Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது சமுதாயம் மாற வேண்டுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அனைவருக்கும் என்னடா இவள் எப்ப பார்த்தாலும் சமுதாயம்,பெண்ணடிமை பற்றியே எழுதுகிறால் என நினைக்காதீர்கள்...இச் சமுதாயத்தில் நான்,நீங்கள் எல்லோரும் ஒரு அங்கம் ஆன படியால் இச் சமுதாயத்தை பற்றிய எனது கருத்தினை எழுதுகிறேன்...தயது செய்து ஆண்களோ,பெண்களோ உங்கள் மனதிற்குபட்டதை எழுதுங்கள்...தலைப்போடு சம்மந்தப்பட்ட‌தாய் மட்டும் எழுதுங்கள்.

நமது சமுதாயத்தில் ஒரு ஆண் குழந்தையை கொஞ்ச‌ம் சுதந்திர‌ம் கொடுத்தும் பெண் குழந்தையை கொஞ்ச‌ம் அடிமையாகவுமே வைத்திருக்கிறோம்...ஒரு 15 வயதிற்கு மேற்பட்ட ஆண் பிள்ளை தனது நண்பர்களுட‌ன் எங்கேயாவது சுற்றி விட்டு எத்த‌னை மணிக்கு வீடு வந்தாலும் வீட்டில் பெரிதாய் அலட்டிக் கொள்ள மாட்டார்கள் அதே நேர‌ம் ஒரு விபர‌ம் தெரிந்த 18 வயதிற்கு மேற்பட்ட‌ பெண் சற்கு நேர‌ம் பிந்தி வந்தால் நிறுத்தி வைத்து விசாரிப்பார்கள் எங்கே போய் விட்டு வந்தாய்,யாரோடு சுற்றி விட்டு வந்தாய் என விசாரிப்பார்கள் இது சரி என நினைக்கிறீர்களா...ஒரு பெண் கொஞ்ச‌ம் பிந்தி வந்தால் ஏன் தனது பெண் கெட்டுப் போய் விடுவாள் என இச் சமூதாயம் நினைக்கிறது...ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களும் சமுதாயத்தில் பல துறைகளில் ஆண்களுக்கு நிகராக விளங்குகிறார்கள் ...பல வீடுகளில் ஆண்களைப் பார்க்கவும் பெண்கள் நன்றாகப் படிப்பார்கள்[படித்திருப்பார்கள்]அப்படி இருந்தும் இச் சமுதாயம் ஏன் பெண்களை கொஞ்ச‌ம் கீழ் வைத்து பார்க்கிறது...சகோதர,சகோதரியுடன் பிறந்தவர்களுக்கு தெரியும்...நான் பல குடும்பங்களை கண்டு இருக்கிறேன் ஆண்களுக்கு எப்போதும் நல்ல சாப்பாடு கொடுத்து விட்டு பெண்களுக்கு இருக்கிற மிச்சத்தை தான் கொடுப்பார்கள்...ஒரு பெண் ருதுவானால் மட்டும் கொஞ்ச நாள் நல்ல சாப்பாடு கொடுப்பார்கள்..நான் பெண்கள் ஆண்களுக்கு மேலானவர்கள் என சொல்லவில்லை அவர்களுக்கு சமமானவர்கள் எனத் தான் சொல்கிறேன்.

ஒரு ஆண் மனைவியை இழந்தால் அந்த ஆண் ஒரு கன்னி கழியாத பெண்ணை திரும்பவும் மணம் முடிப்பான் அதே வேளை ஒரு பெண் கணவனை இழந்தால் ஒரு விவாகர‌த்து ஆனவரையோ அல்லது மனைவியை இழந்தவரையோ தான் திருமணம் முடிக்க வேண்டும் இதற்கு என்ன கார‌ணம் என நினைக்கிறீர்கள்...இதற்கு ஆண்கள் மட்டும் கார‌ணம் இல்லை பெண்களும் இதற்கு உட‌ந்தையாகவே உள்ளனர்...இது சரி என நினைக்கிறீர்களா அல்லது இதை மாற்ற வேண்டுமா?

ஒரு பெண் திருமணம் முடிக்கும் போது தன்னிலும் பார்க்க வயது கூடியவரையே திருமணம் செய்ய வேண்டும் அப்படி செய்யாமல் தன்னிலும் வயது குறைந்தவரை மணம் முடித்தால் அப் பெண் தன் கணவரை கணவர் என நினைக்காமல் ஒரு தம்பியாக நினைத்து தான் குடும்பம் நட‌த்துவார் என நினைக்கிறேன் அதனால் குடும்பத்தில் என்ன நட‌க்கும் என அனைவருக்கும் தெரியும்...இந்த விட‌யத்தை பொறுத்த வரை எமது சமுதாயத்தின் கருத்து சரி என நினைக்கிறேன் இது பற்றிய உங்கள் கருத்து என்ன?...தனது மகனோ அல்லது மகளோ வெள்ளையையோ,காப்பிலியையோ திருமணம் முடித்தால் ஒன்றும் சொல்லாத இச் சமூகம் தங்கள் இனத்தை சேர்ந்த சாதி குறைந்தவனை காதலித்தாலோ அல்லது திருமணம் முடித்தாலாலோ எதிர்ப்பது ஏன்...திருமணத்தின் போது சாதி பார்ப்பது நல்லதா?

நீங்கள் உங்கள் ஆண்,பெண் பிள்ளைகளை எப்படி வளர்ப்பீர்கள்...உங்கள் எதிர்க்கால சந்ததி எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்...மாற்றம் தேவையா? நான் எழுதியதில் ஏதாவது பிழை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்...நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை போல புரட்சியாளராக வளர்க்க உத்தேசித்துள்ளேன் தோழரே..

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லப்பட்ட விடயங்கள் எல்லா இனத்தவருக்கும் பொதுவானது. எனினும் தமிழர்கள்/இந்தியர்கள் இன்னமும் விருத்தியடைந்த இனமாக வரக் காலம் எடுக்கும்.

பலர் பெண்ணியம் பற்றிய தவறான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் எமது சமூகத்தின் பிரதிபலிப்பேயாகும்.

எம் சமூகத்திலுள்ள ஆண்கள் பலர் தாழ்வுச்சிக்கலில் உள்ளனர், எனவே தம் தாழ்வுச்சிக்கலை மறைக்கப் பெண்களை அடக்கியாள முற்படுகின்றனர். குடும்பம் சார்ந்த முக்கியமான விடயங்களை ஆண் தனித்தே எடுக்கின்றான். பெண்களைக் கருத்துக்கூறவே பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. ஏதாவது கூறமுற்பட்டால் வன்முறை மூலம் பெண் அடக்கியாளப்படுகின்றாள்.

உங்களது கேள்விகளுக்கு விடைகள் மிகவும் இலகுவானவை. சமூகக் கட்டமைப்புக்கு வெளியே சென்று தனிநபர் சுதந்திரம் போதும் என்றிருப்போர் இக்கேள்விகளைச் சட்டை செய்யத் தேவையில்லை. தமது செயல்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் தாமே பொறுப்பு என்று ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக பிள்ளைகளை வளர்த்தால், அவர்கள் தாங்களாகவே அவர்களுக்குச் சரியெனப்படும் முடிவுகளை எடுப்பார்கள்.

"முதலில் நான் மாறவேணும். அதுக்கு பிறகு நான் அன்னியோன்யமாக உறவாடுபவர்களை மாற்றவேணும். அதுக்கு பிறகு ஒன்றன் பின் ஒன்றாய் உள்ளிருந்து வெளியாக எங்கட உறவுக்கட்டமைப்பில இருக்கிறவர்களை மாற்ற முயற்சிக்க வேணும். மற்றவர்கள் எனது நடைமுறைகளுக்கு உடன்படாவிட்டாலும் காலப்போக்கில் எனக்கு எதிர்ப்பு தருவதை குறைத்து, பின்னர் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்": இப்படி ஜோசிச்சு, இயங்கி பார்க்கலாம்.

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா நீங்கள் எழுதிய சில விடயங்களை இங்கே தொட்டுச்செல்ல விழைகிறேன்.முதலாவது நீங்கள் கூறிய விடயங்களை நான் என்னையும் என் நெருங்கியவர்களையும் சார்ந்து நான் பார்த்த விடயங்களை பகிர விரும்புகிறேன்.முதலாவது விடயமாக நேரம் பிந்தி வீட்டை வரும் போது நீங்கள் சொல்வது போல ஆணுக்கு ஒரு மாதிரி பெண்ணுக்கு ஒரு மாதிரி அல்ல சொல்லப்போனால் அக்காக்களை விட எனக்குத்தான் கேள்வி கூடவாக இருக்கும்.நான் வெளியாலை நிண்ட நேரத்துக்கு எல்லாத்துக்கும் கணக்கு சொல்ல வேணும்.எங்கை போறதேண்டலும் சொல்லிட்டு தான் போகவேணும்.எல்லா இடத்துக்கும் விட மாட்டினம்.சில வேளைகளில் பிந்தி வந்தால் அடி கூட விழும்.இது எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் .என்ன அக்காக்களுக்கு அடி விழாது.

நீங்கள் சொல்வது போல பெண்களை கூட கேள்வி கேட்க காரணம் பருவ வயதில் இனக்கவர்ச்சி ஏற்படக்கூடிய சாத்தியம் கூட அதனால் சிலவேளைகளில் எல்லை மீறக்கூடிய சாத்தியங்களும் உண்டு.அப்பிடி நடந்தால் பெண்ணுக்கு தான் பாதிப்பு கூட இயற்கையின் படைப்பால்.ஆராவது காதலித்து விட்டு குழந்தை உருவாகினாப்பிறகு ஏமாத்தினால் காலம் பூராவும் பெண் தனியாக அதை சுமக்க வேண்டி வரலாம்.அதை விரும்பாதபடியால் தான் என்று நினைக்கிறன்.மற்றும் படி அப்பா அம்மா யாரிலையும் வித்தியாசமாக பாசம் காட்டுவதை நான் பார்கவில்லை.

இனி இரண்டாவது விடயம் ஆண்கள் தான் குடும்பத்தில் முடிவெடுப்பினம் எண்டு சொல்லுறீங்கள்.இதில் இரண்டு விடயம் உள்ளது ஒண்டு நான் நிறைய பேரோடை பழகினதிலை தெரிஞ்சது என்னெண்டால் சில முடிவுகள் எடுக்கும்போது அதனால் எதிர் காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளிருந்து தப்பிப்பதற்காக பெண்கள் தாங்களாகவே முடிவெடுக்காமல் விடுறது.நான் ஒரு உதாரணம் சொல்ல விரும்பிறன்.நான் ஊரிலை இருக்கேக்கை கனக்க பொது விசயங்களுக்கு நிதி சேகரிக்க செல்வேன் அப்ப பெரும்பாலான பெண்கள் சொல்வது நான் தந்திடுவன் அவர் என்ன சொல்லுறாரோ தெரியாது எண்டு.ஆனால் அவைக்கு தர மனமிருக்காது அவரைச்சாட்டி தாங்கள் தப்பித்துக்கொள்ளுறது.இது ஒரு சின்ன உதாரணம் தான்.

இரண்டாவது விடயம் இதுவும் எனது நேரடி அனுபவம்.பெண்கள் தாங்கள் ஒரு முடிவெடுத்து ஏதாவது பிரச்சினை வந்தால் முதலாவதாக அழுகிற தான் வேலை அதை எப்பிடி எதிர் கொள்ளுறது எண்டு யோசிக்கிறேல்லை.இனியென்ன வாழ்க்கையே முடிஞ்ச மாதிரி புலம்புவினம்.இதை எழுதியதுக்கு நீங்கள் ஆராவது கோவிக்கலாம் ஆனால் இது தான் யதார்த்தம்.இது எல்லாம் நான் கண்டது கேட்டது சிலவேளை நீங்கள் கண்டது வேறாக இருக்கலாம்.

அடுத்தது ஆண் மனைவியை இழந்தால் கன்னி கழியாத பெண்ணையும் பெண் கணவனை இழந்தால் இரண்டாந்தாரமாக தான் கட்டுவினம் எண்டு சொல்லுறீங்கள் ஆனால் நான் பார்த்த வரையிலை கணவனை இழந்த பெண்களும் பெரும்பாலும் கன்னி கழியாத ஆண்களைத்தான் கட்டியிருக்கினம்.அதே மாதிரி மனைவியை இழந்த ஆண்கள் இரண்டாம் தாரமாக கட்டியிருப்பதையும் கண்டிருக்கிறேன்.இது எல்லாம் நான் நேரடியாக கண்டது.

மற்றது சாப்பாட்டை பற்றி சொன்னீர்கள் ,எங்கடை வீட்டிலை எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் என்ன அக்காக்கள் கொஞ்சம் நூதனம் பார்பினம்.நாங்கள் எல்லாம் சாப்பிடுவம்.ஆனால் அம்மா தான் முந்தி ஒழுங்கா சாப்பிட மாட்டா எங்கள் எல்லாருக்கும் தந்திட்டு.நாங்கள் கேட்டாலும் தான் சாப்பிட்டுட்டன் எண்டு போய் சொல்லுவா ஆனால் இப்ப அப்பிடியில்லை.

நான் கனக்க எழுதீட்டன் என்று நினைக்கிறன்,என்ன தாய்க்குலத்திட்டை ரொம்ப திட்டு வாங்கப்போறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம் காலமாய் வரும் உங்கள் சாம்பார் பிரச்சனைகளுக்கு விடைகள் வெளிப்படையாக சொல்லப்பட்டும்......

அதாவது..

மத ரீதியாக,உளவியல் ரீதியாக,உணர்வுரீதியாக,இயற்கைரீதியாக விளக்களிக்கப்பட்டாலும்....

ஒரு குறுகிய மனப்பான்மை உள்ள அடுப்படி மூளைகள் என்றுமே விளக்கம் பெற மாட்டார்கள் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி அக்கா, உங்களுக்கு ரெண்டு மகன் மார் இருக்கினம் என்று கேள்விபட்டேன், உங்கட மகன் வளந்து நல்ல படித்து நல்ல வேலை செய்து கொண்டிருக்கும் பொது, நீங்கள் அவருக்கு கணவனை இழந்த விவாக இரத்து ஒருபிள்ளயோட இருக்கிற ஒரு பெண்ணுக்கு கட்டிகுடிபிங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

காலம் காலமாய் வரும் உங்கள் சாம்பார் பிரச்சனைகளுக்கு விடைகள் வெளிப்படையாக சொல்லப்பட்டும்......

அதாவது..

மத ரீதியாக,உளவியல் ரீதியாக,உணர்வுரீதியாக,இயற்கைரீதியாக விளக்களிக்கப்பட்டாலும்....

ஒரு குறுகிய மனப்பான்மை உள்ள அடுப்படி மூளைகள் என்றுமே விளக்கம் பெற மாட்டார்கள் :lol:

கு.சா அண்ணா..உங்கள் கருத்துக்களைக் கண்டால் ஓடி ஓடி பச்சை குத்தும் நான் இப்போ கொஞ்ச நாட்களாக சிவப்பு புள்ளியை ஏன் மட்டுமார் எடுத்தார்கள் எண்டு நினைத்து கவலைப்படுறன்.இப்படியே பெண்களை குற்றம் சொல்லி,சொல்லியே மட்டம் தட்டிக் கொண்டும் பெண்களோடு தானே வாழ்கிறீர்கள்... :lol::blink:

காலம் காலமாய் வரும் உங்கள் சாம்பார் பிரச்சனைகளுக்கு விடைகள் வெளிப்படையாக சொல்லப்பட்டும்......

அதாவது..

மத ரீதியாக,உளவியல் ரீதியாக,உணர்வுரீதியாக,இயற்கைரீதியாக விளக்களிக்கப்பட்டாலும்....

ஒரு குறுகிய மனப்பான்மை உள்ள அடுப்படி மூளைகள் என்றுமே விளக்கம் பெற மாட்டார்கள் :lol:

மிகச் சரியாகச் சொன்னீர்கள் கு.சா. பெண்ணடிமை என்று கதைப்பவர்கள் அதனைப் பயன்படுத்தி மற்றவர்கள் மீது பழியைப் போட முனைகிறார்களே தவிர அதன் உண்மை நிலையை அறிய முனைவதில்லை. ஒருவரின் அனுமதியின்றி யாரும் யாரையும் அடக்கி ஆள முடியாது. அப்படி அவர்கள் நினைப்பார்களேயானால், அவர்கள் சோம்பேறிகளாகவும் கோழைகளாகவும்தான் இருக்க முடியும். அறிவுத்தேடலும் வளங்களும் குன்றியிருந்த தாயகத்தில் வேண்டுமானால் பெண்களால் முன்னேற முடியாத சூழ்நிலை என்று கூறலாம். வளம் பொருந்திய வெளிநாடுகளிலும் இதைப் பற்றிப் பேசுவது முட்டாள்த்தனம். சுதந்திரம் என்பது எமது உள்மனதைப் பொறுத்துத்தான் உள்ளதே தவிர, வெளியில் இல்லை.

முதலில் பெண்ணடிமை என்று கதைப்பவர்கள் பெண்ணியம் என்பதன் அர்த்தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். ஆண்களுக்கெதிராகக் கதைப்பதும், அவர்களோடு போட்டி போடுவதும்தான் பெண்ணியம் எனப் பலர் நினைக்கிறார்கள்.

எல்லா மனிதப்பிறப்புகளும் ஆண்மையும் பெண்மையும் கலந்துதான் உருவாகிறது. ஆகவே, எல்லா மனிதர்களிடமும் ஆண்மைத் தன்மையும் பெண்மைத் தன்மையும் கலந்துதான் உள்ளது. விகிதாசாரத்தின் அளவுகோல்தான் வித்தியாசம். பெண்ணடிமைத்தனம் என்பது மனிதனால் சமூகத்திற்காக உருவாக்கப்பட்டதே தவிர இயற்கையானதல்ல. செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு விடயத்தை இல்லாதொழிப்பதொன்றும் கடினமில்லை.

என்னைப் பொறுத்தவரையில், பெண்கள் தங்கள் சுயலாபத்திற்காக இதனை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்களே தவிர தன்னம்பிக்கை உள்ள யாரும் இதனைப் பற்றி அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தன்னிலும் வயது குறைந்தவரை மணம் முடித்தால் அப் பெண் தன் கணவரை கணவர் என நினைக்காமல் ஒரு தம்பியாக நினைத்து தான் குடும்பம் நட‌த்துவார் என நினைக்கிறேன்

இந்த கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்,குடும்பம் நடத்துகிறதுக்கு வயசு ஒரு பிரச்சனையே இல்லை, இதுவும் ஆண்கள் தங்கள் சுய நலத்துக்காகதான் செய்து இருக்கினம்.ஒரே வயசுப்பெண்னையோ வயது கூடிய பெண்னையோ மனம்முடித்தால் வயசு போனகாலத்தில கொஞ்சம் கஸ்டப்பட வேண்டும் என்றுதான் வயசு குறைந்த பெண்களை ஆண்கள் மனம்முடிக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அண்ணா,நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் உண்மையிலேயே இது ஆண்கள் ஏற்படுத்தியது அல்ல பெண்கள் அப்பிடி செய்வதை விரும்புவதில்லை இது நான் நேரிடையாக கண்டது.என்னுடைய அக்காவின் கணவருக்கு அக்காவை விட ஒரு வயது குறைவு திருமணம் நிச்சயிக்கும் போது அத்தான் தனக்கு வயதைப்பற்றி எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று சொன்னார்.ஆனால் அக்கா முதலில் நிறைய மறுப்பு தெரிவித்ததன் பின்னர் தான் ஒருமாதிரி சம்மதித்தவ.எதற்கெடுத்தாலும் இது ஆண்கள் தான் ஏற்படுத்தியது என்று எழுந்தமானமாக சொல்லகூடாது.சிலவேளைகளில் உங்கடை பார்வையில் அப்படி இருக்கலாம் ஆனால் உண்மை சிலவேளைகளில் சுடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்,குடும்பம் நடத்துகிறதுக்கு வயசு ஒரு பிரச்சனையே இல்லை, இதுவும் ஆண்கள் தங்கள் சுய நலத்துக்காகதான் செய்து இருக்கினம்.ஒரே வயசுப்பெண்னையோ வயது கூடிய பெண்னையோ மனம்முடித்தால் வயசு போனகாலத்தில கொஞ்சம் கஸ்டப்பட வேண்டும் என்றுதான் வயசு குறைந்த பெண்களை ஆண்கள் மனம்முடிக்கிறார்கள்

புத்து மாமா.. பெண்களுக்கு ஆண்களைக் காட்டிலும் குறைந்த வயதிலேயே குழந்தை பெறுவதற்கான இயற்கையான வாய்ப்பு இழக்கப்பட்டு விடும். 78 வயது தாத்தாக்கு குழந்தை பிறக்கும். 78 வயது பாட்டியால முடியுமா..??!

முடியும்.. இன்றைய விஞ்ஞான உலகில் முடியும். இருந்தாலும் விஞ்ஞான ரீதியில் கூட 78 வயது பாட்டியை காட்டிலும் 25 வயது பெண்ணுக்கு அளிக்கும் சிகிச்சை கூடிய வெற்றியை அளிக்கும். இதுதான் புத்து மாமா உண்மை. அதைவிட்டிட்டு... எங்கையோ கொண்டு போய் எதுக்கோ முடிச்சுப் போடுறது போல தெரியுது.

தமிழச்சியின் கருத்தே எனது. ஆண் பெண் என்ற சில அடிப்படை வேறுபாடுகளுக்கு அப்பால்.. அவர்கள் வளர்க்கப்படும் அல்லது வளர்ந்த சூழலே அவர்களை தீர்மானிக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் வளர்ந்த சூழலில்.. ஆண் என்று நெஞ்சை நிமிர்த்தினதும் இல்ல பெண் என்று குட்டக் குட்டக் குனிஞ்சவையையும் காணேல்ல. எல்லாரும் மனிதனுக்குரிய இயல்போடுதான் நடந்து கொண்டார்கள்.

சமூகத்தில் சில மட்டங்களில் இருக்கும் பிற்போக்குத் தனமான அறிவியல் சம்பந்தப்படாத சிந்தனைகளை கல்வி அறிவூட்டுவதன் மூலமும் விலக்கலாம் என்று நினைக்கிறேன்.

மற்றும்படி ரதி அக்கா எடுத்துக் கொண்ட பிரச்சனை அவர் கண்டு வந்த சமூக மட்டத்தில் அதிகம் இருக்கலாம். அதை நிராகரிக்க முடியாது. அதைப் போக்க கல்வி அறிவும் முக்கியம்..! அது இரு பாலாரிடமும் இருக்க வேண்டும். பெண்கள் படித்து ஆண்கள் படிக்காவிட்டாலும் பிரச்சனை மறுதலையும் பிரச்சனை. :blink::lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி இங்கு நான் பெண்கள் ஆண்களால் மட்டும் அடிமைப்படுத்தபடுவதாக சொல்லவில்லை அதற்கு ஆண்களும் காரணம் எனத் தான் சொல்கிறேன்...நான் சமூகத்தில் கண்டதை,கேட்டதை வைத்து தான் எழுதுகிறேன்...எங்கே அப்படி நடக்கவில்லை உங்களால் எழுத முடியுமா? 10/100%குடும்பத்தில் தான் நீங்கள் சொன்ன மாதிரி நடக்குது.

ரதி அக்கா, உங்களுக்கு ரெண்டு மகன் மார் இருக்கினம் என்று கேள்விபட்டேன், உங்கட மகன் வளந்து நல்ல படித்து நல்ல வேலை செய்து கொண்டிருக்கும் பொது, நீங்கள் அவருக்கு கணவனை இழந்த விவாக இரத்து ஒருபிள்ளயோட இருக்கிற ஒரு பெண்ணுக்கு கட்டிகுடிபிங்களா?

சீலன் எனக்கு கல்யாணம் நடந்து பிள்ளைகள் பிறந்து வளர்ந்த பிறகு கட்டாயம் ஒரு பிள்ளையாவது கட்டிக் கொடுப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா நான் கண்ட சமூகத்தில் வித்தியாசமாகவும் நீங்கள் கண்ட சமூகத்தில் வித்தியாசமாகவும் இருக்கும் போது எப்படி உங்களால் வீதக்கனக்கு எல்லாம் எடுத்து விட முடியுது.என்னால் எல்லாவற்றையும் ஆதாரத்துடன் விளக்க முடியும்.ஆனால் நான் வீதக்கணக்கு சொல்லாததுக்கு காரணம் எல்லாத்தையும் நான் நேரடியாக காணவில்லை என்பதற்காக அப்படி நடக்கவில்லை என்று சொல்ல முடியாது என்பதால் தான்.இங்கே நான் உங்களுடைய கருத்தை மறுதலித்துக்கு காரணம் சில பெண்கள் எல்லாவற்றிற்கும் ஆண்களை குற்றம் சாட்டுவதை கண்டுதான்.நிறைய விவாதிக்கலாம் ஆனால் நேரம் போதாது.

நான் நிறைய சகோதர, சகோதரிகளுடன் ஊரில் வளர்ந்தேன். எனது பெற்றோர் எல்லோரையும் சமமாகத்தான் வளர்த்தார்கள். எவற்றிலும் வேறுபாடு காட்டவில்லை ஒன்றை தவிர. எனது அக்காமாரை இரவு 7 , 8 மணிக்குப்பின் தனியே விடுவதில்லை. ஆண் பிள்ளைகள் இரவு நேரத்தில் வெளியே செல்வதானாலும் காரணத்தோடுதான் விடுவார்கள். பொதுவாக பெண்கள் உடல் ரீதியாக பலவீனமானவர்கள் என்ற பயம்.

புலத்தில் நிலைமை வேறு. எல்லோருக்கும் சம உரிமையும், வாய்ப்புகளும் உள்ளன. எனக்குதெரிய, வயதுக்கு வந்த பிள்ளைகள் உள்ள குடும்பங்களில் ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் சரி சமமாகத்தான் நடத்துகிறார்கள். பிள்ளைகளை பூட்டி வளர்ப்பது அவர்களது எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ஆண் உரிமை, பெண் உரிமை என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் நிற்காமல் நம்பிக்கையுடன் வாழ்வதே நல்லது.

ஆணோ பெண்ணோ, பிற நாட்டவரை திருமணம் செய்வதை எங்கட ஆட்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் நாங்கள் கூட குறைய கல்ச்சர் , அக்ரிகல்ச்சர் பார்கிறனான்கள். இது சரியா பிழையா என அலசி ஆராய வேற திரி திறக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் பார்த்தேன் இதை ரதி

தங்களது கேள்விக்கு என்னிடம் விடை கிடைக்கலாம்

ஏனெனில் என்னிடம் இரண்டும் உண்டு

எனது மகனுக்கும் மகளுக்கும் வித்தியாசம் காட்டப்படுவது உண்மை

காரணம் எமது சமுதாயம்

ஆனால் எனக்கு அதில் உடன்பாடு கிடையாது

அதற்காக ஆண்பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமான சுதந்திரம் உண்டு என்பதல்ல

அவர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு.

ஆனால் பெண்ணின் கட்டுப்பாடுகள் வேறானவை. விரக்தி தரக்கூடியவை. கீழ்த்தரமானவை. சிறுசிறு ஆசைகளுக்கே பெரும் அர்த்தம் கற்பிப்பவை.என் பெண் பிள்ளை அனுபவிக்கும் சோகங்கள் என்னை மிகவும் பாதிக்கும் அவளை, அவளது சிறு ஆசைகளுக்கு கூட அனுமதிக்கமுடியாதுள்ளதே என்று நான் பலநாள்கவலைப்பட்டுள்ளேன்

இளம்வயதில் இவளது வயது பிள்ளைகள் இறந்த இடங்களுக்கு போகும்போது....

எனது மகளைத்திறந்து விடணும், என்ன என்றாலும் அவளது ஆசைகளை நிறைவேற்றட்டும்... என்று நினைப்பேன்

ஆனால் சமூகம் என்னைக்கட்டிபோட்டுவிடும்.

இதில் எழுதுபவர்களிடம் ஒரு கேள்வி

சுதந்திரமாக நாங்கள் திறந்துவிட தயார்.

அவர்கள் பற்றிய தங்கள் கண்ணோட்டம் மாறுமா....?

Edited by விசுகு

இதில் எழுதுபவர்களிடம் ஒரு கேள்வி

சுதந்திரமாக நாங்கள் திறந்துவிட தயார்.

அவர்கள் பற்றிய தங்கள் கண்ணோட்டம் மாறுமா....?

விசுகு,

திறந்து விடுவது என்பது கொஞ்சம் காத்திரமான வார்த்தை என நினைக்கிறன். கிருபன் எழுதியதுபோல் பிள்ளைகளுக்கு நல்லது, கேட்டது எடுத்துச்சொல்லி தமது செயல்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் தாமே பொறுப்பு என வளர்ப்பது அவர்களுக்கு நல்லது. ஆணோ பெண்ணோ புறத்தீங்குகளிலிருந்து பாதுகாப்பதற்கான ஓரளவு கட்டுப்பாடு தேவை. நான் வாழும் நாட்டில் எங்கள் சமூகம் (ஒரு சிலரைத்தவிர) இளையோர்களின் நிலை அறிந்து நடப்பதை காணக்கூடயதாக உள்ளது.

Edited by thappili

தமிழச்சி இங்கு நான் பெண்கள் ஆண்களால் மட்டும் அடிமைப்படுத்தபடுவதாக சொல்லவில்லை அதற்கு ஆண்களும் காரணம் எனத் தான் சொல்கிறேன்...நான் சமூகத்தில் கண்டதை,கேட்டதை வைத்து தான் எழுதுகிறேன்...எங்கே அப்படி நடக்கவில்லை உங்களால் எழுத முடியுமா? 10/100%குடும்பத்தில் தான் நீங்கள் சொன்ன மாதிரி நடக்குது.

சீலன் எனக்கு கல்யாணம் நடந்து பிள்ளைகள் பிறந்து வளர்ந்த பிறகு கட்டாயம் ஒரு பிள்ளையாவது கட்டிக் கொடுப்பேன்.

ரதி, என்னைப் பொறுத்தவரையில் வெளிநாடுகளில் பெண்ணடிமைக்கு முழு முக்கிய காரணம் பெண்களேயொழிய ஆண்கள் அல்ல. பெண்கள் பழைய பஞ்சாங்களிலேயே இன்னும் புதைந்திருக்கிறார்கள். அவர்கள் அதிலிருந்து வெளிவர விரும்புவதில்லை. அதிலிருந்து வெளிவரவேண்டுமாயின் அவர்கள் பல சிக்கல்களைச் சந்திக்கவேண்டியிருக்கும். அந்தச் சிக்கல்களை எதிர்நோக்க விரும்புவதில்லை. அதோடு அவர்கள் மற்றவர்களில் சார்ந்து வாழவே விரும்புகிறார்கள்.

மற்றவர்கள் எம்மை எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு நாமேதான் பொறுப்பு. நாம் இடம் கொடுப்பதால்தான் அவர்கள் தொடர்ந்தும் நம்மை அப்படி நடத்துகிறார்கள். நாம் எதிர்த்தோமானால் அவர்களும் நிறுத்தி விடுவார்கள். கணவனிடம் அடி வாங்கிக் கொண்டு வாழும் பெண்களை நான் இங்கும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவர்களைக் கண்டு நான் பரிதாபப்படுவது கிடையாது. கோபம்தான் கொள்வேன். இந்த நாடுகளில் அவர்களுக்கு உதவி செய்யப் பல சட்டங்களும் சங்கக்களும் இருக்கிறது. அப்படியிருந்தும் இவர்களுக்கு இப்படியொரு வாழ்க்கை தேவைதானா? அந்த வாழ்க்கையில் அவர்கள் தொடர்ந்தும் வாழ்வது அவர்களுடைய விருப்பம். அப்படி விரும்பி வாழ்ந்து கொண்டு கணவனையும் சமூகத்தையும் குறை கூறுவது எப்படி நியாயமாகும்?

தமிழ்ச் சமுதாயத்தில் பல குடும்பங்களில் அப்படி இருக்கத்தான் செய்கிறது. அதுவும் சமூக அறிவு, கல்வியறிவு குறைந்த குடும்பங்களில்தான் உள்ளது. இவையெல்லாம் பிள்ளைகள் வளரும் வரையில்தான். அவர்கள் வளர்ந்த பிறகு இப்படி நடத்த அவர்கள் விடுவதில்லை.

விசுகு, நீங்கள் கொடுப்பதுதான் உங்களுக்குத் திரும்ப வரும். நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குச் செய்வதை உங்கள் பிள்ளைகள் அவர்களது அளவுகோலை வைத்து அளந்துதான் உங்களுக்குத் திருப்பிச் செய்வார்கள். அவர்களது அளவுகோலில் சமூகம் என்ற ஒன்று இருக்காது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

பொதுவாக தமிழ் குடும்பங்களில் ஆண், பெண் பிள்ளைகளிடையே அவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்து வேற்றுமை காட்டித்தான் வளர்கிறார்கள் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை!

இந்தப் பாகுபாடு சிறுவயதிலையே ஆரம்பிப்பதால், குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதிந்தது விடுகிறது. பருவ வயதில் பெண்களுக்கு இருக்கும் கட்டுப் பாடுகளை பார்க்கிலும் ஆண்களுக்குக் குறைவான கட்டுப் பாடுகளையே பெற்றோர் விதிக்கிறார்கள்.

1. கைக் குழந்தை பருவத்தில் ஆண் பெண் என்று பாகுபாடு காட்டாவிட்டாலும், ஒருவயது, இரு வயது வந்ததும் பெண்பிள்ளைகளுக்கு மேலே ஒரு உடுப்புப் போடாவிட்டாலும், உடலின் கீழ் பாகங்களை மறைபத்தற்கு ஒரு கால்சட்டை போடாமல் வீட்டில் விடமாட்டார்கள். ஆனால் ஆம்பிளைப் பிள்ளைகளுக்கு வெறும் அறுனாகொடியுடன், (வசதி என்றால் ஒரு பவுண் பென்டனோட) ஓடித்திரிய விட்டு தாய்மார், பேரன் பேத்தி அதை பெருமையாகவே காட்டிக் கொள்ளவார்கள்.

2. பொதுவாக தாய்மார் ஆண்பிள்ளைகளை ஏதோ ஒரு காரணத்துக்காக (சுயநலமாகக் கூட இருக்கலாம்) பெண்பிள்ளைகளை விட கூடுத்தலாகத் தான் தாங்கிப் பிடிப்பார்கள். அது அவர்களுக்குப் அக்கம் பக்கத்துக்குக் கலர் காட்டுவதாகக் கூட இருக்கலாம். இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்பு வந்தால், சாப்பாடு போட்டு குடுக்கிறது, மகன் சம்பந்தப் பட்ட விசையங்களை தகப்பனுக்கு உடனே சொல்லாமல் மறைகிறது. இதே பெண்பிள்ளைகள் சிறிய தவறுகள் செய்தால் வீட்டை இரண்டாக்கிறது.

3. வயது வந்த பிள்ளைகளுக்கு என்று கட்டுப் பாடுகள் வீடுகளில் இருந்தாலும், பொதுவாக பெண்பிள்ளைகளுக்குத் தான் கட்டுப் பாடுகளின் வடிவமும், அதன் ஆழமும் வலுவாக இருக்கும். காரணம் பருவ வயதில் பெண்களுக்கு வரும் பாதிப்புகளை நிவர்த்தி செய்வது சுலபமானதில்லை. உதாரணம்- பருவ வயதில் ஒரு பெண்ணும் ஆணும் காதல் வசப் பட்டால், பொதுவாக ஆண் அதை பெருமைக்குரிய விடையமாகவே பார்ப்பது வழக்கம், அதனால் அவன் நண்பர்களுக்கு அதை மார் தட்டி சொல்லுவதால் அதன் பின் விளைவுகளை யோசிப்பதில்லை. ஊர் அந்தத் தெரு முழுக்க 'அந்தப் பெட்டை இந்தப் பொடியனோட திரியிறாளாம்' என்று தொடங்கி பெண்ணின் நடத்தை சரி இல்லை என்று அந்தத் தெரு முழுக்க அந்தப் பெண்ணைப் பற்றி தங்கள் வாய்க்கு வந்த்தபடி பேசத்தொடங்கி விடுவார்கள். அதனால் தங்கள் பெண் பிள்ளையின் வாழ்க்கை பாதிக்கப் படுமோ என்று பெற்றோர்கள் பயந்து முன்

எச்சரிக்கையாக பெண்ணை கட்டுப் பாட்டில் வைத்திருப்பது சரியாகவே படுகிறது.

4. ஊரில் பொதுவாக பெண்களுக்கு ஆறு யார் சீலையும் ஆண்கள் தங்களுக்கு ஒரு நாலு முழ வெட்டியும் போதும் என்று யார் வகுத்துக் கொடுத்தது? இது ஒரு சுயநலத்தின் வெளிப்பாடு இல்லையா?

5. இங்கு உள்ள ஆண்பிள்ளைகள் பென்டர் தெரிய காட்சட்டை போடுவதை எத்தனை பெற்றோர் கண்டிக்கிறார்கள்? அதே நேரம் அவர்கள் பெண்பிள்ளைகள் மேல் உள்ளாடைகள் தெரிய உடுப்புப் போட்டால் அதை எத்தனை பெற்றோர் கண்டிக்கிறார்கள்?

6. எங்கள் வீட்டில் அப்பா சரி சமமாக கட்டுப் பாடுகளை கடைப் பிடித்தவர், அதே நேரம் அவர் தனது ஒவ்வொரு பிள்ளைகளையும் முழுமையாக புரிந்து கொண்டவர், ஆனால் அம்மா அப்படி இல்லை. பொதுவாகத் தாய்மார்கள் அப்படித் தான் என்று நினைக்கிறன்.

எனது பிள்ளைகளுக்கு நிச்சயம் கட்டுப்பாடுகள் இருக்கும்! அதே நேரம் முதலில் அதற்குரிய காரணகளயும் அதை கடைப் பிடிப்பதன் மூலம் சந்திக்கும் அதன் நன்மைகளையும், கடைப் பிடிக்காமல் போனால் அதன் விளைவுகளையும் எடுத்துக் கூறுவேன்.

பிள்ளைகளுக்குக் கட்டுப் பாடுகளை வித்திப்பது மட்டும் பெற்றோரின் கடமை ஆகாது, தங்கள் ஒவ்வொரு பிள்ளைகளின் மனதை முழுமையாக புரிந்தது கொண்டு நடப்பது தான் ஒரு நல்ல பெற்றோருக்கு அழகும், பெருமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த சமுதாயம் என்ற சொல்லையே இல்லாமல் பண்ண வேனும்.உந்த ஒன்டால பலர் தங்களுக்கு கிடைத்த அருமையான வாழ்க்கையை விரும்பயபடி வாழமுடியாமல் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி வாழந்துபோட்டு போகவேன்டியுள்ளது.இந்த திரியில் தமிழிச்சியின் கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழிச்சியின் இக் கருத்தோடு நான் ஒத்துப் போகிறேன்...எனக்கு தெரிந்தும் பல குடும்பங்களில் இப்படி நடந்துள்ளது...என்ன நடந்தாலும் பொறுத்துப் போகும்படி அப் பெண்களின் தாயாராலோ, சகோதரி அல்லது உறவினர்களாலேயே சொல்லப்படும்...குடும்ப மானம் போய் விடும் அல்லது பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடும் என காரணம் சொல்லப்படும்...அதற்கு பயந்தே பெண்கள் அடங்கி வாழப் பழகி விட்டார்கள் என நினைக்கிறேன்...எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்கு கணவர் குடித்து விட்டு வந்து அடி,அடி என போட்டு அடிப்பார் அப்படி ஒரு நாள் அடித்தலில் அப் பெண்ணுக்கு சீரியசாகி விட்டது...மகள் பொலிசுக்கு அடிக்க அவரைப் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள்...மனைவியும் முதலில் தன் கணவனுக்கு எதிராக கேஸ் எல்லாம் போட்டு விட்டா...பிறகு கேஸ் நீதிமன்றத்திற்கு போன பிறகு அவர்களது உறவினர்கள் அப் பெண்ணின் மனத்தை மாற்றி குழந்தைகளுக்கு தகப்பன் இல்லாமல் போய் விடும் எனச் சொல்லி கேசை இல்லாமல் செய்து விட்டார்கள் ஆனால் இப்பவும் அப் பெண் அடி வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்.

நீங்கள் சொன்ன கருத்தில் படித்தவர்களும்,மேல் மட்டத்தவரும் துணிந்து ஒரு விட‌யத்தை செய்கிறார்கள் என்ற விட‌யத்தை நான் ஏற்க மாட்டேன்...என்னைப் பொறுத்த வரை அவர்கள் தான் தைரியமாய் ஒரு முடிவு எடுக்க முடியாமல் திண்டாடுவார்கள்...அவர்கள் தான் சமுதாயத்திற்கு மிகவும் பயப்படுவார்கள்...இச் சமுதாயம் என்ன நினைக்குமோ என 100 தர‌ம் யோசிப்பார்கள்...ஆனால் அடி மட்டத்தவரும் படிக்காதவரும் ஒரு விட‌யத்தை துணிந்து செய்து விட்டால் பார் இவனை படிக்காததால் இப்படி செய்து விட்டான் என காரணம் சொல்வார்கள்[(உ+ம்)விதவைத்திருமணம் போன்றன] அதே வேளை படிக்காத,கீழ் மட்டத்தவர் மட்டும் பெண்களை அடிமையாக வைத்திருப்பதில்லை எத்தனையோ படித்த,வச‌தியான பெண்களும் கஸ்ட‌ப்ப்டுகிறார்கள் தான்.

புலம் பெயர் நாட்டில் படித்து ஒரு பெரிய பதவியில் இருக்கும் ஒரு பெண் தனது தார‌தர‌த்திற்கு ஏற்ற மாதிரி ஒருவரைக் மணம் முடித்து சந்தோச‌மாய் இருக்கிறார் என வைத்துக் கொள்வோம்...ஒரு நாள் அப் பெண் வேலைப் பளு கார‌ணமாய் நேர‌ம் கழித்து வீடு வருகிறார்...அன்று கணவர் வீட்டில் சமைக்கிறார் என வைத்துக் கொள்வோம் உட‌னே அப் பெண்ணின் உறவினர்களே கதைப்பார்கள் பார் படித்து நல்ல வேலையில் இருக்கிறாள் என்ட‌ திமிர் புருச‌னை சமைக்க விட்டு தான் ஊர் மேஞ்சிட்டு வருகுது என இதே வேளை உண்மையாகவே ஊர் மேஞ்சிட்டு வாற பெண்களைப் பற்றி நான் இங்கு கதைக்க வர‌வில்லை...இப்ப நிழலியை எடுத்துக் கொள்வோம் அவர் வீட்டில சமைக்கிறார் என்டாலும் அதை தைரியமாய் வெளியில போய் சொல்கிற தைரியம் நிழலிக்கு உண்டா?...அப்படி சொன்னாலும் வெளிப்படையாய் பாராட்டுகிற சில பேர் நிழலியை போக விட்டு பின்னுக்கு கதைப்பார்கள் பார் வீட்டில இருந்து கொண்டு ச‌மைத்துக் கொண்டு இருக்குது என எண்டு தான் சொல்வார்கள்...எனக்கு தெரிந்த ஒரு அக்காவுக்கு 4 பிள்ளைகள் கணவர‌து உத்தியோகம் பிசினஸ் அவர் நாடு கடந்து செல்பவர் அதனால வீட்டில இருக்கிறது குறைவு...அப்படி வீட்டில இருக்கிற நாளில அவர் சமைத்தால் அவர‌து தாயே அவருக்கு பேச்சு விழும் அவள் ஊர் மேஞ்சு திரிய[ரீயுச‌னுக்கு தான் கூட்டுக் கொண்டு போறவ] நீ வீட்டில இருந்து சமைக்கிறீயா...இது எங்கட‌ சமூகம்.

வாதவூரான் நான் பெண்களை தனித்து முடிவெடுக்கும் படி சொல்லவில்லை...பெண்களும்,ஆண்களும் சேர்ந்து முடிவெடுத்தால் தான் குடும்பம் நல்ல குடும்பமாய் இருக்கும்...நீங்கள் சொன்ன அந்த பெண்கள் கணவர் மட்டும் உழைப்பதால் கணவரைக் கேட்காமல் எப்படி காசு தாறது என யோசித்து இருக்கலாம்...சில பெண்கள் உண்மையாகவே காசு தாறதிற்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஒன்றை மட்டும் நீங்கள் யோசிக்க வேண்டும் இங்கு புலம் பெயர் நாட்டில் பெண்களும் குடும்ப பார‌த்தை தாங்குவதால் ஆண்களால் ஈழத்தில் உள்ளவர்களுக்கு உதவ முடியுது...மற்றது இயற்கையின் பாதிப்பு பெண்களுக்கு அதிகம் தான் ஆனால் சிறு வயதில் இருந்தே பெண்களுக்கு செக்ஸ் கல்வி பற்றிய அறிவை சொல்லி வளர்த்தால் அவர்கள் தங்களை தாமே காத்துக் கொள்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

திறந்து விடுவது என்பது கொஞ்சம் காத்திரமான வார்த்தை என நினைக்கிறன். கிருபன் எழுதியதுபோல் பிள்ளைகளுக்கு நல்லது, கேட்டது எடுத்துச்சொல்லி தமது செயல்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் தாமே பொறுப்பு என வளர்ப்பது அவர்களுக்கு நல்லது. ஆணோ பெண்ணோ புறத்தீங்குகளிலிருந்து பாதுகாப்பதற்கான ஓரளவு கட்டுப்பாடு தேவை. நான் வாழும் நாட்டில் எங்கள் சமூகம் (ஒரு சிலரைத்தவிர) இளையோர்களின் நிலை அறிந்து நடப்பதை காணக்கூடயதாக உள்ளது.

அவசரத்தில் எழுதியதால் அதன் அர்த்தம் மாறியிருக்கலாம்

ஒட்டு மொத்தத்தில்

அவர்களை பூட்டி வைத்திருக்கின்றோம் அல்லது சிறை வைத்திருக்கின்றோம் என்பதே என் கருத்து

அதேநேரம் இந்த சிறையை பெற்றோர்போடவில்லை

அவர்களுக்கும் இது மனம் வேதனைதரும் விடயம் என்பதையே எழுதினேன்.

அடுத்தது

அவர்களே நடந்துமுடிந்தவைகளுக்கு பொறுப்பு என்பது பெண் பிள்ளைகளைப்பொறுத்தவரை......???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கச்சி ரதி.

நீங்கள் முன்னர் சொன்ன அத்தனை விசயமும் உண்மை.

ஊரோடு நடக்கிற பிரச்சனை

உலகத்தோடை நடக்கிற பிரச்சனை.

விதவை திருமணத்தை தவிர்த்து??????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி அக்கா, உங்களுக்கு ரெண்டு மகன் மார் இருக்கினம் என்று கேள்விபட்டேன், உங்கட மகன் வளந்து நல்ல படித்து நல்ல வேலை செய்து கொண்டிருக்கும் பொது, நீங்கள் அவருக்கு கணவனை இழந்த விவாக இரத்து ஒருபிள்ளயோட இருக்கிற ஒரு பெண்ணுக்கு கட்டிகுடிபிங்களா?

உண'மையாவா ? :D^_^:(

சீலன் எனக்கு கல்யாணம் நடந்து பிள்ளைகள் பிறந்து வளர்ந்த பிறகு கட்டாயம் ஒரு பிள்ளையாவது கட்டிக் கொடுப்பேன்.

நல்ல காலம் நானும் பயந்திட்டன் :lol: :lol: :lol:

அவசரத்தில் எழுதியதால் அதன் அர்த்தம் மாறியிருக்கலாம்

ஒட்டு மொத்தத்தில்

அவர்களை பூட்டி வைத்திருக்கின்றோம் அல்லது சிறை வைத்திருக்கின்றோம் என்பதே என் கருத்து

அதேநேரம் இந்த சிறையை பெற்றோர்போடவில்லை

அவர்களுக்கும் இது மனம் வேதனைதரும் விடயம் என்பதையே எழுதினேன்.

அடுத்தது

அவர்களே நடந்துமுடிந்தவைகளுக்கு பொறுப்பு என்பது பெண் பிள்ளைகளைப்பொறுத்தவரை......???

நீங்கள் சொல்வது புரிகிறது. அதிகம் கண்டிப்பாக வளர்ப்பதால் ஓரளவு வயது வந்தவுடன் நிறைய பிரச்சனைகள் வருகிறது. அதுதான் அப்படி எழுதினேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.