Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மயில்க் குஞ்சு

Featured Replies

இழப்புக்கள் பிறந்தது

அவைகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றது

காலத்தால் தேற்றமுடியாத காயங்களில்

குருதி வழிந்துகொண்டே இருக்கின்றது

அன்றும் அசுரர்களை அழிக்க கடவுள்தான் வேண்டும்

இன்றும் எம்மை அழிப்பவனை

யாரோ ஒருவன் அழிக்கவேண்டும்

அப்படி நடந்தால் கொண்டாடுவோம்

எமது பெருவிருப்பங்களுக்காக

சிலுவை சுமந்தவர்கள்

கல்வாரிக்குள் இருந்து எழவே இல்லை

இலக்கை அடையமுடியாதவர்களின் மோட்சத்தை

நாமே பிரகடனப்படுத்திவிட்டு

இலக்கை நோக்கி போரை மீண்டும் தொடர்கின்றோம்

போரின் முடிவு இம்முறை நிறைவாக இருக்கவேண்டும்

சூரனின் வயிற்றுக்குள் சேவலை மட்டுமே

விடுவது வழக்கம்

இம்முறை மயில்க்குஞ்சையும் சேர்த்து விடவேண்டும்

கடசியாக முருகன் வேலெறிந்து

சூரன் பாட்டத்தை விழும்போது

சேவலும் மயிலும் ஒன்றாக பறக்கவேண்டும்

வன்னிக்குள் சனம் மீள நுழைந்துவிட்டது

மயில்க் குஞ்சு பிடிப்பிப்பதில் சிரமம் இருக்காது

கடுதாசிப்பெட்டிக்கு ஓட்டை போட்டு

கழுத்தை வெளிய விட்டு

எயர்லங்காவில் ஏத்தி எப்படியாவது கொண்டுவந்து

போரை நிறைவாக முடிக்கவேண்டும்

வரலாறு வகுத்த பாதைகளில் இருந்து

விலத்தி நடக்க எம்மால் முடியாது

எறும்பைக்கூட கொல்ல மறுத்த புத்தனின் பாதையில்

எம்மவர் தலைகளையும் கால்கைகளையும்

தோரணமாக தொங்கவிட

அவர்களால் முடிகின்றது

எமக்கு

இயல்பாக அழத்தெரியாது சிரிக்கத்தெரியாது

இன்னும் கண்ணீர் விழலுக்கு இறைத்த நீராகிறது

எம்மை எங்கே தொலைத்தோம் என்று நினைவில்லை

சுழிக் காறுகளில் சருகுகளாய் பறக்கின்றாம்

விழுமிடங்களில் புல்லுக்கோ நெல்லுக்கோ

உரமாகிக் கொண்டிருக்கின்றோம்.

அன்றும் அசுரர்களை அழிக்க கடவுள்தான் வேண்டும்

என்ற கருத்து அழகாவே எமக்கு புதுத்தப்பட்டுள்ளது.புகுத்தப்பட்டுக்கொண்டுமிருக்கிறது அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு

இயல்பாக அழத்தெரியாது சிரிக்கத்தெரியாது

இன்னும் கண்ணீர் விழலுக்கு இறைத்த நீராகிறது

எம்மை எங்கே தொலைத்தோம் என்று நினைவில்லை

சுழிக் காற்றுகளில் சருகுகளாய் பறக்கின்றாம்

விழுமிடங்களில் புல்லுக்கோ நெல்லுக்கோ

உரமாகிக் கொண்டிருக்கின்றோம்.

வார்த்தைகள் வரவில்லை ஊமைக்கனவுபோல உள்ளுக்குள்ளே அலைமோதும் துயரை வெளிக்கொட்டத் தெரியவில்லை சுகன், அப்படியே கொட்டிவிட்டால் அதுவே பாரிய ஆபத்தாகிவிடுமோ என்ற அச்சம் உயிர்ப்பூவை கசக்கிறது. என்ன செய்ய.... விடை காண முடியாத பல கேள்விகள் முளைவிடுவதை நிறுத்த முடியவில்லை. இன்னும் ஒரு நீண்ட பெரும்பயணத்திற்கு தயார்ப்படுத்தத் திராணியற்று சுயம் வலுவிழக்கிறது. யாருக்காகவோ, எதற்காகவோ யாரோ சிலர் போடும் வேசங்கள் ஒட்டு மொத்தமாக இன்னும் நம்மை பதம் பார்க்கப் போகிறது... உங்கள் கவிதைக்கு நேரடியான பாராட்டைப் பகிர்ந்து கொள்ளாமல் இந்தக் கவிதைக்குள் என்னைப் புதைத்துக் கொண்டேன். இக்கருத்தை வாசித்துவிட்டு மூளை குழம்பி விட்டதோ என்று எண்ண வேண்டாம். ஏனெனில் சில சமயங்களில் என் அந்தராத்மா விழித்துக் கொள்ளும். :D

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

அன்றும் அசுரர்களை அழிக்க கடவுள்தான் வேண்டும்

இன்றும் எம்மை அழிப்பவனை

யாரோ ஒருவன் அழிக்கவேண்டும்

அப்படி நடந்தால் கொண்டாடுவோம்

ஏதும் செய்ய திராணியற்ற நிலையில் தான் இன்னும் நாம் உள்ளோம். நன்றி உங்கள் உள்ள கிடக்கைகளை கொட்டியமைக்கு. பலர் உங்களின் மனநிலையில் தான் வாழ்கிறார்கள்.இன்னும் சிலர் அதில் கூதல் காய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பலருடைய மனநிலை உங்களை போன்று தான் இருக்கிறது . உங்கள் கவிதைபகிர்வுக்கு நன்றி.........

  • கருத்துக்கள உறவுகள்

எமது பெருவிருப்பங்களுக்காக

சிலுவை சுமந்தவர்கள்

கல்வாரிக்குள் இருந்து எழவே இல்லை

இலக்கை அடையமுடியாதவர்களின் மோட்சத்தை

நாமே பிரகடனப்படுத்திவிட்டு

இலக்கை நோக்கி போரை மீண்டும் தொடர்கின்றோம்

அதே பாணியில்

அதே ஆட்களுடன்

அதே மனநிலையில்

அதே .....

அதே.....????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்கு

இயல்பாக அழத்தெரியாது சிரிக்கத்தெரியாது

இன்னும் கண்ணீர் விழலுக்கு இறைத்த நீராகிறது

எம்மை எங்கே தொலைத்தோம் என்று நினைவில்லை

சுழிக் காறுகளில் சருகுகளாய் பறக்கின்றாம்

விழுமிடங்களில் புல்லுக்கோ நெல்லுக்கோ

உரமாகிக் கொண்டிருக்கின்றோம்.

சருகுகள் என்று தெரிந்தும் /தெரியாமலே...

எம்மிடையேயே உராஞ்சி உராஞ்சி, தீயாகி சாம்பராகிறோம்.

"மயில்குஞ்சு" குறிப்பாக எதுவென்று விளங்கவில்லை..எதுவாகவும் இருக்கலாம் என்பதர்ற்கு மேல் நீங்கள் எதையாவது குறிப்பாக குறித்தீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுகன் அண்ணா,

நிறையத்தடவைகள் உங்கள் எழுத்துக்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். அது போல தான் இந்த கவிதையும்...

ஒவ்வொருவரியும் இதயத்தை கீறிக்கொள்கிறது... எனக்கு என்ன எழுதுவது என தெரியவில்லை... ஆனால் வாசிக்கும் போது மனசு கனக்கிறது. :D

எமது பெருவிருப்பங்களுக்காக

சிலுவை சுமந்தவர்கள்

கல்வாரிக்குள் இருந்து எழவே இல்லை

இலக்கை அடையமுடியாதவர்களின் மோட்சத்தை

நாமே பிரகடனப்படுத்திவிட்டு

இலக்கை நோக்கி போரை மீண்டும் தொடர்கின்றோம்

சிலுவை சுமந்தவர்களின் நினைவுகள் இன்று எம்மிடம் இருப்பதை விரும்பவில்லை. அவர்களின் நினைவே ஒரு சிலுவையாக எமை உறுத்தியதால் போன வருடமே கழட்டி வைத்துவிட்டோம். கல்வாரிகள் எல்லாம் சுண்ணாம்பு அறைக்குள் நாவுக்கரசர் இருக்கும் போது எப்படி இனிமையாக இருந்ததோ அப்படியே இருக்குது என்று எம் மனதை நம்பவைத்து விட்டோம்.

இலக்கற்ற ஒரு பாதையில், இலக்கமற்ற வாகனத்தில், கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு பயணம் போகின்றோம் இப்போது

Edited by நிழலி

  • தொடங்கியவர்

"மயில்குஞ்சு" குறிப்பாக எதுவென்று விளங்கவில்லை..எதுவாகவும் இருக்கலாம் என்பதர்ற்கு மேல் நீங்கள் எதையாவது குறிப்பாக குறித்தீர்களா?

வோல்கனோ, புலத்திற்கு நாம் முடிந்தவரை அனைத்தையும் காவி வந்துவிட்டதாகவே கருதி வாழ்கின்றோம். தேசியத்தில் இருந்து நாம் பிரிந்துவிடவில்லை என்று கருதுகின்றோம். மிச்சமாக இருப்பவைகளையும் நாம் எம்மருகில் எடுத்துக்கொள்ள முற்படுகின்றோம். கடவுளோ கலையோ கலாச்சாரமோ மொழியோ நிலையானதில்லை எமது நிலமே நிலையானது. நிலையான ஒன்றிலே தான் நிலையில்லாதவைகள் மாற்றங்களை சந்தித்தவண்ணம் உயிர்வாழமுடியும். நிலத்தை எம்மால் காவி வர முடியாது. நாம் தான் நிலத்திற்கு மீளச் செல்ல முடியும். இதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதைப் பற்றி சிந்திக்கவும் முடியவில்லை. ஆனால் எமது இனம் குறித்த உணர்ச்சியும் செயற்பாடும் நிலத்துக்கு திரும்புவது குறித்த சிந்தனையும் அற்று நிலத்தில் இருக்கும் மக்கள் பற்றிய சிந்தனையும் அற்று முனையப்படுகின்றது. நாம் தமிழராக எங்கும் இருப்போம் என்ற எண்ணத்தை தருவது நாம் காவிவந்தவைகள் தான். இந்த எண்ணத்தை என்னும் உறுதிப்படுத்த விடுபட்டவைகளையும் நாம் எடுத்தாகவேண்டும். அவை எப்படிப்பட்டவை எவ்விதமான முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையே மயில்க் குஞ்சாக குறிக்க முற்பட்டேன்.

அதே பாணியில்

அதே ஆட்களுடன்

அதே மனநிலையில்

அதே .....

அதே.....????????????

விசுகு, பாணியும் ஆட்களும் மனநிலையும் மாறியிருக்கலாம் ஆனால் அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லை. எமது தோல்விகள் ஏன் என்ற பெரும் கேள்விக்கான விடைதான் எமது பயணப்பாதையாக அமைய முடியும். கேள்விகள் குறித்தே எம்மிடம் எந்த தெளிவும் இல்லை. எம்மை நோக்கிய அக நிலைக் கேள்விகளுக்கு நாம் ஒரு வடிவமாக ஒன்றுபட்ட அடயாள இனமாக இல்லை. எமது தோல்விகளுக்கான புறநிலைச் சக்திகளின் தாக்கம் குறித்து கேள்விகள் தொடுக்க முடியாது உள்ளோம் காரணம் புலத்து வாழ்வே புறநிலைதான்.

என்ற கருத்து அழகாவே எமக்கு புதுத்தப்பட்டுள்ளது.புகுத்தப்பட்டுக்கொண்டுமிருக்கிறது அல்லவா?

இது தொடர்ந்து கொண்டே இருக்கும். எமக்குள் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அடிப்படை எமக்குள் நம்பிக்கை இன்மையை எப்போதும் நிலைநிறுத்தியபடி இருக்கும். அதுவே எமக்கான விருப்பங்களை நிறைவேற்ற யாரோ ஒருவரை எதிர்பார்க்கும் நிலையை நிரந்தரமாக்கிவிட்டிருக்கின்றது.

வார்த்தைகள் வரவில்லை ஊமைக்கனவுபோல உள்ளுக்குள்ளே அலைமோதும் துயரை வெளிக்கொட்டத் தெரியவில்லை சுகன், அப்படியே கொட்டிவிட்டால் அதுவே பாரிய ஆபத்தாகிவிடுமோ என்ற அச்சம் உயிர்ப்பூவை கசக்கிறது. என்ன செய்ய.... விடை காண முடியாத பல கேள்விகள் முளைவிடுவதை நிறுத்த முடியவில்லை. இன்னும் ஒரு நீண்ட பெரும்பயணத்திற்கு தயார்ப்படுத்தத் திராணியற்று சுயம் வலுவிழக்கிறது. யாருக்காகவோ, எதற்காகவோ யாரோ சிலர் போடும் வேசங்கள் ஒட்டு மொத்தமாக இன்னும் நம்மை பதம் பார்க்கப் போகிறது... உங்கள் கவிதைக்கு நேரடியான பாராட்டைப் பகிர்ந்து கொள்ளாமல் இந்தக் கவிதைக்குள் என்னைப் புதைத்துக் கொண்டேன். இக்கருத்தை வாசித்துவிட்டு மூளை குழம்பி விட்டதோ என்று எண்ண வேண்டாம். ஏனெனில் சில சமயங்களில் என் அந்தராத்மா விழித்துக் கொள்ளும்.

உண்மைதான். இப்போது புலத்து முனைவுகள் குறித்து கருத்து எழுதுவதைக் காட்டிலும் அமைதி நல்லது என்றே நினைக்கின்றேன்.

அவலங்களாலும் வேதனைகளாலும் உந்தப்படும் உணர்ச்சி சில வேளை எழுத்தாக மாறிவிடுகின்றது. உண்மையில் இந்தக் களத்தில் எத்தனையோ வேதனைகள் பதிவாகி இருக்கின்றது. அதற்குப் பெயர் கவிதை என்பதை விட கண்ணீர் என்றே எண்ணத்தோன்றும். பெரும்பாலான இடங்களில் அந்த எழுத்துக்களில் ஐக்கியமாக முடிகின்றது தவிர எழுத்துநோக்கி பதில் எழுத முடியாத நிலை உள்ளது. ஒரு கற்பனையை அதை வெளிப்படுத்தும் திறமை குறித்து பதில் எழுதலாம் ஆனால் எழுதும் பொருள் சம்பவமாக இருக்கும் போது பதிலையோ பாராட்டையோ எதிர்பார்க்க முடியாது எழுதவும் முடிவதில்லை. பல சம்பவங்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டே நடக்கின்றது அதன் பதிவுகளும் அப்படியே பலவிடங்களில் அமைகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"மயில்க்குஞ்சு"

மனது பாரமாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

போரின் முடிவு இம்முறை நிறைவாக இருக்கவேண்டும்

சூரனின் வயிற்றுக்குள் சேவலை மட்டுமே

விடுவது வழக்கம்

இம்முறை மயில்க்குஞ்சையும் சேர்த்து விடவேண்டும்

கடசியாக முருகன் வேலெறிந்து

சூரன் பாட்டத்தை விழும்போது

எனும் வரிகளின் முழுப்பொருள் என்ன சுகன்?

முகம் தொலைத்து வந்தோம்

இன்று முகவரியும் தொலைத்து விட்மோம்

மண் அழிந்தாலும் மரபழியாமல் வாழ்வோம்

பொன்கொடுத்து மண் எடுத்த காலம் மாறிபபோய்

இன்று பெண்கொடுத்து மண் எடுக்கும் காலமாகிநிற்கின்றது

மாற்றம் அது மாற்றமில்லாதது

மாறும் அதுவரை மவுனமாய் அழுவோம்

இல்லை மாண்டு போவோம்

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமாக எழுதுபவர்களில் நீங்களும் ஒருவர்...வித்தியாசமான நடையில் யதார்த்தத்தை கவிதையாக பதிந்து உள்ளீர்கள் ...தொடர்ந்து எழுதுங்கள்.

நம்பிக்கை வையுங்கள்

நாளை நமதே!

  • கருத்துக்கள உறவுகள்

முகம் தொலைத்து வந்தோம்

இன்று முகவரியும் தொலைத்து விட்மோம்

மண் அழிந்தாலும் மரபழியாமல் வாழ்வோம்

பொன்கொடுத்து மண் எடுத்த காலம் மாறிபபோய்

இன்று பெண்கொடுத்து மண் எடுக்கும் காலமாகிநிற்கின்றது

மாற்றம் அது மாற்றமில்லாதது

மாறும் அதுவரை மவுனமாய் அழுவோம்

இல்லை மாண்டு போவோம்

அடடா பரணி மீண்டும் பரணியில். சா யாழில்.கவிதையோடு மீண்டும் யாழில். வாங்கோ மிக நீண்ட நாட்களுக்கு பின். சேர்ப்பில் வைத்திருக்கும் கவிதைகளை எடுத்து விடுங்கோ.நாம் தோற்ற இனமல்ல தோல்வியில் இருந்து வெற்றி நோக்கி போகும் இனம்.

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் படித்த மனதை விட்டு அகலாத கவிதை ஒன்று...எழுதியவர் யாரோ ஒரு முகமறியாத புலி வீரர் கவிதை இது தான்;

//ஏய் எதிரியே என்னை என் மண்ணில் புதைப்பாய்‍‍‍- ‍‍‍‍‍என் மண்ணை எங்கே புதைப்பாய்//

எமது பெருவிருப்பங்களுக்காக

சிலுவை சுமந்தவர்கள்

கல்வாரிக்குள் இருந்து எழவே இல்லை

இலக்கை அடையமுடியாதவர்களின் மோட்சத்தை

நாமே பிரகடனப்படுத்திவிட்டு

இலக்கை நோக்கி போரை மீண்டும் தொடர்கின்றோம்

கவிதை சிறப்பாக உள்ளது சுகன்.

எமக்கு

இயல்பாக அழத்தெரியாது சிரிக்கத்தெரியாது

இன்னும் கண்ணீர் விழலுக்கு இறைத்த நீராகிறது

எம்மை எங்கே தொலைத்தோம் என்று நினைவில்லை

சுழிக் காறுகளில் சருகுகளாய் பறக்கின்றாம்

விழுமிடங்களில் புல்லுக்கோ நெல்லுக்கோ

உரமாகிக் கொண்டிருக்கின்றோம்.

உண்மையில் சருகாய் உரமாகிறோமா?

Edited by Innumoruvan

  • தொடங்கியவர்

எனும் வரிகளின் முழுப்பொருள் என்ன சுகன்?

கதைகளில் சூரன் எனில் நிஜத்தில் மகிந்தன் பரிவாரங்கள். எமது இருப்பும் அதன் நீட்சியும் கதைகளினூடே தொடர்கின்றது. கதைளோடு எமது ஐக்கியம் நிரந்தரமானது. எமது இருப்பும் அழிவும் கதைகளோடு சம்மந்தப்படுகின்றது. கதைகள் சாதராணமான ஒன்றாக கருத முடியாது மாறாக இனத்தை வழிநடத்தும் சக்திவாய்ந்தவையாகவும் இருக்கின்றது. ஆண்டாண்டுகாலம் அன்னிய ஆட்சிகளில் இருந்து இவ்வாறான கதைகள் என்னும் ஊன்றுகோலை ஊன்றித்தான் இனம் எஞ்சிப்பிழைக்கவும் முடிந்தது. கதைகள் மீதான பற்றும் செயற்பாடும் எம்மை சிதைக்கவும் அழிக்கவும் முற்படும்போது கதைகளை மாற்ற முடியாது.அடிப்படையில் எமது நம்பிக்கை எம்மைச் சர்ந்ததில் இருந்து விலத்திவைக்கப்பட்டு கதைகளில் முடிச்சுப்போடப்படுகின்றது. ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையும் தன்நம்பிக்கையும் திறமை சார்ந்த அறிவு பூர்வமான நம்பிக்கையும் கதைகளூடாக நிராகரிக்கப்படுகின்றபோது நிஜவாழ்வில் தோல்வி நிகழ்கின்றது. புனைவூடாகவும் நிஜத்தூடாகவும் எமது வாழ்வு எப்படி முடிவு நோக்கி நகர்த்தப்படுகின்றது என்பதை குறிப்பிடும் முயற்சியாகவே ஒப்பிட்டு எழுத முற்பட்டேன்.

உண்மையில் சருகாய் உரமாகிறோமா?

தூர நோக்கில் அவ்வாறுதான் எண்ணத்தோன்றுகின்றது. எம்மீதான நெருக்கடி தனியே சிங்களம் ஏற்படுத்தியதில்லை பல நாடுகளின் சுயநலம் சம்மந்தப்படுகின்றது. அந்நாடுகளில் அகதியாகி அடிமையாகி ஒவ்வொரு தலைமுறையும் புலம்பெயர் தேசங்களில் மாறும்போது எமது மொழி எமது வாழ்க்கை முறை உறவு முறை எல்லாம் படிப்படியாக மாறி எந்த இடத்தில் இருக்கின்றோமோ அதற்கேற்ற நிறத்திற்கு நாம் மாறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகின்றது. எமது நிலத்தில் உரமாகும் போதே நாம் நிலைக்க முடியும் என்று நம்புகின்றேன். நிலத்தை தவிர்ந்த பிற எந்தக் கூறின் ஊடாகவும் நாம் தூரநோக்கில் தலமுறைகள் தாண்டி நிலைக்க முடியுமா? உயிர்வாழ முடியும் தனித்துவத்துடன் வாழமுடியுமா? எமது இடத்தில் இருந்து சிந்திக்காமல் எமது பேரன்கள் இடத்தில் இருந்து சிந்திக்கும்போது அப்படி ஒரு அச்சம் இயல்பாக எழுகின்றதே.

  • கருத்துக்கள உறவுகள்

கதைகளில் சூரன் எனில் நிஜத்தில் மகிந்தன் பரிவாரங்கள். எமது இருப்பும் அதன் நீட்சியும் கதைகளினூடே தொடர்கின்றது. கதைளோடு எமது ஐக்கியம் நிரந்தரமானது. எமது இருப்பும் அழிவும் கதைகளோடு சம்மந்தப்படுகின்றது. கதைகள் சாதராணமான ஒன்றாக கருத முடியாது மாறாக இனத்தை வழிநடத்தும் சக்திவாய்ந்தவையாகவும் இருக்கின்றது. ஆண்டாண்டுகாலம் அன்னிய ஆட்சிகளில் இருந்து இவ்வாறான கதைகள் என்னும் ஊன்றுகோலை ஊன்றித்தான் இனம் எஞ்சிப்பிழைக்கவும் முடிந்தது. கதைகள் மீதான பற்றும் செயற்பாடும் எம்மை சிதைக்கவும் அழிக்கவும் முற்படும்போது கதைகளை மாற்ற முடியாது.அடிப்படையில் எமது நம்பிக்கை எம்மைச் சர்ந்ததில் இருந்து விலத்திவைக்கப்பட்டு கதைகளில் முடிச்சுப்போடப்படுகின்றது. ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையும் தன்நம்பிக்கையும் திறமை சார்ந்த அறிவு பூர்வமான நம்பிக்கையும் கதைகளூடாக நிராகரிக்கப்படுகின்றபோது நிஜவாழ்வில் தோல்வி நிகழ்கின்றது. புனைவூடாகவும் நிஜத்தூடாகவும் எமது வாழ்வு எப்படி முடிவு நோக்கி நகர்த்தப்படுகின்றது என்பதை குறிப்பிடும் முயற்சியாகவே ஒப்பிட்டு எழுத முற்பட்டேன்.

நன்றிகள் சுகன்.

  • கருத்துக்கள உறவுகள்

சுகன்!

மயில்! பச்சையா? நீலமா? பகுக்க முடிவதில்லை.

வேண்டாம்! கனமான கவிதையிது!

கருத்தெழுதி கறைப்படுத்த விரும்பவில்லை!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.