்கொடுத்து வந்த எனக்கு இவர்கள் யார் என் பின் புலம் செக் பண்ண.

தேவையெனில் எனது பேர் ,ஊர்,விலாசாமும் எழுத நான் தயார்.நான் ஒரு கொலையும் செய்தவனில்லை இவர்களுக்கு பயப்பட.

எமக்கான ஒரு தீர்வு வரும்வரை நாம் போராடுவோம் வழியில் வரும் இடர்களை புறக்கணித்த படியே.இடைகிடை சொக்கிலேற் கேட்டும் சிறுவர்களுக்கு அதையும் கொடுப்போம் அவர்களையும் மதித்தபடியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்தில் இருக்கும் எல்லோரும் புலம் பெயர விரும்பினாலும் எத்தினை பேரிற்கு புலம் பெயர்வதற்கான பொருளாதார வாய்புக்கள் இருக்கின்றன? இது எல்லோராலும் சாத்தியப் படாத ஒன்று

ஆக பொருளாதார வளம் இருந்தவர்கள் போருக்கு வெளியே வந்துவிட்டார்கள், அற்றவர்கள் அம்பிட்டுக் கொண்டார்கள். நம்மிடையேயான வர்க்கப் பிரிப்பு தெரிகிறதல்லவா?

மற்றது புலம் பெயர விரும்பினாலும் எத்தினை பேரிற்கு புலம் பெயர்வதற்கான பொருளாதார வாய்புக்கள் இருக்கின்றனவா என்ற கேள்வி என்னை முகத்தில் அறைகின்றது. புலம்பெயர்ந்தவர்கள் தமது பொருளாதாரத்தைப் பயன்படுத்தி தமது உறவுகளை அழைத்து விட்டார்கள். மற்றவர்களுக்கு நல்லவேளையாக அந்த வாய்ப்பு இல்லாத படியால் அவர்கள் வரமுடியாது. அதனால் தமிழீழத்திற்கான தேவையும் உள்ளது. அப்படித்தானே..

பூனைகுட்டி தமிழீழம் உங்கடை விருப்பம் அல்லது உங்களுக்கு வேணும் என்பது உங்கட விருப்பம். ஆனா உங்கடை விருப்பத்திற்காக இன்னொருவன் துயரப்பட முடியாது.

45 லட்சம் மக்களுக்கான விடுதலைக்கான பாதையின் பாரம் - கடைசியில் 3 லட்சம் பேரின் தோளிலும் முதுகிலும் வந்து பொறிந்த போதே போராட்ட சமநிலை குலைந்து விட்டது.

முதலும் சொன்னதுதான்.

45 லட்சம் மக்களில் ஆயுதம் தூக்கியவர்கள் 45 ஆயிரம் பேர்

யுத்தம் காரணமாக வெளியேறியவர்கள் 10 லட்சம் பேர்..

சுதந்திரத்துக்குப் போராடும் தகமையுள்ள இனமென்று சொல்லிக் கொள்ள ஏதாவது முகாந்திரம் உள்ளதா என்ன....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் வாழும் 8 லட்சம் தமிழர்க்காக இனியும் சிலுவை சுமக்க நாம் தயாரில்லை - இடம்பெயர்ந்த வன்னி மக்கள்

சரி இந்த தலைப்பை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.களத்து மக்கள் புலத்து மக்களின் சொல்லைக் கேட்க மாட்டார்கள் என்பதே அதன் சாராம்சம்.இப்ப களத்து மக்களின் பிரதிநிதிகளாக ததேகூட்டமைப்பை அல்லது டக்களசை அல்லது கருணாவை அல்லது பிள்ளையானைஅல்லது சித்தார்த்தனை அல்லது ஆனந்தசங்கரியை அல்லது வரதர்அணியை அல்லது..............................................சரி குழப்பத்ததை விட்டு கடந்த பொதுத்தேர்தலில் தமிழ்மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ததேகூட்டமைப்பை பிதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு அவர்களின் முடிவுக்கு பெரும்பாலான மக்கள் கட்டுப்பட்டு சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்கட்டும்.அதை பெரும்பாலான புலத்துத் தமிழர்களும் ஆதரிக்கிறார்கள் என்பதே உண்மை.அதாவது தாயகத்தில் வாழும் மக்களின் முடிவுக்கு(அரசியல் செயற்பாட்டுக்கு) புலத்திலுள்ள பெரும்பாலான மக்கள் ஆதரவளிக்கிறார்கள் என்பதே புலம் பெயர் ஊடகங்களுக்கூடாக அறியக் கூடியதாக இருக்கிறது.நாளை தாயகத் தமிழரின் போராட்ட வடிவமானது மாற்றம் கண்டால் அதற்கும் புலத்திலுள்ள தமிழர்கள் ஆதரவாகவே இருப்பார்கள்.தாயக மக்களும் புலத்து மக்களும் வேறு வேறல்லர்.உதிரப் பிணைப்புக்கள்.)இந்த தலைப்பிலான துண்டுப் பிரசுரம் மகிந்தவுக்கு ஆதரவாக வெளியிடப் பட்டிருந்தாலும் வேறொரு கோணத்தில் சரத்திற்கும் ஆதரவானதாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலுவையோடு உங்களையும் சேர்ந்து சுமந்தவர்கள் வெளிநாட்டுத் தமிழர்கள் எண்டத மறக்கவேணாம்... தப்பி ஓட வழியிருந்ததாலலல தப்பி வந்திட்டம் நாங்கள்.... வழியில்லாததாலல நீங்கள் சிலுவை பற்றிக் கதைக்கிறீங்கள்.... நீங்களும் தப்பி ஓடுற நினைப்பில தான் இருந்தனீங்கள்.... இன்னும் இருக்கிறீங்கள்.... இதுக்குள்ள எங்களுக்காக சிலுவை சுமந்ததா அரைவேக்காட்டுத்தனமா சொன்னது நீங்களா இருக்காது எண்டு நினைக்கிறன். வெளிநாட்டுக்கு ஓடிவந்திட்டதால தமிழீழம் பற்றிக் கதைக்கிற உரிமை எங்களுக்கு இல்லையெண்டு சொல்லுறதுக்கு எந்தப் ப* உரிமையில்ல.....

தாயின் கற்பை நாம் சந்தேகபட முடியுமா? இதை யார் சொல்லி இருப்பார்கள் என்று அனைவருக்கும் தெரியும், இதுக்கு என்று சம்பளம் கொடுத்து இங்க கனபேரை வச்சு இருகினம் அவயளிண்ட உருவாகம் இது. :lol:

Link to comment
Share on other sites

அப்ப தேர்தலில் பங்கெடுப்பது/ புறக்கணிப்பது அல்லது இன்னாரைத்தான் ஆதரவளிக்க வேண்டும் என்று சொல்லுவது எந்தவகையில் அடங்கும்??

தேர்தல் முடிவு முடிந்த பிறகு இப்படித்தான் இன்னார் நடப்பார் /அவர் இவரை பேய்க்காடுவார் என்று சொல்லுவது எந்தவகை...

உங்களுக்கு நான் எழுதியது விளங்கவில்லை போல. இன்னாரைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று நான் எங்கும் சொன்னதாக நினைவில்லை. இன்னாரை ஆதரித்தால் இன்ன இன்ன நன்மைகள் "வரலாம்" என்று எழுதியதாகத்தான் ஞாபகம். :lol:

அதேபோல இன்னார் இப்படி நடப்பார் / அவர் இவரைப் பேய்க்காட்டுவார் என்று எழுதியதாகவும் ஞாபகமில்லை. இன்னார் வர சாத்தியம் உண்டு / இன்னார் பேய்க்காட்ட சந்தர்ப்பம் உண்டு என்று எழுதியதாகவே ஞாபகம். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டுதானே..! :(

நிகழ்தகவு.. நிகழ்தகவு..! :blink:

Link to comment
Share on other sites

வெளிநாடுகளில் வாழும் 8 லட்சம் தமிழர்க்காக இனியும் சிலுவை சுமக்க நாம் தயாரில்லை - இடம்பெயர்ந்த வன்னி மக்கள்

சரி இந்த தலைப்பை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.களத்து மக்கள் புலத்து மக்களின் சொல்லைக் கேட்க மாட்டார்கள் என்பதே அதன் சாராம்சம்.இப்ப களத்து மக்களின் பிரதிநிதிகளாக ததேகூட்டமைப்பை அல்லது டக்களசை அல்லது கருணாவை அல்லது பிள்ளையானைஅல்லது சித்தார்த்தனை அல்லது ஆனந்தசங்கரியை அல்லது வரதர்அணியை அல்லது..............................................சரி குழப்பத்ததை விட்டு கடந்த பொதுத்தேர்தலில் தமிழ்மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ததேகூட்டமைப்பை பிதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு அவர்களின் முடிவுக்கு பெரும்பாலான மக்கள் கட்டுப்பட்டு சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்கட்டும்.அதை பெரும்பாலான புலத்துத் தமிழர்களும் ஆதரிக்கிறார்கள் என்பதே உண்மை.அதாவது தாயகத்தில் வாழும் மக்களின் முடிவுக்கு(அரசியல் செயற்பாட்டுக்கு) புலத்திலுள்ள பெரும்பாலான மக்கள் ஆதரவளிக்கிறார்கள் என்பதே புலம் பெயர் ஊடகங்களுக்கூடாக அறியக் கூடியதாக இருக்கிறது.நாளை தாயகத் தமிழரின் போராட்ட வடிவமானது மாற்றம் கண்டால் அதற்கும் புலத்திலுள்ள தமிழர்கள் ஆதரவாகவே இருப்பார்கள்.தாயக மக்களும் புலத்து மக்களும் வேறு வேறல்லர்.உதிரப் பிணைப்புக்கள்.)இந்த தலைப்பிலான துண்டுப் பிரசுரம் மகிந்தவுக்கு ஆதரவாக வெளியிடப் பட்டிருந்தாலும் வேறொரு கோணத்தில் சரத்திற்கும் ஆதரவானதாகும்.

அதானே.. தாயகத் தமிழரின் பிரதிநிதிகள் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர். அவர்கள் சொல்லுகிறார்கள் சரத்தை ஆதரிக்கச் சொல்லி. ததேகூட்டமைப்பினர் வழுக்கிவிட்டார்கள் என்று தெரிந்தால் தாயக மக்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளப்போகிறார்கள். பிறகு நாங்கள் ஏன் குத்திமுறிய வேணும்? :(

ஒருவேளை ததே கூட்டமைப்பு மகிந்தவை ஆதரித்திருந்தால், புலம்பெயர் தமிழர்கள் மகிந்தவுக்கு ஆதரவு என்கிற ரீதியில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டிருக்கும். இதெல்லாம் அரசியலில சாதாரணம்தானே..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள் நாட்டுப்போர் முடிந்தபின்பும் வங்குரோத்து நிலமையிலிருந்து மீள் முடியாமல் சிக்குண்டிருக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கை போகவேண்டும் என்ற உண்மையான எண்ணத்தோட இலங்கைக்கு வெளி நாட்டுச்செலாவணியை ஈட்டித்தரும் புலத்தமிழரை பிரிக்கும் அற்புதமான திட்டம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராமநாதன் அருணாசலம் காலத்தில் இருந்தே பிழைகள் விடப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.  இவை எல்லோருக்கும் தெரிந்தவைதான். 
    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.