Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் யுத்தம்! தயாராகும் புலிப்படை! - நக்கீரன் இதழ்(19-05-10)

Featured Replies

jouranlistpandian.jpg

ஈழ மண்ணில் சுதந் திரக் காற்று வீசும் என்ற நம்பிக்கை இன்னமும் அற்றுப் போய்விடவில்லை. கிழக்கு மாகாணக் காடுகளில் உள்ள மரங்களுடன் சேர்ந்து அந்த நம்பிக்கை உயர்ந்து நிற்கிறது. ""முள்ளி வாய்க்கால் கொடூரத்தின் ஓராண்டு நிறைவில், உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழத் துயர நினைவுகளில் மூழ்கி யிருக்கும் நிலையில், விடுதலை நம்பிக்கை வீழ்ந்துவிடவில்லை'' என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பாண்டி யன். அரசியல் பத்திரிகை வட்டாரங்களில் அறியப் பட்டவரான இவர், கடந்த 15 நாட்களுக்கு முன் இலங்கைக்குப் பயணம் செய்தவர்.

2009 மே 17-க்குப் பிறகு, ஈழமக்களின் வாழ்வையும் விடு தலைப் போராட்ட நிலவரத்தையும் இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டை மீறி அறிந்து வந்து சொல்வதற்கான வாய்ப்பு கள் இல்லாததால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பரிதவிப்போடு இருந்தார்கள் என் கிற பத்திரிகையாளர் பாண்டியன், ""ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் முக்கிய தளபதியாக விளங் கும் சங்கீதன்தான் எனக்கு அழைப்பு விடுத்தார். ஈழ நிலவரத்தை நேரில் அறிந்துவர எனக்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தெரிவித்த சங்கீதன், கொழும்புக்குப் பயணம் மேற்கொள் ளும்படி அறிவுறுத்தினார்'' என்கிறார்.

உரிய அனுமதியுடனும் ஆவணங்களுட னும் இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு விமானப் பயணம் மேற்கொண்ட பாண்டியன், அதற்கடுத்த சமிக்ஞைக்காக காத்திருக்க வேண்டியதாயிற்று. அதன்பின், திரிகோண மலைக்கு வருமாறு அவருக்குத் தகவல் தெரி விக்கப்படுகிறது. சாலை வழியே திரிகோண மலைக்குப் பயணித்தார் பாண்டியன். வெட்ட வெளியாய் காட்சியளிக்கும் தமிழர் பகுதிகளின் துயரங்கள் கண்ணில் படுகின்றன. சிங்கள ராணுவத்தின் வாகனங்கள் ரோந்து சுற்றிய படியே இருக்கின்றன.

412_1.jpgjouranlistpandian1.jpg

விடியற்காலை நேரத்தில் திரிகோண மலைக்குச் சென்ற பத்திரிகையாளர் பாண்டிய னை அழைத்துச் செல்ல ஒரு வேன் வருகிறது. அந்த வேனில் இருந்தவர்கள் இளைஞர்கள். சிவில் உடையில்தான் இருந்தார்கள். ஆனால், அவர்கள் விடுதலைப்புலிகள். அவரை ஏற்றிக் கொண்ட வேன், கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சுற்றுலாதலத்திற்குச் செல்கிறது. பக்கத்திலேயே ஒரு ராணுவ முகாம். ஜீப்புகளில் சிங்கள ராணு வத்தினர் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். வேனில் இருந்த இளைஞர்கள் பதற்றப்பட வில்லை. அந்த சுற்றுலாதலத்திற்கு வந்திருக்கும் மற்ற வாகனங் களுடன் ஒன்றாக விடுதலைப் புலிகளின் வேனும் செல் கிறது. உள்ளே இருந்த இளை ஞர்களிடம் வாக்கி-டாக்கி இருக்கிறது. அதன் மூலமாக அவர்களுக்கு கட்டளைகள் வந்தபடியே இருக்க, இவர் களும் பதிலளித்துக் கொண்டே பயணிக் கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேன் நிற்கிறது. ""அது எந்த இடம் என்று எனக்குத் தெரியவில்லை. இறங்கியவுடன், "வாருங்கோ..' என்றபடி என்னை அந்த இளைஞர்கள் மலைக்காட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள். ஆள் நடமாட்டம் இல்லாத காடு. மரங்கள், அடர்த்தி யான புதர்கள் என வெளியே இருந்து வருபவர்களுக்கு வழி தெரியாமல் திணறடிக்கும் வகையில் இருந்த மலைக்காட்டில், இளைஞர் கள் வழிநடத்த 4 கி.மீ. தூரத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். புதிய அனுபவம் என்பதால் அந்தச் சூழலும் நடைப்பயணமும் சற்று சிரமமாகத்தான் இருந்தது '' என்கிறார்.

காட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாண்டியனைக் காத்திருக்கச் சொல்கிறார்கள். அந்த இடத்தில் 50 பேருக்கு குறையாத அளவில் தமிழர்களின் படை இருக்கிறது. உலக நாடுகளை வியக்க வைத்த போராளி இயக்கமான விடுதலைப் புலிகளின் உடையுடன் முதன்முதலாக புலிப்படை யினரைப் பார்க்கிறார் பாண்டியன். அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன. ஏ.கே.47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள் இந்த ஆயுதங்களுடன் மனதைரியம் என்கிற வலிமையான ஆயுதத்தையும் கொண்ட வர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

புலிப்படையில் உள்ள ஒவ்வொருவரின் முதுகிலும் ஒரு பை இருக்கிறது. அது, அவர்கள் ஓரிடத்திலேயே நிலைகொண்டிருப்பதில்லை என்பதையும் மலைக்காடு முழுவதும் சுற்றி வந்த படியே இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. அவர்களின் உற்சாக-உத்வேக மந்திரம் பிரபாகரன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பெயரைச் சொன்னாலே அவர்களின் நாடிநரம்பு களில் முறுக்கேறுகிறது. காட்டில் அவர்கள் மேற் கொள்ளும் பயிற்சிகளில் பிரபாகரன் பாணியை பார்க்க முடிகிறது. குறைந்த அளவிலான போராளிப் படையை வைத்துக்கொண்டு ஒரு நாட்டின் ராணுவத்தை எதிர்கொண்டு முறியடிப் பது எப்படி என்கிற பயிற்சி களை அவர்கள் மேற் கொள்கிறார்கள். பயிற்சிகள் அனைத்தும் கடுமையான வை. காட்டுக்குள் போதிய வசதிகள் இல்லாத நிலையி லேயே இந்தப் பயிற்சிகள் தொடர்வதை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்கிறார் பாண்டியன்.

""நீங்க எங்களை மன்னிக் கணும். தற்போதைய சூழ்நிலையில் படம் எடுக்க ஏலாது. எங்கட நிலைமையை நீங்க புரிஞ்சவராய் இருப்பீர்கள் என நினைக்கிறோம்'' என மென்மையான மறுப்பு வெளிப்படவே, புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்துவிடுகிறார் பாண்டியன். ""ரொம்ப நன்றிங்க அய்யா... ஏதேனும் ஒரு படம் வெளியே போய் பிரசுரமாகி, அதன்மூலம் எந்தக் காடு, எத்தனை நபர்கள் என்ற பின்புலம் தெரிந்து போகுமென்டால், மீண்டும் விடுதலைப் போராட்டத்தை வலிமைப்படுத்தும் எங்களின் முயற்சிகள் தோற்றுப்போகும்'' என்கிறார்கள் புலிகள்.

பயிற்சிகளுக்குப் பிறகு, காட்டுப்பகுதியி லேயே சமையல் நடக்கிறது. அதிகம் புகை வராத மரக்கட்டைகளைக் கொண்டு கச்சிதமாக அடுப்பு மூட்டி, உணவு தயாரிக்கிறார்கள். ""தாய்த் தமிழகத்திலிருந்து வந்திருக்கிற பத்திரிகை சகோதரருக்கு நம்ம ஊரு சொதி செஞ்சு கொடுங்கோ'' என்கிறார் ஒரு புலி. ""சகோதரர் கேட்பதை செய்து கொடுப்போம்'' என்கிறார் இன்னொரு புலி. போராட்டக்களத்திலும் அவர் களின் விருந்தோம்பல் பண்பு குறையவில்லை. ""எங்கட பண்பும் வீரமும் ஒருநாளும் மறைந்து போகாது'' என்கிறார்கள் புலிகள்.

அவர்களில் ஒருவர் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார். பிறகு, தனது வாக்கி-டாக்கியில் யாரிடமோ பேசிவிட்டு, தயாராக இருங்கள் என்கிறார். அங்கிருந்த 50 புலிகளும் பொசிஷன் எடுத்து நிற்கிறார்கள். சிலர் தரையில் படுத்து, தலையை மட்டும் உயர்த்தி, துப்பாக்கியால் குறிபார்த்தபடி பொசிஷன் எடுக்கிறார்கள். சிலர், மலைக்காட்டில் உள்ள உயர்ந்த மரங்களில் ஏறி, அதன் கிளைகளில் படுத்தபடி, குறி பார்க்கிறார் கள். எல்லோரும் எதிர்பார்ப்புடன் இருந்த நேரத்தில், பத்திரிகையாளர் பாண்டி யனை நோக்கி வேகமாகவும் கம்பீர மாகவும் வருகிறது அந்த உருவம்.

நடுத்தர வயது. நன்றாக ஷேவ் செய்யப்பட்ட முகம். பிரபாகரன் போலவே இடுப்பில் பெல்ட் அணிந் திருக்க, அதில் துப்பாக்கிகள் இருக்கின்றன. பாதுகாப்புக்கு, துப்பாக்கி ஏந்திய புலிகள். பாண்டியனை நெருங்கி வந்து, ""வாருங்கோ... வாருங்கோ.. உங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன்'' என்று கைகொடுத்த அவர், கேணல் ராம். கிழக்கு மாகாணமான அம்பாறையின் விடுதலைப்புலிகள் தளபதி.

புலிகளின் ராஜதந்திர உத்திகளின் படி, நான்காம் ஈழப்போரின் கடைசி கட்டத்தில் கேணல் ராம் தலைமையி லான படை பங்கேற்கவில்லை. கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பு வகித்த அவரையும், வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பு வகித்த நகுலனையும் தங்கள் படையினருடன் பத்திரமாக இருக்கும்படி உத்தரவிட்டார் பிரபாகரன். தன்னிடமிருந்து கட்டளை கள் வந்தபிறகு களத்திற்கு வரலாம் என்பதுதான் அவரது உத்தரவு.

2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தி லேயே 4000 பேருடன் இருவரது படைகளும் காட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்துவிடுகிறது. முள்ளிவாய்க்கால் தாக்குதல்களின்போது, தலைமையின் கட்டளைப்படி இவர்கள் காட்டில்தான் இருந்தார்கள். அதனால்தான், இப் போதும் சிங்கள ராணுவத்திற்கு சவாலாக இருக்கிறார்கள்.

பாண்டியனுக்கு கைகொடுத்த கேணல் ராம், ""யுத்தத்தின் கடைசி நிமிடம் வரை தலைமை எங்களை அழைக்கவில்லை. காட்டுக்குள் இருந்து போரைத் தொடரவேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். எங்களுடன் இருந்த 4000 புலிகளுடன், முள்ளி வாய்க்கால் தாக்குதல்களின்போது, வெளியேறி வந்த புலிகளையும் சேர்த்து தற்போது 6000 புலிகளாக பலம் பெற்றிருக்கிறோம். பெண் புலிகளும் இருக்கிறார்கள். சிங்கள ராணுவத்தின் கண்கள் எங்களைத் தேடுகின்றன. நீங்கள் காட்டுக்குள் 4 கி.மீ. சிரமப்பட்டு நடந்து வந்திருப்பீர்கள். நான் 20 கி.மீ. நடந்து வந்து உங்களை சந்திக்கிறேன். இது 100 கி.மீ.க்கு பரந்திருக்கும் மலைக்காடு. இதுதான் எங்களுக்கான பாதுகாப்பு கேடயம்.

எங்களிடம் உள்ள தொலைத்தொடர்பு வசதிகள் மூலம் சர்வதேச அளவில் அழைப்புகளைப் பெற முடிகிறது. பல நாட்டு உளவுப்பிரிவினரும் எங்களைத் தொடர்புகொள்ளும் முயற்சியில் இருக்கிறார்கள். எங்களது செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கிறது இலங்கை ராணுவம்.

செல்போன், வாக்கி-டாக்கி ஆகியவற்றை ஒட்டுக்கேட்டு நாங்கள் எந்தப் பகுதியில் நடமாடுகிறோம் என்பதை தெரிந்துகொண்டு, தாக்குதல் நடத்த நினைக்கிறார்கள். நாங்கள் இப்போது பாரிய அளவிலான தாக்குதலுக்குத் தயாராக இல்லை. இப்போதைய எங்கள் நோக்கம், புலிகளை ஒருங்கிணைத்து இயக்கத்தை வலிமைப்படுத்து வது, படைபலத்தையும் ஆயுதபலத்தையும் பெருக்கு வது. அதன்பின்னர், தலைமை வழியில் செயல் படுவோம்.

சிங்கள ராணுவம் எம்மை வேட்டையாட நினைக்கிறது. கடந்த வாரத்தில் ராணுவம் ஒரு படையை காட்டுக்குள் அனுப்பியது. அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தினர் 15 பேரை நாங்கள் சுட்டுக்கொன்றோம். எங்கள் தரப்பில் 12 பேர் பலியானார்கள். புலிகளின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி, சிங்கள ராணுவத்தை திணறடிக்கச் செய்யும் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறோம்'' என்று சொன்ன கேணல் ராமிடம், பத்திரி கையாளர் பாண்டியன் கேள்விகளை முன்வைத்தார். ஈழப்பிரச்சினையின் இன் றைய நிலவரம் குறித்த மிக முக்கியமான அந்த கேள்வி களுக்குப் பதிலளிக்கத் தயாரானார் கேணல் ராம்

இந்த செய்தியில் பல குழப்பங்கள் உள்ளன...இப்படி புலிப்படையிருப்பதை உண்மையான விலைபோகாத போராளி வெளியிட மாட்டான்.....

தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பு தமிழகத்தில் இருக்கின்றது. அதன் அமைப்பாளர் பாலகுரு, அவருடன் "தமிழா தமிழா" என்ற பத்திரிக்கையை எப்போதாவது கொண்டுவரும் பாண்டியன் என்பவரும் சேர்ந்து கடந்த வாரம் ரகசியமாக கொழும்பு சென்றுள்ளார்கள். அவர்கள் அப்படி செல்வது தமிழகத்தில் உள்ள எந்த உணர்வாளர்களுக்கோ, அமைப்புக்கோ, தலைவர்களுக்கோ தெரியாது. அவர்களின் திடீர் பயணம் ஏன் எதற்காக என்ற கேள்வி?? இந்த இருவரையும் அங்கே யார் அழைத்தது, எதற்காக அழைத்தார்கள் என்ற பெரும் சந்தேகம் எழுந்தது. இது குறித்து நாம் மேலும் துப்புத்துலக்கியதில் வெளிவந்த செய்திகள் திடுக்கிடும் தகவலாக அமைகிறது.

குறிப்பாக இவர்கள் இருவரும் தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு இயக்க கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள். சில போராட்டங்களை நடத்தியவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கொழும்பு செல்ல 'விசா' அனுமதியை சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் எப்படி வழங்கியது என்ற கேள்வி? அப்படியே இங்கு தெரியாமல் கொடுத்திருந்தாலும் அங்கே கொழும்பிற்குள் இறங்கும் போது விசாரிக்காமல் தமிழர்கள் பகுதிக்குள் விடுவார்களா என்ற கேள்வி? இவை ஒருபுறம் இருக்க தமது பிரயாணத்தின் நோக்கத்தை யாரும் சந்தேகப்படாமல் இருக்க இவர்கள் இருவரும் முதலில் சிவாஜிலிங்கத்தை, மரியாதை நிமிர்த்தமாகச் சந்தித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து வந்தவர்களாயிற்றே என்று சிவாஜிலிங்கமும் இவர்களிடம் பேசியிருக்கிறார். 'நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்க்க வந்தோம்' என இருவரும் கூறியிருக்கிறார்கள்.

ராம் தான் இனித் தலைவர் என்ற கேட்பாட்டை வெளிக்கொண்டுவர இவர்கள் ஒரு பெரும் சதித் திட்டத்தை தீட்டியுள்ளனர். முதலில் தமிழகம் சென்று அங்கு ராமைப் பற்றிப் பேசுவது, பின்னர் படிப்படியாக புலம்பெயர் தேசத்திற்கு அதனை எடுத்துச் செல்வதே இவர்களுக்கு கிடைத்துள்ள கட்டளையாகும்.

ஒரு வாடகை கார் மூலம் யாழ்பாணம், வவுனியா என்று பல இடங்களுக்கும் சென்றுள்ளார்கள் இவர்கள். அந்த வாடகை காரை ஒட்டியது இலங்கையின் ராணுவ உளவு பிரிவை சேர்ந்தவர். பல இடங்களை சுற்றிய இவர்கள் இறுதியாக மட்டக்களப்பு சென்றுள்ளார்கள். அங்கு காடுகளில் தலைமறைவாக இருப்பதாகச் சொல்லப்படும் விடுதலைப் புலிகளின் முன் நாள் உறுப்பினர் 'ரா'ம் அவர்களை இருவரும் சந்தித்தித்து, நீண்ட நேரம் பேசியுள்ளனர். (ராம் சந்தர்ப சூழ்நிலையினால் அல்லது தவிர்க்க முடியாத காரணத்தில் இராணுவத்தின் வழிநடத்தலில் பயணிக்கிறார்.)

ராம் அவர்களின் நோக்கம் தலைவர் இல்லை என்பதை வெளியில் சொல்ல வேண்டும். அதற்கு புலம்பெயர் தமிழர்களும் தயாராக இல்லை. தமிழகத்தில் உள்ள தமிழர்களும் தயாராக இல்லை. இந்த இருவர் மூலமாகவாவது கலகத்தை ஏற்படுத்தினால் சரியாக இருக்கும் என்பதே 'ராம் அவர்களின் திட்டம். ஈழத்தில் உள்ள தமிழர்கள் அப்படி பல குழுக்களாக இருக்கின்றார்கள். தமிழகத்தில் அப்படி அல்ல. அரசியல் ரீதியாக பிரிந்திருந்தாலும், இயக்கத்தை தவிர்த்துவிட்டு எதையும் பேசமாட்டார்கள். அப்படி இருப்பதை குழப்ப வேண்டும். அதற்கு அந்த இருவரையும் பயன்படுத்த வேண்டும் என்பதே 'ரா'மின் திட்டம். ராமை இயக்குவது இலங்கை புலனாய்வுத்துறை என்பது யாவரும் அறிந்தே.

அதுமட்டுமின்றி பல நாடுகளுக்கும் இவர்களை அனுப்பி வைக்கும் திட்டமும் அங்கே பேசப்பட்டிருக்கிறது. நேரில் பேசியபோதும் சரி, அதற்கு முன்பும் பின்பும் தொலைபேசியில் பேசிக்கொண்டபோதும் சரி 'பணத்தை பற்றி கவலை படவேண்டாம்' என்ற உத்தரவாதம் அடிக்கடி 'ரா'ம் அவர்களால் வழங்கப்பட்டிருக்கிறது.

'ரா'ம் அவர்கள் உண்மையிலேயே காட்டிற்குள்தான் இருக்கின்றார். அவருக்கு சில தமிழர்கள் ரகசியமாக உதவிகொண்டிருக்கிறார்கள். மிக கஷ்டத்தில் இருக்கும் அவரை பற்றியும், அவருடன் உள்ள போராளிகளைப் பற்றியும் தெரிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ளாமல் குறை சொல்லகூடாது. அவர் எங்கே இருக்கின்றார் என்பதைகூட தெரிந்துகொள்ளாமல் அவர்மீது வீண் பழியை சொல்லக்கூடாது என்பதெல்லாம் (பாலகுரு, பாண்டியனின் வாதமாக தமிழகத்தில் இருக்கின்றது.) ஆனால் கஷ்ட நிலையில் இருக்கும் அவர்கள் எப்படி 'பணத்தை பற்றி கவலைப்படாதீர்கள்' என்று அந்த இருவருக்கும் கூற முடியும்.

இது இவ்வாறிருக்க இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஒரு பிரபல அருட்தந்தை ஒருவரிடம் தொடர்பைப் பேணிவருவதாகவும், அவரிடம் பணம்பெற்று சில காரியங்களை நகர்த்திவருவதாகவும் தெரிய வருகின்றது. பாலகுரு மற்றும் பாண்டியன் போன்றோர், தமிழகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ஊடுருவா வண்ணம் நாம் விழிப்பாக இருக்கவேண்டும்.

ராமை ஒரு தளபதிபோல உருவாக்கி, போராட நினைக்கும் அல்லது போராட்டத்திற்கு உதவ நினைக்கும் தமிழர்களிடம் இருந்து பணத்தைப் பறிப்பது மட்டுமல்லாது, போராட்டம் ஒன்று இருப்பது போன்ற தோற்றப்பாட்டை வெளிக்காட்டி, அதனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயல்கிறது இலங்கை புலனாய்வுப் பிரிவு. இனி வரும் காலங்களில் இவை கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறும். இதனை தமிர்களாகிய நாம் ஒன்றிணைந்து முறியடிக்கவேண்டும்.

சமீபத்தில் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் அனுப்பப்பட்ட சில தமிழர்கள் இத்தாலியில் கைதான விடையம் யாவரும் அறிந்ததே. ஆனால் இது குறித்து எவரும் தகவல் கூறவில்லை. இத்தாலியத் தமிழர்களுக்கு இது குறித்து மேலதிக விபரம் தெரிந்தால் தெரியப்படுத்தவும். அனுப்பப்பட்ட உளவாளிகள் யாருடன் இருந்தார்கள் அவர்கள் யார் யாருடன் தொடர்புகளைப் பேணிவந்தார்கள் என்பது போன்ற தகவல்களை தமிழ் மக்கள் அச்சமின்றி பரிமாறிக்கொள்ளவேண்டும். இதன் மூலமே நாம் ஒரு வலைப் பின்னலை உருவாக்கி அதனூடாக இலங்கை புலனாய்வுப் பிரிவின் எல்லை கடந்த பயங்கரவாதத்தை ஒடுக்க முடியும்....

நக்கீரன் பரபரப்புக்காக செய்தி வெளியிடுவது வழக்கம். ஆனால் ராம் ராம் சந்தர்ப சூழ்நிலையினால் அல்லது தவிர்க்க முடியாத காரணத்தில் இராணுவத்தின் வழிநடத்தலில் பயணிக்கிறார் என்பது தராக்கி உங்களுக்கு எப்படி உறுதியாகத் தெரியும்?. ராம் சிறையில் இருக்கிறாரா அல்லது ராம் சந்தர்ப சூழ்நிலையினால் அல்லது தவிர்க்க முடியாத காரணத்தில் இராணுவத்தின் வழிநடத்தலில் பயணிக்கிறாரா என்பது சிறிலங்கா அரசுக்கு நிச்சயம் தெரியும். எங்கட ஊடகங்களில் வருபவை ஊகங்களும், சந்தேகங்களும் தான்.

நக்கீரனில் இச்செய்தி வந்ததினால் ஜெகத்கஸ்பருக்கும் இச்செய்திக்கும் தொடர்பு இருப்பதாக நீங்கள் ஊகத்தில் எழுதியிருக்கிறீர்கள்.

முன்பும் நீங்கள் தேர்தலின் போது நடைபெற்ற தாக்குதல் ஒன்றுக்கு கஜேந்திரன் குழு தான் செய்திருக்கலாம் என்று பரபரப்புச் செய்தியும் வெளியிட்டிருந்தீர்கள்.

பரபரப்புக்காக பொறுப்பின்றி செயற்படும் நக்கீரன் சிங்கள - இந்திய சதிகாரரின் முயற்சிகளுக்கு இடமளித்துவிட்டதுபோல் தெரிகிறது.

நாடு கடந்த அரசை குழப்பும் முயற்சியாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரன் பரபரப்புக்காக செய்தி வெளியிடுவது வழக்கம். ஆனால் ராம் ராம் சந்தர்ப சூழ்நிலையினால் அல்லது தவிர்க்க முடியாத காரணத்தில் இராணுவத்தின் வழிநடத்தலில் பயணிக்கிறார் என்பது தராக்கி உங்களுக்கு எப்படி உறுதியாகத் தெரியும்?. ராம் சிறையில் இருக்கிறாரா அல்லது ராம் சந்தர்ப சூழ்நிலையினால் அல்லது தவிர்க்க முடியாத காரணத்தில் இராணுவத்தின் வழிநடத்தலில் பயணிக்கிறாரா என்பது சிறிலங்கா அரசுக்கு நிச்சயம் தெரியும். எங்கட ஊடகங்களில் வருபவை ஊகங்களும், சந்தேகங்களும் தான்.

நக்கீரனில் இச்செய்தி வந்ததினால் ஜெகத்கஸ்பருக்கும் இச்செய்திக்கும் தொடர்பு இருப்பதாக நீங்கள் ஊகத்தில் எழுதியிருக்கிறீர்கள்.

முன்பும் நீங்கள் தேர்தலின் போது நடைபெற்ற தாக்குதல் ஒன்றுக்கு கஜேந்திரன் குழு தான் செய்திருக்கலாம் என்று பரபரப்புச் செய்தியும் வெளியிட்டிருந்தீர்கள்.

ம்ம் தராக்கியின் செய்திக்கும் விசிறி உண்டென்று இன்று தான் அறிந்து கொண்டேன்.நல்ல சகுனமல்ல என்பது மட்டும் உறுதி. :lol:

6000 போராளிகள் காட்டுக்குள் நல்லா விடுறாங்கள் ஐயா ஏரோ பிளேனு

போராளிகளை விடுதலை செய்யச்சொல்லும் கோரிக்கைகளுக்கும் நாடு கடந்த அரசுக்கும் ஆப்படிக்கவும் தீர்வை குடுக்காமல் இழுத்ததடிக்கவும் தான் இந்த ஏற்பாடு

6000 போராளிகள் காட்டுக்குள் நல்லா விடுறாங்கள் ஐயா ஏரோ பிளேனு

போராளிகளை விடுதலை செய்யச்சொல்லும் கோரிக்கைகளுக்கும் நாடு கடந்த அரசுக்கும் ஆப்படிக்கவும் தீர்வை குடுக்காமல் இழுத்ததடிக்கவும் தான் இந்த ஏற்பாடு

புரிந்து கொண்டதற்கு நன்றி...நானும் ஆரம்பத்தில் அம்பாரையிலிருந்து இப்படியான தகவல்கள் தான் வந்தன ,

1.இரண்டாயிரம் பேர் தயாராக இருப்பதாகவும்

2.பெயர் தெரியாத புதிய தளப்திகள் பயிற்சி கொடுப்பதாகவும்

இன்னிம் பல....

எல்லாம் பொய்...பொய்..பொய்

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யோ மெய்யோ படத்தில் இருப்பவர் ராம் தானா..??! அதை முதலில் சொல்லுங்கப்பா..??!

நாடு கடந்த தமிழீழ அரசு விடுதலைப்புலிகளின் அமைப்பு அல்ல. அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை உலகிற்கு சொல்லவும் அங்கீகாரம் பெறவும் ஜனநாயக வழியில் உருவாக்கப்பட்ட அமைப்பு. தயவுசெய்து இதைக்காட்டி அதை பயமுறுத்தாதீர்கள். அதைக்காட்டி இதை பயமுறுத்தாதீர்கள்.

மீண்டும் விடுதலைப்புலிகள் ஆயுதப்போராட்டம் நடத்தினால் கூட அதற்கும் நாடு கடந்த தமிழீழ அரசிற்கும் நேரடி பங்களிப்பு இருக்கவாய்ப்பில்லை..! புலிகளின் பாதை அது. நாடு கடந்த தமிழீழ அரசின் பாதை இது. இலட்சியம் ஒன்றாக இருந்தாலும் நடைமுறைகள் வெவ்வேறானவையாக இருப்பது அவசியம்..! இரண்டிற்கும் ஒரே சாயம் பூச வேண்டாம்.

சிறீலங்கா அரசும் நாடு கடந்த தமிழீழ அரசை புலிகளின் மீள்சேர்க்கை பயங்கரவாதிகள் மீள ஒருங்கிணைகிறார்கள் என்றே காட்ட விளைகின்றது. அந்த வகையில் நக்கீரனின் இந்தச் செய்தி புலிகளுக்கும் தமிழீழ அரசிற்கும் தொடர்புகள் இல்லை.. மாறாக அது தாயக மக்களின் விடிவிற்காக புலம்பெயர் தமிழ் மக்களினால் ஜனநாயக வழியில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு என்பதை இனங்காட்டி நிற்கிறது என்பதையும் உலகிற்கு சொல்ல வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசு புலிகளின் அமைப்பு என்ற சிங்களத்தின் பிரச்சாரத்தை முறியடிக்க இப்படியான சிங்களத்தின் நகர்வுகளையே பாவிக்க வேண்டும்.

அதைவிடுத்து அநாவசிய விடயங்களை பகிர்ந்து கொண்டு திரிவதால் எமக்குப் பயனில்லை. சிங்களமே பயன்பெறும்..!

விடுதலைப்புலிகள் விட்ட தவறுகளில் ஒன்று தமது அமைப்புக்கோ தமிழீழத்திற்கோ என்று ஒரு ஜனநாயகக் கட்டமைப்பை பேணாததே. அதுதான் அவர்களின் இராணுவ வலுவிழப்பு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் அரசியல் அபிலாசைகளையும் அரசியல் நிலவரங்களையும் நிற்கதி ஆக்கி நின்றது.

வட அயர்லாந்தில் ஐ ஆர் ஏ அமைப்பு சிம்பைன் என்ற அரசியல் அமைப்பை வலுவாக்கி வைத்திருந்ததால் ஐ ஆர் ஏ ஆயுதக் கையளிப்புக்கு முன்வந்து அதைச் செய்த பின் சிம்பைன் ஐ ஆர் ஏயின் அரசியல் பணியை ஜனநாயகப் பாதையில் கொண்டு சென்று இன்று பிரித்தானிய நாடாளுமன்றில் பேரம் பேசக் கூடிய நிலையில் நிற்கிறது. ஐ ஆர் ஏ யும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. உலகம் இதனை தடை செய்யவில்லை.. என்பதையும் நோக்குதல் அவசியம்.

Edited by nedukkalapoovan

பத்திரி கையாளர் பாண்டியன் கேள்விகளை முன்வைத்தார். ஈழப்பிரச்சினையின் இன் றைய நிலவரம் குறித்த மிக முக்கியமான அந்த கேள்வி களுக்குப் பதிலளிக்கத் தயாரானார் கேணல் ராம்

அப்ப இது ஒரு தொடர் பேட்டி போலகிடக்குது.

நக்கீரா ராம் சொன்ன பதில்களை உடனே பிரசுரியப்பு.

கிழிஞ்சுது போ லம்பான்ட லூங்கி

... நான் இன்றும் ராம், நகுலன் கிழக்கு காடுகளுக்குள் செயற்படுகிறார்கள் என நம்புகிறேன்! சிலவேலை சிலவற்றை பெரிதாக்கி தெரிவித்திரிக்கலாம் ... ஆனால் ... தராக்கி எழுப்பியது போல் பல பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியிருக்கிறது!!

... சில மாதங்களுக்கு முன் ... எனக்கும், வி.பு.மு.போ/வி.பு.பு.பு.மு/KPயின் தூணும்/இன்று நமோ நமோ மாதா என்று பாடித்திரிபவருக்கும் நகுலன்/ராமின் தொடர்புகள் கிடைத்தன. நமோ நமோ மாதா ஏறாக்குறைய ஒவ்வொரு நாளும் ராம்/நகுலனுடன் தொடர்பு கொள்வார், அவர்களுடன் கதைப்பதை எனக்கு பதிவு செய்து போட்டும் காட்டுவார். நானும் என் பங்கிற்கு ... எமக்காக புறப்பட்டவர்கள் துரோகிகளாக்கப்பட்டு, இங்கிருந்து எவ்வித பொருளாதார உதவிகளுமற்று கிழக்கு காடுகளுக்குள் தத்தளிக்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் .... யாழிலோ/வேறு சிலவற்றில் கொட்டித்தீர்த்ததுமுண்டு. ... இதற்கு மேல் அங்கு போராட்டம் தொட வேண்டுமென்று ... ராம்/நகுலனின் செய்திகளோடு ஓர் இணையத்தளமும் உருவாக்க ...., அவர்களின் அங்கீகாரத்துடன்!!! ..... அது நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ... தொடர்பாளர், தான் இந்தியா செல்வதென்று கூறிச்சென்று விட்டு .... லங்கா மாதாவை தொட்டுக் கும்பிட்டு விட்டு .... புலம் பெயர் தமிழர்களே, லங்கா மாதாவை கட்டியெழுப்ப வாருங்கள் என கோசம் போடத் தொடங்கி விட்டார்!! அத்துடன் ராம்/நகுலனின் தொடர்புகளும் துண்டித்து விட்டது!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இப்புnhது தெளிவாக இல்லாது விட்டாலும்கூட கொஞ்சமென்ன நிறையவே சிந்திக்கிறோம். வன்னியை கடந்த மே மாதம் வரைக்கும் அஙஇகதெரியுது கப்பல் இங்கவருகுது உதவி என ஏமாத்திய பலம்பெயர் கனவான்களால் (நான் உட்பட) ஒருவிடையத்தில் மட்டும் தமிழினம் தெளிவடைந்துவிட்டது ஆகவே இனிமேல் யாராவது இப்படிப்புலடாவிட்டால் கருத்திலெடுக்க மாட்டோம். பொத்திக்கொண்டு இருங்கோ எல்லாத்தையும்.

... இன்று ராமின் பேட்டியுடன் எழும் முக்கிய கேள்வி ....

சிறிலங்கா அரசாங்கமே, அங்கு ஆயுத செயற்பாடுகள் முடிவடைந்து விட்டது என தெரிவித்திருக்கும் வேளையில், ஆயுத செயற்பாடுகள் முடிபுற்ற நிலையில் புலம் பெயர் தமிழர்கள் சில அங்கீகாரங்களுக்காக தமது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கும் வேளையில், அதுவும் ஜனநாயக ரீதியில்/ சர்வதேச ஓட்டங்களினூடு கொண்டு செல்லும் வேளையில் .... "நாம் இருக்கிறோம்/ஆயுத செயற்பாடுகளை நடத்துகிறோம், ..." ... என்ற இந்தச் செவ்வியானது, சர்வதேச தமிழர்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது போல் வந்துள்ளது. இந்நேரத்தில் இச்செவ்வி தேவையானதா????(அங்கு பலமான சிறு கொரில்லா அமைப்பு இருந்து செயற்பட்டே தீர வேண்டும், என்ற நிலையிலும்)

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இப்புnhது தெளிவாக இல்லாது விட்டாலும்கூட கொஞ்சமென்ன நிறையவே சிந்திக்கிறோம். வன்னியை கடந்த மே மாதம் வரைக்கும் அஙஇகதெரியுது கப்பல் இங்கவருகுது உதவி என ஏமாத்திய பலம்பெயர் கனவான்களால் (நான் உட்பட) ஒருவிடையத்தில் மட்டும் தமிழினம் தெளிவடைந்துவிட்டது ஆகவே இனிமேல் யாராவது இப்படிப்புலடாவிட்டால் கருத்திலெடுக்க மாட்டோம். பொத்திக்கொண்டு இருங்கோ எல்லாத்தையும்.

எதையும் ஆராய்வதே நன்று. ஏனெனில் உண்மையாகவே தளபதி ராம் போன்றவர்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டும் இருக்கலாம். அல்லது எதிரிகளால் கூட இயக்கவும் படலாம். உண்மையில் அவர்கள் தப்பி இயங்கிக் கொண்டிருப்பின் அவர்களை அரவணைக்க வேண்டிய கடப்பாடும் எமக்கிருக்கிறது. எனவே இதன் பின்னால் உள்ள உண்மைகளை ஆராய்வதும் தெளிவதும் அவசியம். எழுந்தமானமாக நிராகரிப்பதும் குற்றம் சுமத்துவதும் அடிப்படை ஆதாரங்கள் இன்றி தகவல்களை கசியவிட்டு தகவல் புடுங்கும் எதிரிகளின் பலமான கட்டமைப்புப்படுத்திய புலனாய்வு அமைப்புக்களுக்கிடையே இருந்து நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சிங்களம் போர் முடிந்ததாக உச்சரிக்கிறதே அன்றி இத்தனை பொருளாதார நெருக்கடி மத்தியிலும் சிங்கள ஆயுதப்படையின் ஆளணியை 2 இலட்சமாக உயர்த்த திட்டுமிட்டுள்ளது. இது இந்திய படைப்பலத்தின் 20% ஆகும். பிரித்தானிய படை பலத்தின் 90% ஆகும். அதுமட்டுமன்றி பல கோடி ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறது. உண்மையில் போர் முடிந்த தேசத்திற்கு ஏன் இத்தனை பொருட் செலவில் படை ஆயுதம்..??! இலங்கைக்கு வேறு எதிரி நாடுகள் இல்லையே..??!

நிறைய விடயங்களை நாம் ஆராய வேண்டும். அதுவரை தகவல்களை தகவல்களாகவே வைத்திருக்கலாம். நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லா தகவல்களும் செய்திகள் ஆகாது. எல்லாச் செய்திகளும் உண்மையாகாது. எது ஆதாரங்களோடு சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்படுகிறதோ அதுதான் உண்மை ஆகும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

... இன்று ராமின் பேட்டியுடன் எழும் முக்கிய கேள்வி ....

சிறிலங்கா அரசாங்கமே, அங்கு ஆயுத செயற்பாடுகள் முடிவடைந்து விட்டது என தெரிவித்திருக்கும் வேளையில், ஆயுத செயற்பாடுகள் முடிபுற்ற நிலையில் புலம் பெயர் தமிழர்கள் சில அங்கீகாரங்களுக்காக தமது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கும் வேளையில், அதுவும் ஜனநாயக ரீதியில்/ சர்வதேச ஓட்டங்களினூடு கொண்டு செல்லும் வேளையில் .... "நாம் இருக்கிறோம்/ஆயுத செயற்பாடுகளை நடத்துகிறோம், ..." ... என்ற இந்தச் செவ்வியானது, சர்வதேச தமிழர்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது போல் வந்துள்ளது. இந்நேரத்தில் இச்செவ்வி தேவையானதா????(அங்கு பலமான சிறு கொரில்லா அமைப்பு இருந்து செயற்பட்டே தீர வேண்டும், என்ற நிலையிலும்)

இதே நக்கீரன் தான் 1989 இலும் தேசிய தலைவரை உயிரோடு முதன்முதலில் காட்டியது என்பதையும் மறக்கக் கூடாது.

ஆனால் எதிரிகளின் புலனாய்வாளர்கள் நக்கீரன் மீதான பழைய நம்பகத்தன்மையை வைத்து இப்படியான செய்திகளையும் இன்றைய சூழலில் புலிகள் பயங்கரவாதிகளாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர் என்று காட்டவும்.. இந்தியா இல்லாது ஒழிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட ஒரு அமைப்பு மீது சட்டத்தடையை நீடித்து வைத்திருக்கவும் இப்படியான குழுக்களை தேர்வு செய்து இயங்கவும் விடலாம். அவற்றை நக்கீரனூடு அவர்களை அறியாமலே பரப்பியும் விடலாம்..!

இன்றைய சூழலில் எதனையும் விளிப்போடு இருந்து ஆராய்ந்து பார்த்துத்தான் நம்ப வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக் கிடையாது.

எண்ணிக்கையிட்டுச் சொல்ல முடியாதளவில் விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்கள் கிழக்கில் வாழ்கின்றார்கள். ஆனால் இராணுவத்தோடு சண்டையிடும் நிலையில் அவர்கள் இருக்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன். அதிலும் இராணுவத்தில் 15 பேரும், தமது தரப்பில் 12 பேரும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் செய்திதான் நம்பகத் தன்மையைக் குறைக்கிறது.

சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன் என்கிற பத்திரிகையாளர், இலங்கை சென்றதாகவும். அங்கிருந்து அவர் திருகோணமலை சென்று, பின்னர் 4 கிலோ மீட்டர் நடந்துசென்று அடர்ந்த காட்டுப் பகுதியில் ராமைச் சந்தித்ததாகவும் நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் பல சுவாரசியமான விடயங்கள் அடங்கியுள்ளன. இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியான திருகோணமலைப் பகுதிக்குச் சென்ற தமிழக பத்திரிகையாளர் பாண்டியனை, ஒரு வெள்ளை வான் வந்து கூட்டிச் சென்றதாகவும், அதில் பல இளைஞர்கள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் என்று குறிப்பிடும் அவர், அவர்கள் வாக்கிடோக்கி வைத்திருந்ததாக கூறியிருப்பது வேடிக்கையான விடயம். தற்செயலாக ஏதாவது ஒரு சோதனைச் சாவடியில் இராணுவம் இவர்களின் வாகனத்தை நிறுத்தி சோதித்தால் வாக்கிடோக்கியைப் பார்க்கமாட்டார்களா?

இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நுழையும் புலிகள் இவ்வாறு செல்வார்களா? இலங்கை புலனாய்வுப் பிரிவிற்காக வேலை செய்வோரால் மட்டுமே இது சாத்தியம் என்பது, பாவம் பாண்டியனுக்கு புரியவில்லையா?, இது போல பல புலுடாக்களுடன் ஒரு கதை சொல்லியிருக்கிறது நக்கீரன்.

அத்தோடு இருண்ட காட்டுப் பகுதிக்குள் 4 கிலோ மீட்டர் நடந்து சென்ற பத்திரிகையாளர் பாண்டியன் 50 புலிகளைக் கண்டதாகவும், இன்னும் 6000 புலிகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். அங்கு நின்ற 50 புலிகளும் ஏ.கே 47 ரக துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும், அங்கு சமையல் செய்ததாகவும் குறிப்பிடும் பாண்டியன் அவர்கள், புகை அதிகம் வராத மரத்தை அவர்கள் பாவித்ததாகவும் கூறியிருக்கிறார். 50 பேருக்கு காட்டில் சமைப்பதே கடினம், அதுவும் 6000 பேருக்கு புகைவராமல் சமைக்க முடியுமா? புலிகள் இதுவரை காலமும் தமக்கு என்று ஒரு இடத்தை கைப்பற்றி வைத்திருந்தார்கள், அங்குள்ள முகாம்களில் அவர்கள் சமைப்பார்கள், மற்றும் உலர் உணவுப் பொருட்களையே அவர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் இவர் கூறுவதுபோல 6000 போராளிகள் ராம் கட்டுப்பாட்டில் இருந்தால் இவர்களுக்கான உணவுகளை யார் வழங்குகிறார்கள்? எவ்வாறு கொண்டுசெல்லப்படுகிறது? என்பது இங்கு பெரும் கேள்வியாக அமைகிறது.

அதாவது பாண்டியன் சமீபத்தில் இலங்கை சென்று ராமை சந்தித்தாக பரபரப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டு, தமது புத்தகத்தின் விற்பனையைப் பெருக்க நக்கீரன் முயல்கிறது என்பது யாவரும் அறிந்த விடயம். சந்தனக் கடத்தல் வீரப்பன் இருந்த காலகட்டத்தில், அவரால் கடத்தப்பட்டவர்கள் பலர். அப்படி கடத்தப்படும்போது நக்கீரன் கோபால் வந்தால் மட்டுமே தான் பேசத் தயார் என பல தடவை வீரப்பன் பேரம் பேசியது உண்டு, இதன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதை நாம் நன்கறிவோம். நக்கீரன் புத்தகம் லட்சக்கணக்கில் விற்பனையாகவே இவர் இவ்வாறு பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் என பலரும் அறிவார்கள். அது ஒரு வியாபாரத் தந்திரமாக இருந்தது. ஆனால் தற்போது நக்கீரன் பணத்தாசை, ஒரு இன விடுதலைமேல் விளையாடுகிறது, அது எந்தவகையில் நியாயம்?

தமிழ் நாட்டில் எத்தனையோ பரபரப்பான செய்திகள் இருந்தும் நக்கீரன் ஏன் ஈழத் தமிழர்கள் குறித்த செய்திகளுக்கு முன்னுரிமைகொடுத்து வெளியிடுகிறது? ஈழத்தில் ஒரு போராட்டம் வெடிக்க இருப்பதாகவும், அதற்கு தலைமை தாங்கி ராம் அவர்கள் போராட இருப்பதாகவும் ஏன் செய்திகளைப் பரப்புகிறது. ராம் இலங்கை அரசின் பிடியில் இல்லை இருண்டமலைப் பிரதேசத்தில் உள்ளார் என தெரிவிப்பதன் நோக்கம் தான் என்ன? ஒரு உதாரணத்திற்குச் சொல்வோம் ராம் உண்மையான போராளி என்று, அப்படி இருந்தால் கூட அவர் தன்னிடம் 6000 போராளிகள் இருப்பதை ஒப்புக்கொள்வாரா? இல்லை தான் திருகோணமலைப் பிரதேசத்தில் இருப்பதைத் தான் இப்படி வெட்டவெளிச்சமாகச் சொல்வாரா?

கேட்பவன் கேணையனாக இருந்தால் எலி ஏரோப்பிளேன் ஓட்டியது என்றும் சொல்லுவார்கள்.

கற்பனையின் ஒரு உச்சக்கட்டமாக, தன்னை ராம் பார்க்க வரும்போது ஒரு பிரபாகரன் போலத் தோற்றமளித்ததாக அவர் வர்ணிப்பதும், நன்றாக சவரம் செய்யப்பட்ட முகம், ஒரு மிடுக்கான நடை என ஒரு சினிமா படக் கதாநாயன் வருவதுபோல ஸ்டன் காட்டி இருக்கிறார் பத்திரிகையாளர் பாண்டியன்.

பல இடங்களில் பிரபாகரன், பிரபாகரன் என்று மட்டும் குறிப்பிடும் நக்கீரன், தலைவர் பிரபாகரன் அல்லது மேதகு பிரபாகரன் என்று குறிப்பிடாதது ஏன்? கருணாந்தியை எழுதும் போது கலைஞர் கருணாநிதி என்று குறிப்பிடும் நக்கீரன், இவ் விடயத்தில் ஏன் அவ்வாறு குறிப்பிடவில்லை? எமது தேசிய தலைவரை மதிக்காது, ஒரு வார்த்தைப் பிரயோகத்தைக் கூட சரிவர கையாளத் தெரியாத கையாலாகாத நக்கீரன், எமது தலைவரை அப்பட்டமாக இழிவுபடுத்தியுள்ளது.

தேசிய தலைவரை அவமதிக்கும் இவர்களா ஈழ விடுதலையில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்?. தேசிய தலைவர் மேதகு பிரபாகரனுடன் ஒப்பிட இந்த ராம் யார்? இடுப்பில் ஒரு கறுப்பு பெலிட் கட்டியிருந்தால் தேசிய தலைவராகிவிடலாம் என நினைக்கிறது நக்கீரன் குழுமம். காசுக்காக நக்கிப் பிழைக்கும் நக்கீரனுக்குத் தெரியுமா எமது உன்னத தலைவன் பற்றி?

ராம் அவ்வாறு நடந்து வருகிறார், ராம் இவ்வாறு நடந்து வருகிறார் போராட்டம் இனி வெடிக்கும், 6000 போராளிகள் தயார் நிலையில் உள்ளனர், சமீபத்தில் 15 இராணுவத்தைக் கொன்றோம் என்று எல்லாம் ஒரு 70 மில்லிமீட்டர் பயாஸ்கோப் பிலிம் காட்டியுள்ளது நக்கீரன். இதை விட இவர்கள் சினிமாக் கதை எழுதி விற்றால் நல்ல காசு சம்பாதிக்கலாமே, ஏன் எங்கள் போராட்டத்தை கூறுபோட்டு விற்கிறீர்கள். உன்னதமான பத்திரிகைத் துறையை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்.

ராம் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவதற்கான பல ஆதாரங்கள் ஏற்கனவே பல தமிழ் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன. இலங்கை புலனாய்வுப் பிரிவினருடன் நக்கீரன் குழுமம் தற்போது இணைந்துவிட்டதா என்ற கேள்விகளும் மேலோங்கியுள்ளது. ராமை இவர்கள் ஏன் முன் நிலைப்படுத்த முயல்கிறார்கள் என்பதில் பல பின்புலங்கள் இருக்கின்றன. அவதானமாக நாம் செயல்படவேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். தமிழர்களின் போராட்டத்தைச் சிதைக்க நினைக்கும் இணையங்கள் அடையாளம் காணப்படவேண்டும். எதிரிகள் முளையிலேயே கருவறுக்கப்படவேண்டும்!போராட்டத்தின் வடிவம் தற்போது மாறியுள்ள நிலையில், இலங்கையில் போராட்டம் வெடிக்க உள்ளதாகக் கூறி, ராமுக்கு உதவிசெய்யுங்கள் என்று கூறி பெரும் பணத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல் மனக் கணக்கு போடுகிறது.

புலிகள் மீதமில்லை என நாம் இங்கு கூறவரவில்லை. விடுதலைப் புலிகள் ஈழ மண்ணில் இன்னும் வேறூன்றி இருக்கிறார்கள். எவராலும் மறுக்கமுடியாத உண்மை. ஆனால் இவர் சொல்லும் பகுதியில் அல்ல. அவர்கள் தற்காலிகமாக தமது போராட்டத்தை மௌனித்துள்ளனர். அரசியல் போரை அங்குரார்ப்பனம் செய்துள்ளனர். தகுந்த நேரத்தில் வெளியே வருவார்கள். தேவை ஏற்படும் பட்சத்தில் ஆயுதங்களைக் கையில் ஏந்துவார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை.

இதனிடையே இந்த இந்திய மற்றும் இலங்கை அரசின் கைக்கூலிகள் செயல்களைக் கண்டு ஈழத் தமிழர்கள் அஞ்சப்போவது இல்லை....

தமிழ் நாட்டிலும்.புலம் பெயர்ந்தும் பல வலசுகள் இருக்கென்று நக்கீரனுக்கு தெரியும்.யுத்தம் என்றால் வாயை பிளக்க எவ்வளவு கூட்டமப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

:) தாரக்கி,

இதே ராமை நீங்கள் நம்புவதாக சில வாரங்களுக்கு முன்னர் இதே பகுதியில் படித்த நினைவு. இப்போது அவரை நம்பவில்லை என்கிறீர்களே?? இதில் எது சரி?

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் அணிதிரள்கிறார்கள் செயற்படுகிறார்கள் என்றதும் சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. அதனால் எதையெல்லாமோ எழுதி மொட்டைத்தலை முழங்காலுக்கெல்லாம் முடிச்சுப்போடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களையோ பத்திரிகைகளையோ இனி நம்ப முடியாது. எல்லோருமே ஈழ தமிழரையும் தலைவரையும் வைத்து லாபம் சம்பாதிக்கிற வியாபாரிகள். நக்கீரன் ஒரு திமுக ஊது குழல் என்று படித்த நினைவு. தபோதைக்கு சீமான் ஒருவரியே நம்பலாம் போல தெரிகிறது.

புலிகள் மீதான தடை தொடர இந்தியா இது மட்டுமல்ல இன்னும் குண்டக்கமண்டக்க செய்தி எல்லாம் தாயாரிப்பார்கள். வெள்ளையும், நீ அடிக்கிறமாதிரி அடி நான் அழுவுர மாதிரி அழுவுரன் எண்டு இருக்கும். புலிகளின் மீதான தடை உலாகலாவியரீதியில் இருக்கும் வரை நாடு விட்டு நாடு பாயும் கூட்டத்துக்கு மட்டுமல்ல அகதிகளுக்கு நிவாரணம் சேர்க்ககூட அங்கீகாரம் கிடைக்கப்போவதில்லை..

ஏனன்டா நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் புலிகள்தான் தமிழர். தமிழர்தான் புலிகள். :)

  • கருத்துக்கள உறவுகள்

அது

ஏனன்டா நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் புலிகள்தான் தமிழர். தமிழர்தான் புலிகள். :)

ஆகவே அவர்களை அழிக்கவும் முடியாது. மீண்டெழுவதைத் தவிர்க்கவும் முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைவு வணங்க நிகழ்வுகள் வியாபாரம் முடிய வேற திசைக்கு மாறவேணும், இதில கனநாள் நிண்டுபுடிக்கேலாது, அடுத்ததா என்ன... :)

நினைவு வணங்க நிகழ்வுகள் வியாபாரம் முடிய வேற திசைக்கு மாறவேணும், இதில கனநாள் நிண்டுபுடிக்கேலாது, அடுத்ததா என்ன... :)

ஏன் நிக்க ஏலாது...??? எதாவது மூலப்பிரச்சினையோ...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.