Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உருக்கும் உண்மை கதைகள்..உறவு 1

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே....

யாழ்களத்தில் முன்னர் உண்மைசம்பவங்களை கதைகளாக்கியிருந்தேன் அது பலரது வரவேற்பையும் பெற்றிருந்தது.அதே போல் மீண்டும் யாழ்களத்தில் நடந்து முடிந்த கோர யுத்தத்தினால் அவலப்படும் எமது உறவுகளின் இன்றைய நிலைகளை அவர்களுடன் தொலைபேசிஊடாக நேரடி உரையாடல் மூலம் சொன்னவற்றை அப்படியே கதையாக்குகின்றேன்.உங்கள் வரவேற்பு தொடர்ந்து இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் தொர்கிறேன்.நன்றி

வன்னிப்பெருநிலப்பரப்பில் தமிழீழ அரசு ஒன்று நடைமுறையிலிருந்த காலகட்டம். பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையில் குண்டுச்சத்தங்களும் ஓய்ந்து தமிழ் மக்கள் மனதில் மகிழ்ச்சியும் அதே நேரம் தமிழீழ அரசின் நிருவாகம் என்கிற ஒரு கட்டமைப்பின் அடுத்த பரிமாணத்தில் புகுந்துவிட்டதொரு மகி்ழ்சியுடனும் வாழ்ந்த காலகட்டம்.அந்த மகிழ்ச்சியான காலகட்டத்தில் இளம்பருவத்தினனாக இருந்த புவிகரனிற்கும் ஒருத்தியின் மீது காதல் ஏற்பட்டது.வழைமைபோல காதல் என்றாலே எதிர்க்கிற எமது சமூகத்தின் எதிர்ப்பும் அவனிற்கு தேன்றவே காதலும் தமிழீழ காவல்துறையின் உதவியுடன் காதலித்தவளை கரம்பிடித்து புதுமணத்தம்பதிகளாய் கிளிநொச்சி நகர்பகுதியில் குடியேறினான்.அவர்களின் காதலின் அடையாளமாய் ஒரு பெண்குழந்தையும் பிறந்தது.அவன் செய்தது கூலிவேலைதான் ஆனாலும் குடும்பம் மகிழ்ச்சியாகவேயிருந்தது. தான் அதிகம் படிக்கவில்லை ஆனால் தன்மகளை பெடிய படிப்புகள் படிப்பித்து எதிகாலத்தில் தமிழர் நிருவாகத்தில் ஒரு பெரிய அதிகாரியாக்குவது என்கிற எதிர்காலக்கனவுகளுடன் அவனது வாழ்நாட்கள் உருண்டேடிகொண்டிருந்தகாலத்தில். இலங்கையில் மீண்டும் சிறிது சிறிதாக குண்டுச்சத்தங்கள் கேட்கத்தொடங்கியது.தமிழீழ நிருவாக எல்லைகள் சுருங்கத்தொடங்கிக்கொண்டிருந்தன.அதே நேரம் எல்லைகளிற்கு உள்ளேயும் ஆழஊடுருவும் படைகளால் கிளைமேர்தாக்குதல்களும் தொர்ந்துகொண்டிருந்தது.

ஆனாலும் …. அங்கு வாழ்ந்த மக்களைப்போல ஏதோ ஒரு நம்பிக்கையில் தனது அன்றாட வாழ்கையை ஓட்டிக்கொண்டிருந்தான்.5ந்திகதி ஜப்பசி மாதம் 2008 ம் ஆண்டு அன்று வழைமைபேல தன்னுடைய மனைவி பிள்ளையிடம் விடைபெற்றுக்கொண்டு வேலைக்கு புறப்பட்டவன் கிளிநொச்சி உருத்திரபுரம் சாலையில் வேகமாக சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்தான் ஒரு மரத்தை தாண்டும்பொழுது அவனை ஒரு பயிரோ வாகனம் ஒன்றும் வேகமாகக் கடந்தது.டமால் என்றெரு பெரிய குண்டுச்சத்தம் அது மட்டும்தான் அவனிற்கு நினைவிருந்தது.கண்விழித்து பார்த்தபொழுது கிளிநொச்சி வைத்தியசாலையில் அவனருகில் அழுதபடி அவனது மனைவி குந்தையும் நின்றிருந்தனர்.எழுந்திருக்க முயன்றான் முடியவில்லை உடலெல்லாம் ஒரே வலியாக இருந்தது.அவன் விழித்துவிட்டதை கவனித்த தாதியொருவர் அருகில் வந்து "அசையாமல் படுத்திருங்கோ கிளைமேர் அடியிலை உங்கடை இடக்கால் முறிஞ்சிட்டுது ஒப்பிறேசன் செய்திருக்கிறம் காலை அசைக்கவேண்டாம்" என்று ஆலோசனை கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றாள்..அப்பொழுதுதான் அவனிற்கு எல்லாம் நினைவிற்கு வந்தது.அடுத்தடுத்து பல சத்திர சிகிச்சைகள் நடந்தது.அவனது முழங்கால் மேசமாக பாதிக்கபட்டதால் அவனால் காலை மடிக்கமுடியாதென்பது பின்னர் தெரியவந்தது.

அவனது வருமானத்தை மட்டுமே நம்பியிருந் அவனது குடும்பமும் வறுமையில் வீழ்ந்தது.தன்னை பார்க்க வரும் மனைவி மகளிடம் " இன்னும் கொஞ்நாள் பொறுங்கோ நான் திரும்ப வந்ததும் நிலைமை சரியாயிடும் நான் என்ன பாடுபட்டாவது என்ரை பிள்ளையை படிப்பித்து பெரியாளாக்குவன் "என்று சொல்லிக்கொள்வான். நாளாக அவனது மனைவியும் வருவது குறைந்து போய் இறுதியில் வைத்தியசாலைப்பக்கம் வராமலேயே நிறுத்திவிட்டாள். அவள் எங்காவது வேலைக்கு போகத்தெடங்கியிருப்பாள் அதனால் நேரம் கிடைக்கமலிருக்கும் என அவனும் தன்னைத்தானே தேற்றிக்கொள்வான். மூன்றரை மாதங்களின் பின்னர் ஓரளவு குணமடைந்தவன் ஊன்று கோலின் உதவியுடன் நடக்கத்தொடங்கியிருந்தான். எப்பொழுது வீட்டிற்கு போகலாம் என்கிற அவனது நச்சரிப்பிற்கு ஒருநாள் வைத்தியரும் இனி போகலாம் அடிக்கடி வந்து காயத்திற்கு மருந்து கட்டவும் என்று சொன்னதுதான் தாமதம் அவன் தன்னுடைய கைத்தடியுடன் மனைவி மகளை பார்ப்பதற்காய் அவன் அத்தனை நாளும் அடக்கி வைத்திருந்த ஆசைகளுடன் வீடு நோக்கி போனவனிற்கு வீட்டில் யாரும் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்தான்..அவர்கள் அங்கிருந்து போய் ஒரு மாதங்களாகிவிட்டது ஆனால் எங்கையென்று தெரியாது என்கிற பதில்தான் கிடைத்தது. தெரிந்தவர்கள் உறவினர்கள் என்கிற தேடல் தொடர்ந்தது..

ஒருவாறு அவள் இருக்குமிடத்தை அறிந்து அங்கு போய்விட்டான்..அங்கு போன பின்னர்தான் தெரிந்தது அவள் மனைவி அப்பொழுது இன்னொருத்தனிற்கு மனைவியாகிருந்தாள். அவர்களிற்குள் வாக்குவாதங்கள் நடந்தது பிள்ளையை தன்னிடம் தருமாறு சண்டைபிடித்தான். இறுதியாய் பிள்ளையை பலவந்தமாக தூக்கிக்கொண்டு கைத்தடியை ஊன்றியபடி நடக்க முயன்றவன் சாரம் அவிழ்ந்து போக சாரத்தையும் பிடிக்கமுயன்று தட்டுத்தடுமாறி நிலத்தில் விழுந்துபோனான். வேகமாய் வந்தவள் பிள்ளையை பறித்து விட்டு "உனக்கு காலும் ஏலாது இனி நீ பிச்சைதான் எடுத்து பிழைக்கலாம் நீ எப்பிடி பிள்ளையை வளக்கப்போறாய் எங்கையாவது போய் செத்து தொலைஞ்சு போ..."என்ற அவளது வார்த்தைகள் அவனிற்கு இன்னொரு கிளைமோர் வெடித்ததைப்போல இருந்தது..பிள்ளையையும் இழந்து அவனது எதிர்காலக்கனவுகளும் தமிழர் தாயகத்தின் எல்லைகள் போலவே சுருங்கிப்போய் சூனியமாய் நின்றது.

புவிகரனின் இன்றைய நிலையை அவனது குரலிலேயே கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்.

புவிரன் வயது 26

mathan.jpg

யதார்த்தம் என்ற ஒன்று உலகில் இருக்கல்லோ.

ஒரு ஊனம் வந்தால் பெண்டாட்டியே பிள்ளையையும் தூக்கிக்கொண்டு தவிக்கவிட்டுட்டு போயிடுவாள் என்றால்.. அதுவும் ஊரிலையே.. நாடு கடந்த நிலையில.. கற்பனையில.. நாங்கள் எங்கையோ ஓடிக்கொண்டு இருக்கிறம். ஆபத்துக்காலத்தில அண்ணன் தம்பியை அறியலாமாம், பெண்டாட்டியையும் சேர்த்து இருக்கலாமோ..? வசதி உள்ளவர்கள், வெளிநாட்டு காசு கையுக்கை புழங்குபவர்கள் எப்படியும் ஊரில வாழலாம். ஆனால்.. வெளி உதவி இல்லாத இவர் போன்றோரிண்ட நிலமை என்னவோ..?

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அவர்களே... இது மிகவும் நெஞ்சை உருக வைக்கும் நிகழ்வு......

  • கருத்துக்கள உறவுகள்

பனையால் விழுந்தவரை மாடேறி மிதித்த கதையாய் போச்சு...........பல வழி அடைத்தால் ஒரு வழி திறக்கும் என்பார்கள் .தன்னம்பிக்கையை துணையாகக் கொண்டு வாழ சொல்லுங்கள். ..உதவ ஒரு கரம் கிடைக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தம் என்ற ஒன்று உலகில் இருக்கல்லோ.

உண்மைதான் என்ன செய்யலாம்?? :)

உண்மையில் நடந்தபடியால் மனம் நோகின்றது,இதே சம்பவம் போல் இதற்குமுதல் ஒரு கதையா வாசித்த ஞாபம்.படங்களில் மாத்திரம் தான் திரும்பி வரமட்டும் மனைவி உருகிக்கொண்டு இருப்பது.நடைமுறையில் அது வெகு அபூர்வம்.

சக்தி எf.எம் கேளுங்கள் அன்றாடம் இப்படியே எத்தனையோ கதைகள் எமது நாட்டில்.புலம் பெயர்ந்த நாங்கள் எமது வழ்க்கை நிலை மாற்றம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
:):lol: வாழந்து காட்ட வேணும் அவளுக்கு மட்டும் இல்லை.எம்மை இந்த நிலைலமைக்கு ஆழக்கின அனைவருக்கும்.அதுக்கு நாம் அவர்களை வாழ வைக்க வேணும்.

என்ன உலகமடாப்பா,நாம் தான் சில உதவிகளை செய்ய வேண்டும்..

இவரைப்போல ஆயிரம் பாதிக்கப்பட்ட, அநாதரவாய் கைவிடப்பட்ட மக்கள் இருக்கலாம். எண்டாலும்.. இப்பிடி எங்களுக்கு தெரிகிற ஒரு சிலருக்காவது நாங்கள் சிறு உதவி செய்து அவர்கள் காயத்தை ஆற்றலாம். தான் தொழில் துவங்கி சுயகாலில நிக்கிறதுக்கு உதவி கேட்கிறார். மனம் வச்சால் நாங்கள் ஏதாவது உதவி செய்யலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தம் என்ற ஒன்று உலகில் இருக்கல்லோ.

எங்கு இருக்கின்றது என்று தெளிவாக எழுதினால்.

கிண்டி எடுத்துகொண்டுபோய் வன்னியில நடலாம்................. புலிகள் இனி இல்லைதான். ஆனால் புலிகள் போன்று யாராவது புல்லுகள் முளைத்தால் தேவைபடும்தானே. புடுங்கி அவிச்சு தின்னுவார்கள்.......... பின்பு விட்டுகொடுப்பு அரசியல் அது இது என்று இராஜதந்திரங்களெல்லாம் உங்களை போல இல்லாவிட்டாலும் ஏதேனும் அவர்களுக்கும் தோன்றலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

புவிகரன் நேசக்கரம் தொடர்பாளர் ஒருவரால் இனங்காணப்பட்டார். இந்த இளைஞனது குரலை ரீஆர்ரீ தமிழ் ஒலியில் நேசக்கரம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பினோம். இந்த இளைஞனுக்கான சுயதொழில் கடை திறக்க ஒரு நல்ல உள்ளம் உதவ முன்வந்துள்ளது. மற்றும் இவரது காலுக்கான சிகிச்சைக்கும் உதவ முன்வந்துள்ளார் அந்து அன்பர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:wub::) வாழந்து காட்ட வேணும் அவளுக்கு மட்டும் இல்லை.எம்மை இந்த நிலைலமைக்கு ஆழக்கின அனைவருக்கும்.அதுக்கு நாம் அவர்களை வாழ வைக்க வேணும்.

முயற்சிப்போம் முடியாதது என்று ஒன்றும் இல்லை நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அவர்களே... இது மிகவும் நெஞ்சை உருக வைக்கும் நிகழ்வு......

இப்படி ஆயிரமாயிரம் கதைகள் உள்ளன நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவுகளாக்குகிறேன்.நன்றி

அவலங்களுக்கு முகம் கொடுத்த தமிழ் சமுதாயத்தை உருக்கி அழித்துக் கொண்டிருக்கும் உண்மைக் கதை என நினைக்கிறேன்!

இது போல் பல சம்பவங்களை கேள்விப்பட்டுள்ளேன்! நினைக்கும் போதெல்லாம் என்னை மிகவும் கவலைக்குட்படுத்துபவை இவை!!

போராளியான காதலன், மாவீரன் ஆனதும், விம்மி விம்மி அழுது தீர்த்த ஒரு பெண் (விஷயம் அறிந்தவர்கள் அவள் மீது பெரும் மதிப்பு ஏற்படும் அளவிற்கு), மூன்றாம் நாளே இன்னொரு அயல் இளைஞன் பின்னால் அலைய வெளிக்கிட, அவளது வீட்டுக்குத் தெரியாத, போராளியினுடனான அவளது இரகசிய காதலை முன்னமே அறிந்திருந்த இளைஞனின் உறவுகள் குமுற, அவளது சகோதரி குடும்பம் எதிர்த்து விவாதிட ஏற்பட்ட கலகத்தை பார்த்து, பின்னணிகள் அனைத்தும் தெரிந்த மறவர் சிலர், அயல் வீட்டு சண்டையில் தலையிட விரும்பாமல், தமிழ் சமுதாயம் போகும் போக்கை எண்ணி கவலையுடன் கலகத்தை பதிவுசெய்த ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது. இது 2008 ஜூன் இல் வன்னியின் ஒரு பகுதியில் நடந்தது.

அந்த அகோர சூழ்நிலையில் ஒவோருவர் மனதிலும் ஒவ்வொரு விசித்திர எண்ணங்கள். இந்த சூழ்நிலையில், இவற்றைக் கண்டிக்க நாம் யார் என்ற எண்ணமே இறுதியில் என்னுள் தோன்றி என்னை வருத்தும்!

மனம் போன போக்கில் மனைவியையும் குழந்தைகளையும் கைவிட்டு வேறொருத்தியுடன் வாழும் போக்கினை, கணவனையும் குழந்தைகளையும் கைவிட்டு வேறொருவனுடன் வாழும் போக்கினை, அந்த அப்பவிக் குழந்தைகளுக்காக என்றாலும் மாற்றும் பொறுப்பு எம்மிடம் உள்ளது. சட்டமும் இதை அனுமதிக்கவில்லை. தமிழர் நலம் காக்கப்படும் வகையில் சட்டத்தை அமுல்படுத்துவது யார்? சாத்திரி அண்ணா, ஆசான் அண்ணா போன்றவர்கள் முன்வந்தால் நானும் இணைவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊனம் வந்தால் பெண்டாட்டியே பிள்ளையையும் தூக்கிக்கொண்டு தவிக்கவிட்டுட்டு போயிடுவாள் என்றால்.. அதுவும் ஊரிலையே.. நாடு கடந்த நிலையில.. கற்பனையில.. நாங்கள் எங்கையோ ஓடிக்கொண்டு இருக்கிறம். ஆபத்துக்காலத்தில அண்ணன் தம்பியை அறியலாமாம், பெண்டாட்டியையும் சேர்த்து இருக்கலாமோ..? வசதி உள்ளவர்கள், வெளிநாட்டு காசு கையுக்கை புழங்குபவர்கள் எப்படியும் ஊரில வாழலாம். ஆனால்.. வெளி உதவி இல்லாத இவர் போன்றோரிண்ட நிலமை என்னவோ..?

உண்மையில் தாயகத்தில் வெளிநாட்டு தொடர்பில்லாது.. உள்ள மகக்ளும் வாழ அவர்களுக்கு வேண்டிய உதவிகளை இல்லை என்று சொல்லாமல் வழங்க ஒரு அமைப்பு தேவை. அதை நேசக்கரத்தினூடும் செய்யலாம் என்று நினைக்கிறேன். நேசக்கரங்களை பலப்படுத்தினால் நிச்சயம்.. இவ்வாறான உறவுகளுக்கு இந்தப் பூமிப்பந்தில் நம்பிக்கையோடு வாழ வழிகாட்டலாம்.

இது வெறும் கதையாக இருந்துவிட்டுப் போகாமல்.. உணர்வுகளை மனச்சாட்சியை தட்டிக்கேட்க செய்ய வேண்டும்.

சாத்திரி இவ்வாறான வாழ உதவி வேண்டி இருக்கும் மக்களின் உண்மைக் கதைகளை வெளி உலகிற்கு கொண்டு வருவதற்காக உங்களை பாராட்டலாம். புலம்பெயர் நாடுகளில் மாதர் சங்கம் அமைச்சு.. வம்பளந்து திரியும்.. சாமி ஆடித் திரியும் பொண்டுகளை பற்றி எழுதிக் கொண்டிருப்பதிலும்.. இது மிகப் பயனுள்ள அம்சம் என்று நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தாயகத்தில் வெளிநாட்டு தொடர்பில்லாது.. உள்ள மகக்ளும் வாழ அவர்களுக்கு வேண்டிய உதவிகளை இல்லை என்று சொல்லாமல் வழங்க ஒரு அமைப்பு தேவை. அதை நேசக்கரத்தினூடும் செய்யலாம் என்று நினைக்கிறேன். நேசக்கரங்களை பலப்படுத்தினால் நிச்சயம்.. இவ்வாறான உறவுகளுக்கு இந்தப் பூமிப்பந்தில் நம்பிக்கையோடு வாழ வழிகாட்டலாம்.

இது வெறும் கதையாக இருந்துவிட்டுப் போகாமல்.. உணர்வுகளை மனச்சாட்சியை தட்டிக்கேட்க செய்ய வேண்டும்.

சாத்திரி இவ்வாறான வாழ உதவி வேண்டி இருக்கும் மக்களின் உண்மைக் கதைகளை வெளி உலகிற்கு கொண்டு வருவதற்காக உங்களை பாராட்டலாம். புலம்பெயர் நாடுகளில் மாதர் சங்கம் அமைச்சு.. வம்பளந்து திரியும்.. சாமி ஆடித் திரியும் பொண்டுகளை பற்றி எழுதிக் கொண்டிருப்பதிலும்.. இது மிகப் பயனுள்ள அம்சம் என்று நினைக்கிறேன்.

நன்றிகள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உருக்கும் உண்மைகள் தொடரும்.

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

புவிகரனுக்கு ஒரு கால் இல்லாததினால் ஊனம் என்கிறார்கள். அவரின் மனைவியின் மனத்தில் இருப்பது தான் ஊனம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.