Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுய இன்பம் ஆபத்தா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

சுய இன்பம் ஆபத்தா?

நிறைய பேருக்கு இதில் பெரும் குழப்பமே இருக்கும். ஆனாலும் இது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல என்பதே டாக்டர்களின் கருத்து.

காலத்தே பயிர் செய் என்பார்கள்.. இது விவசாயத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் கூட நிறையவே பொருந்தும்.

இளம் பிராயத்தில் குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் இந்த சுய இன்பப் பழக்கம் அத்தனை பேரையும் ஆட்டிப்படைத்திருக்கும். இதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இதுகுறித்து வெட்கப்படவும் தேவையில்லை. அந்த வயதில் டீன் ஏஜினர் சந்திக்கும் பல முக்கியப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.

சிலருக்கு 12-15 வயதில் தொடங்கிய சுய இன்பத்தை விட முடியாமல் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வழக்கமும் உண்டு. இதனால் அவர்களுக்கு எதிர்கால செக்ஸ் வாழ்க்கை எப்படி ஆகுமோ என்ற கவலை ஏற்படுவது இயற்கை.

இதுகுறித்து டாக்டர்கள் சொல்வது என்ன...?

டீன் ஏஜ் வயதில் வரும் பிரச்சினைகளில் சுய இன்பமும் ஒன்று. அந்த வயதில் வரும் மிகச் சாதாரண பிரச்சினைதான் இது. அதிலிருந்து தப்பி விடுபவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பார்கள், செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், அதில் சிக்கியவர்கள் கதி அதோ கதிதான் என்ற எண்ணம் நிறைய பேருக்கு உள்ளது. இரண்டுமே தவறு.

சிறு வயது முதல் 25-30 வயது வரை சுய இன்பத்திற்கு அடிமையானவர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்கள் அனைவருமே செக்ஸ் வாழ்க்கையில் பின் தங்கினர் என்று கூற முடியாது. அது அவரவர் மனதைப் பொறுத்தது.

நமக்குள் ஏற்படும் செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வழிதான் இந்த சுய இன்பம். இயற்கையாகப் போக வேண்டிய உணர்வுகளை, செயற்கையாக நாம் வெளியேற்றுகிறோம், அவ்வளவுதான்.இதனால் நமது செக்ஸ் உணர்வுகளோ அல்லது செக்ஸ் உறவின்போதான செயல்பாடுகளையோ இது பாதிக்கும் என்று கூற முடியாது.

சிலருக்கு கவர்ச்சிகரமான பெண்களின் படங்களைப் பார்த்தால் உடனே செக்ஸ் உணர்வு அதிகரித்து சுய இன்பவம் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றும். அதை அடக்காமல் வெளியேற்றி விடுவது ஒரு வகையில் நல்ல விஷயம்தான்.

சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அதை விடுவது எளிதல்ல. ஏன், திருமணமான பிறகும் கூட சுய இன்பத்தைத் தொடருபவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

இதனால் செக்ஸ் வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுமோ என்ற பயம் மட்டும் நிச்சயம் தேவையில்லை. எதுவும் தலைக்கு மேல் போய் விடாது. உங்களது மனதை ஒருநிலைப்படுத்த முயற்சித்தால் நீங்கள் சுய இன்பத்திலிருந்து விடுபட முடியும். மனக் கட்டுப்பாட்டுக்கு நல்ல பயிற்சி எடுங்கள். சுய இன்பத்தை தடாலடியாக நிறுத்தி விட முயற்சிக்காதீர்கள். படிப்படியாக குறையுங்கள்.

அதுபோன்ற சமயத்தில், வேறு பக்கம் கவனத்தை திருப்ப முயற்சியுங்கள். அப்படியும் முடியவில்லை என்றால் செய்து விடுங்கள்.

நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல விஷயங்களை அறிய முயற்சிப்பது, தேடுதல் நோக்கத்தை வேறு பக்கம் திருப்புவது, யோகாசனம், ஆரோக்கியமான செயல்பாடுகளில் கவனத்தைத் திருப்புதல் என சுய இன்பத்திலிருந்து மீள நிறைய வழிகள் உள்ளன.

தேவைப்பட்டால் ஒரு மன நல ஆலோசகரை அணுகி ஆலோசனை கேட்கலாம். அவர்கள் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்கள்.

சிலருக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்கலாம். அதாவது கவர்ச்சிகரமான படத்தைப் பார்த்தாலோ அல்லது அதுபோன்றவற்றை கேட்டாலோ, மனதில் நினைத்தாலோ கூட அவர்களுக்கு விந்தணு வெளியேறி விடும். அப்படிப்பட்டவர்கள் டாக்டரைக் கன்சல்ட் செய்யலாம்.

ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கூட இந்த சுய இன்பச் சிக்கல் ஏற்படுவது சகஜமானதுதான். இரு பாலினரும் இதை உரிய முறையில் அணுகினால் எந்தத் தொந்தரவும், மனப்புழுக்கமும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

மொத்தத்தில் இது பெரிய பிரச்சினையே அல்ல, மாறாக உங்களது நம்பிக்கைக்கு விடப்படும் சவால், அவ்வளவுதான். அதை நீங்கள் வென்றால் சுய இன்பத்திற்கு வேலையே இல்லை.

நன்றி தற்ஸ் தமிழ்

.

அனுபவஸ்தவர்கள் வந்து தங்கள் கரத்தை.. மன்னிக்கவும், கருத்தை பகிரவும். :o

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவஸ்தவர்கள் வந்து தங்கள் கரத்தை.. மன்னிக்கவும், கருத்தை பகிரவும். :o

அனுபவம் என்று சொல்லும்போதே சமுதாய பொறுப்பும் வந்து விடுகிறது

அந்த பொறுப்படன் எழுதவேண்டும் என்றால் காந்தியின் சுயசரிதையும் பல பிழையான வழிகளை ஊக்குவித்ததாகத்தான் நான் பார்க்கின்றேன்

ஆனாலும் தங்களுடைய கேள்விக்கும் பதில் சொல்லவேண்டுமல்லவா...

களவும் கற்றுமற

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு

எந்த பொருளையும் அதிகமாக பாவித்தால் அதன் வீரியம் குறையும் அல்லது அதன் காரம் குறைஞம்

அதேபோல் இதுவும் எமது எதிர்கால சந்ததியின் வீரியத்தை குறைக்கும்

ஆனால் நடக்காத அல்லது எவருமே தொடாத பழக்கம் என்று வாதிடுவது எனது நோக்கமல்ல.

கூடியவரை வேண்டாமே என்பதுதான்

நன்றி

அனுபவம் என்று சொல்லும்போதே சமுதாய பொறுப்பும் வந்து விடுகிறது

அந்த பொறுப்படன் எழுதவேண்டும் என்றால் காந்தியின் சுயசரிதையும் பல பிழையான வழிகளை ஊக்குவித்ததாகத்தான் நான் பார்க்கின்றேன்

ஆனாலும் தங்களுடைய கேள்விக்கும் பதில் சொல்லவேண்டுமல்லவா...

களவும் கற்றுமற

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு

எந்த பொருளையும் அதிகமாக பாவித்தால் அதன் வீரியம் குறையும் அல்லது அதன் காரம் குறைஞம்

அதேபோல் இதுவும் எமது எதிர்கால சந்ததியின் வீரியத்தை குறைக்கும்

ஆனால் நடக்காத அல்லது எவருமே தொடாத பழக்கம் என்று வாதிடுவது எனது நோக்கமல்ல.

கூடியவரை வேண்டாமே என்பதுதான்

நன்றி

தவறு விசுகு,

விஞ்ஞான ரீதியில் "அதிகம் பாவித்தால் குறைந்து விடும்" என்பது விந்து சுரத்தலுக்கு சரி வராது. குறிப்பட்ட வயது வரை (65 / 70 ) விந்தும் எச்சில் சுரப்பது போன்றுதான், உடலில் தேவைக்கு ஏற்ப சுரக்கும். இளம் வயதில் சுய இன்பம் அனுபவிப்பதால் பின் நாளில் (ஆணுக்கு) உடலுறவில் ஈடுபட முடியாமல் போய்விடும் என்பது மிகத் தவறான கருத்து. இவ்வாறான கருத்துகள் போலி பாலியல் லேகியம் விற்பவர்கள் பரப்புவது. அத்துடன் பாலுறவில் நாட்டம் என்பதுக்கும் விந்தின் அளவுக்கும் கூட எந்த தொடர்பும் இல்லை.

நீங்கள் வீரியம் என்று எதைக் குறிப்பிடுகின்றீர்கள் என தெரியவில்லை. எவ்வளவு நேரம் ஆணால் உடலுறவில் ஈடுபடலாம் என்பதையா? அப்படி என்றால் அது ஒருவரின் உடல் / மனம், யாருடன் பாலுறவு, என்பனவற்றிலும் சுரக்கும் Androgen இலும் தங்கி உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

இது எனக்கும் தெரிந்ததுதான் நிழலி

ஆனால் சிலவிடயங்களை ஊக்கப்படுத்தமுடியாது

ஊக்கப்படுத்தவும் கூடாது

இது எனக்கும் தெரிந்ததுதான் நிழலி

ஆனால் சிலவிடயங்களை ஊக்கப்படுத்தமுடியாது

ஊக்கப்படுத்தவும் கூடாது

யாரும் ஊக்கப்படுத்தாமல் மனிதப் பிறப்பு என்ற ரீதியில் தன்னால அறியும் / பழகும் விடயங்கள் இவை. ஒரு தந்தையாக பார்த்தால், பிள்ளைகள் தாங்களாகவே அறிந்து பழகிக் கொள்ளும் விடயங்கள் இவை.. அவற்றைக் கண்டிக்கவோ அல்லது விமர்சிக்கவோ முடியாது. ஆனால் குறிப்பிட்ட வயதில் தாம் செய்வது தவறோ என மனதுள் பயந்து, செய்வதையும் தவிர்க்க முடியாமல் குற்ற உணர்வில் குறுகிப் போய் நிற்கும் இளையவர்கள் அதிகம். அப்படி ஒரு நிலை எம் பிள்ளைகளுக்கும் ஏற்படாமல் இருக்க, பாலியல் ரீதியான சில அடிப்படை விடயங்களை தோழமையுடன் அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்களிடம் இது சம்பந்தமாக ஒரு சந்தேகம் இருந்தபடியேதான் இருக்கும்

இதை குறைக்கணும் என்றே விரும்புவர்

அதனை நாம் பிரச்சினையற்றது என்று நிறுவுவோமாயின் அது அவர்களை ஊக்கப்படுத்துவது மட்டுமல்ல

அதையே தொடர பழக்கப்படுத்திக்கொள்ளும்

அதைவிட இதன் மூலம் சிறு தவறுகள் ஏற்படுமிடத்து அல்லது வேறு எவரின் கண்ணில் படுவது போன்றவற்றால் வாழ்க்கையின் தோல்விகளுக்கு முகம் கொடுக்கவேண்டிவரும்

இது போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்களிடம் இது சம்பந்தமாக ஒரு சந்தேகம் இருந்தபடியேதான் இருக்கும்

இதை குறைக்கணும் என்றே விரும்புவர்

அதனை நாம் பிரச்சினையற்றது என்று நிறுவுவோமாயின் அது அவர்களை ஊக்கப்படுத்துவது மட்டுமல்ல

அதையே தொடர பழக்கப்படுத்திக்கொள்ளும்

அதைவிட இதன் மூலம் சிறு தவறுகள் ஏற்படுமிடத்து அல்லது வேறு எவரின் கண்ணில் படுவது போன்றவற்றால் வாழ்க்கையின் தோல்விகளுக்கு முகம் கொடுக்கவேண்டிவரும்

பிரச்சனை இல்லாத ஒன்றை பிரச்சனை இல்லை என்று சொல்வதால் என்ன தீங்கு வரும் என்பது எனக்கு புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் ஒத்துழைப்பு இருந்தால் ஆண்கள் இப்பிடி வீணாக்கமாட்டினம்தானே..! :D அதால் பெண்களிலதான் தப்பு..! :)

பெண்களின் ஒத்துழைப்பு இருந்தால் ஆண்கள் இப்பிடி வீணாக்கமாட்டினம்தானே..! :D அதால் பெண்களிலதான் தப்பு..! :)

டங்குதான் நெடுக்கர் என்பதற்கு இந்த சாட்சியம் ஒன்றே போதும் யுவர் ஹானர்.

  • கருத்துக்கள உறவுகள்

டங்குதான் நெடுக்கர் என்பதற்கு இந்த சாட்சியம் ஒன்றே போதும் யுவர் ஹானர்.

இந்தத் தலைப்புக்குள் என்னை இழுத்தவிட வேண்டும் என்று முடிவு கட்டிட்டீர்கள் என்று மட்டும் விளங்குது.

Masturbation என்பது செயற்கையானது என்று இந்தக் கட்டுரையில் சொல்லி இருக்காங்க. ஆனால் அது இயற்கையான ஒரு செயன்முறை என்று ஆராய்ச்சிகளில் கண்டிருக்கிறாங்க. பிறக்க முதலே கருப்பையில் கூட இச்செயற்பாடு நடப்பதாக (அதாவது ஆண் அல்லது பெண் பாலுணர்வை தூண்டக்கூடிய உறுப்புகளை கையாழுதல்...) ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் படித்திருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை இது தவறான செயல் என்று சொல்லமாட்டேன். ஆனால் மன அடக்கத்தின் மூலம் இவ்வாறான செயல்களை கட்டுப்படுத்துவது அல்லது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது நன்று. அது ஒன்றும் பெரிய விடயமும் அல்ல.

ஆனால் பாலியல் தேவைகளுக்காக விபச்சாரத்துக்குள் நுழைவது.. வன்புணர்வு.. நம்ப வைத்து ஏமாற்றிப் புணர்வு.. கலியாணம் என்று கட்டி.. புணர்ச்சியையே முழு வேலையாகக் கொண்டிருப்பது.. இப்படியான செயல்களை செய்வதிலும்.. அப்படியானவர்கள் இதைச் செய்வது அவர்களுக்கும் உலகிற்கும்.. சமூகத்திற்கும் நல்லது. அது ஆணாக இருக்கலாம்.. அல்லது பெண்ணாக இருக்கலாம்.

எல்லோரும் நினைக்கினம்.. ஒன்றில் பாலுணர்வை அடக்க புணர்ச்சி அல்லது இப்படியான செயற்பாடுகள் அவசியம் என்று. ஆனால்.. இயற்கையே பாலுணர்வை கட்டுப்படுத்த என்று சில வழிமுறைகளை செய்திருக்கிறது. சுகதேகி வாழ்க்கை வாழும் எந்த மனிதனும்.. (ஆண் அல்லது பெண்) wet dream காணாது இருக்க முடியாது. அதுவும் இதுவும் ஒரே வகையானதுதான்.

அண்மையில் ஒருவர் தனக்கு ஆண்மைப் பிரச்சனை என்று வைத்திய ஆலோசனைக்கு வந்திருந்தார். அவர் சொன்னார்.. தான் இன்ரநெட்டில் porn பார்ப்பேன்.. மஸ்ருபெட் பண்ணுவேன் என்று. அதுதான் இந்தப் பிரச்சனைக்கு காரணமாக இருக்குமோ என்று கேட்டார். உண்மையில் அவரைப் பரிசோதித்து வந்த முடிவுகளில் அவரின் இச்செயற்பாட்டிற்கும் ஆண்மைப் பிரச்சனைக்கும் இடம் இருக்கவில்லை. அவரின் நீண்ட கால மன அழுத்தமே அவரின் அந்த நிலைக்குக் காரணம். அந்த மன அழுத்ததிற்கு அவர் திருமணம் ஆகியும் மனைவி ஊரில் இருப்பதும்.. அவரை அழைக்க முடியாது விசா இன்றி இவர் இருப்பதுமே காரணம் என்று தெரிய வந்தது.

இசைக்கலைஞன் சொன்னது போல பெண்களால் இதில் ஆண்களுக்கு பரிகாரம் கிடைக்கும் என்பது போல்.. சிந்தித்துப் பாருங்கள்.. பெண்களின் பாலுணர்வை திருமணம் ஆகியும் சரிவர புரிந்து கொண்டு நடக்காத ஆண்களால் அவர்கள் படும் இன்னல்களை. ஆண்கள் பலருக்கு பெண்களின் பாலுணர்வை புரிந்து கொள்ள முடிவதில்லை. தங்களின் தேவை முடிய வேண்டும்.. அதோடு அவளுக்கும் ஏதோ நடந்தால் சரி என்றுதான் பெரும்பாலான ஆண்கள் நடந்து கொள்கின்றனர்.

பெண்களின் பாலியல் தேவை என்பது புணர்ச்சிக்கும் அப்பால் அதற்கான மன மற்றும் உடல் இணக்கத்தில் அதிகம் தங்கி உள்ளது. அதை ஏற்படுத்திய பின் பெண்களின் தேவைகளுக்கு ஏற்ப நடப்பதில் ஆண்கள் கவனம் செலுத்துவதில்லை. சில பெண்கள் இதில் இருந்து விலகி.. ஆண்களைப் போல நடந்து கொள்வதும் நடக்கிறது. பொதுவாக இது ஒரு பிரச்சனை. இந்த இடத்தில் ஆண்களோ பெண்களோ.. பாலுணர்வுக்கு தீனி தேடி இவ்வாறான செயல்களை மட்டுமல்ல.. செயற்கையான பாலுணர்வை தூண்டும் பொருட்களை வயதுவந்தோருக்கான கடைகளில் வாங்கியும் தங்கள் தேவைகளை தீர்த்துக் கொள்கின்றனர்.

நமது சமூகத்தில்.. இவை மூடிமறைக்கப்படும் விடயங்களாக அல்லது பேசப்படக் கூடாத விடயங்களாக இன்னும் பார்க்கப்படுகிறது. அது தவறு. இவை குறித்து ஆண்களும் பெண்களும் வெளிப்படையாக தங்கள் உணர்வுகளை தேவைகளை பகிர்ந்து கொள்ளும் போது அவர்களின் மன அழுத்தமும் குறைந்து.. செயற்பாடுகளும் நல்ல நிலைக்கு இருக்கும். குடும்ப வாழ்வும் அமைதியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

இன்னுமொரு விடயம்.. குழந்தை பெறுதல்.

பல தம்பதிகள் கலியாணம் ஆகி அடுத்த ஆண்டே குழந்தையும் கையுமா நிப்பினம். அவர்களை அழைத்து ஒரு கேள்வியை முன் வைத்தோம். இந்தக் குழந்தை திட்டமிட்டு பிறந்ததா என்று. பல புலம்பெயர் தமிழ் தம்பதிகளுக்கு திட்டமிட்ட குழந்தையா... அப்படின்னா என்ன என்று கேட்க தெரிகிறதே அன்றி.. வேறு எதுவும் புரியவில்லை.

திருமணத்தை ஒரு சடங்காக நடத்தும் சமூகப் பெரியவர்கள்.. அந்தச் சடங்கு வழிசமைக்கும் செயற்பாடு குறித்து வழிகாட்டவோ அல்லது தேவையான அறிவை வழங்கவோ முனைவதில்லை. இது திட்டமிடப்படாத குழந்தைகள் பிறக்க வழி வகுக்கிறது. ஏதோ பெத்திட்டம் வளர்ப்பம் என்று வளர்கின்ற நிலை எமது சமூகத்தில் அதிகம். அதைவிட சமூகத்துக்கு பயந்து பிள்ளை பெற்றுக் கொள்வது.. பெனிவிட்டுக்காக பிள்ளை பெற்றுக் கொள்வது.. காதல் முறியக் கூடாது என்பதற்காக பிள்ளை பெற்றுக் கொள்வது.. கலியாணம் முறியக் கூடாது என்பதற்காக பிள்ளை பெற்றுக் கொள்வது.. இப்படிப் பல காரணங்களால் எம்மவர்கள் பிள்ளை பெற்றுக் கொள்கின்றனர். இங்கு அவர்களின் சுய விருப்பு என்பது ஒரு சிறிய அளவே பங்கெடுக்கிறது. இதனால் குழந்தை பராமரிப்பு.. கவனிப்பு என்பதில் சந்தோசம் இன்மை.. ஒத்துழைப்பின்மை அதிகரிக்கிறது. அந்த வகையில் அது ஒரு தவறான அணுகுமுறை ஆகும். குழந்தை ஒன்றை ஒரு ஆணும் பெண்ணும் தமது சுய விருப்புக்கு ஏற்ப ஒருங்கிணைந்து பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான காலத்தை அவர்கள் தீர்மானிக்க சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும். அதைவிடுத்து காஞ்ச மாடு கம்பில விழுந்த கணக்கா ஆண்களும் பெண்களும் நடந்து குழந்தை பெற்றுக் கொள்வதல்ல.. குழந்தை பெற்றுக் கொள்வதென்பது. அது சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

எமது சமூகம் பாலியல் ரீதியான அறிவியலில் மிகப் பிந்தங்கி அநாவசிய விசயங்களை பெரிது படுத்தி.. அவசியமான விசயங்களைக் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறது. இவை மாற வேண்டும். இன்று வடக்குக் கிழக்கில் குழந்தைகளைப் பெற்று வீதியில் விட்டெறியும் நிலைகளும்.. இந்த வகையினதே. இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல.. அவர்கள் வாழும் சமூகமும் பொறுப்பு. திட்டமிட்ட குழந்தை என்ற விடயத்தை சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். அது பாலியல் நடத்தைகளை பாதுகாப்பாக கட்டுப்பாட்டோடு செய்ய வழி வகுக்கும்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

"இறைக்கிற கிணறு தான் ஊறும், இறைக்காத கிணறு நாறும்"

.

  • கருத்துக்கள உறவுகள்

.

"இறைக்கிற கிணறு தான் ஊறும், இறைக்காத கிணறு நாறும்"

.

அதுவம் இடைக்கிட கலக்கி இறைக்க வேணும் :D:)

இந்தத் தலைப்புக்குள் என்னை இழுத்தவிட வேண்டும் என்று முடிவு கட்டிட்டீர்கள் என்று மட்டும் விளங்குது.

வேறொன்றுமில்லை. நீங்கள் அறிவியல் சார்ந்து எழுதுவியல் அதுதான்.

நன்றி நெடுக்ஸ் கருத்துப் பகிர்விற்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்

.

"இறைக்கிற கிணறு தான் ஊறும், இறைக்காத கிணறு நாறும்"

.

அள்ள அள்ள வற்றிய பல கிணறுகளைக்கண்ணால் கண்டிருக்கின்றேன்

நான் சொல்வது சத்தியமாய் கிணற்றை மட்டும்தான்............ :D

  • கருத்துக்கள உறவுகள்

டங்குதான் நெடுக்கர் என்பதற்கு இந்த சாட்சியம் ஒன்றே போதும் யுவர் ஹானர்.

என்னது நான் நெடுக்கரா? :D தாய்க்குலங்களின் ஆதரவை என்னட்டை இருந்து பிடுங்க சதி நடக்குது யுவர் ஆனர்..! :):D^_^

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கண்றாவித் திரியை வேறு எங்கும் ஒளித்து வைக்க முடியாதா? :)

வாறவன் போறவன் எல்லாம் வசித்து விட்டு நடுவீதியில் நின்று ........ :D:D

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

அள்ள அள்ள வற்றிய பல கிணறுகளைக்கண்ணால் கண்டிருக்கின்றேன்

நான் சொல்வது சத்தியமாய் கிணற்றை மட்டும்தான்............ :)

பின் வற்றிய கிணற்றில் ஏற்றம் போட்டு இறைத்தாலும், பொ(வெ)டி மருந்கொண்டு ஆழமாக்கினாலும், தன் பயிருக்கு தேவையான உரமான தண்ணீர் கிட்டாது. :D

என்னது நான் நெடுக்கரா? :D தாய்க்குலங்களின் ஆதரவை என்னட்டை இருந்து பிடுங்க சதி நடக்குது யுவர் ஆனர்..! :):D^_^

நீங்க இப்படி சொல்றீங்கள். அங்க தலைவர தரிசிக்க என்று ஒரு கியூவே நிக்குது. ^_^

http://www.yarl.com/forum3/index.php?showtopic=75904&pid=612561&st=0&#entry612561

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

என்னது நான் நெடுக்கரா? :D தாய்க்குலங்களின் ஆதரவை என்னட்டை இருந்து பிடுங்க சதி நடக்குது யுவர் ஆனர்..! :):D^_^

எனக்கென்னவோ நெடுக்கரை சந்திக்க தமிழ்சிறி சொன்னமாதிரி பாக்குவெட்டியோடை ரெடியாகினம் போல இருக்கு தாய்க்குலம்..! ^_^:D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆணென்ன பெண்ணென்ன?

சுய இன்பத்தை அனுபவிக்கிறதிலையும் ஒரு தனிச்சுகம் இருக்கு கண்டியளோ.

இதுக்கு போய் கிணறு கிடங்கு கிடாரம் எண்டு கனக்க யோசிக்கிறியள்.

பொதுவாய் சொல்லப்போனால் நான் டச் பண்ணாத நடிகையளே உங்கை இல்லை :D

முந்தநாளும் உந்த பாட்டுக்காரி லேடி கா கா காஆஆஆஆஆஆஆஆஆ :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ நெடுக்கரை சந்திக்க தமிழ்சிறி சொன்னமாதிரி பாக்குவெட்டியோடை ரெடியாகினம் போல இருக்கு தாய்க்குலம்..! :):D^_^

அவருக்கு ஏன் பாக்குபெட்டி.ஏற்கனவே வெட்டித்தானே இருக்கு :D:D

ஆணென்ன பெண்ணென்ன?

சுய இன்பத்தை அனுபவிக்கிறதிலையும் ஒரு தனிச்சுகம் இருக்கு கண்டியளோ.

இதுக்கு போய் கிணறு கிடங்கு கிடாரம் எண்டு கனக்க யோசிக்கிறியள்.

பொதுவாய் சொல்லப்போனால் நான் டச் பண்ணாத நடிகையளே உங்கை இல்லை :D

முந்தநாளும் உந்த பாட்டுக்காரி லேடி கா கா காஆஆஆஆஆஆஆஆஆ ^_^

சொன்னால் நம்பமாட்டீங்கள் எந்த நடிகைகயையும் நான் பயன்படுத்தியதில்லை.திரை வேறு நி்ஜம் வேறு :D:D நிஜத்தில் கிக் கூட :D

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு ஏன் பாக்குபெட்டி.ஏற்கனவே வெட்டித்தானே இருக்கு :D:D

பாக்குவெட்டி பாக்கு வெட்டத்தானே செய்திருக்கு. நீங்க பாக்கத்தானே சொல்லிறீங்க. வேற உள்ள வெளிய வைச்சு ஒன்றும் சொல்லேல்லையே...??! :D :D

பாக்கை 'கொட்டைப் பாக்கு' என்று தானே ஊரில சொல்லிக் கேள்வி... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.