Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதை மாற்ற முடிந்தாலும் அவரவர் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது என்பதற்கு என் வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான சம்பவங்களை சுருக்கமாக எழுத நினைக்கின்றேன்.

80 களில் யாழ் இந்துவில் க.பொ.த.சாதாரண பரீட்சையில் ஓரளவான பெறுபேறுகளை பெற்றுக்கொண்டேன்.அப்போது அடுத்து என்ன துறையில் படிப்பைத் தொடர்வது என்று வீட்டில் எல்லோரிடமும் ஒரு ஆதங்கம். காரணம் ஏற்கனவே எனது மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் உயர்தரம் கற்றவர்கள் அல்லது கற்றுக் கொண்டு இருப்பவர்கள். மூத்த அக்கா அதிகம் படித்து வைத்தியராக வர நினத்து எல்லாத்தையும் கோட்டை விட்டு விட்டார். 24 மணி நேரமும் புத்தகமும் கையுமாக அலைந்து கடைசியில் நாலு பாடத்திலும் சித்தி அடையவில்லை.

சின்னக்கா கலைத்துறையிலும் இரு சகோதரர்கள் வர்த்தகத் துறையிலும் சின்னண்ணா கணிதத்துறையிலும் படித்துக் கொண்டிருந்தார்கள்.அப்போது எனது தம்பி 8ம் வ்குப்பில் படித்துக் கொண்டிருந்தார்.

நான் விரும்பிய துறை கலைத்துறை.எனக்கு வாசிப்பதிலும் எழுதுவதிலும் அதிகமான ஆர்வம்.சிறு வயதிலிருந்தே அரசியலில் ஆர்வம் அதிகம்.கிடைக்கும் சகல பத்திரிகைகளையும் விடாமல் படிப்பேன்.அதைவிட பத்தாம் வகுப்பில் தமிழ்,சமயம்,சமூகக்கல்வி ஆகியவற்றில் திறமைச்சித்திகளைப் பெற்று இருந்தேன்.ஆகவே கலைத்துறையை தெரிவு செய்ய விரும்பினேன்.அப்பா உட்பட சகோதரங்கள் அனைவரும் என் விருப்பத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் எனது அம்மா மட்டும் அதை விரும்பவில்லை.

அம்மா சொன்னா ""தம்பி நீ தான் எங்கடை வீட்டுக்குள்ளேயே நல்லாப் படிப்பாய்.பத்தாம் வகுப்பில மற்றவையள் எடுத்த முடிவுகளை விட உனக்குத் தான் நல்ல முடிவுகள் கிடைச்சிருக்கு. நீ மருத்துவத்துறையில படிச்சா ஒரு வைத்தியரா வரலாம்.அது தான் என்ரை ஆசை தம்பி. மூத்த அக்காவும் பாஸ் பண்ணேல்லை.ஆனால் நீ கட்டாயம் பாஸ் பண்ணி,அதுவும் யாழ்ப்பாணத்தில நல்ல ஆசிரியர்கள் இருக்கினம்,அதனால எல்லாம் நல்லா நடக்கும் மருத்துவத்துறையில சேர்""என்று. நானும் ஏன் அம்மாவின் ஆசையைக் கெடுப்பான் என்று மருத்துவத்துறையில் சேர்ந்துவிட்டேன்.

தொடரும்

வாத்தியார்

...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி விஞ்ஞானப் பிரிவிற்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டு கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருந்தேன். எனது ஊரிற்கும் யாழ்ப்பானத்திற்கும் கிட்டத்தட்ட 15 மைல்கள் இருக்கும். ஒவ்வொரு நாளும் பேரூந்துப் பிரயாணம்.எங்கள் ஊரில் இருந்து அதிகமான மாணவர்கள் யாழ் பாடசாலைகளுக்குச் செல்வதால் போய் வரும் போது ஒரே கலகலப்பாக இருக்கும்.வார நாட்களில் பாடசாலைக்கும் விடுமுறை நாட்களில் தனியார் கல்வி நிலையத்திற்குமென நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.

இப்போது கணிதப்பிரிவில் படிக்கும் எனது அண்ணாவும் விடுமுறை நாட்களில் தனியார் கல்வி நிலையத்தில் கற்பதற்காக என்னுடன் யாழிற்கு வருவார். அவர் இறுதியாண்டிலும் நான் முதலாவது ஆண்டிலும் படித்துக் கொண்டிருந்தோம்.சந்தோசமாகப் பொய்க் கொண்டிருந்த என் வாழ்வில் இப்போது தான் விதி விளையாட ஆரம்பித்தது.

ஆம் உலகத் தமிழர்கள் எல்லோரையும் ஆழ்ந்த சோகத்தில் உறைய வைத்த நாள்.அன்று அதிகாலையில் வட பகுதி மக்கள் முதன் முதலாக ஒரு பரபரப்புடன் காணப்பட்ட நாள். 1983 ம் ஆண்டு ஜூலை மாதம் 24 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை.

தொடரும்

வாத்தியார்

.................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடுமுறை நாட்களில் எனக்கு ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக தனியார் கல்வி நிலையத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை.ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் என்னை நித்திரையால் எழுப்பிய என் அண்ணன் என் நிலமையை அறிந்து கொண்டு இன்றும் நீ வர வேண்டாம் நான் போகின்றேன் என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.அவர் முகத்தைக் கூடச் சரியாகப் பார்க்காமல் நான் மீண்டும் உறங்கிவிட்டேன்.

முற்பகல் 9 மணியளவில் வீட்டில் ஒரே பரபரப்பு.இரண்டாவதாக வீட்டிலிருந்து வெளியே சென்ற சின்னக்கா பேரூந்துகள் ஓடவில்லை என்றும் யாழ்ப்பாணத்தில் ஏதோ பிரச்னை என்றும் யாழ் சென்ற பஸ்கள் எல்லாம் திரும்பி வருகின்றன என்றும் கூறினார். ரியூசனுக்குப் போன என் அண்ணன் சென்ற பஸ் என்ன ஆனது என்று எவருக்கும் தெரியவில்லை.பிரதான வீதியில் நின்று திரும்பி வரும் பயணிகளையும் பஸ் ஓட்டுனர்களையும் விசாரித்தோம்.

யாராலும் சரியான பதிலைத் தர முடியவில்லை.

அப்போது அதே பஸ்ஸில் சென்ற ஒரு மாணவன் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரின் பாதுகாப்புடன் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தார்.

அவர் கூறிய தகவலின் படி மானிப்பாயில் வைத்து என் அண்ணன் உட்பட 9 பேர் பஸ்ஸால் இறக்கி விடப்பட்டு சிங்கள இன வெறி பிடித்த ராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்தோம்.19 வயதில் எம்மை விட்டுப் பிரிந்த அம் சகோதரனை எண்ணி வேதனையில் துடித்தோம்.துவண்டோம்.விரக்தியின் எல்லைக்கே சென்றோம். இங்கு மரண வீடு நடக்க கொழும்பிலே எனது இரண்டாவது அண்ணன் சிங்களக் காடையர்களிடம் இருந்து எப்படியோ தப்பி அகதியாக்கப் பட்டு ஒரு மாதம் கழித்து கப்பலில் ஊர் வந்து சேர்ந்தார்.

காலங்கள் மாறின. அண்ணனின் துயரத்திலிருந்து ஒருவாறு மீண்டு பழைய வாழ்க்கைக்கு திரும்பினேன்.ஆனாலும் முடியவில்லை.மனதில் மீண்டும் மீண்டும் ஒரு கேள்வி.ஏன்? எதற்காக என் அண்ணன்? பதில் கிடைக்கவில்லை.

மீண்டும் பாடசாலை வாழ்க்கை. ராணுவக் கெடு பிடிகள்.ராணுவக் காப்பரண்களை ஒவ்வொரு முறையும் தாண்டும் போதும் ஒரு வித அச்சம். அல்லது என் அண்ணனின் நினைவுகள்.

மேலும் இறுகிய பாதுகாப்புக் கெடுபிடிகளினால் பாடசாலை மாற்றம். யாழில் இருந்து எனது ஊரில் இருக்கும் பாடசாலைக்கு பெற்றோரின் அச்சத்தினால் மாற்றப்பட்டேன்.இயக்கங்கள் மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் அறிமுகமாயின.

அண்ணனின் இழப்பு என்னை ஏதோ ஒரு வகையில் ஒரு இயக்கத்திற்குள் இணைத்தது.அதே போல் எனது மற்றைய சகோதரர்களும் இன்னுமொரு இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார்கள்.

ஆனாலும் இதுவரை எங்களில் ஒருவரும் ஆயுதப் பயிற்சிக்குச் செல்லவில்லை.வீட்டிலே பெற்றோருக்கு விசயங்கள் தெரிய வருகின்றன.

ஏதோ ஒரு இயக்கத்திற்கு செல்ல ஆஅயத்தமான எனது இரன்டாவது அண்ணன் அம்மாவின் பலவந்த முயற்சியால் ஐரோப்பாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்.

தொடரும்

வாத்தியார்

...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை முடிய மாலை வேளைகளில் இயக்க வகுப்புகள்,பிரச்சாரங்கள் என்று நாட்கள் நகருகின்றன.எந்த நேரமும் நான் சார்ந்த இயக்கத்தின் ஆயுதப் பயிற்சிக்கு அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.விதி மீண்டும் என் வாழ்க்கையில் விளையாடியது. நான் ஆயுதப் பயிற்சிக்குச் செல்லப் போகின்றேன் என்ற செய்தி என் மூத்த அண்ணனின் காதில் எட்டிய மறு நாள் எனது மூத்த அண்ணன் தான் சார்ந்த இயக்கத்தின் ஆயுதப் பயிற்சிக்குச் சென்று விடுகின்றார்.வீட்டில் மீண்டும் துக்கம் துயரம்.1985 ம் ஆண்டு தை மாதம் ஒருவர் வெளி நாட்டிற்கும் மாசி மாதம் மற்றையவர் இயக்கத்திற்கும் சென்று விடுகின்றார்கள்.

நிலமையை அறிந்த எனது ஊர்ப் பொறுப்பாளராகிய எனது நண்பன் என்னைப் பயிற்சிக்கு அனுப்ப மறுக்கின்றான். நானும் வீட்டு நிலமையை நினைத்து ஊரிலிருந்தே அவர்களுக்கு உதவிகள் செய்து வந்தேன்.படிப்பிலும் கவனத்தை மீண்டும் செலுத்தினேன். நான் இயக்கத்திற்குச் செல்லமாட்டேன் என்று பெற்றோருக்கும் சகோதரிகளுக்கும் சத்தியம் செய்து கொடுத்தேன்.

இரு வாரங்கள் ஓடியிருக்கும். மீண்டும் என்னுடன் விதி விளையாடியது.

எனது தம்பியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட எனது அப்பா அவரை எப்போதும் தன்னுடனேயே வைத்திருந்தார்.தான் படிப்பிக்கும் பாடசாலைக்கு அவரையும் மாற்றி அழைத்துச் சென்றிருந்தார்.அப்படி இருந்தும் எங்கள் எல்லோரதும் கண்களில் மண்ணைத் தூவி விட்டு அவரும் அண்ணன் சென்ற இயக்கத்திற்கே சென்று விட்டார்.

மீண்டும் வீட்டில் அம்மாவின் கண்ணீர். அக்காமாரின் அழுகை.வீட்டின் கடைசிப் பிள்ளையாக எல்லோராலும் செல்லமாக நேசிக்கப் பட்ட எனது தம்பியும் இயக்கத்திற்கு தனது 17 வது வயதில் சென்றுவிட்டார்.

வீட்டில் எல்லோருடைய கண்களும் தற்போது என் மீது. அடுத்தது நானா என்ற கேள்வி.எதையும் நம்பத்தயாராக யாரும் இல்லை.செய்து கொடுத்த சத்தியத்தையும் நம்பத்தயாராகவில்லை.

இன்னும் நான்கு மாதத்தில் உயர்தர வகுப்பிற்கான பரீட்சை வேறு.

அடுத்து வந்த 24 மணி நேரங்களும் என் வாழ்க்கையில் விளையாடிய விதியின் நேரம்.வெள்ளிக் கிழமை என் தம்பி இயக்கத்திற்கு ஞாயிற்றுக்கிழமை நான் கொழும்பிற்கு அனுப்பப்படுகின்றேன். கடவுச் சீட்டுக் கூடக் கைகளில் இல்லை.

யாரையும் சந்திக்கவில்லை.எவரிடமும் விடை பெறவில்லை.

இரவோடு இரவாக மூட்டை கட்டி கொழும்பு வந்து இரண்டு மாதத்தில் கடவுச் சீட்டு எடுத்து ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டேன்.

தொடரும்

வாத்தியார்

................

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் "தலை விதி..".........மேலும் படிக்க ஆவலை தூண்டுகிறது. .ஒவ்வொருதமிழன் வாழ்விலும் சோகங்கள் மனதிற்குள் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறது..... தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் வெளி நாடு வந்து ஆறு மாதங்களின் பின்னர் இயக்கத்திற்குச் சென்ற எனது தம்பியை அவனது பொறுப்பாளர்களைத் தேடிப் பிடித்து ஒரு மாதிரி வீட்டுக்கு என் அம்மா அழைத்து வந்து விட்டார் என்று கடிதம் எழுதியிருந்தா.வாசித்து மிகவும் சந்தோசம் அடைந்தேன்.

சிறிது நாட்களின் பின்னர் எனது தம்பியும் இரு சகோதரிகளும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு அவர்கள் தங்கள் படிப்புக்களை மேற்கொண்டனர்.சிறிது காலங்களில் எனது மூத்த அண்ணாவும் தான் சார்ந்த இயக்கம் கலைக்கப்பட்ட போது அவர்களுடன் சேர்ந்து கொண்டார். எல்லோரும் படிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்ததால் நானும் எனது இங்கிருந்த அண்ணருமாகச் சேர்ந்து அவர்களைப் படிப்பித்தோம். அவர்களும் தங்கள் நிலமையை உணர்ந்து நன்றாகப் படித்து முடித்தார்கள். இலங்கையில் அதிகமாகப் படித்து நாலு பாடங்களிலும் தேறாத எனது மூத்த அக்காவிற்கு இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும் தனது வயதை எண்ணி அதைக் கைவிட்டார். இப்போது அவர் படித்த மொழித் துறையில் கலா நிதி பட்டம் பெற்று விட்டார்.இலங்கையில் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கின்றா. இது அவரின் தலைவிதி.

என்னை இயக்கத்திற்குச் செல்லவிடாமல் தான் சென்ற மூத்த அண்ணா ஒரு ஆங்கில ஆசிரியராகக் கடமை புரிகின்றார்.இது அவரின் தலைவிதி.

இவர்களுடன் சேர்ந்து சென்று படித்த எனது சின்னக்காவும் இந்தியாவில் ஒரு உடற்பயிற்சி ஆசிரியராகி விட்டார்.இது அவரின் தலைவிதி.

நான் வெளி நாடு வரக் காரணமாக இருந்த எனது தம்பி இப்போது கலா நிதிப் பட்டம் பெற்று ஆங்கிலப் பேராசிரியராகி விட்டார்.இது அவர் தலைவிதி.

ஏதோ ஒரு வகையில் என் வாழ்க்கையை பாதித்த இவர்கள் இந்த நிலையில் இருக்கும் போது நான் மட்டும் இங்கிருந்து குப்பை கொட்டுகின்றேன் இது தானா என் தலைவிதி.

வாத்தியார்

..............

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் படிக்கவில்லை ( பட்டம் பெறவில்லை ) என்ற ஆதங்கம் தெரிகிறது...

.எந்த நாடில் வாழ்கிறீர்கள் என்று கேட்கலாமா/ .ஏதாவது ஒரு துறையில் ...முன்னேற முயற்சி எடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் உங்களை பாதித்த அதே மானிப்பாய் சந்தியில் நடந்த படுகொலைகள்தான் என்னையும் மிக மோசமாக பாதித்தது ..நான் மானிப்பாய் இந்துவில் படித்தகாலம் அன்று காலை மானிப்பாய் சந்தி முலைக்கடையில் பிளேன் ரீ குடித்துக்கொண்டிருந்த பொழுது சண் ரவல்ஸ் தனியார். பஸ்சில் வந்த இராணுவம் சுட்டுக்கொண்டு வந்தார்கள்..அதில் எனக்கு தெரிந்த மாகியம்பதி (மாசியப்பிட்டி)மாணவன் ஒருவனும் இறந்து போனான்.

இயக்கத்தில் சேருவது தீண்டத்தகாத செயல் போலவும் தம்பி திரும்பி வந்தது சந்தோசத்தை தந்தது எனவும் உண்மையை சொன்னதற்கு நன்றி.

ஆனால் யாரும் சண்டை பிடித்து தமிழீழம் வேணும்.இப்பவும் ஆயுதபோராட்டத்திற்கு ஆதரவு.ஆரையும் பிடிச்சுகொண்டுபோய் சண்டை பிடிப்பதற்கு பணமும் கொடுக்கின்றோம்.

இதுக்குள்ள தான் படிக்கேல என்ற கவலை வேறு.இயக்கத்திற்கு போய் சாகவில்லை என்று சந்தோசப்படும் தம்பி.எனது பள்ளிக்கூடத்தில் தான் படித்திருக்கின்றீர்.அங்கிருந்து பல போராளிகள் உருவாகினார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்காவின் ஊக்கத்திற்கும் எழுதிய மடலுக்கும் எனது நன்றிகள்.

நான் என்னை இன்றைய சூழ் நிலையில் அடையாளம் காட்ட விரும்பவில்லை. மன்னிக்கவும்.

சாத்திரி அண்ணாவிற்கும் உங்கள் உணர்வைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.

ஏற்கனவே நீங்கள் எழுதிய ஒரு ஆக்கத்தை வாசித்து, நீங்கள் எனது அண்ணாவின் துயர சம்பவத்தைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள் என்றும் அதனால் உங்கள் வாழ்க்கைப் பாதை மாறியது என்றும் அறிந்திருந்தேன்.

என்னை விட அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் லட்சக் கணக்கில் களத்திலும் புலத்திலும் உள்ளார்கள்.

ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் சம்பவங்கள் வேறு வேறாக நடந்திருந்தாலும் அதன் தாக்கம் ஒன்றே.

எழுத விரும்பாமல் அல்லது முடியாமல் தங்கள் சோகங்களை உள்ளே பூட்டி வைத்திருப்பவர்களுக்காகவும் இது சமர்ப்பணம்.

வாத்தியார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்திற்கு நன்றிகள் அர்ஜுன்.

இருவரும் ஒரே பாடசாலையில் படித்ததையிட்டு மகிழ்ச்சி.

முதலில் அண்ணன் இயக்கத்திற்குச் சென்று விட்டதால் தான் தம்பி திரும்பி வந்ததையிட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆனாலும் அண்ணன் திரும்பி வந்ததது அவர் சார்ந்த இயக்கத்தால் அவர்கள் வீட்டுக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப் பட்டதால் மட்டுமே.அதையிட்டு நான் மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறவில்லை. அது அவரின் விதி. ஒரு முறை அடிபட்டவன் மீண்டும் அந்த முயற்சியில் இறங்கவில்லை என்பதே உண்மை.

அதை விட நான் அன்றைய சூழ் நிலையில் இயக்கத்திற்குச் செல்ல இருந்ததிற்கான காரணம் சிங்கள இனவெறியே. அன்றைய காலத்தில் போராடச் சென்றவர்கள் மிகக் குறைவு. சமூகத்தால் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட நிகழ்வுகள் அவை.எனக்குத்தெரிய 83 ஜூலைக் கலவரத்தின் பின்னரே ஒரு சிலர் வெளிப்படையாக போராட்டத்திற்கு வலுக்கூட்ட ஆரம்பித்தார்கள்.

வாத்தியார்

................

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்,

தற்போது சொல்லப்பயந்த விடயங்களைப் பலர் துணிவுடன் எழுத்தாக்கிறார்கள். அந்த வகையில் சொந்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறீர்கள். கதை துண்மு துண்டாக இருக்கிறது. ஒன்றாக்கிவிடுங்கள். வாசிப்போருக்கு இலகுவாக இருக்கும். விதியை எண்ணி நோகும் மனிதர்கள் இப்போ நிறைந்துபோயுள்ளார்கள். நீங்கள் இயக்கத்துக்குப் போக விரும்பி அது பலிக்காமல் விட்டதில் மகிழ்ச்சிப்படுங்கள். ஆயிரமாயிரம் பேர் ஏன் தங்களை இழந்தோம் என சிறைகளிலும் நாட்டுக்குள்ளும் இலங்கையைக் கடந்து கவலைப்படுகிறார்கள். அவர்களின் தலைவிதி உங்களுக்கு ஆகாததில் திருப்திப்படுங்கள்.

நீங்கள் இருக்கின்ற இடத்திலிருந்து உங்கள் விதியை மாற்ற படிக்கலாமல்லவா ? வெளிநாடுகளில் மட்டுமில்லை இப்போ ஊரிலும் வயதெல்லை கணக்கின்றி படித்துப் பட்டம் பெறுகிறார்கள்.

இத்தகைய பதிவுகள் தொடர்ந்து வரவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்திற்கு நன்றிகள் சாந்தி அக்கா.

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாத்தியார் தங்கள் கதைக்கு.....

நாம் ஏன் தோற்றோம் என்பதற்கு தங்கள் கதையில் வரும் ஒவ்வொருவரும் சாட்சி

அதை நாம் இன்னும் உணரவில்லை

இயக்கத்தில் சேருவது தீண்டத்தகாத செயல் போலவும் தம்பி திரும்பி வந்தது சந்தோசத்தை தந்தது எனவும் உண்மையை சொன்னதற்கு நன்றி.

ஆனால் யாரும் சண்டை பிடித்து தமிழீழம் வேணும்.இப்பவும் ஆயுதபோராட்டத்திற்கு ஆதரவு.ஆரையும் பிடிச்சுகொண்டுபோய் சண்டை பிடிப்பதற்கு பணமும் கொடுக்கின்றோம். இதுக்குள்ள தான் படிக்கேல என்ற கவலை வேறு.இயக்கத்திற்கு போய் சாகவில்லை என்று சந்தோசப்படும் தம்பி.

முதலில் அண்ணன் இயக்கத்திற்குச் சென்று விட்டதால் தான் தம்பி திரும்பி வந்ததையிட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

அதை விட நான் அன்றைய சூழ் நிலையில் இயக்கத்திற்குச் செல்ல இருந்ததிற்கான காரணம் சிங்கள இனவெறியே. அன்றைய காலத்தில் போராடச் சென்றவர்கள் மிகக் குறைவு. சமூகத்தால் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட நிகழ்வுகள் அவை.................

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் அண்ணா உங்கள் வாழ்க்கையில் நடந்ததை எழுதியுள்ளீர்கள்...கடைசியில் நீங்கள் என்னவாக ஆனீர்கள்...வாத்தியாரா அல்லது சொந்த வியாபாரம் செய்கிறீர்களா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா, தங்கள் கருத்திற்கு நன்றிகள்.

ரதி அவர்களுக்கும் நன்றிகள்.சொந்த வியாபாரம் செய்கின்றேன்.

வாத்தியார்

................

  • கருத்துக்கள உறவுகள்

-------

என்னை விட அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் லட்சக் கணக்கில் களத்திலும் புலத்திலும் உள்ளார்கள்.

ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் சம்பவங்கள் வேறு வேறாக நடந்திருந்தாலும் அதன் தாக்கம் ஒன்றே.

எழுத விரும்பாமல் அல்லது முடியாமல் தங்கள் சோகங்களை உள்ளே பூட்டி வைத்திருப்பவர்களுக்காகவும் இது சமர்ப்பணம்.

வாத்தியார்

வாத்தியார், உங்கள் சொந்தக்கதை போல பலரது வாழ்விலும், பல சம்பவங்கள் நடந்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தமிழ் சிறி அண்ணா.

உங்கள் கருத்திற்கு நன்றிகள்.

வாத்தியார்

..................

.

ரதி அவர்களுக்கும் நன்றிகள்.சொந்த வியாபாரம் செய்கின்றேன்.

வாத்தியார்

................

அப்ப பெயரை முதலாளி என்று வையுங்கோ,தப்பி வந்தவர்களுக்கும் ஒரு கதையுண்டு ஆனால் மாவீரர் ஆனவர்களுக்கு அதுவுமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப பெயரை முதலாளி என்று வையுங்கோ,தப்பி வந்தவர்களுக்கும் ஒரு கதையுண்டு ஆனால் மாவீரர் ஆனவர்களுக்கு அதுவுமில்லை

உச்சந்தலையில் ஓங்கி அடித்ததுபோல் இருக்கிறது

நன்றி

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜில்,

ஒவ்வொரு மாவீரனுக்கும் ஒவ்வொரு காவியம் உண்டு.ஏன் உலகத் தமிழர்களின் சரித்திரத்திலேயே இடம் உண்டு.

தயவு செய்து அளப்பரிய தியாகங்களைச் செய்த மாவீரர்களை இங்கே ஒப்பிட்டு அவர்களின் தியாகங்களைக் கொச்சைப் படுத்தாதீர்கள். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

விசுகு அண்ணா, ஜில் தான் ஏதோ தெரியாத்தனமாக எழுதினால் நீங்களுமா?

வாத்தியார்

...............

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்.. இன்றுதான் உங்களது இந்தப் பதிவைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது.. (நன்றி நியானி) ஈழத்தமிழராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வலி கட்டாயம் இருக்கும் என்பதற்கு உங்களது வாழ்க்கை அனுபவம் ஒரு நல்ல சான்று.

 

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி வாத்தியார்..!

வாத்தியார் உங்கள் கதையை இன்று தான் வாசித்தேன்...

 

இலங்கை இந்தியப் படைகளால் சீரழிக்கப்பட்ட குடும்பங்கள் தான் எத்தனை?

 

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு விதமான சோகங்கள்...

நன்றி  வாத்தியார் பதிவுக்கு. இன்று தான் முழுப் பதிவையும் வாசித்தேன். உங்களால் உங்கள் சகோதரங்கள் நல்லாய் இருக்கினம் அதுவும் உங்களுக்குக் கிடைத்த வெற்றிகளில் ஒன்று தானே, காலம் போகவில்லை நீங்கள் விரும்பிய துறையில் படிக்கலாம் என்பது எனது அபிப்பிராயம். வாழ்க்கை முழுவதும் நான் படிக்கவில்லையே என்று கவலைப் படுவதைவிட என்ன 3 வருடங்கள் தானே படியுங்கோ வாத்தியார்!

இன்று தான் இந்த பதிவை பார்த்தேன். ஒவ்வொரு வீட்டிலும் இப்படியான பல கதைகள். எல்லாரும் அதை முன் வந்து எழுதுவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.