Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2050இல் Mrs. & Mr. அரண் அருந்ததி

Featured Replies

பகுதி (1)

(படபடப்பாக திருமதி அருந்ததி வீட்டினுள் நுழைகிறார்.)

அருந்ததி: என்ன வேலை.. என்ன வேலை..

(தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அரண், சத்தத்தை குறைக்கிறான்.)

அரண்: இன்றைக்கு நேரத்துக்கு வந்திட்டீங்கள்.. உடம்புக்கு ஏதாலும் சுகமில்லையே?

அருந்ததி: தொடங்கியாச்சா.. இந்த விசாரணைக்கொன்றும் குறைச்சலில்லை.. நேரத்துக்கு வந்தாலும் விசாரணை.. பிந்தி வந்தாலும் விசாரணை.. மனுசி என்ன பாடுபட்டுப்போட்டு வாறாள் என்ற கவலை இல்லை.. வீட்டில இருந்து ரீவிய பாக்கிறதும், அதில போற சீரியல்ல வாறவங்களைப் பாத்து அழுறதும்தானே உம்மடை வேலை.. வேறை என்ன வேலை இங்கை...?

அரண்: ஏன் என்னோடை கோபிக்கிறீங்கள்.. நான் இப்ப என்ன செய்யேலை எண்டு எரிஞ்சு விழூறியள்..?

அருந்ததி: சரிசரி.. போய் ஒரு 'கப்' கோப்பி கொண்டு வாரும்..

(அருண் சமையலறைக்குச் சென்று கோப்பியுடன் வருகிறான்.)

அருந்ததி: தூ.. இன்னும் உருப்படியா கோப்பி போடத் தெரியேல.. கலியாணங்கட்டி பத்து வருடமாகுது.. என்ரை தலையெழுத்து.. அம்மா கொண்டுபோய் போயும் போயும் உன்னட்டை...

அரண்: உங்களுக்கு என்னைக் கண்டாலே பிடிக்கேல.. வரவர கண்டபடி திட்டுறியள்.. உங்களிட்ட வாழ்க்கைப்பட்டு என்னத்தைக் கண்டன்.. நாலு சுவருக்கை இருந்து வெதும்புறன்.. பக்கத்துவீட்டு ஆனந்தி அக்காவும் இருக்கிறாவெல்லே.. கிழமைக்கு கிழமை அவவுடைய கணவன் செந்திலுக்கு விதம்விதமா உடுப்புகள் எடுத்துக் கொடுக்கிறா.. இண்டைக்கு காலமை புதுச் சேட்டுப் போட்டுக் கொண்டு முன் முத்தத்தை கூட்டி கோலம் போடுறார்.. நல்ல வடிவான சேட்டு..

அருந்ததி: இண்டைக்குத்தான் என்ரை செலக்சனை நல்லாயிருக்கெண்டு சொல்லியிருக்கிறாய்..

அரண்: என்ன.. உங்கடை செலக்சனோ.. நீங்களோ அவனுக்கு வாங்கிக் கொடுத்தனீங்கள்...

அருந்ததி: ஆ.. அது வந்து.. வந்து.. இல்லையம்மா.. ஆனந்தியோட கடைக்குப் போனனா? அவள் செலக்ட் பண்ண சொன்னாள்.. அவளுக்காக செலக்ட் பண்ணினேன்.. என் கண்ணில்ல.. என்ரை அரண் குட்டானில்ல.. உனக்கு நான் துரோகம் செய்வனா, என்ன?

அரண்: நீங்கள் எண்டாலும் சுத்த மோசம்.. எனக்கும் ஒண்டு வேண்டியந்து தந்திருக்கலாந்தானே.. நானும் முத்தம் கூட்டேக்கை அதைப் போட்டுக் கொண்டு.. என்ரை வீட்டுக்காரம்மா வேண்டித் தந்ததெண்டு பெருமையாக் காட்டியிருப்பன்தானே?

அருந்ததி: ஏன் அரண்! உமக்கு இருக்குற சேட்டுகளும் களிசாண்களும் காணாது.. அலுமாரி முழுக்க அடுக்கி வைச்சிருக்கிறீர்.. கனக்கப் போடமை புத்தம் புதுசாய் இருக்கு..

அரண்: என்ன நீங்க இப்பிடிக் கேக்கிறீங்கள்.. ஆராலும் வந்தாங்களெண்டால்.. இஞ்சை பாருங்கடா.. என்ரை வீட்டுக்காரம்மா எனக்கு எவ்வளவு உடுப்பு வாங்கித் தந்திருக்கிறாங்களெண்டு பெருமையாக் காட்டலாமெல்லே..

அருந்ததி: ஓ.. எங்களுடைய அன்பை ஏன் வெளீல காட்ட வேணும்.. சரி.. உமக்காக நான் இண்டைக்கு ஒரு பரிசு கொடுக்கப் போறன்..

அரண்: இண்டைக்கேவா?

அருந்ததி: இப்பவே..

அரண்: இப்பவேவா..? ச்சீ.. நீங்க மோசம்.. எனக்கு வெட்கமாயிருக்கு..

அருந்ததி: அட.. வெட்கத்தைப் பார்.. கன்னமெல்லாம் அவிச்ச கருவாடாய்ப் போச்சு.. கனக்க கற்பனைபண்ணாதேயும்.. இண்டைக்கு நான் ஒரு ஸ்பெசல் கறி சமைக்கப் போறன்.. நீர் விசிட்டிங் ரூமில இருந்து ரீவிய பாரும்..

அரண்: அட.. நீங்களோ.. சமைக்கப் போறியளோ.. என்ன சமைக்கப் போறியள்..?

அருந்ததி: நண்டுக்கறி.. ஒரு குழுமத்தில பார்த்தனான்..

அரண்: சொன்னால் நான் சமைப்பனெல்லே.. வேறை என்ன எனக்கு வேலை?

அருந்ததி: இண்டைக்கு ஒரு சேஞ்ச்.. நான் சமைக்கப் போறன்.. நீர் எப்பிடிச் சமைக்கிறதென்று சொன்னால் போதும்..

அரண்: அதென்ன பெரிய வேலை.. முதல்ல நண்டை வடிவா கழுவ வேணும்..

அருந்ததி: பிறகு..?

அரண்: அடுப்பில சட்டிய வைச்சு வெங்காயம் மிளகாய்.. கொஞ்சம் தண்ணி.. கொஞ்சம் உப்பு போட்டு.. அதுக்க நண்டையும் போட்டு நல்லாய் மூட வேணும்..

அருந்ததி: ம்..

அரண்: ஒரு கொதி கொதிச்ச பிறகு.. நண்டுக் கெண்டு ஸ்பெசலா தூள் அரைச்சு போத்தில்ல போட்டு வைச்சிருக்கிறன்.. நண்டுத் தூள் எண்டு லேபிள் ஒட்டியிருக்கிறன்.. அதில அளவா போட்டு .. இன்னொரு கொதி கொதிக்க.. இறக்கினா சரி..

அருந்ததி: அட அவளவுதானா.. நீர் ரீவிய பாரும்.. நான் போய் நண்டுக் கறியோட வாறன்..

அரண்: என்னங்க..

அருந்ததி: என்ன..

அரண்: நீங்க தனியா அடுபக்படில நிக்குறதை நினைக்க மனசு கேக்கேலை.. கூடமாட நானும் ஒத்தாசை செய்யட்டே..?

அருந்ததி: மூச்.. சொன்னா சொன்னபடி நடக்கவேணும்.. ரீவிய பாரும்..

(அருந்ததி சமையலறைக்கு சென்று நண்டுக் கறி தயாரித்துவிட்டு, சாப்பிட அரணை அழைக்கிறார். நண்டுக் கறியைப் பார்த்த அரண் திகைத்து நிற்கிறான்.)

அரண்: என்னங்க நீங்க.. இதை எப்பிடி சாப்பிடுறது..?

அருந்ததி: வாயாலைதான்..

அரண்: ஐயோ ஐயோ.. நீங்கள் நண்டை சுத்தம் செய்யாமை சமைச்சிருக்கிறீங்களே..

அருந்ததி: ஒருதரத்துக்கு மூண்டுதரம் நல்லாய் கழுவினனான்.. வடிவாய் பார்..

அரண்: அதில்லைங்க.. நண்டின்ரை உள் கோதை எடுக்காமை அப்பிடியே சமைச்சிருக்கிறீங்களே.. உவாக்.. இதை எப்பிடி சாப்பிடுறது.. கண்ட நிண்ட ஊத்தையெல்லாம் உள்ளுக்கை இருக்கும்..

அருந்ததி: அட பாவி.. பாவி.. ஏன்டா முதல்லையே சொல்லேலை.. ஒண்டுமே உருப்படியாய் தெரியாது.. எல்லாம் அரைகுறை.. உன்னைக் கட்டி என்ரை வாழ்க்கையே அரைகுறையா போச்சு.. நான் வெளியால போய் சாப்பிடுறன்.. இந்த நண்டுக் கண்ராவிய வைச்சு என்னவாலும் செய்து சாப்பிடு..என்னதான் உருப்படியா செய்யப் போறியோ தெரியேலை..

(கோபத்துடன் வெளியேற, கண்ணீருடன் தலைகுனிந்து நிற்கிறான் அரண்.)

(நேரம் உள்ளபோது இன்னும் வரும்.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் சுயதரிசையை வாசித்ததில் எனக்கு மிக சந்தோசம்.

இருந்தாலும் இந்தக்கதை என்னை நக்கலடிச்சு எழுதின மாதிரிக்கிடக்கு

ஆனைக்கொருகாலம் பூனைக்கொருகாலம் எண்டு ஊரிலை சொல்லுறவை

  • தொடங்கியவர்

மனப்பயமும் சுயசரிதைக்குள் அடங்கும்தானே?! :D

மாமா என்ன மகளிர் தின ஸ்பெசலோ? அது ஏன் 2050இல் எண்டு போட்டு இருக்கிறீங்கள்? உங்கடை வீட்டு இலக்கமோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி (1)

------

அரண்: நீங்கள் எண்டாலும் சுத்த மோசம்.. எனக்கும் ஒண்டு வேண்டியந்து தந்திருக்கலாந்தானே.. நானும் முத்தம் கூட்டேக்கை அதைப் போட்டுக் கொண்டு.. என்ரை வீட்டுக்காரம்மா வேண்டித் தந்ததெண்டு பெருமையாக் காட்டியிருப்பன்தானே?

அருந்ததி: ஏன் அரண்! உமக்கு இருக்குற சேட்டுகளும் களிசாண்களும் காணாது.. அலுமாரி முழுக்க அடுக்கி வைச்சிருக்கிறீர்.. கனக்கப் போடமை புத்தம் புதுசாய் இருக்கு..

அரண்: என்ன நீங்க இப்பிடிக் கேக்கிறீங்கள்.. ஆராலும் வந்தாங்களெண்டால்.. இஞ்சை பாருங்கடா.. என்ரை வீட்டுக்காரம்மா எனக்கு எவ்வளவு உடுப்பு வாங்கித் தந்திருக்கிறாங்களெண்டு பெருமையாக் காட்டலாமெல்லே..

------

(நேரம் உள்ளபோது இன்னும் வரும்.)

வேலைக்குப் போகாமல் வீட்டிலை இருந்து ரிவி பாத்து, முத்தம் கூட்டுறவருக்கு ஏன் புதுக்கால்சட்டை, சாரத்துணி ஒண்டு காணுமே....... :D:D

  • கருத்துக்கள உறவுகள்

சோழியனின் கற்பனை அபாரம்....... :D

  • தொடங்கியவர்

மாமா என்ன மகளிர் தின ஸ்பெசலோ? அது ஏன் 2050இல் எண்டு போட்டு இருக்கிறீங்கள்? உங்கடை வீட்டு இலக்கமோ? :D

அதில்லை.. இப்படி விரைவில நடக்கும்னு பட்சி சொல்லுது.. நான் அதிக பட்சமாக 40 வருடத்துக்கு தள்ளி வைச்சிருக்கிறன்.. அதுக்காக சந்தோசப்படுங்கோ மருமேன்! :D

வேலைக்குப் போகாமல் வீட்டிலை இருந்து ரிவி பாத்து, முத்தம் கூட்டுறவருக்கு ஏன் புதுக்கால்சட்டை, சாரத்துணி ஒண்டு காணுமே....... :D:D

ஆம்பிளையள் எண்ட உடன துணிவா கேள்வி கேட்கிறியள்!! :D

சோழியனின் கற்பனை அபாரம்....... :D

உற்சாகப்படுத்துதலுக்கு மிகவும் நன்றி.. இப்படி சில 'டானிக்'குகள் கிடைத்தால்.. இது வளரும்!! :D

Edited by sOliyAn

என் வீட்டை எட்டிப் பார்த்து எழுத எவ்வளவு துணிவு வேண்டும் உங்களுக்கு?

(கோபத்துடன் வெளியேற, கண்ணீருடன் தலைகுனிந்து நிற்கிறான் அரண்.)

சோழியன்,

கதை நகைச்சுவையாய் இல்லை! உங்கள் "அரண்" என்னும் கதாபாத்திரத்தில் நியவாழ்க்கையில் நான் இருப்பதால் எனக்கு ஆத்திரம்தான் வருது :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோடா உங்கட கதை சூப்பர்ன்னா சூப்பர். இந்த கதையின் நாயகனே நீங்கதானோ?

ஏனுங்கோ சிலந்தி எல்லாம் சாப்பிடுங்கள். சிலந்தியும் நண்டு மாதிரிதானே!

  • தொடங்கியவர்

என் வீட்டை எட்டிப் பார்த்து எழுத எவ்வளவு துணிவு வேண்டும் உங்களுக்கு?

2050ஐ 2010 என்று மாத்தச் சொல்லுறியள்போல.. யோசிப்பம்! :lol:

(கோபத்துடன் வெளியேற, கண்ணீருடன் தலைகுனிந்து நிற்கிறான் அரண்.)

சோழியன்,

கதை நகைச்சுவையாய் இல்லை! உங்கள் "அரண்" என்னும் கதாபாத்திரத்தில் நியவாழ்க்கையில் நான் இருப்பதால் எனக்கு ஆத்திரம்தான் வருது :lol::lol::lol:

என்ன இது.. பாவம் இந்த ஆண்களின் இன்னல்கள்பற்றி எழுத எவருமே இல்லையா?! :)

ஐயோடா உங்கட கதை சூப்பர்ன்னா சூப்பர். இந்த கதையின் நாயகனே நீங்கதானோ?

ஏனுங்கோ சிலந்தி எல்லாம் சாப்பிடுங்கள். சிலந்தியும் நண்டு மாதிரிதானே!

நாயகன் நானாக இருந்தால் அது கதையல்ல.. அது வாழ்க்கை கறுப்ஸ் வாழ்க்கை!! :)

சிலந்தி சாப்பிடலாந்தான்.. பேந்து குடலை அது வலையாக்கினால்.. அதிலயும் யாழ் இணையம் தெரியும்.. வேணாம் உபத்திரவம்!! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

நல்ல கற்பனை வாழ்த்துக்கள்.

சில பெண் அரசாங்கம் நடக்கும் வீடுகளில் இப்படி நடக்கலாம்.ஆனால்

அது நல்ல குடும்பம் என்று சொல்ல முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் மாமா நல்ல கற்பனை ஆனால் இப்பிடி எந்த குடும்பத்திலயும் இருக்ககூடாது

இப்பிடி எந்த குடும்பத்திலயும் கனவிலும் இருக்ககூடாத

சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை என்ற என்கன்ட கெளரவம் என்னவாது ,முப்பாட்டன் ,பாட்டன் எல்லாம் சேர்த்து வைச்ச ஆணாதிக்கம் இந்த கதையை வாசிப்பதால் அழிவடையப்போகுது :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி எந்த குடும்பத்திலயும் கனவிலும் இருக்ககூடாத

சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை என்ற என்கன்ட கெளரவம் என்னவாது ,முப்பாட்டன் ,பாட்டன் எல்லாம் சேர்த்து வைச்ச ஆணாதிக்கம் இந்த கதையை வாசிப்பதால் அழிவடையப்போகுது :):lol:

அதென்ன ஆணாதிக்கம் என்பது. ஆண் ஆண் தான். பெண் பெண் தான். சமூகத்தில சம உரிமை என்பது ஆணைப் பெண்ணாக மாறுவதில் அல்ல. அல்லது பெண்ணை ஆணாக மாற்றுவதில் அல்ல. பெண்ணை ஆணை சக மனிதனாக எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக் கொள்ளுதல்.

விலங்கு இராட்சியம் எங்கனும் ஆண் பலமானதாகவே அதிகம் விளங்குகிறது. அது ஆதிக்கம் அல்ல. தலைமைத்துவ சமூகம் நோக்கிய ஒரு காரணி. சமூக வாழ்வில் தலைமைத்துவம் மூத்தது வழிகாட்டுதல் என்பன போன்ற விடயங்கள் அடங்கி இருக்கின்றன. சிங்கக் கூட்டத்திற்கு ஆண் சிங்கம் தலைமை. யானைக் கூட்டத்திற்கு ஆண் யானை தலைமை. தலைமைப் பண்பு என்பது ஆதிக்கம் அல்ல. ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் பெண் தலைமைத்துவம் கூட சமூக விலங்குகள் மத்தியில் அவதானிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தலைமைத்துவம் என்பது தவறாக ஆதிக்கம் என்று விளக்கப்பட்டு வருகிறது.

ஆண் சிங்கம் தலைமை தாங்கினும்.. பெண் சிங்கத்தின் வாழ்வுரிமையை விருப்பு வெறுப்பை அது தீர்மானிப்பதும் இல்லை... கட்டுப்படுத்துவம் இல்லை. அதேவேளை பெண் சிங்கத்திடம் இதைச் செய் என்று வலியுறுத்துவதும் இல்லை. சமூகமாக வாழ்ந்தாலும் ஆணின் தலைமைப் பண்பை அங்கீகரித்தாலும்.. பெண் தான் தன்னுரிமையோடு தனக்குரிய வடிவில் வாழ ஆண் தன்னுரிமையோடு தனக்குரிய வடிவில் இணைந்து வாழ்கின்றன.

அந்தச் சிங்கத்திற்கும்.. அப்பன் முப்பாட்டன் வந்து என்ன ஆணாதிக்கமா கற்றுக் கொடுத்தான் தலைமை தாங்க. அதுமட்டுமன்றி இனவிடைப் போட்டியில் ஆண் பெண்ணை அதிகாரம் செய்வது.. உடலுறவின் போது ஆண் பெண்ணுக்குள் திணிப்பதும்.. அங்கு நடக்கிறது. அதையும் ஆதிக்கம் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். அவர்கள் அப்படிச் சொல்வதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆணுக்கு திணிக்க இருக்குது திணிக்குது... பெண் வாங்குது. எனி இவைக்காக தனி ஒரு கூர்ப்பை எல்லோ இயற்கை தேர்வு செய்ய வேண்டும். கூர்ப்பின் பாதையில் லிங்கப் புணர்வு பாதுகாப்பான வினைத்திறனான கருக்கட்டலுக்கு உதவுகிறது என்பதுதான் முக்கியமாகிறதே தவிர ஆண் திணிக்க முடிவதால் அவன் ஆதிக்க வாதி என்பதல்ல அங்கு பொருளாக்கப்பட்டுள்ளது.

பெண்ணிலைவாதிகள் ஒன்றில் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்றேல் ஆண் பெண் உரிமைகள் தொடர்பில் இயற்கையின் விதிப்புக்களை ஏற்றுக் கொண்டு கத்த வேண்டும்.

உண்மையில் ஆண் பிறப்புரிமையையில் ரீதியில் கூட இயற்கையால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறான். பெண்கள் வளமான ஒரு சோடி xx நிறமூர்த்தங்களைக் கொண்டிருக்க ஆண் ஒரு வளமான x ஐ மட்டும் கொண்டிருக்கிறான். மற்றது Y. அது சிறிய ஒரு நிற மூர்த்தம். இதற்காக ஆண்கள் தாங்கள் பெண்களை விட தாழ்ந்திருப்பதாகவா உணரச் செய்யப்பட்டுள்ளனர். இல்லையே. பெண்கள் தாங்களாகவே ஆண்களுக்கு கட்டுப்படும் நிலை ஒன்றிருக்கிறது. அது இயற்கையின் விதிப்பாக இருக்கலாம். சேவல் கலைச்சால் பேடு தான் பதுங்குவதும் மிதிபடுவதும். சேவலுக்கும் அப்பன் முப்பாட்டன் வந்து கற்றுக்கொடுத்தானா இதை...??! பேட்டிற்கு பதுங்கு மிதிபடு என்று என்ன கோழிச்சமூகம் என்ன கட்டுப்பாடா போட்டு வைத்துள்ளது..???!

அங்கு பேடு பதுங்குவதால் மிதிபடுவதால் அது தனது வாழ்வுரிமையை இழந்துவிடுவதில்லை. சேவலுக்கு அடிமையாக வாழ்வதில்லை. மிதிபடும் கணத்தோடு அது அதில் இருந்து விடுபட்டுக் கொள்கிறது. அடுத்த கணமே அது தன் வாழ்வை தன் வழியில் சென்று தேடிக் கொள்கிறது. அதற்காக சேவலே தனக்கு சேவகன் என்று உரிமை பாராட்டுவதில்லை. ஆனால் மனிதர்கள்.. அப்படியா..??! சமூகம் கலாசாரம் பண்பாடு என்று கட்டுப்பாடுகளை ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் திணிக்கிறார்கள். அதைப் பற்றி பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களும் தான் கவலைப்பட வேண்டி இருக்கிறது. அல்லது ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. வளமான மனித சமூகத்தை உருவாக்க.

பெண்ணிலைவாதம் பெண்ணுரிமை பற்றிப் பேசுவது என்பது இன்று ஆணை மேலாதிக்கம் செய்வது பற்றிப் பேசுவது என்பதாகி விட்டது. இது பெண்ணுரிமையை நிலை நாட்ட உதவாது. பெண்கள் மீதான வன்முறையை தான் நிலைநாட்டும். ஏனெனில் இயற்கையில் ஆண் பெண்ணை விட உடல் ரீதியில் பலமானவன். அதை எந்த அப்பனும் முப்பாட்டனும் வந்து மாற்ற முடியாது. அது இயற்கையின் தேர்வு. இந்த அடிப்படையை ஏற்றுக் கொள்ளாது சம உரிமை பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. சட்டத்தை போட்டு அடக்குவதும் அடக்குமுறைதான். சட்டங்கள் அற்ற தேச பரிபாலனம் எப்படி சாத்தியமில்லையோ அதேபோல் தான் ஆணின் பலப்பாவிப்புக்கு இடமின்றிய மனித சமூகமும் சாத்தியமில்லை. பலமுள்ளவன் பலத்தை பாவித்தே தீருவான். ஆண் பெண்ணிற்கு சமன் என்பது ஏற்புடைய ஒன்றல்ல. ஆண் பெண்ணை விட உடல் வலுவானவன் என்பதே யதார்த்தம். ஆனால் உடல் வலு என்பது பெண்ணின் ஆணின் வாழ்வுரிமையை பாதிப்பாத இருக்கக் கூடாது. சம உரிமை என்பது ஆண் பெண் என்ற நிலைக்கு அப்பால் மனிதன் என்ற நிலையில் உள்ள உரிமைகள் சார்ந்தே அது அமைய வேண்டும். ஆண் பெண் என்று வருகின்ற போது ஆணின் உடற் பலம் அவனை முன்னுறுத்துவதை தடுக்க முடியாது.

இந்தக் கதை வெறும் கற்பனை என்பதைத் தாண்டி.. இது நடக்க சாத்தியமுள்ளது. ஏன் இன்று கூட நடந்து வருகிறது. பல ஆண்கள் வீட்டு வேலையாட்களாக மனைவிக்கு பணிந்து நடக்கக் காரணம்.. அதிகாரம் செய்ய முடியாது என்று அல்ல. அன்புக்கு அதிகம் கட்டுப்படுகிறார்கள் அல்லது ஏன் வேண்டாத பிரச்சனையை இவளோட வளர்ப்பான்.. இது ஒரு விளக்கம் குறைஞ்சது.. என்ற முடிவுக்கு வருகிறார்கள். இது பெண்களுக்கு நல்லாவா இருக்கும். அவங்களே அவங்க செயலால் தங்களின் நிலையை தாழ்த்திக் கொள்ளுறாங்க. சம உரிமை என்பது அடுப்படியில் சமைப்பதில்.. படுக்கை அறையில் படுப்பதில் அல்ல. சம உரிமை என்பது சிந்தனையில் செயலில் ஆணைப் பெண்ணை சமனாக சக மனிதனாக மதிக்கும் தன்மையில் இருக்க வேண்டும். அதற்காக ஆண் தன் இயல்பை இழப்பது அல்ல செய்ய வேண்டியது.

இந்தக் கதை ஆணின் மீது பெண் அதிகாரத்தை செலுத்துவது போன்று வளர்கிறது. இப்படியான ஒரு நிலையில் எந்த ஒரு மனிதனும் அதிகம் நாள் வாழ விரும்பமாட்டான். அது பெண்ணாக இருந்தாலும் சரி. அந்த வகையில்.. இது ஒரு கற்பனை அல்லது பெண்ணிற்கு அடங்கி அதன் மூலமாவது அவள் அன்பை பெற முடியுமோ என்று பரிசோதிக்கும் ஒரு ஆணின் செயலாக அமையலாம். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருந்ததி: இண்டைக்குத்தான் என்ரை செலக்சனை நல்லாயிருக்கெண்டு சொல்லியிருக்கிறாய்..

அரண்: என்ன.. உங்கடை செலக்சனோ.. நீங்களோ அவனுக்கு வாங்கிக் கொடுத்தனீங்கள்...

அருந்ததி: ஆ.. அது வந்து.. வந்து.. இல்லையம்மா.. ஆனந்தியோட கடைக்குப் போனனா? அவள் செலக்ட் பண்ண சொன்னாள்.. அவளுக்காக செலக்ட் பண்ணினேன்.. என் கண்ணில்ல.. என்ரை அரண் குட்டானில்ல.. உனக்கு நான் துரோகம் செய்வனா, என்ன?

அரண்: நீங்கள் எண்டாலும் சுத்த மோசம்.. எனக்கும் ஒண்டு வேண்டியந்து தந்திருக்கலாந்தானே.. நானும் முத்தம் கூட்டேக்கை அதைப் போட்டுக் கொண்டு.. என்ரை வீட்டுக்காரம்மா வேண்டித் தந்ததெண்டு பெருமையாக் காட்டியிருப்பன்தானே?

அங்கிள்,

உந்த குசும்பு தானே வேணாங்கிறது....

பாருங்க எத்தனை பேற்றை கதையை எழுதியிருக்கிறிங்க.... :)

ஏங்க பீதியை கிழப்புறிங்க.......பாவம்க ஆம்பிளைங்க...

ஏற்கனவே நொந்து போயிருக்கிறாங்க‌ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்கேன் 2050 :) அது சரி கோவணத்துடன் விடவில்லை என்று சந்தோசப்படாமல் இவருக்கு புது சேட்டு கேக்குதோ :) தொடர்ந்து எழுதுங்கோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு கணவர் எனக்கு வந்தால் எப்படி இருக்கும் :) ....நல்லதொரு கற்பனை கதை பாராட்டுகள்.

இப்படி ஒரு கணவர் எனக்கு வந்தால் எப்படி இருக்கும் :) ....நல்லதொரு கற்பனை கதை பாராட்டுகள்.

யாழ் கள ஆண்களே எச்சரிக்கை ...!! ஆகக் குறைந்தது நீங்களாவது ரதியிடம் மாட்டுப்படாமல் இருந்தால் சந்தோசம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள ஆண்களே எச்சரிக்கை ...!! ஆகக் குறைந்தது நீங்களாவது ரதியிடம் மாட்டுப்படாமல் இருந்தால் சந்தோசம் :)

என்னைக்காப்பாற்றிய கடவுள் என் பிள்ளையையும் காப்பாற்றட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

2050 ல் Mrs அரண் அருந்ததிக்கு maternity லீவு கிடைக்குமோ? அரணின் வன்டியை பார்த்து நன்பர்கள் சொல்லுவார்கள் உம்முடைய வன்டி கூராக இருக்கு பொம்பிளை பிள்ளைதான் பிறக்கப்போகுது ..... :lol::lol:

சோழியன் கற்பனை அந்த மாதிரியிருக்குது

Edited by putthan

  • தொடங்கியவர்

வணக்கம்

நல்ல கற்பனை வாழ்த்துக்கள்.

சில பெண் அரசாங்கம் நடக்கும் வீடுகளில் இப்படி நடக்கலாம்.ஆனால்

அது நல்ல குடும்பம் என்று சொல்ல முடியாது.

இப்போ 'சில'வாக இருப்பது 40 வருடத்திற்கு பிறபு பலவாகலாந்தானே?! :)

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

சோழியன் மாமா நல்ல கற்பனை ஆனால் இப்பிடி எந்த குடும்பத்திலயும் இருக்ககூடாது

கடந்து போன ரண்டு மூன்று தலைமுறை வாழ்க்கையை ஆராய்ந்தால்.. இப்படியும் ஏன் நிகழ முடியாதென்ற கேள்வி இயல்பாகவே எழும். :)

இப்பிடி எந்த குடும்பத்திலயும் கனவிலும் இருக்ககூடாத

சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை என்ற என்கன்ட கெளரவம் என்னவாது ,முப்பாட்டன் ,பாட்டன் எல்லாம் சேர்த்து வைச்ச ஆணாதிக்கம் இந்த கதையை வாசிப்பதால் அழிவடையப்போகுது :lol::lol:

என்ன கெளரவம்.. ஆரம்பத்தில பெண்தானே ஒவ்வொரு கூட்டத்துக்கு தலைவியாக இருந்து வழிநடத்தினாள்.. அவங்க கெளரவம் பார்க்காதபோது, நீங்க இடையில பெற்ற கெளரவத்தை ஏன் பார்க்கிறீங்க? :)

உதுக்கேன் 2050 :) அது சரி கோவணத்துடன் விடவில்லை என்று சந்தோசப்படாமல் இவருக்கு புது சேட்டு கேக்குதோ :D தொடர்ந்து எழுதுங்கோ :)

அப்படியெல்லாம் விடமாட்டாங்க.. விட்டால் சமையலுக்கு ஆளில்லையே! :)

  • தொடங்கியவர்

இப்படி ஒரு கணவர் எனக்கு வந்தால் எப்படி இருக்கும் :lol: ....நல்லதொரு கற்பனை கதை பாராட்டுகள்.

நன்றி.. இப்படி ஒரு கணவர் வந்தால் அது வாழ்க்கையாகவா இருக்கும்? :)

2050 ல் Mrs அரண் அருந்ததிக்கு maternity லீவு கிடைக்குமோ? அரணின் வன்டியை பார்த்து நன்பர்கள் சொல்லுவார்கள் உம்முடைய வன்டி கூராக இருக்கு பொம்பிளை பிள்ளைதான் பிறக்கப்போகுது ..... :):)

சோழியன் கற்பனை அந்த மாதிரியிருக்குது

மகப்பேறு.. இது ஆண்களிடமில்லாத பெண்ணுக்கே உரிய தகுதியல்லவா? :lol: (ஆண் அடிமையாக இது ஒன்றே போதும்.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.