Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்துப் பொறியியப் பொலிகாளை ஒருத்தரின் இன்றையவிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தமிழ்ச் சமூகத்தினது குறிப்பாக யாழப்பாணத்துச் சாதி வேளாளர்களது திமிர்தனம் அவர்களிடையே நடைபெறும் திருமணப் பேச்சுக்காலகளில் றடைபெறும் பேரம்பேசல்மூலமே அதிகமாக வெளிப்படும் இவை காலாகாலமாக நடைமுறையில் இருந்துவந்தாலும் தற்போதைய காலக்கட்டத்தில் பலமபொயர் தேசத்துப் புதுப்பணவரவு மற்றும் வன்செயல் பணக்காரர் ஆதல் போன்ற காரணங்களால் தமிழர் மத்தியில் புதுமணப்பொலிகாளைகளது விலையேற்றம் யாழ்ப்பாணக் காணிகளது விலையேற்றம்போல் ஏறுமுகமாகவே காணப்படுகின்றது. உதாரணமாக நான் ஓரிரு தினங்களுக்கு முனபு அறிந்தவதத்தில் ஒரு யாழ்ப்பாணத்துப் பொறியியல் பொலிகாளையது திருமண விலை விபரம்,

சீதனம் ஐந்துபோடி ரூபாய் அதைவிட கொழும்பில் இரண்டுகோடி பெறுமதியில் வீடு பொறியியலாளராகப் படித்துப்பட்டம்பெற்ற பெண்.

சாடைமாடையாய் இன்னுமெருவிடையமும் கேள்விப்பட்டன் பெட்டையின்ர ஆம்பிளைச் சகோதரங்கள் எல்லாம் இங்கிலாந்திலாம். அவர்களுக்கு எப்பிடிப்பணம் வந்தது? கள்ளமட்டை அடித்தவர்களோ அன்றேல் ஊரை ஏமாத்தி வாயில் போட்டுட்டு இப்போ பரமேஸ்வரனைப் பழிசொல்லினமே அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களோ யாருக்குத் தெரியும். திரியைக் கொழுத்திப்போட்டுட்டன் இதுக்குமேல் நூராமப் பாத்துக்கொள்ளறது உங்கடை கெட்டித்தனம். கதையோடை கதை "பொறியியல் பொலிகாளையின்ர" நிலைமையை ஒருக்கால் நினைக்கும்போது பரிதாபமும் கூட வருகுது.

... வேளாளர்களது திமிர்தனம் ..

... சீதனம் ஐந்துபோடி ரூபாய் அதைவிட கொழும்பில் இரண்டுகோடி பெறுமதியில் வீடு ....

பொய்யா? உண்மையா? நம்பமுடியவில்லை!

அல்லது பாதிக்கப்பட்டவர் நீங்களோ?

இல்லையெனின் - சீதனக் கொடுமைக்கும் வெள்ளாளரின் சாதி திமிருக்கும் முடிச்சுப்போடும் நீங்கள் - உங்கள் தனிப்பட்ட விரோதத்தை சோடித்த கதைகள் மூலம் சந்திக்கு இழுக்கும் முயற்சியோ?

அதுசரி - நீங்கள் என்ன சாதி மோனே? சீதனம் இல்லாத உங்கள் சாதியை தெரிந்து கொண்டால் எல்லாருக்கும் நல்லது - இல்லையோ?

எல்லோரையும் ஒரே அளவுகோல் கொண்டு அளவிடுவது சரியல்ல. நல்லவர்களும் இருக்கிறார்கள். :lol: :lol:

வரதட்சணை கொடுப்பதற்கு தயாராகவிருந்தால் கேட்கத்தான் செய்வார்கள்.அது இருக்கட்டும் சாதிக்கும் சீதணம் வாங்குவதற்கும் என்ன சம்பந்தம்.தயவு செய்து உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளை வெளியே தீர்த்துக் கொள்ளுங்கள்.முள்ளிவாய்க்காலில் தப்பியவர்களிடம் போய்க் கேளுங்கள், என்ன சாதியென்று அவர்கள் சொல்வார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பத்தவைச்சிட்டியே பரட்டை

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரையும் ஒரே அளவுகோல் கொண்டு அளவிடுவது சரியல்ல. நல்லவர்களும் இருக்கிறார்கள். ^_^:(

நன்றிகள் ஈழத்திருமகன்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரையும் ஒரே அளவுகோல் கொண்டு அளவிடுவது சரியல்ல. நல்லவர்களும் இருக்கிறார்கள். ^_^:(

தேடியும் இதுவரை கண்ணில் தட்டுப்படவில்லை!

....

சாடைமாடையாய் இன்னுமெருவிடையமும் கேள்விப்பட்டன் பெட்டையின்ர ஆம்பிளைச் சகோதரங்கள் எல்லாம் இங்கிலாந்திலாம். அவர்களுக்கு எப்பிடிப்பணம் வந்தது? கள்ளமட்டை அடித்தவர்களோ அன்றேல் ஊரை ஏமாத்தி வாயில் போட்டுட்டு இப்போ பரமேஸ்வரனைப் பழிசொல்லினமே அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களோ யாருக்குத் தெரியும்.

... நிலைமையை ஒருக்கால் நினைக்கும்போது பரிதாபமும் கூட வருகுது.

வணக்கம்!

முதலாவது, இங்கிலாந்தில் இருப்பவர்கள் எல்லாரும் கள்ளமட்டை அடித்தவர்களோ இல்லை, ஊரை ஏமாத்தி வாயில் போட்டுட்டு இப்போ பரமேஸ்வரனைப் பழிசொல்லினமே அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்ககத் தான் இருக்க வேணும் என்பது இல்லை.

பிறந்த மண்ணையும், பெற்றோரையும், உறவினர்களையும், பழகிய நண்பர்களையும் விட்டு இங்கு வந்து, வாரத்தில் ஏழு நாளுமே விடுமுறை இல்லாமல், குடும்பத்துக்காக ஓடாகத் தேயும் பலர் இன்னும் இருக்கிறார்கள்.

இரண்டாவது, பரமேஸ்வரனின் உண்ணாவிரதத்தை ஏன் உங்கள் சொந்தப் பிரச்சனைக்கு இழுத்துக் காரணம் காட்டுறீர்கள்? அனுதாபம் தேடிக் கொள்ளவா? உங்கள் நிலைமை தான் கவலைக்கிடமாக இருக்கிறது...

அதிலும் 'குறிப்பாக யாழப்பாணத்துச் சாதி வேளாளர்களது திமிர்தனம்...' என்னும் வார்த்தைப் பிரயோகத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

தைரியம் இருந்தால் நேரடியாகவே யார் என்று சொல்லாம் தானே? அதுக்கு ஏன், இங்கிலந்தில இருப்பவர்கள், திமிர் பிடிச்ச வேளாளர் சாதி அது இது என்று???????

பேசாமல் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவர்களையும் அல்லவா சீண்டுறது மாதிரி இருக்கு...

ஈழதிருமகன் சொன்னது போல 'எல்லோரையும் ஒரே அளவுகோல் கொண்டு அளவிடுவது சரியல்ல.'

  • கருத்துக்கள உறவுகள்

.

யாழ்ப்பாணத்துப் பொறியியப் பொலிகாளை ஒருத்தரின் இன்றையவிலை

சீதனம் வாங்கும் பழக்கம் தனிய யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட சிலர் தான் வாங்குகின்றார் என்று கட்டுரையாளர் சித்தரிக்க முயல்வது , தவறு.

ஈழத் தமிழர்களும், இந்திய தமிழர்களும் சீதனம் வாங்கித்தான் கலியாணம் செய்கின்றார்கள் என்பதை இன்னும் அறியாமல் இருக்கின்றார் போல் தெரிகின்றது. அல்லது அவர் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக வேண்டுமென்றே மற்றவர்களை சாட வேண்டும் என்று நினைக்கின்றார், என்று எண்ண வேண்டியுள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் என்றால் சாதகப் பொருத்தம், சாதி, சீதனம் எல்லாம் இருக்கும்தானே. எனினும் சீதனக்கொடுமையால் ஈழத்தமிழ் பெண் எவராவது எரியூட்டப்பட்டதாக நான் இதுவரை அறியவில்லை.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

தேடியும் இதுவரை கண்ணில் தட்டுப்படவில்லை!

ஒவ்வொருவருக்குள்ளும் இவர்கள் இருக்கிறார்கள்.

சீதனம் வாங்குவது என்பது நுணுக்கம் நிறைந்த சமூகப் பிரச்சனை, அதனை வெறும் சாதிப் பிரச்சனையாக பார்ப்பது சரியல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து. கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களிடம் கூட இந்த சீதனப் பிரச்சனை பெரிய அளவில் இருக்கும் போது குறிப்பிட்ட சாதி சார்ந்து பார்ப்பது தவறு

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் நிழலி

குற்றஞ்சாட்டப்பட்ட பகுதியினர் எவராவது வந்து எழுதினால் வெட்டு விழுமே......?

உண்மைதான் நிழலி

குற்றஞ்சாட்டப்பட்ட பகுதியினர் எவராவது வந்து எழுதினால் வெட்டு விழுமே......?

வெட்டு அநாகரீக எழுத்துக்குத்தான்

தேடியும் இதுவரை கண்ணில் தட்டுப்படவில்லை!

இப்ப சொல்லுங்கோ? ^_^

என்னப்ப ஒருபக்கத்தோட கருத்து யுத்தம் நிக்குது நானும் இந்த சாதி தலைப்பை வைச்சு யாழ்களத்துள்ளே எங்கட சாதிக்காரரும் அல்லது சொந்தக்கார்ர் யாராவது நிக்கினமோ என்று கண்டு பிடிக்கலாம் என்றால் யாரும் பிடி கொடுக்காம பேசுகிறார்கள் சில வேலை எல்லாரும் ஒரே சாதியோ( ஆண்சாதி)?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணத்திற்க்கு சீதனம் வாங்குவது இந்திய தமிழர்களிடம் மட்டும் அல்ல இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.....

ஆனால் " யாழ்ப்பாணத்துப் பொறியியப் பொலிகாளை ஒருத்தரின் இன்றையவிலை" என்பதற்கும் தமிழ் நாட்டில் சீதனம் வாங்குவதற்கும் என்ன சம்பந்தம் என்று என்று தெரியவில்லை......

சாதித் திமிர் என்னும் வார்த்தைப் பிரயோகம் இன்றைய நடைமுறைக்கு எவ்வளவு பொருத்தமானது ?

சாதிகளைப் பற்றிப் பேசும் போது இவ்வளவு பரந்து விரிந்த உலகத்தில் நாம் இன்னும் கிணற்றுத் தவளைகளாகவே இருக்கின்றோம் என்ற உணர்வு தான் ஏற்படுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத்தமிழ்ச் சமூகத்தினது குறிப்பாக யாழப்பாணத்துச் சாதி வேளாளர்களது திமிர்தனம்

மற்ற சாதிக்காரரிட்டை திமிர்க்குணம் இல்லையாக்கும் :unsure:

மற்ற சாதிக்காரரிட்டை திமிர்க்குணம் இல்லையாக்கும் :lol:

நாங்கள் என்களின்ட சாதியைவிட(சாதி எது என்று சொல்லமாட்டன்'..நான் தலித் என்று நீஙகள் நினைக்கிறீயள் எனக்கு விளங்குது)கீழ உள்ள சாதிக்கு என்களின்ட தீமிரை காட்டுவோம் :unsure::unsure::D

  • கருத்துக்கள உறவுகள்

இத்தலைப்புக்குரிய செய்தி உண்மையோ தெரியாது ஆனால் நானும் இவ்வாறான யாழ்ப்பாண இஞ்சுனியர் மாப்பிள்ளைகள் மிடுக்காக சீதனம் கேட்டு கொழும்பில் உள்ள குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ் வர்த்தகர்களின் பெண்களை குறிவைத்துச் செயற்பட்டமையை அறிந்திருக்கிறேன். பெயர் விபரங்களை வெளியிடுவது உசிதமானதல்ல என்பதால் தவிர்த்துக் கொள்கின்றேன். குறித்த சம்பவம் 2006ம் ஆண்டு வாக்கில் நடந்தது. மிகப்பெரிய பணப்பட்டுவாடாவோடு குறித்த மணமகன் மணமகளை திருமணமும் செய்து கொண்டார். :lol:

சாதித் திமிர் என்னும் வார்த்தைப் பிரயோகம் இன்றைய நடைமுறைக்கு எவ்வளவு பொருத்தமானது ?

சாதிகளைப் பற்றிப் பேசும் போது இவ்வளவு பரந்து விரிந்த உலகத்தில் நாம் இன்னும் கிணற்றுத் தவளைகளாகவே இருக்கின்றோம் என்ற உணர்வு தான் ஏற்படுகின்றது.

நீங்கள் யதார்த்தத்திற்கு எட்ட நிற்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

உலகம் பூரா பணக்காரன் ஏழை.. வெள்ளையன் கறுப்பன்.. இந்து முஸ்லீம் கிறிஸ்தவம்.. என்று மனிதருக்குள் மனிதப் பாகுபாடுகள் பல வடிவங்களில் படர்ந்து போய் உள்ளன.

எம்மவர்கள் இன்னும் சாதியில் ஊறித்தான் கிடக்கின்றனர். கடந்த போராட்ட காலம் சாதியத்தின் மந்த காலம் என்றால் இப்போ அது தங்கு தடையின்றி துளிர்விடும் காலமாகி விட்டிருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களில் நடைபெற்ற விடையம் ஒன்றினைக் குறிப்பிட விரும்பகிறேன். தென்மராடசிப் பகுதியில் அப்போது சாதிவெறி ஆழமாக வேர்விட்டிருந்த காலம். பாடசாலைக்குச் சென்ற சிறுபான்மை இனத்தவர்களது பள்ளிப் பத்தகங்களை மேலசாதியினர் பறித்துத் தெருவில் மலையாகக் குவித்து நெருப்பிட்டனர். இச்சம்பவம் நடந்து பலவருடங்களின் பின்பு யாழ்ப்பாணம் நூல்நிலையம் எரிக்கப்பட்டது, அதன்போது கருத்து வெளியிட்ட எழுத்தாளர் டானியல் அவர்கள் நீங்கள் அப்போது செய்த தவறினிற்கு இப்போது தண்டனை பெறுகிறீர்கள் என. மாறாக யாழ்ப்பாணத்து சாதித்திமிர் என்பது கடந்த காலங்களில் சிறுபானமையினரைப் பாதித்தது ஆனால் இப்போது அது அவர்களையே பாதிக்கின்றது என்பதை யாராவது யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் பயணம் செய்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். இவர்களது பாழாய்ப்போன சாதிவெறி எத்தனை இளம்பெண்களது திருமணத்திற்குத் தடையாக இருக்கின்றது என்பது இங்கே யாருக்காவது தெரியுமா? அதைவிட மாடு அவிழ்க்குமாப்போல் மாப்பிளைகளை கொழுத்த சீதனம் கொடுத்து தங்கள் பெண்பிள்ளைகட்கு திருமணம் செய்து வைப்பதால் அப்படி சீதனம் இல்லாது எத்தனை பெண்கள் அடுப்புப்புகைக்குள் அடங்கிப்போயுள்ளார்கள் என்பதை யாராவது அறிவீர்களா? காலதாமதமான திருமணங்களால் பிறக்கின்ற குழந்தைகள் எத்தனையோவிதமான உபாதைகளுடன் பிறக்கின்றதே இவைகள் உங்கட்குத்தெரியுமா? இதன் ஆதங்கமே என்னால் இப்படி ஒரு திரியினை இடுகை செய்ய வைத்தது. ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம் நான் குறிப்பிட்ட திருமண சம்பந்தம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் உண்மையிலேயே நடைபெற்றது சம்பந்தப்பட்டோரது பாதுகாப்பின் காரணமாக விவரங்கள் வெளியிட முடியாது. மற்றும்படி எந்த ஒரு சாதி அமைப்பினரையும் தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பது என்னுடைய நோக்கமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் எனக்குத் தெரிந்த ஒருவர் மேடைகளில், தெரிந்தவர்களுடன் உரையாடும் போது சீதனம் வாங்குபவர்கள் கோழைகள் என்று சொல்லுவார். ஆனால் தன்னுடைய மகனுக்கு இவ்வளவு சீதனம் வைத்தால் தான் கல்யாணப் பேச்சுவார்த்தை நடக்கும் என்றார். தனது மகள்மாருக்கு சீதனம் கேட்காதவர்களைப் பார்த்துத்தான் கட்டி வைத்தார். அவரது வீட்டுக்கு ஒரு சட்டம் ,மற்றவர்களுக்கு வேற சட்டம்.

உங்களுக்கு இருப்பது சாதிபற்றாக்குறையா?

அல்லது

சீதனப்பற்றாக்குறையா?

உப்பிடித்தான் எனக்குத் தெரிந்த ஒருவர் மேடைகளில், தெரிந்தவர்களுடன் உரையாடும் போது சீதனம் வாங்குபவர்கள் கோழைகள் என்று சொல்லுவார். ஆனால் தன்னுடைய மகனுக்கு இவ்வளவு சீதனம் வைத்தால் தான் கல்யாணப் பேச்சுவார்த்தை நடக்கும் என்றார். தனது மகள்மாருக்கு சீதனம் கேட்காதவர்களைப் பார்த்துத்தான் கட்டி வைத்தார். அவரது வீட்டுக்கு ஒரு சட்டம் ,மற்றவர்களுக்கு வேற சட்டம்.

ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி குழந்தாய் என்ற பழமொழி நல்ல அறிந்தவர் போல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.