Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் தொடரும் பாலியல் பலாத்காரங்கள், வல்லுறவுகள் மற்றும் சட்ட ஒழுங்கு சீரழிவுகளால் மக்கள் பெரும் அதிர்ச்சி‐ யுவதி ஒருவர் 5 இளைஞர்களால் பாலியல் வன்புணர்வு‐GTNசெய்தியாளர்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் தொடரும் பாலியல் பலாத்காரங்கள், வல்லுறவுகள் மற்றும் சட்ட ஒழுங்கு சீரழிவுகளால் மக்கள் பெரும் அதிர்ச்சி‐ யுவதி ஒருவர் 5 இளைஞர்களால் பாலியல் வன்புணர்வு‐GTNசெய்தியாளர்

யாழ்ப்பாணத்தில் என்றுமில்லாதவாறு இடம்பெற்று வரும் பாலியல் பலாத்காரங்கள், வல்லுறவுகள் மற்றும் சட்ட ஒழுங்கு சீரழிவுகளால் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

வலிகாமத்தின் அளவெட்டிப் பகுதியில் ஆலயத் திருவிழா முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு 5 இளைஞர்களால் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட இளைஞர்களை அப்பகுதி காவற்துறையினர் காக்க முற்பட்டமை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக ஜீரீஎன் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

அளவெட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் திருவிழா தற்பொழுது நடைபெறுகின்ற நிலையில் குடாhட்டின் தற்போது வழமை போன்று இரவு நேரத் திருவிழாக்கள் உச்சம் பெற ஆரம்பித்திருக்கின்றன. அவ்வகையில் அன்றிரவு இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றை பார்வையிட்ட பின்னர் வீடு திரும்பி;க் கொண்டிருந்த யுவதி ஒருவரே கடத்திச் செல்லப்பட்டுள்ளார். மேற்படி 5 இளைஞர்களாலும் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட நிலையில் இவர் கைவிடப்பட்டுள்ளார். பொதுமக்கள் சிலரால் மீட்கப்பட்ட இவர் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கௌரவம் கருதி குடும்பத்தவர்கள் இந்தத் தகவலை பகிர்ந்திருக்கவில்லை என ஜீரீஎன் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மல்லாகம் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதனை அடுத்து காவற்துறையினருக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து மேற்படி குற்றச் செயலுடன் சம்பந்தப்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் கொழும்பிற்கு தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்றவரையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நால்வரும் தற்பொழுது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்

globaltamilnews

  • கருத்துக்கள உறவுகள்

மிருகங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு காளை மாட்டுக்கு .... அடிப்பது போல செய்யவேண்டும்... :)

  • கருத்துக்கள உறவுகள்
:) புலிகள் அழிய வேண்டும், சிங்கள ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று இன்றுவரைக்கும் கூப்பாடு போட்ட தமிழர்களுக்கும், துணை ராணுவக்குழுக்களுக்கும், மாற்றுக்கருத்தாளர்களுக்கும் இது சமர்ப்பணம்.

யாழ்ப்பாணத்தில் தொடரும் பாலியல் பலாத்காரங்கள், வல்லுறவுகள் மற்றும் சட்ட ஒழுங்கு சீரழிவுகளால் மக்கள் பெரும் அதிர்ச்சி‐ யுவதி ஒருவர் 5 இளைஞர்களால் பாலியல் வன்புணர்வு‐GTNசெய்தியாளர்

... காவற்துறையினருக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து மேற்படி குற்றச் செயலுடன் சம்பந்தப்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

globaltamilnews

ஆக... கடுமையான உத்தரவின் பெயரில் தான் நால்வர் கைது செய்யப் பட்டு இருக்கிறார்கள்?

மிருகங்களை விட மோசமான மனத்தைக் கொண்ட பிறப்புகள் :)

  • கருத்துக்கள உறவுகள்

.

வடக்கில் வசந்தம் ....

தாடி & சிங்கரி

.

Edited by தமிழ் சிறி

கெடுத்த "சிங்களவர்" நாசமா போக

  • கருத்துக்கள உறவுகள்

:) கெடுத்தவர்கள் சிங்களவர்களில்லை, தமிழர்தான். ஆனால் இதைத்தான் சிங்களவன் எதிர்பார்த்ததும். சிறுகச் சிறுக போராட்டத்தின் மீதான பற்று விட்டொப்போய், இளைஞர்கள் காமக் களியாட்டங்களில் திளைக்க வேண்டும், அப்போதுதான் தமது தமிழர் தாயகம் மீதான முற்றான ஆக்கிரமிப்பு தங்கு தடையின்றி நடைபெறும். அது நடக்கிறது, செய்யப்போவதாகக் கூறிக்கொண்டு வந்தவர்களோ, ஒன்றில சரணாகதி அரசியல் நடத்திகிறார்கள், சிலர் சிங்களவனுக்கு முண்டு கொடுக்கிறார்கள், இளைஞர்கள் தமது வாலிபச் சேட்டைகளை தமது தாய், தங்கை, தமக்கையிடமே செய்துபார்க்கிறார்கள். இதற்காகத்தானே இத்தனை வருடங்கள் காத்திருந்தோம்.

எமக்கு இனியென்ன் வேண்டும்? கொழும்பு விலையில் சாமான் கிடைக்குது, இரவு பத்தரைப் படமும் நடக்குது, சந்திக்குச் சந்தி சாராயக் கடையும், பப்பும் திறந்து வைச்சிருக்கிறாங்கள், வெளிநாட்டில இருந்து மாசம் தவறாமல் காசு வரூது. அப்படியே ஊருக்க இருக்கிற பெட்டைகள் கொஞ்சத்தை சீண்டிப் பாத்துவிட்டால் எல்லாமே அடைஞ்சது மாதிரித்தான். தமிழீழம், சுதந்திரம், விடுதலை ஆருக்கு வேண்டும்??

இந்த மாதிரி காடையர் கூட்டத்தின் நெருக்கிய நல்லுறவு சிங்கள போலிஸ் பயங்கரவாதிகளுக்கு வாய்ப்பாக உள்ளது. விரைவில் களையப்பட வேண்டியவர்கள்.

  • தொடங்கியவர்

இன்று ஒரு யாழ்ப்பாண பெரிசுடன் அளவளாவிக் கொண்டு இருக்கையில் இந்த செய்தியைச் சொன்னேன்

அவர் சொன்னது

"தம்பி...இயக்கங்கள் வர முன்னம் யாழ்ப்பாணத்தில்

கோயில் திருவிழா காலங்களில் இப்படித்தான் நடந்தது

பெடியல், சாமியையும் தேரையும் பார்க்கவா வாரவங்கள்...

நல்ல பெடிசுகளை கொத்தத் தானே வாரவன்கள்

இப்ப இயக்கம் இல்லைதானே..அதான் பழய விசயம் எல்லாம் நடக்கு

...ஏன் அந்த பெட்டை இரவில் நடு ராத்திரியில் போனவள்

அவளுக்கு இப்படி தேவை என்றதுக்காக அலையுறாள் போல"

அவர் சொன்ன பின் எனக்கு ஒன்று புரியவில்லை........

பிரபாகரன் எனும் பெரும் புயல் எப்படி இந்த மனிதக் கூட்டத்திற்கு மத்தியில் விடுதலை படகோட்டினார் என்று

============

நாம் எல்லாம் இயக்க காலத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்.,....யாழ் களத்தில் உள்ள பல சீனியர்கள் யாழ்ப்பாணத்தில் இயக்க காலம் முன் இப்படியா நடந்தது என்று விளங்கப் படுத்துவார்கள் என் நம்புகின்றேன்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

:) நிழலி,

உங்கட பெரிசு கூட்டணி ஆளோ?? இல்லை, இயக்கம் வரமுன்னம் எண்டு சொன்னதால கேக்கிறன். அவரைப் பொறுத்தவரை உதெல்லாம் சகஜமாக்கும். பெண்கள் இரவில் ஏதாச்சும் ஒரு காரணத்துக்காக வெளியே போனால் உடனே வேசிப்பட்டம் கட்டிவிடுவார்களா?? அந்தப் பெரிசின் மகளோ அல்லது மனைவியோ இரவில் அந்தரத்துக்கு ஆபத்துக்கு வெளியே வரவிடாமல் பார்த்துக்கொள்ளச் சொல்லுங்கள், என்ன, எங்கட பொடியன்களின்ர கை சும்ம கிடவாது, வயசு வித்தியாசம் எல்லாம் பாக்காமல் ஏதாச்சும் செய்து போடுவாங்கள், பிறகு வேசிகளோட தான் வீட்டில வாழவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வள்வு பெரிய சனத்தொகையை CCTV பாதுகாப்புக் கொண்ட லண்டனில்... 168 பதிவு செய்யப்பட்ட வன்முறைகள் தினமும் நடக்கின்றன.!

தனக்கென ஒரு நாடு தேவை,அதைவிட அது எப்படியிருக்க வேண்டும் என்று அக்கறைப்படாமல் தான் தப்பினால் காணும் என்று நாட்டைவிட்டு ஓடியவர்களுக்கு உது சமர்ப்பணம்.

அரசியல் பிரச்சனைகளுக்கு அப்பால் நாங்கள் நாட்டில் இருக்கும்வரை சந்தோசமாகவே இருந்தோம்.நான் அறிய கமலம் கொலை வழக்கு,வேலணையில் ஆறு பேர் கொலை இவையிரண்டுமே யாழ்ப்பாணத்தை உலுக்கியெடுத்தவை.யாழ்ப்பாணம் மிக கட்டுப்பாடான கலாச்சரத்தை எப்பவுமே கொண்டிருந்தது.திருவிழாவில் கூட உருப்படியானதுகளை காணுவது மிக அபூர்வம்(நல்லூர் விதிவிலக்கு).சாமத்தியப்பட்டவுடன் காரிலை வேறு பாடசாலைக்கு போகத்தொடங்கி விடுவினம்.

வேலிபாய்தல் ஆங்காங்கே நடந்தவைகளே ஒழிய பெரிதாக கருத்தில் எடுக்கபடகூடியவைகளல்ல.(எஸ்.போ வாசித்தால் சில அனுபவங்களை பெறலாம்).

இயக்கங்கள் வந்தபின் கலாச்சாரசீர்கேடு கட்டுப்படுத்தப் பட்டது என்பது மிக வேடிக்கயானது.காச்சு சாரயம் காச்சியவனையும்,சும்மா றோட்டு சண்டியனையும் போட்டுத் தள்ளி கொலைகலாச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டு முழுத்தமிழனையும் வாயைமூடவைத்து கலாச்சாரத்தை கட்டி காத்தார்கள் என்பது சர்வாதிகர நாடுகளில் கலாச்சாரம் கட்டிகாக படுகின்றதென்றதற்கு ஒப்பானதாகும்.

  • தொடங்கியவர்

:lol: நிழலி,

உங்கட பெரிசு கூட்டணி ஆளோ?? இல்லை, இயக்கம் வரமுன்னம் எண்டு சொன்னதால கேக்கிறன். அவரைப் பொறுத்தவரை உதெல்லாம் சகஜமாக்கும். பெண்கள் இரவில் ஏதாச்சும் ஒரு காரணத்துக்காக வெளியே போனால் உடனே வேசிப்பட்டம் கட்டிவிடுவார்களா?? அந்தப் பெரிசின் மகளோ அல்லது மனைவியோ இரவில் அந்தரத்துக்கு ஆபத்துக்கு வெளியே வரவிடாமல் பார்த்துக்கொள்ளச் சொல்லுங்கள், என்ன, எங்கட பொடியன்களின்ர கை சும்ம கிடவாது, வயசு வித்தியாசம் எல்லாம் பாக்காமல் ஏதாச்சும் செய்து போடுவாங்கள், பிறகு வேசிகளோட தான் வீட்டில வாழவேண்டும்.

நீங்கள் சொன்ன மாதிரி அவர் முன்னர் கூட்டணியில் இருந்தவர் தான். 70 வயசிருக்கும் இவருக்கு... வாழ்க்கையில் கேள்வியே பட்டிராத சாதிகளின் பெயர் எல்லாம் சொல்லுவார். தன் பெண் பிள்ளைகளை இரவு வேலைக்கு எல்லாம் அனுப்பி விட்டு, அயலவரின் வீட்டு பெண்கள் மற்றி மோசமான கருத்தினை கொண்டிருப்பவர்....

ஆனாலும், அவர் சில விடயங்களுக்கு என் தகவல் களஞ்சியம். பல ஊரிகளின் பெயரும், அவை வந்தமைக்கான காரணமும் மற்றும் ஊரின் பல வரலாற்று நிகழ்வுகளும் அவருக்கு இன்னும் நல்ல ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கென ஒரு நாடு தேவை,அதைவிட அது எப்படியிருக்க வேண்டும் என்று அக்கறைப்படாமல் தான் தப்பினால் காணும் என்று நாட்டைவிட்டு ஓடியவர்களுக்கு உது சமர்ப்பணம்.

அரசியல் பிரச்சனைகளுக்கு அப்பால் நாங்கள் நாட்டில் இருக்கும்வரை சந்தோசமாகவே இருந்தோம்.நான் அறிய கமலம் கொலை வழக்கு,வேலணையில் ஆறு பேர் கொலை இவையிரண்டுமே யாழ்ப்பாணத்தை உலுக்கியெடுத்தவை.யாழ்ப்பாணம் மிக கட்டுப்பாடான கலாச்சரத்தை எப்பவுமே கொண்டிருந்தது.திருவிழாவில் கூட உருப்படியானதுகளை காணுவது மிக அபூர்வம்(நல்லூர் விதிவிலக்கு).சாமத்தியப்பட்டவுடன் காரிலை வேறு பாடசாலைக்கு போகத்தொடங்கி விடுவினம்.

வேலிபாய்தல் ஆங்காங்கே நடந்தவைகளே ஒழிய பெரிதாக கருத்தில் எடுக்கபடகூடியவைகளல்ல.(எஸ்.போ வாசித்தால் சில அனுபவங்களை பெறலாம்).

இயக்கங்கள் வந்தபின் கலாச்சாரசீர்கேடு கட்டுப்படுத்தப் பட்டது என்பது மிக வேடிக்கயானது.காச்சு சாரயம் காச்சியவனையும்,சும்மா றோட்டு சண்டியனையும் போட்டுத் தள்ளி கொலைகலாச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டு முழுத்தமிழனையும் வாயைமூடவைத்து கலாச்சாரத்தை கட்டி காத்தார்கள் என்பது சர்வாதிகர நாடுகளில் கலாச்சாரம் கட்டிகாக படுகின்றதென்றதற்கு ஒப்பானதாகும்.

எந்தக்காலத்தில் பெண்கள் இரவில் தனியாக நடமாட கூடியதாக இருந்தது? முக்கியமாக இயக்கம் வர முன் இருந்ததோ? ஏதோ இயக்கங்கள் வரமுன் சுதந்திரம் இருந்தது என பம்மாத்து விடுகிறீர்கள்.கொட்டடி மணியத்தில் இருந்து உள்ள காவாலி விடுகாலிகளாக இருந்த இடத்தை ஆக இரு கொலைகள் தான் நடந்தது என பூசி மெழுகுகிறீர்கள்.மேற்கு நாடுகளோடு ஒப்பிடுகிறீர்கள்.அப்படியாயின் அமெரிக்க சிறைகளில் ஏன் 10 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வாடவேண்டும்??

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கங்கள் வந்த பின்னர் சமூக விரோதச் செயற்பாடுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது உண்மை.ஆனால் அந்த இயக்கங்களில் புலிகளைத் தவிர மற்றவர்கள் பலரும் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதும் உண்மை. புலிகளின் செயலிழப்புக்குப் பின்னர் இன்று சில முன்னாள் புலிகளும் இத்தகைய சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் உண்மை.புலிகள் மீதான பயம் அற்ற நிலையிலும் சிறிலங்கா அரசின் ஆசிகளோடும் மீண்டும் சமூக விரோதச் செயற்பாடுகள் தொடங்கியிருப்பதும் உண்மை.இவை நிறுத்தப்பட வேண்டுமானால் மீண்டும் புலிகளின் மீள் பிறப்பு அவசியமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.