Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிர்வாணமாக ஓடிவந்தவர்கள் ஓரினச்சேர்க்கை பற்றி பேசுகின்றார்கள்

Featured Replies

This post has been edited by நிழலி: Today, 08:08 PM

நீங்கள் எழுதிதற்கே கத்திரிக்கோல் பாவித்துள்ளீர்கள் நிழலி

இது தகுமா...?

கத்தரிகோல் என்றதுக்கு தவறுதலாக கத்தரிகாய் என்று எழுதிப் போட்டன்...அதான் திருத்தினன் <_<

  • Replies 133
  • Views 21.5k
  • Created
  • Last Reply

விளம்பரத்தில்தான் தேவையில்லாமல் சமயத்தை இழுத்திருக்கிறார்கள். அதனால்தான் நான் அது பற்றி விளக்கம் சொல்ல வேண்டி வந்தது. இது என்னுடைய குற்றம் இல்லை.

இன்னும் ஒரு செய்தி சொல்ல மறந்து விட்டேன். மகாபாரதத்தில் வருகிறது. கிருஸ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இருந்த உறவு பற்றிய கதை அது. அர்ஜுனன் ஒரு சாபத்தின் காரணமாக பெண் தன்மை கொண்டவனாக குறிப்பிட்ட காலம் இருக்க வேண்டி வந்ததாம். ஒருவர் மீது ஒருவர் அதீதமான அன்பு கொண்டிருந்த கிருஸ்ணனும் அர்ஜுனனும் அந்த நேரத்தில் "ரகசியத்திலும் ரகசியமான அனுபவத்தை" அறிந்து கொண்டார்களாம். அவர்கள் அனுபவித்த அந்த ரகசியத்தை கடைசி வரைக்கும் யாரிடமும் சொல்லக் கூடாது என்று கிருஸ்ணன் அர்ஜுனனுக்கு உத்தரவும் போட்டானாம்.

நான் இங்கே எந்த மதத்தில் உடலுறவு பற்றிய சர்ச்சை மிகுந்த கதைகள் அதிகம் இருக்கின்றன என்று விவாதிக்க வரவில்லை. வேண்டும் என்றால் இன்னொரு தலைப்பில் அது பற்றி விவாதிக்கவும் நான் தயார்.

விளம்பரம் சமயத்தையும் கலாச்சாரத்தையும் காரணம் காட்டி ஓரினச்சேர்க்கையாளரான வேட்பாளரை சாடியது. அவமானப்படுத்தியது.

கலாச்சாரம் என்பது ஒருவருக்கு தன்பாலினரை பிடிக்கிறதா எதிர்பாலினரை பிடிக்கிறதா என்பதில் இல்லை. இந்து சமயமும் ஓரினச் சேர்க்கையை கண்டிக்கவில்லை. மாறாக அதை கடவுளின் செயலாக சித்தரிக்கின்றன

ஆகவே விளம்பரத்தின் அடிப்படையே மிகத் தவறானது. இதையே சுட்டிக் காட்டுவதற்கே நான் இங்கே இந்து மதம் சொல்கின்ற சில விடயங்களை கூறியிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கத்திரிக்காய் என்பது இந்துக்களின் பிரதான உணவாகும்

அதை இங்கு கத்தரித்ததை வன்மையாக கண்டிக்கின்றேன் <_<

Edited by விசுகு

... எனது நண்பர்(?) ஒருவர் கலியாணம் கட்டிய புதிதில், மனுசியாருக்கு யூரோப் காட்டுவம் எண்டுட்டு, பிரான்ஸ் ஊடாக அம்ஸடாம் கூட்டிப் போயிருக்கிறார். அங்கு போன நாள் உந்த நோய் காரர்களின் ஊர்வலமாம்! தான் நினைத்தாராம் உந்த நோய் ஒண்டு இரண்டுக்குத்தானென்று! அங்கு பார்த்தால் ஆயிரங்களாம்!!! ... அங்கு நிண்ட ஓரிரு நாட்கள் எல்லாம் உந்த நோய்காரரின் திருவிழாத்தானாம்! ... சொன்னான், எடேயப்பா, அங்கு மனுசியை கூட்டிக்கொண்டு போனதால், மனுசியும் உதை பார்த்திட்டு தன்னையும் உந்த நோய்க்குணம் உள்ளவன் என்று நினைச்சிட்டுதாம், இல்லை என்று புறூவ் பண்ண கனகாலம் எடுத்ததாம்!!! ...

ஆண்டவா, யாழில் இருக்கும் எம்மவர்களில் ஒருவரும் இந்த நோய் பிடித்தவர்களாக இருக்கக்கூடாது! <_<

stop_war.gif

சண்டை போடதீங்கப்பா...

எப்படி தோழர் சண்டையில்லாம?

விடுங்க. எங்கள சண்டைபிடிக்க விடுங்க.

திண்ணை, பஞ்சாயத்து, அருவாள்,

மாமன் மக புள்ளைகளுக்க சின்ன கொத்து வேட்டுபாடு.

முப்பதுமுறை முள்ளிவாயிக்காலில் கொள்ளி வைச்சாலும் திருந்த மாட்டம்.

ரைட்டு.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

... எனது நண்பர்(?) ஒருவர் கலியாணம் கட்டிய புதிதில், மனுசியாருக்கு யூரோப் காட்டுவம் எண்டுட்டு, பிரான்ஸ் ஊடாக அம்ஸடாம் கூட்டிப் போயிருக்கிறார். அங்கு போன நாள் உந்த நோய் காரர்களின் ஊர்வலமாம்! தான் நினைத்தாராம் உந்த நோய் ஒண்டு இரண்டுக்குத்தானென்று! அங்கு பார்த்தால் ஆயிரங்களாம்!!! ... அங்கு நிண்ட ஓரிரு நாட்கள் எல்லாம் உந்த நோய்காரரின் திருவிழாத்தானாம்! ... சொன்னான், எடேயப்பா, அங்கு மனுசியை கூட்டிக்கொண்டு போனதால், மனுசியும் உதை பார்த்திட்டு தன்னையும் உந்த நோய்க்குணம் உள்ளவன் என்று நினைச்சிட்டுதாம், இல்லை என்று புறூவ் பண்ண கனகாலம் எடுத்ததாம்!!! ...

ஆண்டவா, யாழில் இருக்கும் எம்மவர்களில் ஒருவரும் இந்த நோய் பிடித்தவர்களாக இருக்கக்கூடாது! <_<

ஆமென்

நான் கத்தரிகோல் கேட்டது ஓரினச்சேர்க்கை இற்கு எதிராக அல்ல.. இந்த திரி தன் எல்லையை தாண்டிச் செல்வதால் தான்

மற்றப்படி, என் பாலியல் தெரிவும் ரசனையும் ஒரினச்சேர்க்கையாக இல்லாவிடினும், ஓரினச் சேர்க்கையினை கடுகளவும் எதிர்க்கவில்லை என்பதுடன், அதை தெரிவு செய்பவர்களின் தெரிவையும் மதிக்கின்றேன்.

இன்னொரு திரியில் ஓரினச்சேர்க்கை பற்றி அலசுவோம்

நன்றி

இன்னொரு திரியில் ஓரினச்சேர்க்கை பற்றி அலசுவோம்

அண்ணர் நெடுஸ், இதை ஆரம்பித்து வைக்கவேண்டும் என தாழ்ந்து, அதேநேரம் தள்ளிநிண்டு வேண்டுகிறேன்

  • தொடங்கியவர்

நான் ரொப் போட் அவர்களிற்கே தேர்தலில் எனது வாக்கை செலுத்தினேன். வாக்களித்தபிற்பாடு உடனடியாகவே அவருக்கு நான் ஏன் அவருக்கு வாக்களித்தேன் என ஐந்து காரணங்கள் கூறி அத்துடன் அவருக்கு வாழ்த்துகூறி மின்னஞ்சலும் அனுப்பினேன். பின்னர் செய்திகளை பார்த்தபோது தமிழ் வானொலி தமிழ் வானொலி என தமிழ் வானொலி விளம்பரம் ஒன்றை மேற்கோள் காட்டி பரவலான முறையில் கனேடிய ஊடகங்களில் செய்தி வெளிவிடப்பட்டன, பின்னூட்டல்கள் இடப்பட்டன. இதன் காரணத்தினாலேயே இந்த விளம்பரம் சம்பந்தமாக கருத்து கூறவேண்டி வந்தது. நகரபிதாவை தெரிவு செய்வதற்கான தேர்தலில் இரண்டாம் இடத்தை பெற்ற வேட்பாளர் தமிழ் சமூகத்திற்கு மிகுந்த சேவைகள் செய்தவர். இங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த மதிப்பை பெற்றவர். இப்படிப்பட்டவரை தாக்கும் வகையில் தமிழர்களினாலேயே விளம்பரம் உருவாக்கப்பட்டது ஆச்சரியத்தை தருகின்றது. இவர் மீது அனுதாபம் கொண்டே நான் இங்கு குறிப்பிட்ட விடயத்தைபற்றி பேசினேன் என்று இல்லை, இவர் தமிழ் சமூகத்திற்கு ஆதரவு அளிக்காத ஒருவராக காணப்பட்டிருப்பினும் இந்த விளம்பரம் விடயத்தை பற்றி கருத்தாடல் செய்திருப்பேன். இதற்கான முக்கிய காரணம் குறிப்பிட்ட விளம்பரம் கனடாவின் பிரதான ஊடகங்களில் பரவலாக மேற்கோள் காட்டப்பட்டதோடு மட்டும் அல்லாமல் தமிழ் தமிழ் என்று கூறி தமிழ் சமூகம் பற்றியதோர் தவறான அபிப்பிராயம் கனடியர்கள் மத்தியில் உருவாக்கப்படக்கூடாது என்பதற்காகவும் ஆகும். மேலதிக விளக்கம் கொடுத்த சபேசனுக்கு நன்றி, பாராட்டுக்கள்.

விளம்பரத்தில்தான் தேவையில்லாமல் சமயத்தை இழுத்திருக்கிறார்கள். அதனால்தான் நான் அது பற்றி விளக்கம் சொல்ல வேண்டி வந்தது. இது என்னுடைய குற்றம் இல்லை.

இன்னும் ஒரு செய்தி சொல்ல மறந்து விட்டேன். மகாபாரதத்தில் வருகிறது. கிருஸ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இருந்த உறவு பற்றிய கதை அது. அர்ஜுனன் ஒரு சாபத்தின் காரணமாக பெண் தன்மை கொண்டவனாக குறிப்பிட்ட காலம் இருக்க வேண்டி வந்ததாம். ஒருவர் மீது ஒருவர் அதீதமான அன்பு கொண்டிருந்த கிருஸ்ணனும் அர்ஜுனனும் அந்த நேரத்தில் "ரகசியத்திலும் ரகசியமான அனுபவத்தை" அறிந்து கொண்டார்களாம். அவர்கள் அனுபவித்த அந்த ரகசியத்தை கடைசி வரைக்கும் யாரிடமும் சொல்லக் கூடாது என்று கிருஸ்ணன் அர்ஜுனனுக்கு உத்தரவும் போட்டானாம்.

நான் இங்கே எந்த மதத்தில் உடலுறவு பற்றிய சர்ச்சை மிகுந்த கதைகள் அதிகம் இருக்கின்றன என்று விவாதிக்க வரவில்லை. வேண்டும் என்றால் இன்னொரு தலைப்பில் அது பற்றி விவாதிக்கவும் நான் தயார்.

விளம்பரம் சமயத்தையும் கலாச்சாரத்தையும் காரணம் காட்டி ஓரினச்சேர்க்கையாளரான வேட்பாளரை சாடியது. அவமானப்படுத்தியது.

கலாச்சாரம் என்பது ஒருவருக்கு தன்பாலினரை பிடிக்கிறதா எதிர்பாலினரை பிடிக்கிறதா என்பதில் இல்லை. இந்து சமயமும் ஓரினச் சேர்க்கையை கண்டிக்கவில்லை. மாறாக அதை கடவுளின் செயலாக சித்தரிக்கின்றன

ஆகவே விளம்பரத்தின் அடிப்படையே மிகத் தவறானது. இதையே சுட்டிக் காட்டுவதற்கே நான் இங்கே இந்து மதம் சொல்கின்ற சில விடயங்களை கூறியிருக்கிறேன்.

Edited by கரும்பு

வணக்கம்,

அண்மையில் கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் - CTBC மூலம் ஓரினச்சேர்க்கையாளர்களை சாடி வெளிவிடப்பட்ட தேர்தல் விளம்பரம் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. நம்மவன் இடம் கொடுத்தால் மடம் கட்டுவான் என்பதற்கு குறிப்பிட்ட விளம்பரம் ஓர் நல்ல உதாரணம். ஊரில் இருந்து நிர்வாணமாக தப்பினோம் பிழைத்தோம் என்று கவடு கிழிய ஓடிவந்து கனேடிய திருநாட்டினுள் புகுந்து நிம்மதியாய் மூச்சுவிட்டபின்னர்... இப்போது நமது சமயம், நமது கலாச்சாரம் நமது ஒழுங்குமுறை எனும் அடிப்படையில் இங்குள்ள பல்லின கலாச்சாரத்தை, பல்லின மக்களை மலினப்படுத்தும் வகையில் தேர்தல் விளம்பரத்தை கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் வெளிவிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. குறிப்பிட்ட விளம்பரத்தை யூரியூப் இணையத்திலும் மொழிபெயர்ப்புடன் வெளிவிட்டு தமது கீழ்த்தரமான புத்தியை காட்டியுள்ளார்கள்.

இங்கு கனேடிய திருநாட்டின் பல்லின மக்களுடன், கலாச்சாரத்துடன் ஒன்றாகச் சேர்ந்து வாழப்பிடிக்கவில்லை என்றால் ஊருக்கு நடையைக்கட்ட வேண்டியதுதானே? வெவ்வேறு தளங்களில் பின்னூட்டல்களை கூறுபவர்கள் "இவர்கள் தமிழர்கள் தம்மை புறக்கணிப்பு செய்வதாக கூறி அழுகின்றார்கள்.. ஆனால்.. இவர்கள் மற்றவர்களை இப்படி கீழ்த்தரமான வகையில் புறக்கணிப்பு செய்கின்றார்களே" என கூறுகின்றார்கள்.

குறிப்பிட்ட விளம்பரம் இவ்வாறு செல்கின்றது:

நபர் 1: மணியண்ணை மேயர் எலக்சனில யாருக்கு உங்கட ஓட்டுக்கள்?

நபர் 2: கக்க.. (சிரிக்கிறாராம்) என்ன கேள்வி? நான் தமிழனடா! எங்களுக்கு ஒரு சமயம் கலாச்சாரம் எண்டு இருக்கு. ரொப் போட்டை எடுங்கோ, அவற்றை மனுசி ஒரு பொம்பிளை. அதுமட்டுமல்ல வீடுவாங்கேக்க மாற்றுவரி, மற்றவரிகளையும் குறைப்பாராம்.

நபர் 1: அப்ப இமிகிரேசன்?

நபர் 2: கக்க.. (திரும்பவும் சிரிக்கிறாராம்) அது பெடரல் கவர்மண்ட் விசயம். வெள்ளையனிண்ட வோட்டை எடுக்கவாக்கும்.

நபர் 1: நானும் ரொப் போட்டுக்குத்தான் போடப்போறன்.

கனேடிய தமிழ் ஊடகங்களின் இப்படியான பொறுப்பற்ற செயற்பாடுகள் இங்குள்ள அனைத்து தமிழருக்குமே கெட்ட பெயரை களங்கத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட வானொலி நேயர்கள் இது சம்பந்தமாக உங்கள் எதிர்ப்பை இந்த வானொலிக்கு தெரிவியுங்கள்.

இதுவரை கீழ்வரும் கனேடிய ஊடகங்களில் குறிப்பிட்ட வானொலியின் விளம்பரத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவிடப்பட்டுள்ளன:

http://news.google.ca/news/search?pz=1&cf=all&ned=ca&hl=en&q=Tamil+radio&cf=all&scoring=n

இவர்களின் யூரியூப் விளம்பரம்:

நான் ரொப் போட் அவர்களிற்கே தேர்தலில் எனது வாக்கை செலுத்தினேன். வாக்களித்தபிற்பாடு உடனடியாகவே அவருக்கு நான் ஏன் அவருக்கு வாக்களித்தேன் என ஐந்து காரணங்கள் கூறி அத்துடன் அவருக்கு வாழ்த்துகூறி மின்னஞ்சலும் அனுப்பினேன். பின்னர் செய்திகளை பார்த்தபோது தமிழ் வானொலி தமிழ் வானொலி என தமிழ் வானொலி விளம்பரம் ஒன்றை மேற்கோள் காட்டி பரவலான முறையில் கனேடிய ஊடகங்களில் செய்தி வெளிவிடப்பட்டன, பின்னூட்டல்கள் இடப்பட்டன. இதன் காரணத்தினாலேயே இந்த விளம்பரம் சம்பந்தமாக கருத்து கூறவேண்டி வந்தது. நகரபிதாவை தெரிவு செய்வதற்கான தேர்தலில் இரண்டாம் இடத்தை பெற்ற வேட்பாளர் தமிழ் சமூகத்திற்கு மிகுந்த சேவைகள் செய்தவர். இங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த மதிப்பை பெற்றவர். இப்படிப்பட்டவரை தாக்கும் வகையில் தமிழர்களினாலேயே விளம்பரம் உருவாக்கப்பட்டது ஆச்சரியத்தை தருகின்றது. இவர் மீது அனுதாபம் கொண்டே நான் இங்கு குறிப்பிட்ட விடயத்தைபற்றி பேசினேன் என்று இல்லை, இவர் தமிழ் சமூகத்திற்கு ஆதரவு அளிக்காத ஒருவராக காணப்பட்டிருப்பினும் இந்த விளம்பரம் விடயத்தை பற்றி கருத்தாடல் செய்திருப்பேன். இதற்கான முக்கிய காரணம் குறிப்பிட்ட விளம்பரம் கனடாவின் பிரதான ஊடகங்களில் பரவலாக மேற்கோள் காட்டப்பட்டதோடு மட்டும் அல்லாமல் தமிழ் தமிழ் என்று கூறி தமிழ் சமூகம் பற்றியதோர் தவறான அபிப்பிராயம் கனடியர்கள் மத்தியில் உருவாக்கப்படக்கூடாது என்பதற்காகவும் ஆகும். .....

இறுதி எழுத்தை, ஆரம்பத்தில் சேர்ந்திருக்கலாம் ... சில/பல சர்ச்சைகளை தவிர்த்திருக்கலாம்! <_<

  • கருத்துக்கள உறவுகள்

விளம்பரத்தில்தான் தேவையில்லாமல் சமயத்தை இழுத்திருக்கிறார்கள். அதனால்தான் நான் அது பற்றி விளக்கம் சொல்ல வேண்டி வந்தது. இது என்னுடைய குற்றம் இல்லை.

இதில் எங்கே சமயத்தை இழுத்திருக்கிறார்கள்? எனக்கு சமயம், கலாச்சாரம் இருக்கு எண்டால் மற்றவனுக்கு இல்லை என்று அர்த்தமா? <_< இது எப்பிடி இருக்கெண்டால், நான் எனக்கு மத்தியானம் 12 மணிக்குப் பசி எடுக்கும் எண்டு எழுதினால் மற்ற ஒருத்தருக்கும் 12 மணிக்குப் பசிக்காது எண்டு நான் சொல்வதாக கூறுவது போல் உள்ளது. :D

விளம்பரம் சமயத்தையும் கலாச்சாரத்தையும் காரணம் காட்டி ஓரினச்சேர்க்கையாளரான வேட்பாளரை சாடியது. அவமானப்படுத்தியது.

இப்படி ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. நடந்ததற்கான ஆதாரம் எதுவும் விளம்பரத்தில் இல்லை. ஊடகங்கள்தான் சும்மா உள்ளர்த்தம் கற்பித்துக்கொண்டு தூக்கிப் பிடித்திருக்கின்றன. இந்த வானொலிக்காரரும் பயந்துகொண்டு அவனை இவனைக் கை காட்டுகினம். :D

Reference:

நபர் 1: மணியண்ணை மேயர் எலக்சனில யாருக்கு உங்கட ஓட்டுக்கள்?

நபர் 2: கக்க.. (சிரிக்கிறாராம்) என்ன கேள்வி? நான் தமிழனடா! எங்களுக்கு ஒரு சமயம் கலாச்சாரம் எண்டு இருக்கு. ரொப் போட்டை எடுங்கோ, அவற்றை மனுசி ஒரு பொம்பிளை. அதுமட்டுமல்ல வீடுவாங்கேக்க மாற்றுவரி, மற்றவரிகளையும் குறைப்பாராம்.

நபர் 1: அப்ப இமிகிரேசன்?

நபர் 2: கக்க.. (திரும்பவும் சிரிக்கிறாராம்) அது பெடரல் கவர்மண்ட் விசயம். வெள்ளையனிண்ட வோட்டை எடுக்கவாக்கும்.

நபர் 1: நானும் ரொப் போட்டுக்குத்தான் போடப்போறன்.

அவர்கள் ஒற்றுமைப்பட்டு விட்டார்கள் நாங்களும் அதையே செய்வோம்

முதலில் தோல்வியடைந்தவர் பேசினார். அப்பொழுது வெற்றியடைந்தவரை கூடத்திலிருந்த சிலர் கேளியடித்தபொழுது அவர் மிகவும் பெருந்தன்மையாக அதை மறுத்தார். வெற்றியடைந்தவரை வாழ்த்தினார். நாம் எல்லோரும் இந்த மாநகரத்தின் பிரசைகள் என்றரர்.

பின்னர் பேசிய வென்றவரும் தன்னுடன் போட்டியிட்டு தோல்வியுர்வர்களை வாழ்த்தினார்.

இந்த திரியை தொடக்கிய பங்களித்த வாசித்த அனைவர்களும் ஒற்றுமைப்பட்டு விடுவோம்.

Edited by akootha

  • தொடங்கியவர்

நான் இந்த வானொலிக்காக வக்காலத்து வாங்க வரவில்லை. ஆனால் இந்த விளம்பரத்தில் ஜோர்ஜ் ஸ்மிதர்மனைப் பற்றியும், ஓரினச் சேர்க்கையைப் பற்றியும் ஒன்றும் சொல்லப்படவில்லையே? <_<

அவற்றை மனிசி பொம்பிளை. - இந்த வாக்கியம் சரிதானே..! அவற்றை மனிசி பொம்பிளை; அவவின்ர மனுசன் ஆம்பிளை. இதிலென்ன குற்றம் கண்டீர்? :D

தேர்தல் மறுநாள். இன்று விளம்பரம் வருகின்றது. இதில் இப்படி வருகின்றது. நான் தமிழன் எனது சமயம் கலாச்சாரம் என்றுகூறி.. தொடர்ந்து.. இங்கு அவற்றை மனிசி பொம்பிளை என்று கூறவேண்டியதன் அவசியம் என்ன? "அவற்றை மனுசி பொம்பிளை" குறிப்பிட்ட விடயம் இங்கு விளம்பரத்தில் கூறப்பட்டதன் உள்நோக்கம் என்ன? அவற்றை மனுசி பொம்பிளை என்றால் விளம்பரத்தில் வருகின்ற மணியண்னை என்ன அவவுடன் கலியாணமா செய்யப்போகின்றார்? நகரபிதாவிற்கான போட்டியில் இரண்டு பிரதான போட்டியாளர்கள் யார் யார் என்று பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும். இங்கு முதலாமவரை பற்றி கூறி.. அவரது மனுசி பொம்பிளை என்று கூறுவது இரண்டாவது போட்டியாளரை அவரது மனுசி பொம்பிளை இல்லை என குத்தலாகக் காட்டி வாக்காளர்களை திசைதிருப்புவதாகும். நான்கு வரி உரையாடலில் ரொப் போட்டின் மனுசி பற்றி பேசப்படவேண்டியதன் அவசியம் என்ன? இது ஓர் பாலியல் துவேச விளம்பரம். கனேடிய பிரதான ஊடகங்களே Anti Gay Ad என்று கூறுகின்றன. ஒருபால் திருமணம் சட்டரீதியாக அங்கீகாரம் பெற்ற கனடா திருநாட்டில் பாலியல் துவேசத்தை தேர்தல் விளம்பரத்தில் காட்டியதை குற்றமாகவே நான் கருதுகின்றேன். எல்லாம் தெரிந்துகொண்டு டங்க்ஸ் அப்பாவித்தனமாக கேள்வி கேட்பதை பார்க்க நகைப்பாக உள்ளது.

நபர் 1: மணியண்ணை மேயர் எலக்சனில யாருக்கு உங்கட ஓட்டுக்கள்?

நபர் 2: கக்க.. (சிரிக்கிறாராம்) என்ன கேள்வி? நான் தமிழனடா! எங்களுக்கு ஒரு சமயம் கலாச்சாரம் எண்டு இருக்கு. ரொப் போட்டை எடுங்கோ, அவற்றை மனுசி ஒரு பொம்பிளை. அதுமட்டுமல்ல வீடுவாங்கேக்க மாற்றுவரி, மற்றவரிகளையும் குறைப்பாராம்.

நபர் 1: அப்ப இமிகிரேசன்?

நபர் 2: கக்க.. (திரும்பவும் சிரிக்கிறாராம்) அது பெடரல் கவர்மண்ட் விசயம். வெள்ளையனிண்ட வோட்டை எடுக்கவாக்கும்.

நபர் 1: நானும் ரொப் போட்டுக்குத்தான் போடப்போறன்

முக்கியமாக சுட்டிக்காட்டப்படவேண்டிய விசயமாக இங்கே இழுக்கப்படும் சமயம் கலாச்சாரம் கூடவே பேச்சுவழக்கு என்பதுக்குள் அனைத்துத் தமிழரும் அடங்கவில்லை. இங்கே இழுக்கப்படும் சமயம் கலாச்சாரத்திலிருந்து அன்னியப்பட்ட பல்லாயிரம் தமிழர்கள் கனடாவில் வாழக்கின்றார்கள். உங்கள் பயித்தியக்காரத்தனமான மையவாதக் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டும் விளம்பரங்களின் விழைவுகளை தமிழன் என்ற காரணத்துக்காக எல்லாரும் அனுபவிக்கமுடியாது. தமிழர் என்ற இனமே பல மத சமய கலாச்சாரம் ஒருங்கிணைந்தது என்பதை முதலில் இந்த வானொலிக் கோஸ்டியினர் புரிந்துகொள்ளட்டும். இவ்வாறு கதைக்கவேண்டுமானால் ஊருக்குப்போய் கோப்றேசன்களில் கள்ளடித்துக்கொண்டு கதைக்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிப்பட்ட விளம்பரங்களை ஒரு செய்தி நிறுவனம் வெளிநாடுகளில் வெளியிட முடியாது. கனடா தமிழர் அங்குள்ள மனித உரிமை அமைப்புக்கள், ஓரின சேர்கை உரிமை அமைப்புகளுக்கு இந்த ஆங்கில மொழிபெயர்ப்பையும், வானொலி தகவல்களையும் வழங்கினால் போதும். மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் வானொலி அலைவரிசைகளை கட்டுப்படுத்தும் ஒரு குழுவும் இருக்கும். இப்படியான இனவெறி பிடித்த செய்திகளை வெளியிட்டதற்காக அவர்கள் இவர்களின் லைசென்சை புடுங்கலாம்.

இங்கே கூகிளில் தேடி சில இணைப்புகள்.

http://www.ohrc.on.ca/

http://www.crtc.gc.ca/rapidsccm/register.asp?lang=e

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முக்கியமாக சுட்டிக்காட்டப்படவேண்டிய விசயமாக இங்கே இழுக்கப்படும் சமயம் கலாச்சாரம் கூடவே பேச்சுவழக்கு என்பதுக்குள் அனைத்துத் தமிழரும் அடங்கவில்லை. இங்கே இழுக்கப்படும் சமயம் கலாச்சாரத்திலிருந்து அன்னியப்பட்ட பல்லாயிரம் தமிழர்கள் கனடாவில் வாழக்கின்றார்கள். உங்கள் பயித்தியக்காரத்தனமான மையவாதக் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டும் விளம்பரங்களின் விழைவுகளை தமிழன் என்ற காரணத்துக்காக எல்லாரும் அனுபவிக்கமுடியாது. தமிழர் என்ற இனமே பல மத சமய கலாச்சாரம் ஒருங்கிணைந்தது என்பதை முதலில் இந்த வானொலிக் கோஸ்டியினர் புரிந்துகொள்ளட்டும். இவ்வாறு கதைக்கவேண்டுமானால் ஊருக்குப்போய் கோப்றேசன்களில் கள்ளடித்துக்கொண்டு கதைக்கட்டும்.

சகோதரம் சுகன், இந்த வானொலி கோஷ்டியின் விசிறிகள் எல்லாம் எழுபது வயதிற்கு மேற்பட்டவர்கள். இந்த வானொலியின் தலிவர் யாழில் பங்கர் அண்ணலுடன் சேர்ந்து ஒரு வானொலி தொடங்க வேறு திட்டம். வியாபாரம் வியாபாரம் என்று சொல்லியே தமிழரின் முதுகை பதம் பார்ப்பவர்.

இந்த விளம்பரத்தால் தனக்கே தான் சூடு வைத்துகொண்டுவிட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பார் குளக்கட்டான், கனடாவிலே "Funny Boy " என்று பிரபலமான புத்தகத்தை எழுதியவர் சியாம் செல்லத்துரை. அவரும் ஒரு தமிழ் ஓரின சேர்க்கையாளர் தான். ஊரில மளிகை கடையில சரக்கு சுத்தினவருக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்ல.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் மறுநாள். இன்று விளம்பரம் வருகின்றது. இதில் இப்படி வருகின்றது. நான் தமிழன் எனது சமயம் கலாச்சாரம் என்றுகூறி.. தொடர்ந்து.. இங்கு அவற்றை மனிசி பொம்பிளை என்று கூறவேண்டியதன் அவசியம் என்ன? "அவற்றை மனுசி பொம்பிளை" குறிப்பிட்ட விடயம் இங்கு விளம்பரத்தில் கூறப்பட்டதன் உள்நோக்கம் என்ன? அவற்றை மனுசி பொம்பிளை என்றால் விளம்பரத்தில் வருகின்ற மணியண்னை என்ன அவவுடன் கலியாணமா செய்யப்போகின்றார்? நகரபிதாவிற்கான போட்டியில் இரண்டு பிரதான போட்டியாளர்கள் யார் யார் என்று பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும். இங்கு முதலாமவரை பற்றி கூறி.. அவரது மனுசி பொம்பிளை என்று கூறுவது இரண்டாவது போட்டியாளரை அவரது மனுசி பொம்பிளை இல்லை என குத்தலாகக் காட்டி வாக்காளர்களை திசைதிருப்புவதாகும். நான்கு வரி உரையாடலில் ரொப் போட்டின் மனுசி பற்றி பேசப்படவேண்டியதன் அவசியம் என்ன? இது ஓர் பாலியல் துவேச விளம்பரம். கனேடிய பிரதான ஊடகங்களே Anti Gay Ad என்று கூறுகின்றன. ஒருபால் திருமணம் சட்டரீதியாக அங்கீகாரம் பெற்ற கனடா திருநாட்டில் பாலியல் துவேசத்தை தேர்தல் விளம்பரத்தில் காட்டியதை குற்றமாகவே நான் கருதுகின்றேன். எல்லாம் தெரிந்துகொண்டு டங்க்ஸ் அப்பாவித்தனமாக கேள்வி கேட்பதை பார்க்க நகைப்பாக உள்ளது.

நீங்கள் சொல்வதும், மற்ற ஊடகங்கள் சொல்வதும் இந்த விளம்பரம் குறித்த opinion தான். அதுவே fact ஆகிவிடாது. இதை யாராவது நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்றாலும் வெல்ல முடியும் என்று தோன்றவில்லை..! அவ்வளவு பூடகமாக உள்ளது. <_<

வேண்டுமென்றால் சேலைக்குப் பின்னால் ஒளிந்திருந்து தாக்கும் முதுகெலும்பற்றவர்கள் என்று இந்த வானொலி விளம்பரதாரரைக் குறை சொல்லலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவா, யாழில் இருக்கும் எம்மவர்களில் ஒருவரும் இந்த நோய் பிடித்தவர்களாக இருக்கக்கூடாது! <_<

integrating in a big society பற்றித் தெரியாமல் இலண்டனில் இருக்கின்றீர்கள். பல்லின மக்களின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கப் போனதால், பல சமாந்தர சமூகங்கள் உருவாகிவிட்டன என்று தற்போது மேற்கு நாடுகளின் கொள்கைவகுப்போர் கவலைப்படுகின்றார்கள். எனவே குடியேறும் மக்கள், குடியேறிய நாடுகளின் கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று புதிதான திட்டங்களைக் கொண்டுவருகின்றார்கள். ஆகவே உங்களின் பார்வையில் நோயாகத் தெரியும் ஓரினச் சேர்க்கை எதிர்காலத்தில் தமிழர்களின் பரம்பரையில் உள்ளவர்களுக்கும் வரலாம். அந்த நேரத்தில் அங்கீகரிக்கவேண்டிய நிலைமை வரும். குறுக்கு வழியில் (உ+ம்: மட்டை போட்டு) பணக்காரரான பல தமிழர்களை புலம்பெயர் சமூகம் எதுவித தயக்கமும் இன்றி தமது சமூகத்தின் முன்னணியில் உள்ளதாகப் பெருமைப்படுகின்றார்கள். எனவே ஒரு பணக்காரத் தமிழர் ஓரினச் சேர்க்கையாளராக இருந்தால் ஒதுக்கிவிடவா போகின்றார்கள்?

சரி, சரி, சரி ... உங்கள் பார்வையில் கேபிள் தாழ்ப்பவர்கள் எல்லாம் மென்மையானவர்கள்! .. அப்படி அந்த மென்மையானவர்களும், உங்கள் பார்வையில் .... இங்கு எம் சமூகத்தில் முன்னணியில் நிற்கும் பலர் மட்டை போட்டுத்தான்(?) முன்னணிக்கு வந்தவர்களைப்போல் ... வருவார்களேயாயின் .... எங்கள் இன்றுள்ள சமூகம்(பலம்பெயர் சமூகம், இங்கு பிறந்து வளர்ந்தவர்களல்ல) மதிக்குதா? இல்லையா/ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்! <_<

  • கருத்துக்கள உறவுகள்

விளம்பரத்தில் அரசியல் பேசுவதற்கு பாலியல் துவேசம் தேவைப்பட்டுள்ளது. அந்த பாலியல் துவேசத்தை சபேசன் மேற்கண்ட உதாரணங்கள் மூலம் அணுகி இருப்பதில் தவறு தெரியவில்லை. நாத்திகர் ஒருவர் சமயம் சம்பந்தமாக விரிவாக பல விடயங்களை அறிந்துள்ளார்; பகுப்பாராய்வு மேற்கொள்ளக்கூடிய ஒருவர் இவற்றை அறிந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லையே. இங்கு மதம் தூற்றப்படவில்லை. தம்மை மதம் சார்ந்தவர்களாக இனம்காட்டும் பாலியல் துவேசம் கொண்டவர்களுக்கு சபேசன் மூலம் நல்ல விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சபேசனுக்கு பாராட்டுக்கள்.

கலைஞன் நான் அந்த வானொலியில் வந்த ஒரினச் சேர்க்கை பற்றிய விளம்பரத்தை சரி என ஆதரிக்கவில்லை ஆனால் சபேசன் தேவையில்லாமல் எங்கட மதத்தை இழுத்தது தான் தப்பு என சொல்கிறேன்...எல்லா மதங்களிலும் தான் ஒரினச் சேர்க்கை ஆதரித்து இருக்கிறார்கள் அந்த மதங்களை எல்லாம் இழுத்து வைத்து கதைக்கிறாரா சபேசன்?...அதென்ன எங்கள் மதம் என்டால் மட்டும் அவ்வளவு கேவலம்...அந்த விளம்பரத்தில் எங்களுக்கு ஒரு சமயம்,கலாச்சாரம் இருக்குது என தான் சொல்லப்பட்டு இருக்குதுதே தவிர அது எந்த மதம் என்ன சொல்லப்பட்டு இருக்கிறாதா?...அவர் எது பற்றியும் ஆராயட்டும் அது எனக்கு தேவையில்லாதது ஆனால் அவர் எங்கள் மதத்தில் உள்ள நிறைகளை எப்பவாவது எழுதியுள்ளாரா?...அல்லது மற்ற மதங்களில் உள்ள குறைகளை எழுதியுள்ளாரா?...அவர் பாலியல் துவேசம் கொண்டவர்களுக்கு நல்ல விளக்கம் கொடுக்கவில்லை எமது மதத்தை தேவையில்லாமல் இழுத்து வைத்து நக்கல் அடித்து உள்ளார்

கனடாவில் தமிழ் இளைஞர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கென "சினேகிதன்" என்று ஒரு கிளப் வைத்திருக்கின்றார்கள்.அவர்களின் பேட்டியொன்றை அண்மையில் பெண்ணியம் தளத்தில் வாசித்தேன் மிகவும் சுவாரஸயமாக இருந்தது.

இங்கே சிலர் அப்பாவி மாதிரி நடிக்கிறார்கள். ஒருவர் இந்த விளம்பரத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக ஒன்றும் இல்லை என்று சொல்கிறார். இன்னொருவர் ஓரினச் சேர்க்கையாளருக்கு எதிராகத்தான் இருக்கிறது, ஆனால் சமயம் என்று சொன்னது இந்து சமயத்தை இல்லை என்று இன்னும் அப்பாவி மாதிரி நிற்கிறார்.

ஒரு தமிழன் „எங்களுக்கு ஒரு சமயம் இருக்கிறது“ என்று சொன்னால் அவன் எந்த சமயத்தை சொல்கிறான் என்பது உலகில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.

இவர்களுக்கு புரியாமல் இல்லை. ஆனால் வாதாட முடியாத நிலையில் அப்பாவி மாதிரி நடிக்கத் தொடங்கி விடுவார்கள். இவர்களுக்கு இதைத் தவிர வேறு வழியும் இல்லை.

அடுத்தது நான் இங்கே இந்து மதத்தை கேவலப்படுத்தவில்லை. இந்து மதத்தை எல்லாம் தனியாகக் கேவலப்படுத்தவும் தேவையில்லை.

இந்து மதம் ஓரினச் சேர்க்கையை எதிர்க்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறேன். இதில் நான் எந்த நக்கலும் செய்யவில்லை. நக்கல் செய்வதை பின்பு நான் தனித் தலைப்பில் வைத்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் உச்ச நீதமன்றம் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமண உறவை அங்கீகரித்து வழங்கிய தீர்ப்பை பிரித்தானியாவில் உள்ள இந்து கவுன்சில் வரவேற்று அறிக்கை விட்டது. அதில் இந்து மதம் ஓரினச் சேர்க்கையை எதிர்க்கவில்லை என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இணைப்பு இங்கே இருக்கிறது.

http://www.indianexpress.com/news/hinduism-does-not-condemn-gay-people-uk-hin/484563/

ஆகவே இந்த விளம்பரம் முட்டாள்தனமான ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

நக்கல் செய்வதை பின்பு நான் தனித் தலைப்பில் வைத்துக் கொள்கிறேன்.

இந்தத் திரியில் சென்று பாருங்கள்..

http://www.yarl.com/forum/index.php?showtopic=5318&hl=

தேடிவந்து கொல்லுறதுக்கும் சிலர் வெளிக்கிட்டவர்கள்.. அவதானமாக இருந்தால் நல்லது :)

சபேசன்

சைவ சமயம் வேறு (முருகன், வள்ளி, தெய்வானை)

இந்து சமயம் வேறு ( வட இந்தியர்களினின் - சிவன், பிள்ளையார், ....) சொல்கிறார்கள்.

விளக்கம் தருக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.