Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம் – தமிழீழ விடுதலைப் புலிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம் – தமிழீழ விடுதலைப் புலிகள்

இவ் விடயம் 19. 06. 2010, (சனி), தமிழீழ நேரம் 18:26க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், விசேட செய்தி

தமிழக அரசு நடாத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எதிர்வரும் யூன் 23 ஆம் நாள்முதல் 27 ஆம் நாள்வரை கோவையில் கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

முன்னர் நடைபெற்று வந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு தமிழக அரசு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடாத்த முன்வந்துள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முதன்முதலில் கோலாலம்பூரில் 1966 ஏப்ரல் 16 – 23 நாட்களில் நடாத்தப்பட்டது. அதன் இரண்டாவது மாநாடு 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10 நாட்களில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்றது. அதன்பின், பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை, கோலாலம்பூர், மொரீசியஸ், தஞ்சாவூர் எனப் பல இடங்களில் நடைபெற்றது.

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழ் மக்கள் சந்தித்த பேரிழப்பின் வலி குறையுமுன்னர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதை உலகத் தமிழர்கள் விரும்பவில்லை. அதன் காரணமாக அந்த மாநாட்டைப் புறக்கணிக்கும் வேண்டுகோளை பல அமைப்புக்கள் விடுத்தன. எம் மக்களின் இந்த உணர்வு நியாயமானதே என்பதனை சான்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனமாக இருந்தநிலை இன்று மாறிவிட்டது. மொழியே ஒரு தேசிய இனத்தை அடையாளப்படுத்துகிறது. தமிழரின் தேசிய அடையாளத்தை தமிழ்மொழியே குறிக்கிறது.

1974 ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்தேறிய நான்காவது உலகத் தமிழாராட்சி மாநாட்டில் எம்மக்கள் தமது உயிரையே காணிக்கை ஆக்கினர் என்பதனை நினைவூட்ட விரும்புகின்றோம்.

செம்மொழி மாநாடு நடைபெறுவது பல வழிகளிலும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் பெருமையும் வளமும் அளிக்கும் என மனதார நம்புகிறோம். ஒரு மொழியின் வளர்ச்சி அம்மொழியின் தொன்மை தொடர்பானது மட்டுமே அன்று. எதிர்கால பயன்பாட்டுக்கு அது எந்த அளவு உதவப்போகிறது என்பதுதான் ஒரு மொழியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது.

இவை காரணமாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க நாம் விரும்புகிறோம்.

தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கிய சிங்களப் பேரினவாதம், மேலும் தனிச்சிங்களச் சட்டம் என்று எமது தாய்மொழி மீதும் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியது. தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட காரணத்தாலேயே தமிழர்கள் மீது படிப்படியாக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இவற்றையெதிர்த்துத் தொடங்கப்பட்ட ஈழவிடுதலைப் போராட்டமென்பது அடிப்படையில் மண்மீட்புக்கானதும் மொழிக்காப்புக்கானதுமான போராட்டமே. ஒரு மொழி வாழவேண்டுமானால், அம்மொழி பேசும் மக்கட்கூட்டம் பிழைத்திருக்க வேண்டும். அவ்வகையில் ஈழத்தமிழினம் தப்பிப் பிழைத்திருக்கவும், ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறவும் நடத்தப்படுவதே எமது போராட்டமாகும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்மொழியின் மேம்பாட்டுக்குப் போர்ச் சூழலுக்கு மத்தியிலும் கடுமையாகப் பாடுபட்டு வந்தமையை அனைவரும் அறிவர். குழந்தைகளுக்குத் தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டுதல், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அனைவருக்கும் தூய தமிழ்ப்பெயரை மாற்றியது, போர்ப்பயிற்சிக் கட்டளைகளைக்கூட தூய தமிழில் மாற்றிப் பயன்படுத்தியது, அங்காடிகளின் பெயர்ப் பலகைகளை நூறு விழுக்காடு தூய தமிழில் எழுதும் நடைமுறையைக் கொண்டு வந்தது என எமது இயக்கம் தமிழ்மொழியின் பால் கரிசனை கொண்டு எடுத்த நடவடிக்கைகள் பலவுண்டு. விடுதலைப் புலிகளின் தமிழ் வளர்ச்சிக் கழகம் “தமிழ்ப்பெயர்க் கையேடு – மக்கட்பெயர் 46,000″ என்ற தொகுப்பைத் தயாரித்து வெளியிட்டது. இது மட்டுமன்றி எமது மாவீரர்கள், மக்களின் தியாகத்தினால் உலகம் முழுவதும் எம் மொழி, இனம் புத்துயிர் பெற்று ஒரு மறுமலர்ச்சியினை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்மொழி மீது கொண்டுள்ள காதலுக்கு போர்க்களத்தில் விழுப்புண்பட்டு வீழ்ந்த வேங்கைகளின் கல்லறையில் நின்று எடுக்கும் உறுதிமொழி சான்றாக உள்ளது.

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!

விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!

இழிவாக வாழோம்! தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

மொழிக்காகவும் மண்ணுக்காகவும் இறுதிவரை போராடிய ஆயிரக்கணக்கான எம் வீரர்களும் மக்களும் முள்ளிவாய்க்காலில் மாண்டுபோயினர்; அனைத்துலக ஆதரவுடன் சிங்களத்தால் வதைக்கப்பட்டனர். இந்த இறுதிக் கணத்தில் நடந்தேறிய பேரவலத்தினை எம் அருகில் இருந்த கோடிக்கணக்கான தமிழர்களால் முயற்சித்தும் தடுக்க முடியவில்லை என்ற வேதனை எமக்கும் எமது மக்களுக்குமுண்டு. தம்மையே கருக்கிய உயரிய தியாகங்கள் பல நடந்தபோதும், ஏதாவது செய்ய வேண்டுமென்ற துடிப்பு ஏராளமானவர்களுக்கு இருந்தபோதும் ஓர் அரசியற் சக்தியாக அதை முன்னெடுத்து நிறைவேற்ற முடியாமற்போன துயரம் தமிழகத்தில் நடந்தது.

இப்போதும் காலம் கடந்துவிடவில்லையென்றே நாம் நம்புகிறோம். மொழியின் வாழ்வும் வளர்ச்சியும் அம்மொழியைப் பேசும் இனத்தின் “இருப்போடு” தொடர்புபட்டது என்றவகையில், தமிழ்மொழியைப் பேசும் ஓர் இனக்குழுமத்தின் இருப்பை உறுதிசெய்வது அனைவரினதும் கடமையாகும். ஈழத்திலே தற்போது எமது மக்கள் படும் துன்பங்களைத் துடைத்து அவர்களின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதத்தை உலகளவில் பெற்றுக்கொடுக்கும் பணி எல்லாத் தமிழருக்குமுண்டு. இன்று நடைபெறும் சிங்களக் குடியேற்றங்கள், தமிழர் படுகொலைகள் என்பன நிறுத்தப்பட்டு தமிழர்கள் தம் சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.

இன்று மிகமுக்கியமான காலகட்டத்தில் இந்தச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. எம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடாத்தப்படவிருக்கும் இச்செம்மொழி மாநாட்டிற்கு எம் ஆதரவு என்றும் உண்டு. இந்த மாநாடு தமிழ்மொழி வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதுடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே தமிழீழ விடுதலைப் புலிகளாகிய எங்களின் அவா.

அதேவேளை, ஈழத்தமிழினம் இலங்கையில் படும் இன்னல்களைக் களைவதுடன், அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியைத் தட்டிக்கேட்டு அதற்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு இச்செம்மொழி மாநாட்டை நடாத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம். அவ்வாறு நடைபெறும் பட்சத்தில், செம்மொழி மாநாடு தனது குறிக்கோளைத் திறம்பட அடைந்ததாக அனைத்துத் தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

அந்த வகையில், செம்மொழி மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் எம்மினத்தின் ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருக்கும் என நம்புவதுடன் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற நாம் வாழ்த்துகின்றோம்.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”

இராமு.சுபன்,

இணைப்பாளர்,

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

தொடர்புக்கு: headquarters@viduthalaipulikal.net

  • கருத்துக்கள உறவுகள்

நெடுங்காலத்துக்குப் பிறகு நிதானமாக ஒரு முடிவு எடுக்கப் பட்டிருக்கு. வாழ்த்துகிறேன்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம் – தமிழீழ விடுதலைப் புலிகள்

எந்தவித ஆதாரமும் அற்ற செய்தியறிக்கை.

செம்மொழி மகாநாடு தமிழக கொலைஞர் கருணாநிதியின் அரசியல் மகாநாடாகவே நடைபெறுகிறது. இதில் குறைந்தது தமிழ் நாட்டிலுள்ள அனைத்து தமிழர்களையும் இணைத்து நடுநிலையான குழுவால் ஏற்பாடுகள் செய்வது - நடக்கவில்லை.

படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர் பற்றிய ஆய்வுகள் இல்லை, ஈழத்தமிழர் தலைவர்கள் குறிப்பிடப்படவில்லை, .... இவ்வாறு இது ஒருதலைப் பட்ச அரசியல் மகாநாடாகவே முன்னெடுக்கப்படுகிறது. உண்மை வரலாறுகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் மக்களை குழப்புவதற்காக பயங்கரவாதிகளின் சதித் திட்டமாக தோன்றுகிறது.

இந்திய பயங்கரவாதிகளின் அடிவருடிகள் இத்தகைய அறிக்கையை பார்த்து உவகை கொள்ளலாம்.

ஈழத் தமிழர் இனியும் ஏமாறுவார் என்ற கனவு வேண்டாம்.

எந்தவித ஆதாரமும் அற்ற செய்தியறிக்கை.

செம்மொழி மகாநாடு தமிழக கொலைஞர் கருணாநிதியின் அரசியல் மகாநாடாகவே நடைபெறுகிறது. இதில் குறைந்தது தமிழ் நாட்டிலுள்ள அனைத்து தமிழர்களையும் இணைத்து நடுநிலையான குழுவால் ஏற்பாடுகள் செய்வது - நடக்கவில்லை.

படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர் பற்றிய ஆய்வுகள் இல்லை, ஈழத்தமிழர் தலைவர்கள் குறிப்பிடப்படவில்லை, .... இவ்வாறு இது ஒருதலைப் பட்ச அரசியல் மகாநாடாகவே முன்னெடுக்கப்படுகிறது. உண்மை வரலாறுகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் மக்களை குழப்புவதற்காக பயங்கரவாதிகளின் சதித் திட்டமாக தோன்றுகிறது.

இந்திய பயங்கரவாதிகளின் அடிவருடிகள் இத்தகைய அறிக்கையை பார்த்து உவகை கொள்ளலாம்.

ஈழத் தமிழர் இனியும் ஏமாறுவார் என்ற கனவு வேண்டாம்.

இது சும்மா றோட்டில நின்ற ஒன்று எழுதி இருக்கு. ஒருவரும் நம்பமாட்டார்கள்.

கருநாநிதி தான் குடும்பம் செம்மொழி மாநாடு. ஒரு மொழி இனம் அழிய காரணமான கருநாநிதியின் ஏற்பாட்டை புலிகள் ஒரு போது ஏற்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இந்தியாகாரன் புலியை வாழவும் விடமாட்டேன் என்கிறான் சாகவும் விடமாட்டேன் என்கிறான்.

ஆhனல் சும்மாகிடந்த தழிழ்நெட் புதினம் எல்லாத்தையும் மிரட்டி இனிமேல் முன்புபோல் இயங்ககூடாது என்று அந்நாட்டு காவல்துறையின் உதவிகளுடன் செய்கிறாhன்.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த காலத்திலே............

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய காலத்தில் யாரும் இதுபோன்ற அறிக்கைகளை அள்ளிவிடலாம் வருப்பமென்றால் சொல்லுங்கோ நானும் இப்படி ஒரு அறிக்கையை விடுகிறன். என்ன விடையம் கொஞசம் என்ன கனக்கப்பிரச்சனையைச் சந்திக்கவேண்டிவரும். முதலாவது இதற்காக நான் பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி எந்த ஐபி இலக்கத்தையுடைய கணணியில் தொடர்பகொள்ளப்பட்டது என அறிவார்கள் அதன் பின்பு...... ஆனால் இந்திய இளவுப்பிரிவு அன்றேல் தமிழ்நாடு அரசின் இளவுப்பிரிவாகவிருந்தால் பிரச்சனையில்லை இச்செய்தியை தலையில் வைத்துக்கொண்டாட வேண்டாம் இந்தியாவும் தற்போதைய தமிழக முதல்வரும் தமிழர் விரோதிகள்.

நெடுங்காலத்துக்குப் பிறகு நிதானமாக ஒரு முடிவு எடுக்கப் பட்டிருக்கு. வாழ்த்துகிறேன்

:(:lol::lol:

நல்ல பகிடி, உங்களை எல்லாம் ஆய்வாளர்களாக்கிய புல ஊடகங்களைத் தான் மக்கள் உதைக்க வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போங்கைய்யா நீங்களும் உங்க அரசியலும் :(

கு...டி கழுவத்தான் லாயக்கு :lol:

இதை கூட புலிகளின் தீர்க்க தரிசனம்,நல்ல அரசியல் வெளிப்பாடு என்று இங்கையும் சில தளங்களிலும் பின்னூட்டம் வேறு எழுதுகிறார்கள்.

அவன் கருநாய்நிதி தமிழின அழிப்பை திசைதிருப்பவும் தன் மீதுள்ள ஈழத்தமிழரின் வெறுப்பையும் நீக்கவே தமிழ் செம்மொழி மாநாடுநடாத்துறான் அதுக்கு ஆதரவு வேறை.

32கிலோமீற்றர் தொலைவிலை ஒரு தமிழினம் கொத்து கொத்தா ஆயிரக்கணாக்காக கொல்லப்பட்டதற்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்க வக்கில்லாத கருநாய் நிதிக்கும் அவன் புகழ்பாடும் செம்மொழி மாநாட்டிற்கும் ஆதரவாம். இது வேறை தீர்க்க தரிசனமாம்.

இப்படியெல்லாம் அறிக்கை விட்டாவது நாங்களும் இருக்கிறோம்ல என்று காட்டுவம்.

இப்படியான ஒரு அறிக்கையை குறிப்பிட்ட தரப்பினர் விட்டதாக எந்தவொரு தகவலும் இல்லை.

ஈழத்தமிழர் இனப்படுகொலையில் உதவிய கொலைஞர் கருநாய்நிதிக்கு நன்றிக் கடனாக இந்திய பிணம் தின்னி நாய்களால் விடப்படும் அறிக்கை போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கருநாகமும் பதிலளித்து அறிக்கை வெளியிட்டுவிட்டார் அப்புறம் என்ன எல்லாரும் பிளைட் பிடித்து வந்து கட்டிங் பிரியாணி என்று ஜாமாய்ங்கோ...... :(:lol::lol:

ஈழமக்களுக்கான நீதியை பெற்றுத்தரும் பொறுப்பு செம்மொழி மாநாடு நடத்துபவர்களுக்கு உண்டா? கலைஞர் பதில்

M%20Karunanidhi--231--1.jpg

ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து உலகத்தமிழ் செம்மொழி மாநாடு குறித்தும் முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், ’’கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து வழங்கி - அந்த வாழ்த்தினூடே ஈழத் தமிழ் இனம் படுகின்ற இன்னல்களைச் சுட்டிக்காட்டி - அம்மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு - இச்செம்மொழி மாநாட்டினை நடத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம் என்ற நம்பிக்கையையும் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும் வாய்ப்பைப் பெற்றேன்.

தாய்மொழியாம் தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்படவிருக்கும் இச்செம்மொழி மாநாட்டுக்கு எம் ஆதரவு உண்டு; இந்த மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வழி கோலும் என்பதுடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு வலு சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே எமது அவா என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில் எந்த எதிர்பார்ப்பும், குறிக்கோளும் ஒளி விடுகிறதோ அவற்றைக் காண வேண்டும், கண்டு களிக்க வேண்டும் என்ற ஆவலில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள அமைப்பின் கருத்துகளில் எள்ளளவு வேறுபாடும் எமக்கில்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

இலங்கையில் நடந்த அவலத்தை அருகில் இருந்த தமிழர்களால் தடுக்க முடியவில்லை என்ற வேதனை நமக்கு உண்டு என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது தான் தேவையற்ற விவாதத்துக்கு இடமளித்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்.

சிங்கள ராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தமிழகம் முழுதும் கண்டனக் குரல்கள் எழுந்த போது,

“அவர்கள் யாரும் அப்பாவி மக்கள் அல்ல” என்று கூறியதோடு, அவர்கள் சாகத் தான் வேண்டுமென்று சாபமிட்டவர்கள் யாரோடு கூடிக் குலவினார்கள், இன்னமும் குலவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிக்கை வெளியிட்ட அந்த அமைப்பு ஒருக்கணம் எண்ணிப் பார்த்தால் உண்மைகள் ஆயிரம்,

ஒவ்வொன்றாக எதிர் நின்று சதி செய்த சண்டாளர்கள் யார் என்பதற்கு சாட்சியங்கள் கூறும்.

இந்த நேரத்தில் மேலும் அதை விளக்க விரும்பவில்லை. உண்மை எப்போதும் உறங்கி விடாது. ஒரு காலத்தில் உதறிக் கொண்டு எழுந்து பேசத் தான் போகிறது. இதற்கிடையே எனக்குள்ள மகிழ்ச்சி யெல்லாம்,

இங்கே சிலர் பாரதத்து காந்தாரி போலப் பதறித் துடித்து - ராமாயணத்து கூனி போல பட்டாபிஷேகத்தையே தடுத்து நிறுத்த பகிரங்கமாகவே அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் போது, “இதோ தமிழர்கள் நாங்கள்; எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் எம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்பட விருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு எம் ஆதரவு என்றும் உண்டு” என்று அறிக்கை வெளியிட்டு - “தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் - எம் இனத்தின் ஒற்றுமைக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்,

வாழ்த்துகிறோம்” என்று உளம் திறந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைவதோடு அவர்களைப் பாராட்டுவதும் கடமை எனக் கருதுகிறேன்.

----நக்கீரன்

:( இந்தப் படம் நூறு நாள் ஓடும் போல கிடக்கு, கதை வ்சனம் எல்லாம் அந்த மாதிரிக் கிடக்கு.

வில்லனுக்கும் கதானாயகனுக்கும் ஒருத்த்தர் தான் வசனம் எழுதி இருக்கிறார் போல.

  • கருத்துக்கள உறவுகள்
:( இந்த செம்மொழி மாநாட்டிற்கு ரத்தமொழி என்று பெயர் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அவரும் தன்ர கைய்யில இருந்து ரத்தக்கரையை கழுவினமாதிரி இருக்கும் !!!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://pulikalinkural.com

புலிகளின் குரல் இணையத்திலும் புலிகளின் தலைமைச் செயலகம் என்றுதான் உள்ளது.

http://pulikalinkural.com

புலிகளின் குரல் இணையத்திலும் புலிகளின் தலைமைச் செயலகம் என்றுதான் உள்ளது.

யார் இந்த தளத்தை இப்போது இயக்குகிறார்கள்? யார் இந்த இணைப்பாளர்? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்பு யார் இயக்கினார்களோ அவர்கள்தான் இப்பொழுதும் இயக்குக்றார்கள். தாயகத்தில் இருந்து ஏற்றப்படுகின்ற ஒலிப்பதிவுகளை ஐரோப்பாவிலிருந்து இணைய வடிவத்தில் தந்து கொண்டிருந்தவர்களே இப்பொழுதும் அதனைச் செய்கிறார்கள்.

இன்னும் சொன்னால்

இந்த அறிக்கை விட்டவர்கள்தான் தற்போதையை அதிகாரபூர்வ புலிகளா இல்லையா என எனக்கு தெரியாது. ஆனால் அவர்களும் புலிகளே..

அண்மையில் உருத்திர குமார் சொல்லியிருந்தார். புலிகள் ஒரு செயற்குழுவை அமைத்து செயற்படுகிறார்கள் என. அவர் குறிப்பிட்ட அமைப்பு இந்த அமைப்புத்தான் என்பதும் தெரியும்.

மற்றும்படி யார் உண்மை யார் பொய் என்பதெல்லாம் யாமறியோம்... அறிகிற ஆர்வமும் இல்ல.. எப்பவோ முடிந்த காரியம்

முன்பு யார் இயக்கினார்களோ அவர்கள்தான் இப்பொழுதும் இயக்குக்றார்கள். தாயகத்தில் இருந்து ஏற்றப்படுகின்ற ஒலிப்பதிவுகளை ஐரோப்பாவிலிருந்து இணைய வடிவத்தில் தந்து கொண்டிருந்தவர்களே இப்பொழுதும் அதனைச் செய்கிறார்கள்.

இன்னும் சொன்னால்

இந்த அறிக்கை விட்டவர்கள்தான் தற்போதையை அதிகாரபூர்வ புலிகளா இல்லையா என எனக்கு தெரியாது. ஆனால் அவர்களும் புலிகளே..

அண்மையில் உருத்திர குமார் சொல்லியிருந்தார். புலிகள் ஒரு செயற்குழுவை அமைத்து செயற்படுகிறார்கள் என. அவர் குறிப்பிட்ட அமைப்பு இந்த அமைப்புத்தான் என்பதும் தெரியும்.

மற்றும்படி யார் உண்மை யார் பொய் என்பதெல்லாம் யாமறியோம்... அறிகிற ஆர்வமும் இல்ல.. எப்பவோ முடிந்த காரியம்

விவாதத்திற்குரிய விடயங்கள் பல இருந்தாலும்’ இது ஒரு நல்ல நகர்வாகத்தான் எனது சிறிய மனதுக்குப் படுகின்றது. துரோகிப்பட்டம் வழங்கும் கலாச்சாரத்தில் இருந்து பின்வாங்கி எதிரியையும் பாராட்டுக்களால் வெல்வதென்பது ஒரு நல்ல இராஜதந்திரம்தான். காலத்தின் தேவை உணர்ந்து வெளியிடப்பட்ட ஒரு நல்ல அறிக்கை. தேசிய மக்குகள் திருந்த முயல்கின்றார்கள். வாழ்த்துக்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் என்று நாங்கள் உண்மையாக நம்பும் அண்ணாமாரே நீங்கள் செம்மொழி மாநாட்டை வரவேற்று விட்ட அறிக்கை எங்களுக்கு நம்பிக்கையை தந்தது.தமிழ் மக்களை முட்டாளக்க நினைக்கும் தழிழ் மக்களிடம் ஏற்கனவே வாங்கி பதிக்கி வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்தை சுறட்டுவதற்காக மற்றவர்களுக்கெல்லாம் தூரோகிப்பட்டம் கொண்டிருக்கும் ஊடக கும்பலை பற்றி ஒரு முடிவு எடுங்கள். இனியும் மௌனம் வேண்டாம்

கடந்த வாரம் நாடுகடந்த அரசுக்கு ஆதரவாக செற்படும் இருவரை கொலலை செய்வதற்கு லண்டனில் இருந்து நிர்மலராஜன் கொலைப்புகழ் நெப்போலியன் பாரிசுக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறான்.அவனை வரைவழைத்தது இந்தக் கும்பல்தான் என்ற செய்தி பலவராக பேசப்படுகிறது. தயவு செய்து காலம் கடந்தாக முடிவெடுத்த இந்தக்கும்பல் பற்றி பகிரங்கமாக மக்களுக்கு அறிவியுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்!!

“தர்ம ஏகத் கலைஞர் தேவஸ்ய

கருணாநிதி ஸ்ரீமச்சாசனம்

ஊர்வச சிரோபபிஷசேகரி…”

இச்செப்பேடு

செப்புவது யாதெனில்,

“காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்!”

என்று ஈழத்தமிழர் கதறிய காலத்தே

பராக்கிரமத்தோடு சோனியாவுக்கு

விடாது கடிதமெழுதியதோடு,

அலைகடலோரம் நெடுஞ்சாண் கிடந்து

காலை உணவுக்கும், மதிய உணவுக்கும்

இடைப்பட்ட மணித்துளியில்

அன்ன ஆகாரம் உண்ண மறுத்து,

ஈழத்தமிழர் செத்த பின்பு

போரை நிறுத்திய ஒரே புறநானூற்றுத் தமிழன்

கருணாநிதிச் சோழனின்

மற்ற கைங்கர்யங்களாவன:

சோழநாடு சோறுடைத்ததைப்

பின்னுக்குத் தள்ளி

ஒரு ரூபாய் அரிசியாலேயே உடைத்தார்!

பகை முடித்தார்!

வண்ணத் தொலைக்காட்சி, காஸ் அடுப்பு,

மனை கட்ட உதவி, மணமகன் கட்ட உதவி,

மகப்பேறு உதவித்தொகை…

எனக் குடிதானம் ஏராளம்.

மக்களைத் தானாக வாழவிடாமல்

தடுத்தாண்ட சிறப்பிவைகள்.

மற்றபடி,

இடைத்தேர்தல் எதிர்ப்பட்டால்

வாக்காள பெருங்குடிக்கு

பொன்முடிப்பு தாராளம்!

காணியுடையோராய் இருந்த

தொல்குடிகள் நீக்கி,

காடு, மலை, நதியென

அந்நியப் பன்னாட்டுக் கம்பெனி

வேண்டுவன தட்டாமல் வழங்கும்

தகைமையில் விஞ்சுவாரின்றி

கருணையும், நிதியும் ஒன்றாய் ஆனார்!

யாதும் ஊரே; யாவரும் கேளிர்

ஹூண்டாயும், ஃபோர்டும் நம் உடன்பிறப்பே,

எனப் பன்னாட்டு உறவில் புது எல்லை கண்டான்!

அண்ணலும் ‘நோக்கியா’ அவளும் ‘நோக்கியா’

என கம்பநாட்டாழ்வரையே கற்பனையில் விஞ்சி

திருப்பெரம்புதூரில் தென்கொரியாவையே கொண்டான்!

அறக்கொடைகள் அம்மட்டோ!

வேளாண்வகை ஏரிகள் மாற்றி

பெப்சி, கோக்குக்கு சதுர்வேதி மங்களங்கள்!

திருவண்ணாமலை வேடியப்பன் மலையை எடுத்து

‘ஜிண்டால்’ கம்பெனிக்கு தேவதானம்!

சிறுவணிகத்தை மடைமாற்றி

ரிலையன்சு டாட்டாவுக்கு இறையிலி.

பாலியல் கொலைகாரன் காஞ்சி சங்கரனுக்கு

சட்டமும் போலீசும் பிரம்மதேயம்…

அண்டி நிற்கும் வீரமணிக்கும்

அவ்வப்போது அறச்சாலாபோகம்!

இத்தனை ஆட்சிக்குப் பிறகும்

எஞ்சியிருக்கும் தமிழ்க்குடிக்கு

தனது வீட்டையே தானம் கொடுத்தார்!

இன்னும் கொடுப்பதற்காய்

தமிழ்நாட்டையே எடுத்துக் கொண்டார்!

சாதனைகள் சொல்ல

செப்பேடு போதாது…!

காவிரிக்கு குறுக்கேதான்

கல்லணை அமைத்தான் கரிகாலன்..

காவிர, முல்லைப்பெரியாறு இரண்டிலுமே

நீதிமன்றத்திலேயே அணையைக்கட்டி

பிரச்சினை நிரம்பி வழியாமல்

பார்த்துக் கொண்டவர் கருணாநிதி!

பாடிச் சொரிந்த புலவர்க்கு மட்டும்

மதுவை ஊற்றிக் கொடுத்தனர்

பழைய வேந்தர்கள்,

வாடிக்கிடக்கும் தமிழரையே

டாஸ்மாக்கால் ஈரப்படுத்தி

‘குடி’மகன்களை பாடவைத்துத்

தமிழ் வளர்த்தவர் தானைத் தலைவர்!

ஊனாடும்

ரோமாபுரி அடிமைப் பெண்களை

அந்தப்புரத்தில் ஆடவைத்து

தான்மட்டும் கண்டுகளித்தனர்

பழைய மன்னர்கள

‘மானாட மயிலாட’ என

மற்றவரையும் பார்க்க வைக்கும்

தமிழினத் தலைவரின் பரந்த உள்ளத்தை

கலைஞர் தொலைக்காட்சி பறைசாற்றும்!

மழலையர் உதடுகளில் ஆங்கிலம் வளர்த்து

பெயர்ப்பலகையில் மட்டும் தமிழ் வளர்க்கும்

தந்திரம் முன்

பராந்தகச் சோழனே பயந்து போவான்!

‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்’ எனப் புலம்பி

ஊரறிய அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் போட்டுவிட்டு

சத்தம் போடாமல் உச்சநீதிமன்றத்தில்

பார்ப்பன மனுநீதிக்கு பங்கம் வராமல் பாதுகாக்க

அந்த முள்ளை எடுத்தே வேலிகட்டும்

இரண்டகத் திறமையில்

பார்ப்பன குலமே மயக்கமுறும்!

இயற்றமிழ் அழகிரி

இசைத்தமிழ் கனிமொழி

நாடகத்தமிழ் தளபதி

என முத்தமிழையும் வளர்த்து

தமிழ்நிலத்தை மொத்தமாய் வளைக்க

முயலும் திறமை முடியுமோ யாராலும்?

பிறப்பொக்கும் இவர் பேரன், பேத்தி

வாரிசு வரைக்கும்

மதுரை தினகரன் அலுவலகத்தில்

கொலையான ஊழியர்கள்

சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமைகள்!

இருப்பினும் வாழும் வள்ளுவர்…

திருவள்ளுவர் அதிகாரங்களுக்கு மட்டுமல்ல,

அழகிரியின் அதிகாரத்திற்கும்

உரையெழுதும் திறமுடையார்!

இலக்கியக் கவர்ச்சிக்கு கண்ணகி

அரசியல் கவர்ச்சிக்கு குஷ்பு

அகமும், புறமும், மணிமேகலை,

சிலப்பதிகாரம், குண்டலகேசியுடன்

‘சின்னத்தம்பி படத்தையும்’ சேர்த்து

தமிழ்ப்பெருமை உருவாக்க தயங்காதார்!

வழிபாட்டுக் கருவறையில்

தமிழன் நுழைய முடியவில்லை..

வழக்காடு மன்றத்தில்

தமிழ் நுழைய முடியவில்லை..

என்னடா இது வீண் இரைச்சல்

என்று சாலையைப் பார்த்தால்…

கூஜாக்கள் குலுங்க…

ஜால்ராக்கள் சிணுங்க…

கோடம்பாக்கத்து காக்கைகள்

குறிபார்த்துக் கரைய…

பல்கலை நரிகள் பாசாங்கு முழங்க…

கரைவேட்டி முதலைகள்

மத்தளம் கொட்ட

வயிற்றெரிச்சலோடு

கொடநாட்டு மதயானை பிளிற…

களைகட்டுகிறது கருணாநிதிச் சோழரின்

கோவையலங்காரம்…

பேச்சு மறுக்கப்பட்ட

கோவை சிறுதொழில் உதடுகளில்

அறுந்து கிடக்கும்

ஓசையற்ற கைத்தறியில்

இறந்து கிடக்குது நம் தாய்மொழி…

தமிழகத்தை உய்ப்பிக்க

உழைக்கும் மக்களிடமிருந்து

உருவாக வேண்டும் ஒரு செம்மொழி…

______________________________________________

- துரை. சண்முகம்

http://www.vinavu.com/2010/06/21/karunanidhi-chozhan/

இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சே பல தடவை தனது நேர்காணல்களில் தமிழ் நாட்டைத் தமக்குச் சாதகமாக எப்படி மாற்றிக்கொண்டோம் என குறிப்பிடுகிறார். எந்த ஜனநாயக வரம்புகளுக்கும் உட்படாத ராஜபக்சே குடும்பத்தோடு கருணாநிதியின் குடும்பத்தின் அரசியல் உறவு வெளிப்படையானது. கனிமொழி ஈறான தி.மு.க உறுப்பினர்கள் இலங்கை சென்ற வேளையில் அதன் ஆழம் ஒளிவு மறைவின்றி வெளிப்பட்டது.

கருணாநிதியும் சிதம்பரமும் இலங்கை அரசும் இணைந்து நடத்திய நாடகம் தான் கருணாநிதி போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்தது என்று கோதாபய ராஜபக்சே எத்தனை ஊடகங்களுக்குச் சொல்லியிருப்பார்? கருணாநிதி குடும்பத்திடமிருந்து எந்த மறுப்பும் இதுவரை வந்ததில்லை. நாடகத்தின் கதாசியர் மட்டுமல்ல அதன் கதாநாயகனும் தானே என ஒத்துக்கொள்கிறார் கருணாநிதி.

கர்பிணிப் பெண்கள், பச்சிழம் பாலகர்கள், முதியவர்கள் என்று ஐம்பதாயிரம் அப்பாவித் தமிழர்கள் வன்னி மண்ணில் அனாதைகளாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த அதே நாளில் டெல்லியில் தனது பேரப்பிள்ளைகளின் பதவிக்காக பேரம் பேசிக்கொண்ட்ருந்தார் ஒரு முதியவர். அவர் தான் முத்துவேல் கருணாநிதி என்பவர். கருணாநிதியும் அவரின் பரிவாரங்களும், ஈழத் தமிழர்கள் கொசுக்கள் போலக் கொல்லப்பட்டுக்கொண்ட்ருந்த போது அதனைக் கண்டித்து அமைதி வழியில் போராடிய தமிழ் நாட்டுத் தமிழர்களைச் தெருத் தெருவாக வேட்டையாடிச் சிறையில் அடைத்தவர்.

முத்துக்குமார் தமிழ் மக்களுக்காகச் செத்துப் போனபோது அமைதி வழியில் இலங்கை அரசைக் கண்டித்த ஆயிரமாயிரம் தமிழர்களை மிரட்டிப் பணியவைக்க முற்பட்டவர்.

இவ்வாறு நாடகமாடும் அரசியல் துரோகத்தின் கதாசிரியன் கருணாநிதி தனது இரத்ததின் இரத்தங்களுக்காக கடைசியாக ஆடிய நாடகம் தான் விழுப்புரம் ரயில் தண்டவாளத் தகர்ப்பு. அனைத்தையும் கேள்வியெழுப்பும் புதிய சந்ததி ஒன்று உருவாகியிருப்பது கலைஞர் கருணாநிதிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த சந்ததி விழிப்பாக இருக்கிறது. விழுப்புரம் ரயில் நாடகம் பிசுபிசுத்துப் போன போதே அதை அவரும் அவரின் பின்னால் இருக்கும் கூட்டமும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். தவறிவிட்டார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் ரஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வேளையில் திணிக்கப்பட்ட அடக்கு முறைகளைக் கடந்து வந்திருக்கும் உரம் மிக்க இந்தச் சந்ததி யாரையும் நம்பப் போவதில்லை.

பார்வதியம்மாள் தனக்குக் கடிதம் எழுதியதாக இன்னொரு நாடகத்தை அரங்கேற்றிய போது யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. நம்பகமான தகவல்களின் அடிப்படையில் அவ்வாறான கடிதம் எதுவும் பார்வதியம்மாளால் முத்துவேல் கருணாநிதிக்கு எழுதப்படவில்லை என்பதே உண்மை எனத் தெரிய வருகிறது.

புலிகளின் பெயரில் கருணாநிதிக்கு பாராட்டு- உளவு நிறுவனங்களின் விளையாட்டு.

தமிழுக்காக உரிமை கோரிய வழக்குரைஞர்களை எல்லாம் சிறைக்குள் பூட்டிவைத்துவிட்டு செம்மொழி மாநாடு நடத்துவதற்காக கோவைக்கு செல்லும் கருணாநிதியின் நவீன நாடகம் தான் புலிகள் இன்று அவருக்கு எழுதிய கடிதம்.

செம்மொழி மாநாட்டைப் புலிகள் பாராட்டியதாக அவருக்கு ஒரு மடல் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்த முறை அறிக்கை ரூபன் என்பவர் பெயரில் வந்திருக்கிறது. தமிழ் செம்மொழி மாநாட்டை ஆதரிப்பதற்காக எழுதப்பட்டுள்ள அந்த அறிக்கையில் தமிழக அரசியலையும் மொழியையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று தெறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைக்கு நன்றி தெரிவித்து தமிழனத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் விரோதியான முத்துவேல் கருணாநிதி இன்னொரு அறிக்கையை ஊடகங்களுக்கு விடுத்துள்ளார். எங்கோ கேட்ட சினிமாக் கதை போல் இல்லை?

இன்று புலிகளின் பிரசன்னம் எங்கும் இல்லை. ஆங்காங்கே சிதறிக்கிடப்பவர்கள், தம்மைப் பாதுக்காத்துக்கொள்ளவே வசதியற்றுத் தவிக்கிறார்கள். இலங்கையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும், படுகொலைகளும் என்று வடகிழக்கில் திறந்தவெளி வதை முகாமை நடத்தி வருகிறது பேரினவாத ராஜகபக்சே குடும்பம்.

வசதியாக வாழ்ந்த வன்னிக் குடும்பங்கள் உணவின்றி செத்துக்கொண்டிருப்பது எமது இதயத்தை முள்ளால் துளைக்கிறது. உலகமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க தமிழினத்தினதும் தமிழினதும் வேர்கள் அறுக்கப்பட்டு வெட்டிச் சாய்க்கப்படுகிறது. அந்த நசிவுகளில் கொல்லப்படும் அப்பாவித் தமிழர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு செம்மொழி மாநாடு நடத்துகிறாரம் தமிழுக்காக. அதற்காக புலிகளின் பேரில் தானே அறிக்கை தயாரித்து, அதற்குப் பதிலையும் தானே தயாரித்து ஊடகங்களை ஏமாற்றியுள்ளனர் கருணாநிதியும் அவர் சார்ந்த கும்பலும்.

தவிறவும் தமிழர்கள் எல்லாம் உலகம் முழுக்க இருண்ட காலத்திற்குள் தள்ளப்பட்டு விட்ட இந்தச் சூழலில் தமிழ் மொழியைக் காப்பாற்றுவது போல நாடகமாடுகிறார் இந்த சந்தர்ப்பாவாதி. ஆனால் தமிழக நீதிமன்றங்களிலேயே தமிழுக்கு இடமில்லை என்பதால் வழக்கறிஞர்கள் கைதாகி சிறை சென்று அங்கேயும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று சிறைக்குச் சென்றிருக்கும் வழக்கறிஞர்கள்தான் அன்று பொர் நிறுத்தம் கேட்டுப் போராடினார்கள். அப்படிப் போராடிய வழக்கறிஞர்களை நீதிமன்றத்திற்குள் நுழைந்து அடித்து உதைத்த கருணாநிதி இன்று தமிழுக்காக மாநாடு நடத்துவதாகச் சொல்கிறார். ஆனால் அன்று ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய வழக்கறிஞர்களோ இன்று தமிழுக்கு அங்கீகாரம் கேட்டுப் போராடி சிறை செல்கிறார்கள்.

உண்மையான ஈழத் தமிழர்கள் யாரை ஆதரிக்க வேண்டும்?

உண்மையான ஈழத் தமிழர்களும் ஈழ விடுதலை ஆதரவாளர்களும் இந்திய, தமிழக சந்தர்ப்பவாத தலைமைகளுக்கு எதிராக போராடும் சக்திகளையும் ஏனைய போராடும் சக்திகளையும்தான் ஆதரிக்க வேண்டுமே தவிற திட்டமிட்டு நாடகம் ஆடும் கருணாநிதியை அல்ல! மக்களைக் காட்டுக் கொடுத்து போருக்கு துணை நின்ற கருணாநிதியை ஆதரிப்பது ஈழ மக்களுக்குச் செய்யும் வரலாற்றுத் தூரோகம். முத்துக்குமார் தொடங்கி 19 தமிழகத் தோழர்கள் உயிர்த்தியாகம் செய்தும் இன்று வரை அந்தத் தோழர்களின் நினைவைப் போற்றும் விதமாக ஒரு சிலை கூட வைக்க கருணாநிதி அனுமதித்த தில்லை.

நிலமை இப்படி இருக்கும் போது செம்மொழி மாநாட்டை ஆதரித்து அறிக்கை விடுத்திருப்பதோடு செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு ஏதோ கருணாநிதி தமிழினத்திற்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. இது தமிழக, இந்திய உளவு நிறுவனங்களின் இன்னொரு விளையாட்டு இது போல இன்னும் பல அறிக்கைகள் வெளிவரும். நாளை கனிமொழி, மு.க. அழகிரி ஏன். காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவைப் பாராட்டிக் கூட புலிகளின் பெயரில் அறிக்கை வரலாம். ஈழ மக்களே, உண்மையான தமிழக ஆதரவாளர்களே இந்த துரோகிகளின் உண்மை முகத்தை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்.

(This website and its Articles are copyright of inioru.com – © inioru.com 2007-2010. All rights reserved. For republication or reproduction please provide the complete link of the article and the name of this website. email:inioru@gmail.com).(இனியொரு இணையத் தளத்தில் வெளிவரும் கட்டுரைகளை மீள்பதிவு செய்யும் போது கட்டுரைக்கான தொடுப்பையும் தயவுசெய்து வெளியிடவும். அச்சு மீள்பதிவிற்கு அனுமதி பெற inioru@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.)

http://inioru.com/?p=14128

இந்த அறிக்கை கருனானிதிகுகும் அவர் செய்யும் கேடு கெட்ட அரசியலுக்கும் உறுதுணையானதாகவே இருக்கும்.தமிழ் நாட்டு மக்களிடம் ஏற்பட்டு வரும் விழிப்புணர்வைச் சிதைக்கவுமே இது பயன் படும்.இந்த மானாடு தான் இழந்த தமிழ் அரசியல் நிலையைத் தக்கவைக்க கருனானிதி மானிலத் தேர்தலுக்கு வசதியாக நடாத்தும் மானாடு.தனது நிலைப்பாடே மத்திய அரசின் நிலைப்பாடு என்று அவர் கூறிய பின்னரும் கருணானிதியை நம்பி இப்படி ஒரு அறிக்கை விடுபவர்கள் ,கடந்து வந்த பிழையான அரசியற் புரிதல்களுடன் இயங்குகிரார்கள். நாம் என்றும் மக்களை நம்பியே எமது அரசியலை நடாத்த வேண்டும்.அது புலத்திலும் சரி தமிழ் நாட்டிலும் சரி களத்திலும் சரி.இதில் பெரிய இராசதந்திரம் இருப்பதாகா நினைப்பவர்களுக்கு நான் சொல்லக் கூடியது, நலன்களின் அடிப்படையில் இயங்கும் உலகைப் புரிந்து கொள்ளாமால் அரசியல் செய்து மீண்டும் மீண்டும் ஏமாறாதீர்கள்.கருணானிதியின் குடும்ப நலனும் ஈழத் தமிழரின் நலனும் அன்றில் தமிழ்னாட்டுத் தமிழரின் நலனும் இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனும் என்றும் ஒன்றாக இருந்ததில்லை, இனியும் இருக்கப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று செம்மொழி மாநாடு கோவையில் தொடங்குகின்றது. இது பற்றி பெரும்பான்மையான வடக்கு கிழக்கு வாழ் மக்கள் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை. பெரும்பான்மையான மக்கள் கருணாநிதி மீது சினங்கொண்டவர்களாகவே இருக்கின்றனர். வீரம் நிறைந்த புதல்வர்களையும் புதல்விகளையும் பறிகொடுத்துவிட்டு பதறி நிற்கும் தமிழ் தாய்க்கு அவளது குழந்தகளைக் கொல்ல சரிபங்கு உறுதுணை நின்ற கயவன் கருணாநிதி விழா எடுப்பது கேவலமானது. வரலாறு எட்டப்பன் கருணாநிதியை ஒருபோதும் மன்னிக்காது, மன்னிக்கவும் கூடாது. கருணாநிதியின் திமுக தமிழ்நாட்டில் ஆட்சியிலும், நடுவண் அரசில் முக்கிய பங்காளியாக இருந்தபோதே ஈழத்தில் அப்பட்டமான இனச்சுத்திகரிப்பு நிகழ்ந்தது என வரலாறு எடுத்து இயம்பும். இதுவரை இலங்கை அரசின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என கருணாநிதி அழுத்தம் கொடுத்தாரா என்றால் அதுவும் இல்லை.

இம்மாநாடு குறித்து யாழ்ப்பாண மக்களின் நிலைப்பாடு பற்றி அறிய சிலரைத் தொடர்புகொண்டு கேட்டேன். எல்லோருமே கெட்ட வார்த்தையால் கருணாநிதியைத் திட்டினர். மக்கள் என்ன சொல்லுகின்றார்கள் என மீண்டும் கேட்டேன், மக்கள் இம்மாநாடு குறித்து பெரிதும் அக்கறைப் படவில்லை என்பதே பதிலாக கிடைத்தது.

இந்த நிலையில் இவ்வறிக்கை (உண்மையாக இருக்குமானால்) புலிகளின் தலைமைச் செயலகத்தால் வெளியிடப்பட்டு, புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இவ்வறிக்கை (உண்மையாக இருக்குமானால்) களத்தில் வாழும் மக்களின் விருப்பு வெறுப்புக்களை ஆராயாமல் அறியாமல் வெளியிடப்பட்டுள்ளது என்பது வெள்ளிடை மலை. இது ஒரு அப்பட்டமான காட்டிக்கொடுப்பாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://eelanationnews.com/eelam/108-eelam/2173-chemmoli-maanadu.html

என்ன அறுப்படா இது!!!!?

  • கருத்துக்கள உறவுகள்

00020063.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.