Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூச்சு விடுதலில் எனக்கு இருக்கும் பிரச்சனை

Featured Replies

எனக்கு கன நாட்களாக மூச்சு விடுதலில் சிரமம் அடிக்கடி வந்து போகுது. மூச்சு முழுமையாக விட முடியாமல் அவதிப் பட்டு (short Breath ) பின் சில தடவை முயன்ற பின் முழுமையான மூச்சு வரும். இது முக்கியமாக இரவு படுக்கும் போதே அடிக்கடி ஏற்படுகின்றது. இதனால் நித்திரை எவ்வளவு வந்தாலும் முதல் இரண்டு மணி நேரம் அவதிப் பட்டு மூச்சு சரியாக வந்த பின் தான் நித்திரை கொள்ள முடிகின்றது. இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றல், சிறிதளவு மது (முக்கியமாக விஸ்கி) அருந்தினால் உடனடியாக பிரச்னை சரியாகின்றது.

மருத்துவரிடம் காட்டி எல்லா பரிசோதனை செய்தும் ஒன்றும் இல்லை என்று விட்டார். ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளும் இல்லை. உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும், அதுவும் இப்ப தான் எல்லையை தாண்டுவதும் இல்லை

பொதுவாக வார இறுதி ௨ நாட்களில் தான் மது அருந்துவதுண்டு. கடந்த 2 நாளாக இந்தப் பிரச்சனை அதிகமாக இருந்தமையால் நேற்று இரவு சிறிதளவு (2 Glass ) அருந்த வேண்டி வந்தது. அருந்திய 10 நிமிடத்தில் மூச்சு விடும் பிரச்சனை தீர்ந்தது

இது பற்றி யாருக்காவது தெரியுமா? உங்களுக்கு இப்படி ஒரு பிரச்னை வந்துள்ளதா?

தூங்கப்போகும் முன் அதிகளவு உணவு உட்கொண்டாலும் மூச்சு விடுதலில் பிரச்சனை ஏற்பட்வதுண்டு. தற்காலிக வலி நிவாரணியாக செயற்படும் தன்மை மதுவுக்கு உண்டு. ஏற்கனவே வைத்திய பரிசோதனைகள் செய்த படியால் பெரிய பிரச்சனைகள் இருக்காது. இது சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/003076.htm

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

இரவில் இலகுவில் செமிபாடு அடையும் உணவுகளை சாப்பிடுங்கள்...அதுவும் படுக்க போகும் முன் 2,3 மணித்தியாலத்திற்கு முதல் சாப்பிடுங்கள்... :lol: நானும் விஸ்கி அடிச்சுப் போட்டுப் படுக்கிற நான் அந்த மாதிரி நித்திரை வரும் :wub::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்தது பத்து நிமிடமாவது தினமொருமுறை ஓடுங்கள். மூச்சு விடும் பிரச்சினை போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்து கொண்ட வரையில் ஏதாவது ஒரு விடயத்தைப் பற்றி திரும்ப,திரும்ப யோசித்துக் கொண்டு இருந்தால்,பயம்,ஏக்கம் இருந்தாலும் இப்படியான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு சாத்தியக் கூறுகள் இருக்கின்றது.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இரவு உணவுக்கு பின் சில் நிமிடம் உலாவுங்கள். மகளை முதுகில் சவாரி விட சொல்லுங்கள். அவர்களுடன் விளையாடி விட்டு உறங்க செல்லுங்கள் எல்லாம் சரியாகி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதனுடன் உங்களுக்கு நீண்ட தலைவலி இருக்கிறதா.. வேறென்ன குணம்குறிகள் தென்படுகின்றன.. அது தொடர்பில் செய்யக் கூடிய மருத்துவ பரிசோதனைகள் என்ன.. அவற்றின் பெறுபேறுகள் என்ன... அதன் பின் தான் தீர்க்கமான முடிவை வைத்தியர்கள் தீர்மானிப்பார்கள்.

ஏலவே வைத்தியர்கள் பிரச்சனை இல்லை என்று சொல்லிவிட்டதாக சொல்கிறீர்கள். அது நல்லது. இருந்தாலும் பிரச்சனை நீடிப்பதாகச் சொல்கிறீர்கள்..??!

மூச்சு விடுதல் பிரச்சனைக்கு பல காரணங்கள் இருந்தாலும்.. விஸ்கி அருந்தியவுடன் அது சீராகிறது என்பது உங்களின் பிரச்சனைக்கு இரத்த அழுத்தம் அல்லது மூளைக்கு குருதி வழங்கும் சிறிய குருதிக் குழாய்களில் பிரச்சனைகள் இருந்தாலும் இவ்வாறு அமையலாம். குறிப்பாக படுக்கையின் போது இருப்பதாகச் சொல்கிறீர்கள்.. அது சார்ந்து இப்படி ஊகிக்க முடிகிறதே அன்றி.. உண்மை அதுவல்லாமல் கூட இருக்கலாம். இது வெறும் ஊகம் மட்டுமே. எனவே இதையிட்டு நீங்கள் அஞ்சத் தேவையில்லை.

மூளை சார்ந்தது எனின் பார்வை குளறுபடிகளோடு தலையிடியும் இருப்பது வழமை. அப்படி இருந்தால் உங்கள் வைத்தியரிடம் உங்களுக்குள்ள பிரச்சனையின் அம்சங்கள் அனைத்தையும் சொல்லுங்கள். அப்போதுதான் அவர்கள் சரியான மருத்துவ பரிசோதனைக்கு உங்களை உட்படுத்த முடியும்.

எனவே இப்பிரச்சனை நீடித்தால் மீண்டும் வைத்தியரிடம் சென்று சரியான உடற்பரிசோதனை மேற்கொண்டு பிரச்சனைக்கான காரணம் மற்றும் தீர்வை ஆரம்பத்திலேயே பெற்றுக் கொள்வது சிறந்தது. ஊகங்களை இட்டு கவலைப்பட வேண்டாம்.

யோகா: மெதுவாக மிக மிக மெதுவாக அந்தந்த இடங்களில் மனசை அழுத்திக் குவித்துச்செய்வது

காற்றை உடம்பசைவுடன் மெதுவாய் உள்ளிழுத்து பின் அதேபோல் மிக மெதுவாய் வெளியேற்றுவது !

இந்த யோகாவைப்ப்றி ஏற்கனேவே கதைத்திருக்கிண்றீர்கள் :wub:

யோகத்தின் சிறப்பு:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72878

விஸ்கி குடிக்கும்போது மட்டுமே மீண்டும் சீராக மூச்சுவிடக்கூடியதாக காணப்பட்டதா? விஸ்கிக்கு பதிலாக நீரை அருந்தியபோது அதேமாதிரி மாற்றம் இருக்கவில்லையா? சிலவேளைகளில் அண்மையில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் Heaterவீடுகளில் பயன்படுத்தப்படும் நிலையில் காற்றில் ஈரப்பதன் குறைந்து வரட்சி ஏற்படுவதும் சுவாசச் சிக்கல்களிற்கு காரணமாக அமையலாம். வீட்டில் ஈரப்பதனை கட்டுப்படுத்தும் கருவியை சரியாக பயன்படுத்துகின்றீர்களா?

உங்கள் உடலைப்பற்றி உங்களுக்குத்தான் தெரியும். எனவே, எப்படியான உடற்பயிற்சிகள் உங்களுக்கு பொருத்தமானவை என தீர்மானித்து அவற்றை தினமும் செய்யலாம். தினமும் செய்ய வசதி கிடைக்காவிட்டால் கிழமையில் நான்கு ஐந்து நாட்களாவது செய்யலாம். நான் ஒவ்வொரு நாளும் 150தடவைகள் push upsசெய்வது, தலைகீழாக நிற்பது, 20தடவைகள் குந்தி எழும்புவது. மூச்சை அவதானிக்கும் meditationசெய்வது. எங்கள் உள்ளத்தை சரிசெய்துவிட்டால் பெரும்பாலும் உடல் பிரச்சனை தராது. பலவகை வெளி அழுத்தங்கள் உங்களை பாதிக்கக்கூடும்.

  • தொடங்கியவர்

பதில் தந்த, ஆலோசனைகள் தந்த அனைவருக்கும் நன்றிகள்

தூங்கப்போகும் முன் அதிகளவு உணவு உட்கொண்டாலும் மூச்சு விடுதலில் பிரச்சனை ஏற்பட்வதுண்டு. தற்காலிக வலி நிவாரணியாக செயற்படும் தன்மை மதுவுக்கு உண்டு. ஏற்கனவே வைத்திய பரிசோதனைகள் செய்த படியால் பெரிய பிரச்சனைகள் இருக்காது. இது சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/003076.htm

பொதுவாக தூங்கப் போகும் முன் அதிகம் சாபிடுவதில்லை. ஆகக் குறைந்தது 2 மணித்தியாலம் இடைவெளி விட்டுத் தான் படுப்பது அதிகம்

குறைந்தது பத்து நிமிடமாவது தினமொருமுறை ஓடுங்கள். மூச்சு விடும் பிரச்சினை போய்விடும்.

வீட்டில் வாங்கிப் போட்ட Treadmill அப்படியே கிடக்கு.. வாரம் 4 கி. மி நடப்பதுடன் சரி. வேலைக்கு போய்விட்டு வரவும், நான் பொறுப்பெடுத்த சில poroject களை முடிக்கவுமே நேரம் சரியாக இருக்கு :wub:

நான் அறிந்து கொண்ட வரையில் ஏதாவது ஒரு விடயத்தைப் பற்றி திரும்ப,திரும்ப யோசித்துக் கொண்டு இருந்தால்,பயம்,ஏக்கம் இருந்தாலும் இப்படியான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு சாத்தியக் கூறுகள் இருக்கின்றது.நன்றி.

பொதுவாக எதற்கும் அதிகம் அலட்டி கொள்ளாத Type நான் என்பதால் எதனையும் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. எத்தனையாவது அனுபவிக்காவிடின் தான் ஏக்கம் வரும் ஆனால் எனக்கு அப்படி ஒரு ஏக்கமும் இல்லையே

இதனுடன் உங்களுக்கு நீண்ட தலைவலி இருக்கிறதா.. வேறென்ன குணம்குறிகள் தென்படுகின்றன.. அது தொடர்பில் செய்யக் கூடிய மருத்துவ பரிசோதனைகள் என்ன.. அவற்றின் பெறுபேறுகள் என்ன... அதன் பின் தான் தீர்க்கமான முடிவை வைத்தியர்கள் தீர்மானிப்பார்கள்.

ஏலவே வைத்தியர்கள் பிரச்சனை இல்லை என்று சொல்லிவிட்டதாக சொல்கிறீர்கள். அது நல்லது. இருந்தாலும் பிரச்சனை நீடிப்பதாகச் சொல்கிறீர்கள்..??!

மூச்சு விடுதல் பிரச்சனைக்கு பல காரணங்கள் இருந்தாலும்.. விஸ்கி அருந்தியவுடன் அது சீராகிறது என்பது உங்களின் பிரச்சனைக்கு இரத்த அழுத்தம் அல்லது மூளைக்கு குருதி வழங்கும் சிறிய குருதிக் குழாய்களில் பிரச்சனைகள் இருந்தாலும் இவ்வாறு அமையலாம். குறிப்பாக படுக்கையின் போது இருப்பதாகச் சொல்கிறீர்கள்.. அது சார்ந்து இப்படி ஊகிக்க முடிகிறதே அன்றி.. உண்மை அதுவல்லாமல் கூட இருக்கலாம். இது வெறும் ஊகம் மட்டுமே. எனவே இதையிட்டு நீங்கள் அஞ்சத் தேவையில்லை.

மூளை சார்ந்தது எனின் பார்வை குளறுபடிகளோடு தலையிடியும் இருப்பது வழமை. அப்படி இருந்தால் உங்கள் வைத்தியரிடம் உங்களுக்குள்ள பிரச்சனையின் அம்சங்கள் அனைத்தையும் சொல்லுங்கள். அப்போதுதான் அவர்கள் சரியான மருத்துவ பரிசோதனைக்கு உங்களை உட்படுத்த முடியும்.

எனவே இப்பிரச்சனை நீடித்தால் மீண்டும் வைத்தியரிடம் சென்று சரியான உடற்பரிசோதனை மேற்கொண்டு பிரச்சனைக்கான காரணம் மற்றும் தீர்வை ஆரம்பத்திலேயே பெற்றுக் கொள்வது சிறந்தது. ஊகங்களை இட்டு கவலைப்பட வேண்டாம்.

எனக்கு தலையிடி வருவது மிக மிக குறைவு. அப்படி வருவதாயின் மிக நீண்ட நேரம் கணணியில் வேலை செய்தால் மட்டுமே வரும். 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை வரும் என்று நினைக்கின்றேன். அப்படி வந்தாலும் Balm போட்டவுடன் சரியாகி விடும்

இரத்த அழுத்தம் இருக்கின்றது.. சராசரியாக 135 /85 என்ற விகிதத்தில் இருக்கும். நாளாந்தம் மருந்து எடுக்கின்றேன்

விஸ்கி குடிக்கும்போது மட்டுமே மீண்டும் சீராக மூச்சுவிடக்கூடியதாக காணப்பட்டதா? விஸ்கிக்கு பதிலாக நீரை அருந்தியபோது அதேமாதிரி மாற்றம் இருக்கவில்லையா? சிலவேளைகளில் அண்மையில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் Heaterவீடுகளில் பயன்படுத்தப்படும் நிலையில் காற்றில் ஈரப்பதன் குறைந்து வரட்சி ஏற்படுவதும் சுவாசச் சிக்கல்களிற்கு காரணமாக அமையலாம். வீட்டில் ஈரப்பதனை கட்டுப்படுத்தும் கருவியை சரியாக பயன்படுத்துகின்றீர்களா?

உங்கள் உடலைப்பற்றி உங்களுக்குத்தான் தெரியும். எனவே, எப்படியான உடற்பயிற்சிகள் உங்களுக்கு பொருத்தமானவை என தீர்மானித்து அவற்றை தினமும் செய்யலாம். தினமும் செய்ய வசதி கிடைக்காவிட்டால் கிழமையில் நான்கு ஐந்து நாட்களாவது செய்யலாம். நான் ஒவ்வொரு நாளும் 150தடவைகள் push upsசெய்வது, தலைகீழாக நிற்பது, 20தடவைகள் குந்தி எழும்புவது. மூச்சை அவதானிக்கும் meditationசெய்வது. எங்கள் உள்ளத்தை சரிசெய்துவிட்டால் பெரும்பாலும் உடல் பிரச்சனை தராது. பலவகை வெளி அழுத்தங்கள் உங்களை பாதிக்கக்கூடும்.

காலநிலை மாற்றத்துடன் தான் இந்தப் பிரச்சனை அதிகரித்தது. ஆனால் வீட்டில் இன்னும் Heater பயன்படுத்த தொடங்கவில்லை. எனக்கு வெப்பமான இடங்களில் இருந்தாலும் இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கும். முக்கியமாக சனக் கூட்டம் அதிகமா இருக்கும் subway களில் இந்தப் பிரச்சனை வருவதுண்டு. வீட்டில் பிள்ளைகளுக்கு மட்டும் ஈரப்பதனை கட்டுப்படுத்தும் கருவியை போடுவதுண்டு.

ஒரு நாளுக்கு ஆகக் குறைந்தது 2 லிட்டர் தண்ணியாவது அலுவலகத்தில் குடிப்பதுண்டு. இரவிலும் தண்ணீர் குடித்து விட்டுத் தான் படுப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தலையிடி வருவது மிக மிக குறைவு. அப்படி வருவதாயின் மிக நீண்ட நேரம் கணணியில் வேலை செய்தால் மட்டுமே வரும். 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை வரும் என்று நினைக்கின்றேன். அப்படி வந்தாலும் Balm போட்டவுடன் சரியாகி விடும்

இரத்த அழுத்தம் இருக்கின்றது.. சராசரியாக 135 /85 என்ற விகிதத்தில் இருக்கும். நாளாந்தம் மருந்து எடுக்கின்றேன்.

குருதி அழுத்தம் 140/90 வரை அமையலாம். அதற்கு மேல் சென்றால் 20% மூளை மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பும் அதிகரிக்கும்.

நான் நினைக்கிறேன்.. குளிர்காலத்தில் மற்றும் ஒக்சிசன் வழங்கல் குறைவாக இருக்கும் இடங்களில் ஏற்படும் தசை சுருக்க விளைவுகளால் தான் உங்களுக்கு இப்படி நிலை வருகிறது என்று. இதற்கு இரும்பு,கல்சியம் மற்றும் பொட்டாசியம் சோடியம் போன்ற அயன்களின் குறைபாடும் காரணமாக இருக்கலாம்.

புகைப்பிடிப்பவர்களாயின் அவர்களிலும் இந்த நிலை இருக்கக் கூடும். காரணம்.. குறைந்த ஒக்சிசன் வழங்கலால் தசைகள் களைப்படைதல் நிகழ்வது விரைவாவதால்..!

இவை எல்லாம் ஊகங்களே. சரியான மருத்துவப் பரிசோதனைகளும் சரியான வைத்துய ஆலோசனைகளுமே உங்களுக்கு தேவையான நிவாரணத்தை பெற்றுத்தரும்..!

Edited by nedukkalapoovan

எனது தகப்பனாருக்கும் இந்த அறிகுறிகள் இருந்தது, அவருக்கும் உயர் இரத்த அழுத்தம் இருந்தது, அதற்கும் அவர் மருந்துகள் எடுத்தே வந்தார், ஆனால் இரவினில் இப்படியான சிரமங்கள் அடைவதனால், அப்போதெல்லாம் (மருத்துவத்தின் படி சரியோ பிழையோ தெரியாது) உடனே இளம் சூட்டுக்குக் கொஞ்சம் அதிகமான சூடுள்ள தண்ணீர் குடிப்பார், அத்தோடு இரண்டு அல்லது மூன்று தலையணை வைத்து கொஞ்சம் உயரமாக படுத்துக்

கொள்ளவார். மூச்செடுக்கும் நிலைமை சீரானதும் ஒரு தலையணைமட்டும் பாவனயில் வைத்துக் கொள்ளவார்.

சில சமையங்களில் எனக்கும் மூச்செடுப்பது சிரமமாக இருக்கும். அதே நேரம் இதே போல தான் செய்வேன். ECG எடுத்துப் பார்த்தது, அதில் எதுவும் வித்தியாசம் தெரியவில்லை என்று சொன்னார்கள். (மூச்செடுக்க சிரமப்பட்டு ஆஸ்பத்திரிக்குப் போனால் அங்க போய் 2 மணத்தியாலங்கள் காவல் இருந்த பிறகு தான் ECG எடுத்தார்கள்... :wub: பறவாய் இல்லை heart ஆவது வேலை செய்யுதே என்று நினைச்சுக் கொண்டு வெளியே வந்தது...)

நீங்கள் சொல்வது போல் underground train -னில் போய் வரும் போது உணரக் கூடியதாக இருக்கும். இதனால் எப்போதும் ஒரு தண்ணீர் போத்தில் வைத்திருப்பேன்.

இரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுப்பது என்கிறீர்கள்... அதனோடு தானா 2 Glass whiskey யும் எடுக்கிறீர்கள்? அப்படி எடுத்தால் என்ன பிரியோசனம்?

உங்கள் பார்வைக்கு சில இணைப்புகள் இணைத்துள்ளேன். நேரம் இருப்பின் படித்துப் பாருங்கள். பிரயோசனப் பட்டால் சந்தோசம். இதை வாசிப்பதனால் யோசனைகளை அதிகமாகும் என்று நினைத்தால், தயவு செய்து வாசிக்க வேண்டாம்!

http://www.wrongdiagnosis.com/sym/breathing_difficulties.htm

http://www.wrongdiagnosis.com/symptoms/breathing_difficulties/causes.htm

http://familydoctor.org/online/famdocen/home/articles/835.html

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

யோகா மூச்சுப்பயிற்சி (pranayam) காலையில் சாப்பிட முன் ஒவ்வொரு நாளும் செய்யவும். ஒரு மாதத்தில் பாரிய மாற்றத்தை உணர்வீர்கள்.

இரத்த அழுத்தத்திற்கு ஒவ்வொரு நாளும் வாழைக்காய்/பழம் (நன்கு பழுக்காத), நார்த்தேங்காய் (Grape Fruit ) சாப்பிட்டு இத்துடன் உடற்பயிற்சியும் (முக்கியமாக ஓட்டம்) செய்து வந்தால் நிறைய மாற்றம் வரும். நீரழிவு நோய் உள்ளவர்கள் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது. Grape Fruit ஆரம்பத்தில் சாப்பிடுவது கஷ்டமாக இருக்கும். பழக சரியாகிவிடும். அதுவும் கஷ்டமானால் பழ ரசமாக்கி அருந்தலாம்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு உந்த பிரச்சனை வருசாவருசம் அதுவும் முக்கியமாய் வெய்யில்காலம் முடிஞ்சு குளிர்காலம் தொடங்கேக்கை வரும்.

அதுவும் படுத்து நாலைஞ்சு மணித்தியாலத்துக்குப்பிறகு ஏதோ மூச்செடுக்கேலாதமாதிரி அந்தரமாய்யிருக்கும்.

ஒருக்கால் எழும்பி வீட்டுக்குள்ளையே நடந்து போட்டு வந்துபடுக்க ஓரளவுக்கு சுகமாயிடும்.

நாங்கள் படுக்குற மெத்தையிலையும் கனவிசயம் இருக்கு கண்டியளோ.

காலநிலையும் மாற எங்கடை உடம்பிலையும் வித்தியாசம் வர..............எல்லாநேரமும் உடம்பு ஒரேமதிரியிருக்காதுதானே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு பல காரணங்கள் இருப்பினும், OSA என்று சொல்லுகிற Obstructive sleep apnea ஒரு காரணமாய் இருக்குமோ என நினைக்கிறேன். நித்திரை இல்லாமல் என்னவென்று ஸ்லீப் அப்னியா என்று கேட்பது கேக்கிறது..எனக்கு சொள்ளதேரியவில்லை..OSA இப்ப கன பேரில் கண்டு பிடிக்கிறார்கள்..அத்துடன் அதனால் அதிக பிரச்சனைகள் வருகிறது..அதுபற்றியும் வாசித்து பார்க்கவும்..

  • கருத்துக்கள உறவுகள்

படுக்கும்முன் தரையில் பத்மாசனத்தில் இருந்து 5 நிமிடம் மூச்சுப் பயிற்சி வலம் & இடமாக மாற்றி மாற்றி செய்துவிட்டு படுக்கவும்! :D

  • தொடங்கியவர்

கடந்த இரு வாரமாக மூச்சு விடும் பிரச்சனை இல்லை... காலநிலை மாற்றத்துக்கு உடல் பழகியதாலோ அல்லது இரவில் பழம் சாப்பிட்டு விட்டு படுக்கத் தொடங்கியதாலோ தெரியவில்லை கடந்த 2 வாரமாக பிரச்சனை இல்லை (உடல் இடையை கொஞ்சம் குறைத்தும் விட்டன் 67 இல் இருந்து 64 இற்கு)

  • கருத்துக்கள உறவுகள்

உடல் எடை ...........67 ..................64 ................நல்ல முன்னேற்றம். பாராடுக்கள்.

கடந்த இரு வாரமாக மூச்சு விடும் பிரச்சனை இல்லை... காலநிலை மாற்றத்துக்கு உடல் பழகியதாலோ அல்லது இரவில் பழம் சாப்பிட்டு விட்டு படுக்கத் தொடங்கியதாலோ தெரியவில்லை கடந்த 2 வாரமாக பிரச்சனை இல்லை

...

உடல் முன்றேடம் அடைத்திருப்பது நல்ல விஷயம்.

..

(உடல் இடையை கொஞ்சம் குறைத்தும் விட்டன் 67 இல் இருந்து 64 இற்கு)

ஹீஹி... என்ன நிழலி, தலைமுடியை வெட்டி ஒழுங்கா குளிச்சு முழுகி இருகிறீங்கள் போல.... 3kg குறைந்து இருக்கிறீர்கள்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த இரு வாரமாக மூச்சு விடும் பிரச்சனை இல்லை... காலநிலை மாற்றத்துக்கு உடல் பழகியதாலோ அல்லது இரவில் பழம் சாப்பிட்டு விட்டு படுக்கத் தொடங்கியதாலோ தெரியவில்லை கடந்த 2 வாரமாக பிரச்சனை இல்லை (உடல் இடையை கொஞ்சம் குறைத்தும் விட்டன் 67 இல் இருந்து 64 இற்கு)

உங்கள் உயரம் என்ன நிழலி.

அடுத்தமுறை மூச்சு விடுவதில் பிரச்சனை எண்டால் சொல்லுங்கோ . நாடி பிடிச்சு பார்த்து என்ன என்று சொல்றன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.